ஈராக்கில் உள்ள ராணுவத்தினருக்கு உதவவும் அங்கு புணரமைப்பு வேலைகளில் உதவவும் நம் இந்தியாவிலிருந்து அநேகர் அங்கு சென்றுள்ளனர். இதில் தமிழர்களும் அடங்குவர்.
|
பலியானவர்களில் ஒருவரது பெயர் ரமேஷ் குமார் (வயது 30). இவரது சொந்த ஊர் நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகாவில் உள்ள கீழஈசனூர் கிராமம். இவர் டிரைவராக பணியாற்றுகிறார்.
மற்றொரு தமிழக வாலிபர் செந்தில் என்பவரும் டீசல் மெக்கானிக் ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். செந்திலின் சொந்த ஊர் சென்னை மாம்பாக்கம் ஆகும்.
நேற்று முன்தினம் ரமேஷ்குமாரும் செந்திலும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமில் பணி புரிந்தனர். மாலை அவர்கள் காரில் முகாமுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அல்-கொய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
அவர்களது வாகனம் மீது தீவிரவாதிகள் சரமாரியாக குண்டுவீசினார்கள். இதில் கார் நொறுங்கியது. ரமேஷ் குமார், செந்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பலியான செந்தில் பலியாவதற்கு 3 மணி நேரத் துக்கு முன்பு தான் அவர் சென்னையில் உள்ள தன் தாயுடன் போனில் பேசினார்.
அப்போது அவர் விரைவில் சென்னைக்கு வந்து விடுவதாக கூறினார். பேசிக் கொண்டிருக்கும் போதே போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
சில மணி நேரத்துக்குள் ஈராக்கில் இருந்து செந்திலின் பெற்றோருக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் செந்தில் குண்டுவெடிப்பில் சிக்கி பலியாகி விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டதும் பெற்றொரும் அவர் குடும்பத்தினரும் கதறி அழுதனர்.
இவர்களின் உடல் இரண்டு மூன்று நாட்களுக்குள் இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இவர்களின் குடும்பம் ஆறுதலடைய இறைவனை இறைஞ்சுகிறேன்
2 comments:
நண்பரே உமது இந்த பதிவு, சாதாரண செய்தித்தாள் செய்தியை மறுபதிப்பு செய்துள்ளது போல் இருக்கிறது.
ஈராக்கின் இன்றைய நிலைமைக்குக் காரணம் என்ன? அந்த மக்களின் வாழ்வாதாரங்களைச் சூரையாடியவர் யார்? என்பது குறித்தெல்லாம் கேள்வியெழுப்ப யாரும் தயாராயில்லை.
அணுஆயுதம் ஒளித்துவைத்திருப்பதாகச் சொல்லி இராக்கினுள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கக் கொலைகார இராணுவம், சர்வதேச பயங்கரவாதி புஷ் போன்றவர்களால் கொலை செய்யப்பட்ட மக்கள் கூட்டம் எவ்வளவு? அவர்களில் பெண்கள் எவ்வளவு, குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு? இராக்கியர்களின் இன்றைய பசி, பட்டினிக்கும், நிரந்தர வறுமைக்கும் காரணமானவர்களை அவர்கள் சற்றே எதிர்த்து நிற்பது குற்றமா?
எதிர்தாக்குதல் நடத்தும்போது, அதில் இந்தியர்கள் இல்லாத இடமாப்பாத்து நடத்தமுடியுமா?
செய்தித்தாள்களும் நச்சு ஊடகங்களும் திட்டமிட்டு பரப்பும் வதந்தி நமக்கு சொல்ல வருவது என்ன? இராக்கியர்கள் கூலிப்படையை வைத்து இந்தியர்கள் யாராவது இங்கிருக்கிறார்களா என்று அலசி ஆராய்ந்து, மேற்கண்ட இருவரையும் கொண்றுவிட்டார்கள் என்பதான அவதூறு செய்திகள் ஏன்?
ஒருவேளை சோற்றுக்குக் கூட வழியற்ற பலகோடி இராகியர்களோடு, உயிருக்கு துளியும் உத்திரவாதமில்லாத யுத்தக்காடாகிப் போன அம்மண்ணில், சென்றாவது பிழைப்பை நடத்தி இந்தியாவில் இருக்கும் தமது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு இறந்துபோன நமது இரண்டு இளைஞர்களைத் தள்ளியது எது?
இன்னும் வாழ்வோடும் சாவோடும் போராடிக் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்கள் எவ்வளவு பேர்?
உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அதிசயமாக, இன்றைய கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இளைஞர்களின் விகிதாச்சாரம், மொத்த மக்கள் தொகையில் 54% இருப்பதாக சில புள்ளி விபரங்கள் சொல்கின்றன.
அப்படியானால் சுமார் 50கோடி இரத்தத் துடிப்புள்ள இளைஞர்களின் ஒட்டு மொத்த சக்தியை, உழைப்பை நமது சமூகத்தின் பக்கம் திருப்பாமல் வேறெங்கெங்கோ அலைக்கழித்துக் கொண்டிருக்கும் நமது ஆட்சியாளர்களை என்ன செய்வது?
இவை சாதாரணமாக எவருக்குள்ளும் எழுகின்ற கேள்விதான்.
இதுகுறித்த உமது கருத்து எதுவும் இருந்தால் தவறாமல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
நன்றி சகோதரரே தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும்.
ஒரு தவறுக்கு இன்னொரு தவறுதான் தீர்வா.. அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவதாக சொல்லிகொண்டு தீவிரவாதிகள் கொல்லுவது தங்களுடைய சொந்த நாட்டு மக்களையுமல்லவா..
எங்கே போனது மனித நேயம்.. ஒரு மனிதனை கொன்று அது தன்னுடைய இறைவனுக்கு செய்யும் தொண்டு எனக்கூறுவது ஏற்றுகொள்ளக்கூடியதா...
இறந்த இரண்டு தமிழர்களின் குடும்பத்தை கொஞ்சம் யோசித்துப்பார்ப்போம். இது தீவிரவாதிகளுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியை தரலாம். ஆனா மனிதனை நேசிக்கும் உங்களுக்கும் எனக்கும்...
Post a Comment