அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 25, 2016

பாகம் 3 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?

பாகம் 3 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும்
அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?

(முஸ்லிமல்லாதவர்களை சாலையின் நெருக்கடியான பாதையில் போக முஸ்லிம்கள்
கட்டாயப்படுத்தவேண்டும்)


முன்னுரை:

இந்த தலைப்பின் முந்தைய இரண்டு கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்.

பாகம் 1 - தாடி, மீசை, வேட்டி, செருப்பு விஷயங்களில் மாறு செய்தல்

பாகம் 2 - முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலாவது ஸலாம் சொல்லக்கூடாது

இவைகளின் தொடர்ச்சியாக, இந்த மூன்றாவது பாகத்தில், முஸ்லிமல்லாதவர்களை
முஸ்லிம்கள் சாலையில் எப்படி நடத்தவேண்டும்? என்ற கேள்விக்கு இஸ்லாம்
என்ன பதில் சொல்கிறது என்பதை ஆய்வு செய்வோம்.

இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்கள் இஸ்லாமிய
நூல்களிலிருந்தும், இஸ்லாமிய விரிவுரைகளிலிருந்தும் எடுக்கப்படுகின்றன
என்பதை வாசகர்கள் கவனிக்கவும்.

பாகம் 3

முஸ்லிமல்லாதவர்களை சாலையின் நெருக்கடியான பாதையில் போக முஸ்லிம்கள்
கட்டாயப்படுத்தவேண்டும்

சென்னை மக்களுக்கு உதவிகள் தேவைப்பட்டபோது, முஸ்லிம்கள் உற்சாகமாய்
உதவிகளைச் செய்தனர். இதன் பின்னணியை முழுவதுமாக அறிய மேலே கொடுக்கப்பட்ட
முதலாவது பாகத்தை படிக்கவும். முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் அன்பாக
நடந்துக் கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக நடந்துக்கொள்ளுங்கள் என்று இஸ்லாம்
வெளிப்படையாக சொல்லியிருக்கும் போது, முஸ்லிம்கள் அதனை
புறக்கணித்துவிட்டு, முஸ்லிமல்லாதவர்களுக்கு தங்கள் உயிரைக் கொடுத்து
உதவிகள் செய்துள்ளனர். இதனை முஸ்லிமல்லாதவர்கள் எப்படி புரிந்துக்
கொள்வது? இஸ்லாம் சொல்வது சரியா? அல்லது முஸ்லிம்கள் செய்தது சரியா?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடை காண்பது தான் இக்கட்டுரைகளின் முக்கிய
நோக்கம்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலாவது வாழ்த்துதல்/ஸலாம் சொல்லாதீர்கள் என்று
முஹம்மது கற்றுக்கொடுத்த விவரத்தை இரண்டாம் பாகத்தில் ஆய்வு செய்தோம்.
இப்போது அதே இஸ்லாமிய ஆதாரத்தின் அடுத்த பாகத்தை ஆய்வு செய்வோம்.

முஹம்மது கீழ்கண்டவாறு கட்டளையிட்டுள்ளார் (ஸஹீஹ் முஸ்லிம் நூல், எண் 4376):

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன்
கூறாதீர்கள்.அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால், சாலையின்
நெருக்கடியான பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள். - இதை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் நூல், எண் 4376

யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சாலையின் நெருக்கடியான பாதையில் செல்லும்
படி கட்டாயப்படுத்துங்கள்:

மேலே நாம் பார்த்த ஹதீஸ், ஆதாரபூர்வமான முஸ்லிம் தொகுப்பிலிருந்து
எடுக்கப்பட்டதாகும். ஒரு சாலையில் யூதர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ
சென்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே சாலையில்
முஸ்லிம்களும் சென்றுக்கொண்டு இருந்தால், அந்த நேரத்தில் முஸ்லிம்கள்
சாலையில் விசாலமான பாதையில் செல்லவேண்டுமாம், அதாவது
முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்களுக்கு வழியை விட்டுவிட்டு, அவர்கள்
நெருக்கடியான பாதையில் செல்லவேண்டுமாம். இதில் கவனிக்கவேண்டிய விஷயம்
என்னவென்றால், முஸ்லிமல்லாதவர்கள் நெருக்கடியான பாதையில் போகும் படி
"முஸ்லிம்கள்" அவர்களை கட்டாயப்படுத்தவேண்டுமாம். உலக மக்களுக்கு
ஒளியாக வந்தவர் முஹம்மது என்று முஸ்லிம்கள் பெருமையாகச்
சொல்லிக்கொள்வார்கள், இப்படிப்பட்டவர் தம்முடைய மக்களுக்கு "இதர
மக்களிடம்" இப்படி கீழ்தரமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று
கட்டளையிட்டுள்ளார்.

மேற்கண்ட ஹதீஸையும், அதன் தாக்கத்தையும் அறியாத முஸ்லிம்களில் சிலர்,
கீழ்கண்ட விதமாக ஆட்சேபனை செய்யலாம். அவர்களுக்கு இந்த ஹதீஸின் பாதிப்பு
என்னவென்பது சரியாக புரியவேண்டுமென்பதற்காக சில உதாரணங்களை இந்திய
பின்னணியிலிருந்து எடுத்துக் காட்டுகிறேன்.

முஸ்லிம்களின் ஆட்சேபனை - 1

இந்த ஹதீஸ் பொய்யாக இருக்கலாம், ஏனென்றால் எங்கள் இறைத்தூதர்
இப்படியெல்லாம் சொல்லியிருக்கமாட்டார்.

சுன்னி பிரிவைச் சார்ந்த முஸ்லிம்கள் குர்-ஆனுக்கு அடுத்தபடியாக ஹதீஸ்களை
நம்புகிறார்கள். புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்புக்கள்
முஸ்லிம்களுக்கு அதி முக்கியமான இறைநூல்களாகும். இவ்விரண்டு
தொகுப்புக்களுக்கு பிறகு தான் இதர ஹதீஸ்களின் நம்பகத்தன்மை
தரம்பிரிக்கப்படுகிறது. நாம் மேலே படித்த ஹதீஸ் "முஸ்லிம்"
நூலிலிருந்து எடுக்கப்பட்டதாகும். உங்களுக்கு இந்த ஹதீஸ் தொகுப்பின் மீது
சந்தேகம் இருந்தால், உங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடமும் கேட்டுப் பாருங்கள்,
இஸ்லாமிய தளங்களிலும் சென்று படித்துப் பாருங்கள். முஸ்லிம்களாகிய
நீங்கள் இவ்விதமான ஹதீஸ்களை புறக்கணிக்கும் அடுத்த நிமிடமே காஃபிராகி
(இஸ்லாமை விட்டு வெளியேறியவராகி) விடுவீர்கள். எனவே, முஸ்லிம்களே! உங்கள்
ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்க முயலாதீர்கள். தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத்
என்ற முஸ்லிம் குழுவினர், இப்படிப்பட்ட ஆதாரபூர்வமான ஆனால், அதே
நேரத்தில் தர்மசங்கடமான ஹதீஸ்களை மறுத்துக்கொண்டு வந்துக் கொண்டு
இருக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஒருவேளை அவர்களது தற்போதைய பட்டியலில்
இல்லாமல் இருந்தால், வருங்காலங்களில் இந்த முஸ்லிம் ஹதீஸ் எண் 4376ஐயும்
அவர்கள் தங்கள் மறுக்கப்படும் ஹதீஸ் பட்டியலில் சேர்த்துக்கொள்வார்கள்
என்பதில் ஆச்சரியமில்லை. காத்திருப்போம், காலம் பதில் சொல்லும்.

ஷியா பிரிவினர்: இஸ்லாமின் இன்னொரு பிரிவினர் ஷியா பிரிவினராவார்கள்.
இவர்கள் இந்த முஸ்லிம், புகாரி ஹதீஸ் தொகுப்புக்களை முழுவதுமாக
நம்புவதில்லை, ஷியா பிரிவினருக்கு தனியாக ஹதீஸ் தொகுப்புக்கள் உள்ளன.
இவர்களின் ஹதீஸ்களை ஆய்வு செய்தால், மேற்கண்ட ஹதீஸ் போன்ற தர்மசங்கடமான
விவரங்கள் இன்னும் அதிகமாக வெளிப்படும். ஷியா பிரிவினர் இஸ்லாமில்
சிறும்பான்மையினராக இருக்கிறார்கள். என்னுடைய மறுப்புக்கள் மற்றும்
கேள்விகள் அனைத்தும் பெரும்பான்மையினராகிய சுன்னி முஸ்லிம்களுக்குத்
தான்.

எனவே, புகாரி, முஸ்லிம் ஹதீஸ் தொகுப்புக்களில் உள்ள விவரங்களை
முஸ்லிம்கள் புறக்கணிக்கக்கூடாது. எனக்கு தெரிந்தவரை, இந்த முஸ்லிம்
ஹதீஸை (எண் 4376ஐ) யாரும் இதுவரை மறுக்கவில்லை.

முஸ்லிம்களின் ஆட்சேபனை - 2

முஹம்மது கட்டளையிட்டதில் என்ன தவறு இருக்கிறது? பெரும்பான்மையினர் ஆட்சி
செய்யும் நாட்டில் சிறும்பான்மையினர் சிறிது அடங்கிச் செல்வதில் என்ன
தவறு இருக்கிறது?

முஸ்லிம்களே! உங்களின் இந்த கருத்து தவறானது. இதே நிலையில் நீங்கள்
இருந்தால், அதனை ஏற்றுக்கொள்வீர்களா? உதாரணத்திற்கு, இந்தியாவில்
இந்துக்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கிறது, அவர்கள் பெரும்பான்மையினராக
இருக்கிறார்கள். ஒரு இந்து சாது அல்லது சாமியார், உங்கள் முஹம்மது
சொன்னதுபோலவே இந்துக்களுக்கு கட்டளையிட்டால், அது சரியானது என்று
நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இதே போல, மேற்கத்திய நாடுகளில்
பெரும்பான்மையாக இருப்பவர்கள் முஸ்லிம்களை நடத்தினால், அதனை
ஏற்றுக்கொள்வீர்களா?

நம் இந்தியாவிலும், சுதந்திரத்திற்கு முன்பாக, இந்துக்கள் இடையேயும்
மேல் ஜாதிமக்கள், கீழ் ஜாதி மக்கள் என்று பாகுபாடு இருந்தது. இந்துக்
கோயில்களில் சில பிரிவினர் வரக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது.
சாலையில் செல்லும் போது மேல் ஜாதி மக்களுக்கு மதிப்பு கொடுக்கும் படி
கீழ்ஜாதி மக்கள் விலகிச் செல்லவேண்டிய நிலை இருந்தது. இப்படிப்பட்டவைகள்
தவறானவை என்றும், இஸ்லாம் இப்படிப்பட்ட பாகுபாடு காட்டுவதில்லை என்றும்
மேடை போட்டு பேசும் முஸ்லிம்களே! உங்கள் முஹம்மது சொன்னதும் இதைத் தானே!
முஹம்மதுவைப் பொறுத்தமட்டில் "முஸ்லிம்கள்" என்பவர்கள் மேல் ஜாதி மக்கள்,
இதர மார்க்கத்தார்கள் "கீழ் ஜாதி" மக்களாவார்களா? ஜாதிப்பிரிவினை
பிரச்சனைகள், இந்து தர்மத்தில் இருந்தால் அது பாவம், இஸ்லாமில் இருந்தால்
அது புண்ணியமா? அவர்களுக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா?

நாம் வாழும் இக்காலத்திலும் சில கிராமங்களில் இப்படிப்பட்ட ஜாதிவெறி
செயல்கள் வெளிப்படும் போது, கொதித்து எழும் முஸ்லிம்கள், ஏன் உங்கள்
முஹம்மது சொன்னதை மட்டும் ஏற்றுக்கொள்கிறீர்கள்? இஸ்லாம் என்று வந்தால்
மட்டும், உங்கள் கோபமும், எழுச்சியும் ஏன் அப்படியே அமைதியாக
இருந்துவிடுகிறது?

நீங்கள் ஏற்றாலும் சரி, ஏற்காவிட்டாலும் சரி முஹம்மது சொன்னது
ஜாதிவெறிச்செயலாகும். ஒரு சமுதாயத்தில் சகோதரர்களாக வாழும் மக்களுக்கு
இடையில் விரிசலையும், ஏற்றத்தாழ்வுகளையும் உண்டாக்கும் படி முஹம்மது
போதனை செய்துள்ளார்.

முஸ்லிம்களின் ஆட்சேபனை - 3

இந்த ஹதீஸில், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வழியை விடாதீர்கள்
என்றுச் சொல்லப்பட்டதே தவிர, இந்துக்களுக்கு இல்லையே! ஏன் மேற்கண்ட ஹதீஸை
இந்துக்களோடு சம்மந்தப்படுத்தி, இஸ்லாமை கேவலப்படுத்துகிறீர்கள்?

யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் இப்படி கீழ்தரமாக முஸ்லிம்கள் நடந்துக்
கொள்வது இஸ்லாமுக்கு கேவலமில்லையா? இந்துக்களிடம் நடந்துக் கொண்டால் தான்
இஸ்லாமுக்கு கேவலமா?

இங்கு குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது.
அதாவது யூதர்களும், கிறிஸ்தவர்களும் குர்-ஆனின் படி "வேதம்
அருளப்பட்டவர்கள்" ஆவார்கள். வேதம் அருளப்பட்டவர்களிடமே இஸ்லாம் இப்படி
கீழ்தரமாக நடந்துக் கொள்ளுமானால், மற்றவர்களின் நிலை இதை விட அதிக
கேடுள்ளதாக இருக்குமல்லவா?

எந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் சரி, அவர்களை இதர
குடிமக்களைப்போல சரி சமமாக நடத்தவேண்டும், அப்படி நடத்தாத இஸ்லாமிய
அரசைப் பார்த்து எல்லோடும் சிரிப்பார்கள்.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய நாட்டில் ஏன் சாலைகளில் ஓரமாக
நடந்துச் செல்லவேண்டும்? முஸ்லிம்கள் என்ன வானத்திலிருந்து
இறங்கிவந்தவர்களா? ஒரு மனிதனை மனிதனாக மதிக்காமல், அவன் நம்பிக்கையை
காரணம் காட்டி, அவனது மனதை புண்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

நாம் மேலே கண்ட ஹதீஸில், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வழி
விடாதீர்கள் என்று முஹம்மது சொன்னதாக காண்கிறோம். ஆனால், தற்கால இஸ்லாமிய
அறிஞர்களின் விரிவுரைகளின் படி, முஸ்லிமல்லாத அனைவருக்கும் முஸ்லிம்கள்
விசாலமான வழியை விடக்கூடாதாம். இதனை அடுத்த பாகத்தில் விவரமாக காணலாம்.

இஸ்லாமிய விரிவுரையாளர்கள், இந்த ஹதீஸ் பற்றி என்ன சொல்கிறார்கள்?

நாம் மேலே பார்த்த முஸ்லிம் ஹதீஸின் விளக்கவுரையை பாருங்கள்.

Chapter 138

Greeting the non-Muslims and Prohibition of taking an Initiative

866. Abu Hurairah (May Allah be pleased with him) reported: The
Messenger of Allah (PBUH) said, "Do not greet the Jews and the
Christians before they greet you; and when you meet any one of them on
the road, force him to go to the narrowest part of it.'' [Muslim].

Commentary: This Hadith prohibits Muslims from greeting non-Muslims
first. It also tells us that when the road is crowded, we should use
the middle of the road and let the non-Muslims use its sides. This
Hadith shows the dignity of Muslims and the disgrace and humiliation
of the non-Muslims. (Riyad-us-Saliheen, compiled by Al-Imam Abu
Zakariya Yahya bin Sharaf An-Nawawi Ad-Dimashqi, commentary by Hafiz
Salahuddin Yusuf, revised by M.R. Murad [Darussalam Publishers &
Distributors, Riyadh, Houston, New York, Lahore, First Edition: June
1999], Five. The Book of Greetings, Chapter 138: Greeting the
non-Muslims and Prohibition of taking an Initiative, Volume 2, p.
711). மூலம்: http://abdurrahman.org/2014/09/04/riyad-us-saliheen-imaam-nawawi-chapter-138/
and http://islamicstudies.info/hadith/riyad-us-saliheen/riyad.php?hadith=866&to=868

ரியாத் அஸ் ஸாலிஹீன் - விளக்கவுரை: இஸ்லாமியரல்லாதவர்களுக்கு முஸ்லிம்கள்
முதலாவது ஸலாம் சொல்லக்கூடாது என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. மேலும்,
சாலையில் மக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தால், முஸ்லிம்களாகிய நாம்
சாலையில் மத்தியில் செல்லவேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் சாலையில்
ஓரங்களில் செல்லவேண்டும். இந்த ஹதீஸ் முஸ்லிம்களின் மேன்மையை எடுத்துக்
காட்டுகிறது. அதேபோல, முஸ்லிமல்லாதவர்கள் எவ்விதமாக அவமானம்
அடையவேண்டும், மேலும் முஸ்லிம்களுக்கு முன்பாக எப்படி தாழ்தப்பட்டு
போகவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

முஸ்லிமல்லாதவர்களுக்கு வழியை விடாதே:

"இஸ்லாம் கேள்வி பதில்கள்" (islamqa) என்ற தளத்தில் இதைப் பற்றி ஒரு
முஸ்லிம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும்
போது, முஸ்லிமல்லாதவர்களுக்கு வழியை விடாமல், அவர்கள் சுவரின் ஓரமாகச்
செல்ல கட்டாயப்படுத்துங்கள் என்றுச் சொல்வது, முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம்
பற்றி தவறாக நினைக்க தூண்டுமல்லவா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு
இஸ்லாமிய அறிஞர்கள் கீழ்கண்ட பதிலைச் சொல்லியுள்ளார்கள்.

What it means is that just as you do not initiate the greeting of
salaam, you should not make room for them. If they meet a group of
you, do not split up to let them pass, rather continue on your way and
leave them the narrow space if there is a narrow part of the road.
This hadeeth is not meant to put people off Islam, rather it is a
manifestation of the Muslim's pride and a sign that he does not
humiliate himself for anyone except his Lord.

இதன் பொருள் என்னவென்றால், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முதலாவது
ஸலாம் சொல்லாதீர்கள், மேலும் அவர்களை சாலையில் சந்தித்தால், அவர்களுக்கு
வழியை விடாதீர்கள் என்பதாகும். அவர்கள் உங்களை சாலையில் சந்திக்கும்
போது, அவர்களுக்கு வழி கிடைக்கவேண்டும் என்பதற்காக, நீங்கள்
(முஸ்லிம்கள்) தனியாக ஒதுங்கிக்கொண்டு அவர்களுக்கு வழியை விடாதீர்கள்.
அதற்கு பதிலாக, உங்கள் வழியிலே நீங்கள் தொடர்ந்து சென்றுக்கொண்டே
இருங்கள், அக்கம் பக்கத்தில் இடமிருந்தால், அவர்கள் அந்த நெருக்கமான
வழியில் செல்லட்டும். இந்த ஹதீஸ் இஸ்லாம் பற்றி மக்கள் தவறாக
நினைக்கவேண்டும் என்று சொல்வதாக இல்லை, அதற்கு பதிலாக, இது முஸ்லிம்களின்
மேன்மையையும் கண்ணியத்தையும் வெளிக்காட்டக்கூடியதாக இருக்கிறது. அதாவது
ஒரு முஸ்லிம் அல்லாஹ்விற்கு தவிர வேறு நபர்களுக்கு முன்பாக தாழ்ந்து
போகக்கூடாது என்பதைக் காட்டுகிறது.

மூலம்: https://islamqa.info/en/26785

ஒரு கேவலமான விஷயத்தை எவ்வளவு நாசுக்காக சொல்லியுள்ளார் என்பதை
கவனியுங்கள். ஒரு முஸ்லிமின் கண்ணியம், அவன் சாலையில் செல்லும் போது இதர
மார்க்க மக்களுக்கு வழியை விடாமல் இருந்தால் கிடைத்துவிடுமாம். அதே
நேரத்தில், முஸ்லிமல்லாதவர்கள் எவ்வளவு அதிகமாக இப்படிப்பட்ட அவமானங்களை
சந்திக்கவேண்டி வரும் என்பதை பாருங்கள். மேற்கண்ட விதமாக இஸ்லாமிய
அறிஞர்கள் சொல்வது வெறும் பேச்சுக்காக அல்ல, உண்மையாகவே இதனை இஸ்லாமிய
நாடுகளில் வாழும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் அனுதினமும்
அனுபவிக்கிறார்கள்.

சுருக்கமும் முடிவுரையும்:

தமிழ் முஸ்லிம்கள் மனிதாபமானத்தோடு சென்னையில் உதவி செய்தார்கள். ஆனால்,
முஸ்லிமல்லாதவர்களிடம் மனிதாபமானத்தோடு நடந்துக் கொள்ளக்கூடாது என்று
இஸ்லாம் கூறுகிறது.

அ) இஸ்லாமிய நூல் "முஸ்லிம் ஹதீஸின்" படி, முஸ்லிம்கள் சாலையில்
சென்றுக்கொண்டு இருக்கும் போது, முஸ்லிமல்லாதவர்களுக்கு வழியை
விடக்கூடாது.

ஆ) முஹம்மதுவின் கட்டளையின் படி, முஸ்லிமல்லாதவர்கள் நெருக்கமான வழியில்
செல்லும் படி முஸ்லிம்கள் அவர்களை கட்டாயப்படுத்தவேண்டும்.

இ) இஸ்லாமிய விரிவுரையாளர்களின் படி – இந்த ஹதீஸ் முஸ்லிம்களின் மேன்மையை
வெளிப்படுத்துகிறது. அதாவது, மற்ற மார்க்க மக்களைவிட முஸ்லிம்கள்
உயர்ந்தவர்கள் என்பதை இது காட்டுகிறது.

ஈ) இஸ்லாமிய விரிவுரையாளர்களின் படி - சாலையில் முஸ்லிம்கள்
மற்றவர்களுக்கு வழியை விட்டால், அது அவர்கள் தாழ்ச்சி அடைந்துவிட்டதாக
கருதப்படும். எனவே, முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு சாலையில் வழியை
விடக்கூடாது.

உ) ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு காட்டவேண்டிய குறைந்த பட்ச உதவியை கூட
செய்யக்கூடாது என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது.

இஸ்லாம் மேற்கண்ட விதமாக முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டு இருக்கும்போது,
நம் தமிழ் முஸ்லிம்கள் எப்படி இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும்
உதவிகள் செய்தனர்? முஸ்லிமல்லாதவர்களுக்கு சாலையில் வழியை விடக்கூடாது
என்று முஹம்மது சொல்லியிருக்கும் போது, தமிழ் முஸ்லிம்கள் எப்படி
இந்துக்களின் தெருக்களில் சாக்கடையில் நடந்துச் சென்று, பொருட்களை
சுமந்துச் சென்று உதவி செய்தனர்? கிறிஸ்தவர்களுக்கு முதலாவது ஸலாம்
சொல்லக்கூடாது என்றும், அவர்களுக்கு வழியை விட்டு முஸ்லிம்கள்
தாழ்ந்துவிடக்கூடாது என்றும் இஸ்லாம் கட்டளையிட்டு இருக்கும் போது, தமிழ்
முஸ்லிம்கள் எப்படி கிறிஸ்தவர்களின் வீடு தேடிச் சென்று, உணவுகள்,
மருந்து பொருட்கள் மற்றும் இதர உதவிகள் செய்தனர்?

லாஜிக் எங்கேயோ இடிக்கிறதே! தமிழ் முஸ்லிம்கள், இஸ்லாம் சொல்வதை
நம்புவதில்லையா? அல்லது இஸ்லாமின் போதனை நடைமுறைக்கு ஏற்றதல்ல என்றுச்
சொல்லி இஸ்லாமை புறக்கணித்துவிட்டார்களா? இஸ்லாம் சொல்வதைப்போல தமிழ்
முஸ்லிம்கள் நடந்துக் கொண்டு இருந்திருந்தால், சென்னையில் இதர
முஸ்லிம்களுக்கு மட்டுமே உதவி செய்திருக்கவேண்டும், இந்துக்களுக்கும்,
கிறிஸ்தவர்களுக்கும் உதவி செய்திருக்கக்கூடாது. ஆனால், தமிழ்
முஸ்லிம்கள், தங்கள் உயிரை துச்சமாக நினைத்து அல்லவா அனைவருக்கும்
உதவினார்கள்!

இக்கேள்விகளுக்கு நம் தமிழ் முஸ்லிம்கள் பதில் சொல்வார்கள் என்று நான்
நம்புகிறேன். இஸ்லாம் சொல்வதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், முஹம்மது
சொன்னதை புறக்கணித்துவிட்டு, சென்னையில் உதவி புரிந்த ஒவ்வொரு
முஸ்லிமுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால்,
இந்த முஸ்லிம்களை முஹம்மதுவும், அல்லாஹ்வும் மன்னிப்பார்களா? இதற்கு
முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

அடுத்த கட்டுரை. . .

அடுத்த கட்டுரையில் பீஜே அவர்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்வதைப்
பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதையும், நாம் மேலே பார்த்த முஸ்லிம் ஹதீஸ்
பற்றி அவர் என்ன விளக்கம் கொடுத்துள்ளார் என்பதைப் பற்றியும் சுருக்கமாக
காண்போம்.

________________________________

சென்னையில் முஸ்லிம்களின் பேருதவி தொடர் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/chennai_muslims/chennai_muslims_part3.html



http://www.isakoran.blogspot.in/2016/02/3.html

பாகம் 2 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?

பாகம் 2 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும்
அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?

<http://www.isakoran.blogspot.in/2016/02/2.html>

(முஸ்லிமல்லாதவர்களுக்கு
முதலாவது ஸலாம் சொல்லக்கூடாது)



*முன்னுரை:*

இத்தொடர் கட்டுரைகளின் அறிமுகத்தை முதல் பாகத்தில் படித்துவிட்டு, இந்த
இரண்டாம் தொடரை படிக்கவும்.

பாகம் 1 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும்
மன்னிப்பார்களா?
<http://www.answering-islam.org/tamil/authors/umar/chennai_muslims/chennai_muslims_part1.html>


முதல் பாகத்தில் "தாடி, தலைமுடி, மீசை, வேட்டி மற்றும் செருப்பு" போன்ற
அற்பமான விஷயங்களில் முஸ்லிம்கள் எப்படி முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக
நடந்துக்கொள்ளவேண்டும் என்று முஹம்மது கற்றுக்கொடுத்தார் என்பதை ஆய்வு
செய்தோம்.

இந்த இரண்டாம் தொடரில் இன்னும் எந்தெந்த விஷயங்களில் முஸ்லிம்களின் மனதில்
முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான விஷ வாயுவை இஸ்லாம் செலுத்தியுள்ளது என்பதைக்
காண்போம். இந்த விவரங்களை முஸ்லிம்கள் படிப்பதினால் அவர்களது மனது
புண்படலாம், ஆனால் அதற்கு காரணம் இஸ்லாம் தான். நீங்கள் மேற்கொண்டு ஏதாவது
உறுப்படியாக செய்யவேண்டுமென்று விரும்பினால், இந்த தொடர்களில் கொடுக்கப்படும்
இஸ்லாமிய ஆதாரங்களை ஆய்வு செய்து, உங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடம் கேள்வி
கேட்டுப் பாருங்கள்.
பாகம் 2

சென்னையில் முஸ்லிம்கள் செய்த உதவிகளை பார்க்கும் போது, "இந்துக்களிடமும்,
கிறிஸ்தவர்களிடமும் அதாவது முஸ்லிமல்லாதவர்களிடம்" மனித நேயத்தோடு நடந்துக்
கொள்ளுங்கள் என்று முஸ்லிம்களுக்கு இஸ்லாம் போதிக்கிறது என்று நாம்
எண்ணிக்கொள்கிறோம். ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது.

முஸ்லிமல்லாதவர்களுக்கு உதவி செய்யும் படி இஸ்லாம் போதிக்கின்றது என்றுச்
சொல்பவர்கள் அதற்கான ஆதாரங்களை குர்-ஆனிலிருந்து காட்டவேண்டும். ஆனால், இதற்கு
எதிராக அனேக ஆதாரங்களை இஸ்லாமில் காணலாம். முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக
நடந்துக் கொள்ளுங்கள் என்று முஹம்மது அனேக கட்டளைகளை கொடுத்துள்ளார்.
இக்கட்டுரையில் இதைப் பற்றிய இன்னொரு ஹதீஸைக் காண்போம்.
முஸ்லிமல்லாதவர்களிடம் காட்டும் வெறுப்புணர்வின் வெளிப்பாடுமுஸ்லிம்களே!
முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலில் முகமன் (ஸலாம்) சொல்லாதீர்கள்

ஒருவர் இன்னொருவரைக் காணும் போது, ஹலோ அல்லது வணக்கம் என்றுச் சொல்வது சாதாரண
விஷயம். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை காணும் போது, "அஸ்ஸலாமு அலைக்கும் –
உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வார். ஒரு முஸ்லிம், ஒரு
இந்துவையோ, கிறிஸ்தவனையோ வழியில் காணும் போது, எப்படி முகமன் (வணக்கம்)
சொல்லவேண்டும்? இதைப் பற்றி முஸ்லிம்களின் வழிகாட்டி முஹம்மது என்ன
சொல்கிறார் என்பதைக் காண்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள்*.
அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால், சாலையின் நெருக்கடியான
பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.

ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் நூல், எண் 4376

மேற்கண்ட ஹதீஸில் முஹம்மது இரண்டு (அருமையான!) அறிவுரைகளை முஸ்லிம்களுக்கு
கொடுத்துள்ளார். இவ்விரண்டு அறிவுரைகளும் மாற்று மதத்தவர்களுக்கு எதிராக
முஸ்லிம்கள் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்றன.
இவ்விரண்டு அறிவுரைகளும் முஸ்லிம்களின் மனதில் வெறுப்புணர்வைத்
தூண்டக்கூடியவைகளாக உள்ளன. இக்கட்டுரையில் முதல் அறிவுரையைப் பற்றி ஆய்வு
செய்வோம்.

*குறிப்பு: *யூதர்கள் முஹம்மதுவிற்கு ஸலாம் சொல்லும் போது, "உங்கள் மீது
மரணமுண்டாகட்டும் – அஸ்ஸாமு அலைக்கும்" என்று சொல்வார்கள், அதற்கு
முஹம்மதுவும் "உங்கள் மீதும்" என்றும் சொல்வார். பதிலுக்கு பதில் சரியாக
அமைந்துவிடும். யாராவது இப்படி வாழ்த்து கூறினால், நீங்கள் இப்படியே
சொல்லுங்கள் என்று அவர் கற்றுக்கொடுத்துள்ளார். ஆனால், இந்த தொடரில் நாம்
ஆய்வு செய்யப்போவது இந்த விவரமல்ல, முதலாவது முஸ்லிம்கள்
முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லலாமா இல்லையா என்பது தான்.
முஸ்லிமல்லாதவர்களுக்கு முதலில் முகமன் கூறாதீர்கள் - நல்ல மனிதர்களை கெடுக்க
முயலும் இறைத்தூதர்:

ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள் ஏற்கனவே தங்கள் நம்பிக்கைகளினால் பலவகையாக
பிரிந்து கிடக்கிறார்கள். என் இறைவன் தான் பெரியவன், உன் இறைவன் அப்படி
இல்லை, என் மதம் தான் சரியானது, உன் மதம் தவறானது என்று மக்கள் நினைத்துக்
கொண்டு வாழுகிறார்கள்.

இந்த நிலையில் மக்கள் இருக்கும் போது, நீங்கள் மாற்று மதத்தவர்களுக்கு முதலில்
வணக்கம் சொல்லாதீர்கள் என்று "முஹம்மது" கட்டளையிடுவது எவ்வளவு கீழ்தரமானது?
நண்பர்களும், உறவினர்களும் பல காரணங்களுக்காக சில காலம் பிரிந்து
இருந்தாலும், இவர்களில் யாராவது ஒருவர் சுயமாக முன்வந்து, மற்றவருக்கு வணக்கம்
சொல்லி, நலம் விசாரித்தால், பழைய பகையையெல்லாம் மறந்து மறுபடியும் நட்பு
கொண்டு ஒற்றுமையாக வாழ்வதை நாம் அவ்வப்போது நிஜவாழ்க்கையில் காண்கிறோம்.
இதேயே முஹம்மது முஸ்லிம்களுக்கும் கட்டளையிட்டுள்ளார், அதாவது முஸ்லிம்களில்
இருவர் மனஸ்தாபம் கொண்டு பிரிந்து இருந்தால், அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு
மேல் அவர்களின் பிரிவு இருக்கக்கூடாது. இவர்களில் யார் அடுத்தவரை முதலில்
சந்தித்து ஸலாம் கூறுகிறாரோ, அவர் தான் சிறந்தவர் என்று முஹம்மது
முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டுள்ளார் (பார்க்க ஸஹீஹ் புகாரி நூல் எண் 6077).
இந்த கட்டளை முஸ்லிம்களுக்கு மட்டுமே, முஸ்லிமல்லாதவர்களுக்கு இல்லை, இதனை
இஸ்லாமிய அறிஞர்கள் மறுத்தால் விளக்கம் தரவும்.

தங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று சொல்லிக்கொள்ளும் முஸ்லிம்களின்
நிரந்தர வழிகாட்டியாகிய முஹம்மது சொல்லும் அறிவுரையை நன்றாக கவனித்துப்
பாருங்கள்.

இப்படிப்பட்ட அறிவுரைகளை படிக்கும் முஸ்லிம்களின் உள்ளத்தில் மாற்று மத
மக்களைப் பற்றி எப்படிப்பட்ட எண்ணங்கள் உண்டாகும்?

- எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் ஒன்றைச் சொன்னால், அது சரியாகத் தான்
இருக்கும்.
- முஹம்மது "ஆம்" என்றால் "ஆம்", அவர் "இல்லை" என்றால் "இல்லை" – இது தான்
முஸ்லிம்களின் உயிர் மூச்சு.
- முஸ்லிமல்லாதவர்கள் மீது முஹம்மதுவிற்கு எவ்வளவு வெறுப்புணர்வு
இருந்தால், இப்படி முதலாவது நீங்கள் முகமன் சொல்லாதீர்கள் என்றுச் சொல்வார்?
- இஸ்லாமிய தீவிரவாதிகள் ஏன் ஈவு இரக்கமில்லாமல், முஸ்லிமல்லாதவர்களை
கொல்கிறார்கள் என்பதற்கு இப்படிப்பட்ட இஸ்லாமிய கட்டளைகளே காரணம் என்பதை
புரிந்துக் கொள்ள முடிகின்றதா?
- முதலாவது ஒரு முஸ்லிம், முஸ்லிமல்லாதவனுக்கு வணக்கமோ, ஸலாமோ சொன்னால்,
அவனுக்கு என்ன குறைந்துவிடும்? அவன் வாயிலிருந்து முத்துக்கள்
உதிர்ந்துவிடுமா? இதனால் அல்லாஹ்விற்கு என்ன தீமை நடந்துவிடும்?
- சக மனிதனுக்கு ஜாதி பார்க்காமல், "முதலாவது வாழ்த்துக்கள் சொல்வதற்கும்"
தடைவிதிக்கும் இஸ்லாமை பின்பற்றும் அதே முஸ்லிம்கள், தங்கள் உயிரை பணயம்
வைத்து சென்னையில் ஜாதி மதம் பார்க்காமல் எப்படி உதவி செய்தார்கள்? இது எப்படி
சாத்தியம்? இவர்கள் முஹம்மதுவையும் அவரது போதனைகளையும் புறக்கணித்தவர்களா?

இந்த வாழ்த்துதல் சொல்வதைப் பற்றி இதர இஸ்லாமிய விவரங்களை இப்போது காண்போம்.
படிக்கும் போது சிரிப்பு வந்துவிட்டால், சிரித்துவிடுங்கள், அதன் பிறகு
இஸ்லாம் பற்றி சிந்தியுங்கள், நம் தமிழ் முஸ்லிம்களின் நிலைப்பற்றியும்
சிந்தியுங்கள்.
1) என் வாழ்த்துதலை எனக்கு திருப்பி கொடுத்துவிடு:

ஆரம்ப கால முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கின்றது என்பதை கவனியுங்கள். சிறு
பிள்ளைகள் சண்டையிட்டுக் கொண்டால், 'நான் நேற்று கொடுத்த சாக்லெட் திரும்ப
கொடுத்துவிடு' என்று கேட்பது போல் இருக்கிறது.

அப்துர்ரஹ்மான் கூறினார்: "இப்னு உமர் ஒரு கிறிஸ்தவரை கடந்துச் சென்றார். அந்த
கிறிஸ்தவர் இப்னு உமருக்கு வாழ்த்து கூறினார், உடனே இப்னு உமரும் அவருக்கு
திரும்ப வாழ்த்து கூறினார். அதன் பிறகு இப்னு உமருக்கு 'அந்த நபர் ஒரு
கிறிஸ்தவர்' என்று அறிவிக்கப்பட்டபோது, உடனே இப்னு உமர் திரும்பச் சென்று அந்த
கிறிஸ்தவரிடம் "*என்னுடைய வாழ்த்துதலை திரும்ப கொடுத்துவிடு*" என்று கேட்டார்.
(இமாம் புகாரியின் 'அல்-அதப் அல்-முஃப்ரத்' எண்: 1115)

521. When someone greets a Christian whom he does not recognise

1115. 'Abdu'r-Rahman said, "Ibn 'Umar passed by a Christian who greeted him
and Ibn 'Umar returned the greeting He was told that the man was a
Christian. When he learned that, he went back to him and said, '*Give me
back my greeting*.'" (Al-Adab Al-Mufrad - Imam Al-Bukhari (Rahimullaah) -
Translation by Ustadah Aisha Bewley
<http://www.siratalmustaqim.com/al-adab-al-mufrad-imam-bukhari-chapter-7.php>
)
2) ஒரு கிறிஸ்தவனுக்கு எப்படி வாழ்த்து கூறுவது? சொல்லிய வாழ்த்தை மாற்றுவது
ஏன்?

முஸ்லிம்களின் மனதில் எப்படிப்பட்ட விஷவாயு பரவியிருந்தது என்பதை எடுத்துக்
காட்டும் இன்னொரு உதாரணம். ஆனால் நம் தமிழ் முஸ்லிம்களைப் பாருங்கள், எவ்வளவு
மனித நேயத்தோடு நமக்கு உதவி செய்துள்ளார்கள்! இந்த கீழ்கண்ட ஹதீஸில், ஒரு
முஸ்லிம் ஒரு கிறிஸ்தவருக்கு வாழ்த்தை கூறுகிறார், அவர் கிறிஸ்தவர் என
அறிந்து, தான் கூறிய வாழ்த்தை திரும்ப பெற்றுக்கொண்டு, புதிய வாழ்த்தைக்
கூறினார்.

520. ஒரு திம்மி (கிறிஸ்தவனுக்கு) எப்படி வாழ்த்து கூறுவது?

1112. "உக்பா இப்னு அமிர் அல் ஜுஹானி" ஒரு மனிதரைக் கடந்துச் சென்றார். ஒரு
முஸ்லிமைப்போல தோற்றமளித்த இவர் உக்பாவிற்கு வாழ்த்து கூறினார். உடனே உக்பா
மறுமொழியாக "உங்கள் மீதும் சமாதானம் உண்டாவதாக, இன்னும் அல்லாஹ்வின் அருளும்
ஆசீர்வாதமும் உங்கள் மீது உண்டாகட்டும்" என்று வாழ்த்து கூறி சென்றுவிட்டார்.
உக்பாவின் அடிமை "அவர் ஒரு கிறிஸ்தவர்" என்று உக்பாவிற்கு அறிவித்தார். உடனே
உக்பா எழுந்து அந்த கிறிஸ்தவரை சந்திக்கும் வரை வந்த வழியே சென்றார். *அவர்
அந்த கிறிஸ்தவரை சந்தித்ததும் "அல்லாஹ்வின் அருளும் ஆசீர்வாதமும்
முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது. எனவே உனக்கு கூறிய வாழ்த்தை திரும்ப
பெற்றுக்கொண்டு, வேறு வகையான வாழ்த்தைக் கூறுகிறேன், "உங்களுக்கு அல்லாஹ்
நீடித்த ஆயுளும், பிள்ளைச் செல்வங்களும், இதர செல்வங்களும் கொடுப்பானாக"
என்றுச் சொன்னார்*.

520. How to make supplication for a dhimmi

1112. 'Uqba ibn 'Amir al-Juhani passed by a man who looked like a Muslim
who greeted him. 'Uqba answered him, saying, "And on you and the mercy of
Allah and his blessings." His slave said to him, "He is a Christian." 'Uqba
got up and followed him until he caught up to him. He said, "The mercy of
Allah and His blessings are for the believers, but may Allah make your life
long and give you much wealth and many children." (Al-Adab Al-Mufrad - Imam
Al-Bukhari (Rahimullaah) - Translation by Ustadah Aisha Bewley
<http://www.siratalmustaqim.com/al-adab-al-mufrad-imam-bukhari-chapter-7.php>
)

மேற்கண்ட விவரம் பல கேள்விகளை எழுப்புகிறது.

ஏன் உக்பாவின் அடிமை "அவர் ஒரு கிறிஸ்தவர்" என்றுச் சொன்னார்?
கிறிஸ்தவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் பற்றிய வாழ்த்துச் சொல்லக்கூடாது என்று
இந்த அடிமைக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததா? அப்படியானால், இதனை முஹம்மது
சொல்லாமல் எப்படி அவருக்கு தெரிந்திருக்கும்? அவர் கிறிஸ்தவர் என்று
தெரிந்தவுடன், உக்பா விஷயத்தை (தன் தவறை) புரிந்துக்கொண்டு, உடனே திரும்பிச்
சென்று வேறு வகையான வாழ்த்தைச் சொன்னதிலிருந்து, இஸ்லாம் எப்படிப்பட்ட
எண்ணங்களை முஸ்லிம்களின் மனதில் விதைத்திருக்கிறது என்பதை அறிந்துக்
கொள்ளமுடிகின்றது! இஸ்லாமின் இறையியல் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக
இருந்தால், எப்படி அவர்கள் அல்லாஹ்வை தெய்வமென்று அறிந்து அவரை தொழுதுக்
கொள்ளமுடியும்? அல்லாஹ்வின் அருள் இல்லாமல், எப்படி கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வை
விசுவாசிக்கமுடியும்? ஏன் இப்படியெல்லாம் முஹம்மது போதனை செய்து முஸ்லிம்களின்
மனதில் முஸ்லிமல்லாதவர்கள் பற்றி தீய எண்ணங்களை விதைத்திருக்கிறார்?

*தற்கால தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள், "ஸலாம்" பற்றி என்ன சொல்லியுள்ளார்கள்?*
*அ) புறக்கணிக்கப்பட்ட சலாம்*

புறக்கணிப்பட்ட சலாம் என்ற பெயரில் ஒரு கட்டுரை சுவனத்தென்றல் என்ற தளத்தில்
பதிக்கப்பட்டுள்ளது (அதன் தொடுப்பு
<http://www.suvanathendral.com/general/salam.html>).

இந்த கட்டுரையில் ஏன் முஸ்லிம்கள் ஸலாம் சொல்லவேண்டும் என்று
விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்வது பற்றிய
தலைப்பு வரும் போது, ஆசிரியர் கீழ்கண்ட விதமாக கூறி நழுவிவிட்டார். மேலும்,
நான் மேலே காட்டிய ஹதீஸ் பற்றி முச்சு விடவில்லை.

*இக்கட்டுரையின் முன்னுரை இவ்விதமாக உள்ளது:*

இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே
மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும்
என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத்
தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (சலாம்) கூறுதல் ஆகும்.

*அடுத்தது. . . முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுவது பற்றி இவ்விதமாகச்
சொல்லப்பட்டுள்ளது:*

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுதல்: -

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறலாமா அல்லது அவர்களுடைய சலாத்திற்கு பதில்
கூறலாமா? என்பதில் ஒரு சில அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும்,
பெரும்பாலான அறிஞர்கள் மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதை
ஆதரிக்கின்றார்கள்.

அத்தியாயம் 4, ஸூரத்துன்னிஸாவு (பெண்கள், வசனம் 86 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான
(வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் -
நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை.
மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதன் மூலம் அவர்கள்
இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும்
சகோதரத்துவமும் அதிகரிக்கும்.

*இவ்விவரங்களை படிப்பவர்களுக்கு எழும் கேள்விகள்:*

- 14 நூற்றாண்டுகள் தாண்டியும், இன்னும் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம்
கூறலாமா வேண்டாமா? என்ற ஆய்வு நடந்துக்கொண்டே இருக்கிறது! ஒரு சின்ன
விஷயத்தில் கூட இன்னும் நீங்கள் ஒருமித்த கருத்துக்கு வரவில்லையா?
- ஸஹீஹ் முஸ்லிம் எண் 4376ஐ பற்றி, ஏன் இக்கட்டுரையில் விவரிக்கவில்லை?
- குர்-ஆன் 4:86ம் வசனத்திற்கு நீங்கள் சொல்லும் விளக்கத்திற்கு எதிராக,
முஹம்மது கூறியுள்ளார் (முஸ்லிம் ஹதீஸில் எண் 4376). குர்-ஆன் சொல்வது தவறா
அல்லது முஹம்மது சொல்வது தவறா?

ஆ) பீஜே குர்-ஆன் தமிழாக்கத்தின் விளக்கம் 159 - ஸலாம் கூறும் முறை:

பீஜே அவர்களின் குர்-ஆன் தமிழாக்கத்தின் விளக்கம் 159ல், பீஜே அவர்கள் ஸலாம்
பற்றி பல விவரங்களைக் கொடுத்துள்ளார். அதில் முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம்
சொல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், முஸ்லிம் ஹதீஸ் எண் 4376ஐ பற்றி
அவர் ஒன்றும் கூறவில்லை.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக்
கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால்
அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு
கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக
அனுமதித்துள்ளனர்.

மூலம்:
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/159_salam_koorum_murai/

நம்முடைய கேள்வி என்னவென்றால், "முஸ்லிமல்லாதவருக்கு முதலாவது ஸலாம்
சொல்லாதீர்கள்" என்று முஹம்மது "முஸ்லிம் ஹதீஸில்" சொல்லியுள்ளாரே, அதைப்
பற்றி பீஜே அவர்கள் மூச்சுவிடவில்லையே ஏன்? மாற்று மத சகோதரர்களிடம்
சகோதரத்துவத்தை இஸ்லாம் வளர்க்கிறது என்று முஸ்லிம்கள் சொல்வது பொய் அல்லவா?
சின்ன விஷயமாகிய ஸலாம் சொல்வதில் முந்திக்கொள்ளக்கூடாது என்று முஸ்லிம்களுக்கு
முஹம்மது கட்டளையிடுவது எவ்வளவு கீழ்தரமானது?
இத்தொடரின் சுருக்கமும், சென்னையில் உதவி புரிந்த முஸ்லிம்களுக்கு கேள்விகளும்:

1) குர்-ஆன் 4:86, தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் வாழ்த்துக்கள்
சொல்லுங்கள் என்று கட்டளையிடுகிறது.

2) ஆனால் முஹம்மதுவோ, யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்க்கும் முதலாவது
வாழ்த்துக்கள் சொல்லாதீர்கள் என்று கட்டளையிட்டார்(முஸ்லிம் எண் 4376).

3) ஆரம்ப கால முஸ்லிம்கள், சிறந்த வாழ்த்தை முஸ்லிமல்லாதவர்களுக்கு தவறுதலாக
சொன்னாலும், உடனே அதனை திரும்ப பெற்றுக் கொண்டு இருந்திருக்கிறார்கள். சில
சமயங்களில் வாழ்த்தை திரும்பப் பெற்றுக்கொண்டு, வேறு வாழ்த்தைச்
சொல்லியுள்ளார்கள். இவைகளை முஹம்மதுவின் மூலமாகவே இவர்கள் அறிந்திருப்பார்கள்.
இவைகள் சிறுபிள்ளைத் தனமான செயல்களாக காணப்படுகின்றது.

4) குர்-ஆன் 4:86ம் வசனத்திற்கு எதிராக ஸஹீஹ் முஸ்லிம் 4376 உள்ளது. முஹம்மது
எப்படி குர்-ஆன் 4:86க்கு எதிராக போதித்துள்ளார் என்பதை இந்த கட்டுரை ஆய்வு
செய்கிறது, அதனை இங்கு படிக்கலாம்: குர்-ஆன் மற்றும் சுன்னாவின் படி
இஸ்லாமியரல்லாதவர்களுக்கு முஸ்லிம்கள் எப்படி வாழ்த்துக்கள் கூறுவது?
<http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/greeting_nonbelievers.html>


5) இந்த இஸ்லாமிய ஆதாரங்கள் ஒரு புறமிருக்க, தமிழ் முஸ்லிம்கள் இவைகளை
புறக்கணித்துவிட்டு, ஜாதி மதம் பேதமின்று உதவிகள் புரிந்துள்ளனர்.

6) இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில்,
தமிழ் முஸ்லிம்கள் ஒரே அடியாக இஸ்லாமை புறக்கணித்துவிட்டார்களா? அல்லது
இவ்விவரங்கள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்திருந்தும், அவைகளை மறைத்துவிட்டு,
இஸ்லாமுக்கு வெளியுலகில் நல்லப்பெயர் கிடைக்கவேண்டுமென்று, நமக்கு உதவிகள்
செய்தார்களா?
முடிவுரை:

முஸ்லிமல்லாத அனேகருக்கு மேற்கண்ட விவரங்கள் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும்!
முஹம்மதுவிற்கும், இஸ்லாமுக்கும் இப்படிப்பட்ட இன்னொரு பக்கம் இருப்பதை
அறியாதவர்கள் அனேகர். இஸ்லாமிய மூல நூல்களை நாம் படித்தால், இஸ்லாமின்
அடுத்தபக்கத்தை சரியாக புரிந்துக் கொள்ளலாம்.

அடுத்த தொடர் கட்டுரையில், இதே முஸ்லிம் ஹதீஸ் 4376ல் உள்ள இரண்டாவது
பாகத்தைப் பற்றி ஆய்வு செய்வோம்.

சென்னையில் முஸ்லிம்களின் பேருதவி தொடர் கட்டுரைகள்
<http://www.answering-islam.org/tamil/authors/umar/chennai_muslims.html>

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
<http://www.answering-islam.org/tamil/authors/umar.html>

Source:
http://www.answering-islam.org/tamil/authors/umar/chennai_muslims/chennai_muslims_part2.html

Source: http://www.isakoran.blogspot.in/2016/02/2.html

பாகம் 1 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?

பாகம் 1 - சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும்
அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?



2015ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தை சென்னைவாசிகள் ஒருபோதும்
மறக்கமாட்டார்கள். பல நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையினால் பல பகுதிகள்
தண்ணீரில் மூழ்கின, மக்கள் என்னசெய்வதென்று அறியாமல் கண்ணீரில்
மூழ்கினர். பல நாட்கள் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
கோடிக்கணக்கில் பணமுள்ளவர்கள் கூட தெருக்கோடிக்குச் சென்று தங்கள்
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளமுடியாத நிலையில் இருந்தனர்.
இந்த நேரத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இன்னும்
இதர மக்களும், "ஜாதி மத பேதம்" பார்க்காமல் உதவிகள் செய்தனர். மனித
நேயத்தின் உண்மை வடிவம், முழு பௌர்ணமி நிலவு போல பலிச்சென்று சென்னையில்
தெரிந்தது. உதவி செய்த அனைத்து பிரிவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கமும் தன் கடமையை செய்தது.

முஸ்லிம்களின் மனித நேய உதவிகள்:

இந்த முறை முஸ்லிம்கள் செய்த உதவியை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
ஒவ்வொரு இஸ்லாமிய பிரிவினரும் போட்டி போட்டுக் கொண்டு உதவிகள் செய்தனர்.
மக்களுக்கு உதவி புரியச்சென்றவர்களில் இரண்டு முஸ்லிம் சகோதரர்கள்
மரித்துவிட்டதாகவும் நாம் இணையத்தில் வாசிக்கிறோம். இவர்களின்
இவ்வுதவிகள் பற்றி மேலும் அறிய அவரவர்களின் இணைய தளங்களுக்குச் சென்று
படித்துக் கொள்ளலாம்.

பதிநான்கு நூற்றாண்டுகளாக பூட்டிவைத்திருந்த மனித நேயத்தின் கதவுகளை
முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் திறந்துவிட்டது போல் இருந்தது. சென்னையில்
முஸ்லிம்கள் செய்த உதவிகளில் முஸ்லிமல்லாதவர்களும் இருந்தார்கள் என்பது
தான் கவனிக்கவேண்டிய ஒன்று.

"இவர்கள் இந்துக்கள் ஆயிற்றே!" என்றுச் சொல்லி நீட்டிய கைகளை
முஸ்லிம்கள் சொடுக்கென்று திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை.
"இவர்கள் கிறிஸ்தவர்கள் ஆயிற்றே!" என்றுச் சொல்லி உதவி செய்ய ஓடும்
தங்கள் கால்களுக்கு முஸ்லிம்கள் தடை விதிக்கவில்லை.

தடைகளையும், ஆபத்துக்களையும் பாராமல் உதவி செய்தனர். எனவே முஸ்லிம்களை
மெச்சிக்கொள்ளாமல் நம்மால் இருக்கமுடியாது. முஸ்லிம்கள் என்றால்
தீவிரவாதிகளாக இருப்பார்கள் என்று முஸ்லிமல்லாதவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால், இந்த முறை வானத்திலிருந்து வந்த தண்ணீரால் "சென்னை
கழுவப்பட்டப்போது", அதோடு கூட முஸ்லிம்களின் இந்த அவப்பெயரும் சிறிது
கழுவப்பட்டது என்றுச் சொல்லமுடியும். வாழ்க தமிழ் முஸ்லிம்கள்! வளர்க
அவர்களின் மனித நேயம்! இக்கட்டுரையின் கருப்பொருள் முஸ்லிம்களின்
இவ்வுதவிப் பற்றியது தான். மேற்கொண்டு படியுங்கள்.

கிறிஸ்தவர்களின் மனித நேய உதவிகள் பற்றி ஏன் இக்கட்டுரையில் அதிகமாக எழுதவில்லை?

நான் முஸ்லிம்களை அதிகமாக புகழுவதைக் கண்டு, கிறிஸ்தவர்கள் என் மீது
கோபம் கொள்ளலாம். இக்கட்டுரையில் கிறிஸ்தவர்களின் உதவிகள் பற்றி ஏன்
அதிகமாக எழுதவில்லை என்பதைப் பற்றி அறிய அடிக்குறிப்பு [1] ஐ
பார்க்கவும்.

முஸ்லிம்களின் உதவிகள் பற்றிய ஆய்விற்கு நாம் வெள்ளத்தை இப்போது திருப்பிவிடுவோம்.

சில முத்துச்சிதரல்கள்:

மழை நீரில் சென்னை மிதந்த போது, குறிப்பிடும்படி சில நிகழ்வுகள் நடந்ததாக
இணையத்தில் படிக்கலாம். அவைகளில் நான்கு செய்திகளை மட்டும்
பார்த்துவிட்டு, நம் கருப்பொருளைத் தொடுவோம்.

1) ஒரு இந்து சகோதரி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தபோது, மழை
நீரால் மருத்துவமனைக்கும் செல்லமுடியாத நிலையில் தவித்துக் கொண்டு
இருந்தபோது, ஒரு முஸ்லிம் சகோதரர் அந்த பெண் மருத்துவ மனையில் பத்திரமாக
சேர்ப்பதற்கு உதவி செய்தாராம். இதனால், அந்த இந்து பெற்றோர்கள் பிறந்த
குழந்தைக்கு, தங்களுக்கு உதவி செய்த முஸ்லிம் சகோதரரின் பெயரையே
சூட்டினார்களாம்.

2) முஸ்லிம்கள் உதவி செய்வதை படமாக போட்டு, "இப்படிப்பட்ட உதவி செய்யும்
எங்களையா பாகிஸ்தானுக்கு போகச்சொல்கிறீர்கள்? நாங்கள் பாகிஸ்தானுக்கு
போகட்டுமா?" என்ற கேள்வியை முஸ்லிம்கள் பெருமிதத்துடன் கேட்டு
இருந்தார்கள்.

3) ஒரு முஸ்லிம் தன் கையில் செருப்பை எடுத்துக் கொண்டு சென்றுக் கொண்டு
இருக்கிறார், இந்த படத்தைப் போட்டு, "பாருங்கள், மாற்று மதங்களின் வணக்க
ஸ்தலங்களுக்கு மதிப்பு கொடுக்கும் வண்ணமாக, ஒரு முஸ்லிம் தன் செருப்பை
கையில் எடுத்துக் கொண்டுச் செல்கிறார்" என்று எழுதி இருந்தார்கள். மாற்று
மத கோயில்களுக்கு நாங்கள் எவ்வளவு மதிப்பு தருகிறோம் என்பதை பாருங்கள்!?!
என்று கேள்வி கேட்டு இருந்தார்கள்.

4) இதே போல, இந்துக்களும் ஒரு படத்தைப் போட்டு, ஒரு முஸ்லிம் சகோதரி
பிரசவத்திற்கு ஒரு விநாயகர் கோயிலை இந்துக்கள் திறந்து கொடுத்தார்களாம்,
அதனால், அந்த முஸ்லிம் பெற்றோர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு
"கணேசன்" என்று பெயர் சூட்டினார்களாம்.

இப்படி அனேக விஷயங்களை இணையத்தில் நாம் காணலாம். இவ்விவரங்கள் உண்மையா
இல்லையா என்று ஆய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல.

இக்கட்டுரையின் நோக்கம் இது தான்:

சென்னையில் பேருதவி புரிந்த முஸ்லிம்களை முஹம்மதுவும் அல்லாஹ்வும் மன்னிப்பார்களா?

பாகம் 1

இக்கட்டுரையின் கருப்பொருள் கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை காண விழைவதாகும்:

1) இந்துக்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் முஸ்லிம்கள் பாராட்டின இந்த மனித
நேய அன்பை, தங்கள் வேதமாகிய குர்-ஆனின் அடிப்படையில் செய்தார்களா? அல்லது
இவ்வுதவிகளுக்கு பின்னணியில் ஏதாவது உள்ளார்ந்த அர்த்தமிருக்கின்றதா?

2) நம் கண்முன்னே முஸ்லிம்கள் செய்த இந்த பேருதவிகளை முஹம்மதுவும்,
அல்லாஹ்வும் அங்கீகரிப்பார்களா?

3) அல்லாஹ் காஃபிர்களை (முஸ்லிமல்லாதவர்களை) வெறுக்கிறார், ஆனால்
முஸ்லிம்கள் காஃபிர்களுக்காக உயிரை பணயம் வைத்து உதவி செய்தார்கள், இதனை
இஸ்லாமும் குர்-ஆனும் அனுமதிக்குமா?

4) காஃபிர்களுக்கு பேருதவி செய்யச் சொல்லி குர்-ஆன் முஸ்லிம்களுக்கு
கட்டளையிடுகின்றதா? இதற்கு குர்-ஆன் வசன ஆதாரமிருக்கின்றதா?

5) முஸ்லிமல்லாதவர்களிடம் முஹம்மது எப்படி நடந்துக்கொண்டார்?
முஸ்லிம்கள் காஃபிர்களிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று முஹம்மது
கட்டளையிட்டார்?

6) நம் தமிழ் முஸ்லிம்கள் செய்தது போலவே, இஸ்லாமிய நாடுகளில் வாழும்
சிறும்பான்மை காஃபிர்களுக்காக (இந்துக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் . .
.) உயிரை பணயம் வைத்து முஸ்லிம்கள் உதவி புரிகின்றார்களா? அல்லது
காஃபிர்களின் உயிரை பணயமாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்களா? முஸ்லிம்கள்
இஸ்லாமிய நாடுகளில் ஒருவகையிலும், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில்
வேறுவகையிலும் நடந்துக் கொள்கிறார்களே? இதற்கு காரணமென்ன?

7) இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் காஃபிர்களின் நிலை என்ன? ஷரியா சட்டம்
முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையே வேறுபாட்டை
காட்டுகின்றதா? அல்லது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை
ஆதரிக்கின்றதா?

8) கடைசியாக, இந்த சென்னையின் வெள்ளம் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள் எவைகள்?

போன்ற கேள்விகளுக்கு இந்த தொடர் கட்டுரைகளில் பதில்களைக் காண்போம்.
ஒருவேளை தமிழ் முஸ்லிம்கள் கூட மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களைக்
கொடுக்க முன்வரலாம். சென்னையில் தமிழ் முஸ்லிம்கள் செய்த உதவிகளை யாரும்
மறுக்கமுடியாது, ஆனால், இவ்வுதவிகளின் பின்னணி என்ன? ஏன் இஸ்லாமிய
நாடுகளில் முஸ்லிம்கள் இதே போல உதவிகள் செய்வதில்லை? இதற்கு மூலக்
காரணங்கள் என்னவென்பதைத் தான் இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

முஸ்லிமல்லாதவர்களின் மிகப்பெரிய எதிரி - இஸ்லாம் பற்றிய அறியாமை

இஸ்லாம் பற்றிய அறியாமை மிகப்பெரிய ஆபத்தை இஸ்லாமியரல்லாதவர்களுக்கு
கொண்டுவரும் என்பதை நாம் மனதில் பதித்துக் கொள்ளவேண்டும். இந்துக்கள்
பகவத் கீதையை தெரிந்துவைத்திருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் குர்-ஆனையும்,
முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றையும் படித்து புரிந்துக்கொள்ள வேண்டும்.
இயேசுவின் போதனைகளை கிறிஸ்தவர்கள் அரைகுறையாக புரிந்துக் கொண்டாலும்
பரவாயில்லை, முஹம்மதுவின் போதனைகளை மட்டும் முழுவதுமாக புரிந்துக்
கொள்ளவேண்டும்.

(இப்போது சில இந்துக்கள் "குர்-ஆனை நாங்கள் படித்து இஸ்லாமிய போதனைகளை
தெரிந்துக் கொள்வது போல, பைபிளையும் படித்து அதன் போதனைகளையும்
தெரிந்துக் கொள்ளக்கூடாதா?" என்று என்னிடம் கேள்வி கேட்கலாம். எல்லோரும்
பைபிளை படிக்கவேண்டும் என்று தான் நாங்கள் இலவசமாக பைபிளைத் தருகிறோம்.
எபிரேய கிரேக்க மொழிகளில் கொடுக்காமல், நீங்கள் படிப்பது உங்களுக்கு
புரியவேண்டும் என்பதற்காக உங்கள் தாய் மொழிகளில் பைபிளை மொழியாக்கம்
செய்து தருகிறோம். இந்துக்கள் பைபிளையும் படிக்கவேண்டும், இயேசுவின்
போதனைகளையும் அறிந்துக் கொள்ளவேண்டும், எனவே, எல்லோரும் தாராளமாக பைபிளை
படிக்கலாம். நான் இஸ்லாம் பற்றி எவைகளை எழுதுகிறேனோ, அவைகள் அனைத்தும்
பைபிளுக்கும் பொருந்தும். நாம் குர்-ஆனை கேள்வி கேட்டால், அதே கேள்வியை
பைபிளுக்கும் கேட்கலாம், இதர மார்க்க வேதங்களுக்கும் கேட்கலாம். பதில்
உள்ளவர்கள் பதில் சொல்லட்டும், பதில் இல்லாதவர்கள் அமைதியாக ஜகா
வாங்கிக்கொண்டுச் செல்லட்டும்.)

தமிழ் முஸ்லிம்களின் மனித நேய செயல்களை சென்னைவாசிகள் கண்டார்கள்,
இப்போது இந்த முஸ்லிம்களின் வேதம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று
பார்ப்போம். முஹம்மதுவும், அல்லாஹ்வும் முஸ்லிமல்லாதவர்களிடம் எப்படி
நடந்துக் கொள்ளவேண்டும்? என்று சொல்லியுள்ளார்கள் என்பதை ஆய்வு செய்வோம்.
இவ்விவரங்களுக்கு ஆதாரமாக முஸ்லிம்களின் வேதமாகிய குர்-ஆனையும்,
ஹதீஸ்களையும் மேற்கோள் காட்டியுள்ளோம். இஸ்லாமிய வேதம் சொல்கின்றபடி
தானே முஸ்லிம்கள் நடந்துக் கொண்டு இருப்பார்கள்? என்று
முஸ்லிமல்லாதவர்கள் நினைக்கலாம், இதற்கான பதிலை இக்கட்டுரையில்
கொடுத்திருக்கிறேன், வாசகர்கள் கொடுத்திருக்கும் ஆதாரங்களை சுயமாக ஆய்வு
செய்து பார்த்துக் கொள்ளட்டும்.

இந்த கட்டுரையில் எடுத்துவைக்கும் குர்-ஆன் மற்றும் ஹதீசுயமாக ஸ்கள்
பற்றி முஸ்லிம்கள் தங்கள் விளக்கங்களை பதில்களை பின்னூட்டமிட்டால்
அதற்கான பதில் தரப்படும்.

1) முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான செயல்களைச் செய்யவேண்டும்,
இது தான் முஸ்லிம்களின் தனித்துவம்:

முஹம்மது என்பவரை முஸ்லிம்கள் தீர்க்கதரிசியாக நம்புகிறார்கள். இஸ்லாமை
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மக்காவில் தோற்றுவித்தவர் இவர். முஹம்மதுவின்
ஒவ்வொரு வாக்கையும் முஸ்லிம்கள் வேதவாக்காக பாவித்து கீழ்படிகிறார்கள்.
ஒவ்வொரு முஸ்லிமும் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான காரியங்களைச்
செய்யவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டுள்ளார். சென்னையில்
முஸ்லிம்கள் செய்த உதவிகளை எண்ணிப்பார்த்து நாம் வியக்கிறோம். ஆனால்,
அவைகளை விட பெரிய வியப்பு நமக்கு இப்போது காத்திருக்கிறது.

முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான மாறுபாடு 1: தாடிகளுக்கும், தலைமுடிக்கும்
சாயமிடுங்கள்

யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்
சாயமிட்டுக் கொள்வதில்லையாம், எனவே முஸ்லிம்கள் தங்கள் தாடிக்கும்
தலைமுடிக்கும் சாயமிட்டுக் கொள்ளவேண்டுமாம். இப்படி செய்வது எதற்கு?
"முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக நடந்துக் கொள்கிறார்கள்"
என்று காட்டிக் கொள்வதற்காக.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம்
தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள்
(அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

ஆதாரம்: புகாரி 3462, மேலும் பார்க்க புகாரி எண் 5899 மற்றும் முஸ்லிம் 4271

முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான மாறுபாடு 2: தாடியை வளரவிடுங்கள், மீசையை
ஒட்ட நறுக்குங்கள்

ஒருவரது மீசையும், தாடியும் அவருக்கே சொந்தம், அவைகளை அவர் என்னவாவது
செய்யலாம் தவறில்லை. இதே போல, ஒரு மார்க்கத்தின் அடிப்படையில் நம்
வெளிப்புற தோற்றத்தை நாம் மாற்றிக் கொள்ளலாம், இதிலும் தவறில்லை. ஆனால்,
மற்ற மதத்தவர்களுக்கு எதிராக நாங்கள் நடந்துக் கொள்கிறோம் என்று
காட்டிக்கொள்ள இப்படி செய்வது, கேவலமானதாகும். அமைதி மார்க்கம் என்றுச்
சொல்லிக்கொள்ளும் இஸ்லாமின் இறைத்தூதர் இப்படி கேவலமான கட்டளைகளை
கொடுத்துள்ளார். சமுதாயத்தின் ஒற்றுமையை குலைக்க, சமுதாய மக்களிடையே
ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை உருவாக்க, மற்ற மதத்தவரிடம் வெறுப்புணர்வை
வெளிப்படையாக காட்டிக் கொள்ள வித்திட்டவர் இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது
ஆவார். இவைகளை இஸ்லாமின் புனித நூல்கள் புகாரி, முஸ்லிம் மற்றும் அஹ்மத்
போன்றவைகளில் காணலாம், இதோ அந்த ஆதாரங்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை
ஒட்ட நறுக்குங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி எண்:
5892)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை
வளரவிடுங்கள்.-இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ்
முஸ்லிம் 434)

நாங்கள், அல்லாஹ்வின் தூதரே, வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட)
கத்தரித்துக் கொள்கிறார்கள்; மீசைகளை வளர விடுகிறார்கள் என்று கூறினோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள்.
தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று
கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி),

நூல்: அஹ்மது (21252)

இதர மார்க்க மக்களின் "தீய பழக்கவழக்கங்களை செய்யாமல் இருங்கள்" என்று
முஹம்மது கட்டளையிட்டிருக்கவேண்டும். மீசையை வளரவிடுவதில் என்ன தவறு
இருக்கிறது? தாடியை ஒட்ட கத்தரிப்பதில் (ட்ரிம் செய்வதில்) என்ன தவறு
இருக்கிறது? இதில் அல்லாஹ்விற்கு எதிரான பாவம் என்ன இருக்கிறது?
முஹம்மதுவின் ஒரே நோக்கம், முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக
செயல்படவேண்டும் அவ்வளவு தான். இதைத் தான் முஸ்லிம்கள் இன்றும் செய்துக்
கொண்டு இருக்கிறார்கள். என்னே அறியாமை! முஸ்லிம்களின் மனதில் மாற்று
மதத்தவரைப் பற்றிய விஷ வெறுப்புணர்வை இப்படிப்பட்ட கட்டளைகள்
விதைத்துவிடுமல்லவா?

முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிரான மாறுபாடு 3:

அவன் வேட்டி அணிவதில்லையா? முஸ்லிமே! நீ வேட்டி அணிந்து அவனுக்கு மாறு
செய். அவன் செருப்பு அணிவதில்லையா? முஸ்லிமே! நீ செருப்பு அணிந்து
அவனுக்கு மாறு செய்.

வேட்டியையும் செருப்பையும் விட்டுவைக்கவில்லை இஸ்லாமிய இறைத்தூதர். இதர
மார்க்க மக்களுக்கு எதிராக நடப்பதே முஸ்லிம்களின் முக்கிய நோக்கமாக
மாற்றியிருக்கிறார் முஹம்மது. கீழ்கண்ட ஹதீஸ்களை படிக்கும் முஸ்லிம்களின்
உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடும் என்பதை கற்பனை செய்துப்
பாருங்கள். கீழ்கண்ட ஹதீஸில் எத்தனை முறை "அவர்களுக்கு மாறு செய்யுங்கள்"
என்று முஹம்மது கூறியுள்ளார் என்பதை கவனியுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூத்த அன்சாரிகளைக் கடந்து சென்றனர்.
அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது "அன்சார்களே (உங்கள்
முடிகளை) மஞ்சளாகவோ, சிவப்பாகவோ ஆக்கிக் கொள்ளுங்கள்.வேதக்காரர்களுக்கு
மாறு செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். "அப்படியானால் வேதக்காரர்கள்
கால்சட்டை அணிகின்றனர். வேட்டி அணிவதில்லையே'' என்று நாங்கள் கேட்டோம்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நீங்கள் கால்சட்டையும் அணியுங்கள்.
வேட்டியும் அணியுங்கள் வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்'' எனக்
கூறினார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே வேதக்காரர்கள் காலுறை அணிகின்றனர்.
செருப்புஅணிவதில்லையே'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள், "நீங்கள் காலுறைகளும் அணியுங்கள். செருப்பும்
அணியுங்கள்.வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்'' எனக் கூறினார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே வேதக்காரர்கள் தங்கள் தாடிகளைக் கத்தரித்து மீசைகளை
முழுமையாக வைக்கின்றனரே'' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் "நீங்கள் உங்கள் தாடிகளை முழுமையாக வைத்து மீசையைக்
கத்தரியுங்கள்'' எனக் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (21252)

குருவிற்கு ஏற்ற சீடர்கள் தப்பாமல் கிடைத்துள்ளார்கள் முஹம்மதுவிற்கு.
அவர் ஏதோ ஒரு விஷயத்தில் மாறு செய்யுங்கள் என்றுச் சொன்னால்,
எல்லாவற்றையும் நோண்டி நோண்டி ஏன் கேட்கவேண்டும்? இப்படியெல்லாம்
கேட்கும் தோழர்கள் கீழ்கண்டவிதமாகவும் கேட்டு இருக்கவேண்டியது தானே!
ஒருவேளை அதற்கும் முஹம்மது பதில் சொல்லியிருப்பார்.

இதோடு கூட, வேதக்காரர்கள் தினமும் சாப்பாடு சாப்பிடுகிறார்கள் என்று
நாங்கள் கேட்டோம், அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள்
சாப்பாடும் சாப்பிடுங்கள், ஒட்டகங்கள் சாப்பிடுவது போல இலைகளையும்,
வைக்கோளையும் சாப்பிட்டு வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்" எனக்
கூறினார்கள்.

இஸ்லாமிய அறிஞர்களின் அங்கீகாரம்:

மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் எங்கள் இஸ்லாமிய நூல்களில் இருந்தாலும்,
அவைகளை பின்பற்றும் படி இஸ்லாமிய அறிஞர்கள் எங்களுக்கு போதிப்பதில்லை,
அவைகளை நாங்கள் பின்பற்றுவதும் இல்லை என்று முஸ்லிம்கள் சொல்லமுடியாது.
ஏனென்றால், முஹம்மது சொன்னவைகளில் நியாயம் இல்லாவிட்டாலும், அறிவுடமைக்கு
எதிராக இருந்தாலும், கேவலமான கட்டளைகளாக இருந்தாலும், முஸ்லிம்கள் அவைகளை
முழுமூச்சோடு பின்பற்றுகிறார்கள். கேள்வி கேட்காமல், முஹம்மது சொன்னதை
கடைபிடித்தால் முஸ்லிம்களுக்கு அதிக நன்மைகளை அல்லாஹ் கொடுப்பான் என்பது
இஸ்லாமிய நம்பிக்கை.

ஆன்லைன் பீஜே தளத்திலும், பத்திரிக்கைகளிலும் மேற்கண்ட ஹதீஸ்களை மேற்கோள்
காட்டி, முஸ்லிம்கள் அவைகளை பின்பற்றுங்கள் என்று
உற்சாகப்படுத்தியுள்ளார்கள். முஸ்லிம்களின் அடையாளமே, மற்ற மதத்தவருக்கு
மாறு செய்யும் படி தங்கள் வெளிப்புற தோற்றத்தை காட்டிக்கொள்வதாகும் என்று
எழுதியுள்ளார்கள். முஹம்மது சொன்னது போல செய்யாத முஸ்லிம்கள் தங்கள்
தனித்துவத்தை இழந்து விடுகிறார்களாம். அதனை நீங்களே படியுங்கள்:

இந்த செய்திகளுக்கு மாற்றமாக, முழுக்க முழுக்க வெள்ளை வெளேரென்று
தலைமுடியும் தாடியும் வைத்திருப்பது, அல்லது கருப்பு சாயம் பூசுவது,
ஒட்டு முடி வைப்பது, பர்தாவை பெண்கள் பேணாமல் இருப்பது போன்ற காரியங்களை
முஸ்லிம்கள் மக்களிடம் பார்க்க முடிகிறது. வெறும் பெயரை மட்டும் வைத்துத்
தான் முஸ்லிம் என்று அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் தங்களது
தனித்துவத்தை தொலைத்துவிட்டு பெயரளவிற்கு முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.

மூலம்: http://www.onlinepj.com/egathuvam/2015-ega/-2015-/

2) தமிழ் முஸ்லிம்களின் மனித நேய செயல்களும் முஹம்மதுவும்:

இதுவரை நாம் இரண்டு விஷயங்களை அறிந்துக் கொண்டோம். முதலாவது,
முஸ்லிம்களின் சென்னை உதவிகள் பற்றி அறிந்துக் கொண்டோம், இரண்டாவதாக,
இஸ்லாமிய ஆதார நூல்களிலிருந்து "முஸ்லிமல்லாதவர்களுக்கு எப்படியெல்லாம்
முஸ்லிம்கள் மாறு செய்யவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டுள்ளார்
என்பதை" அறிந்துக் கொண்டோம்.

இதன் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு சில கேள்விகளை முன்வைத்து, இந்த
முதலாவது பாக கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.

அ) முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக செயல்படுங்கள் என்று முஹம்மது
முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டுள்ளார். ஆனால், முஸ்லிம்கள்
இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தங்கள் உயிரை பணயம் வைத்து உதவி
செய்துள்ளார்கள்.

ஆ) சென்னையில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உதவிகள் செய்து,
முஸ்லிம்கள் முஹம்மதுவின் கட்டளைகளுக்கு எதிராக நடந்துக் கொண்டார்கள்
என்று நாம் கருதலாமா? அல்லது முஸ்லிம்களின் இந்த உதவிகளுக்கு பின், ஒரு
மாய்மாலமான செயல் உள்ளதா?

இ) முஹம்மதுவின் மேற்கண்ட ஹதீஸ்களில் சொல்லிய கட்டளைகளை
இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்கள் விளக்க
கடமைப்பட்டுள்ளார்கள். இதனை செய்வார்களா?

ஈ) முஸ்லிமல்லாதவர்களின் அற்பமான தாடி மற்றும் தலைமுடி விஷயத்தில், ஒரு
மிகப்பெரிய இஸ்லாமிய தீர்க்கதரிசி முஸ்லிம்களுக்கு கீழ்தரமாக அறிவுரை
கூறுவாரா? இப்படி முஹம்மது கட்டளையிடுவதிலிருந்து, இஸ்லாமிய மார்க்கம்
எந்த தரத்தில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை நாம் எடை போடலாம்.

உ) தமிழ் நாட்டில் வாழும் இந்துக்களே, கிறிஸ்தவர்களே! உங்கள் பகுதியில்
வாழும் முஸ்லிம்கள் தங்கள் தாடிகளுக்கும் தலைமுடிகளுக்கும் மருதானி போன்ற
சாயம் போட்டுக்கொண்டு, வெள்ளை முடிகளை சிகப்பாக மாற்றிக்கொண்டுச் செல்வதை
பார்த்து இருப்பீர்கள். இதன் மூலம் முஸ்லிம்கள் தெரிவிப்பது என்ன?
"எங்கள் இறைத்தூதர் சொல்லியபடி, நாங்கள் எங்கள் தாடிகளுக்கும்
தலைமுடிக்கும் சிகப்பு சாயம் போட்டுக்கொண்டு, உங்களுக்கு எதிராக நடந்துக்
கொண்டு இருக்கிறோம்" என்று அவர்கள் சொல்கிறார்கள் என்று அர்த்தம்,
அப்படித்தானே! நீங்கள் கருப்பு சாயம் போட்டால், நாங்கள் சிகப்பு
போடுவோம்! நீங்கள் வேட்டி கட்டவில்லையானால், நாங்கள் வேட்டி கட்டுவோம்!
நீங்கள் மீசையை வளரவிட்டால், நாங்கள் அதனை ஒட்ட வெட்டுவோம்! நாங்கள்
எதைச் செய்தாலும், அது அற்பமான விஷயமாகிய தாடி மிசை செருப்பு போன்றவைகளாக
இருந்தாலும் சரி, உங்களுக்கு எதிராக செய்வது தான் எங்கள் இறைத்தூதர்
கற்றுக்கொடுத்த பாதை. இஸ்லாமிய ஆதாரங்கள் இப்படித் தான் சொல்கின்றன.
முஸ்லிம்களே! இதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?

ஊ) ஒரு கேவலமான விஷயத்தில் கூட முஹம்மதுவை அணுவணுவாக அப்படியே
பின்பற்றும் முஸ்லிம்கள், எப்படி இப்படிப்பட்ட உதவிகளை அதுவும்
முஸ்லிமல்லாதவர்களுக்கு செய்தார்கள்? இதில் இருவர் மரித்தும்
விட்டார்களாம். இவர்களை முஹம்மது மன்னிப்பாரா?

எ) சென்னையில் உதவி செய்த முஸ்லிம்கள் அனைவரும் "பெயரளவு முஸ்லிம்கள்"
என்று சொல்லமுடியாது, அதாவது முஹம்மதுவின் மேற்கண்ட கட்டளைகளை
அறியாதவர்கள் அல்ல இந்த முஸ்லிம்கள். இவர்கள் இஸ்லாமை நன்கு
அறிந்திருக்கும் முஸ்லிம்கள். ஆக, முஸ்லிம்கள் இந்துக்களுக்கும்
கிறிஸ்தவர்களுக்கும் உதவி செய்து, முஹம்மதுவிற்கு மாறு செய்தார்களா?
அல்லது இதில் உள்ளர்த்தம் ஏதாவது உண்டா?

ஏ) முஸ்லிமல்லாதவர்களுக்கு மாறு செய்யவேண்டுமென்றால் வேறு விஷயங்களில்
செய்யவேண்டியது தானே! ஒரு இனம் அல்லது மக்கள் செய்யும் தீய காரியங்களைச்
செய்யாமல் இருக்க முஹம்மது கட்டளை கொடுத்திருந்தால் அதனை ஏற்றுக்
கொள்ளலாம். உதாரணத்திற்கு, பிறக்கும் பெண் பிள்ளைகளை கொல்லும் பழக்கமுடைய
மக்களின் செயல்களுக்கு மாறு செய்ய முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டால், அதனை
ஏற்கலாம். மக்காவினரின் பழமைவாய்ந்த இப்படிப்பட்ட செயல்களை முஹம்மது
கண்டித்துள்ளார். இவைகளை ஏற்கலாம். ஆனால், அற்பமான தாடியையும், தலை
முடியையும் பிடித்துக் கொண்டு ஆட்டினால் என்ன நன்மை?

முடிவுரை:

முஸ்லிம்களே! மேற்கண்ட ஹதீஸ்களை நீங்கள் பொய் என்றுச் சொல்வீர்களா?
முஹம்மது இப்படியெல்லாம் சொல்லவில்லை, புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்கள்
சொல்லும் இவ்விவரங்கள் பொய்யானவை என்று அவைகளை ஒதுக்குவீர்களா? எங்கள்
மார்க்கம் மனித நேய மார்க்கமாகும், இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும்,
யூதர்களையும் மற்ற எல்லோரையும் நேசிக்கச்சொல்லும் மார்க்கம் என்று
நீங்கள் சொன்னால், மேற்கண்ட ஹதீஸ்களின் நிலை என்ன?

இந்த பாகத்தை இதோடு முடித்துக் கொள்கிறேன். இஸ்லாம் எப்படியெல்லாம் மற்ற
மார்க்க மக்களிடம் நடந்துக் கொள்கிறது என்பதை அடுத்த பாகத்தில் இன்னும்
மேலதிக ஆதாரங்களை குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து பார்க்கலாம்.

அடிக்குறிப்புக்கள்:

[1] கிறிஸ்தவர்களின் மனித நேய உதவிகள் பற்றி ஏன் இக்கட்டுரையில் எழுதவில்லை.

கிறிஸ்தவர்களின் உதவிகள் பற்றி அதிகமாக எழுதாமல், ஏன் முஸ்லிம்களின்
உதவிப் பற்றி அதிகமாக உமர் எழுதுகிறார்? என்ற கேள்வி கிறிஸ்தவர்களுக்கு
எழும். ஆனால், கிறிஸ்தவர்கள் ஒன்றை சரியாக புரிந்துக் கொள்ளவேண்டும்.
இயற்கையாக நடப்பதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படமாட்டார்கள், அதிசயமாக
நடப்பதைக் கண்டு தான் மக்கள் ஆச்சரியப்படுவார்கள். மீன்கள் நீந்துவதைக்
கண்டு யாராவது ஆச்சரியப்படுவார்களா? கழுகுகள் உயர பறப்பதைக் கண்டு
யாராவது மெச்சிக்கொள்வார்களா? மீனின் நீந்தும் திறமையைப் பார்த்து,
கழுகின் பறக்கும் திறமையைப் பார்த்து மக்களின் புருவங்களும் உயராது. இதே
போலத்தான் கிறிஸ்தவர்களின் சேவையும், உதவிகளும். கிறிஸ்தவர்கள்
இயற்கையாகவே உதவிகள் செய்பவர்கள், தொன்றுதொட்டு அவர்கள் செய்துவருவது
ஒன்றும் புதிதல்லவே! இதனை நான் பெருமைக்காக அதிகப்படுத்திச்
சொல்லவில்லை, உண்மையைத் தான் சொல்கிறேன்.

கிறிஸ்தவர்களின் உதவிகளை நாம் அதிகமாக புகழ்ந்தால், அது அவர்களை
அவமானப்படுத்துவதற்கு சமமாகும், கடமையை செய்பவர்களுக்கு அதிக புகழ்ச்சி
தேவையில்லை, சத்தியத்திற்கு விளம்பரம் தேவையில்லை. கிறிஸ்தவர்களின்
உதவிகளை மைக் வைத்து ஊரறிய சொல்லவேண்டிய அவசியமில்லை, ஏனென்றால், ஆபத்து
காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலத்திலும் கிறிஸ்தவர்கள் உதவி
செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் உதவி செய்ய "சென்னை தண்ணீரில் மூழ்கி
மிதக்கவேண்டிய அவசியமில்லை". இக்கட்டுரையின் நோக்கத்தை முழுவதுமாக
அறிந்துக் கொள்ள முழு கட்டுரையையும் படிக்கவும். அதன் பிறகு
இப்படிப்பட்ட கேள்வியை என்னிடம் கேட்க விரும்பமாட்டீர்கள்.

இந்துக்களும் பேருதவியை செய்தார்கள், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை
இப்படிப்பட்ட ஆபத்தான காலத்தில் இந்தியாவில் அபரிதமாக காணமுடிகின்றது.

[2] ஆன்லைன் பீஜே தள கட்டுரைகள்

அ) தனிமனித ஒழுங்குகளில் மாற்றம்

ஆ) பிரவுன், மெஜன்தா நிற முடியுடையவர்களின் முடி நரைத்துவிட்டால் கருப்பு
நிற சாயம் பூசலாமா?

இ) பாடம் : 25 - (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வதில் யூதர்களுக்கு மாறு செய்தல்

ஈ) தலை முடிக்குச் சாயம் அடிக்கலாமா ஆண்,பெண் தலைக்கு டை அடிக்கலாமா?
மார்க்கத்தில் அனுமதி உண்டா?

[3] இதர இஸ்லாமிய தள கட்டுரை - அழகுக்காக மொட்டையடித்துக் கொள்ளலாமா?
அழகுக்காக தலையில் கறுப்பு அல்லாத வேறு கலர் சாயம் பூசிக் கொள்ளலாமா?

[4] இதர இஸ்லாமிய தள கட்டுரை - தலை நரைக்குச் சாயம் பூசுவதற்கு
இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா? சிலர், மருதாணி அல்லாத நிறப்பூச்சுக்
கூடாது என்கின்றனர். விளக்கம் தரவும்.

[5] உமரின் முந்தைய கட்டுரை - 101 காரணங்கள் - முஹம்மது ஒரு
கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்? பாகம் 5 (காரணம்
48. தாடிக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டு யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்)

________________________________

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Tamil Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/chennai_muslims/chennai_muslims_part1.html




Source: http://www.isakoran.blogspot.in/2016/01/1.html

February 4, 2016

யாருக்கு முதன்மையான இடம் தரப்படவேண்டுமென இறைவன் கட்டளை கொடுத்தான்? ஏன்?

யாருக்கு முதன்மையான இடம் தரப்படவேண்டுமென இறைவன் கட்டளை கொடுத்தான்? ஏன்?


The Place of Prominence

என் தேவனுக்கு நன்றிகளை செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன், ஏனென்றால்
"இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம்" பற்றிய கட்டுரைகளை நான் எழுதும்போதெல்லாம்,
இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ் எப்படி பைபிளின் தேவனுக்கு முரண்பட்டு
காணப்படுகிறார் என்பதை தெளிவாக காண தேவன் உதவி செய்கிறார்.
உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், இயேசுவும் முஹம்மதுவும் தம்முடன்
இருக்கும் நபர்களிடம் எப்படி நடந்துக் கொண்டார்கள் என்பதைச் சொல்லலாம்.
குறிப்பிட்டுச் சொல்வதானால், இயேசுவும் முஹம்மதுவும் தங்கள் உள்வட்ட
சீடர்கள் அல்லது தொழர்களிடம் எப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்பை
கொண்டிருந்தார்கள் என்பதைச் சொல்லலாம்.

முஹம்மதுவோடு வாழ்ந்தவர்கள் எவ்விதம் முஹம்மதுவிடம் நடந்துக்
கொள்ளவேண்டும் என்று குர்-ஆன் எதிர்ப்பார்க்கிறது? இதே போல, சீடர்கள்
இயேசுவிடம் எவ்விதம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று பைபிள்
எதிர்ப்பார்க்கிறது? இவைகளைத் தான் இந்த கட்டுரையில் சுருக்கமாக நாம்
ஆய்வுச் செய்யப்போகிறோம்.

சஹாபாக்களிடம் அல்லாஹ் எதிர்ப்பார்த்தவைகள்:

முதலாவதாக, முஹம்மதுவிடம் சஹாபாக்கள் எவ்விதம் நடந்துக் கொள்ளவேண்டும்
என்று எதிர்ப்பார்க்கப்பட்டார்கள் என்பதைக் காணலாம். இந்த விவரத்தை
சரியாக புரிந்துக் கொள்வதற்கு குர்-ஆன் சொல்வதைப் படிக்கவேண்டும்.
குர்-ஆன் பொதுவாக முஸ்லிம்கள் எப்படி நடந்துக் கொள்ளவேண்டும், அவர்களின்
நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி அனேக கட்டளைகளை
கொடுத்துள்ளது. ஆனால், இந்த கட்டளைகளை குர்-ஆன் சுருக்கமாகச் சொல்கிறதே
தவிர, அவைகளை தெளிவாக விவரிப்பதில்லை. உதாரணத்திற்கு, ஒவ்வொரு நாளும்
அல்லாஹ்வை தொழுதுக் கொள்ளும்படி குர்-ஆன் கட்டளையிடுகிறது, ஆனால், ஒரு
நாளுக்கு எத்தனை முறை தொழவேண்டும் என்று சரியான எண்ணிக்கையை அது
தெளிவாகச் சொல்வதில்லை. மேலும், தொழுகையின் போது எவைகளை முதலாவது
செய்யவேண்டும், எந்த வசனங்களை ஓதவேண்டும்? அடுத்தது என்ன செய்யவேண்டும்?
போன்ற தொழுகையின் விவரங்களை கோர்வையாக குர்-ஆன் சொல்வதில்லை. தொழுகையின்
முழு விவரமும் நமக்குத் தேவையென்றால், அவைகளை ஹதீஸ்களில் மட்டுமே
காணமுடியும். ஆகையால், ஒன்றை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும், அது
என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட செயலை குர்-ஆன் செய்யச் சொன்னால், அது
முக்கியமானது என்று அறிந்துக் கொள்ளவேண்டும், ஆனால், அந்தச் செயலை எப்படி
செய்யவேண்டும் என்ற விவரம் மட்டும் குர்-ஆனில் காணப்படாது, அது
ஹதீஸ்களில் மட்டுமே காணப்படும், இதனை மனதில் வைக்கவேண்டும்.

முஸ்லிம்கள் முஹம்மதுவிடம் எவ்விதம் நடந்துக் கொள்ளவேண்டும் என்று
குர்-ஆன் சொல்கிறது, ஆனால் அதைப் பற்றி தெளிவான விவரத்தை குர்-ஆன்
தருவதில்லை. உதாரணத்திற்கு, முஸ்லிம்கள் முஹம்மதுவிடம் அனுமதி பெறாமல்,
அவரை விட்டு போகக்கூடாது என்று குர்-ஆன் 24:62ல் சொல்கிறது. இந்த
வசனத்தை கீழே படியுங்கள்:

குர்-ஆன் 24:62. அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான்
கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான
காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய
அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில்
(அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும்
அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள்
சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர்
விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக; இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம்
நீர் மன்னிப்புக் கோருவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்;
கிருபையுடையவன்.

இப்போது அடுத்த குர்-ஆன் வசனத்தை கவனியுங்கள். முஹம்மதுவின் வீட்டில்
முஸ்லிம்கள் இருக்கும் போது, அவரை அதிகமாக சொந்தரவு செய்யாமல் சீக்கிரமாக
சென்றுவிடவேண்டும், அதிக நேரம் அவருடன் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது
என்று குர்-ஆன் சொல்கிறது. மேலும் முஹம்மது மரித்துவிட்ட பிறகு, அவரது
மனைவிமார்களை முஸ்லிம்கள் மறுமனம் செய்துக் கொள்ளக்கூடாது என்றும்
இவ்வசனம் கட்டளையிடுகிறது.

குர்-ஆன் 33:53 முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த
அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய
வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால்
(அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்)
கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே)
அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை
உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ்
வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை
(அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள்.
அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி
வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல;
அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது
ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ)
காரியமாகும்.

கடைசியாக, முஹம்மதுவிடம் பேசும்போது, மக்கள் தங்கள் சப்தத்தை
முஹம்மதுவின் சப்தத்தைவிட உயர்த்திப் பேசாமல், சிறிது குறைவான சப்தத்தில்
பேசுங்கள் என்று குர்-ஆன் கட்டளையிடுகிறது. யார் தங்கள் சப்தத்தை
முஹம்மதுவின் சப்தத்தைவிட அதிகமாக உயர்த்திப் பேசுகிறாரோ, அவர் செய்த
நன்மைகள் (அமல்கள்) இதனால் அழிந்துப்போகும் என்றும் குர்-ஆன்
எச்சரிக்கிறது.

குர்-ஆன் 49:2. முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள்
சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன்
இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள்,
(இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள்
அழிந்து போகும்.

இதுவரை கண்ட குர்-ஆன் வசனங்களிலிருந்து ஒன்றை தெளிவாக புரிந்துக்
கொள்ளமுடியும், அதாவது, முஹம்மது எங்கு இருந்தாலும், அங்கு அவருக்கு
சிறப்பான இடம் அல்லது அந்தஸ்து தரவேண்டும் என்று அல்லாஹ்
எதிர்ப்பார்க்கிறார் என்பதாகும். இஸ்லாமின் தீர்க்கதரிசி என்ற முறையில்
மக்கள் அவருக்கு தனிச்சிறப்பான மதிப்பு தரவேண்டும், மேலும் அவருடன்
இருப்பவர்களைக் காட்டிலும் அவர் உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்பதை
காட்டக்கூடிய வகையில் மக்கள் நடந்துக் கொள்ளவேண்டும். இது தான்
முஹம்மதுவைப் பற்றி குர்-ஆன் முஸ்லிம்களுக்குச் சொல்லும் கட்டளைகளாகும்.

இயேசுவும் முதன்மையான இடமும்:

ஒருவர் சுயமாகச் சென்று உயர்ந்த இடத்தை பிடிப்பதைப் பற்றி இயேசு
எச்சரித்துள்ளார் (லூக்கா 14:8). இப்படி செய்பவர்களுக்கு என்ன நடக்கலாம்
என்றும் இயேசு எச்சரித்தார் (லூக்கா 14:11). மேலும் இப்படி சுயமாக
முக்கியமான இடங்களை தேடுபவர்களை பின்பற்றவேண்டாம் என்றும் இயேசு
கட்டளையிட்டார் (லூக்கா 20:46).

இயேசு இப்பூமியில் இருக்கும்போது, அவர் எப்படி நடந்துக் கொண்டார் என்பதை
பார்ப்போம். இயேசு இறைவனாக இருந்தபடியினால், அவரோடு "யார் இருந்தார்கள்?"
என்பது ஒரு முக்கியமில்லாத ஒன்றாகும். இயேசுவோடு யார் இருந்தாலும் சரி,
அந்த இடத்தில் இயேசு மட்டுமே மேன்மையானவராக இருப்பார், ஏனென்றால் அவர்
இறைவனாக இருப்பதால், அவரை விட உயர்ந்தவர் யாருமில்லை. ஒரு எல்லைக்குள்
உட்பட்டு சில ஆண்டுகள் வாழ்ந்து, நிச்சயமாக மரிக்கக்கூடிய மனிதர்கள்
இயேசுவோடு இருந்ததினால், எவ்விதத்திலும் அவர்கள் இயேசுவைவிட
முதன்மையானவர்களாக இருக்கமுடியாது. இப்படிப்பட்ட மேன்மைகளை கொண்ட
தெய்வமாகிய இயேசு மனிதர்களின் துதி, புகழ்ச்சி, ஆராதனை போன்ற
அனைத்துவிதமான கனத்திற்கு பாத்திரராக இருந்தாலும், அவர் தன்னை ஒரு
வேலைக்காரன் (ஊழியக்காரன்) என்ற நிலையிலே தம்மை காண்பித்துக் கொண்டார்
(மாற்கு 10:45).

ஒருமுறை இயேசுவின் சீடர்கள், தங்களில் யார் பெரியவராக இருக்கிறார் என்று
பேசிக்கொண்டு இருக்கும் போது, இயேசு பெரியவராக இருந்தாலும், தம்முடைய
சீடர்களுக்கு தாம் ஊழியம் செய்கிறவராக (வேலைக்காரனாக) இருப்பதாக இயேசு
சொன்னார். தன் தெய்வீகத்தன்மையின் மேன்மையை அவர் வெளிப்படுத்தாமல்,
தம்மைத் தாழ்த்திக் கொண்டார், இதனை லூக்கா 22:27ல் காணலாம்.

பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன்
அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல்
இருக்கிறேன். (லூக்கா 22:27)

இந்த சத்தியத்தை அவர் இன்னும் தெளிவாக இன்னொரு முறை நடைமுறையில் செய்து
காட்டினார், அதாவது இயேசு சீடர்களின் கால்களை கழுவும் போது இதனை செய்து
காட்டினார் (யோவான் 13:5). அழுக்கு இல்லாத சுத்தமான கால்கள் தான்
பரிசுத்தத்திற்கு அடையாளம் என்பதால் அவர் சீடர்களின் கால்களை கழுவவில்லை.
அதற்கு பதிலாக, தாம் ஆண்டவராக இருந்தாலும், எல்லா வித கனத்திற்கு
பாத்திரராக இருந்தாலும், ஒரு பணிவிடைக்காரனின் நிலையை தரித்துக் கொண்டு
தம்மை விட தாழ்வானவர்களுக்கு (மனிதர்களுக்கு) ஊழியம் செய்தார் என்பதை
வெளிப்படுத்தவே இப்படி செய்தார். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், இதே
போல தம்முடைய சீடர்களும், மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்பதை
வெளிப்படுத்தினார் (யோவான் 13:15).

இஸ்லாமிலே முஹம்மதுவிற்கு தனிப்பட்ட சிறப்பு சலுகைகள், மதிப்பு மரியாதை
தரப்படவேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டார். கிறிஸ்தவத்திலே, இயேசு
மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவே வந்திருக்கிறார் என்று எடுத்துரைத்தார்,
அதனை செயலிலும் செய்துக் காட்டினார். இவ்விருவருடைய இச்செயல்களில்
உங்களுக்கு ஏதாவது துப்பு தெரிகின்றதா? யார் உண்மை தெய்வத்தை
வெளிப்படுத்த வந்தவர்கள் என்று உங்களால் கணிக்கமுடிகின்றதா?

குறிப்பு: குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் டாக்டர் முஹம்மது ஜான்
தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

ஆங்கில மூலம்: http://unravelingislam.com/blog/?p=481

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/robert/place_of_prominence.html


Source: http://www.isakoran.blogspot.in/2015/12/blog-post_70.html

யார் எங்கே போகிறார்கள்? முஹம்மதுவின் முடிவு அவருக்குத் தெரியுமா?

யார் எங்கே போகிறார்கள்? முஹம்மதுவின் முடிவு அவருக்குத் தெரியுமா?



Who is Going Where?

எல்லா மார்க்கங்களிலும் அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்பு உண்டு, அது
'மனிதனின் முடிவு' பற்றியதாகும். அதாவது ஒரு மனிதன் மரித்த பிறகு
அவனுக்கு என்ன நடக்கும்? என்பது தான் முக்கியமான தலைப்பு. மரித்த பிறகு
நாம் இறைவனோடு இருப்போமா? "ஆம்" என்பது நம் பதிலானால், எந்த
சூழ்நிலைகளில் நம்மை இறைவன் சொர்க்கத்தில் அனுமதிப்பார்? என்பது அடுத்த
முக்கியமான கேள்வி.

என்னுடைய முந்தைய கட்டுரையில், இஸ்லாம் போதிக்கும் முஹம்மதுவின்
முடிவும், கிறிஸ்தவம் போதிக்கும் இயேசுவின் முடிவும் எப்படி இருந்தது
என்பதைப் பற்றி சிந்தித்தோம். இந்த தற்போதைய கட்டுரையில் அதே விவரத்தை
இன்னும் ஆழமாக பார்க்கப் போகிறோம்.

குர்-ஆனின் கீழ்கண்ட வசனம், முஹம்மதுவிற்கு அவரது எதிர்காலம் பற்றிய
நிச்சயம் இருந்ததில்லை என்றுச் சொல்கிறது:

46:9. "(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப்
பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன்,
எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான்
பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை"
என்று (நபியே!) நீர் கூறும். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

முஹம்மதுவிற்கு அவரது எதிர்காலம் பற்றிய நிச்சயம் இல்லை என்ற விவரம்
முஸ்லிம்களை கலங்கச்செய்கிறது. ஏனென்றால், முஹம்மதுவிற்கு தன் எதிர்
காலம் தெரியாத போது, அவரை பின்பற்றும் முஸ்லிம்களுக்கு தங்கள் எதிர்காலம்
பற்றிய நம்பிக்கை எப்படி வரும்? மேற்கண்ட குர்-ஆன் வசனத்தில்
இப்படிப்பட்ட பிரச்சனை இருப்பதினால், தற்கால இஸ்லாமிய அறிஞர்கள், இந்த
குர்-ஆன் வசனத்திற்கு வேறு விதமாக விளக்கம் கொடுக்கிறார்கள். அதாவது,
குர்-ஆன் 46:9ம் வசனம் முஹம்மதுவின் உலக வாழ்க்கைப் பற்றி பேசுகின்றது,
அவர் மரித்த பிறகு இறைவனிடம் செல்லும் வாழ்வு பற்றி பேசவில்லை என்று
விளக்கம் கொடுக்கிறார்கள்.

முஸ்லிம்கள் அதிகார பூர்வமானதாக நம்பும் புகாரி ஹதீஸில் ஆரம்ப கால
முஸ்லிம்களின் மத்தியில் ஒரு உரையாடல் நடக்கிறது. அதாவது, ஒருவர்
மரித்துவிடுகிறார் அவர் சொர்க்கத்தில் இருப்பார் என்று சொல்லப்படும்
போது, முஹம்மது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மேலும், மரணத்திற்கு
பிறகு ஒருவருக்கு என்ன நேரிடும் (சொர்க்கமா? நரகமா?) என்பது நமக்கு
தெரியாது என்று முஹம்மது கூறுகிறார். மேலும், முஹம்மது "நான் அல்லாஹ்வின்
தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத்
தெரியாது" என்றும் கூறுகிறார். இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஆகும், இதே
விவரத்தை இன்னும் சில ஹதீஸ்களிலும் காணலாம்.[1]

சில இஸ்லாமிய அறிஞர்கள் இந்த ஹதீஸ் சொல்வதை மறைக்க விரும்புகிறார்கள்,
எனவே அதற்கு எதிராக விளக்கமளிக்கிறார்கள். அதாவது, மரணத்திற்கு பிறகு
தனக்கு என்ன நடக்கும் என்று முஹம்மதுவிற்கு நன்றாகத் தெரியும் என்றுச்
சொல்கிறார்கள். தங்களின் இந்த புதிய விளக்கத்திற்கு ஆதரவாக பல சப்பைக்
கட்டு காரணங்களை அவர்கள் கூறுகிறார்கள். மேலே கண்ட ஹதீஸையும்,
குர்-ஆனின் வசனத்தையும் பார்க்கும் போது, இவ்விரண்டும், முஹம்மதுவின்
பூமிக்குரிய வாழ்வு பற்றிச் சொல்லாமல், அவரது மரணத்திற்கு பிறகு நடக்கும்
விவரம் பற்றிச் சொல்வதை கவனிக்க முடியும். முஹம்மதுவின் முடிவு பற்றிய
இந்த தர்ம சங்கடமான நிலையை சமாளிப்பதற்காக, அனேக இஸ்லாமியர்கள் பலவாறு
முயற்சி எடுக்கிறார்கள். ஆனால், பஸ்ஸாம் ஜவாதி என்பவர் வேறு
வழியில்லாமல், கீழ்கண்ட விதமாக விளக்கம் அளிக்கிறார். இதன் மூலம், அவர்
தனக்கு தானே குழியை தோண்டிக்கொள்கிறார்:

". . . என்னைப் பொருத்தமட்டில், இந்த புகாரி ஹதீஸ் சொல்லும் விவரங்களின்
பின்னணியை கவனிக்கும் போது, இறைத்தூதருக்கு (அவர் மீது சாந்தி
உண்டாகட்டும்) தன் மரணத்திற்கு பிறகு தனக்கு என்ன நடக்கும் என்று
தெரியாது என்று தெரிகிறது"[2].

இஸ்லாமிய இறையியல் என்னும் கண்ணாடியின் வழியாக பார்த்தால், முஹம்மது
கடைசியாக எங்கு போய் சேருவார் என்பது நிச்சயமில்லாத ஒன்றாக இருக்கிறது.
மேற்கண்ட குர்-ஆன் வசனம் மற்றும் ஹதீஸை நாம் ஆழமாக ஆய்வு செய்தால்,
முஹம்மதுவிற்கு தன் இரட்சிப்பு பற்றிய நிச்சயம் இல்லை என்பது தெளிவாக
புரியும்.

ஆனால், இயேசு தம்மைப் பற்றி என்ன சொன்னார் என்பதைப் பற்றி நான் ஏற்கனவே
என் முந்தைய கட்டுரையில் விளக்கியுள்ளேன் (யோவான் 11:25). இது
முஹம்மதுவிற்கு நேர் எதிராக உள்ளது. மேலும் இயேசு எங்கே போகப்போகிறார்
என்பதைப் பற்றி அவர் கூறியதையும் நாம் பார்த்தோம் (யோவான் 14:2-3,
16:28). நாம் எப்போதும் செய்வது போலவே, இப்போதும் கூட அதிகமாக பயணிக்காத
பாதையை நாம் கடப்போம் வருகிறீர்களா? அதாவது இயேசுவைப் பற்றியும், அவரது
முடிவு பற்றியும் இஸ்லாம் என்ன போதிக்கிறது என்பதை ஆய்வு செய்வோம்.

இஸ்லாமிலே முஹம்மதுவின் முடிவு நம்பிக்கையற்ற நிலையில் காணப்படுகிறது,
இதே போல, இஸ்லாமில் இயேசுவின் நிலைமையும் இருக்கவேண்டும் என்று
முஸ்லிம்கள் எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால், அது தான் இல்லை. குர்-ஆன்
இயேசுவின் எதிர்காலம் பற்றி வேறு வகையாகச் சொல்கிறது.

இயேசுவைப் பற்றி குர்-ஆனில் அனேக வசனங்களை காணலாம். இயேசுவைப் பற்றிய
முதலாவது வசனத்தில் அவர் மறு உலகத்தில் கண்ணியமிக்கவராக இருப்பார் என்று
அல்லாஹ் குர்-ஆனில் சொல்கிறான்.

குர்-ஆன் 3:45

மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும்
ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங்
கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர்
இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு)
நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

இஸ்லாமிய ஆரம்பகால விரிவுரையாளராகிய இப்னு கதீர் என்பவர், இவ்வசனத்தை
விளக்கும் போது, ஒரு படி மேலே சென்று, மறு உலகத்தில் இயேசு அல்லாஹ்விற்கு
நெருக்கமானவராக இருப்பார் என்றும், அப்போது இயேசு தன்னை
பின்பற்றியவர்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார் என்றும்
விளக்கமளிக்கிறார்.

இதுமட்டுமல்ல, இன்னொரு இடத்தில் "இயேசு சொர்க்கத்தில் இருப்பர்" என்று
குர்-ஆன் மிகவும் தெளிவாகச் சொல்கிறது.

குர்-ஆன் 3:55

"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை
உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில்
நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை
கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய
திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து
கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ்
கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!

இயேசுவின் வேலை பூமியில் முடிந்துவிட்டால், அவரை தன்னளவில் அதாவது
சொர்க்கத்திற்கு அல்லாஹ் எடுத்துக் கொள்வார் என்று மேற்கண்ட குர்-ஆன்
வசனம் இயேசுவின் முடிவு பற்றி தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது. இந்த குர்-ஆன்
வசனத்திற்கு இந்த விளக்கத்தை விட வேறு விளக்கத்தை யாராலும்
கொடுக்கமுடியாது. இயேசுவைப் பற்றி இந்த வசனம் சொல்லும் அல்லாஹ்வின்
திட்டத்தை ஹதீஸ்களிலும் காணலாம். இஸ்லாமிய அறிஞர்கள் எப்படிப்பட்ட வாய்
ஜாலங்கள் காட்டினாலும், இந்த வசனத்திற்கு அவர்கள் வேறு விளக்கம்
கொடுக்கமுடியாது. முஸ்லிம்களின் மற்றும் முஹம்மதுவின் எதிர்காலம்
நம்பிக்கையற்ற ஒன்றாக ஆபத்தில் மாட்டிக்கொண்டு இருக்கிறது என்றுச்
சொல்லும் அதே குர்-ஆன், இயேசுவின் எதிர்காலம் பற்றி மிகவும் தெளிவாக
உள்ளது. இயேசுவின் எதிர்காலம் என்ன என்பதை குர்-ஆன் சொல்லிவிட்டது, அதைப்
பற்றி எந்த ஒரு குழப்பமும் இல்லை. அணு அளவு சந்தேகமின்றி இயேசு
சொர்க்கத்தில் இருப்பார் என்பது தான் குர்-ஆனின் சாட்சி.

இப்போது சுருக்கத்தைக் காண்போம். முஹம்மதுவின் முடிவு பற்றி இஸ்லாமிய
நூல்கள் குழப்பமான விவரங்களைத் தருகின்றன. மேலும், முஹம்மதுவிற்கு தன்
எதிர்காலம் என்னவாகும் என்று தெரியாது என்று குர்-ஆன் சொல்கிறது. ஆனால்,
அதே இஸ்லாமிய நூல்கள், இயேசு சொர்க்கத்தில் இருப்பார் என்று தெளிவாகச்
சொல்கிறது. இவ்விவரம் முஸ்லிம்களின் கண்களை திறந்து சத்தியத்தை காணச்
செய்யும் விவரமாகும். குர்-ஆன் "தீர்க்கதரிசிகள்" என்று அழைக்கும்
இவ்விருவரில், முஸ்லிமாக நீங்கள் யாரை பின்பற்ற முடிவு
எடுக்கப்போகிறீர்கள்? தன் எதிர் காலம் என்னவென்றே தெரியாத முஹம்மதுவையா?
அல்லது இயேசுவையா? சிந்தியுங்கள்.

குறிப்பு: குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் டாக்டர் முஹம்மது ஜான்
தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

அடிக்குறிப்புக்கள்

[1] புகாரி ஹதீஸ் எண்:1243

1243. நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான
உம்முல் அலா(ரலி) அறிவித்தார். வந்த முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில்
தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது
உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது.
அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று
மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே
கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை
நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ்
உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக்
கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது
உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்.
பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என கேட்டேன். அதற்கு
நபி(ஸல்) அவர்கள், 'இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது
ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான்
அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது
எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக!
அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக்
கூறுவதேயில்லை." Volume :2 Book :23 (மேலும் பார்க்க ஹதீஸ்கள்: 2687,
3929 & 7003)

[2] www.call-to-monotheism.com/was_prophet_muhammad_uncertain_of_his_own_salvation_

ஆங்கில மூலம்: http://unravelingislam.com/blog/?p=476

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/robert/who_go_where.html


http://www.isakoran.blogspot.in/2015/12/blog-post_37.html

நீங்கள் எங்கே போகிறீர்கள்? தான் எங்கே போகப்போகிறேன் என்பதை தெரியாத முஹம்மதுவின் பின்னே போகிறீர்களா?

நீங்கள் எங்கே போகிறீர்கள்? தான் எங்கே போகப்போகிறேன் என்பதை தெரியாத
முஹம்மதுவின் பின்னே போகிறீர்களா?



Where are you going?

ஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்

முந்தைய காலங்களை விட, தற்காலத்தில் விலாசம் சரியாக தெரியாத ஊர்களுக்குச்
செல்வது மிகவும் சுலபமாகும். புதிய சாதனங்களாகிய ஜிபிஎஸ் (GPS) மற்றும்
கூகுள் மேப் (Google Map) போன்றவை நம்முடைய விலாசதேடலை சுலபமாக்கிவிட்டன.
பழங்காலங்களில், நாம் சரியான விலாசத்தை சென்றடையவேண்டுமென்றால்,
அவ்வழிகளை அறிந்து வைத்திருக்கின்ற நபரின் உதவியை நாடவேண்டும்.

இந்த விவரங்களுக்கும் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமுக்கும் என்ன சம்மந்தம்?
முஹம்மது மற்றும் இயேசு இவ்விருவரும் தங்களின் உலக வாழ்க்கையின்
முடிவுக்கு பிறகு தங்களின் நிலை என்னவாக இருக்கும் என்று
சொல்லியுள்ளார்கள். இயேசு தம்முடைய வாழ்நாளின் கடைசி வாரத்தில், அனேக
கட்டளைகளை சீடர்களுக்கு கொடுத்தார். மேலும் சீடர்கள் உற்சாகம் அடையும்
வகையில் இதர முக்கியமான விவரங்களையும் பகிர்ந்துக் கொண்டார். இந்த
உரையாடல்களில் அவர் சொன்ன அதிமுக்கியமான விவரம் என்னவென்றால், "தாம்
சீடர்களை விட்டுச் செல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது, அதாவது, இயேசு
சென்று அவர்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதன் பிறகு அவர்கள்
தம்மோடு சொர்க்கத்தில் நிரந்தரமாக தங்கும் படி அழைத்துச் செல்வார்" என்று
கூறினார்.

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால்,
நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக
ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை
ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி,
நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். (
யோவான் 14:2-3)

இயேசு முதலாவது சொர்க்கத்திற்குச் சென்று, சீடர்களுக்கு இடத்தை
தயார்படுத்துவதாக சொல்கிறார். மேலும், சில ஆண்டுகளுக்கு பிறகு சீடர்கள்
கூட அவரோடு அதே சொர்க்கத்தில் இருப்பார்கள் என்றும் வாக்கு கொடுக்கிறார்.
ஒரு கிறிஸ்தவர் மரித்த பிறகு அவர் சொர்க்கம் செல்வாரா? இதைப் பற்றிய
நிச்சயம் அவருக்கு எப்படி வரும்? என்பவைகளைப் பற்றி இன்னொரு கட்டுரையில்
ஆய்வு செய்வோம் (எபேசியர் 1:13-14).

ஆனால், இந்த கட்டுரையின் கருப்பொருள் 'இயேசு பிதாவோடு சொர்க்கத்தில்
இருப்பார் என்றும், அவர் தன்னை பின்பற்றுபவர்களுக்கு இடத்தை
ஆயத்தப்படுத்துவார்' என்றும் அவர் கொடுத்த வாக்கு பற்றியதாகும். இயேசு
தாம் எங்கே போகிறார் என்று அறிந்திருந்தார் மேலும், அங்கு (சொர்க்கம்)
சென்ற பிறகு அவர் என்ன செய்யப்போகிறார் என்றும் அறிந்திருந்தார்.

முஹம்மது தம்முடைய மரணத்திற்கு பிறகு எங்கே போவார் என்று ஏதாவது
சொல்லியுள்ளாரா? முஹம்மது மரித்த பிறகு அவர் அல்லாஹ்வோடு இருப்பார் என்று
முஹம்மது சொல்லியிருப்பார் என்று பொதுவாக எல்லாரும் நினைத்திருப்பார்கள்,
ஆனால் அது தவறாகும். முஹம்மது இப்படி சொல்லவில்லை, அவர் வேறுவகையாக
சொல்லியுள்ளார். முஸ்லிம்கள் அதிகார பூர்வமானதாக நம்பும் புகாரி ஹதீஸில்
ஆரம்ப கால முஸ்லிம்களின் மத்தியில் ஒரு உரையாடல் நடக்கிறது. அதாவது,
ஒருவர் மரித்துவிடுகிறார் அவர் சொர்க்கத்தில் இருப்பார் என்று
சொல்லப்படும் போது, முஹம்மது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மேலும்,
மரணத்திற்கு பிறகு ஒருவருக்கு என்ன நேரிடும் (சொர்க்கமா? நரகமா?) என்பது
நமக்கு தெரியாது என்று முஹம்மது கூறுகிறார். மேலும், முஹம்மது "நான்
அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது
எனக்குத் தெரியாது" என்றும் கூறுகிறார். இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ்
ஆகும், இதே விவரத்தை இன்னும் சில ஹதீஸ்களிலும் காணலாம்[1], அந்த ஹதீஸை
அடிக்குறிப்பில் படிக்கவும்.

ஒரு அனுபவ சாட்சி புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோளை இப்போது படியுங்கள்:

"நான் என் தாத்தாவிடம் சென்று, "முஹம்மது மரிக்கும் போது அவர் என்ன
கூறினார்?" என்று கேள்வி கேட்டேன். அவர் என்னிடம் முஹம்மது சொன்னவைகளைச்
சொன்னார். அதன் பிறகு நான் என் தாத்தாவிடம் "இயேசுவைப் பாருங்கள், தன்
பிதாவினிடத்தில் அவர் போவதாகச் சொன்னார், தன்னை பின்பற்றுபவர்களுக்காக
இடத்தை ஆயத்தப்படுத்துவதாக அவர் கூறினார், அதன் பிறகு அவர் திரும்பி
வந்து தம்முடையவர்களை அழைத்துச் செல்வதாகச் சொன்னார். ஆனால், தாம் எங்கு
போகிறோம் என்று முஹம்மதுவிற்கே தெரியவில்லை. இப்போது சொல்லுங்கள், யாரை
நீங்கள் பின்பற்றப்போகிறீர்கள்?" என்று கேட்டேன். என் தாத்தா "யாருக்கு
தாம் போவது எங்கே என்று தெரிந்திருக்கிறதோ, அவரைத் தான் நான்
பின்பற்றப்போகிறேன்" என்றுச் சொன்னார். "நான் சர்சுக்கு இப்போது
போகப்போகிறேன்" என்றுச் சொன்னேன். இப்படித் தான் நான் இயேசுவை அறிந்துக்
கொண்டேன். [2]

நீங்கள் எங்கே போகப்போகிறீர்கள்? இந்த கேள்வியை இப்படி கேட்டால் தான்
சரியாக இருக்கும் – நீங்கள் அங்கே எப்படி போகப்போகிறீர்கள்? தான் எங்கே
போகிறேன் என்று தெரிந்திருக்கின்றவரை (இயேசுவை) நீங்கள்
பின்பற்றப்போகிறீர்களா? அல்லது தன்னுடைய பயணம் எங்கே போய் முடியும் என்று
தெரியாதவரை (முஹம்மதுவை) பின்பற்றப்போகிறீர்களா?

அடிக்குறிப்புக்கள்:

[1] புகாரி ஹதீஸ் எண்: 1243.

நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல்
அலா(ரலி) அறிவித்தார்.

வந்த முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக்
குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள்
வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க
வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல்
குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள்
அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது
இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான்
என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை
அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?' என்று
கேட்டார்கள்.

அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்.
பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என கேட்டேன். அதற்கு
நபி(ஸல்) அவர்கள், 'இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது
ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான்
அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது
எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக!
அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக்
கூறுவதேயில்லை." Volume :2 Book :23 (மேலும் பார்க்க ஹதீஸ்கள்: 2687,
3929 & 7003)

[2] Trousdale, Jerry. Miraculous Movements. Nashville, TN: Thomas
Nelson, 2012, p79.

ஆங்கில மூலம்: http://unravelingislam.com/blog/?p=394

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/robert/whom_to_follow.html


http://www.isakoran.blogspot.in/2015/12/blog-post_28.html