அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

May 13, 2008

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம் - http://www.answering-islam.org/tamil.html

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம்

www.answering-islam.org/tamil.html

கர்த்தரின் கிருபையால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது (www.answering-islam.org/tamil.html)

ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஓர் அறிமுகம்:

முஸ்லீம்கள் கேட்கும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சரியான விதத்தில் பதில்கள், மறுப்புக்கள் தரும் தளம், ஆன்சரிங் இஸ்லாம் தளமாகும். முஸ்லீம்களுக்கு பதில் தருவதில் இத்தளம் முதலிடம் வகிக்கிறது என்றுச் சொன்னால், அது மிகையல்ல.

இந்த தளத்தில் நான் பல ஆண்டுகளாக கட்டுரைகளை படித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறேன். நான் தமிழில் "ஈஸா குர்‍ஆன்" தளம் ஆரம்பிக்க என்னை உட்சாகப்படுத்தியது இந்த தளத்தின் கட்டுரைகள் தான். இத்தளத்தில் கட்டுரைகள் சரியான ஆதாரங்களோடும், வசனங்களோடும் ஆராய்ச்சி செய்து எழுதப்படுகின்றன. இத்தளத்தின் ஆசிரியர்களோடு நான் தொடர்பு கொண்டு தங்கள் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டபோது, அவர்கள் அனுமதி அளித்தார்கள். சில கட்டுரைகளை நான் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளேன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, இத்தளத்தின் நிர்வாகிக்கு மெயில் அனுப்பும்படி எனக்கு ஒரு ஆசிரியர் அறிவுரை கூறியபோது, அப்படியே நானும் அனுப்பினேன். இத்தளத்தின் நிர்வாகி தன் தளத்தின் எல்லா கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி அளித்ததுமல்லாமல், தங்கள் தளத்தில் தமிழில் ஒரு பகுதியை ஆரம்பிக்க விருப்பமா என்று கேட்டார்? (கரும்பு திண்ண கூலி யாராவது கேட்பார்களா? ) நான் உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன். கடந்த மூன்று மாதங்களாக நான் இதுவரை மொழிபெயர்த்துள்ள அவர்களது கட்டுரைகளை அவர்கள் தளத்தில் பதிக்க முயற்சி எடுத்துக்கொண்டு இருந்தேன். நேற்றோடு அந்த வேலை முடிந்துவிட்டது, இன்று 11ம் நாள் மே மாதம் 2008 நாளன்று "ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் - www.answering-islam.org/tamil.html" ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகமனைத்து முஸ்லீம் அறிஞர்களுக்கு பதில் அளிக்கும் தளங்களில் முதலிடம் வகிக்கும் தளத்தில், தமிழ் பகுதியை ஆரம்பிக்க கர்த்தர் கொடுத்த கிருபைக்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் முகப்புப் பக்கம்:
( Home page of www.answering-islam.org/tamil)



Source : http://www.geocities.com/isa_koran/images/AITamilHome.JPG

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் பகுதியில் கீழ் கண்ட கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
(Source : http://www.answering-islam.org/tamil/newarticles.html )

தேதி: 11th May 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்படுகிறது. எங்கள் தமிழ் பகுதியை கீழ் கண்ட கட்டுரைகளோடு ஆரம்பிக்கிறோம்.

* குர்ஆனை அல்லா பாதுகாத்தான் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களின் வாதம் சரியானது அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்கிறது இந்த கட்டுரை: குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா?

* முகமதுவை ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க முஸ்லீம்கள் பயன்படுத்தும் உபாகமம் 18ம் அதிகாரத்தைக் கொண்டே "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்று நிருபிக்கும் ஆதாரபூர்வமான கட்டுரை இது: உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet ) .

* இயேசுவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்து அல்லா செய்த குளறுபடியையும், அல்லாவின் அறியாமையையும் கேள்விக்குறியாக்கும் கட்டுரை: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (Deceptive God, Incompetent Messiah and Allah Starts Christianity ... by Accident).

* மாற்கு 16ம் அதிகாரத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கு சவாலை முன்வைத்த, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரை : மாற்கு 16ம் அதிகாரத்தின் சவால்.

* முகமது செய்த கொலைகள் பற்றிய ஒரு சிறு ஆய்வுக்கட்டுரை: முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)

* முகமது எப்படி மக்களை கொடுமைப்படுத்த அனுமதித்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரை: முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

* பைபிளையும் குர்‍ஆனையும் எப்படி ஒப்பிடுவது? பைபிளோடு குர்‍ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியா? போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதில் அளிக்கிறது: பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

* பைபிள் திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டும் முஸ்லீம்கள், தங்கள் வாதங்களுக்கு ஆதாரங்களை முன்வைக்க முடியுமா? படியுங்கள்: முஸ்லீம்களின் யார்-எப்போது-எங்கே-எப்படி-என்ன-ஏன் என்ற பல பிரச்சனைகள்.

© Answering Islam, 1999 - 2008. All rights reserved.

Answering Islam Tamil Site :http://www.answering-islam.org/tamil

0 comments: