அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

September 23, 2015

பாகம் 2 - உன் கர்த்தராகிய இயேசுவை பரீட்சை பாராதிருப்பாயாக, அதற்கு பதிலாக அவரை பணிந்துக்கொள்வாயாக

பாகம் 2 - உன் கர்த்தராகிய இயேசுவை பரீட்சை பாராதிருப்பாயாக, அதற்கு
பதிலாக அவரை பணிந்துக்கொள்வாயாக


சாம் ஷமான்

முதல் பாகத்தில் நாம் முன்னுரையைக் கண்டோம், இந்த இரண்டாவது பாகத்தில்
இயேசு பரீட்சை பார்க்கப்பட்ட விவரங்களை மத்தேயு மற்றும் லூக்காவின்
நற்செய்தி நூல்களிலிருந்து காண்போம்.

கர்த்தராகிய இயேசுவை பரீட்சை பார்த்தல்

பலர் இயேசுவை பரீட்சை பார்க்க முயன்றனர், ஆனால், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்
இயேசுவின் தெய்வீகத்தன்மை தான் வெளிப்பட்டது. அவைகளை சுருக்கமாக இப்போது
காண்போம்:

அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும்
பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும்
மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்;
ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப்
பிரியமாயிருந்தது. சகலமும் என் பிதாவினால் எனக்கு
ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன்
இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச்
சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான்
என்றார். பின்பு, தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி:
நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். அநேக
தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள்
கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள்
என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது நியாயசாஸ்திரி
ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச்
சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
. . . அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி:
எனக்குப் பிறன் யார் என்று கேட்டான். (லூக்கா 10:21-25, 29)

ஒரு யூத மத தலைவர் இயேசுவை சோதிக்க விரும்பினார். இயேசுவிற்கு தேவனின்
நியாயப்பிரமாணம் தெரியுமா? முக்கியமாக இரட்சிப்பு அடைவது பற்றிய போதனைகளை
இயேசு அறிந்திருக்கிறாரா? என்பதை சோதிக்க அவர் நினைத்தார். இந்த
சவாலுக்கு முன்பு தான், இயேசு தம்முடைய தெய்வீகத் தன்மையைப் பற்றி தம்
சீடர்களுக்கு சொல்லியிருந்தார், அதாவது, தாம் ஒரு விசேஷித்த தேவகுமாரன்
என்றும், பிதா அனைத்தையும் தம்மிடம் ஒப்புக்கொடுத்துள்ளார் என்றும், பிதா
அனைத்தையும் அறிவது போலவே, தானும் அனைத்தையும் அறிவார் என்றும்
சொல்லியிருந்தார். அப்போது தான் இந்த சவாலை அந்த யூத மத தலைவர்
முன்வைத்தார்.

மேற்கண்ட விஷயங்களில் பல ஆச்சரியமான தகவல்கள் காணப்படுகின்றன. அதாவது,
குமாரனுக்கு தேவனின் அனைத்து ஞானமும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்,
பூமியிலும் வானத்திலும் இருக்கும் படைப்பு அனைத்தும், தன்னுடைய
கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இயேசு சொல்கிறார். தமக்கு
விருப்பமுள்ளவர்களுக்கு தம்முடைய ஞானத்தை இயேசு கொடுப்பதாகவும்
சொல்கிறார்.

இப்போது ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்கவும். பிதா எப்படி குமாரனை
"அறிந்திருக்கிறாரோ" அதே போல, குமாரனும் பிதாவை "அறிந்திருக்கிறார்"
என்று சொன்னால், மேலும் பிதாவை மற்றவர்கள் அறியும் படி செய்ய "குமாரனால்
மட்டுமே முடியும்" என்றுச் சொன்னால், இதற்கு அர்த்தமென்ன? கிறிஸ்துவாகிய
குமாரன் சர்வஞானியாகவும், மனித அறிவுக்கு எட்டாதவராகவும் இருக்கவேண்டும்,
அப்போது தான் பிதாவைப் போலவே குமாரனும் "அறிந்திருக்கிறார்" என்று
சொல்லமுடியும். மேலும் பிதா மட்டுமே "குமாரனை அறிந்திருகிறார்" என்றுச்
சொல்வது, குமாரனின் தெய்வீகதன்மையை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

தேவ வசனம் "பிதாவாகிய தேவன் தான் சர்வவல்லமையுள்ள யேகோவா" என்று
போதிக்கிறது, அவர் தான் மெய்யான இறைவன் என்றும் சொல்கிறது.

கர்த்தாவே, உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில்
பெரியது. ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்?
தேவரீருக்கே பயப்படவேண்டியது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய
எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை. . . . கர்த்தரோ மெய்யான
தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி
அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள். வானத்தையும்
பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும்
இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். (எரேமியா
10:6-7, 10-11)

பிதாவாகிய தேவன், மக்களை முழுமையாக அறிகிறார், மேலும் ஒவ்வொருவரின்
எண்ணங்களையும், செயல்களையும் அறிகிறார், மட்டுமல்ல, மக்களின் மனதில்
எண்ணங்கள் தோன்றுவதற்கு முன்பே, அவைகளை அவர் அறிகிறார்.

அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்;
அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன். (ஏசாயா 65:24)

கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின்
பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும்
உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன். (எரேமியா 17:10)

அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள்
வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்றுஅவர்
அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:8)

தேவன் கொண்டுள்ள இப்படிப்பட்ட ஞானத்தை நினைத்து, சங்கீதக்காரன்
ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார்.

கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என்
உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என்
நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும்
படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம்
உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே,
அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். முற்புறத்திலும் பிற்புறத்திலும்
நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். இந்த அறிவு எனக்கு
மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது. உம்முடைய
ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில்
படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச்
செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,
அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி
வெளிச்சமாயிருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும்
பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.. . .
என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும்
இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது
புஸ்தகத்தில் எழுதியிருந்தது. (சங்கீதம் 139:1-12, 16)

தேவனின் ஞானத்திற்கு எல்லையில்லை, மேலும் எந்த ஒரு படைப்பும் அவரது
ஞானத்தை முழுவதுமாக அறியமுடியாது என்று சங்கீதக்காரன் உணருகிறார்.

கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய
மகத்துவம் ஆராய்ந்துமுடியாது. (சங்கீதம் 145:3)

அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு
அழைக்கிறார். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா
பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. (சங்கீதம்
147:4-5)

இப்போது நாம் ஒரு முக்கியமான விஷயத்துக்கு வருவோம். பிதாவாகிய தேவன்
எப்படி ஞானமுள்ளவராக அனைத்தையும் அறிவாரோ, "அதே போல குமாரனும் அறிகிறார்"
என்று இயேசு சொல்வதினால், அவரும் தேவனைப்போல சர்வ ஞானியாகவும்,
மற்றவர்களின் கற்பனைக்குள் அடங்காதவராகவும் இருக்கிறார் என்பதை
தெரிவிக்கிறார்.

இப்போது இந்த உதாரணத்தை கவனியுங்கள்:

வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக்
காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அவர்
அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற
எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற
எந்த வீடும் விழுந்துபோம். சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப்
பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க,
பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.
நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை
யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை
நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். நான் தேவனுடைய விரலினாலே
பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில்
வந்திருக்கிறதே. ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது,
அவனுடையபொருள் பத்திரப்பட்டிருக்கும். அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை
மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும்
பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான். (லூக்கா
11:16-22)

இந்த மேற்கண்ட பரீட்சையில், இயேசு அம்மக்களின் உள்ளங்களில் உள்ளவைகளை
அறிந்திருந்தார். இப்படி மக்களின் எண்ணங்களை அறிவது என்பது தேவனால்
மட்டுமே ஆகும்.

உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,
தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள்
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே
எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன்
இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து,
அவனவனுக்குப் பலன் அளிப்பீராக. (1 இராஜாக்கள் 8:39-40 - மேலும் பார்க்க
1 நாளாகமம் 28:9)

தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை
அவர் அறிந்திருக்கிறாரே. (சங்கீதம் 44:21)

கிறிஸ்து மக்களின் எண்ணங்களை அறிந்தது மட்டுமல்ல, அவர் அந்த தீய
ஆவிகளையும் துரத்தினார், மேலும் தேவனுடைய விரலினால் துரத்தினார் என்று
கூறுகிறார். தேவனுடைய விரல் மூலமாக தேவனுடைய இராஜ்ஜியத்தை பூமியில்
ஸ்தாபிக்க தன்னால் முடியும் என்று கூறுகிறார். இது ஒரு புறமிருக்க,
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சாத்தானை முழுவதுமாக
கட்டிவிட்டு, அவன் கொள்ளையடித்த அனைத்தையும் அவனிடமிருந்து மீட்டுக்
கொள்ளவும் தன்னால் முடியும் என்று இயேசு கூறுகிறார்.

இப்போது அடுத்தபடியான பரீட்சையை காண்போம்:

அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில்
கூடிவந்தார்கள். அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.
இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு
இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும்
அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற
இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப்
பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும்
நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது
என்றார். பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி:
கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய
குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். அதற்கு
அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று
சொல்லியிருக்கிறது எப்படி? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப்
பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும்
என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. தாவீது
அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது
எப்படி என்றார். அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும்
சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத்
துணியவில்லை. (மத்தேயு 22:34-46 – மேலும் பார்க்க: 16:1; 19:3; 22:18)

கட்டளைகளில் பிரதான கட்டளை எது என்று கேட்ட போது, அதற்கு பதில் கொடுத்த
கிறிஸ்து, தேவனை நிபந்தனையற்ற முறையில் நேசிப்பதைப் பற்றியும், அதன்
பிறகு தன்னைப்போல அயலானையும் நேசிப்பதைப் பற்றியும் எடுத்துக்கூறினார்.
இந்த உரையாடலில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால்,
பரிசேயர்களுக்கு இயேசு கொடுத்த சவாலாகும். அதாவது, மேசியாவை எப்படி
அடையாளம் கண்டுக்கொள்வது என்பது பற்றியும், அதே நேரத்தில் மேசியா
என்பவர், தாவீதின் குமாரன் மட்டுமல்ல, அதைவிட மேலானவராக, அவர் இஸ்ரவேலின்
தேவனாக இருக்கிறார் என்பதையும் அவர்களுக்கு விளக்கினார்.

கிறிஸ்து தாவீது நபியின் சங்கீதம் 110:1ம் வசனத்தை மேற்கோள் காட்டினார்.
இவ்வசனத்தின் படி, தாவீது மேசியாவை தேவனின் பக்கத்தில் சிங்காசனத்தில்
உட்கார்ந்து இருப்பதைக் கண்டார். யேகோவா தேவனின் வலது பக்கத்தில் யார்
உட்கார்ந்து இருக்கமுடியும்? மேசியா மட்டுமே தேவனின் வலது பக்கத்தில்
தன்னுடைய பரலோக சிங்காசனத்தில் உட்கார்ந்து உலகத்தை ஆளுகின்றவராக
இருக்கிறார்.

கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய
ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது. (சங்கீதம் 103:9, மேலும் பார்க்க 2:4;
11:4)

இந்த மேசியா உட்கார்ந்திருக்கும் இடத்தைத் தான் புதிய ஏற்பாடும் இயேசு
உட்கார்ந்து இருப்பதாக கூறுகின்றது. அதாவது வானத்திலும் பூமியிலும் சகல
படைப்புகளையும ஆளுகின்ற மேசியா தேவனின் சிங்காசனத்தில்
உட்கார்ந்திருக்கிறார்.

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும்
பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு
(28:18)

அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்ததவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து:
தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும்
கண்டு; அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய
வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.(Acts 7:55-56)

எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர்
சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின
வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. . . . அன்றியும் அவரே
உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட
நியாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக
ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். (அப்போஸ்தலர்
நடபடிகள் 10:36, 42 – மேலும் பார்க்க: 2:22-36)

தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது
பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே
காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும்,
நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக்
கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். எல்லாத்
துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும்,
கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும்
பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர்
உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில்
உட்காரும்படி செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக்
கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய
நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத்
தந்தருளினார். (எபேசியர் 1:19-23)

விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய
பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே
சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. (எபேசியர் 5:5)

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள்
வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும்
தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
. . . நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய
வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
(கொலோசெயர் 2:9-10, 3:1)

அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல்,
தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது
நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; அவர்
பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்;
தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக்
கீழ்ப்பட்டிருக்கிறது. (1 பேதுரு 3:21-22)

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட
உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில்
என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். (வெளிப்படுத்தின விசேஷம்
3:21; மேலும் பார்க்க - 1:5; 11:15; 12:1-2, 5, 10; 17:14; 19:16; 22:1,
3)

இதோ கடைசி உதாரணத்தையும் இப்போது பார்த்துவிடலாம்:

அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள்
காணியாட்சியை விற்றார்கள். தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை
வஞ்சித்து வைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே
வைத்தான். பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை
வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன்
இருதயத்தை நிரப்பினதென்ன? அதை விற்குமுன்னே அது
உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்னும் அதின் கிரயம் உன்
வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட
எண்ணங்கொண்டதென்ன நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய்
என்றான். அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான்.
இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. வாலிபர்
எழுந்து, அவனைச் சேலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய்
அடக்கம்பண்ணினார்கள். ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு,
அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். பேதுரு அவளை நோக்கி:
நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்:
ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள். பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய
ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை
அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும்
வெளியே கொண்டுபோவார்கள் என்றான். உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து
ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு, அவளை
வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே
அடக்கம்பண்ணினார்கள். சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற
யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று. (அப்போஸ்தலர் நடபடிகள் 5:1-11)

மேலே குறிப்பிடப்பட்ட எடுத்துக்காட்டுகளில், கிறிஸ்தவர்கள் என்றுச்
சொல்லிக்கொள்கின்ற இருவர் பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொன்னார்கள்.
அவர்கள் தங்கள் நிலத்தை விற்று, ஒரு பாகத்தை மறைத்துவைத்துக் கொண்டு,
இன்னொரு பாகத்தை கொண்டு வந்து கொடுத்தார்கள். இவ்விருவர் தேவனிடமும்,
அவரது ஆவியானவரிடமும் பொய் சொன்னார்கள். இவர்களின் இந்த செயலை தேவன்
கண்டுக்கொள்ளமாட்டார், இது யாருக்கும் தெரியப்போவதில்லை என்று இவர்கள்
எண்ணிவிட்டனர்.

இந்த நிகழ்ச்சிலிருந்து இரண்டு விஷயங்கள் வெளிப்படுகின்றன. முதலாவதாக,
பரிசுத்த ஆவியானவர் இப்போது கர்த்தரின் ஆவியானவராக
குறிப்பிடப்படுகின்றார். இந்நிகழ்ச்சியை சுற்றியுள்ள வசனங்களையும்,
அப்போஸ்தலர் நடபடிகள் முழுவதையும் கவனித்தால் இதனை புரிந்துக்
கொள்ளமுடியும். முதன் முதலாக, கிறிஸ்தவர்கள் இப்படியாக
போதிக்கப்பட்டார்கள், அதாவது பரிசுத்த ஆவியானவர் எப்படி தேவனுடையவராக
இருந்தாரோ, அதே போல அவர் இயேசுவினுடையவராகவும் இருக்கிறார் என்பதாகும்.
எனவே, இவர் கிறிஸ்துவின் ஆவியானவராக அடையாளப்படுத்தப்பட்டார். இதை அறிய
இவ்வசனங்களை பார்க்கவும்: அப் 16:6-7; ரோமர் 8:9-11, 14-17; கலாத்தியர்
4:4-7; பிலிப்பியர் 1:19; 1 பேதுரு 1:10-12.

இரண்டாவதாக, பேதுருவின் அறிக்கையை இங்கு கவனிக்கவேண்டும். அதாவது
பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொல்வது என்பது, தேவனிடம் பொய் சொல்வது
ஆகும். ஏனென்றால், இவ்விருவருக்கும் இடையே இருக்கும் உறவுமுறை
அப்படிப்பட்டது. பரிசுத்த ஆவியானவரும், திரித்துவ தேவனில் ஒரு நபராக
இருக்கிறார், இதனை பைபிளும் சாட்சி பகருகிறது. பரிசுத்த ஆவியானவரிடம்
பொய் சொல்வது, தேவனிடம் பொய் சொல்வதாகும், ஏனென்றால், ஆவியானவரும்
தேவனாகவும் இருக்கிறார், ஒரு ஆள்தத்துவமுடையவராக பிதாவோடு
ஐக்கியமுள்ளவராகவும் இருக்கிறார். ஆக, கர்த்தரின் ஆவியானவரை பரீட்சைப்
பார்ப்பது என்பது, கர்த்தரை பரீட்சை பார்ப்பதாகும், ஏனென்றால்,
கிறிஸ்துவிற்கும், ஆவியானவருக்கும் மற்றும் பிதாவுக்குமிடையே இருக்கும்
ஐக்கியம் வேறுபிரிக்கப்பட முடியாத ஒன்றாகும் என்பதை அறிய வேண்டும்.

முடிவுரையாக, சப்பிராள் அப்போஸ்தலர் பேதுருவிடம் பொய் சொல்லி பரீட்சை
பார்த்தது பரிசுத்த ஆவியானவரை மட்டுமல்ல, அவள் கர்த்தராகிய இயேசுக்
கிறிஸ்துவையே பரீட்சை பார்த்தாள். கர்த்தரை பரீட்சை பார்ப்பது பாவம்
என்பதை அவள் அறிந்திருந்தும் இக்காரியத்தை செய்ய அவள் துணிவு கொண்டாள்.

இதோடு இரண்டாவது பாகம் முடிவு பெறுகிறது, மூன்றாவது பாகத்தை பிறகு பார்ப்போம்.

மூலம்: http://www.answering-islam.org/authors/shamoun/tempt_not_lord_2.html

________________________________

சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answeringislam.org/tamil/authors/sam-shamoun/temp_not_load_2.html




source : http://isakoran.blogspot.in/2015/09/2.html

September 12, 2015

யஹ்யா (யோவான்) எப்படி இயேசுவை மெய்ப்படுத்துவார்?

யஹ்யா (யோவான்) எப்படி இயேசுவை மெய்ப்படுத்துவார்?

(குர்-ஆனின் அரைகுறை விவரங்களின் தன்மைக்கு இன்னொரு உதாரணம்)

யோகன் கட்ஜ்

ஜகரிய்யா மற்றும் யோவான் ஸ்நானகனைப் பற்றி குர்-ஆனில் ஆங்காங்கே சில
விஷயங்களை காணலாம். அவைகளில், யோவான் பற்றிய குர்-ஆனின் ஒரு கூற்றை நாம்
இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்போகிறோம்.

தனக்கு ஒரு மகனை கொடுக்கும் படி வேண்டுதல் செய்த ஜகரிய்யாவிற்கு,
தேவதூதன் கீழ்கண்டவாறு பதில் அளிக்கிறர், இதனை குர்-ஆன் 3:39ம் வசனத்தில்
காணலாம் (நான்கு குர்-ஆன் தமிழாக்கங்களிலிருந்து மேற்கோள்கள்):

முஹம்மது ஜான் தமிழாக்கம்:

3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை
சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு
குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு
வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய
(தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

3:39. ஆகவே அவர் மாடத்தில் ("மிஹ்ராப்") நின்று தொழுது கொண்டிருந்த
சமயத்தில் (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள்:
(ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் "யஹ்யா" (என்ற ஒரு மக)வை உங்களுக்கு
அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை
(முன்னறிக்கையை) உண்மைப்படுத்தி வைப்பார்.(மனிதர்களுக்குத்) தலைவராகவும்,
(பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம்
உடையவராகவும் இருப்பார்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கம்:

3:39. அதற்கு மறுமொழியாக அவர், மிஹ்ராபில் மாடத்தினுள் நின்று தொழுது
கொண்டிருக்கும்போது, வானவர்கள் குரல் கொடுத்தார்கள்: "அல்லாஹ் உமக்கு
யஹ்யா (என்ற மக)வைக் கொண்டு நிச்சயமாக நற்செய்தி சொல்கின்றான். அவர்
அல்லாஹ்விடமிருந்து வரப்போகும் ஒரு வாக்கினை, மெய்ப்படுத்தக் கூடியவராய்
விளங்குவார். மேலும், அவரிடம் தலைமைத்துவம் மற்றும் மகத்துவத்தின்
பண்புகள் காணப்படும். மனக்கட்டுப்பாடு கொண்டவராகவும் இருப்பார்;
நபித்துவம் அருளப்பட்டவராகவும் இருப்பார். மேலும் ஒழுக்க சீலர்களில்
ஒருவராகவும் திகழ்வார்."

பீ. ஜைனுல் ஆபீதின் தமிழாக்கம்:

3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப்
பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை90
அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு
மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள்
அவரை அழைத்துக் கூறினர்.

தேவதூதர்களிடமிருந்து ஜகரிய்யாவிற்கு ஒரு மகன் பிறக்கப்போகிறார் என்ற
நற்செய்தியும், அவரது பெயர் என்னவென்றும் செய்தி வருகிறது. யஹ்யா
ஒழுக்கமுள்ளவராகவும், தலைவராகவும், நபியாகவும் இருப்பார். மேலும்
ஜகரிய்யாவிற்கு பிறக்கப்போகும் குழந்தை இன்னொரு முக்கியமான கடமையையும்
செய்வார். அதாவது, யஹ்யாவின் வாழ்வின் முக்கிய நோக்கத்தை குர்-ஆன்
இப்படியாகச் சொல்கிறது: "அல்லாஹ்வின் வார்த்தையை அவர்(யஹ்யா)
உண்மைப்படுத்துவார் / மெய்ப்படுத்துவார்" என்பதாகும்.

யோவான் மெய்ப்படுத்தக்கூடிய "அல்லாஹ்வின் வார்த்தை" எது? அதனை எப்படி
யோவான் மெய்ப்படுத்துவார்?

மேற்கண்ட முதல் கேள்விக்கான பதில், ஆறு வசனங்களுக்கு பிறகு
காணப்படுகின்றது. அதாவது, "மரியாளுக்கும் ஒரு மகன் பிறப்பார் என்ற
நற்செய்தி அறிவிக்கப்படும்" அவ்விடத்தில் அந்த வார்த்தை யார் என்று
சொல்லப்படுகிறது.

முஹம்மது ஜான் டிரஸ்ட்:

3:45. மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து
வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி)
நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்.
அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு)
நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

அப்துல் ஹமீது பாகவி:

3:45. (மேலும், மர்யமை நோக்கி) மலக்குகள் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ்
தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு
குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகின்றான்" என்றும் "அதன் பெயர் அல்
மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்" என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க
கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும்
இருப்பார்" என்றும் கூறினார்கள்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்:

3:45. வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: "மர்யமே! திண்ணமாக
அல்லாஹ் உனக்கு தனது கட்டளை பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர்
மர்யத்தின் குமாரர் ஈஸா 'அல் மஸீஹ்' என்பதாகும். அவர் இம்மையிலும்,
மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய
நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார்.

பீ ஜைனுல் ஆபீதின்:

3:45. "மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை90 பற்றி உமக்கு நற்செய்தி
கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ்92 என்பது அவரது பெயர்.
இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு)
நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை
நினைவூட்டுவீராக!

யோவான் மெய்ப்படுத்தவேண்டிய வார்த்தை "இயேசு" ஆவார். இதனை பீ ஜைனுல்
ஆபீதின் அவர்களின் தமிழாக்கம் தெளிவாக கூறுகின்றது, பார்க்க குர்-ஆன்
3:39:

3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப்
பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையைஅவர்
உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும்,
நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் அவரை அழைத்துக்
கூறினர். (பீ. ஜைனுல் ஆபீதின் தமிழாக்கம்)

ஹிலாலி மற்றும் கான் என்ற ஆங்கில மொழியாக்கத்தில் யோவான் பற்றி
சொல்லும்போது, அடைப்பு குறிக்குள் அவர் "நம்பிக்கை" கொள்வார் என்று
கொடுக்கப்பட்டுள்ளது.

Then the angels called him, while he was standing in prayer in
Al-Mihrab (a praying place or a private room), (saying): "Allah gives
you glad tidings of Yahya (John), confirming (believing in)the Word
from Allah [i.e. the creation of 'Iesa (Jesus), the Word from Allah
("Be!" - and he was!)], noble, keeping away from sexual relations with
women, a Prophet, from among the righteous." S. 3:39 Al-Hilali & Khan

இந்த ஆங்கில மொழியாக்கத்தில் அடைப்பிற்குள் கொடுத்த "நம்பிக்கை" கொள்வார்
என்ற வார்த்தையினால் எந்த ஒரு பயனும் இல்லை. "மெய்ப்படுத்துவார்" மற்றும்
"நம்பிக்கை கொள்வார்" என்ற வார்த்தைகள் இரண்டும் வெவ்வேறானவைகளாகும்.
நம்பிக்கை என்பது மௌனமாகவும், யாருக்கும் தெரியாமலும் மனதிற்குள்
நம்பிக்கை கொள்ளலாம். ஆனால், மெய்ப்படுத்துவது அல்லது உண்மைப்படுத்துவது
(confirm) என்பது மக்களுக்கு முன்பாக வெளிப்படையாக சாட்சி சொல்வதாகும்.
"மெய்ப்படுத்துவார்" என்ற வார்த்தையில் "யாரை மெய்ப்படுத்துவார்?"
"யாருக்கு முன்பாக மெய்ப்படுத்துவார்?" என்ற இரண்டு கேள்விகள்
உள்ளடக்கியுள்ளன.

குர்-ஆனில் யோவானின் பிறப்பு பற்றிய தீர்க்கதரிசன செய்தி கொடுக்கப்பட்ட
பிறகு, அவர் அந்த வார்த்தையை எப்படி மெய்ப்படுத்தினார் என்பதை
குர்-ஆனிலிருந்து காண மக்கள் அதிகமாக விரும்புவார்கள். குர்-ஆனின் 3:39
மற்றும் 3:45ம் வசனங்களை படிக்கும் போது, யோவான் மெய்ப்படுத்தக்கூடிய
அந்த வார்த்தை "இயேசு" என்பதை தெளிவாக அறியமுடியும். குர்-ஆனின் இந்த
அறிவிப்பில், அனேக கேள்விகள் பதில் சொல்லப்படாமல் விடப்பட்டுள்ளது,
அதாவது:

இயேசுவைப் பற்றி யோவான் எவைகளை மெய்ப்படுத்துவார்?
எந்த காலக்கட்டத்தில் யோவான் இயேசுவை மெய்ப்படுத்துவார்?
யோவான் எப்படி இயேசுவை மெய்ப்படுத்துவார்?
யோவான் இயேசுவை மெய்ப்படுத்தும் போது, அதனை கேட்பவர்கள்/பெற்றுக்
கொள்பவர்கள் யார்? அல்லது எந்த மக்களுக்கு முன்பாக யோவான் இயேசுவை
மெய்ப்படுத்துவார்?

இயேசு என்ற "அல்லாஹ்வின் வார்த்தை" பிறக்கப் போகிறார் என்று யோவான்
முன்னறிவிக்கவேண்டிய (அ) மெய்ப்படுத்தவேண்டிய அவசியமென்ன? இயேசு
இருக்கிறாரா அல்லது இல்லையா என்று மக்களில் யாராவது சந்தேகம்
கொள்வார்களா? யோவானின் காலத்தில் வாழ்ந்த மக்களில் யாராவது "இயேசு" என்ற
நபர் பிறந்திருக்கிறார் என்பதை நம்ப மறுப்பார்களா?

மக்கள் இப்படியெல்லாம் சந்தேகம் கொள்ளமாட்டார்கள் என்று கருதினால்,
யோவான் ஏன் அவரை மெய்ப்படுத்த வரவேண்டும்?

மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் பைபிள் பதில் தருகின்றது. ஆனால்,
"அல்லாஹ்வின் வார்த்தையை மெய்ப்படுத்துவார்" என்று யோவானின் பிறப்பு
விஷயத்தில் ஒரு தீர்க்கதரிசன நற்செய்தியை சொல்லிவிட்டு, அதன் பிறகு
குர்-ஆன் வேறு ஒன்றையும் விவரிக்காமல் அமைதியாக இருந்துவிட்டது. வேறு
சில இடங்களில் யோவானைப் பற்றி குர்-ஆன் பேசுகின்றது, ஆனால், அந்த யோவான்
எப்படி இயேசுவை மெய்ப்படுத்தினார் என்பதை மட்டும் விவரிக்க குர்-ஆன்
தவறிவிட்டது. யோவான் பற்றி குர்-ஆன் சொல்லும் அனைத்து வசனங்களையும் நாம்
கீழே காணலாம் (முஹம்மது ஜான் தமிழாக்கம்):

குர்-ஆன் 3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை
செய்தவராகக் கூறினார் "இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான
சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச்
செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்."

குர்-ஆன் 3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது,
மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும்
பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்;
அவர்அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும்,
கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும்,
நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.

குர்-ஆன் 6:85. இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள்
யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.

குர்-ஆன் 6:89. இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும்,
நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை
நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.

குர்-ஆன் 19:7. "ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த்
தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு
முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).

குர்-ஆன் 19:12. (அதன் பின்னர்) "யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப்
பற்றிப் பிடித்துக் கொள்ளும்" (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக
இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.

குர்-ஆன் 19:13. அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும்,
பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்); இன்னும் அவர் மிகவும்
பயபக்தியுடையவராக இருந்தார்.

குர்-ஆன் 19:14. மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும்
இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ
இருக்கவில்லை.

குர்-ஆன் 19:15. ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும்,
(மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி)
நிலைத்திருக்கும்.

குர்-ஆன் 21:89. இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் "என் இறைவா! நீ என்னை
(சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில்
மிகவும் மேலானவன்" என்று பிரார்த்தித் போது:

குர்-ஆன் 21:90. நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக
அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு
யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில்
விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும்,
பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம்
கொண்டவர்களாக இருந்தார்கள்.

யோவான் தன் கடமையை செய்தாரா? அவர் பிறந்ததற்கான நோக்கத்தை
நிறைவேற்றினாரா? போன்ற கேள்விகளுக்கு பதில் தராமல் குர்-ஆன் அமைதியாக
இருந்துவிட்டது. இயேசுவின் போதனையை அல்லது இயேசுவை எவ்வாறு மற்றும்
எப்போது யோவான் மெய்ப்படுத்தினார்? இதற்கு குர்-ஆனிடம் பதில் இல்லை.

இப்போது நம் முன் நிற்கும் முக்கியமான கேள்விகள் என்னவென்றால்,

யோவானின் மெய்ப்படுத்துதல் (சாட்சி) இயேசுவிற்கு ஏன் அவசியமாக உள்ளது?

ஒரு நபி (யோவான்), இன்னொரு நபியை (இயேசுவை) ஏன் மெய்ப்படுத்தவேண்டும்?

குர்-ஆனில் தரப்பட்டிருக்கும் விவரங்களை சேர்த்து பார்த்தோமானால்,
யோவானும், இயேசுவும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்களா? என்ற
சந்தேகம் வரும், ஏனென்றால், முக்கியமான இவ்விருவர் பற்றி மிகக் குறைவான
விவரங்கள் தான் குர்-ஆனில் காணப்படுகின்றது. இவ்விருவர் சந்தித்ததாக எந்த
ஒரு விவரத்தையும் குர்-ஆன் கொடுப்பதில்லை.

யோவான் கொண்டுவந்த செய்தி என்ன?

யோவான் ஒரு நபி என்று அழைக்கப்பட்டார் (குர்-ஆன் 3:39), மேலும அவருக்கு
நபித்துவமும், வேதமும் கொடுக்கப்பட்டு இருந்தது என்றும் குர்-ஆன்
சொல்கிறது (பார்க்க குர்-ஆன் 6:85, 89). இந்த யோவான் என்ற நபி கொண்டு
வந்த செய்தி என்ன? அவர் எவைகளை போதனைச் செய்தார்? போன்ற விவரங்கள்
குர்-ஆனில் இல்லை. யோவான் எதனை போதித்தார் என்ற ஒரு சிறிய துரும்பு கூட
குர்-ஆனில் காணப்படுவதில்லை. யோவானின் வாழ்க்கைப் பற்றி குர்-ஆனில்
காணப்படும் விவரங்கள் வெறும் பொதுவானவைகளாக உள்ளன. உதாரணத்திற்கு, யோவான்
ஒழுக்கமுடையவராக இருந்தார், பக்தியுள்ளவராக இருந்தார், பெற்றோர்களுக்கு
கடமைகளைச் செய்தார், நற்காரியங்களைச் செய்தார், இறைவனுக்கு
கீழ்படிந்தவராக இருந்தார் போன்ற பொதுவான வரிகள் மட்டுமே யோவான் பற்றி
குர்-ஆனில் காணப்படுகின்றது. ஒரு தீர்க்கதரிசியாக யோவானின் செய்தி
எப்படிப்பட்டதாக இருந்தது? அவருக்கு கொடுத்த வேதம் எப்படிப்பட்டதாக
இருந்தது? குர்-ஆனில் இக்கேள்விகளுக்கு பதில் இல்லை (பைபிளின் படி,
யோவான் ஒரு தீர்க்கதரிசியாவார், ஆனால், அவருக்கு எந்த ஒரு வேத
புத்தகமும் கொடுக்கப்படவுமில்லை என்பது தான் உண்மை).

யோவான் இயேசுவை எப்படி மெய்ப்படுத்தினார்? இதற்கான பதில் குர்-ஆனில்
அல்ல, பைபிளில் காணப்படுகின்றது: பார்க்க லூக்கா 1:1-25,39-45, 57-80;
3:1-22; யோவான் 1:14-37.

யோவான் பற்றி குர்-ஆனில் அரைகுறை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
குர்-ஆன் சொல்லும் பாதி விவரங்களை புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால்,
ஒவ்வொரு முஸ்லிமும் குர்-ஆனை விட்டு வெளியே வரவேண்டும், அதன் பிறகு அவர்
பைபிளை படித்து தெரிந்துக் கொள்ளவேண்டும்.

குர்-ஆனை தமிழில் மொழியாக்கம் செய்தவர்கள் "தவறாக
மொழிப்பெயர்த்துள்ளார்கள்". இயேசு எப்படி உருவாகினார் என்ற கருத்தில்
தான் "அல்லாஹ்வின் வார்த்தை" என்ற வாசகம் வருகிறது அதே போல "யோவானும்
மெய்ப்படுத்துவார்" என்ற வாசகமும் வருகிறது என்று முஸ்லிம்கள் தவறாக
மொழிப்பெயர்த்துள்ளார்கள்.

யோவான் வந்ததின் நோக்கம்:

"கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துவதற்கு ஆகும்" (ஏசாயா 40:3, மத்தேயு 3:1-17).
இயேசு கர்த்தர் என்றும், அவருக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்றும் யோவான்
குறிப்பிட்டார் (யோவான் 1:23,27).
இயேசு உலக மக்களின் பாவங்களை சுமந்த ஆட்டுக்குட்டியாக பலியாவார் என்றும்
யோவான் சாட்சி பகிர்ந்தார் (யொவான் 1:29-30).

பைபிளின் இந்த அடிப்படை கோட்பாடுகளை குர்-ஆனின் ஆசிரியர் மறுக்கிறார்.
இதன் அடிப்படையில் பார்க்கும் போது, யோவானின் செய்தி பற்றி குர்-ஆன்
மூச்சு விடவில்லை என்றுச் சொல்வது ஆச்சரியப்படவேண்டிய விஷயமல்ல.

கீழண்ட மூன்று கட்டுரைகள், யோவானின் செய்தியில் இயேசுவின் தெய்வீகத்தன்மை
எவ்விதம் வெளிப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்கிறது : 1, 2, 3.

யோவான் ஒரு தலைவராக இருந்தாரா?

குர்-ஆன் 3:39ல் இன்னொரு பிரச்சனையும் உள்ளது. இப்போது அதைப் பற்றி நம்
தமிழ் குர்-ஆன் மொழியாக்கங்கள் என்ன சொல்கின்றன என்பதைக் காண்போம்.

முஹம்மது ஜான் தமிழாக்கம்:

3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை
சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு
குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு
வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும் (சய்யிதன்), ஒழுக்க
நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்"
எனக் கூறினர்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

3:39. ஆகவே அவர் மாடத்தில் ("மிஹ்ராப்") நின்று தொழுது கொண்டிருந்த
சமயத்தில் (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள்:
(ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் "யஹ்யா" (என்ற ஒரு மக)வை உங்களுக்கு
அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை
(முன்னறிக்கையை) உண்மைப்படுத்தி வைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும்
(சய்யிதன்), (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும்,
நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கம்:

3:39. அதற்கு மறுமொழியாக அவர், மிஹ்ராபில் மாடத்தினுள் நின்று தொழுது
கொண்டிருக்கும்போது, வானவர்கள் குரல் கொடுத்தார்கள்: "அல்லாஹ் உமக்கு
யஹ்யா (என்ற மக)வைக் கொண்டு நிச்சயமாக நற்செய்தி சொல்கின்றான். அவர்
அல்லாஹ்விடமிருந்து வரப்போகும் ஒரு வாக்கினை, மெய்ப்படுத்தக் கூடியவராய்
விளங்குவார். மேலும், அவரிடம் தலைமைத்துவம் (சய்யிதன்) மற்றும்
மகத்துவத்தின் பண்புகள் காணப்படும். மனக்கட்டுப்பாடு கொண்டவராகவும்
இருப்பார்; நபித்துவம் அருளப்பட்டவராகவும் இருப்பார். மேலும் ஒழுக்க
சீலர்களில் ஒருவராகவும் திகழ்வார்."

பீ. ஜைனுல் ஆபீதின் தமிழாக்கம்:

3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப்
பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை90
அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும் (சய்யிதன்), ஒழுக்கக் கட்டுப்பாடு
மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள்
அவரை அழைத்துக் கூறினர்.

இவ்வசனத்தில் வரும் "ஒழுக்கமுள்ளவர்" என்ற சொற்றொடரானது, அவர் திருமணம்
செய்துக்கொள்ளாமல், வனாந்திரத்தில் வாழ்ந்தவராக இருந்தார் என்பதை
காட்டக்கூடியதாக உள்ளது. அவர் நபியாகவும், நல்லவராகவும் இருந்தார் என்ற
குர்-ஆன் சொற்றொடரானது, "மனந்திரும்புங்கள், தீய வழிகளை விட்டுவிட்டு,
நல் வழியில் வாழுங்கள்" என்று மக்களுக்கு அவர் செய்த போதனையை காட்டுவதாக
உள்ளது (லூக்கா 3:1-20).

எனினும் "சய்யித் (தலைவர், எஜமான்)" என்ற குர்-ஆனின் சொற்றொடர் யோவான்
ஸ்நானகனுக்கு பொருந்துவதாக இல்லை. யோவான் வாழ்ந்த முதல் நூற்றாண்டு கால
சமுதாய சூழ்நிலையில், திருமணம் செய்துக்கொள்ளாமல், பிள்ளைகளும் பெறாமல்
இருக்கும் ஒரு வாலிபன், தன் இன மக்களுக்கு தலைவராக இருப்பது என்பது
கடினமாகும். அவர் வாழ்ந்த சமுதாயத்தில் யோவான் மக்களின் தலைவராக
ஒருபோதும் இருந்ததில்லை. அவர் ஒரு வாலிபனாக இருந்த சமயத்திலேயே,
அதிகாரத்தில் இருந்த பெரிய தலைவர்களை கேள்வி கேட்டு, அவர்களின் தீய
செயல்களை கண்டித்தது உண்மை தான். உதாரணத்திற்கு,ஏரோது இராஜாவின் தீய
செயல்களை அவர் கண்டித்தார் (லூக்கா 3:19). அவர் இதனை ஒரு நபியாக,
வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாக செய்தாரே தவிர, தன் யூத
ஜனங்களின் தலைவராக பதவி வகித்தவராக இதனை செய்யவில்லை (லூக்கா 3:4. ஏசாயா
40:3).

ஆக, யோவானை "தலைவன்" என்று குர்-ஆன் அழைப்பது, அதன் ஆசிரியருக்கு
யோவானின் உண்மையான வாழ்க்கை வரலாறு தெரியவில்லை என்பதை
வெளிக்காட்டுகிறது. இதனால் தான் கீழ்கண்ட மொழியாக்கங்கள், தலைவர் என்று
அவரை மொழிபெயர்க்காமல், வெறு வகையாக எழுதி, குர்-ஆனின் அறியாமையை/பிழையை
மறைத்துள்ளார்கள்.

முஹம்மது ஜான் "கண்ணியமுடையவராகவும்" என்று மொழியாக்கம் செய்துள்ளார்:

3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை
சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு
குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு
வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய
(தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.
(முஹம்மது ஜான் தமிழாக்கம்)

பிக்தால், Lordly என்று மொழியாக்கம் செய்கிறார்:

And the angels called to him as he stood praying in the sanctuary:
Allah giveth thee glad tidings of (a son whose name is) John, (who
cometh) to confirm a word from Allah, lordly, chaste, a prophet of the
righteous. Pickthall

யூசுப் அலி, Noble என்று மொழியாக்கம் செய்கிறார்:

While he was standing in prayer in the chamber, the angels called unto
him: "Allah doth give thee glad tidings of Yahya, witnessing the truth
of a Word from Allah, and (be besides) noble, chaste, and a prophet,-
of the (goodly) company of the righteous." Yusuf Ali

சஹி இண்டர்னாஷ்நல், honorable என்று மொழியாக்கம் செய்கிறது:

So the angels called him while he was standing in prayer in the
chamber, "Indeed, Allah gives you good tidings of John, confirming a
word from Allah and [who will be] honorable, abstaining [from women],
and a prophet from among the righteous." Saheeh International

ஹிலாலி & கான் noble என்று மொழியாக்கம் செய்கிறார்கள்:

Then the angels called him, while he was standing in prayer in
Al-Mihrab (a praying place or a private room), (saying): "Allah gives
you glad tidings of Yahya (John), confirming (believing in) the Word
from Allah [i.e. the creation of 'Iesa (Jesus), the Word from Allah
("Be!" - and he was!)], noble, keeping away from sexual relations with
women, a Prophet, from among the righteous." Al-Hilali & Khan

முஹம்மது அஸத் outstanding amoung men என்று எழுதுகிறார்:

Thereupon, as he stood praying in the sanctuary, the angels called out
unto him: "God sends thee the glad tiding of [the birth of] John, who
shall confirm the truth of a word from God, and [shall be] outstanding
among men, and utterly chaste, and a prophet from among the
righteous." Muhammad Asad

பிக்தால், lordly என்று எழுதுகிறார், ஒரு உயர்ந்த ஸ்தானத்தில்
இருப்பவருக்கு உரிய தரத்தில்/தகுதியில் என்று இதனை புரிந்துக்
கொள்ளவேண்டுமா? "தலைவராக" இருப்பதற்கும், தலைவர் பதவி வகிக்காமல் ஆனால்,
"தலைவருக்கு உரிய தகுதிகளோடு" இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இதர
மொழியாக்கங்கள் செய்தவர்கள், தலைவர் என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக
"கண்ணியமான" போன்ற வார்த்தைகளைக் கொண்டு, குர்-ஆனின் தவறை
மொழியாக்கங்களில் திருத்தியுள்ளார்கள்.

எனினும், ஆங்கிலத்தில் ஹானரபுல் (honorable) என்ற வார்த்தை "சய்யித்"
என்ற அரபி வார்த்தைக்கு பயன்படுத்தியது சரியா தவறா என்று உறுதியாக
கூறமுடியாது. ஏனென்றால், சய்யிதன் என்ற அரபி வார்த்தையானது, குர்-ஆனில்
காணப்படும் அனேக குழப்பமான வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகும்.
இவ்வார்த்தையின் அர்த்தம் என்னவென்று யாருக்கும் தெரியாது. குர்-ஆன்
முரண்பாடுள்ள, புரியாத மற்றும் குழப்பம் தரக்கூடிய வார்த்தைகளை
பயன்படுத்துவது, அதன் நம்பகத்தன்மையை கெடுத்துவிடுகின்றது.

குர்-ஆனில் "சய்யித்" என்ற வார்த்தை, இன்னொரு இடத்திலும் வருகிறது. அது
குர்-ஆன் 12:25ம் வசனமாகும். குர்-ஆன் மொழியாக்கம் செய்தவர்கள், குர்-ஆன்
3:39ல் சய்யித் என்ற வார்த்தை வரும் போது, "honorable" அல்லது "noble"
என்று மொழியாக்கம் செய்தார்கள். ஆனால், இந்த இரண்டாவது இடத்தில்(12:25)
மட்டும் "தலைவர்/எஜமான்" என்றே மொழியாக்கம் செய்துள்ளார்கள். இவர்கள்
உண்மையை மறைக்கிறார்கள் என்பது இதன் மூலம் விளங்குகிறது.

யூசுஃப் அலி:

So they both raced each other to the door, and she tore his shirt from
the back: they both found her lord(sayyidaha) near the door. She said:
"What is the (fitting) punishment for one who formed an evil design
against thy wife, but prison or a grievous chastisement?" Yusuf Ali

பிக்தால்:

And they raced with one another to the door, and she tore his shirt
from behind, and they met her lord and master at the door. She said:
What shall be his reward, who wisheth evil to thy folk, save prison or
a painful doom? Pickthall

ஹிலாலி & கான்:

So they raced with one another to the door, and she tore his shirt
from the back. They both found her lord (i.e. her husband) at the
door. She said: "What is the recompense (punishment) for him who
intended an evil design against your wife, except that he be put in
prison or a painful torment?" Al-Hilali & Khan

முஹம்மத் அஸத்:

And they both rushed to the door; and she [grasped and] rent his tunic
from behind - and [lo!] they met her lord at the door! Said she: "What
ought to be the punishment of one who had evil designs on [the virtue
of] thy wife - [what] but imprisonment or a [yet more] grievous
chastisement?" Muhammad Asad

இவ்வசனத்தின் பின்னணியை பார்ப்போம். இந்த நிகழ்ச்சியில் வரும் அந்தப்
பெண், பல முறை யோசேப்போடு தவறான உறவு கொள்ளமுயற்சி எடுத்து இருக்கிறாள்.
ஆனால், அது பயன் அளிக்கவில்லை. மேலும், அவள் "சய்யித்" இடம் யோசேப்பு
பற்றி குற்றம் சுமத்துகிறாள். இந்த இடத்தில் சய்யித் என்றால்,
"கண்ணியமிக்க" என்று அர்த்தம் கொள்ளமுடியாது. அவளது கணவனுக்கு யோசேப்பை
தண்டிக்கும் சக்தி இருப்பதினாலும், அதற்கான அதிகாரம் அவரிடம்
இருப்பதினாலும் தான் அவள் முறையிடுகிறாள்.

ஆக, குர்-ஆன் 12:25ல் வரும் சய்யித் என்ற வார்த்தையின் அர்த்தம், தலைவர்
அல்லது எஜமானன், அதிகாரம் உடையவர் என்பதாகும். எனவே, குர்-ஆன் 3:39ல்
யோவானை "தலைவர்" என்று மொழியாக்கம் செய்தவர்களின் மொழியாக்கம் தான்
சரியானது. குர்-ஆன் 3:39ல் "கண்ணியமிக்க" என்று மொழிப்பெயர்த்தவர்கள்
தவறு செய்துள்ளார்கள்.

சய்யித் என்றால் கணவன் என்று அர்த்தமா?

சில மொழியாக்கங்களில் சய்யித் என்ற வார்த்தையை "கணவன்" (12:25) என்று
மொழியாக்கம் செய்துள்ளார்கள். ஆனால், இது சரியான எழுத்தின் படியான
மொழியாக்கம் ஆகாது. இது தான் சரியான மொழியாக்கம் என்று சொன்னால், இது
இன்னொரு புதிய பிரச்சனையை குர்-ஆனுக்கு கொடுக்கும். ஏனென்றால், யோவான்
ஒரு கணவனாக இருப்பான் என்று அல்லாஹ் சொல்வதாக அமைந்துவிடும். எனவே,
பெரும்பான்மையான மொழியாக்கங்களில், யோவானின் விஷயத்தில் "தலைவர்" என்று
மொழிப்பெயர்த்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றாகத் தெரியும், கணவன் என்று
யோவானின் வசனத்தில் பயன்படுத்தினால், அது மிகப்பெரிய தவறாக இருக்கும்.

யோவான் பற்றிய இதர குர்-ஆன் வசனங்களில் உள்ள பிழைகளை அறிய கீழ்கண்ட
இரண்டு கட்டுரைகளை படிக்கவும்:

• None else was named "John" before John the Baptist?

• Did All Prophets Receive the Same Book?

முடிவுரை (உமர்):

யோவான் பற்றிய அனேக விஷயங்களை நாம் இக்கட்டுரையில் ஆய்வு செய்தோம்.
குர்-ஆனின் அரைகுறையான விளக்கங்கள் அல்லது தீர்க்கதரிசனங்கள் குர்-ஆனின்
நம்பகத்தன்மையை கேள்வி கேட்பதாக இருக்கிறது. இப்போது இக்கட்டுரையில்
முன்வைத்த கேள்விகளைப் பார்ப்போம். முஸ்லிம்கள் இதைப் பற்றி மேலும் ஆய்வு
செய்ய சில புதிய கேள்விகள் இங்கே தரப்படுகின்றன.

அ) யோவான் எப்படி இயேசுவை மெய்ப்படுத்தினார்? [குர்-ஆனில் இதற்கு பதில் இல்லை].

ஆ) ஏன் யோவான் இயேசுவை மெய்ப்படுத்தவேண்டும்? ஒரு நபி இன்னொரு நபியை ஏன்
மெய்ப்படுத்த வேண்டும்? [இதற்கும் குர்-ஆனில் பதில் இல்லை].

இ) ஒரே காலக்கட்டத்தில், ஒரே இன மக்களுக்கு ஏன் இரண்டு தீர்க்கதரிசிகளை
அல்லாஹ் அனுப்பினார்? யோவான் இயேசுவிற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக
பிறக்கிறார், ஏன் இவர் ஆறு மாதங்களுக்கு பிறகு பிறக்கப்போகும் இயேசுவை
மெய்ப்படுத்தவேண்டும்? [இதற்கும் குர்-ஆனில் பதில் இல்லை].

ஈ) இயேசு அல்லாஹ்வின் வார்த்தையென்று யோவானின் பிறப்பு பற்றிய
தீர்க்கதரிசனங்களில் ஏன் அல்லாஹ் குறிப்பிடவேண்டும்? [இதற்கும்
குர்-ஆனில் பதில் இல்லை].

உ) உண்மையாகவே, யோவான் ஒரு தலைவராக இருந்தாரா? [இதற்கும் குர்-ஆனில் பதில் இல்லை].

ஊ) கடைசியாக, ஏன் குர்-ஆன் மொழியாக்கங்கள் செய்தவர்கள், "அல்லாஹ்வின்
வார்த்தை" என்று வரும் இடத்தில், வெவ்வேறு விதமாக மொழியாக்கம்
செய்துள்ளார்கள்? இவர்கள் மறைக்க விரும்பும் விஷயம் என்ன?

மூலம்: http://www.answering-islam.org/Quran/Incoherence/john_confirming.html

________________________________

யோகன் கட்ஜ் கட்டுரைகள்

குர்-ஆன் இதர கட்டுரைகள்

source: http://www.answeringislam.org/tamil/authors/jochenkatz/john_confirming.html



--
Source : http://isakoran.blogspot.in/2015/09/blog-post.html