அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label அமைதி. Show all posts
Showing posts with label அமைதி. Show all posts

May 12, 2009

மனதை விட்டு நீங்க மறுக்கும் பிரேம் கோபாலின் அந்த வார்த்தைகள்


தினம் தினம் இலங்கையில் நூற்றுகனக்கான மக்கள் இலங்கை இராணுவத்தினரால் பலியாய் கொண்டிருக்கும் இந்த வேளையில் தனது பொருப்பை சரியாய் செய்த பிரேம் கோபாலை பாராட்டாமல் இருக்கமுடியாது. தனது திறமையை வெளிபடுத்துவதோடு ஒரு செய்தியையையும் உலகெங்கும் விரைவாக எடுத்துசென்ற அவரது பணி மெச்சிகொள்ளக்கதக்கது. அதிலும் அவர் சொன்ன ஒரு வார்த்தைகள் அவரின் உணர்வுகள் இன்னும் என் மனதை விட்டு இயலாமல் இருக்கிறது. அதிலும் சொன்னாரே ஒரு வார்த்தை " இங்கு ஒரு புறாவை கேட்டேன். இறுதியில் பறக்கவிட ஆனால் மிருகவதை தடை சட்டப்படி அது தடை செய்யப்பட்டுள்ளது என்றனர். அட பாவமே இங்கு ஒரு புறாவுக்கு.. அங்கு தினம் தினம் செத்துகொண்டிருக்கிறார்களே "' எவ்வளவும் உணர்ச்சிபூர்வமான பரிதாபமான வார்த்தைகள். இங்குள்ள இனி மத்தியில் வர இருக்கும் புதிய‌ அர‌சாங்க‌மாவ‌து த‌க்க‌ ந‌ட‌வடிக்கை எடுத்து இல‌ங்கையில் அமைதி நில‌வ‌ உதவ‌வேண்டும் என்ப‌தே அனைவ‌ரும் ஆவா..

http://www.youtube.com/watch?v=K8mpEzO6Wy4

May 9, 2009

செயற்க்கை கோள் படங்கள் சொல்லும் செய்தி:

ஐ நா சபையால் செயற்கைகோளின் உதவியால் எடுக்கப்பட்ட இந்த படங்கள் சொல்லும் செய்தி இலங்கை தமிழன் அழிந்துகொண்டிருக்கிறார். இருக்கும் இடம் தெரியாமல் போய்கொண்டிருக்கிறது. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்.. ஐ நா சபையே... படம் எடுத்து பார்ப்பதோடு நிறுத்திகொள்ளாமல் இருந்தால் சரிதான்..



யார் அந்த முத்துகுமார் : இளங்கோவன் நக்கல்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் அதுவும் தமிழக மக்களால் நாடாளமன்றத்துக்கு அனுப்பப்பட்டவ இந்த இளங்கோவன் தமிழர்களை அவமதிப்பதில் கொஞ்சமும் வெட்கப்படாதவர். பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்குதான் இந்த நக்கலான பதில் வந்தது யார் அந்த முத்துகுமார்????.. ம்ம் இவரையெல்லாம் தேர்ந்தெடுத்து நாடாளமன்றத்துக்கு அனுப்பிய நாம் தான் வெட்கப்படவேண்டும்



அமைதியை கொடு இறைவா.. (நன்றி விஜய் டி வி)


நடனமும் கண்ணீரை வரவழைக்கும் என்பது இவரின் இந்த வீடியோவிலிருந்து தெரிகிறது. இதன் இறுதியில் இலங்கை தமிழ் மக்களின் அவலம் தெரிகிறது. அவர்களின் அழுகுரல் என் உள்ளத்தில் இன்னமும் ஒளித்துகொண்டே இருக்கிறது. இதை எழுதும்போதும் உள்ளத்தால் அழுதுகொண்டு இருக்கிறேன். நிச்சயம் அமைதி திரும்ப வேண்டும். அவர்களின் கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாறவேண்டும். இறைவா அமைதியை கொடு இறைவா..

April 27, 2009

இலங்கையில் அமைதி : உலக நாடுகளின் நிர்பந்ததுக்கு அடிபணிந்தது.

இலங்கை தமிழர்களை இந்தியா கைவிட்டுவிட்ட நிலைமையில் உலக நாடுகளின் நிர்பந்த குரல் ஓங்கி ஒலிக்க துவங்கியது. அமெரிக்க வெளி விவகார துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் சமீபத்தில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். ஐ நா சபையும் தனது கணடனத்தை தெரிவித்திருந்தது.
வரும் 29ந்தேதி இங்கிலாந்து வெளியுறவுதுறை அமைச்சர் டேவிட் அவர்களும் பிரான்ஸ் வெளியுறவுதுறை அமைச்சர் பெர்னார்ட் அவர்களும் சுவீடன் வெளியுறவுதுறை அமைச்சர் கார்ல் பில்ட் அவர்களும் வர இருக்கும் நிலையில் சண்டை நிறுத்தம் அறிவிக்க இங்கிலாந்து பிரதமர் கார்டன் இலங்கை அதிபருடன் தொலைபேசியில் பேசி நிர்பந்திதிருந்தார்.

http://www.bloomberg.com/apps/news?pid=20601087&sid=aGk_OuTLuXNo&refer=home

உலக நாடுகள் எல்லாம் கடுமையான கண்டனம் தெரிவிக்க காரணம் ஏறக்குறைய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு சமீபத்திய படையெடுப்பில் கொன்று குவித்தது. விடுதலை புலிகளை கொல்கிறோம் என்ற போர்வையில் தமிழனத்தையே அழிக்க முற்பட்டு அதற்கான முயற்சியும் செய்துவந்தது. இந்தியாவும் இங்கு இலங்கைக்கு ஆதரவான நிலையையே கொண்டிருந்தது. இதனால் பார்த்து பொருமையிழந்த உலக நாடுகள் அனைத்தும் இப்பிரச்சனையில் தலையிட ஆரம்பித்தன.

இந்நிலையில் விடுதலைபுலிகளும் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. இனியும் உலக நாடுகளை ஏமாற்ற முடியாது என்ற நிலைக்கு இலங்கை வந்துள்ளது. தனக்கு நெருக்கடி அதிகரிப்பதை அறிந்த இலங்கை இனியும் உலக நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் போர்நிறுத்த நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் விளைவாகதான் இன்று போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஒன்றுமறியா அப்பாவி மக்களின் இரத்ததை குடித்த இலங்கை அரசு இனியாவது இப்படிப்ப‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கையில் ஈடுப‌டாது அமைதி வ‌ழியில் த‌மிழ‌ர்க‌ளை வாழ‌ வ‌ழிவ‌கை செய்துத‌ர‌வேண்டும் என்ப‌தே இறைவ‌னிட‌ம் நாங்க‌ள் வைக்கும் ம‌ன்றாட்டு.

இல‌ங்கையில் அமைதி திரும்ப‌ உத‌விய‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னுக்கு உள்ள‌மெல்லாம் நிறைந்த‌ ந‌ன்றி க‌ல‌ந்த‌ வ‌ண‌க்க‌ங்க‌ள்.

April 25, 2009

சிதம்பரத்தின் சாயம் வெளுத்துபோச்சு

அட இந்த இலங்கை அரசு சும்மா இருக்ககூடாதா அதுக்குள்ள இப்படி போட்டு வாங்கனும்மா..

ஆமா இங்க சென்னையில நேற்று முதல்வரும் சிதம்பரமும் இலங்கைக்கு சென்ற தூதர்கள் போரை நிறுத்த வலியுறுத்தினார்கள் என்று நிருபர்களிடம் சொன்னார்கள். அதற்கு நிருபர்கள் டெல்லி வந்து சேர்ந்த தூதர்கள் அப்படி சொன்னத தகவல் இல்லையேன்னு திரும்ப முதல்வரிடம் கேட்டதுக்கு இல்லையில்லை டெல்லியில் அழகா அறிக்கை கொடுத்திருக்கிறார்கள் போரை நிறுத்த சொல்லி இந்தியா வற்புறுத்தியது என்று அடித்து சொன்னார்.

சொல்லி இப்படி திரும்புவதற்குள் இலங்கையிலிருந்து செய்தி வருகிறது. இந்தியா போரை நிறுத்த சொல்லவில்லையென்று.

* India did not call for ceasefire, Sri Lanka government says
Saturday, April 25, 2009, 12:40 GMT, ColomboPage News Desk, Sri Lanka.


Apr 25, Colombo: Sri Lankan government today said that the government of India did not call for a ceasefire during the talks with President Mahinda Rajapaksa held yesterday.

President's Secretary Lalith Weeratunga confirmed to the media that the discussion between Indian National Security Advisor M.K. Narayanan, External Affairs Secretary Shivshankar Menon and President Mahinda Rajapaksa focused only the provision of relief for civilians fleeing the 'no fire zone' in Mullaitivu.

"Both parties did not discuss anything about a ceasefire or halting military operations in the North," he added.

Meanwhile, the Indian External Affairs Ministry announced that the emissaries had expressed concerns over the evolving situation in the North during the talks, especially over the casualties among Tamil civilians as a result of ongoing operations.

India Foreign Secretary Shivshankar Menon and its National Security Advisor M.K. Narayanan met with Sri Lanka President Mahinda Rajapaksa yesterday at the Temple Trees to discuss the catastrophic situation in the Northeast of the country.
http://www.colombopage.com/archive_09/April25124014RA.html

ஐய்யகோ யாரை திருப்திபடுத்த இப்படி இங்கு நாடகம் ஆடப்படுகிறதோ இறைவனுக்கே வெளிச்சம்..

ஈழம் நம் நாடு : நடிகர் சத்யராஜ்

April 24, 2009

ஈழத்திற்காக கொதிக்கும் ஒர் கவிஞர் -சகோதரி தாமரை. விடியோவில்

நடிகை ரோகிணியின் உணர்வு மிகு பேச்சு விடியோவில்

அவங்க சொல்லுவாங்களாம் இவங்க செய்வாங்களாம் கொதிக்கும் கவிஞர் தாமரை பாகம் 2

அவங்க சொல்லுவாங்களாம் இவங்க செய்வாங்களாம் கொதிக்கும் கவிஞர் தாமரை பாகம் 1

தினகரனும் சன் நியூஸும் இரட்டடிப்பு செய்யும் திரைப்படதுறையினரின் உண்ணாவிரதம்

திரைப்படத்தினரை விமர்சிக்கும் மக்கள் தொலைகாட்சியில் கூட அந்த செய்தி வந்துள்ளது ஆனால் சினிமா சினிமா என்று மக்களை சினிமாவை விட்டு வெளியே வரமாக செய்யும் சன் நெட்வெர்க்கில் நேற்று சினிமாதுறையின் உண்ணாவிரசெய்தியை குறித்து மூச் விடவில்லை. பத்திரிக்கையில் சிறியதாக போட்டுள்ளனர். ஆமா பின்ன மத்திய அரசாங்கத்திற்கு எதிராக அல்லவா தீர்மானம் போட்டுள்ளனர். இதில் திமுகாவும் ஒர் அங்கமள்ளவா.. பின்ன வரதா கோபம். இங்குள்ளவர்களை எதிர்க்காமல் இலங்கை பிரச்சனை பற்றி மட்டும் பேசினால் அவர்களுக்கு ரொம்ப சந்தோசம் ஆனா இங்குள்ளவர்களைபற்றி குற்றமாக பேசினால் அவ்வோளாதான். த‌மிழாவ‌து ஒன்னாவ‌து....ம்ம்..... கூம்...
.

திரைப்படத்துறையினரின் உருப்படியான தீர்மானம்

நேற்று நடந்த திரைப்படத்துறையின் உண்ணாவிரதம் சற்று உணர்வு பூர்வமாக இருந்தது. அதில் பேசியஅணைவரும் சற்று உணர்ச்சி வசப்பட்டவர்களாகவே காணப்பட்டனர்.

இறுதியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா மூன்று முக்கிய தீர்மானங்களை அறிவித்தார்

போர்நிறுத்தத்திற்கு போதுமான நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ் தலைமை தமிழகம் வரும்போது எதிர்ப்பு தெரிவிப்பது என்றும் இங்கு வாய் மூடி அமைச்சர்களாக இருக்கும் சிதம்பரம், இளங்கோவன் ம்ற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் போட்டியிடும் இடங்களின் எதிராக வாக்களிக்க தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பது என்றும்
அடுத்து தனக்கு மத்திய அரசால் கெளரவிக்கப்பட்ட பத்மஸீரி விருதினை திரும்ப தருவது என்றும் அறிவித்தார்.

இது சரியான தீர்மானாமாக தான் தெரிகிறது. இதற்கு அனைத்து தமிழக மக்களும் ஆதரவளிக்க வேண்டுமென்பதே நடுநிலையாளர்களின் ஆவல்

April 23, 2009

வேடிக்கையான தமிழக அரசியலும் இலங்கை பிரச்சனையும்

எல்லோரும் இலங்கை தமிழனை அரசியல் ஆதாயத்துக்காக பார்க்கிறார்களே என ஒரே வேதனை என் உள்ளத்தில். இப்படியும் சுயநல அரசியல்வாதிகள் நம் நாட்டில் மட்டும் தான் இருப்பார்கள்.

இதுவரை மத்திய அரசாங்கத்தில் முழு பலத்தையும் வெளிப்படுத்த சக்தி கொண்ட கலைஞர் இனி இப்படியும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா எனதெரியவில்லை. ஆனா சும்மா பேசியே காலத்தை ஓட்டி விட்டுட்டார். நம்ம மருத்துவர் ஐய்யாவோ யாருடன் கூட்டணி சேர்த்துள்ளார் என பார்த்தீர்களா. இராஜபக்சேவுடன் கூட்டணி சேர்ந்ததிற்கு சமம். டாஸ்மாக்கை ஒழிக்கவேண்டும் எனகூக்குரலிட்டவர் டாஸ்மாக்கை கொண்டுவந்தவருடனே கூட்டு சேர்ந்துள்ளார்.

இப்ப தமிழக அரசியலில் தந்திகொடுப்பது, பிறகு ஊர்வலம் நடத்துவது, பொதுகூட்டம் நடத்துவது பிறகு ஒரு வேலைநிறுத்த போரட்டாம் அறிவிப்பது இது தான் இன்றை ஸ்டைலாக போய் விட்டது. எல்லோரும் சுயநலவாதிகள்... பக்கா சுயநலவாதிகள்

இப்படி எல்லோருமே சுயநலமா இருந்துட்டு தேவை படும்போதுமட்டும் இலங்கை பிரச்சனையை கையிலெடுக்கிறீர்களே இது உங்களுக்கே நல்லாயிருக்கா. எது எப்படியோ அங்கு கொத்து கொத்தாக மடிந்துகொண்டிருக்கும் தமிழர்களை இறைவன் மட்டுமே காக்கமுடியும்..

April 9, 2009

சொந்தங்களை பறிகொடுத்தேன், அடுத்து குறி நான்தான்.

(எச்சரிக்கை: கண்டிப்பாக இளகிய மனமுடயவர்கள் இதில் உள்ள காணொளியைப் பார்க்க வேண்டாம்)


ஓ சொந்த நாட்டிலே வாழ வழியில்லாமலும் கண்முன் செத்துமடியும் சொந்தங்களை பார்த்தும் நாளை எனது நாளாகவும் இருக்கலாம் என பயந்த கண்களோடு ஓடி ஒளிய இடமில்லாமல் கண்ணீரை மட்டுமே சொத்தாக கொண்டு கண்ணீரோடு வாழும் தமிழ் இனமே காலை நல்ல பொழுதாக விடியட்டும் இறைவனின் கருணையால்






source : http://stop-the-vanni-genocide.blogspot.com/2009/04/blog-post.html

March 2, 2009

பிரணாப்: டெல்லியில் அப்படி, தமிழகத்தில் இப்படி

அன்று டெல்லியில் பாராளமன்றத்தில் இலங்கை உள் நாட்டு விவகாரத்தில் இந்திய அரசு தலையிடாது. அதே நேரம் விடுதலைபுலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடையவேண்டும் என்று சொன்ன வெளியுறத்துறை அமைச்சர் பிரணாப் அவர்கள் நேற்று தமிழகம் வந்தபோது விடுதலைபுலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தத்திற்கு இலங்கையும் சம்மதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். யாரை திருப்தி படுத்த இந்த அறிக்கையோ??? எதுவாயினும் இலங்கை தமிழருக்கு நன்மையாக முடிந்தால் சரிதான்

February 22, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம்

சென்னையில் நேற்று தீகுளித்த தொண்டர் தன் தலைவருக்குஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் ஒரு சாதாரண உடன்பிறப்பு ஒருவரின் கடிதமல்ல. உலகெல்லாம் உள்ள தமிழ் நெஞ்சங்களீன் உள்ள குமுரல். இந்த கடிதம் தான் இறுதி கடிதமாக இருக்கட்டும். ஈழத்தில் அமைதி மலரட்டும்


இலங்கையில் இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் மனிதசங்கிலிப் போராட்டம் நடைபெற்றபோது. தி.மு.கவின் தீவிர தொண்டரான மூதாளர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் ஹால்டா சந்தியில் மனித சங்கிலி ஊர்வலத்தின்போது தீக்குளித்தவர் தி.மு.க சைதாப்பேட்டை பகுதி பிரதிநிதி சிவப்பிரகாசம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
60 அகவையுடைய ஓய்வுபெற்ற சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கணக்காளரான இவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணியின் செயலர் மு.க.ஸ்ராலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவப்பிரகாசம் தீக்குளிப்பதற்கு முன்பு தனது கைப்பைக்குள் எழுதி வைத்திருந்த கடிதத்தை மருத்துவமனைக்குச் சென்ற ஸ்ராலினிடம் கொடுத்துள்ளனர்.அக்கடிதத்தில், ‘தமிழக முதலவர் அவர்களே இலங்கையில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றுங்கள். அங்கே கொல்லப்படும் நம் குலத்தை காப்பாற்றுங்கள்’ என்று சிவப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://www.tamilmann.com/2009/02/21/௧௧0௩
http://www.pathivu.com/news/443/54//d,view.aspx

February 20, 2009

படங்களை பார்த்தால் கண்கள் குளமாகும் உள்ளங்கள் உடையும்






படங்கள் : http://stop-the-vanni-genocide.blogspot.com/


























படங்களை பார்த்தால் கண்கள் குளமாகும் உள்ளங்கள் உடையும்

ஐயகோ என் இறைவா துப்பாக்கி சப்தங்கள் ஒழியனுமே
அமைதியின் காற்று வீசனுமே


இந்த அமைதியின் காற்று வீச‌ நம்மால் என்ன செய்ய இயலும் யோசித்தோம். முடிவு

கிறிஸ்த‌ ச‌கோத‌ர‌ர்க‌ளாக‌ வ‌ரும் மார்ச் 1 ந்தேதி இணைந்து இல‌ங்கையின் அமைதிக்காக பிரார்த்தனை செய்ய இருக்கிறோம் நீங்க‌ளும் அன்று இருக்கும் இட‌ங்க‌ளில் ஒரு நிமிட‌ம் பிரார்த்த‌னை செய்வீர்க‌ளா??

கிறிஸ்துநேசன்

February 11, 2009

போலி உமரும் - உளறல்களும்... ஆதாரம் எங்கே????????

இப்பதான் ஒரு கட்டுரையை படிச்சேன் அதாவது போலி உமரும் - உளறல்களும்... அப்படின்னு

ஆமாய்ய அவரு போலிதான்னு வைச்சுக்கோ சரி அவரு எந்த தளத்தில எழுதினாருன்னு நீங்க‌ ஒரு லிங்க் தரவேண்டியதுதானே அதுதானே வலைதளத்திலிருந்து ஒரு விசயத்தை மேற்கொள் காட்டும்போது கடைபிடிக்கவேண்டிய உலக நியதி. இந்த ஒரு விசயமே போதுமே யாரு பயப்படுகிறார்கள் என்று.. சகோதரரே முதலில் தொழில் தர்மம் என்று ஒன்று உண்டு. அதை கடைபிடிக்கவேண்டும். உங்களால் போலி என்று அழைக்கப்படும் உமர் அவர்களின் கட்டுரையில் எதற்காவது ஆதார லிங்க் தராமல் இருக்கிறாரா? உண்மையான(???) நீங்களோ அவரின் கட்டுரையை குறிப்பிடும்போது எதற்கும் அதற்கான லிங்க் தருவதில்லையே. இதை வலைதள சகோதரர்கள்தான் நிதானிக்கவேண்டும்.

Source :போலி உமரும் - உளறல்களும்...
http://christianpaarvai.blogspot.com/2009/02/blog-post.html
http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html
http://abunoora.com/

February 10, 2009

இலங்கையில் அமைதியை கொண்டுவர காங்கிரசாருக்கு ஒரு யோசனை.


ஆமாங்க இதில உங்களுக்கும் ஒரு பங்கு வேண்டாமா? ஏன்னா நீங்க சர்வ அதிகாரம் படைத்த இடத்தில் இருக்கீங்க. அடுத்த தேர்தல்ல தமிழ் மக்களீடம் வரும்போது அவங்க‌ உங்களை பாத்து ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் எடுக்கலன்னு கேள்வி கேட்பாங்க. நீங்க பதில் சொல்லமுடியாமா மூழிப்பீங்க. அதுக்குத்தான் இந்த ஐடியா..


அதாவது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஊர் ஊராக பேரணி நடத்துங்க. பொதுகூட்டம் நடத்துங்க. அது போதும் தமிழ் நாட்டு மக்களை ஏமாத்தா. ஆமா அப்படி செய்தா, நாங்க அவங்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினோம் இந்த மாதிரி யாராலயும் செய்யமுடியாது. எதிர் கட்சி காரங்களை நம்மாதீங்க. அவங்க சொல்றதெல்லாம் பொய் அப்படியின்னு சொல்லாலம். எப்படி ஐடியா...


அதிகாரத்தில் இருக்கும் நம்மைக்குறித்து சரித்திரம் சொல்லவேண்டும் இவர்கள் அதிகாரத்தில் இருந்தபோதுதான் ஈழத்தமிழர்களுக்கு விடிவு காலம் வந்தது என்று அப்படியின்னு யரோ ஒருவர் கடைகோடியில் நின்னு முனுமுனுக்கிறது எனது காதிலயும் கேக்கிறது.. என்ன செய்ய அவர்கள் காதில கேக்கலையே...


இறைவா இலங்கையில் யுத்தங்கள் ஓயவேண்டுமே இறை அமைதி தவழவேண்டுமே
வாஞ்சிக்கும்
கிறிஸ்துநேசன்