உலகிலேயே ஒரே இந்து நாடான நேபாளத்தில் கடந்த 239 வருடங்களாக மன்னராட்சி நடைபெற்று வந்தது. மக்கள் சுத்ந்திரகாற்றை சுவாசிக்க விரும்பினர். பல போராட்டங்களுக்கு பிறகு மக்களின் நெருக்கடிக்கு அடிபணிந்து அங்கு பொது தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் மாவோயிஸ்ட்கள் வெற்றீபெற்று முழு மெஜாரிட்டி பெற்றனர்.
நேற்று (29.5.2008)நடந்த மக்கள் பிரதிநிதிகளின் கூட்டத்தில் மன்னாரட்சியை ஒழிக்க 560 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து 239 ஆண்டுகளாக நடந்த இந்து மன்னராட்சி முடிவுக்கு வந்து அங்கு குடியரசு ஆட்சி அமைந்தது.
மன்னர் தன்னுடைய அலுவலகத்தை காலிசெய்யுமாறும் அதற்கு பதினைந்து நாட்களும் அவாகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களாட்சி மலர்ந்துள்ள நேபாள மக்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வோம்*********************************************************************************
விடியோவில்
*******************************************************************************
source : http://www.reuters.com/article/worldNews/idUSISL5996320080529
http://www.dinamalar.com/worldnewsdetail.asp?News_id=678&cls=row4&ncat=INL
0 comments:
Post a Comment