மியன்மாரின் புயலில் கவனிப்பாறற்ற ஆங் சாங் சூ கீ-யும் பொது மக்களின் உயிரும்
மியன்மாரில் போன வாரம் ஏற்பட்ட புயலில் லட்சக்கனக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை இழ்ந்துள்ளனர். முதலாவதாக அவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்களை தெரிவித்துகொள்கிறேன். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்க இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
Destroyed fisherman boats lay in the port of Yangon | ||
|
ஆனால் கொடுமை என்னவென்றால் அங்குள்ள இராணுவ ஆட்சியாளர்கள் வெளிநாடுகளின் உதவியை அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் அநேக வெளிநாடுகள் உதவ தயாராக இருந்தாலும் இவர்களின் தடை உத்தரவால் உதவிகள் மக்களுக்கு சென்றடையவில்லை. இதனால் நோய் தொற்றுகள் ஏற்பட்டு மேலும் உயிர்பலி அதிகமாக வாய்ப்புக்கள் உள்ளன.
மேலும் அந்நாட்டின் எதிர்கட்சி தலைவியும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சாங் சூ கீ பல ஆண்டுகளாக வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்ட புயலில் இவருடைய வீடும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் உடைந்து விழுந்து வீட்டு கூரைகள் உடைந்து விட்டது. மின்சாரம் கிடையாது. சுற்றிலும் தண்ணீரால் சுழப்பட்டுள்ளது. உணவும் கிடையாது. அவருக்கு பக்கத்துவீட்டில் வசிக்கும் ஒரு நபர் பத்திர்க்கைக்கு தகவல் தெரிவித்தபிறகு தான் இந்த தகவல் வெளியே தெரிய வந்தது. அவர் தெரிவிக்கும் போது இரவில் ஒரு மெழுகுவர்த்தி எரிவது மட்டும் தெரிகிறது. அவரிடம் ஜெனரேட்டரும் இல்லை. வீடு முற்றிலும் சேதமுற்றதாக உள்ளது என்கிறார். மேலும் சூ கி யை இராணுவ ஆட்சியாளர்களும் கவனிக்கிறமாதிரி தெரியவில்லை. இவருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் சாதாரண பொதுமக்களீன் நிலையை சொல்லி தெரியவேண்டியதில்லை. இராணும் தன்னுடைய வரட்டு கெளவரத்தை விட்டு பொதுமக்களீன் உயிரை காப்பற்ற எல்ல உலக நாடுகளும் நிர்பந்திக்கவேண்டும் அப்போது தான் நிலைமை கட்டுக்குள் வரும். அங்கு எல்லா உதவிகளும் கிடைக்க வாஞ்சிக்கிறேன். நன்றி
0 comments:
Post a Comment