அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

November 19, 2008

ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவிற்கும் பவுலுக்கும் இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 1


ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் -1
குறிப்பு: நம் தமிழ் முஸ்லீம்கள் முக்கியமாக ஏகத்துவம் தளத்தில் பவுலும் கிறிஸ்தவமும் என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு இருந்தார்கள். கிறிஸ்தவத்தை உண்மையாக ஸ்தாபித்தது இயேசு அல்ல, பவுல் தான் என்ற தோரணையில் கட்டுரையை எழுதியிருந்தார்கள். அவர்களின் கட்டுரைகளுக்கு தனிப்பட்ட முறையில் பதில் சொல்வதற்கு முன்பாக, இயேசுவின் போதனைக்கும், அப்போஸ்தலரான பவுலின் போதனைக்கும் இடையே உள்ள ஒற்றுமையை இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம். (முஸ்லீம்களின் நம்பிக்கையின் படி, இயேசுவின் செய்தியும், முகமதுவின் செய்தியும் ஒன்று தான். ஆனால், இயேசுவிற்கும் முகமதுவிற்கும் கிழக்கிற்கும், மேற்கிற்கும் உள்ள தொலைவு போல வித்தியாசம் உள்ளது, இதனை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர் அல்லாத மாற்று மத நம்பிக்கையாளர்களும் அறிந்துள்ளார்கள்.)இஸ்லாமியர்கள் நினைப்போது போல அல்லாமல், இயேசு எதைச் சொன்னாரோ, அதையே சொல்லியிருக்கிறார் அப்போஸ்தலர் பவுலும், இக்கட்டுரையில் ஒவ்வொரு தலைப்பைப் பற்றி இயேசு எதைச் சொல்லியுள்ளாரோ, பவுலும் அதையே சொல்லியுள்ளார் என்பதை வாசகர்கள் கவனிக்கலாம். பவுல் சொன்னது இயேசு சொன்னதற்கு முரண்பட்டது என்றுச் சொன்னால், பவுல் முகமதுவைப் போல, உன் எதிரிகளை கொல்லு, ஒன்றுக்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொண்டு, உன் அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக எடுத்துக்கொள் என்று சொல்லியிருந்தால், இயேசு சொன்னதற்கு எதிராக பவுல் சொன்னார் என்று நாம் கருதலாம், பவுல் சொன்னது அப்படி இல்லையே, இத்தொடர் கட்டுரைகளை படித்து தெளிவுப் பெருங்கள்.

இந்த தலைப்பில் இது முதலாவது பாகமாகும், இதில் 35 ஒற்றுமைகளை காட்டியுள்ளோம், மீதமுள்ளதை அடுத்த தொடரில் காண்போம்.



கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும்
இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 1


100 Similarities between the Lord Jesus Christ and the Apostle Paul

தொகுத்தவர்: அந்தோனி வேல்ஸ் (Anthony Wales)
முன்னுரை:

அநேக முஸ்லீம்கள் இயேசு ஒரு இஸ்லாமிய நபி என்று விசுவாசிக்கின்றனர். மேலும் இதை உறுதிபடுத்துவதற்கு அநேக விவாதங்களையும் எழுப்புகின்றனர். அதில் ஒரு முக்கியமான விவாதம் என்னவென்றால் பவுல் தான் கிறிஸ்தவத்தின் உண்மையான ஸ்தாபகர் என்பதாகும். இந்த விவாதத்தில் அவர்களின் கூற்று, வேதாகமத்தில் புனித பவுலின் போதனைகள் இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாயிருக்கிறது என்பதாகும். இந்தக் கட்டுரையானது பவுலுக்கும் இயேசுவுக்கும் இடையிலான் 100 ஒற்றுமைகளைக் காண்பித்து அவர்களின் கூற்றுக்கு பதில் அளிக்கும் படியாக கொடுக்கப்படுகிறது.

இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமைகள் இயேசு மற்றும் பவுல் பற்றியதான வேதப்பகுதிகளிலிருந்து எடுத்தாளப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் வார்த்தைகள், கிரியைகளை தெரிவிக்கும் ஆதாரப் பகுதியாக சுவிசேஷங்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்) உள்ளது. மேலும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும், வெளிப்படுத்தின சுவிஷேசத்திலும் இயேசுவுடைய சில வார்த்தைகளும் கிரியைகளும் இருக்கிறது. பவுலுடைய வார்த்தைகளும், கிரியைகளும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும் அவருடைய நிருபங்களில் காணப்படுகிறது (ரோமர் நிருபம் முதல் பிலேமோன் நிருபம் வரையிலும்). அவர்களின் வார்த்தைகள், கிரியைகள் மற்றும் வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இயேசு தான் மேசியா அல்லது கிறிஸ்து (Jesus is the Messiah or Christ)

இயேசு: அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். (மத்தேயு : 16:15-17)

பவுல்: மக்கெதோனியாவிலிருந்து சீலாவும், தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங் கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்(அப் :18: 5).

2. இயேசு தேவனுடைய குமாரன்(Jesus is the Son of God)

இயேசு: அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள். (லூக்கா 22: 70-71)

பவுல்: தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். (அப் 9: 20)

3. இயேசுவே ஆண்டவர்(Jesus is Lord)

இயேசு: நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான். (யோவான் 13:13)

பவுல்: பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது, அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு, அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். (1 கொரி 8: 6)

4. இயேசுவே தேவன் (Jesus is God)

இயேசு: தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். (யோவான் 20: 28-29)

பவுல்: பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். (ரோமர் 9: 5)

5. இயேசு மனிதர் (Jesus is Human)

இயேசு: அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. (யோவான் 8: 39-40)

பவுல்: தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (1 தீமோ 2: 5-6)

6. இயேசு ஸ்தீரியினிடத்தில் பிறந்தவர் (Jesus was born of Woman)

இயேசு: தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். (லூக்கா 1: 30-32)

பவுல்: காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். (கலா 4: 5)

7. தேவன் இயேசுவை அனுப்பினார்(God sent Jesus)

இயேசு: இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (யோவான் 8: 42)

பவுல்: அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். (ரோமர் 8: 3)

8. இயேசுவே பிதாவனிடத்திற்கு போகும் வழி (Jesus is the way to the Father)

இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

பவுல்: அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். (எபே : 2: 18)

9. இயேசுவே ஒளி (Jesus is Light)

இயேசு: மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8: 12)

பவுல்: அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?. கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? (2 கொரி 6: 14-15)

10. இயேசுவே ஜீவன் (Jesus is Life)

இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

பவுல்: நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். (கொலோ 3: 4)
11. இயேசுவே தொடக்கம் /ஆதியுமாக இருக்கிறார் உள்ளார் (Jesus is the Beginning)

இயேசு: நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். (வெளி 22:13)

பவுல்: ….அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். (கொலோ 1:18)

12. இயேசு முதலாமவர் (Jesus is First)

இயேசு: .....நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், .... (வெளி 1: 17-18)

பவுல்: அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். (கொலோ 1:18)

13. இயேசு தாவீதின் சந்ததியானவர் ( Jesus is a descendent of David)

இயேசு: தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். (லூக்கா 1: 30-32)

பவுல்:தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின் படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள். (2 தீமோ 2: 8)

14. இயேசு மணவாளன் (Jesus is the Bridegroom)

இயேசு: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்ன வென்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. (மாற்கு 2: 18-19)

பவுல்: நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். (2 கொரி 11: 2)

15. இயேசுவே ராஜா (Jesus is King)

இயேசு: இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18; 36-37)

பவுல்: விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. (எபே 5: 5)

16. இயேசு பரத்திலிருந்து இறங்கினவர்(Jesus descended from Heaven)

இயேசு:பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3: 13)

பவுல்: ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? (எபே 4: 9)

17. இயேசுவே இரட்சகர் (Jesus is Saviour)

இயேசு: உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:17)

பவுல்:பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். (1 தீமோ 1: 15)

18. இயேசுவே சத்தியமானவர்(Jesus is the Truth)

இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

பவுல்:இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின் படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. (எபே 4: 21)

19. இயேசு ஏழையாக இருந்தார் (Jesus was poor)

இயேசு: அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். (மத்தேயு 8: 20)

பவுல்: நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும் படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே. (2 கொரி 8: 9)

20. தேவனின் மகிமையின் ஒளி இயேசுவின் முகத்தில் பிரகாசித்தது.
(The glory of God shines in the face of Jesus)


இயேசு: ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. (மத்தேயு 17: 1-2)

பவுல்: இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். (2 கொரி 4: 6)

21. இயேசு தேவனுடைய பந்தியை ஏற்படுத்தினார் (Jesus instituted the Lord's Supper)

இயேசு: அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மாற்கு 14: 22-24)

பவுல்: நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார் போஜனம் பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். (1 கொரி 11: 23-25)

22. இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டார்(Jesus was betrayed)

இயேசு: .... உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். .... மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷ குமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ!.... (மாற்கு 14: 18, 21)

பவுல் : நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, (1 கொரி 11: 23)

23. இயேசு பொந்திய பிலாத்துவுக்கு முன்பாக சாட்சியளித்தார் (Jesus testified before Pontius Pilate)

இயேசு : அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18: 33-37)

பவுல்: எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். (1 தீமோ 6: 14)

24. இயேசு பாடுபட்டார்(Jesus suffered)

இயேசு: அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். (மத்தேயு 16: 21)

பவுல்: எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது (2 கொரி 1: 5).

25. இயேசு மரித்தார்(Jesus died)

இயேசு: இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். (மாற்கு 15: 37)

பவுல் :இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; …. (1 தெச 4: 14)

26. இயேசு அடக்கம்பண்ணப்ட்டார் (Jesus was buried)

இயேசு: அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். (மாற்கு 15: 46)

பவுல்: ..... அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். (ரோமர் 6: 4)

27. இயேசு மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார்(Jesus rose from the dead on the third day)

இயேசு: இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். (யோவான் 2: 19, 22)

பவுல்: நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, (1 கொரி 15 : 3-4)

28. இயேசு பரமேறினார்(Jesus ascended)

இயேசு: அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். (லூக்கா 24: 51)

பவுல்: இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். (எபே 4: 10)

29. இயேசு பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்தார். (Jesus is seated at the right hand of the Father)

இயேசு: .....மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர் தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். (மாற்கு 14: 61-62)

பவுல்: எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, (எபே 1: 20)

30. இயேசு மீண்டும் வருவார் (Jesus will come again)

இயேசு: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். (மத்தேயு 24: 30)

பவுல்: ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். (1 தெச 4: 16)

31. இயேசு ஆடுகளுக்காக மரித்தார் (Jesus died for the sheep)

இயேசு:ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோவான் 10: 15)

பவுல்: ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். (அப் 20:28)

32. இயேசு நம்மேலிருந்த அன்பின் நிமித்தம் மரித்தார் (Jesus died for love of us)

இயேசு:நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவான் 15: 12-13)

பவுல்: ....நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன (கலா 2: 20)

33. இயேசுவின் மரணம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறது (Jesus' death demonstrates God's love)

இயேசு: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3: 16)

பவுல்: நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார். (ரோமர் 5: 8)

34. இயேசு தன்னை ஒரு பரிகார பலியாக ஒப்புக்கொடுத்தார் (Jesus gave himself as a ransom)

இயேசு: அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20: 28)

பவுல்: தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (1 தீமோ 2: 5-6)

35. இயேசுவை சிலுவையிலறைந்தவர்கள் அறியாமையினாலே அப்படிச் செய்தார்கள்
(Those who crucified Jesus were ignorant and acted in ignorance)


இயேசு: அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். ... (லூக்கா 23: 34)

பவுல்: உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவ ஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (1 கொரி 2: 7-8)

முடிவுரை: அன்பான இஸ்லாமியர்களே, நீங்களே உங்கள் கண்களால் காணுங்கள், உங்கள் காதுகளால் கேளுங்கள், மனதால் உணருங்கள். இயேசுவின் போதனைக்கும், அப்போஸ்தலனாகிய பவுலின் போதனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், இயேசுவின் போதனைக்கும், நீங்கள் நபி என்று நம்பிக்கொண்டு இருக்கும் முகமதுவின் போதனைக்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இயேசுவிற்கு முரண்பட்டவர் பவுல் அல்ல, இயேசுவின் மற்ற சீடர்கள் அல்ல, உங்கள் முகமது தான் முரண்பட்டார், ஆரம்ப முதல் கடைசி வரைக்கும் இயேசுவிற்கு முரண்பட்ட எல்லா செயல்களையும் அவர் செய்தார். குர்‍ஆனையும் பைபிளையும் படித்துப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

அடுத்த தொடரில் சந்திக்கும் வரை கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. இயேசுவே நாங்கள் உங்களை நேசிக்கிறோம், சீக்கிரமாக வாரும். ஆமென்.


May 23, 2008

அபூமுஹை அவர்களுக்கு உமர் பதில்: பாதை மாறிய பயணங்கள்


இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த "உடன்கட்டை ஏறுதல்" என்ற பழக்கம் ஒரு சட்டமாக இந்தியாவில் இன்று அமுலில் உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

உடன் கட்டை ஏறுதல் என்ற சட்டம் சரியானதா? கணவன் மரித்துவிட்டால் அப்பெண்ணுக்கு மறுமனத்திற்கு வாய்ப்பு அளிக்கவேண்டுமே ஒழிய, இப்படி சாகடிக்கலாமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள் ............................

அபூமுஹை அவர்களுக்கு பதில்: பாதை மாறிய பயணங்கள்

மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் "இஸ்லாமை விட்டு வெளியேறி, வேறு மதத்தை பரப்புகிறவனை, இஸ்லாம் சட்டப்படி  கொல்லவேண்டும்" என்று அவர் சொன்ன கருத்து சரியானதா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் ( Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி:யார் தேசத் துரோகி?)  இதற்கு அபூ முஹை அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது சரியானது தான் இஸ்லாமில் இப்படித்தான் சட்டம் என்று ஒரு கட்டுரையை எழுதினார் ( மதம் மாறினால் மரண தண்டனை-1) . இதற்கு நான் மறுபடியும் ஒரு மறு உத்தரவு எழுதினேன். அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply (* நிபந்தனைகளுக்கு உட்பட்டது) .

நான் சொல்லாத விவரத்தைச் சொன்னதாக, அபூமுஹை அவர்கள் கற்பனை செய்துக்கொண்டு சில விவரத்தைச் சொல்லியுள்ளார்.

இந்த கட்டுரையில் அவர் சொல்லும் குற்றச்சாட்டு:

அரசியல், ஆட்சி, இராணுவம் போன்ற நாட்டை ஆளும் சட்டம் எல்லாம் காபிர்(Non-Islam) நாடுகள் தான் உருவாக்கின, இஸ்லாம் அதை சொல்லவில்லை என்று நான் சொன்னதாக அவர் சொல்கிறார். இதை அவர் எங்கேயிருந்து எடுத்தார் என்பதை அவரிடம் தான் கேட்கவேண்டும்.

இனி அவர் என்ன எழுதினார் என்பதை கவனிப்போம்.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

மதம் மாறினால் மரண தண்டனை-3
Source:
http://abumuhai.blogspot.com/2008/05/3_12.html 

முஸ்லிம்கள் இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்களைக் கூறும் போது, அது இஸ்லாத்தின் சட்டமில்லை காஃபிர்களின் சட்டம் என்று சில பிற மத நண்பர்கள் கூறுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை அரசியல், ஆட்சி, இராணும் இன்னும் இவை போன்ற நாட்டைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான சட்டங்கள் அனைத்தும் இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை. காஃபிர்களே இச்சட்டங்களை வகுத்திருக்கின்றனர், இவையெல்லாம் காஃபிர் சட்டங்கள் என்பதால் இவற்றிலிருந்து முஸ்லிம்கள் உதாரணம் சொல்லக்கூடாது என்பது இஸ்லாத்தை விமர்சிக்கும் சிலரின் கூற்று.


அருமையான நண்பர் அபூ முஹை அவர்களே, நீங்கள் சொன்ன விவரங்கள் என் கட்டுரையில் எந்த இடத்தில் உள்ளது சிறிது விளக்குங்கள்.

காபிர் நாடுகள் தான் முதல் முதலில் அரசியல், ஆட்சி, இராணுவம்  போன்ற சட்டத்தை உருவாக்கின என்று நான் சொல்லியுள்ளேனா?

இஸ்லாம் இப்படிப்பட்ட சட்டத்தை உருவாக்கவில்லை அல்லது சொல்லவில்லை என்று நான் எங்கு சொல்லியுள்ளேன்?

ஏன் உங்கள் கட்டுரைகளை படிக்கும் அப்பாவி மக்களை (முஸ்லீம்களை) திசைத்திருப்புகிறீர்கள்.


 
அபூமுஹை அவர்கள் எழுதியது:

இவர்கள் எங்கிருந்து இவ்வாறு புரிந்து கொண்டார்கள்! அதனால் கீழ்கண்டவாறு விமர்சனத்தை எழுப்புகிறார்கள்.


11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந்தம் கலந்தது எப்படி?

பொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு.

ஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் "காபிர்களின்" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் --- அவர்கள் செய்துள்ளார்கள்.

நான் மேலே சொன்ன தலைப்பே மிகவும் தெளிவாகச் சொல்கிறது. அதாவது, காபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் எப்படி சம்மந்தம் கலந்தது என்றேன்.காபிர்களின் சட்டம் தான் முதல், இஸ்லாமிய சட்டம் தான் அடுத்தது என்று நான் சொன்னேனா? மறுபடியும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.

அதாவது, காபிர்களின் சட்டம் குறைபாடுள்ளது, இஸ்லாமிய சட்டம் தான் உயர்ந்தது என்று ஓயாமல் சொல்லிக்கொள்ளும் நீங்கள், எப்படி இப்போது மட்டும் அவசியம் ஏற்படும்போது திடீரென்று இஸ்லாமிய சட்டத்தோடு, காபிர்களின் சட்டத்தை சம்மந்தப்படுத்தி பேசுகிறீர்கள் என்ற பொருளில் சொன்னேனே தவிர, நீங்கள் நினைப்பது போல் அல்ல.

 


அபூமுஹை அவர்கள் எழுதியது:

தேசத் துரோகம்

அதாவது, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவதும், இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்கு விற்பதும் தேசத் துரோகம். என்ற சட்டம் காஃபிர்களால் இயற்றப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் இதை உதாரணம் காட்டிப் பேசுவது சந்தர்ப்பவாதம் என்று இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் சொல்கின்றனர். இவர்களின் வாதம் தவறானது. இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்தக்கூடாது, இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவிக்கக்கூடாது என மறைமுகமாக அல்ல, நேரடியாகவே இஸ்லாமும் கண்டிக்கிறது.

இஸ்லாம் இராணுவ சட்டத்தை இயற்றவில்லை என்று நான் சொல்லவே இல்லையே, உங்களுக்கு மட்டும் இப்படி புதுமையாக தெரிகின்றது.

என் கட்டுரையை சரியாக படித்துப்பாருங்கள், எதை நான் சந்தர்ப்பவாதம் என்று சொல்கிறேன் என்று புரியும். அதாவது, மதத்தை மாறுபவனுக்கு மரண தண்டனை இஸ்லாமில் உள்ளதால், காபிர்களின் சட்டத்தை உதாரணம் காட்டும் நீங்கள், மற்ற இஸ்லாமிய சட்டத்தோடு காபிர்களின் கட்டத்தை ஒப்பிட்டுப்பேச தயாரா? என்று கேட்டேன் அவ்வளவு தான்.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

இதைப் பார்ப்பதற்கு முன்,

உலகில் எல்லா நாடுகளும் தன் நாட்டின் தகுதிக்கேற்றவாறு இராணுவம் வைத்திருக்கும். இதற்கு முஸ்லிம் நாடுகள், காஃபிர் நாடுகள் என்ற விதிவிலக்கு எதுவுமில்லை. எதிரி நாட்டுடன் சண்டையிட நேர்ந்தால் நட்பு நாட்டின் இராணுவ உதவியை நாடுவதுண்டு. இதற்கும் காஃபிர் நாடுகள், முஸ்லிம் நாடுகள் என்ற வேற்றுமை இல்லை!

இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சாதாரண போராளியும், வெளிப்படுத்தக்கூடாத இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தினால் அது தேசத்துக்கே ஊறு விளைவிக்கும் தேசத் துரோகம் என்பதில் எந்த நாட்டின் இராணுவச் சட்டத்திலும் மாற்றுக் கருத்து இல்லை. அது காஃபிர் நாடாகவோ, முஸ்லிம் நாடாகவோ இருந்தாலும் சரியே, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவது தேசத் துரோகம் என்றே இஸ்லாமும் கூறுகிறது.
.....
.....
.....


தேசத்துரோகத்திற்கு மரண தண்டனை கொடுப்பது தவறு என்று நான் எழுதவில்லை, தேசத்துரோகத்திற்கு இஸ்லாமிய சட்டமோ, அல்லது காபிர் நாடுகளின் சட்டமோ, மரண தண்டனை விதிப்பது தவறானது என்று கூட‌ நான் எழுதவில்லை.

ஒரு மனிதன் மதத்தை மாற்றிக்கொள்ளும்போது, அவனுக்கு மரண தண்டனை சரியா? என்பது தான் என் கேள்வி. மற்றும் மதத்தை மாற்றுபவனுக்கும், தேசத்துரோகம் செய்பனையும் ஏன் சம்மந்தப்படுத்துகிறார், ஜாகிர் நாயக் அவர்கள் என்பது தான் என் கேள்வி, அவ்வளவே.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

மேலும், இராணுவச் சட்டங்கள் காஃபிர்கள் இயற்றியது என்று தவறாக வாதமெழுப்பும் பிற மத நண்பர்களின் கவனத்திற்கு,


இராணுவம் மற்றும் தேசத்துரோகம் சம்மந்தப்பட்ட சட்டங்கள் காபிர் நாடுகள் தான் இயற்றினார்கள் என்று எங்கே நான் சொல்லியுள்ளேன்? ஏன் நான் எழுதிய கட்டுரையின் "பாதையை மாற்றி பயணத்தை" திசை திருப்ப பார்க்கிறீர்கள்?


அபூமுஹை அவர்கள் எழுதியது:

இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவது தேசத் துரோகம் மட்டுமல்ல, இஸ்லாமிய ஆட்சியின் இராணுவப் போர் நடவடிக்கைகளை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துபவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி வேறு மதத்தைத் தழுவி விட்டாரோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும் என்பதை ஹாத்திப் (ரலி) அவர்களின் வாக்கு மூலத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

எனவே, இஸ்லாமிய ஆட்சி என்று அறிவித்துக்கொண்ட முஸ்லிம் நாடுகளிலும் இராணுவம் உண்டு. அந்த இராணுவத்திற்கும் இஸ்லாமிய சட்டத் திட்டங்களைக் கடைபிடிக்கும் விதிகள் உண்டு. அதனால் காஃபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் கலந்ததாகச் சொல்வது வெறும் கற்பனை.

(தேசத் துரோகம் என்பதற்கு வேறு சில அளவுகோலையும் வைத்துள்ளனர் அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்)

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை
 

இஸ்லாமிய நாடுகளுக்கு தனியான இராணுவம் இருக்காது என்று நான் சொல்லவில்லை, அப்படி இருக்கும் இராணுவத்திற்கு தனியான இஸ்லாமிய சட்டங்கள் இருக்காது என்று கூட நான் சொல்லவில்லை.

நான் எழுதிய கட்டுரையின் பயணமெல்லாம், ஒரு மார்க்கத்தில் ஒரு குற்றத்திற்கு கொடுக்கும் தண்டனையை மற்ற மார்கத்தோடு அல்லது நாடுகளின் சட்டத்தோடு சம்மந்தப்படுத்திப் பேசும் போது, அதே குற்றத்தை ஒப்பிடவேண்டுமே ஒழிய, தலைக்கும் காலுக்கும் முடி போடக்கூடாது.

இஸ்லாமில் திருட்டிற்கு உள்ள தண்டனையை நியாயப்படுத்த நாம் முயற்சி எடுக்கும் போது, நாம் என்ன செய்யவேண்டும்? மற்ற காபிர்களின் சட்டத்தில் திருட்டிற்கு என்ன தண்டனை உண்டு என்று பார்த்து அதோடு ஒப்பிட்டால், மக்களுக்கு நன்றாக புரியும். ஒரே குற்றத்திற்கு இரண்டு மார்க்கங்களில் உள்ள தண்டனைகளை ஒப்பிட்டு பார்த்தால், நியாயமானதாக இருக்கும்.

அது போல, இஸ்லாமில் "மத மாற்றத்திற்கு" கொடுக்கும் தண்டனையை நியாயப்படுத்த விரும்பினால், மற்ற நாடுகளில் "மத மாற்றத்திற்கு" என்ன தண்டனை உண்டு என்பதை கண்டுபிடித்து ஒப்பிடவேண்டும். அதை விட்டுவிட்டு, காபிர் நாடுகளில் "எந்த குற்றத்திற்கு மரண தண்டனை" உண்டு என்று கண்டுபிடித்து அதோடு ஒப்பிட்டால் அது எப்படி சரியாக இருக்கும் என்று தான் நான் கேட்டேன்.

உடன்கட்டை ஏறுதலும், இஸ்லாமிய மத மாற்ற தண்டனையும்:

ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன், இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த "உடன்கட்டை ஏறுதல்" என்ற பழக்கம் ஒரு சட்டமாக இந்தியாவில் இன்று அமுலில் உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

உடன் கட்டை ஏறுதல் என்ற சட்டம் சரியானதா? கணவன் மரித்துவிட்டால் அப்பெண்ணுக்கு மறுமனத்திற்கு வாய்ப்பு அளிக்கவேண்டுமே ஒழிய, இப்படி சாகடிக்கலாமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இதற்கு ஒரு இந்து அறிஞர் கீழ்கண்டவாறு பதில் சொல்கிறார் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்:

பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் "ஒரு மனிதன் இஸ்லாமைவிட்டு வெளியேறினால், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது, அதுபோல, ஒரு பெண்ணுக்கு தன் கணவன் மறித்துவிட்டால், அவளுக்கு இந்து தர்மப்படி மரண தண்டனை தரவேண்டும், அதாவது கணவனோடு அவளையும் எரித்து கொன்றுவிடவேண்டும். தன் கணவன் மரித்துவிட்டால் அப்பெண் வேறு ஒரு ஆணை மறு திருமணம் செய்துக்கொண்டால் அது மரித்த கணவனுக்கு செய்யும் துரோகம் ஆகும், எனவே, இது நியாயமான தண்டனைத் தான்."

இதை படித்தவுடன் உங்களுக்கு சிரிப்பு வந்து இருக்கும், உடன் கட்டை ஏறுதலுக்கும், மதமாற்றத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கத்தோன்றும். இந்த உதாரணத்தில் குற்றம் ஒப்பிடப்படவில்லை, ஆனால், தண்டனை ஒப்பிடப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், கணவன் மரித்துவிடுவது என்பது குற்றமே இல்லை. அது போல, மதத்தை மாற்றிக்கொள்வது குற்றமே இல்லை.  இந்த உதாரணம் போலத்தான் ஜாகிர் நாயக் அவர்களும் உதாரணத்தைச் சொன்னார் என்று நான் குறிப்பிட்டேன்.
 
எனவே, அருமை நண்பர் அபூமுஹை அவர்களே, முதலில் நான் சொன்னதை முழுவதும் படித்து  புரிந்துக்கொண்டு எழுதுங்கள்.

யாருக்கு பதில் அல்லது யாருடைய கட்டுரைக்கு பதில் எழுதுகிறீர்கள், அபூ முஹை அவர்களே:

என் கட்டுரையைப் பற்றி பதிலோ விமர்சனமோ எழுதினால், அதன் தொடுப்பு தரவேண்டுமென்று, நான் ஏற்கனவே என் முதல் கட்டுரையில் சொல்லியுள்ளேன்.

நீங்கள் ஒன்றும் என்னைப்போல நேற்று பொழிந்த மழையில் முளைத்த காலான் அல்ல. உங்களுக்கு இணையத்தில் எப்படி கட்டுரையை எழுதவேண்டும் என்ற எல்லா விவரங்களும் தெரியும், இப்படி தெரிந்து இருந்தும், ஏன் என் வரிகளுக்கு பதில் அளிக்கும் போது, என் கட்டுரையின் தொடுப்பை தருவதில்லை.

எங்கள் கட்டுரைகளை படித்தால், இஸ்லாமியர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற பயமா? அப்படி பயம் இல்லையானால் ஏன் தொடுப்புக்களை தருவதில்லை? எனக்கு பதில் அளிக்கும் போது, என் வரிகளை விமர்சிக்கும் போது, என் கட்டுரை வெளியாகும் ஒரு தளத்தின் தொடுப்பையும் கொடுக்காமல் பதில் எழுதுவது என்ன நாகரீகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இனி என் எல்லா பதில்களில் இந்த வரிகள் தொடரும் என்று சொல்லிக்கொள்கிறேன்.

முடிவுரை: நான் எந்த இடத்தில் "காபிர்கள் தான் அரசியல், ஆட்சி, இராணுவம் பற்றிய சட்டங்களை இயற்றினார்கள், இஸ்லாமில் இப்படிப்பட்ட சட்டமில்லை, அல்லது இஸ்லாமோடு இப்படி ஒப்பிடக்கூடாது என்றுச் சொன்னேன்" என்பதை தயவு செய்து தெரிவியுங்கள்.

ஒரே குற்றத்தை(தண்டனைகளை அல்ல) இரண்டு மார்க்கங்களிலும் ஒப்பிட நீங்கள் தயாரா? உங்கள் ஷரியா சட்டம் மற்ற காபிர்கள் சட்டத்தைவிட எவ்விதத்தில் உயர்ந்தது, சமுதாயத்திற்கு ஏற்றது என்று ஒப்பிட்டு கட்டுரை எழுதுவீர்களானால், மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

May 15, 2008

இஸ்லாமில் நபிகளின் பாவங்களும் : பாகம் -1 (Islam and the Sins of the Prophets)





இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1


முன்னுரை: சமீபகாலமாக கிறிஸ்தவர்களை விட முஸ்லீம்கள் பைபிளை அதிகமாக படிக்கிறார்கள் என்றுச் சொல்லத்தோன்றுகிறது. முஸ்லீம்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள சில நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டி, ஒரு தீர்க்கதரிசி என்பவர் இப்படிப்பட்ட தீய மற்றும் கீழ்தரமான செயல்களை செய்யமாட்டார். தீர்க்கதரிசிகள் பரிசுத்தமானவர்கள், எனவே தான் குர்‍ஆன் தீர்க்கதரிசிகளைப்பற்றிச் சொல்லும் போது, அவர்கள் இவ்வுலக தீய செயல்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றுச் சொல்கிறது என்று முஸ்லீம்கள் சொல்கின்றனர். பைபிளில் உள்ள இந்த நிகழ்ச்சிகள் தவறானவையாகும், அதனால், தான் பைபிள் வேதம் இல்லை என்று நாங்கள் சொல்கிறோம் என்று தங்கள் வாதத்தை முன்வைக்கின்றனர்.

ஆனால், குர்‍ஆனும், இஸ்லாமிய பாரம்பரிய நூல்களாகிய ஹதீஸ்களும் தீர்க்கதரிசிகளைப் பற்றி தரம்குறைவாக சொல்கிறது என்பதை மட்டும் வெளியே சொல்லமாட்டார்கள். பைபிளில் சொல்லப்பட்ட அதே கதை குர்‍ஆனில் இருந்தாலும் அதைப்பற்றி மூச்சு விடமாட்டர்கள் முஸ்லீம்கள். தாவீது விபச்சாரம் செய்தார் என்று பைபிள் சொல்வது தவறானது என்றுச் சொல்லி கட்டுரை எழுதினார்கள் இஸ்லாமியர்கள். ஆனால், இதே நிகழ்ச்சியைப் பற்றி குர்‍ஆனும், ஹதீஸ்களும், இஸ்லாமிய சரித்திர நுல்களும் சொல்கிறது என்பதை இவர்கள் மறைக்கிறார்கள்.

இஸ்லாமும் நபிகளின் பாவங்களும் பாகம் 1, பாகம் 2 என்று இரண்டு கட்டுரைகளில் இஸ்லாமியர்கள் சொல்வது பொய்யான தகவல் என்பதை நாம் பார்க்கப்போகிறோம். முதல் பாகமாகிய இந்த கட்டுரையில், ஆபிரகாம், லோத்து, யோசேப்பு பற்றி குர்‍ஆன் என்ன சொல்கிறது என்பதையும், இரண்டாம் பாகத்தில் "தாவீது விபச்சாரம் செய்த நிகழ்ச்சிப் பற்றி" இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை காண்போம், கர்த்தருக்கு சித்தமானால்.

இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1

Islam and the Sins of the Prophets

ஆசிரியர்: Sam Shamoun

தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையை எதிர்மறையான நிலையில் பைபிள் காட்டுகின்றது என்றுச் சொல்லி, முஸ்லீம்கள் அடிக்கடி பைபிளை தாக்குவார்கள். நோவா அதிகமாக திராட்சை ரசத்தை குடித்த நிகழ்ச்சியும், லோத்து தன் மகள்களோடு சயனித்ததும், தாவீது விபச்சாரம் செய்ததும் இன்னுமுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையான இறைவனின் தீர்க்கதரிசிகளின் தரத்தை குறைப்பதாக இருக்கிறது, என்று முஸ்லீம்கள் வாதிக்கிறார்கள். இப்படிப்பட்ட வெட்கப்படக்கூடிய செயல்களுக்கு தீர்க்கதரிசிகள் தூரமானவர்கள் என்று முஸ்லீம்கள் சொல்லுவார்கள். இந்த நிகழ்ச்சிகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு பைபிள் திருத்தப்பட்டது என்று முஸ்லீம்கள் சொல்லுவார்கள்.

இப்படிப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு ஏற்கனவே பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கீழ் கண்ட கட்டுரைகளை பார்க்கவும்.

http://answering-islam.org/Gilchrist/texthistory.html#nine
http://answering-islam.org/Responses/alcohol.html
http://answering-islam.org/BibleCom/gen19-28.html

குர்‍ஆனும் இஸ்லாமிய பாரம்பரிய நூல்களும் தீர்க்கதரிசிகளைப் பற்றிச் சொல்லும் போது அவர்கள் நூறு சதவிகிதம் ப‌ரிசுத்தவான்களாக காட்டாமல் சிறிது குறைவாகவே காட்டுகின்றது என்பதை இந்த கட்டுரையில் உங்களுக்கு காட்டவிரும்புகிறோம். இஸ்லாமிய‌ ஆர‌ம்ப‌ கால‌ நூல்க‌ள் கூட தாவீது செய்த விபச்சார செயலோடு கூட‌ சேர்த்து, இப்ப‌டிப்ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சிக‌ளை அங்கீக‌ரிக்கின்ற‌து என்ப‌தை அறியும் போது இதை ப‌டிக்கின்ற‌ உங்க‌ளுக்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கும்.

1. இஸ்லாமும் ஆபிரகாம் பொய் சொல்லுதலும்:


உதாரணத்திற்கு, குர்‍ஆனும், ஹதீஸ்களும் ஆபிரகாம் பொய் சொன்னார் என்று அங்கீகரிகின்றன.


 

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3358

'இப்ராஹீம்(அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) 'நான் நோயுற்றிருக்கிறேன்" என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும். 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், 'இப்படிச் செய்தது யார்?' என்று கேட்டபோது, 'ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது" என்று கூறியதுமாகும். . (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம்(அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா(அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) 'இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்" என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா(அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா(அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா(அலை) அவர்களிடம்), 'அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்" என்று சொன்னான். உடனே, சாரா(அலை) அவர்கள் அல்லாஹ் விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், 'எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்" என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, 'நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்" என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா(அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா(அலை) அவர்கள், இப்ராஹீம்(அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, 'என்ன நடந்தது?' என்று கேட்டார்கள். அவர், 'அல்லாஹ் நிராகரிப்பாளனின்.. அல்லது தீயவனின்... சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பிவிட்டான். ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார்.

 
 
2. ஆபிரகாம் அல்லாவை சந்தேகித்தார் என்று கூட ஒரு ஹதீஸ் சொல்கிறது:


 

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4694

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

(இறைத்தூதர்) 'லூத்' (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணைகாட்டுவானாக! அன்னார் வலுவான ஓர் ஆதவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். ஒசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க் கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். அல்லாஹ், "நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?' என்று கேட்டபோது அவர்கள், ஆம்; (நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது) ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத்தான் (இறந்ததை உயிர்ப்பித்துக் காட்டும்படி) கேட்டேன்' என்று பதிலளித்தார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 
 
3. நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாத அளவிற்கு குர்‍ஆனால் எதிர்மறையாக சொல்லப்பட்டவர் இன்னொருவர் இருக்கிறார், அவர் தான் யோசேப்பு:


 

குர்‍ஆன் 12:23,24

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக் நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார். (குர்‍ஆன் 12:23)

ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார். (குர்‍ஆன் 12:24)

And she, in whose house he was, asked of him an evil act. She bolted the doors and said: Come! He said: I seek refuge in Allah! Lo! he is my lord, who hath treated me honourably. Lo! wrong-doers never prosper. She verily desired him, and he would have desired her if it had not been that he saw the argument of his Lord. Thus it was, that We might ward off from him evil and lewdness. Lo! he was of Our chosen slaves. (S. 12:23-24 Pickthall)

 
 
"யோசேப்பு அந்த போத்திபாரின் மனைவி மீது விருப்பம் கொண்டே இருப்பார்" என்று குர்‍ஆன் சொல்கிறது, அதாவது, அந்த போத்திபாரின் மனைவியோடு அவர் விபச்சாரம் செய்ய விருப்பம் கொண்டே இருப்பார் என்று சொல்கிறது. ஆனால், பரிசுத்த பைபிள், குர்‍ஆனின் இந்த கருத்தை மறுத்துச் சொல்கிறது, அதாவது, இந்த தீய செயலை செய்ய யோசேப்பு திடமாக மறுத்தார் என்றுச் சொல்கிறது.
 
 

ஆதியாகமம் 39:6-10

ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார். இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.

 
 
4. தன் மகள்களை கற்பழிக்க தீய மக்களிடம் ஒப்புக்கொடுத்த இஸ்லாமிய நபி லோத்து:


லோத்து தன்னிடம் வந்த விருந்தாளிகளை காப்பாற்றவேண்டி, தன் ஊரின் மக்களிடம் தன் மகள்களை ஒப்படைத்துவிடுகிறேன் என்றும், தன் விருந்தாளிகளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுங்கள் என்றும் சொன்னார் என்று குர்‍ஆன், பைபிள் சொல்வது போலவே அப்படியே சொல்லியுள்ளது.
 
 

குர்‍ஆன் 11:77 - 79

நம் தூதர்கள் (வானவர்கள்) லுத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சரங்கியவராக் "இது நெருக்கடி மிக்க நாளாகும்" என்று கூறினார். (11:77)

அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.( 11:78)

(அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள்.(11:79)

And when Our messengers came unto Lot, he was distressed and knew not how to protect them. He said: This is a distressful day. And his people came unto him, running towards him - and before then they used to commit abominations - He said: O my people! Here are my daughters! They are purer for you. Beware of Allah, and degrade me not in (the person of) my guests. Is there not among you any upright man? They said: Well thou knowest that we have no right to thy daughters, and well thou knowest what we want. (S. 11:77-79 Pickthall )

 


 

குர்‍ஆன் 15:67-71

(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள். (15:67) (லூத் வந்தவர்களை நோக்கி;) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;" (15:68) "அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்" என்றும் கூறினார். (15:69) அதற்கவர்கள், "உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?" என்று கேட்டார்கள். (15:70)

அதற்கவர், "இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்" என்று கூறினார். (15:71)

And the people of the city came, rejoicing at the news (of new arrivals). He said: Lo! they are my guests. Affront me not! And keep your duty to Allah, and shame me not! They said; Have we not forbidden you from (entertaining) anyone? He said: Here are my daughters, if ye must be doing (so). (S. 15:67-71 Pickthall)

 
 
தன் பிள்ளைகளின் ஆரோக்கியம், வாழ்க்கை மற்றும் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவது ஒரு தந்தையின் கடமை இல்லையா? அவசரம் ஏற்பட்டால், தன் உயிரையும் கொடுத்து காப்பாற்றுவது ஒரு தந்தையின் கடமையில்லையா? இப்படி இருந்தும், இங்கு லோத்து என்பவர் தன் மகள்களாகிய கன்னிப்பெண்களை தீயமக்கள் கற்பழிக்க ஒப்புக்கொடுப்பதை காண்கிறோம். இதில் ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், இதே கதையை பைபிளும் சொல்கிறது (பார்க்க ஆதியாகமம் 19:1- 9). இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் முஸ்லீம்கள் இந்த கதைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. இந்த கதைப் பற்றி ஏன் முஸ்லீம்கள் மூச்சுவிடுவதில்லை என்பதைப் பற்றிய காரணம் மிகவும் தெளிவாக உள்ளது, அது என்னவென்றால், இதே கதை தங்கள் புத்தகத்திலும் இருப்பதால் தான்! இது நமக்கு எதை காட்டுகிறது என்றால், பைபிளுக்கு எதிராக முஸ்லீம்களின் விமர்சனங்கள் அனைத்தும் புகையால் தங்கள் குர்‍ஆன் நிகழ்ச்சிகளை மறைக்கும் செயல்களுக்குச் சமமாகும். அதாவது பைபிளில் உள்ள அதே நிகழ்ச்சி அல்லது கதை குர்‍ஆனிலும் இருந்தால், அதை எந்த காரணத்தைக் கொண்டும் முஸ்லீம்கள் ஒரு பிரச்சனையாக வெளியே கொண்டுவரமாட்டார்கள்.

இது பரிசுத்த பைபிளைத் தாக்கும் முஸ்லீம்களின் கபடவேஷத்தை அப்படியே காட்டுகிறது. இப்படிப்பட்ட கதைகள் பைபிளில் சொல்லப்பட்டதால், அது இறைவனின் வேதம் இல்லை என்றுச் சொல்லும் அதே முஸ்லீம்கள், அதே கதை குர்‍ஆனில் இருப்பதால், குர்‍ஆன் இறைவனிடமிருந்து வந்த வேதம் என்றுச் சொல்லும் தகுதியை இழக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

 
 
பின் குறிப்பு: குர்‍ஆனை மொழிபெயர்க்கும் போது மொழிபெயர்ப்பாளர்கள், சில வார்த்தைகளை தங்களுக்கு சாதகமாக அடைப்பு குறிக்குள் இடுவார்கள், அது போல, லோத்து சம்மந்தப்பட்ட வசனத்தில் (திருமணம்) என்ற வார்த்தையை இட்டுள்ளார்கள். இதனால், சிலர் "லோத்து" தன் மகள்களை தன் ஊர் மக்களுக்கு திருமணம் செய்துக்கொள்ளும்படித் தான் சொன்னாரே தவிர, வேறு வகையில் அல்ல என்றுச் சொல்வார்கள். இப்படி நம் தமிழ் முஸ்லீம்கள் இந்த என் மொழிபெயர்ப்பு கட்டுரைக்கு பதில் எழுதினால், இதற்கான பதிலை நான் எழுதுவேன்.

உண்மையிலேயே லோத்து இப்படி சொன்னாரா? அவ்வூர் மக்களின் குண நலன்கள் என்ன என்று குர்‍ஆன் சொல்கிறது? ஒரு நபி இப்படி தன் இரண்டு மகள்களை, தீய ஊர் மக்கள் திருமணம் செய்துக்கொள்ள கொடுப்பேன் என்றுச் சொல்வது சரியானதா? திருமணம் என்ற பொருள் படும்படி அந்த நிகழ்ச்சி நடந்ததா? அவ்வூர் மக்களின் மனநிலை "அந்த சூழ்நிலையில்" என்னவாக இருந்தது என்று குர்‍ஆன் சொல்கிறது போன்றவற்றை நாம் சிந்திப்போம். லோத்து ஒரு நீதிமான் என்று தான் பைபிள் சொல்கிறது, ஆனால், குர்‍ஆன் அவரை ஒரு "தீர்க்கதரிசி" என்றுச் சொல்கிறது, இதைப்பற்றியும் சிந்திப்போம்.

May 14, 2008

தீவிரவாதிகளே உங்கள் இருதயத்தை கல்லாக்கியது யார்????

 இந்த படங்களை பாருங்கள். பிங் சிட்டி என்றைழைக்கப்படும் இராஜஸ்தானின் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 க்கும் மேல் உயர்ந்துவிட்டது உடலுருப்புக்களை இழந்து முடமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கையோ ஏராளம். ஏன் தீவிரவாதிகளே உங்களுக்கு மனிதநேயமே இல்லையா. அப்பாவி மக்களின் உயிரை எடுத்துத்தான் உங்களின் நோக்கத்தை நிறைவேற்றிகொள்ளவேண்டுமா.. உங்க‌ளுக்கு இருத‌ய‌ம் என்று ஒன்று உண்டா.. உங்க‌ளுக்கு கூட‌பொற‌ந்த‌ ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ள் யாரும் இல்லையா... இர‌த்த‌தின் ஒரு துளியை பார்த்தாலே சில‌ர் ம‌ய‌ங்கி விழுந்து விடுவ‌ர். ஆனால் நீங்க‌ளோ இர‌த்ததிலே ம‌னித‌னை குளிப்பாட்டி விடுகீறீர்க‌ளே... யார் உங்க‌ள் இருத‌ய‌த்தை க‌ல்லாக்கிய‌து...

  

 
 
 
 
 
 
 


 

 
 

இது அந்த குண்டுவெடிப்புக்கு காரணனமானவர் என்று சந்தேகப்படுவர்

Jaipur blasts suspect

May 13, 2008

விளம்பரத்தின் கடைசியில் * Conditions Apply என்று வருமே அதுமாதிரிதான்....

 ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்''   *

*    Conditions Apply





அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply
(* நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

முன்னுரை: அபூ முஹை என்ற இஸ்லாமிய சகோதரர், நான் எழுதிய "Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி?" கட்டுரைக்கு பதில் அளித்துள்ளார்( http://abumuhai.blogspot.com/2008/04/1.html) . இவரது கட்டுரைக்கு என் கருத்துக்களை இந்த கட்டுரையில் காணலாம்.
 
----------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:
மதம் மாறினால் மரண தண்டனை-1

ஒரு முஸ்லிம் மதம் மாறினால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற கருத்தில் பிறமத நண்பர்கள் சமீபமாக தங்களின் விமர்சனத்தை எழுதி வருகிறார்கள். உலகளவில் 80ஆயிரம் முஸ்லிம்கள் மதம் மாறியுள்ள தகவலையும் முன்பு எழுதியுள்ளனர். எங்கு முஸ்லிம்கள் மதம் மாறினாலும் அதைப்பதிவு செய்ய தாமதப்பதில்லை. அந்த அளவுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மீது பற்றுள்ளவர்கள்.
-----------------------

ஈஸா குர்‍ஆன்:
 
1. யாருடைய கட்டுரைக்கு பதில் தருகிறீர்கள் அபூ முஹை அவர்களே?

பொதுவாக, இஸ்லாமியர்களுக்கென்று ஒரு ஸ்டைல் உண்டு. அதாவது:

a) ஆயிரமாயிரமான கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று பொய்யை மூட்டை மூட்டையாய் அவிழ்த்துவிடுவார்கள், எங்கே ஆதாரம் என்றுக் கேட்டால், பதில் இருக்காது. அவர்கள் பல கட்டுரைகள் எழுதுவார்கள், ஆனால் நாம் நம் கருத்தை சொல்வதற்கு ஈமெயில் ஐடியை தரமாட்டார்கள் சிலர், நாம் பின்னூட்டம்  அளிப்பதற்கும் வசதி இருக்காது. (உதார‌ண‌ம்: நேச‌முட‌ன் த‌ள‌ம்)

b) "கிறிஸ்தவ கட்டுரைகளுக்கு பதில்" என்றுச் சொல்வார்கள், ஆனால், எந்த கட்டுரைக்கு பதில் தருகிறார்கள்? அந்த கட்டுரையின் தொடுப்பு என்ன? போன்றவற்றை தங்கள் கட்டுரைகளில் வெளிப்படுத்தமாட்டார்கள்(எங்கள் கட்டுரையை இஸ்லாமியர்கள் படித்தால் எங்கே இஸ்லாமைப் பற்றிய சந்தேகம் வந்துவிடுமோ என்ற பயமோ என்னவோ எனக்குத் தெரியாது).

இந்த இரண்டாம் வகையைச் சார்ந்தவர் தான் "அபூ முஹை" அவர்களும்(இந்த கட்டுரையை பொருத்தவரையில்). கிறிஸ்தவர்களின் கட்டுரைக்கு பதில் அல்லது விமர்சனம் என்று எழுதினார்களே தவிர, என் கட்டுரையின் தொடுப்பை கொடுக்கவில்லை. ஏன் அபூ முஹை அவர்களே?  எங்கள் கட்டுரையை நீங்கள் எந்த தளத்தில்  படித்தீர்கள் என்று ஒரு தொடுப்பை கொடுத்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா. மட்டுமல்ல, ஈஸா குர்‍ஆன் தளம் மூலமாக எழுதப்படும் கட்டுரைகள், தமிழ் கிறிஸ்டியன்ஸ், உண்மையடியான், கிறிஸ்து நேசன் போன்ற தளங்களில் பதிக்கப்படுகிறது. நீங்கள் பதில் சொல்லவந்த கட்டுரையின் தொடுப்பை குறைந்தபட்சம், ஒரு தளத்தின் தொடுப்பையாவது கொடுத்து இருக்கலாம். ஏன் நீங்கள் அதை உங்கள் பதிலில் பதிக்கவில்லை என்ற காரணத்தை தெரிந்துக்கொள்ளலாமா?

சரி போகட்டும், இனி நீங்கள் எழுதப்போகும் பதிலுக்காவது, கிறிஸ்தவ கட்டுரையின் தொடுப்பை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.


---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

மதம் மாறிய 80 ஆயிரம் முஸ்லிம்களுக்கும் மரண தண்டைனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதா? என்று நாம் கேட்க மாட்டோம். சமீபத்தில் பழனியில் மதம் மாறிய ராசிமுஹம்மது, நாசர்ஹஸன் இரு முஸ்லிம்கள் மதம் மாறியும், அவர்கள் தண்டனை பெறவில்லை என்பதை அனைவரும் அறிவோம்.
---------------

ஈஸா குர்‍ஆன்

பழனியில் இஸ்லாமை விட்டு வெளியேறினாலும் தண்டனை பெறவில்லை என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறீர்கள். உங்களிடம் நான் ஒரு சில கேள்வியை கேட்கட்டும்:

A) பழனி என்ன ஆப்கனிஸ்தானில் உள்ளதா, அல்லது எகிப்தில் உள்ளதா சொல்லுங்கள். இந்தியாவில் உள்ளது என்பதை மறக்கவேண்டாம். இஸ்லாமிய நாட்டில் பழனி இல்லை, ஜனநாயக இந்தியாவில் உள்ளது.என்னவோ, பழனி இஸ்லாமிய நாட்டில் உள்ளது போலவும், ஷரியா சட்டம் நடைபெறும் நாட்டில் உள்ளது போலவும், இருந்தாலும் மரண தண்டனை கொடுக்காதது போலவும் எழுதுகிறீர்களே.

B) மதமாற்றத்திற்கு தண்டனை கொடுப்பதற்கு? இந்தியாவில் ஷரியா சட்டம் இல்லையே! எனவே, இந்தியாவில் நாங்கள் யாருக்கும் மரண தண்டனையை கொடுப்பதில்லை என்றுச் சொல்லி நீங்கள் பெருமைப்படுவதற்கு வாய்ப்பு இல்லை.


---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

கொலைக்குக் கொலை எனவும் விபச்சாரத்துக்கும் இஸ்லாம் மரண தண்டனை விதிக்கிறது. இம்மரண தண்டனை அவ்வளவாக விமர்சிக்கப்படுவதில்லை.
ஆனால், மதம் மாறினால் மரண தண்டனை என்பதை ஆஹா, ஓஹோவென அபாரமாக விமர்சிக்கின்றனர். ஒருவேளை, மதம் மாறினால் மரண தண்டனை விதியைக் குறித்து அறிந்திராத முஸ்லிம்களை எச்சரிக்கும் நல்லெண்ணமாக இருக்கலாம், இருக்கட்டும்.
---------------

ஈஸா குர்‍ஆன்

அதாவது, "மதம் மாறினால் இஸ்லாமில் மரண தண்டனை உண்டு என்பதை அறியாத முஸ்லீம்கள்" என்று நீங்கள் சொல்வதிலிருந்து முஸ்லீம்களுக்கு உங்களைப் போன்ற அறிஞர்கள், இமாம்கள்  எதை எதை சொல்கிறீர்கள் என்று இப்போது தான் தெரிகிறது.

இப்பொழுதாவது ஒப்புக்கொண்டீர்களே, முஸ்லீம்கள் கூட "கிறிஸ்தவர்களின் கட்டுரைகள் மூலமாக இஸ்லாமை அறிந்துக்கொள்கிறார்கள்" என்று.

---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

இதில் இஸ்லாத்தின் கருத்து என்ன? என்பதை தொடர்ந்து எழுதுமுன், தர்க்க ரீதியாக இவர்கள் சொல்லும் கருத்து சரியா? என்பதைப் பார்ப்போம்.

கணினியில் மென் பொருள், கெட்டிப் பொருள் தரவிறக்கம் செய்யுமுன், அதை உருவாக்கியவர்கள் Agree - ஒப்புக்கொள், இணங்கு என நிபந்தனை விதிப்பார்கள். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே பொருளை பதிவிறக்கம் செய்ய முடியும். பெரும்பான்மையினர் நிபந்தனையை வாசிக்காமலேயே ஒப்புக்கொள்கிறேன் - Agree என்று சொடுக்கிவிடுவர். இதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்றாலும் நாளை பிரச்சனை என்று வந்தால் சிக்கலை ஏற்படுத்தும்.

வலைப்பூ திரட்டிகள், மன்றங்கள், இணையங்கள் இவைகளில் சேரும் போது அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை படிக்காமல் சம்மதம் தெரிவித்து, சேர்ந்தபின் நிபந்தனை என்னவென்று தெரியாமலேயே அதை மீற நேர்ந்தால் அங்கு வல்லு வழக்கு ஏற்படுவதை அனுபவமாக தெரிந்து கொள்கிறோம்.

இந்த அனுபவம் கணினித் துறையில் மட்டுமில்லை, எல்லாத் துறைகளிலும் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் Agree - ஒப்புக்கொண்டு சேர்ந்தபின் விதிகளை மீறுவதால் அங்கு பணியாற்றுபவர்கள் தற்காலிக நீக்கம், நிரந்தர நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது ராணுவம், நீதி, காவல், அரசு, அரசியல், தொழில் மற்றும் தனியார் துறைகளிலும் உள்ள அனுபவம்.
----------------

ஈஸா குர்‍ஆன்

ஆனால், இஸ்லாமைப் பற்றி முழுவதும் தெரிந்துக் கொள்ளாமல் இஸ்லாமியராக மாறுபவரின் "குடி" நிச்சயமாக முழ்கும். இதற்கு முழு பொறுப்பு இஸ்லாமிய அறிஞர்கள் புதிதாக வரும் முஸ்லீம்களுக்கு இவைகளைப்பற்றி சொல்லாமல், மறைப்பது தான்.

இராணுவத்தில் பின்பற்றவேண்டிய சட்டத்தையும், மீறினால் கிடைக்கும் தண்டனைகளையும் தெரிந்துக்கொள்ளாமல், யாரும் வேலையில் சேரமாட்டார்கள் என்பது என் கருத்து. குறைந்த பட்சம், மிகவும் கொடுமையான தண்டனையுள்ள நிபந்தனைகளையாவது ஒரு இராணுவ வீரன் தெரிந்துக்கொண்டுத் தான் வேலையில் சேருவான். கணினியில் நாம் படிக்காமல் "Agree" என்ற பொத்தானை அழுத்துவது போல வாழ்க்கையில் எல்லா நிலையிலும் செய்யமுடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதே போலத்தான், இஸ்லாமில் சேருவது என்பது கணினியில் ஒரு மென்பொருளை பதிக்கும் வேலை போன்ற ஒரு சுலபமான வேலையில்லை, ஒருவனின் முழுவாழ்க்கையையும் அது பாதிக்கும் அல்லது அழிக்கும்.

இன்னொரு உதாரணத்தைச் சொல்கிறேன், நாம் மருந்துகள் வாங்கும் போது, அந்த மருந்து மாத்திரைகளின் முடிவு தேதியை (Expiry Date)  பார்க்கிறோம். ஒரு வேளை அந்த மருந்தின் முடிவு தேதி (Expiry Date) முடிந்துவிட்டு இருந்தால், அந்த மருந்தை மாற்றித்தரும் படி கடைக்காரரிடம் கேட்கிறோம்.  ஆனால், அதே போல, அதிகமாக பாதிப்பு இல்லாத பொருட்களை வாங்கும் போது அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நாம் முடிவு தேதியை(Expiry Date)  பார்ப்பதில்லை.   உதாரணத்திற்கு, சோப்புக்கள், ஷாம்புக்கள் போன்றவைகளுக்கு பெரும்பான்மையாக மக்கள் முடிவு தேதியை மருந்து மாத்திரைகள் வாங்கும் போது பார்க்கும் வண்ணம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. (வாங்கும் எல்லா பொருட்களுக்கும் முடிவு தேதி பார்ப்பவர்களும் உண்டு)

எனவே, கண்களை மூடிக்கொண்டு நிபந்தனைகளை படிக்காமல் ஒரு சில "Agree" பொத்தானை அழுத்தலாம், ஆனால், உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் "இஸ்லாம்" என்ற பொத்தானை படிக்காமல், கேள்வி கேட்டு தெரிந்துக்கொள்ளாமல் அழுத்துவது என்பது சரியானது அல்ல என்பது என் கருத்து.


---------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

இனி விஷயத்துக்கு வருவோம், ஒரு பிறமத நண்பர் இவ்வாறு எழுதுகிறார்...


இனி யாராவது முஸ்லீமாக மாறினால், ... நீங்கள் ஒரு ஸ்டாம்ப் காகிதத்தில்(Stamp Paper):

"ஜான் ஜோசப் என்பவரின் மகனாகிய‌ மத்தேயு என்னும் பெயர் கொண்ட‌ நான் இன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறேன், பின்பு ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேறினால், என் பழைய மதத்தை பரப்ப உதவி செய்தால், என் மனைவி விதவையாகும்படியாக‌, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகும் படியாக என் பெற்றோருக்கு உதவி செய்வார் யாரும் இல்லாமல் போகும் படியாக, எல்லாரையும் அம்போ என்று விட்டு விட்டு, என் இந்த நம்பிக்கைத்துரோக குற்றத்திற்காக முதல் தண்டனையாக‌ நான் மரண தண்டனையை இஸ்லாமிய சட்டம் படி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், அதே நேரத்தில் இதே குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையாக‌ அல்லா என்னை நரக நெருப்பில் வாதிக்கவும் எனக்கு சம்மதமே"

இப்படிக்கு,

முஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு

சாட்சி 1:

சாட்சி 2:

என்று எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டு இஸ்லாமில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வீர்களானால், இனி யாராவது "ஏன் இஸ்லாம் அவரை கொன்றது?" என்று கேள்வி கேட்டால், அந்த நபர் கையெழுத்து போட்ட காகிகத்தை காட்டலாம், உங்களுக்கு இஸ்லாமின் சட்டத்தின் தண்டனையை நியாயப்படுத்த‌ காபிர்களின் சட்டத்தில் உள்ள தண்டனையை எடுத்துக்காட்டாக காட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.

பிறமத நண்பரின் மேற்கண்ட விமர்சனம் புத்திசாலித்தனமாகத் தோன்றினாலும், ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்க அறிவுரை சொல்வது கவ்வைக்குதவாத வாதம். ஒருவன் எந்த மதத்தைத் தழுவினாலும், மதத்தில் இணையும் போதே அம்மதத்தின் விதிகளை Agree - மனப்பூர்வமாக ஒப்புக்கொண்ட பின்பே அம்மதத்தைத் தழுவுகிறான்.
-----------------------
 

ஈஸா குர்‍ஆன்

இஸ்லாம் மதத்தில் என்ன விதிகள் உள்ளது என்று 40-50 வருடங்கள் இஸ்லாமியர்களாக இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களே புரியாமல் தலை பீய்த்துக்கொண்டு இருக்கும் போது, எப்படி சகோதரரே ஒரு புதிய முஸ்லீம் அனைத்து விதிகளையும் தெரிந்துக்கொண்டு தான் இஸ்லாமியர் ஆகிறார் என்றுச் சொல்கிறீர்கள்.  நீங்கள் சொல்வதை செய்யவேண்டுமானால், முஸ்லீமாக மாறுபவனுக்கு இஸ்லாமைப் பற்றிய படிப்பை சில‌ ஆண்டுகள் கற்றுக்கொடுத்துத்தான் முஸ்லீமாக மாற்றவேண்டும், அப்படி செய்ய உங்களுக்கு சம்மதமா?

(  ஒருவேளை, கிறிஸ்தவனாக மாறுபவனுக்கு இப்படித் தான் சில ஆண்டுகள் பைபிள் படிப்பை சொல்லிக்கொடுத்த பின்பு தான் ஒருவன் சேருகிறானா? என்று சிலர் கேட்கலாம், இதற்கு பதில் சுலபம், அதாவது ஆபத்தில்லாத  பொருட்களை வாங்கும் போது பெரும்பான்மையாக‌ யாரும் முடிவு தேதியை(Expiry Date) பார்ப்பதில்லை, ஆனால், உயிருக்கு ஆபத்துள்ள மருந்தை வாங்கும் போது நிச்சயமாக முடிவு தேதியை(Expiry Date) பார்ப்பார்கள்.

அது போல, கிறிஸ்தவம் என்ற மென்பொருளை நம் கணினியில் பதிக்க,  படிக்காமல் "Agree" பொத்தானை அழுத்தலாம், ஒரு வேளை நமக்கு இந்த மென்பொருள் எதிர் காலத்தில் தேவையில்லை, இதனால் பிரச்சனை என்று நினைக்கும் போது, அந்த மென் பொருளை நம் கணினியிலிருந்து நீக்கிவிடலாம். ஆனால், இஸ்லாம் என்ற மென்பொருள் அப்படி இல்லை, நிபந்தனைகளை தெரிந்துக்கொள்ளாமல், படிக்காமல் "Agree" பொத்தானை அழுத்தினால், அவ்வளவு தான் உங்கள் கதை, பிற்காலத்தில் இந்த மென்பொருளினால் நமக்கு பிரச்சனை என்று சொல்லி, அதை நீக்க முடியாது, அப்படி நீக்க முயன்றால், மரணம் நிச்சயம். இப்போது புரிகிறதா? ஏன் சில நேரங்களில் நிபந்தனைகளை தவறாமல் படிக்கவேண்டும் என்பது.)


நீங்கள் சொல்வது உண்மையானால், இந்தியாவிலும் அதாவது இஸ்லாமிய சட்டம் இல்லாமல், ஜனநாயக சட்டம் ஆட்சி செய்யும் நாட்டிலும், ஒரு கிறிஸ்தவன் அல்லது இந்து, முஸ்லீமாக மாறும் போதும், நீங்கள் சொன்னது போல, "நான் வரும் காலங்களில் இஸ்லாமிளிலிருந்து வெளியெறினால், என்னை கொல்ல நான் உங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்" என்று சொல்லித்தான் இஸ்லாமியனாக மாறுகிறானா? நீங்கள் சொல்வதைப்பார்த்தால், இந்தியாவில் முஸ்லீமாக மாறுபவன் தன் மரணத்தை தானே நிர்ணயித்து மாறுகிறான் என்று சொல்லவருகிறீர்கள்.

இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரான குற்றமில்லையா? மாறுபவனையும், மாற்றுபவரையும் அரசாங்கம் கைது செய்யாதா?

-----------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவும் போது ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்'' என்று உறுதிமொழி எடுத்த பின்பே இஸ்லாத்தில் இணைகின்றனர். இங்கு இஸ்லாத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்படுகிறேன் என Agree - ஒப்புதல் தெரிவித்து, இஸ்லாத்தின் இணைந்தபின் மதம் மாறினால் மரண தண்டனை என்ற விதியையும் ஏற்றுக்கொண்டே இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். பிறகு எதற்கு ஸ்டாம்ப் பேப்பர்?
-----------------------

அதாவது, இந்த இரண்டு வரிகளைச் சொன்னால் போதும், ஒருவன் தன்னை இஸ்லாம் கொல்ல கூட அனுமதி கொடுத்ததாக அர்த்தம் என்று சொல்லவருகிறீர்கள். அடேங்கப்பா! என்னே அர்த்தம்!

நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால், ஒரு நிறுவனம் கீழ் கண்ட நிபந்தனைகளை தங்கள் மென்பொருளை தங்கள் கணினியில் பதிக்கும்போது ஒப்புக்கொண்டு பதிக்கவும் என்று சொல்லியுள்ளது என்று வைத்துக்கொள்வோம்.

எங்கள் மென்பொருளை உங்கள் கணினியில் பதிக்க நிபந்தனைகள் 1 லிருந்து 10 வரை நீங்கள் ஒப்புக்கொண்டு பதியுங்கள்.   நிபந்தனைகள் 1 லிருந்து 10..........

இந்த மென்பொருளை ஒருவர் தன் கணினியில் பதித்துக்கொள்கிறார். சில நாட்கள் கழித்து தன் கணினியிலிருந்து நீக்கி விடுகிறார். இவர் நீக்கி விட்ட மறுநாளில் இவருக்கு அந்த மென்பொருள் தயாரித்த நிறுவனத்திடமிருந்து ஒரு மெயில் கீழ் கண்ட செய்தியோடு வருகிறது:

"நீங்கள் எங்கள் மென்பொருளை நீக்கிவிட்டதால், உங்கள் கணினி இனி எங்களுக்குச் சொந்தம், எனவே, எங்கள் நிறுவனத்திடம் ஒரு வாரத்திற்குள் உங்கள் கணினியை ஒப்படைத்துவிடுங்கள்,  அப்படி ஒப்படைக்கவில்லையானால், உங்கள் மீது வழக்கு தொடரப்படும்"


இந்த செய்தியை படித்தவுடன், அந்த நபர் மிரண்டுப்போகிறார், உடனே, அந்த மென்பொருளின் 10 நிபந்தனைகளை எடுத்து படிக்கிறார், ஆனால், கணினி அந்த நிறுவனத்திற்கு சொந்தமாகும் என்பதைப்பற்றிய எந்த நிபந்தனையும்  இல்லை, எனவே, அந்த நிறுவனத்திற்கு மெயில் அனுப்புகிறார், இல்லாத நிபந்தனையை எப்படி நான் பின்பற்றும்படி கேட்கிறீர்கள் என்று கேட்கிறார். இந்த மெயிலை அந்த நிறுவனம் படித்துவிட்டு, "எங்கள் மற்ற நிபந்தனைகளை எப்போது நீங்கள் அங்கீகரித்தீர்களோ, அப்போதே நீங்கள் இந்த நிபந்தனைக்கு அங்கீகாரம் அளித்தீர்கள்  என்று பொருள்" என்று மறுபடியும் பதில் அனுப்புகிறது.

இந்த நபர் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்? அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர்வீர்கள், எழுத்துவடிவில் இல்லாத நிபந்தனையை, எனக்கு சொல்லாத நிபந்தனையை மீறியதால், நான் எப்படி தண்டிக்கப்படுவேன் என்று கேள்வி எழுப்புவீர்கள்.

ஆனால், நம்முடைய இஸ்லாமிய சகோதரர் சொல்கிறார்: " அல்லவைத் தவிர யாரும் இறைவன் இல்லை, முகமது அல்லாவின் தூதர்" என்று சொன்னாலே போதுமாம், அந்த புதிய முஸ்லீமுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு! என்னே சட்டங்கள், கொள்கைகள். இதற்கு யாராவது உடன்படுவார்களா! இது நடைமுறைக்கு ஒத்துவருமா? சிந்தியுங்கள், எனக்கும் சிறிது விளக்குங்கள்.


உங்கள் இந்த வரிகள் மூலமாக:

1. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது சரியானது, அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறினால், சங்கு ஊதவேண்டியது தான்.அப்படித்தானே, (இப்படிப்பட்ட மதம் மனிதனுக்கு தேவையா?)

2. இதை நீங்கள் இஸ்லாமிய நாட்டில் அல்லாமல், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலும் பின்பற்றுகிறீர்களா? இல்லையா? அப்படி ஜனநாயக நாட்டில் பின்பற்ற முடியாமல் போனால், அது அல்லாவிற்கு கோபமூட்டாதா?  அல்லாவின் கட்டளையை நிறைவேற்ற முடியமாட்டேங்கிறதே என்றுச் சொல்லி நீங்கள் வேதனைப்படுவீர்களே! இந்தியாவில் இப்படி இஸ்லாமை விட்டு வெளியேறினால், உங்களின் அதே சட்டத்தின் படி அரசாங்கத்திற்கு தெரியாமல், வேறு விதத்தில் அவரது மரணத்திற்கு பாதிப்பு உண்டாக்குவீர்களா? அப்படியும் இல்லையானால், "இஸ்லாமிய நாடுகளின் இஸ்லாம்", "ஜனநாயக நாடுகளின் இஸ்லாம்" என்று இரண்டு இஸ்லாமிய சட்டங்கள் உண்டா?

3. உங்களின் இந்த வரிகளின்படி, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனைக் கொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது என்று இஸ்லாமியர் அல்லாத இந்தியர்கள் எல்லாரும் முடிவு செய்துக்கொள்ளலாமா?

உங்களின் வார்த்தைகளில் முரண்பாடு உள்ளது போல தோன்றுகிறதே. அதாவது, இஸ்லாமில் சேரும் போது, மரணத்திற்கும் டிக்கெட் வாங்கிக்கொண்டு தான் சேருகிறார் என்றுச் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் உலகத்தில் இஸ்லாமை விட்டு வெளியேறும் ஆயிரமாயிரமான மக்களை இஸ்லாம் கொல்கிறதா என்று கேட்கிறீர்கள். இது முரண்பட்ட கருத்தாக உள்ளதே.

----------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

ஸ்டாம்ப் பேப்பர் பிற மதத்தைத் தழுவும் பிற மத நண்பர்களுக்கு வேண்டுமானால் தேவைப்படலாம். இஸ்லாத்துக்கு அவசியமில்லை. முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தில் நுழையும்போதே மதம் மாறினால் மரண தண்டனை என்ற பிரமாணத்தையும் ஏற்று மதம் மாறுகின்றனர். என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளட்டும்.
------------------------
 

அதாவது, இந்த முனியாண்டியும், மத்தேயுவும், வாயாலேயே தங்கள் வாழ்க்கையை அழிக்க முடிவு செய்து தான் முஸ்லீமாக மாறுகிறார்களா! என்னே மதமய்யா? ரொம்ப நன்னாயிருக்கு. அப்போ, அந்த ஸ்டாம்ப் பேப்பர் பணமும் மிச்சம் தான்.

இதுவரையில் நாம் பார்த்த விவரங்களின் படி, இஸ்லாமுக்குத் தான் ஸ்டாம்ப் பேப்பர் தேவை, கிறிஸ்தவத்திற்கு தேவையில்லை.  இஸ்லாமுக்கு ஸ்டாம்ப் பேப்பர் தேவையில்லை என்பவர்கள், என் அறியாமையை போக்கும்படி மேலும் எனக்கு விவரியுங்கள்.

-----------------------------
அபூ முஹை அவர்கள் எழுதியது:

அடுத்து, மதம் மாறி மரண தண்டனை விதிக்கப்பட்டவனின் மனைவியின் நிலை என்ன? என்று மிகவும் அக்கறையோடு ஆலோசனை எழுதியுள்ளனர். முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவுமுன்பு இருவர் மனைவியின் நிலை என்ன? என்பதற்கான தீர்வையும் இவர்கள் எழுதியிருக்கலாம். எழுதியிருந்தால் சார்பற்றதாக இருந்திருக்கும்.

பரவாயில்லை, அடுத்த பதிவில் அது குறித்து நாம் விளக்குவோம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை
-------------------------
 

 நீங்கள் சொல்வதைப் பார்த்தால், முனியாண்டி, மற்றும் மத்தேயு இருவரின் மனைவிகளின் வாழ்க்கை, தங்கள் கணவர்கள் கூட இருக்கும் போது இருந்ததை விட, கணவர்கள் இஸ்லாமினால் கொலை செய்யப்பட்ட பிறகு, தாங்கள் விதவைகள் ஆனபிறகு இன்னும் சிறப்பாகவும், மேன்மையுள்ளதாகவும், அழகானதாகவும் எல்லாரும் கண்டு மெச்சிக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என்று சொல்வது போல உள்ளது.

ஒரு குடும்ப தலைவன் ஒரு மதத்தால் கொலை செய்யப்பட்ட பிறகு அக்குடும்பத்தின் வாழ்வு செழிப்பானதாக இருக்கும் என்றுச் சொல்லவருகிறீர்கள். இது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.  முனியாண்டியும், மத்தேயுவும் இஸ்லாத்தை தழுவும் முன்பு, அப்பெண்களின் நிலை மிகவும் மோசமானதாக இருந்திருக்கும் என்று சொல்கிறீர்கள். 

உங்களின் அடுத்த பதிலுக்காக, இந்த முனியாண்டி, மத்தேயுவின் மனைவிகளின் வாழ்க்கையில் என்ன செழிப்பு வந்திருக்கும், என்று நீங்கள் எழுதுவதை படிக்க எனக்கு மிகவும் ஆவளாக உள்ளது. சீக்கிரமாக எழுதவும்.

முடிவுரையாக நான் சொல்லிக்கொள்வது:

இஸ்லாம் என்ற மென்பொருளை நம் கணினியில் பதிக்கும் முன்பு, நீங்கள் முதலாவது எல்லா நிபந்தனைகளையும் படியுங்கள், சில நிபந்தனைகளை அந்த மென்பொருளின் நிபந்தனை பட்டியலில் இடம் பெற்று இருக்காது, இருந்தாலும், அதை மீறினால், தண்டிக்கப்படுவீர்கள்(வேடிக்கையாக இருக்கே!). இது எப்படி நியாயமாக ஆகும் என்று கேட்கக்கூடாது,  அல்லாவையும், முகமதுவையும் உங்கள் வாயினால் அறிக்கையிட்டால் போதும், உங்களை அல்லாவிடம் அனுப்பவும் அந்த ஒரு நிபந்தனைக்கு அதிகாரம் உண்டு.


 ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்''   *

*    Conditions Apply


சரி, இனியாவது இஸ்லாமியர்கள் இப்படி * Conditions Apply என்று எழுதினாலாவது நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் இதையாவது செய்யுங்கள்.

( Conditions Apply என்றால் என்ன என்று எல்லாருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். பெரும்பான்மையான நிறுவனங்கள் இப்படி வெளி உலகை கவரவேண்டுமென்பதற்காக‌ "கவர்ச்சி கரமான வார்த்தைகளை எழுதிவிட்டு, விளம்பரத்தின் கடைசியில் * Conditions Apply என்று எழுதியிருப்பார்கள்.).
 
 

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம் - http://www.answering-islam.org/tamil.html

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம்

www.answering-islam.org/tamil.html

கர்த்தரின் கிருபையால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது (www.answering-islam.org/tamil.html)

ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஓர் அறிமுகம்:

முஸ்லீம்கள் கேட்கும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சரியான விதத்தில் பதில்கள், மறுப்புக்கள் தரும் தளம், ஆன்சரிங் இஸ்லாம் தளமாகும். முஸ்லீம்களுக்கு பதில் தருவதில் இத்தளம் முதலிடம் வகிக்கிறது என்றுச் சொன்னால், அது மிகையல்ல.

இந்த தளத்தில் நான் பல ஆண்டுகளாக கட்டுரைகளை படித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறேன். நான் தமிழில் "ஈஸா குர்‍ஆன்" தளம் ஆரம்பிக்க என்னை உட்சாகப்படுத்தியது இந்த தளத்தின் கட்டுரைகள் தான். இத்தளத்தில் கட்டுரைகள் சரியான ஆதாரங்களோடும், வசனங்களோடும் ஆராய்ச்சி செய்து எழுதப்படுகின்றன. இத்தளத்தின் ஆசிரியர்களோடு நான் தொடர்பு கொண்டு தங்கள் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டபோது, அவர்கள் அனுமதி அளித்தார்கள். சில கட்டுரைகளை நான் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளேன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, இத்தளத்தின் நிர்வாகிக்கு மெயில் அனுப்பும்படி எனக்கு ஒரு ஆசிரியர் அறிவுரை கூறியபோது, அப்படியே நானும் அனுப்பினேன். இத்தளத்தின் நிர்வாகி தன் தளத்தின் எல்லா கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி அளித்ததுமல்லாமல், தங்கள் தளத்தில் தமிழில் ஒரு பகுதியை ஆரம்பிக்க விருப்பமா என்று கேட்டார்? (கரும்பு திண்ண கூலி யாராவது கேட்பார்களா? ) நான் உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன். கடந்த மூன்று மாதங்களாக நான் இதுவரை மொழிபெயர்த்துள்ள அவர்களது கட்டுரைகளை அவர்கள் தளத்தில் பதிக்க முயற்சி எடுத்துக்கொண்டு இருந்தேன். நேற்றோடு அந்த வேலை முடிந்துவிட்டது, இன்று 11ம் நாள் மே மாதம் 2008 நாளன்று "ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் - www.answering-islam.org/tamil.html" ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகமனைத்து முஸ்லீம் அறிஞர்களுக்கு பதில் அளிக்கும் தளங்களில் முதலிடம் வகிக்கும் தளத்தில், தமிழ் பகுதியை ஆரம்பிக்க கர்த்தர் கொடுத்த கிருபைக்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் முகப்புப் பக்கம்:
( Home page of www.answering-islam.org/tamil)



Source : http://www.geocities.com/isa_koran/images/AITamilHome.JPG

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் பகுதியில் கீழ் கண்ட கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
(Source : http://www.answering-islam.org/tamil/newarticles.html )

தேதி: 11th May 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்படுகிறது. எங்கள் தமிழ் பகுதியை கீழ் கண்ட கட்டுரைகளோடு ஆரம்பிக்கிறோம்.

* குர்ஆனை அல்லா பாதுகாத்தான் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களின் வாதம் சரியானது அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்கிறது இந்த கட்டுரை: குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா?

* முகமதுவை ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க முஸ்லீம்கள் பயன்படுத்தும் உபாகமம் 18ம் அதிகாரத்தைக் கொண்டே "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்று நிருபிக்கும் ஆதாரபூர்வமான கட்டுரை இது: உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet ) .

* இயேசுவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்து அல்லா செய்த குளறுபடியையும், அல்லாவின் அறியாமையையும் கேள்விக்குறியாக்கும் கட்டுரை: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (Deceptive God, Incompetent Messiah and Allah Starts Christianity ... by Accident).

* மாற்கு 16ம் அதிகாரத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கு சவாலை முன்வைத்த, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரை : மாற்கு 16ம் அதிகாரத்தின் சவால்.

* முகமது செய்த கொலைகள் பற்றிய ஒரு சிறு ஆய்வுக்கட்டுரை: முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)

* முகமது எப்படி மக்களை கொடுமைப்படுத்த அனுமதித்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரை: முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

* பைபிளையும் குர்‍ஆனையும் எப்படி ஒப்பிடுவது? பைபிளோடு குர்‍ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியா? போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதில் அளிக்கிறது: பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

* பைபிள் திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டும் முஸ்லீம்கள், தங்கள் வாதங்களுக்கு ஆதாரங்களை முன்வைக்க முடியுமா? படியுங்கள்: முஸ்லீம்களின் யார்-எப்போது-எங்கே-எப்படி-என்ன-ஏன் என்ற பல பிரச்சனைகள்.

© Answering Islam, 1999 - 2008. All rights reserved.

Answering Islam Tamil Site :http://www.answering-islam.org/tamil