அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 31, 2012

கடையநல்லூரில் ஒருவருக்கு பாத்வா?.. எதற்கு??



கடையநல்லூரில் ஒரு சகோதரர் இஸ்லாமுக்கு எதிரான ஒரு கட்டுரையை தனது பேஸ் புத்தகத்தில் பரிமாற்றம் செய்ததற்காக அவருக்கு எதிராக பாத்வா அறிவிக்க பட்டுள்ளது.. அதாவது அவரை அங்கவீனமாக்கும்வதாம்... கொடுமை... கொடுமை.... மற்ற மார்கத்தை கடுமையாக விமர்சிக்கும் இஸ்லாமிய சங்கங்கள் தங்கள் மத்தை விமர்சிப்பவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது... உணர்வுள்ளவர்கள் ஒரு வரியிலாவது உங்கள் கண்டணத்தை தெரிவியுங்கள்

முழுமையாக அறிந்து கொள்ள

http://www.katturai.com/?p=1937

TNTJ ஜனவரி 28ல் நிகழ்த்திய கபட நாடகம் அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுகிறது


ஜனவரி 28,29 அகிய தேதிகளில் நடைபெற இருந்த விவாதத்திற்கு காவல்துறை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், SAN ஒருபோதும் பொதுவிவாதத்திற்கு சம்மதிக்கவில்லை, மாறாக காவல்துறை உத்தரவை மீறாதபடிக்கு தனிப்பட்ட முறையில் விவாதம் நடப்பதற்கே சம்மதித்திருந்தோம் (SAn மற்றும் TNTJ க்கு இடையேயான மின்னஞ்சல்களை வாசித்துப் பாருங்கள்). ஆகவே, SAN விவாதத்திற்கு வரவில்லை என்று கூறப்படும் பொய் குற்றச் சாட்டு பல கேள்விகளை எழுப்புகிறது:

1) நேரடி ஒளிபரப்பில்லாமல் தனிப்பட்ட முறையில் வீடியோ பதிவுடன் கூடிய விவாதத்திற்கு TNTJ ஏன் ஒப்புக் கொள்ளவில்லை? உலகமெங்கிலும், எல்லா விவாதங்களும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இல்லை, வீடியோ பதிவுடனேயே அவை நடைபெறுகின்றன. இஸ்லாமிய தலைப்பில் பேசுவதற்கு TNTJ அலுவலகத்திற்குச் செல்ல SAN விருப்பத்துடன் இருக்கும்போது, SAN கூறிய நியாயமான ஆலோசனையை TNTJ ஏற்றுக் கொள்ள மறுத்தது ஏன்?

2) TNTJ தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி , பின்னர் SAN குழுவினரை சட்டப் பிரச்சனைகளில் சிக்க வைக்க திட்டமிட்டிருந்தனரா? SAN நேரடி ஒளிபரப்புக்கு சம்மதித்து விவாதத்திற்குச் சென்றிருக்குமானால், SAN குர்-ஆன் குறித்த உண்மைகளை வெளிப்படுத்த ஆரம்பித்த உடன், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை TNTJ உண்டாக்கி இருக்கக் கூடும். காவல்துறை தடை உத்தரவை நேரடியாக மீறி கிறிஸ்தவர்கள் இஸ்லாமியரின் அலுவலகத்திற்குச் சென்று இஸ்லாமிய தலைப்பில் விவாதிப்பது வன்முறையை உண்டாக்கினால், அது முஸ்லீம்களுக்கு அல்ல, கிறிஸ்தவர்களுக்கே பிரச்சனையாக இருக்கும். TNTJ தங்களுடைய அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு, தங்கள் தலைப்பைக் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

3) விவாதத்திலிருந்து ஓடிப் போவதை ஒருபோதும் விரும்பாத,ஏற்றுக் கொள்ளாத SAN விவாதத்திலிருந்து ஓடிப் போனதாக TNTJ ஏன் குற்றம் சாட்ட வேண்டும்? காவல்துறை தடை உத்தரவுக்குப் பின் நிகழ்ந்த அனைத்து மின்னஞ்சல் பரிமாற்றங்களையும் வாசியுங்கள், சாக்‌ஷி குழுவினர் காவல்துறை உத்தரவுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்திருப்பதைக் காண முடியும். இப்படி இருக்கும் போது சாக்‌ஷி குழுவினர் விவாதத்திலிருந்து ஒடி விட்டனர் என்று சொல்வது வடிகட்டின பொய் அல்லவா?

4) TNTJ தங்கள் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு விவாதம் நடை பெறும் இடத்தில் இருப்பதாக மக்களுக்கு முன் ஏன் நடிக்க வேண்டும்?

5) SAN உடன் இணைந்து TNTJ காவல் அதிகாரியிடம் வந்திருக்கையில், TNTJ காவல் துறை உத்தரவை ஏன் மறைக்க வேண்டும், அது குறித்து ஒன்றுமே தெரியாதது போல காட்டிக் கொண்டனரே, ஏன்? உண்மையைச்
சொலவதானால், எங்களைத் தொடர்பு கொண்ட அனேக முஸ்லீம் சகோதரர்கள் விவாதத்திற்கு காவல் துறை தடை உத்தரவு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

6) பெரும்பாலான இஸ்லாமிய பிரச்சாரகர்கள் இஸ்லாம் குறித்த தலைப்பில் விவாதிக்க விரும்புவதில்லை, அப்படிப்பட்ட விவாதம் நடைபெறாமலிருக்க எல்லாவகையான தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள். இதை TNTJ மறுபடியும் நிருபித்திருக்கிறது. காவல்துறை விவாதத்தை தடை செய்ததற்கு TNTJ தான் காரணம் என்று நாங்கள் நம்புவதற்கு போதிய நியாயமான காரணங்கள் உண்டு. அதன் பின்னர் நடந்த கபட நாடகம் ஏற்கனவே அவர்கள் தீர்மானித்த படி அரங்கேறியது.

காவல்துறை தடை உத்தரவுக்கு TNTJ தான் காரணம் என்று நாங்கள் ஏன் நினைக்கிறோம்?

1) தடை உத்தரவுக்கான காரணங்களில் ஒன்று ( 3வது குறிப்பு) கூறுவது என்னவெனில், " பைபிளில் நபிகள் நாயகம் குறித்து கூறப்பட்டிருப்பதைப் பற்றி P.ஜெய்னுலாபீதின் அவர்கள் கூறின முரண்பாடான வாக்கியத்தை அவர்கள் குறைகூறி விமர்சனம் செய்தனர்". PJ ன் முரண்பாடுகளைக் குறை கூறினால் யார் பாதிக்கப்படுவார் என நாங்கள் கேட்கிறோம். கிறிஸ்தவர்களோ, இந்துக்களோ அல்லது முஸ்லீம்களில் மற்ற பிரிவினரொ அல்ல, TNTJ மாத்திரமே அதனால் பாதிப்படையக் கூடும்.

2) 5வது குறிப்பு கூறுவது : "மேலும் இந்துக்கள், கிறிஸ்தவ மற்றும் (TNTJ தவிர்த்த) முஸ்லீம் அமைப்புகள் குறிப்பிட்ட சில ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்." தடை உத்தரவு பிறப்பிக்கப் படுவதற்கு முன்னர் TNTJ உம் காவல்துறையினரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசாமல், நேரடி ஒளிபரப்புக்கு TNTJ எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று காவல் துறையினருக்கு எப்படி தெரிந்து இருக்க முடியும்?

குர்-ஆன் குறித்த விவாதத்தை TNTJ ஒருபோதும் விரும்பவில்லை என நாங்கள் ஏன் நினைக்கிறோம்?

1) ஆடிட்டோரியம் முடிவு செய்யப்படுவதற்கு முன்பு, SAN மற்றும் TNTJ இருவரும் இணைந்து இரண்டு இடங்களுக்குச் சென்றனர், ஆடிட்டோரிய அலுவலர்கள் 28,29 ஆகிய தேதிகளுக்கும் அரங்கத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வர், ஆனால் SAN திரும்பி வந்த உடனேயே ஆடிட்டோரியம் அந்நாட்களில் ஏற்கனவே புக் செய்யப்பட்டு விட்டதாக தொலைபேசி அழைப்பு வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இவ்வாறு நடந்துள்ளது. அரங்கம் இரத்தாவதற்கு பின்னால் இருந்து இயங்கியது யார்?

2) இரண்டு முறை ஆடிட்டோரியம் இரத்தான பின்பு, TNTJ அரங்க அலுவலர்களை தொடர்பு கொண்டு அரங்கை இரத்து செய்யாமலிருக்கும்படி, SAN ஒரு கிறிஸ்தவ பள்ளி அரங்கை விவாதத்திற்கு என பதிவு செய்திருந்தது. பள்ளிக் கூட அலுவலர்களை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத TNTJ காவல் துறை மூலமாக விவாதத்தை தடை செய்யும் வழியைத் தேர்ந்திருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லையா?

3) ஹைதராபாத் மற்றும் குர்நூல் ஆகிய இடங்களில் ஜாகீர்நாயக் அவர்களுக்கு மறுப்பு தெரிவிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விவாதங்கள், இரண்டு இடங்களிலும் இதே போல காவல் துறையினரின் குறுக்கீட்டால் தடை செய்யப்பட்டது. இப்போது இஸ்லாமியத் தலைப்பில் விவாதம் நடைபெற இருக்கையில், மறுபடியும் அது இரத்து செய்யப்பட்டிருக்கிறது. தங்கள் தவறான கூற்றுகளையும் குற்றச் சாட்டுகளையும் எதிர்கொள்வதற்குப் பதிலாக அறிவார்ந்த மறுப்புகளை இரத்து செய்வதற்கு எல்லாவிதமான மோசமான சூழ்ச்சிகளையும் இஸ்லாமிய பிரச்சாரகர்கள் பயன்படுத்த முயற்சிப்பது அவர்களின் அணுகுமுறை என்பது தெள்வாகிறது அல்லவா?

SAN கிறிஸ்தவ தலைப்பில் TNTJ உடன் விவாதம் செய்தது. ஆனால் இஸ்லாமிய தலைப்பில் விவாதம் செய்யாமல் தந்திரமாக தப்பித்துச் செல்வது TNTJ ஆகும். பரிசுத்த வேதாகமத்தின் மீதான விவாதத்தை மட்டுமே பார்க்க வேண்டிய நிலையில் உள்ள ஒருவர், SAN உடன் TNTJ குர்-ஆன் குறித்து விவாதம் செய்ய பயப்படுவது ஏன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இது ஒரு மொழிபெயர்ப்பு
source: http://www.sakshitimes.org/index.php?option=com_content&task=view&id=566&Itemid=42
 

January 23, 2012

இயேசு இறைவனா? குர்‍ஆன் இறைவனா?

             

இயேசு இறைவனா? குர்‍ஆன் இறைவனா?

இஸ்லாமியர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விக்கு பதிலாக ஒரு சிறிய அறிமுகம்

தமிழாக்க அறிமுகம்: இந்த சிறிய கட்டுரை ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு கிறிஸ்தவருக்கு இடையே நடந்த ஒரு சிறிய உரையாடல் பற்றிச் சொல்கிறது. முக்கியமாக:

குர்‍ஆன் இறைவனின் வார்த்தை என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.

இயேசு இறைவனின் வார்த்தை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்.

குர்‍ஆன் ஒரு புத்தகம், இயேசு ஒரு மனிதர்.

குர்‍ஆனை எல்லாரும் ஒரு புத்தகமாக பார்க்கிறோம், படிக்கிறோம் தொடுகிறோம், இருந்தாலும், அது தெய்வீகமானது என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். அதே போல, இயேசுவை மக்கள் பார்த்தார்கள், தொட்டார்கள் பேசினார்கள், இருந்தாலும் இயேசு அழிவில்லாதவர் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அழிவில்லாத அல்லாஹ்வின் வார்த்தைகள் எப்படி ஒரு அழிவுள்ள ஒரு புத்தகமாக நம் கரங்களில் இருக்கிறது? ஒரு பொருள் "அழிவில்லாததாயும், அதே நேரத்தில் அழியக்கூடியதாகவும்" எப்படி இருக்கமுடியும்?  

என்னுடைய தளத்திற்கும் நான் "ஈஸா குர்‍ஆன்" என்ற பெயர் வைத்ததற்கும் இதுவே காரணம். எது சத்தியம் அல்லது யார் சத்தியம் என்பதை நாம் தெரிந்துக் கொள்ளவேண்டும், ஈஸாவா (தேவனின் வார்த்தை) அல்லது குர்‍ஆனா (அல்லாஹ்வின் வார்த்தை)?

பிரச்சனை யேகோவா தேவனுக்கும்,அல்லாஹ்விற்கும் இல்லை... பிரச்சனை இயேசுவிற்கும், குர்‍ஆனுக்கும் தான், ஏனென்றால் இரண்டும் இறைவனின் வார்த்தை என்று நம்பப்படுகின்றது.

(இதனை புரிந்துக்கொள்ளாமல் சிலர் எனக்கு அடிக்கடி "உன் தளத்தின் பெயரை மாற்று, "ஈஸா பைபிள்" என்று உன் தளத்திற்கு பெயரை வைத்துக்கொள் என்றுச் சொல்கிறார்கள், அவர்களுக்கு புரிந்தது அவ்வளவு தான்).

இதனை விளக்கும் ஒரு சிறிய கட்டுரை தான் இது. ஆங்கிலத்திற்கு இணையாக தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதை உணர்ந்து, இந்த சிறிய கட்டுரையின் ஆங்கில மூலத்தை இக்கட்டுரையின் கடைசியில் கொடுத்துள்ளேன். ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கிலத்திலும் இச்சிறிய கட்டுரையை படித்தல் நல்லது.

(ஆங்கில மூலம் தொடுப்பு கொடுத்து சொடுக்கி படியுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுத்தாலும், ஆங்கில தொடுப்பை சொடுக்க சிலருக்கு நேரமிருக்காது என்பதை கவனத்தில் கொண்டு, ஆங்கில மூலத்தை இக்கட்டுரையோடு இணைக்கிறேன்... ஹி..ஹி..)


முஸ்லிம்: கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி "இயேசு தெய்வமா?"

கிறிஸ்தவன்: உங்கள் கேள்விக்கு விடையாக நான் ஒரு கேள்வியை கேட்டு பதில் கூறுகிறேன். இஸ்லாமியர்கள்: "குர்‍ஆன் இறைவனின் வார்த்தையாகும், அது அழிவில்லாத நித்திய வார்த்தையாகும் " என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்படியானால், "குர்‍ஆன் இறைவனா? " என்பது தான் என் கேள்வி (இதற்கு நீங்கள் சொல்லும் பதிலில் உங்கள் கேள்விக்கான பதிலும் உள்ளது)

முஸ்லிம்: நிச்சயமாக இல்லை, "குர்‍ஆன் இறைவனல்ல".

கிறிஸ்தவன்: "குர்‍ஆன் இறைவன் இல்லை" என்றுச் சொல்கிறீர்கள், அப்படியானால், "குர்‍ஆன் ஒரு எல்லைக்குள் உட்பட்டதாகும், தற்காலிகமானதாகும், உருவாக்கப்பட்டதாகும்" என்று பொருள், இது சரியா?.

முஸ்லிம்:இல்லை இல்லை. இது எளிதாக புரியும் விவரமல்ல.

கிறிஸ்தவன்: அப்படியானால், நீங்கள் சொல்வதைப் பார்த்தால், "குர்‍ஆன் இறைவன் இல்லை மற்றும் அந்த குர்‍ஆன் உருவாக்கப்பட்டதும் இல்லை" என்று சொல்லவருகிறீர்களா? குர்‍ஆன் இறைவனல்ல, அதே நேரத்தில் தற்காலிகமானதும் அல்ல என்றுச் சொல்கிறீர்கள், சரி... நீங்கள் என்னை சொல்லவருகிறீர்கள் என்பதை மேலும் விளக்குங்களேன்.

முஸ்லிம்: இஸ்லாமின் படி "இறைவனின் வார்த்தையாகிய குர்‍ஆன் இறைவன் அல்ல மற்றும் இறைவன் அல்லாததும் அல்ல".

கிறிஸ்தவன்: "குர்‍ஆன் இறைவன் அல்ல, மற்றும் குர்‍ஆன் இறைவன் அல்லாததும் அல்ல"... ஒரு நிமிஷம் இருங்க. குர்‍ஆன் இறைவனும் அல்ல, குர்‍ஆன் இறைவன் அல்லாததும் அல்ல.. இந்த வாக்கியத்தில் முரண்பாடு தெரிகின்றதா? குர்‍ஆன் இறைவன் அல்ல, மற்றும் குர்‍ஆன் இறைவன் அல்லாததும் அல்ல என்று நீங்கள் சொல்வதினால்... "குர்‍ஆன் இறைவன் அல்ல" மற்றும் " குர்‍ஆன் இறைவன் தான்" என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது குர்‍ஆன் இறைவனாக இல்லாமல் இருந்தாலும், அது இறைவனாக இருக்கிறது என்றுச் சொல்லவருகிறீர்களா?  இறைவனுக்கும் மேலான ஒன்றாக குர்‍ஆன் இருக்கிறது என்ற நோக்கத்தில் சொன்னாலும்.. குர்‍ஆன் கூட ஒரு புத்தகம் தானே அல்லது புத்தகமாகிய மாறியது தானே!

முஸ்லிம்: இஸ்லாமின் படி, குர்‍ஆன் என்பது இறைவனின் அழிவில்லாத வார்த்தைகளாகும். பாதுகாக்கப்பட்ட பலகைகளில் பதிக்கப்பட்ட நித்தியமாக இருக்கின்ற அல்லாவின் வார்த்தைகளை பிரதிபலிப்பதே குர்‍ஆன் ஆகும். ஜிப்ராயில் தூதன் மூலமாக பூமியில் வாழ்ந்த முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதுதான் குர்‍ஆன் ஆகும் என்று குர்‍ஆனே சொல்கிறது

கிறிஸ்தவன்:குர்‍ஆன் என்பது "இறைவனின் அழிவில்லாத வார்த்தை" மக்களுக்கு இறைவனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், குர்‍ஆனை ஒரு புத்தகம் என்றுச் சொல்லலாமா? (நாம் கண்களால் காணக்கூடிய புத்தகமா?)

முஸ்லிம்: ஆம், இஸ்லாமின் படி, குர்‍ஆன் என்பது இரண்டும் சேர்ந்தது அதாவது "உருவாக்க முடியாதது (Uncreated)" மற்றும் அதே நேரத்தில் "உருவாக்கியது (Created)".

இறைவனின் அழிவில்லாத நித்திய வார்த்தைகள் ஒரு புத்தகமாக நம்மிடம் வந்துள்ளது. இது விவரிப்பதற்கு சிறிது கடினமே...

உருவாக்கப்படாதது (Uncreated) மற்றும் உருவாக்கப்பட்டது (Created) இந்த இரண்டிற்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை விளக்குவது சிறிது கடினமே..

கிறிஸ்தவன்: உங்களுடைய விளக்கத்தை எத்தனை முஸ்லிம்கள் அறிந்து இருக்கிறார்களோ எனக்குத் தெரியாது, எனக்கு ஆச்சரியமாகவும் உள்ளது. இருந்தபோதிலும், உங்களுடைய விளக்கத்திற்காக உங்களுக்கு என் நன்றிகள். உங்கள் விளக்கத்தின் மூலமாக, தேவனுக்கும், இயேசுவிற்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை இஸ்லாமியர்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ள ஒரு சிறிய விளக்கத்தை நான் கூறட்டுமா? இதைத் தானே நீங்கள் ஆரம்பத்தில் கேள்வியாக கேட்டீர்கள்?

இஸ்லாமியர்கள் குர்‍ஆனைப் பற்றி கூறும் போது "குர்‍ஆன் இறைவனின் வார்த்தையாக இருக்கிறது, அது இரண்டையும் கொண்டுள்ளது, அதாவது "அதை உருவாக்கவும் முடியாது" அதே நேரத்தில் அது "இவ்வுலகில் உருவாக்கப்பட்டும் உள்ளது ". குர்‍ஆன் "அழிவில்லாததாகவும் உள்ளது",  அதே நேரத்தில் இவ்வுலகில் "தற்காலிகமானதாகவும் உள்ளது". குர்‍ஆன் ஒரு "எல்லைக்குள் உட்படாததாகவும்" உள்ளது, அதே நேரத்தில் இவ்வுலகில் "ஒரு எல்லைக்குள் உட்பட்டதாகவும் உள்ளது" என்று கூறுவார்கள்.

இதே போல, பைபிள் கூறும் இயேசுக் கிறிஸ்து கூட, இறைவனின் வார்த்தையாக உள்ளார் ,

அவரை யாரும் உருவாக்கவும் முடியாது, அதே நேரத்தில் அவர் இவ்வுலகில் உருவாகியும் உள்ளார்.

இயேசு அழிவில்லாதவராகவும் உள்ளார் அதே நேரத்தில் இவ்வுலகில் தற்காலிகமாக வாழ்ந்தவராகவும் இருந்தார்.

இயேசு ஒரு எல்லைக்குள் உட்படாதவராகவும் உள்ளார், அதே சமயத்தில் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் ஒரு எல்லைக்குள் உட்பட்டும் இருந்தார் .

பைபிளின் படி, இறைவனின் அழிவில்லாத வார்த்தை ஒரு புத்தகமாக அல்ல, ஒரு மனிதனாக வந்தார், அவர் தான் இயேசுக் கிறிஸ்து.

இங்கு இன்னொரு விஷயத்தை சுருக்கமாக நான் சொல்லட்டும், கிறிஸ்தவர்கள் இயேசுவை ஒரு மனிதராக, ஒரு தீர்க்கதரிசியாக, "தேவனுடைய இடத்தை" பிடித்துவிட்ட இன்னொரு தேவனாக பார்ப்பதில்லை. இதற்கு மாறாக, பைபிள் தெளிவாக கூறுகிறது, "தேவன் தம்மைத் தாமே தம்முடைய அழிவில்லாத வார்த்தை மூலமாக மனிதனாக வெளிப்படுத்தினார், ஒரு தீர்க்கதரிசியாக வெளிப்படுத்தினார், அவர் பெயர் தான் இயேசு".

இறைவன் விரும்பினால், இறைவனின் அழிவில்லாத வார்த்தை ஒரு புத்தகமாக வரமுடியுமானால், ஏன் அந்த அழிவில்லாத வார்த்தை ஒரு மனிதாக வரமுடியாது?

தம்மை தாமே மனிதனாக வெளிப்படுத்த தேவன் சித்தம் கொண்டார் அல்லது விரும்பினார் என்று பைபிள் கூறுகிறது. இது தான் இயேசுவிற்கும் தேவனுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையாகும்.

நம்முடைய இந்த முதலாம் உரையாடலில், இதைப் பற்றி இன்னும் அதிகமாக நாம் பேசலாம், இருந்தாலும் அடுத்த உரையாடலில் தொடருவோம்.

ஆங்கில மூலம்: IS JESUS GOD? An Introductory Response to a Frequent Muslim Question

ஆங்கில கட்டுரை

Muslim: According to Christians is Jesus God?

Christian: Let me begin to answer your question with a question. I have heard Muslims say the Qur'an is the Word of God, the eternal Word of God. Is the Qur'an God?

Muslim: Of course not!

Christian: If the Qur'an is not God, then the Qur'an must be finite, temporal, created.

Muslim: No, it's not quite so simple.

Christian: Then, if I'm hearing you correctly, are you saying that the Qur'an is not God and is not a creation? If the Qur'an is neither divine nor temporal, then ... well ... tell me what you mean.

Muslim: According to orthodox Islam the Qur'an, as the Word of God, is not God and is not other than God.

Christian: The Qur'an is not God, nor is it other than God? Just a moment. If the Qur'an is not God and the Qur'an is not other than God, is there a contradiction here? If the Qur'an is not God, nor is the Qur'an other than God, is this to say that the Qur'an is not God and the Qur'an is God? Or even that the Qur'an is not God, yet of God (whatever that means), and, therefore, possibly even more than God in the sense that it is also a book or has become a book?

Muslim: According to orthodox Islam the Qur'an is the eternal Word of God, a representation of the eternal Word of the God on the Preserved Tablet, as the Qur'an says, which God has revealed through Jibril (Gabriel) to Muhammad on earth.

Christian: If the Qur'an is the eternal Word of God revealed by God to people, is it a real book?

Muslim: Yes, Orthodox Islam understands the Qur'an to be both uncreated and created. The eternal Word of God became a real book. It is a little difficult to explain ... The relation between the created and the uncreated is a little complex ...

Christian: I wonder how many Muslims are aware of your comments. I appreciate your explanation. May I suggest that it provides us with a format to help Muslims to begin to understand Jesus' relation with God in response to your question. As orthodox Muslims understand the Qur'an, the Word of God, to be both uncreated and created, eternal and temporal, infinite and finite, so the Bible speaks of Jesus, the Word of God, to be uncreated and created, eternal and temporal, infinite and finite. According to the Bible the eternal Word of God became not a book but a human being - Jesus the Messiah.

Let me simply add here that Christians do not turn Jesus, a man and a prophet, into a God alongside God or in the place of God. On the contrary, the Bible clearly reveals that God Himself through His eternal Word became a human being and a prophet, whose name is Jesus. If the eternal Word of God can become a book, why not a human being, if God so wills! That God has willed so is central to the Biblical understanding of Jesus' relation to God.... So far "Part I" of our discussion. Much more, of course can be said on this topic. Can we continue it another time?

 ஆங்கில மூலம்: IS JESUS GOD? An Introductory Response to a Frequent Muslim Question


 




Answering PJ: தூது - The Message

  

Answering PJ: தூது - The Message

பிஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு எழுதிய மூன்றாம் மறுப்பின் துணைக் கட்டுரையாக இந்த தற்போதைய கட்டுரையை பதிக்கிறேன்.

இந்த தற்போதைய கட்டுரையை படிப்பதற்கு முன்பாக, கீழ்கண்ட மறுப்பை படியுங்கள்:

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 3 (இயேசு எழுதியதையும், இயேசுவிற்கு கர்த்தரிடத்திலிருந்து வந்ததும் குர்‍ஆனிடமோ, பீஜே அவர்களிடமோ உண்டா?)

தூது - The Message

கடந்த காலங்களில் கடிதங்களை அனுப்பும் போது, அவைகள் தங்கள் இலக்கை அடைவதற்கு அனேக நாட்கள் பிடித்தன, சில நேரங்களில் வாரங்கள் மற்றும் மாதங்கள் கழித்து அவைகள் சென்றடைந்தன. அக்காலத்தில் ஈ-மெயில் வசதியோ அல்லது தொலைபேசி வசதியோ இல்லை, அவ்வளவு ஏன் தந்தி கூட இல்லை. இருந்தபோதிலும் மக்கள் அனேக வழிமுறைகளில் ஒவ்வொருவரோடும் தங்கள் செய்தியை பகிர்ந்துக்கொண்டனர்.


மக்கள் தங்கள் "தூதுகளை" சில தூதர்கள் மூலமாக அனுப்பிக்கொண்டு இருந்தனர். இது மாத்திரமல்ல, இறைவன் மூலமாக கூட தூதுகள் தூதர்கள் மூலமாக மக்களுக்கு அனுப்பப்பட்டது. இறைவன் மனித இனத்தோடு தொடர்பு கொள்ள "பேசினார்" என்பதை நாங்கள் நம்புகிறோம். தன்னை உருவாக்கியவரும், உலகை படைத்தவருமாகிய இறைவன், "தம்மை மனிதனுக்கு வெளிப்படுத்தவேண்டும்" என்று அம்மனிதன் எதிர்பார்க்கலாம் அல்லவா? இவ்வுலகில் இறைவன் விருப்பப்படி எப்படி வாழவேண்டும் என்ற கட்டளைகளை அந்த இறைவனிடமிருந்து தமக்கு வரவேண்டும் என்று அம்மனிதன் எதிர்பார்க்கலாம் அல்லவா?

தனக்கு இறைவனிடமிருந்து தூது வருகிறது என்றுச் சொல்லுகிற மனிதனை நாம் "தீர்க்கதரிசி (Prophet)" என்று கூறுகிறோம். எபிரேய மற்றும் அரபி மொழியில் "நபி" என்றுச் சொல்லக்கூடிய வார்த்தையை நாம் சரியாக மொழிப்பெயர்த்தால், "தூதர் (Messenger)" என்று மொழியாக்கம் செய்யலாம்..

"தூதர்கள்" என்பவர்கள் யார் என்பதைப் பற்றி யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியிலே ஒரு பொதுவான உடன்பாடு உள்ளது. இம்மக்கள் அங்கீகரிக்கும் தூதர்களில் சிலரது பெயர்கள் இவைகளாகும்: நோவா, ஆபிரகாம், மோசே, எலியா, யோபு மற்றும் தாவீது. யூதர்கள் இயேசுவை தீர்க்கதரிசி என்று அங்கீகரிப்பதில்லை, ஆனால், இஸ்லாமியர்கள் இயேசுவை "ஈஸா நபி" என்று அழைக்கிறார்கள், அங்கீகரிக்கிறார்கள். இதில் முக்கியமான விவரம் என்னவென்றால், இஸ்லாமியர்கள் இயேசுவை "இறைத்தூதர்" என்று அழைத்தாலும், இயேசு கொண்டு வந்த அந்த தூது குர்‍ஆனில் காணப்படுவதில்லை . இயேசு கொண்டு வந்த செய்தியை நாம் பைபிளின் "நற்செய்தி நூல்களில்" காணலாம்.

ஆச்சரியப்படும் விதமாக, தற்காலத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் "இயேசுவின் தூது யூதர்களுக்கு மட்டும் தான்" என்று போதித்துக்கொண்டு வருகிறார்கள், ஆனால், இயேசுவைப் பற்றி குர்‍ஆன் கூறும்போது, அவரை "அகிலத்தாருக்கு சான்றாக்கினோம் " என்று கூறுகிறது (ஸூரா 21:91).

குர்‍ஆன் கீழ்கண்டவாறு போதிக்கிறது:

"அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் ழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம்; அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்" என்று கூறுங்கள்! (குர்‍ஆன் 2:136)

குர்‍ஆனில் காணப்படும் அவ்விதமான முரண்பாட்டை நியாயப்படுத்துவதற்காக, இஸ்லாமிய அறிஞர்கள் பைபிளை குற்றப்படுத்துகின்றனர், அதற்கு அவர்கள் இவ்விதமாக கூறுகின்றனர், "அதாவது ஆபிரகாம், மோசே மற்றும் இயேசுவிற்கு அருளப்பட்ட இறைவனின் வார்த்தைகள் இப்போது பைபிளில் காணப்படுவதில்லை, அது மாற்றப்பட்டது மற்றும் திருத்தப்பட்டது".

ஆனால், இவர்கள் சொல்வது போல குர்‍ஆன் போதிக்கவில்லை, குர்‍ஆன் இவ்விதமாக கூறுகிறது:

"வேதமுடையோரே! தவ்ராத்தையும், இஞ்சீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையும், நீங்கள் நிலை நாட்டாதவரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்லர்"..." குர்‍ஆன் (5:68).

குர்‍ஆனின் இவ்வார்த்தைகள் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இன்று நம்மிடம் இருக்கும் பழைய பைபிள் கையெழுத்துப் பிரதிகள், ஏழாம் நூற்றாண்டை விட முந்தையது. அவைகள் இன்று நம்மிடம் உள்ள பைபிளுக்கு முரண்படுவது இல்லை. இஸ்லாமிய அறிஞர்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பதெல்லாம், கேட்பதெல்லாம் என்னவென்றால், பைபிள் மாற்றப்பட்டது என்று குற்றம் சாட்டுகின்ற நீங்கள், எப்போது, யார் ஏன் பைபிளை மாற்றினார்கள்? என்ற கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லவேண்டும். உங்களால் சொல்லமுடியுமா? உங்களால் நிச்சயம் இக்கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லமுடியாது .

உண்மையில் குர்‍ஆன் முஸ்லிம்களூக்கு சவால் விடுகின்றது: "நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக!..." (குர்‍ஆன் 10:94). எந்த வேதம்? குர்‍ஆனுக்கு முன்பாக கொடுக்கப்பட்ட வேதம். நேர்மையாக நடந்துக்கொள்ளும் ஒரு மனிதன், குர்‍ஆனின் இவ்வார்த்தைகளைக் கொண்டு, பைபிள் திருத்தப்பட்டது என்று கூறமாட்டான். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், குர்‍ஆன் இவ்விதமாக கட்டளையிடுகிறது: "(இதனை நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுப்படுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்துக்) கொள்ளுங்கள் " குர்‍ஆன் 21:7 (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

இவ்வசனத்தில் கூறப்பட்ட வேதங்களை உடையோர் யார்? அவர்கள் யூதர்களும் கிறிஸ்தவர்களும் என்பது தெளிவு.

நாம் ஏற்கனவே பார்த்தபடி, நற்செய்தி நூல்கள் இறைவனின் வார்த்தை என்று குர்‍ஆன் வெளிப்படையாக கூறுகிறது. மற்றும் அதே குர்‍ஆன் "அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை" என்றும் கூறுகிறது (குர்‍ஆன் 10:64 மற்றும் 6:34).

அனேக இஸ்லாமியர்கள் நற்செய்தி நூல்களை படிப்பதில்லை. எனவே, இயேசு இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவர் திருவாய் மொழிந்த வார்த்தைகளை ஒரு தொகுப்பாக இங்கு தருகிறோம். இவ்வார்த்தைகளை சரியான தலைப்பின் கீழ் ஒரு கோர்வையாக நாம் உங்களுக்காக தருகிறோம், இதனால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.

ஆங்கில மூலம்: The Message

"ஒரு தூது" இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2011. All rights reserved.
 
 


 

Answering PJ: இயேசு நமக்கு எவைகளை போதித்தார்

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

Answering PJ: இயேசு நமக்கு எவைகளை போதித்தார்

பிஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு எழுதிய மூன்றாம் மறுப்பின் துணைக் கட்டுரையாக இந்த தற்போதைய கட்டுரையை பதிக்கிறேன்.


இந்த தற்போதைய கட்டுரையை படிப்பதற்கு முன்பாக, கீழ்கண்ட மறுப்பை படியுங்கள்:

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 3 (இயேசு எழுதியதையும், இயேசுவிற்கு கர்த்தரிடத்திலிருந்து வந்ததும் குர்‍ஆனிடமோ, பீஜே அவர்களிடமோ உண்டா?)
Answering PJ: இயேசு நமக்கு எவைகளை போதித்தார்

இயேசு மிகவும் ஆழமான இறையியல் அல்லது தீர்க்கமான தத்துவங்களை போதிக்கவில்லை. மக்கள் புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் மிகவும் எளிதான முறையில் பேசினார்.

அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்:

கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.

ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். (மத்தேயு 13:3-9, 18-23)

கேட்பவர்கள் விருப்பமில்லாமல் இருந்து பதில் தராமல் இருப்பதை தேவன் விமர்சித்தார். ஆகையால், இயேசு கீழ்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்:

ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. (மத்தேயு 13:14-15)

ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; . . . (லூக்கா 8:18)

மேலும் ஒரு உவமையில், இன்னொரு முக்கியமான சத்தியத்தை இயேசு விவரித்தார்:

அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்:

ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.

அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். (லூக்கா 13:6-9)

இன்னொரு உவமையில் இயேசு கீழ்கண்டவாறு விவரித்தார்:

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். (யோவான் 15:1-8)

நம்முடைய சொந்த நீதியினாலும், நேர்மையினாலும், தேவன் விரும்பும் கனிகளை நம்மால் தரமுடியும் என்று நாம் நேர்மையாக சொல்லமுடியாது. பைபிளில் இன்னொரு இடத்தில், அந்த கனி என்பது, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்பவைகளாகும் என்று கூறுகிறது (கலாத்தியர் 5:23). இப்படிப்பட்ட கனிகளை கொடுக்க விருப்பமில்லை என்று யார் கூறுவான்?

இதே தலைப்பில் இன்னொரு உவமையை நாம் காணலாம்.

பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.

என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (லூக்கா 15:11-24)

நாம் மேற்கண்ட உவமையில் கண்ட இளைய குமாரனைப் போல நம்முடைய தற்போதைய நிலையை நாம் உணரவேண்டும். இதில் அவன் தான் செய்த தவறுகளுக்கு ஒரு பிராயச்சித்தம் தருவதற்கு முயற்சி எடுக்கவில்லை, அவனால் அந்த பிராயச்சித்தம் செய்யவும் முடியாது. மட்டுமல்ல, அந்த தகப்பனும் அதை தன் மகனிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. அந்த குமாரன் தன் வீட்டிற்குச் செல்ல விரும்பினான், அப்படியே சென்றான். தன் மகனுக்கு அவன் உடுத்திய உயர்ந்த ஆடைகள் என்பது, அந்த தகப்பன் தன் மகனின் தீய செயல்களை மூடுவதைக் காண்பிக்கிறது. அந்த தகப்பன் தன் மகனின் விரல்களில் போடுவித்த மோதிரம் என்பது, அவனை மறுபடியும் தன் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது. அந்த தகப்பன் தன் மகனின் கால்களில் அணிவித்த காலணிகள் மறுபடியும் தன் மகன் ஒரு சுதந்திரமான மனிதன் (அவன் அடிமை அல்ல) என்பதை காண்பிக்கிறது, அக்காலத்தில் பொதுவாக அடிமைகள் காலணிகள் இன்றி நடப்பார்கள். இந்த கதையில் சொல்லப்பட்ட கோட்பாடுகள், இன்னொரு உவமையின் மூலமாகவும் விளக்கப்பட்டது.

அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார். (லூக்கா 7:41-42)

மன்னிப்பு என்பது எந்த ஒரு மனிதன் தொடர்ந்து அதைத் தேடி, அதை கேட்கின்றானோ அவனுக்கு இறைவனால் தரப்படும் ஒரு பரிசாகும். தேவனுடைய இந்த அன்பை அனேக எடுத்துக்காட்டுகள் மூலமாக பைபிளில் அடிக்கடி காண்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:

உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,

வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 15:3-7)

மேற்கண்ட விதமாக நடக்கும் இறைவனை நாம் அனேகமாக பார்த்திருக்கமாட்டோம். அதாவது, நாம் செய்யும் தவறுகளுக்கான செலவை அவர் திரும்ப செலுத்துகிறார் என்பதாகும். ஆனால், அவருக்கு தேவையானது நம்முடைய "இதயமாகும்". மேற்கண்ட உவமையில் பாருங்கள், கடன்பட்ட அந்த இரண்டு நபர்களாலும் தங்கள் கடனை திரும்பச் செலுத்த திராணியில்லை. பாவத்தை ஒரு முறை செய்துவிட்டால், அதை திரும்பப் பெறமுடியாது. பாவம் என்பது தேவனுடைய பரிசுத்தம் நம்மை அடைய முடியாமல் செய்கின்ற மிகப்பெரிய பிளவாக இருக்கிறது. பாவம் என்பது சரி செய்யப்பட முடியாத மிகப்பெரிய பிளவாக உள்ளது. ஆகையால், தேவன் நமக்காக எதனை செய்துள்ளாரோ அதன் மீதே நாம் சார்ந்து இருக்கவேண்டியதாக உள்ளது. கடைசியாக இயேசு கூறிய இன்னொரு உவமையை நாம் படிப்போம், இதைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்பதை காண்போம்.

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். (லூக்கா 18:10-14)

இயேசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர்கள் என்பவர்கள், மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த மரியாதைக்குரிய மத தலைவர்களாக இருந்தனர். பரிசேயன் என்பவன், தேவனுடைய ஒரு கட்டளையையும் மீறக்கூடாமல் இருப்பதற்காக, அதை மிகவும் கட்டுப்பாட்டுடனும், தீவிர பக்தியுடனும் கடைபிடிக்க முயற்சி எடுப்பவனாவான். ஆனால், தன் சுயத்தை பார்த்தால், தன்னுடைய இந்த மேற்கண்ட முயற்சியை, தன் உபவாசத்தை, தன் தானதர்மத்தை மெச்சிக்கொள்கின்றவனாக இருக்கிறான். இப்படிப்பட்ட நற்காரியங்களை செய்வதினால் தேவன் நிச்சயமாக தன்னை ஏற்றுக்கொள்வார் என்று எண்ணிக்கொண்டு இருப்பான்.

ஆனால், இயேசு கீழ்கண்ட விதமாக விவரித்தார்:

அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். (லூக்கா 17:10)

நாம் நன்மை செய்வதும், சரியானவற்றை செய்வதும் நமக்கு ஒரு கிரீடத்தை கொடுத்துவிடாது. ஏனென்றால், நன்மை செய்வது நம்முடைய கடமையாகும் என்று இயேசு குறிப்பிட்டார். நன்மை செய்துவிட்டு, பெருமைப்பட்டுக்கொண்டால் அதனால் உபயோகமில்லை. தேவன் சொல்லிய கட்டளைகளே நமக்கு நியமங்கள். ஆகையால், நம்முடைய தோல்விகளுக்கான மன்னிப்பு நம்முடைய தேவனின் கிருபை மீது சார்ந்துள்ளது. கிருபை என்பது தகுதியில்லாத நமக்கு அவர் காட்டும் பரிவு ஆகும்.

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. (லூக்கா 16:15)

ஒருமுறை இயேசுவிடம், மிகவும் முக்கியமான கட்டளை எதுவென்று கேட்கப்பட்டபோது, அவர் இவ்விதமாக பதில் அளித்தார்:

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை.

இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். (மத்தேயு 22:37-40)

"கீழ்படிதல்" என்பதை நாம் கட்டாயத்தோடு செய்தால் அது மிகவும் பாரமாகிவிடும், ஆனால், அன்புடன் கட்டாயப்படுத்தப்படாமல் நாம் ஒருவருக்கு கீழ்படியும் போது, அது பாரமாக அல்ல, மிகவும் மென்மையாக மாறிவிடும்.

தேவனுக்கு பயந்து அவரை நேசிப்பது பற்றி இயேசு போதிக்கும் போது, மனிதர்கள் என்ன சொல்லுவார்களோ, அவர்கள் என்ன செய்வார்களோ என்று பயப்படவேண்டாம் என்று கற்றுக்கொடுத்தார்.

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28)

ஒருவரை நாம் மதிக்கிறோம் என்பது, அவர் சொல்வதை நாம் நம்பும் போதும், நாம் அன்புடன் முழு இருதயத்தோடு அவருக்கு சேவை செய்யும் போதும் வெளிப்படும்.

நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார். (யோவான் 16:27)

ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். (யோவான் 12:26)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பது, இயேசு மீது நம்பிக்கை வைப்பது மீது ஆதாரப்பட்டுள்ளது. இவ்விரண்டிற்கும் வித்தியாசமில்லை.

அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். (யோவான் 12:44-46)

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:16-17)

குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். (யோவான் 6:40)

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார். (யோவான் 6:27)

நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் ஒரு பின்விளைவு உண்டு. நாம் இயேசுவை பின்பற்ற எடுக்கும் முடிவிற்கும் சில சோதனைகள், விளைவுகள் உண்டு. இயேசுவை பின்பற்றுவதினால் நாம் கேலி பரியாசம் செய்யப்படுவோம் மற்றும் துன்புறுத்தப்படுவோம்.

என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். (மத்தேயு 10:22)

ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; ….. (யோவான் 15:20)

ஆனால், துன்பம் அனுபவிக்கும் நம்மை இயேசு தேற்றுகிறார்:

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;

சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (மத்தேயு 5:11-12)

உலகத்தில் எந்த மனிதனைக் காட்டிலும், பொருளைக் காட்டிலும் அதிகபடியாக நாம் அவரில் அன்பு செலுத்தி, அவரை கனப்படுத்த வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. (மத்தேயு 10:37)

நம் தேவன் நமக்கு தந்தையாக இருக்கிறார், நாம் அவரது பிள்ளைகளாக இருக்கிறோம். ஆகையால், நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துக்கொண்டு, அவரது வழியில் நடக்கவேண்டும். இயேசு கூறுகிறார்:

நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். (யோவான் 13:34)

நம்மை நாம் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள, இயேசு ஒரு வழிமுறையை கொடுத்துச் சென்றுள்ளார்.

என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். (யோவான் 14:21)

நாம் அவருக்கு கீழ்படிகிறோம், ஏனென்றால் நாம் அவரை நம்புகிறோம் மற்றும் அவரில் அன்பு செலுத்துகிறோம். நாம் மன்னிப்பை பெறுவதற்கும், சொர்க்கத்தில் செல்வதற்கும் கீழ்படிதல் என்பது ஒரு சாதனம் அன்று.

தேவனுடைய இராஜ்ஜியம் என்பது வித்தியாசமான ஒரு இடமாகும், அந்த இடத்தில் ஒருவரின் மேன்மை பல வகைகளில் காணலாம்.

அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.

உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். (மத்தேயு 20:25-27)

அதே போல, வெளி வேஷமாக மத கோட்பாடுகளை இயேசு கடிந்துக்கொண்டு, அவைகளை சரிப்படுத்தினார்:

பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள். மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.

அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். (மாற்கு 7:14-15, 18-23)

இதனால் தான் இயேசு மத தலைவர்களை கடிந்துக்கொண்டார்:

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.

குருடனான பரிசேயனே! போஜன பானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. (மத்தேயு 23:25-26)

மத கோட்பாடுகள் அனைத்தும் பெரும்பான்மையாக வெளிப்புறமாக சுத்தப்படுத்துவது பற்றியும், உணவு சம்மந்தப்பட்ட சுத்தம் பற்றியதாகவே இருக்கும். இதற்கு நேர் எதிராக இயேசு போதித்தார்:

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். (மத்தேயு 5:8)

மக்களின் மத்தியில் இருக்கும் உறவு பற்றியும் இறைவனிடத்தில் நாம் கொண்டு இருக்கும் உறவு பற்றியும் இயேசு அனேக விவரங்களை கூறினார். அவரது வார்த்தைகள் நம்முடைய மனதையும் இதயங்களையும் சிந்திக்கவைக்கின்றன.

நேர்மையைப் பற்றி அவர் கீழ்கண்டவிதமாக கூறினார்.

அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். (மத்தேயு 5:33-34, 37)

நாம் மற்றவர்களை நேசிப்பது பற்றி சாதாரணமாக நாம் கொண்டு இருக்கும் தரத்தை விட அதிகமான தரத்தை இயேசு சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.

இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (மத்தேயு 5:43-48)

பரிசுத்தம் பற்றிம் ஜெபம் செய்வது பற்றி இயேசு எச்சரிக்கை செய்துள்ளார்:

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். (மத்தேயு 6:1-15)

மன்னிப்பு பெறுதல் மற்றும் ஜெபம், இவ்விரண்டிற்கு இடையே இருக்கும் ஒற்றுமையை இயேசு குறிப்பிடுகிறார்

நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார். (மத்தேயு 11:25,26)

நாம் எவ்விதம் தேவன் மீது சார்ந்து இருக்கிறோம் என்பது பற்றியும், அதே நேரத்தில் நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் எவ்விதம் பதில் அளிக்கிறார் என்பது பற்றியும் இயேசு கற்றுக்கொடுத்துள்ளார்:

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?

ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்தேயு 7:7-11)

உபவாசம் (நோம்பு) பற்றி இயேசு எச்சரிக்கை விடுத்துள்ளார்:

நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (மத்தேயு 6:16-21)

உலக பொருட்கள் பற்றிய மதிப்பு என்ன? அதைப் பற்றி நம்முடைய நோக்கம் என்ன? மற்றும் நமது பொறுப்பு என்ன என்பதை இயேசு விளக்கியுள்ளார்:

பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். (லூக்கா 12:15)

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?

வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார். (லூக்கா 16:10-13)

வாழ்க்கையின் ஒரு பாகமாக சோதனையும், வேதனையும் உள்ளது. இவைகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்பதை இயேசு கூறியுள்ளார்.

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். (மத்தேயு 6:25-34)

நம்முடைய வாழ்க்கையில் அனேக வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அனேக தெரிவுகளை கொண்டதே வாழ்க்கையாகும். இவைகளில் ஒரு முக்கியமான தெரிவு மற்ற எல்லா தெரிவுகளை விட மேன்மையானது என்பதை இயேசு சொல்லியுள்ளார்.

இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (மத்தேயு 7:13-14)

மதங்களில் மாய்மாலங்களை நாம் காண்கிறோமா? ஆம், மாய்மாலங்கள் மதங்களில் மிதமிஞ்சிய நிலையில் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆகையால் தான் இயேசு கீழ்கண்ட விதமாக கூறியுள்ளார்.

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். (மத்தேயு 7:21-27)

உலகின் அதிமுக்கியமான பிரச்சனை என்னவென்றால், "துண்டிக்கப்பட்ட நம்முடைய உறவுமுறையாகும்", இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், தேவனுடனான நம்முடைய உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. தேவனோடு நமக்குள்ள உறவு முறையை மறுபடியும் புதுப்பிப்பதே தாம் வந்ததற்கான பிரதான காரணம் என்று இயேசு தாமே கூறுகிறார். இதுமட்டுமல்ல, மனிதர்களிடையே துண்டிக்கப்பட்ட உறவுமுறைகளையும் சுகமாக்கவும் இயேசு வந்துள்ளார். குறிப்பாக, திருமண பந்த உறவுகளில் காணப்படும் நேர்மையற்ற தன்மையை குறித்து அவர் கூறியுள்ளார்.

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:27-28)

மனித உறவுகளை முறித்துவிடும் பாவங்களின் வீரியத்தை விளக்குவதற்கு, இயேசு ஒரு வித்தியாசமான உவமையை அல்லது எடுத்துக்காட்டை கூறினார்.

உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். (மத்தேயு 5:29-30)

இயேசு விவாகரத்து பற்றி மிகவும் அழுத்தமாக கீழ்கண்டவாறு கூறுகிறார்:

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். (மத்தேயு 19:4-6)

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:31-32)

தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான். (லூக்கா 16:18)

அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை.

ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 19:8-9)

நாம் அனைவரும் ஒவ்வொருவரை மன்னிக்கவேண்டும் என்று இயேசு விரும்புகிறார். இறைவனிடமிருந்து நாம் நம்முடைய குற்றங்களுக்காக மன்னிப்பைப் பெற, நாம் மற்றவர்களை மன்னிப்பது என்பது அதிமுக்கியமான ஒன்றாக இருக்கிறது. எப்படி ஜெபிக்கவேண்டும் என்று இயேசு கற்றுக்கொடுக்கும் போது, கீழ்கண்டவாறு கூறுகிறார்:

எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். (மத்தேயு 6:12)

மேலும் இயேசு கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார். (லூக்கா 17:3-4)

ஒருமுறை இயேசுவின் சீடர் இயேசுவிடம் வந்து "என் சகோதரன் எனக்கு விரோதமாக குற்றம் செய்தால் அவனை எத்தனை முறை மன்னிக்கவேண்டும்? ஏழு முறையா?" என்று கேட்டபோது, இயேசு பதில் இவ்விதமாக அளித்தார்:

அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 18:22)

இயேசு தம்முடைய வார்த்தைகளை, தம் நடக்கையின் மூலமாக விளக்கினார். இருதயத்தைத் தொடும் ஒரு சிறப்பான உதாரணத்தை இயேசு கூறினார். மன்னிப்பு என்ற அருமையான மலரை நீங்கள் முகர்ந்துக்கொள்ள இயேசு பேசிய வார்த்தைகளை மட்டுமல்ல, அந்த நிகழ்ச்சி முழுவதையும் உங்கள் முன் வைக்கிறோம்.

இயேசு ஒலிவமலைக்குப் போனார். மறுநாள் காலையிலே அவர் திரும்பித் தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.

அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.

இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.

அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.

அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.

இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். (யோவான் 8:1-11)

தேவன் பாவத்தை வெறுக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், இயேசு பாவிகள் மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளார், அதிலிருந்து அவர்கள் விடுதலை அடையவேண்டும் என்று இயேசு எவ்வளவு ஆர்வமாக உள்ளார் என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா? இதனை நாம் மேற்கண்ட நிகழ்ச்சி மூலமாக அறிந்துக்கொண்டோம். இது ஒரு நிகரற்ற நிகழ்ச்சியாகும். உண்மையாகவே, நாம் அனைவரும் அவரிடம் வந்து மன்னிப்பு கோரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அந்த மன்னிப்பை அவர் மூலமாக பெற்றுக்கொண்டால், அதன் பிறகு அவர் மீது நாம் வைக்கும் அன்பு, பாவங்களை விட்டு நாம் விடுபடுவது சுலபமான ஒன்றாக மாறிவிடும்.

கீழ்படிதலும், அவர் மீது வைத்திருக்கும் மாறாத நம்பிக்கையும், நம்மை ஒரு அடிமைத்தனத்திற்கு கொண்டுச் செல்லாது, அதற்கு பதிலாக உண்மை சுதந்திரத்தில் நம்மை அது வாழவைக்கும்.

இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:31-32)

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 8:34)

இயேசு தம்மை நம்பும் மக்களிடம் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்கள் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 3:3)

இயேசு தொடர்ந்து கூறும் போது, இந்த மறுபிறப்பு என்ற அனுபவம் இல்லாமல் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் நுழைவது என்பது கூடாத காரியம் என்று கூறினார். இதன் அர்த்தம் என்னவென்றால், இயற்கையான ஆரம்பம், இயற்கையான பிறப்பில் ஆரம்பிக்கிறது, அதே போல‌ ஆன்மீக ஆரம்பம் ஆன்மீக பிறப்பிலிருந்து ஆரம்பிக்கிறது. இந்த ஆவிக்குரிய (ஆன்மீக) பிறப்பு எப்போது நடைபெறுகிறது என்று கேட்டால், எந்த நாளில் நாம் "விடுதலை ஆகிறோமோ?" அல்லது "மறுபடியும் பிறக்கிறோமோ" அப்போது நடைபெறுகிறது. தேவ‌ன் ந‌ம்முடைய‌ பாவ‌ங்க‌ளை ம‌ன்னிக்கும் போது, அத‌ன் மூல‌மாக‌ ந‌ம் பாவ‌ங்க‌ள் க‌ழுவ‌ப்ப‌டும் போது, நாம் விடுத‌லை பெறுகிறோம். இந்த‌ விடுத‌லை கிட‌த்த‌வுட‌ன், ந‌ம்முடைய‌ அடிமைத் த‌ன‌ம் முறிக்க‌ப்ப‌டும், குற்ற ம‌ன‌சாட்சி ந‌ம்மை விட்டு நீங்கிவிடும், அப்போது "புதிய‌ வாழ்வு" ந‌ம‌க்குள் ஆர‌ம்பிக்கும். புது வாழ்வு என்ப‌து தேவ‌னின் ஆவி ந‌ம்முடைய‌ இருத‌ங்க‌ளில் ந‌ற்கிரியைக‌ளைச் செய்யும், ம‌ட்டும‌ல்ல‌ நம்முடைய‌ இருத‌ய‌ம் புதிய‌தாக‌ மாறும் (ரோம‌ர் 12:2). இந்த‌ நிக‌ழ்ச்சிக‌ள் ந‌ட‌க்கும் போது, நாம் இய‌ற்கையாக‌வே பாவ‌த்தை வெறுப்போம், நீதியையும் நியாய‌த்தையும் நேசிப்போம், ம‌ற்றும் ந‌ம்மை விடுத‌லையாக்கிய மேசியாவாகிய இயேசுவை பின்ப‌ற்ற‌ ஆர‌ம்பிப்போம். இவைக‌ள் அனைத்தும், தேவ‌ன் ந‌ம‌க்குத் த‌ரும் பரிசாக உள்ள மன்னிப்பை நாம் பெற‌ த‌யாராக‌ இருக்கிறோம் என்றுச் சொல்லும் ந‌ம்முடைய‌ முடிவின் மீது சார்ந்திருக்கிற‌து. இத‌ன் விளைவு - தேவ‌னை இன்னும் அதிக‌மாக‌ அறிய‌ ந‌ம‌க்கு ஆர்வ‌ம் உண்டாகும். தேவ‌ன் ந‌ம்மோடு பேச‌வும், அவர‌து வார்த்தைக‌ள் மூல‌மாக‌ பேச‌வும் நாம் தேவ‌னை அனும‌தித்தால், ப‌ர‌லோகில் இருக்கும் அந்த‌ பிதாவோடு நெருங்கிய‌ உற‌வுட‌ன் வாழ‌ நாம் த‌குதியான‌வர்க‌ளாக‌ மாறுவோம்.

ஆங்கில மூலம்: What Jesus Taught Us

"ஒரு தூது" இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2011. All rights reserved.
 

 

January 18, 2012

Answering PJ: இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்

 

Answering PJ: இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்

பிஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு எழுதிய மூன்றாம் மறுப்பின் துணைக் கட்டுரையாக இந்த தற்போதைய கட்டுரையை பதிக்கிறேன்.
இந்த தற்போதைய கட்டுரையை படிப்பதற்கு முன்பாக, கீழ்கண்ட மறுப்பை படியுங்கள்:

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு – 3 (இயேசு எழுதியதையும், இயேசுவிற்கு கர்த்தரிடத்திலிருந்து வந்ததும் குர்‍ஆனிடமோ, பீஜே அவர்களிடமோ உண்டா?)
இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்

What Jesus Said About Himself
தம்முடைய செய்தி தேவனிடமிருந்து வந்தது என்றும் மற்றும் அதன் நம்பகத்தன்மையை பரிசோதித்து பார்க்கமுடியும் என்றும் இயேசு கூறினார்:
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். (யோவான் 7:16-17)
இயேசு தம்முடைய செய்தி நித்திய நித்தியமானது என்றும், அது மாறாதது என்றும் கூறினார்:
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (மத்தேயு 24:35)
இயேசு பரலோகத்திலிருந்து (மேலிருந்து) இந்த உலகில் வந்தார் என்று கூறினார்:
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18:37)
இயேசு பரலோகத்திலிருந்து, தேவனிடமிருந்து இந்த உலகில் வந்தார் என்று கூறினார்:
பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13)
தேவன் எப்போதும் இடைவிடாமல் தம்மோடு இருப்பதாக கூறினார்:
என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார். (யோவான் 8:29)
பரலோக பிதாவின் சித்தம் செய்து, அவரை கனப்படுத்துவதே தம்முடைய ஊழியமாக உள்ளது, இது தான் எப்போதும் தம்முடைய மனதில் இருக்கும் ஆர்வம் என்று கூறினார்.
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. (யோவான் 4:34)
நாம் ஏன் இயேசுவை விசுவாசிக்கவேண்டும் (நம்பவேண்டும்)?
என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. (யோவான் 8:46)
இறைவனின் எல்லா தீர்க்கதரிசிகளும் பாவமற்றவர்கள் என்று இஸ்லாமியர்கள் சிலவேளைகளில் கூறுவார்கள். ஆனால், இது உண்மையல்ல.
  • இயேசு மட்டுமே பாவமில்லாத பரிசுத்தராக இருக்கிறார் (குர்‍ஆன் 19:19).
  • நாம் ஆதாமின் பாவம் பற்றி குர்‍ஆனில் படிக்கிறோம் (குர்‍ஆன் 7:22,23),
  • மோசேயின் பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 28:15,16),
  • ஆபிரகாமின் பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 26:82),
  • யோனாவின் பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 37:141-144),
  • தாவீது செய்த பாவம் பற்றி படிக்கிறோம் (குர்‍ஆன் 38:24,25),
  • கடைசியாக முஹம்மதுவின் பாவங்கள் பற்றியும் அதே குர்‍ஆனில் படிக்கிறோம் (குர்‍ஆன் 40:55, 47:19, 48:1,2).

நாம் இறைவன் சொல்வதின் படி செய்யவேண்டுமென்றால், முதலாவது இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். (யோவான் 6:29)
நீங்கள் இயேசுவை புறக்கணித்தால், இறைவனை புறக்கணிப்பதற்கு சமம்.
"...என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்." (லூக்கா 10:16)
இயேசு ஒரு நற்செய்தியை மட்டும் கொண்டுவரவில்லை, அவர் ஒரு "வேலையை" செய்துமுடிக்க வந்தார்.
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். (லூக்கா 19:10)
பாவிகள் மனந்திரும்பவேண்டும் என்று அவர்களை அழைக்க வந்தார். அவர்களை ந‌ரகத்திலிருந்து காப்பாற்ற இயேசு வந்தார். இறைவனின் இடத்திற்கு நான் செல்வதற்கு எனக்கு தேவையான நீதி, பரிசுத்தம் எனக்கு உள்ளது என்று நினைக்கும் மனிதன், தனக்கு இயேசு தேவையில்லை என்று நினைக்கிறான்.
இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். (மாற்கு 2:17)
சோர்ந்துபோய், பாடுபடும் மனிதர்களுக்கு இயேசு ஒரு சகோதரனாவார். கலங்கும் இதயத்திற்கு அமைதியை கொடுக்க இயேசு விரும்புகிறார்.
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். (மத்தேயு 11:28-30)
நாம் உயிர் வாழ தண்ணீர் அவசியம். ஆன்மீக முறையில் சொல்லவேண்டுமென்றால், இயேசு "ஜீவத் தண்ணீரைத் தருகிறார்", இதனால் நம்முடைய தேவை பூர்த்தியாவதோடு மட்டுமல்லாமல், நம்மிலிருந்து ஜீவ ஊற்று புறப்படும், அதனை மற்றவர்கள் பருகி பயனடையவும் அவர் உதவி செய்கிறார்.
". . .ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்". (யோவான் 7:37-38)

நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். (யோவான் 4:14)
நாம் தேவனை நேசிக்கிறோம் என்பதை இயேசு மீது நம்பிக்கை வைப்பதின் மூலமாக நிருபித்துக் காட்டவேண்டும்.
உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். (யோவான் 5:42-43)
(இயேசு வாழ்ந்த காலகட்டத்தின் வழக்கப்படி, தம்மைப் பற்றி கூறும் போது படர்க்கையில் குறிப்பிடுகிறார்). இங்கு இயேசு தம்மைப் பற்றி மிகவும் முக்கியமாக மற்றும் சிறப்பான விவரத்தை கூறுகிறார்
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிற படியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். (யோவான் 3:18-21)

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8:12)

அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். (யோவான் 12:44-46)
இயேசு அனேக முறை உவமைகளாக பேசினார். இந்த வசனங்களில் அவர் தன்னை ஒரு "வாசல்" என்றும், தானே "ஒரு மேய்ப்பன்" என்றும் கூறுகிறார், மற்றும் தன்னை பின்பற்றுபவர்கள் "ஆடுகள்" என்றும் கூறுகிறார்
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:9-10)

நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோவான் 10:11)

நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோவான் 10:14-15)
தம்முடைய சுயசித்தம் மற்றும் அதிகாரத்தின் படி தாம் தம்முடைய உயிரை கொடுக்கிறார் என்பதை இங்கு தெளிவாக இயேசு கூறுகிறார்.
நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். (யோவான் 10:17)
இயேசு "முழு ஜீவனை" அல்லது "பரிபூரண ஜீவனை" தருகிறார், இது இந்த உலகத்திலும், வரப்போகிற உலகிலும் நமக்கு நம்பிக்கையை தருகிறது.
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. (யோவான் 10:27-28)
ஒரு பெண்ணின் சகோதரன் மரித்து கல்லரையில் வைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது, அவனை இயேசு உயிரோடு எழுப்பினார். இந்த நேரத்தில் இயேசு கூறியவைகள்:
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 10:25-26)
இயேசு தாம் மட்டுமே நித்திய ஜீவனையும், இரட்சிப்பையும் தரமுடியும் என்று ஆணித்தரமாக கூறுகிறார்.
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:6)
சில ஆன்மீக காரியங்களை விவரிப்பதற்கு இயேசு உவமைகளை பயன்படுத்தினார். இந்த உவமைகளில் ஒரு உவமை மிகவும் ஆழமானது. இந்த உவமையில் இயேசு, தான் எங்கே இருந்து வந்தார் என்பதையும், தாம் வந்ததற்கான காரணம் என்னவென்பதையும் கூறுகிறார்:
வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார். (யோவான் 6:33)

இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். (யோவான் 6:35)

பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. (யோவான் 6:37-39)

ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. (யோவான் 6:63)
இயேசு இங்கு தாம் சொல்லவந்த விஷயத்தை நச்சென்று ஒளிவு மறைவின்றி கூறுகிறார்:
இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (யோவான் 8:42)

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். (யோவான் 6:23-24)
தம்முடைய மரணத்திற்கு முன்பு, தம்முடைய நெருங்கிய சீடர்களிடம் இயேசு கீழ்கண்டவிதமாக கூறுகிறார்:
நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். (யோவான் 16:28)
தன்னை பின்பற்றுபவர்கள் தன்னுடைய தெய்வீகத்தின் மீது நம்பிக்கை வைக்கும் படி இயேசு கூறுகிறார், மற்றும் அதற்கான ஆதாரத்தையும் அவர் காட்டுகிறார்.
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். (யோவான் 14:9-11)
ஒரு குறிப்பிட்ட ஜெபத்தில் இயேசு தம்முடைய பிதாவிடம் தமக்கு இருக்கும் உரிமையை கூறுகிறார், மற்றும் தாம் நித்திய நித்திய காலமாக இருப்பதாக இயேசு கூறுகிறார்.
பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். (யோவான் 17:5)
இவ்வுலகில் இயேசுவிற்கு ஒரு மனித தாய் இருந்ததினால், அவரும் ஒரு மனிதனாகவே காணப்பட்டார். நமக்கு எப்படியோ அப்படியே அவருக்கும், பசி, தாகம், சோர்வு, ஜெபிக்க வேண்டும் என்ற ஆர்வம், வலி வேதனை என்று எல்லாமே இருந்தது. இயேசுவின் பிறப்பில் மனித தந்தையின் அவசியமில்லாததால், அவர் ஒரு தெய்வீகமானவராகவும், சுகப்படுத்துகிறவராகவும், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிறவராகவும் இருந்தார், மற்றும் தண்ணீரின் மீது நடப்பவராகவும், பாவங்களை மன்னிக்கின்றவராகவும், காற்றையும் கடலையும் அதட்டி அமைதிபடுத்துகின்றவராகவும், இன்னும் அனேக அற்புதங்கள் செய்கின்றவராகவும் இருந்தார். ஆகவே, இப்படிப்பட்டவர் நட்புறவு கொள்கிறேன் என்று எடுத்த எடுப்பிலேயே நம்மிடம் சொன்னால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.
அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். (லூக்கா 22:70)
இவர் மூலமாக மட்டுமே நமக்கு பயத்திலிருந்து விடுதலை கிடைக்கும். மட்டுமல்ல, மரண பயத்திலிருந்தும், சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும், பாவங்களிலிருந்தும் நமக்கு விடுதலை இவர் மூலமாக மட்டுமே கிடைக்கும்.
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவான் 8:36)
ஒருமுறை தம்மைப் பற்றி இயேசு மிகவும் ஆச்சரிப்படும்விதத்தில் கூறினார். அவர் என்ன கூறுகிறார் என்று நம்மால் புரிந்துக்கொள்ள முடியுமா? ஆனால், அன்று அவருடைய கூற்றை கேட்டவர்களுக்கு நிச்சயமாக அவர் சொன்னது புரிந்தது.
அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:58)
இங்கு குறிப்பிடவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், எபிரேய மொழியில் "நான் (I am)" என்பது "யேகோவா" விற்கு கொடுக்கப்பட்ட பெயராகும். இது பைபிளின் தேவன் தனக்குள்ள பெயர் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி இயேசு தன்னை "நான் (I am)" என்று சொன்னதினால், யூதர்கள் அவரை கொலை செய்ய முயற்சி எடுத்தனர். இந்த இடத்தில் இன்னும் ஒரு முக்கியமான விளக்கத்தைக் காண்கிறோம். தேவன் நித்தியமானவராக இருப்பதினால், அவருக்கு "இருந்தார் (was)", "இருப்பார் (will be)" என்றுச் சொல்ல முடியாது. அதற்கு பதிலாக அவர் "இருக்கிறார் (is)" என்றுச் சொல்லவேண்டும். இயேசு முக்கியமாக என்ன கூறினார் என்று பார்த்தால், "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பாக நான் இருக்கிறேன், அப்படியானால், நான் எப்போதும் வாழ்கின்றவனாக இருக்கிறேன்" என்று அர்த்தம்.

இயேசு மட்டும் பரலோகில் தனிமையாக இருக்க விரும்பவில்லை, உங்களையும் என்னையும் அவர் நேசிக்கிறார். அவரது அன்பிற்கு நாம் என்ன பதில் கொடுக்கப்போகிறோம்? நாம் அவரது அன்பிற்கு பதில் தரவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
"பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்;. . ." (யோவான் 15:9)
இயேசு நம்மீது வைத்த அன்பு வெறும் வெத்து வார்த்தைகள் அல்ல, அந்த தெய்வீக அன்பை அவர் நிருபித்தும் உள்ளார்.
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவான் 15:13)
அனேக முறை இயேசு தம்முடைய மரணம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார், மற்றும் தம்முடைய மரணத்தின் நோக்கம் என்ன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:28)
தற்காலத்தில் நாம் "பிணைப்பணம்" என்பதை அபூர்வமாக பயன்படுத்துகிறோம். சில நேரங்களில் நாம் செய்திகளில் படிப்பது போல, கடத்தல்காரர்கள் அரசாங்கத்திடம் அல்லது பணக்காரர்களிடம் "பிணைப்பணத்தை" கேட்கிறார்கள். ஒரு பிணைக் கைதியை விடுவிக்க கொடுக்கப்படும் பணம் தான் பிணைப்பணம் எனப்படுகிறது. பாவத்தின் பிடியில் சிக்கிய நம்மை விடுதலைச் செய்ய இயேசு ஒரு விலையை செலுத்தியுள்ளார். இயேசு தம்முடைய நெருங்கிய சீடர்களிடம் தாம் மரிக்கப்போவதாக நான்கு முறை கூறினார். ஆனால், ஆரம்பத்தில் அவர் சொன்னதை சீடர்கள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை.
இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.

அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். (மாற்கு 10:33,34)
தம்முடைய மரணத்திற்கு முன்பாக, இயேசு ஜெபத்தில் தரிந்திருந்தார், அந்த சிலுவையில் அறையப்படுத்தலின் வலியை அவர் முன்னதாகவே தாங்கினார்.
அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26:42)
இயேசுவை கைது செய்தவர்கள், இறை நம்பிக்கையற்ற கூட்டமல்ல. இவர்கள் மார்க்க விஷயங்களில் மிகவும் ஆழமாக கற்றுத்தேர்ந்தவர்கள், அக்காலத்தின் மார்க்க அறிஞர்களாக இருந்தவர்கள், தங்களுடைய மார்க்க அதிகாரம் எங்கே பறிபோய்விடுமோ என்று பயந்து அவர்கள் இயேசுவை கைது செய்தார்கள். இயேசுவை கைது செய்யும் நேரத்தில், இயேசுவின் ஒரு சீடன், கத்தியை எடுத்து அதன் மூலம் சண்டையிடவும், எதிர்க்கவும் முற்பட்டான். ஆனால், இயேசு அவனிடம் இவ்விதமாக கூறினார்:
நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். (மத்தேயு 26:53,54)
"தீர்க்கதரிசனங்கள் நிறைவேற வேண்டியது" என்பதை புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், நாம் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள், இயேசுவின் வாழ்வில் நிகழவேண்டிய பல நிகழ்ச்சிகள் பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக முன்னுரைத்தவைகளை நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும். இயேசுவின் தெய்வீகத்தன்மை, அவர் நித்திய நித்தியமாக இருப்பவர் என்றும், அவரது அற்புதமான கன்னிப் பிறப்பு பற்றியும், அவரது சிலுவை பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றியும் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தனர். இயேசுவின் வாழ்வில் அந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவேறியது.

இன்று அனேக மக்களுக்கு இயேசுவின் செய்திகள் கலங்கப்படுத்துவதுபோல, அக்காலத்தில் யூதர்களையும் அது கலங்கப்படுத்தியது.
அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.

யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். (யோவான் 10:31-33)
தம்முடைய வாழ்வின் மிகவும் பயங்கரமான நேரத்திலும் இயேசு தமக்காக அல்ல, பிறருக்காக சிந்தித்தார்:
கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். (லூக்கா 23:33,34)
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, தம்முடைய ஒரு சில சீடர்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்களுடன் இவரும் சென்றார். ஆனால், அவர்களோ ஆரம்பத்தில் அவரை அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை. இயேசு மரித்துவிட்டார் என்பதினால் அவர்கள் அதிக துக்கத்தில் இருந்தார்கள். அவர்களிடம் இயேசு இவ்விதமாக கூறினார்:
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். (லூக்கா 24:25-27)
பழைய ஏற்பாட்டில் தம்மைப் பற்றி கூறிய தீர்க்கதரிசனங்களைப் பற்றி இயேசு குறிப்பிடுகிறார்.

ஒருசிலர் இப்படியாக யூகிக்கிறார்கள், அதாவது இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, அவர் சுயநினைவு இழந்து இருக்கும் நிலையில், அவரை சிலுவையிலிருந்து இறக்கி, மறுபடியும் அவரது காயங்களை சுகப்படுத்தினார்கள் என்று கற்பனையாக கூறுகிறார்கள். இது நிச்சயமாக முடியாத செயலாகும். ஏனென்றால், போர்ச்சேவகர்கள் அவர் மரித்துவிட்டாரா என்பதை சோதித்துப் பார்த்தார்கள், அவரது விலாவில் குத்தினார்கள், அதன்பிறகு தான் இறக்கினார்கள் (யோவான் 19:33). இதற்கு இயேசு சொல்லும் பதில் என்ன?
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்தின விசேஷம் 1:17,18)
ஒரு சிலர் கூறுவது போல,இயேசு யூதர்களுக்காக மட்டும் வரவில்லை. அவர் இதைப் பற்றி கூறும் போது:
எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. (லூக்கா 24:46,47)
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு 39 நாட்கள் கழித்து, அவரது சீடர்களின் கண்கள் காண அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். தம்முடைய சீடர்களிடம் அவர் பேசிய கடைசி வார்த்தைகள் இவைகள்:
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (மத்தேயு 28:18-20)
இதற்காகத் தான் கிறிஸ்தவ விசுவாசிகள் இயேசுவையும், அவரது நற்செய்தியையும் உலகம் அறிய விரும்புகின்றனர். உலகத்தின் முடிவு வரும் போது, இயேசு ஒரு நியாயாதிபதியாக வருவார்.
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; (யோவான் 5:21-28)
வேறு எதுவும் நம்மை சிந்திக்க வைக்கவில்லையானாலும், இது நம்மை சிந்திக்க வைக்கும். பல்வேறு வகையான பயத்தினால் அவர் தரும் பரிசை பெற நாம் தாமதிப்போமானால், அது வெறும் மூடத்தனமாகும்.

தம்மீது நம்பிக்கை வைக்கும்படி இயேசு நம்மை உற்சாகப்படுத்துகிறார் மற்றும் நமக்காக அவர் என்ன செய்து இருக்கிறார் என்பதை கண்டாவது நம்பிக்கை வைக்கும் படி உற்சாகப்படுத்துகிறார்.
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். (யோவான் 14:1-3)
இயேசு மறுபடியும் வருவார். இந்த முறை அவர் இரட்சிப்பதற்காக அல்ல, அதற்கு பதிலாக தம்முடைய விலை மதிக்கமுடியாத பரிசாகிய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களை நியாயந்தீர்க்க வருவார். ஆகையால், அவர் வருவதற்கு முன்பாக நாம் தயாராக இருக்கவேண்டும்:
அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார். (லூக்கா 12:40)
இது எப்படி நடக்கும் என்பதை முன்னமே நமக்கு அவர் கூறியுள்ளார்:
அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். (மாற்கு 14:62)

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். (மாத்தேயு 24:27)
இயேசு மறுபடியும் இவ்வுலகிற்கு வரப்போகிறார், உலகத்தின் எல்லா நாடுகளின் மக்களை நியாயந்தீர்க்க வரப்போகிறார். ஆனால், அந்த நியாயத்தீர்ப்புக்கு முன்பு நாம் மரிக்க நேரிடலாம், ஒருவேளை நாம் மரித்தால், அந்த நேரத்தில் அவர் நம்மை சந்திப்பார்.

இயேசு தம்மைப் பற்றி கூறும்போது ஏன் "தேவகுமாரன்" என்றுச் சொல்லாமல், அதற்கு பதிலாக "மனுஷ குமாரன்" என்றுச் சொன்னார்? "மனுஷ குமாரன்" என்ற பட்டப்பெயர் கி.மு. 555ல் பழைய ஏற்பாட்டில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது.
இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும். (தானியேல் 7:13-14)
இந்த வசனத்தின் அடிப்படையில் நாம் பார்த்தோமானால், "மனுஷ குமாரன்" மற்றும் "தேவ குமாரன்" போன்றவைகளுக்கு இடையே எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை காணலாம்.

இயேசுவிடமிருந்து மன்னிப்பைப் பெறும் நேரம் இன்னும் முடிந்துவிடவில்லை. இயேசு இன்று கூட காத்துக்கொண்டு இருக்கிறார். நமக்கு கீழ்கண்ட வரவேற்ப்பை கொடுத்துவிட்டு அவர் சென்றுள்ளார்கள்.
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளிப்படுத்தின விசேஷம் 3:20)
ஆங்கில மூலம்: What Jesus Said About Himself

© Answering Islam, 1999 - 2011. All rights reserved.