அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 28, 2010

நடந்தது என்ன - பேராசிரியரும் கேள்விதாளும்

சமீபத்தில் கேரளாவில் ஒரு பேராசிரியரின் கையை இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். காரணம் அவர் தயாரித்த கேள்விதாளில் அவர்களின் நபி அவர்களை அவமதித்ததாக சொன்னார்கள்.

ஆனால் விசாரணையில் கல்லூரியின் பாடத்திட்டத்தில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த குஞ்சுமுகமது என்பவர் எழுதிய ஒரு பாடத்தில் ஒரு கதாபாத்திரம் வருகிறது. அதில் ஒரு பைத்தியக்காரன் கடவுளிடம் பேசுவது போன்ற ஒரு உரையாடல் வருகிறது. அவர் எழுதின அந்த உரையாடலைதான் அந்த கேள்விதாளில் இந்த பேராசிரியர் போட்டுள்ளார். இது தான் விவாதமாகியுள்ளது. இதில் பேராசிரியர் ஒரு தவறும் செய்யவில்லை என பேராசிரியர் சங்கங்களும், பத்திரிக்கையாளர்களும் பொதுமக்களில் பெரும்பான்யோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

(ஆதாரம் : பாடதிட்டதின் நகலில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் அடிகுறிப்பிட்டபாகத்தை மலையாளம் தெரிந்தவர்களிடம் சொல்லி வாசித்து பாருங்கள்.)

இதில் கவனிக்கவேண்டியது முகமது என்ற பெயரை எப்படி நீ பயன்படுத்தலாம் என்பதுதான். இது என்ன கூத்தாக இருக்கிறது. அட அந்த இஸ்லாமிய ஆசிரியரின் பெயர் முகமதுதானே. எதாவது கேட்பதாக இருந்தால் அந்த இஸ்லாமிய ஆசிரியரை அல்லவா கேட்கவேண்டும்.

ஆக முகமது என்ற பெயர் வந்தாலே அது அவர்களின் நபியை தான் குறிப்பதாக சொல்லி யாரும் முகமது என்ற வார்த்தையையே பயன்படுத்தகூடாது என்பதை போலதான் இவர்களின் தாக்குதல் நடந்துள்ளது. யாராவது முகமது என்ற பெயரை வைத்துள்ளவர் களவு செய்தால் இனிமேல் ------ களவு செய்தான் என பெயரை குறிப்பிடாமல் சொல்லவேண்டும் என்பதை போல உள்ளது இவர்களின் நடவடிக்கை. இதைதான் அவர்களும் விரும்புகிறார்கள் போல..

முகமது என்ற பெயர் வேறுயாரும் பயன் படுத்தகூடாது என்பதுபோல உள்ளது அவர்களின் வாதம் அப்படி மீறி யாராவது பயன் படுத்தினால் அவர்களின் கையை வெட்டுவது காலை வெட்டுவது இதுதான பகுத்தறிவு உள்ள செயலா...

இது காட்டு மிராண்டி தனமாக் செயல் அல்லவா

கீழே உள்ள ஆதாரங்களையும்இந்த வீடியோவையும் பாருங்கள் உங்களுக்கே உண்மை புரியும்
























































August 26, 2010

குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?



குர்‍ஆன் முரண்பாடு: 

குர்‍ஆன் இறங்கிய விதம்

சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?

சாம் ஷமான்

குர்‍ஆன் ஒரு குறிப்பிட்ட இரவில் மொத்தமாக இறங்கியது என்று அனேக இடங்களில் குர்‍ஆன் சொல்கிறது:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (குர்‍ஆன் 2:185) 

ஹா, மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம். (அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்). (குர்‍ஆன் 44:1-7) 

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (குர்‍ஆன் 97:1-5)

நாம் மேலே படித்த வசனங்கள், இஸ்லாமிய வேதமாகிய குர்‍ஆன் முழுவதும் அந்த ஒரு இரவில் இறங்கியதாக சொல்கிறது. மேலே கண்ட வசனங்கள், சிறிது சிறிதாக குர்‍ஆன் இறங்கியது என்றுச் சொல்லவில்லை. அதற்கு பதிலாக ரமலான் மாதத்தில் அந்த குறிப்பிட்ட இரவில் குர்‍ஆன் இறங்கியதாக சொல்கிறது. இந்த குர்‍ஆன் வசனமாகிய 97:1ம் வசனம் பற்றி விரிவுரையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது நாம் காண்போம். இப்படி விரிவிரையாளர்களின் விளக்கங்களை நாம் பார்க்கவில்லையானால், வசனங்களின் பொருளை மாற்றி இவர்கள் சொல்கிறார்கள் என்று நம்மீது இஸ்லாமியர்கள் குற்றம் சுமத்துவார்கள்.

இதோ! நாம் அதை வெளிப்படுத்தினோம், குர்‍ஆனை முழுவதுமாகபாதுகாக்கப்பட்ட பலகைகளிலிருந்து வானத்திலிருந்து இறக்கினோம், கன்னியமிக்க இரவில், சிறப்புமிக்க இரவில் இறக்கினோம். (த‌ஃப்ஸீர் அல் ஜலலைன்) 

Lo! We revealed it, that is, the Qur'an, IN ITS ENTIRETY, [sending it down] from the Preserved Tablet to the heaven of this world, on the Night of Ordainment, that is, [the Night] of great eminence. (Tafsir al-Jalalayn; source; capital emphasis ours)

இப்படி இருந்தும், கீழ்கண்ட குர்‍ஆன் வசனங்களுக்கு மேலே கண்ட குர்‍ஆன் வசனங்கள் முரண்படுகின்றன:

இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம். (குர்‍ஆன் 17:105-106) 

இன்னும்; "இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?" என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம். (குர்‍ஆன் 25:32) 

And those who disbelieve say: "Why is not the Qur'an revealed (nuzzila) to him all at once?" Thus (it is sent down in parts), that We may strengthen your heart thereby. And We have revealed it to you gradually, in stages. (It was revealed to the Prophet in 23 years.). S. 25:32 Hilali-Khan

இந்த முரண்பட்ட நேரெதிர் வசனங்கள், இஸ்லாமிய அறிஞர்களை ஒரு சாதகமான விளக்கத்தை கொடுக்கும்படி செய்துள்ளது. இவர்களின் கூற்றுப்படி, முழு குர்‍ஆனும் ஒரே முறை அல்லாஹ்வினால் கீழ் வானத்திற்கு கொண்டுவரப்பட்டது, அங்கு அது இருந்தது. அதன் பிறகு காபிரியேல் (ஜிப்ராயீல்) தூதன் மூலமாக சிறிது சிறிதாக முஹம்மதுவிற்கு அல்லாஹ் குர்‍ஆனை இறக்கினான், அதாவது 23 ஆண்டுகள் முழு குர்‍ஆனும் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்று பொருள் கூறுகிறார்கள். 

நவீன காலத்தின் சலபி இஸ்லாமிய அறிஞராகிய டாக்டர் அபூ அமீனா பிலால் பிலிப்ஸ், இதைப் பற்றி கீழ்கண்டவாறு விளக்குகிறார்:

அல்லாஹ்வின் வேதத்தில் கூறியிருக்கிறபடி, குர்‍ஆன் இரண்டு தனிப்பட்ட விதங்களில் இறக்கப்பட்டது. குர்‍ஆனின் வெளிப்பாடு குறித்து குர்‍ஆனில் மற்றும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்ட விவரங்களில் உள்ள முரண்பாட்டை சரி செய்வதற்கு, இந்த இரண்டு வகையாக குர்‍ஆன் இறக்கப்பட்ட முறையை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும். அதாவது முதல் வகையில் பார்த்தால், முழு குர்‍ஆனும் ரமலான் மாதத்தில் இறக்கப்பட்டது அல்லது லைலத்துல் கதிர், என் கன்னியமிக்க இரவில் இறக்கப்பட்டது. இரண்டாவது வகையில் பார்த்தால், குர்‍ஆன் சிறிது சிறிதாக இறைத்தூதர் மரிக்கும் வரையில் இறக்கப்பட்டது.

முதல் வெளிப்பாடு: 

பாதுகாக்கப்பட்ட பலகைகளிலிருந்த (அல் லாஹ் அல் மஹ்பூத்) குர்‍ஆனை அல்லாஹ் இறங்கச் செய்தான், கீழ் வானத்தில் இந்த குர்‍ஆன் இறக்கப்பட்டது. இந்த முதல் வெளிப்பாட்டில், முழு குர்‍ஆனும் ஒரே முறை கீழ்வானத்தில் இறக்கப்பட்டது, இந்த இடத்திற்கு "பைத் அல் இஜ்ஜாஹ்" என்று அழைப்பார்கள்(கன்னியம் மற்றும் வல்லமையுள்ள வீடு என அழைக்கப்படுகிறது). குர்‍ஆன் இறக்கப்பட்ட அந்த பாக்கியமான இரவை "லைலத்துல் கதிர் (The Night of Decree)" என்று அழைப்பார்கள். இது ரமலான் மாதத்தில் கடைசி பத்து நாட்களில் வரும் ஒரு ஒற்றைப்படை எண் கொண்ட நாளாகும். இந்த முதல் வெளிப்பாட்டை அல்லாஹ் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகின்றான் (மேற்கோள்கள் : குர்‍ஆன் 44:1-3, 97:1, 2:185) 

இந்த வசனங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்ட முதல் வெளிப்பாட்டைப் பற்றிச் சொல்கின்றன, ஏனென்றால், குர்‍ஆன் முழுவதும் ஒரே முறை ரமலான் மாதத்தின் ஒரே இரவில் முஹம்மது நபிக்கு இறக்கப்படவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விவரமாகும்.

இபின் அப்பாஸ் கூறுகையில், குர்‍ஆன் மேல் வானத்திலிருந்து எடுக்கப்பட்டு கீழ்வானமாகிய பைத் அல் இஜ்ஜாஹ் என்ற இடத்தில் இறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ரமலான் மாதத்தின் லைலத்துல் கதிர் என்ற இரவில் (The Night of Decree) இறக்கப்பட்டது என்று ஒரு தொகுப்புச் சொல்கிறது. அல்லாஹ் விரும்பியிருந்தால், முழு குர்‍ஆனையும் ஒரே இரவில் ஒரே முறை வெளிப்படுத்தியிருப்பான். இந்த வகையில் தான் முந்தைய வேதங்கள் அனைத்தும் இறக்கப்பட்டது. ஆனால், அல்லாஹ் தன் வெளிப்பாட்ட இரண்டு வகையாக பிரித்தான். முதலாவதாக, மேல் வானங்களிலிருந்து குர்‍ஆன் தன் கடைசி தூதருக்கு இறக்கப்படுகிறது என்ற விவரத்தை "மேல் வானங்களில்" இருப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. (Philips, Usool at-Tafseer, 6. The Revelations of the Qur'aan, pp. 94-96; sources 12; comments within brackets and underline emphasis ours)

இன்னொரு இஸ்லாமிய மூலம் கீழ்கண்ட விதமாக கூறுகிறது:

ரமலான் மாதத்தில் தான் குர்‍ஆன் வெளிப்பட்டது, அதாவது ஜிப்ராயீல் தூதன் முழு குர்‍ஆனையும் முதல் வானத்திற்கு கொண்டு வந்தார், தேவதூதர்களில் எழுதுபவர்களுக்கு குர்‍ஆன் ஓதி காண்பிக்கப்பட்டது மற்றும் முஹம்மதுவிற்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது. சில நேரங்களில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று வசனங்கள் மட்டும் இறங்கின, சில நேரங்களில் ஒரு முழு அதிகாரமும் இறக்கப்பட்டது. … (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source; capital and underline emphasis ours)

மற்றும் இன்னொரு இஸ்லாமிய விரிவுரை கீழ்கண்ட விதமாக கூறுகிறது:

இபின் அப்பாஸ் அவர்களின் அதிகாரபூர்வமான அறிப்பு கூறுகிறது: "இதோ நாம் இதனை வெளிப்படுத்தினோம்" என்பதைக் குறித்து அறிவித்ததாவது: "நாம் இதனை வெளிப்படுத்தினோம்" என்று கூறினார். இதில் அவர் சொல்லவருவது என்னவென்றால் "நாம் முழு குர்‍ஆனோடு ஜிப்ராயீலை கீழ் வானத்திற்கு அனுப்பினோம் (அது வல்லமையின் இரவாகும்) அது நியாயத்தீர்ப்பின் சட்டத்தின் இரவாகும். அந்த இரவு மன்னிப்பு மற்றும் பாக்கியம் பொருந்திய இரவாகும். அதன் பிறகு அந்த குர்‍ஆன் பகுதி பகுதியாக நபி(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்)க்கு இறக்கப்பட்டது. (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source)

இஸ்லாமியர்கள் கொடுக்கும் விளக்கத்தில் உள்ள பிரச்சனையை வாசகர்கள் உடனே கண்டுக்கொள்ளலாம். இரண்டு வகைகளில் குர்‍ஆன் இறக்கப்பட்டதாக குர்‍ஆன் எங்கும் சொல்வதில்லை. அதாவது, முதலாவதாக‌ ஒரு முறை முழு குர்‍ஆனும் கீழ் வானம் வரைக்கும் இறக்கப்பட்டது என்றும், இரண்டாவதாக, பகுதி பகுதியாக முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதென்றும் குர்‍ஆன் சொல்வதில்லை. இஸ்லாமியர்கள் கொடுக்கும் இந்த விளக்கங்களெல்லாம் தங்கள் வேதத்தில் உள்ள பெரிய தவறை சரி செய்ய கொடுக்கப்படும் விளக்கங்களே. அதாவது ஒரு குறிப்பிட்ட இரவில் முழு குர்‍ஆனும் இறங்கியதாக குர்‍ஆன் சொல்வது, பிறகு அதற்கு முரண்பட்ட விதத்தில் முஹம்மதுவிற்கு பகுதி பகுதியாக வெளிப்பாடு வந்தது என்று அதே குர்‍ஆன் சொல்வதும் முரண்பட்ட விவரமாகும். 

உண்மையில் சொல்லப்போனால், மனித இனத்திற்கு வழிகாட்டியாக ரமலான் மாதத்தில் குர்‍ஆன் இறங்கியதாக ஒரு குர்‍ஆன் வசனம் சொல்கிறது:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது....(குர்‍ஆன் 2:185)

ரமளான் மாதத்தில் தேவதூதர்களுக்கு கீழ்வானத்தில் குர்‍ஆன் கொடுக்கப்பட்டது என்று இந்த வசனம் சொல்லாமல், இந்த புத்தகம் மனித இனத்திற்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்டது என்றுச் சொல்கிறது. இந்த வசனத்தின் மூலம் அறிவது என்னவென்றால், மனித இனத்திற்கு வழிகாட்டியாக ரமளான் மாதத்தில் இறக்கப்பட்டது என்பதாகும், இது இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக்கியிருக்கும் சொந்த கருத்திற்கு விளக்கத்திற்கு முரண்பட்ட நிலையில் உள்ளது. 

மேற்கொண்டு படிக்க:

இந்த விவரங்கள் பற்றி குர்‍ஆனில் உள்ள சில வசனங்கள் மறைமுகமாக பிரச்சனையை உருவாக்கின்றன. இந்த வசனங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்ட விதத்தைப் பற்றி பேசவில்லையானாலும், குர்‍ஆன் 23 ஆண்டுகள் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்று நாம் கருதினால், அது இவ்வசனங்களுக்கு ஒவ்வாத முரண்பட்ட விவரங்களாக உள்ளன. இவ்வசனங்கள் நமக்கு எதை சொல்கின்றன என்று கவனித்தால், குர்‍ஆன் ஒரே முறை முழுவதுமாக முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டது என்ற தோரணையில் அவைகள் விளக்கமளிக்கின்றன. இந்த விவரங்கள் ஆங்கிய இந்த விவாத மறுப்புக் கட்டுரையை படிக்கவும்: குறைந்த பட்சம் குர்‍ஆனில் பாதியாவது தெளிவாக உள்ளதா? 

இன்னொரு வகையில் பார்த்தால், குர்‍ஆன் ஒரு முழு புத்தகமாக ஒரே முறை இறக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு குர்‍ஆன் வசனங்கள் காணப்படுகின்றன. இந்த விவரங்கள் அடங்கிய கட்டுரையை படிக்கவும்: குர்‍ஆன் இறக்கப்பட்ட விதத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றிய ஆய்வு

இப்போது நாம் படித்துக்கொண்டு இருக்கும் கட்டுரையைப் பற்றி ஒரு இஸ்லாமிய விவாதம் புரிபவர் கொடுத்த பதிலுக்கு மறுப்பை சாம் ஷமான் கொடுத்துள்ளார். அதனை இங்கு படிக்கவும்: குர்‍ஆன் இறக்கப்பட்ட விதம் பற்றிய மறு ஆய்வு - ஒரே முறை இறங்கியதா அல்லது சிறிது சிறிதாக இறங்கியதா? 

ஆங்கில மூலம்: Quran Contradiction: The descent of the Quran Piecemeal or all at once? 

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை இங்கு படிக்கலாம்


© Answering Islam, 1999 - 2010. All rights reserved.





(SELECTED)

August 24, 2010

இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்


The 45 Bonus Questions for Muslims

இஸ்லாமியர்கள் தெரிந்துக்கொள்ளக்கூடாது என்று முஹம்மது விரும்பிய கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை நாம் கீழே கொடுத்துள்ளோம். அதாவது பல தெய்வ வழிபாடுகள் செய்யும் மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த சந்திர கடவுள் பற்றிய விவரங்களை சிறிது மாற்றி தன்னுடைய இராணுவ பள்ளிக்கூடத்தில் அறிமுகம் செய்தார் முஹம்ம்து.

கேள்வி 1: அல்லாஹ் என்ற வார்த்தையை குர்‍ஆன் வரையறுக்கின்றதா?

பதில்: இல்லை.

கேள்வி 2: "அல்லாஹ்" என்ற வார்த்தை முதன் முதலில் குர்‍ஆனில் மட்டும் காணப்பட்டதா?

பதில்: இல்லை.

கேள்வி 3: குர்‍ஆன், தன்னை வாசிக்கும் வாசகர்களுக்கு ஏற்கனவே "அல்லாஹ்" பற்றிய அறிவு உண்டு என்பதை கருதியுள்ளதா?

பதில்: ஆம். குர்‍ஆனை படிப்பவர்களுக்கு அல்லாஹ் என்ற பெயர் பற்றி தெரியும் என்று குர்‍ஆன் நம்புகிறது.

கேள்வி 4: முஹம்மதுவின் காலத்திற்கு முன்பு, இஸ்லாமுக்கு முன்பு இருந்த அரேபிய சரித்திரத்தில் அல்லாஹ் பற்றி நாம் படிக்கவோ,தெரிந்துக்கொள்ளவோ முடியுமா?

பதில்: ஆம், முடியும்.

கேள்வி 5: இஸ்லாமிய சரித்திரத்தின்படி, முஹம்மது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் அல்லது வம்சத்தில் பிறந்தாரா?

பதில்: இல்லை.

கேள்வி 6: முஹம்மது ஒரு யூத குடும்பத்தில் அல்லது யூத வம்சத்தில் பிறந்தாரா?

பதில்: இல்லை.

கேள்வி 7: முஹம்மதுவின் குடும்பம் மற்றும் வம்சத்தினர் பின்பற்றிய மதம் எது?

பதில்: பல தெய்வ வழிப்பாடு (பேகன் - Pagan)

கேள்வி 8: பல தெய்வங்களை வணங்கிய முஹம்மதுவின் தந்தையின் பெயர் என்ன?

பதில்: அப்துல்லாஹ் (அப்த் + அல்லாஹ்) = அல்லாஹ்வின் அடிமை

கேள்வி 9: மக்காவின் பல தெய்வ வழிபாடு விழாக்களில் நிகழ்ச்சிகளில் முஹம்மது பங்கு பெற்றாரா?

பதில்: ஆம், பங்கு பெற்றார்.

கேள்வி 10: இஸ்லாமுக்கு முந்தைய காலத்தில் அரபியர்கள் 360 தெய்வங்களை வணங்கினார்களா?

பதில்: ஆம்

கேள்வி 11: பேகன் (பழங்குடி) அரபியர்கள் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை வணங்குபவர்களாக இருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 12: அந்த அரபியர்கள் சந்திர கடவுளுக்கு ஆலயத்தை கட்டினார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 13: பல்வேறு வகையான அரபியர்கள் அந்த சந்திர கடவுளுக்கு பலவகையான பெயர்களை கொடுத்திருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 14: அவர்கள் வைத்திருந்த அந்த பெயர்கள் என்னென்ன?

பதில்: சின், ஹபுல், இலும்காஹ், அல்-இலாஹ் (Sin, Hubul, Ilumquh, Al-ilah)

கேள்வி 15: அல்லாஹ் என்ற பெயர் சந்திர கடவுளுக்கு கொடுக்கப்பட்டு இருந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 16: அல்லாஹ் என்ற வார்த்தை "அல் இலாஹ்" என்பதிலிருந்து வந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 17: பழங்குடி அரபியர்கள் "அல்லாஹ்வை" மற்ற எல்லா சிலைகளை விட உயர்வாக எண்ணினார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 18: இந்த அல்லாஹ் என்ற சந்திர கடவுளை காபாவில் அவர்கள் தொழுதுக்கொண்டார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 19: அல்லாஹ் என்பது மக்கா அரபியர்கள் வணங்கும் அனேக கடவுள்களில் இதுவும் ஒன்றா?

பதில்: ஆம்.

கேள்வி 20: காபாவின் மேலே ஹுபுல் என்ற சிலையை அவர்கள் வைத்திருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 21: அந்த சமயத்தில் ஹுபுல் என்ற சிலையை சந்திர கடவுளாக கருதினார்களா?

பதில்: ஆம்

கேள்வி 22: ஆக, காபா என்பது சந்திர கடவுளின் வீடா அல்லது ஆலயமா?

பதில்: ஆம்.

கேள்வி 23: காலப்போக்கில், ஹுபுல் விக்கிரத்திற்கு பதிலாக, அல்லாஹ் என்ற பெயர் சந்திர கடவுளாக வணங்கப்பட்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 24: அம்மக்கள் காபாவை "அல்லாஹ்வின் வீடு" என அழைத்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 25: அந்த பழங்குடி மக்கள் தங்கள் தெய்வங்களுக்காக அனேக சடங்குகளை உருவாக்கி வைத்திருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 26: சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த அந்த பழங்குடி அரபியர்கள், கீழ்கண்ட சடங்காச்சாரங்களை/பழக்கங்களை கொண்டு இருந்தார்களா? அதாவது: புனித யாத்திரைச் செல்லுதல், ரமளான் மாதத்தில் நோம்பு இருந்தல், காபாவைச் சுற்றி ஏழுமுறை சுற்றிவருதல், அதிலுள்ள கருப்புக் கல்லை முத்தமிடுதல், தலையை சிறைத்துக்கொள்ளுதல், மிருகங்களை பலியிடுதல், இரண்டு மலைகளுக்கும் இடையே ஓடிச் செல்லுதல் அல்லது நடத்தல், சத்தான் மீது கல்லை எரிதல், மூக்கிற்குள் தண்ணிரை விட்டு, பிறகு அதனை வெளியே எடுத்து மூக்கை சுத்தப்படுத்துதல், ஒரு நாளுக்கு பலமுறை மக்காவை/காபாவை நோக்கி தொழுகை நடத்துதல், தான தர்மங்கள் செய்தல், மற்றும் வெள்ளிக்கிழமையன்று சிறப்பு தொழுகை செய்தல் போன்றவைகளை செய்துக்கொண்டு இருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 27: அந்த பழங்குடி அரபியர்கள் காபாவையும் மக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த காலங்களிலேயே, முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்கள், நாம் மேலே கண்ட சடங்குகளை செய்யும் படி கட்டளையிட்டு இருந்தாரா?

பதில்: ஆம். (யூசுப் அலி பின் குறிப்பு 214, பக்கம் 78)

கேள்வி 28: விக்கிரங்களை வணங்கும் அரபியர்கள் வகுத்து இருந்த இந்த வழக்கங்களை இஸ்லாம் தன் வழக்கமாக ஆக்கிக்கொண்டதா?

பதில்: ஆம் (பார்க்க யூசுப் அலி: பின்குறிப்பு 223, பக்கம் 80).

கேள்வி 29: அல்-லத், அல்-உஜ்ஜா மற்றும் மனத் என்ற தெய்வங்கள், "அல்லாஹ்வின் மகள்கள்" என்று அழைக்கப்பட்டு இருந்தார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 30: ஒரு சமயத்தில் குர்‍ஆன் அல்-லத், அல்-உஜ்ஜா மற்றும் மனத் என்ற தெய்வங்களை வணங்குங்கள் என்றுச் சொல்லியதா?

பதில்: ஆம் (பார்க்க குர்‍ஆன் 53:19-20)

கேள்வி 31: தற்கால குர்‍ஆன்களின் அந்த வசனங்கள் நீக்கப்பட்டு (இரத்துச் செய்யப்பட்டு) விட்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 32: அந்த குறிப்பிட்ட வசனங்கள் என்னவென்று அழைக்கப்படுகின்றன?

பதில்: சாத்தானின் வசனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கேள்வி 33: அக்காலத்திலே, பழங்குடி மக்களிடையே "சந்திர கடவுளை" குறிக்கும் ஒரு சின்னமாக "பிறை நிலா" கருதப்பட்டு இருந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 34: அரேபியாவில் சந்திர கடவுளின் மதச் சின்னமாக "பிறை" இருந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 35: இதே போல, அல்லாஹ்வின் மகள்களைக் குறிக்க நட்சத்திரங்கள் சின்னமாக பயன்படுத்தப்பட்டு இருந்ததா?

பதில்: ஆம்.

கேள்வி 36: அக்காலத்தில் அரேபியாவில் வாழ்ந்த யூதர்களானாலும், கிறிஸ்தவர்களானாலும் "ஒரு பிறை, அதன் பக்கத்தில் நட்சத்திரங்களைக் கொண்ட சின்னத்தை" தங்கள் மத நம்பிக்கையின் சின்னமாக பயன்படுத்தினார்களா?

பதில்: இல்லை.

கேள்வி 37: சிலைகளை வணங்கும் பழங்குடி மக்களின் பிறைச் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இஸ்லாம் தன்னுடைய மத சின்னமாக எடுத்துக்கொண்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 38: பல நூற்றாண்டுகளாக இஸ்லாம் சிலை வணக்கத்தின் (பேகன்-Pagan) பெயர்களையும், சின்னங்களையும், மத சடங்குகளையும், கோவில்களையும் தன்னுடமையாக்கிக் கொண்டதா?

பதில்: ஆம்.

கேள்வி 39: பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் தாங்கள் பின்பற்றும் சடங்குகள், சின்னங்கள் போன்றவைகளின் பின்னணி தெரியாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 40: இந்த இஸ்லாமியர்கள் தங்களின் சடங்குகள், மற்றும் மத காரியங்களின் பின்னணி சிலைகளை வணங்கும் மதங்களிலிருந்து வந்தது என்பதை அறியும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறார்களா?

பதில்: ஆம்.

கேள்வி 41: சிலைகளை வணங்கும் மதங்களிலிருந்து வந்த இஸ்லாம், ஆபிரகாமின் மார்க்கமாக இருக்கமுடியுமா?

பதில்: இல்லை.

கேள்வி 42: அப்படியானால், இஸ்லாம் என்றால் என்ன?

பதில்: புராதன காலத்தில் பழங்குடி மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த மதத்தின், இன்னொரு பெயர் தான் இஸ்லாம்.

கேள்வி 43: குர்‍ஆன் அல்லாஹ் என்பவர், கிறிஸ்தவர்களின் பிதாவாகிய தேவனா? குமாரனா அல்லது பரிசுத்த ஆவியானவரா?

பதில்: இல்லை

கேள்வி 44: முஸ்லிம்களின் "அல்லாஹ்" தான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று யூதர்கள் நம்புகிறார்களா, சொல்கிறார்களா?

பதில்: இல்லை.

கேள்வி 45: அப்படியானால், அல்லாஹ் யாருடைய இறைவன்?

பதில்: பேகன் என்றுச் சொல்லக்கூடிய சிலைகளை வணங்கும் மக்களின் இறைவன் தான் அல்லாஹ்.

ஆங்கில மூலம்: The 45 Bonus Questions for Muslims: (Part2)

ஆசிரியர்: ராபர்ட் முர்ரே

(SELECTED)


August 11, 2010

பீஜேயின் அறியாமை: இயேசு பயப்பட்டு வரி செலுத்தினாரா?



பீஜேயின் அறியாமை: இயேசு பயப்பட்டு வரி செலுத்தினாரா?

முன்னுரை: பீஜே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சில மறுப்புக்களை கீழ்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம்.

1) விபச்சார பாவமும் பீஜே அவர்களும்: திருத்தல் மன்னர் இவர் தானோ!

2) பீஜே ஆராய்ச்சி: சிகப்பு சேலை கட்டியவள் தான் என் மனைவி, கூட்டத்தில் தேடிப்பாருங்கள்.

3) இயேசு "மனிதன்" என நிருபிக்க நினைத்து "இறைவன்" என நிருபித்த பீஜே.

இந்த கட்டுரையில், பீஜே அவர்களின் இன்னொரு அறியாமையை (அ) வேண்டுமென்றே திருத்திக் கூறும் அவரின் யுக்தியை பார்க்கப்போகிறோம். "இயேசு அரசாங்கத்திற்கு பயப்பட்டு வரி செலுத்தினார், அவர் அஞ்சியிருக்கிறார், இப்படி இறைவன் அஞ்சி வரி செலுத்தமாட்டார்" என்று பீஜே எழுதியுள்ளார்.

இப்போது, பீஜே அவர்கள் எழுதியவைகளைக் காண்போம்:

17. கடவுளுக்கு அச்சமில்லை

கடவுள் அச்சத்திற்கு அப்பாற்பட்டவர்; யாருக்கும், எதற்கும் அஞ்சத் தேவையற்றவர். ஆனால் இயேசு அச்சமுற்று வரிப்பணம் வசூலிக்கிறவர்களிடம் வரி செலுத்தக் கூறியிருக்கிறார்.

அவன் வீட்டிற்குள் வந்த போது, அவன் பேசுவதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள்? என்று கேட்டார். அதற்குப் பேதுரு அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி, அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்த வேண்டுவதில்லையே. ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில் போட்டு முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்து பார்; ஒரு வெள்ளிப் பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும், உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.

(மத்தேயு 17:25-27)

அந்நியரிடத்தில் தான் வரி வாங்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் இருந்த நியதிக்கு மாறாக குடிமகன்களிடமே அன்று வரி வாங்கியுள்ளனர். அதைத் தவறு என்று கண்டிக்கும் இயேசு வரி செலுத்தாவிட்டால் அதனால் இடைஞ்சல் ஏற்படும் என அஞ்சி வரி செலுத்த ஏற்பாடு செய்கிறார்.

தவறாக வரி வசூலித்தால் அந்த வரியைச் செலுத்த முடியாது எனக் கூறி அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க அவர் அஞ்சியிருக்கிறார்.

பீஜே அவர்கள் கூறியவைகளின் சுருக்கம் இதுதான்:

1) அந்நியர்களிடம் தான் வரி வசூல் செய்யவேண்டும், குடிமக்களிடம் வசூல் செய்யக்கூடாது என்று இயேசு வாழ்ந்த காலத்தில் சட்டம் இருந்ததாம்.

2) இதை தவறு என்று கண்டிக்கும் இயேசு, அதிகாரிகளுக்கு அஞ்சி வரியை செலுத்தினாராம்.

3) வரியை நான் செலுத்தமாட்டேன் என்று இயேசு சொல்லியிருந்தால், விளைவுகளை சந்திக்கவேண்டி வருமே என்று பயப்பட்டு இயேசு வரியை செலுத்திவிட்டாராம்.

4) ஆக, இயேசு பயப்பட்டு வரியை செலுத்தியபடியால், அவர் இறைவன் அல்ல என்பது பீஜே அவர்களின் வாதம்.

பீஜே அவர்களுக்கு பைபிளை படித்து புரிந்துகொள்ள தெரியவில்லை என்பது இந்த மறுப்பை படித்த பிறகு எல்லாருக்கும் தெரிந்துவிடும். அதாவது, அவர் எடுத்துவைத்த ஆரம்ப விவரங்களே தவறு, அவர் புரிந்துக்கொண்டதே தவறு, சிறிதளவாவது ஆராய்ச்சி செய்து எழுதியிருந்தால், இந்த பிரச்சனைகள் வராது.

சரி, இனி மறுப்புக்குச் செல்வோம்.

1) பீஜே அவர்கள் செய்த முதல் தவறு: வசனம் கூறுவது அரசாங்க வரியா / தேவாலய வரியா

மாற்று மார்க்கத்தவர்களின் வசனங்களுக்கு பொருள் கூறுவதற்கு முன்பு,

அவ்வசனங்கள் சொல்வது என்ன?
அவைகளுக்கு நான் சொல்லப்போகும் பொருள் சரியானதா?
இந்த வசனங்கள் குறித்த சரித்திர பின்னனி என்ன?
பைபிள் விரிவுரை என்ன சொல்கிறது?

போன்றவைகளை தெரிந்துக்கொள்ளாமல், ஆராயாமல், சொந்தமாக அடித்துவிட்டு இருக்கிறார் பீஜே அவர்கள்.

ஏன் நான் இப்படி எழுதுகின்றேன் என்றுச் சொன்னால்:

முதலாவதாக, இவ்வசனங்களில் சொல்லப்பட்ட‌ வரியை இயேசு அரசாங்கத்திற்கு கட்டினார் என்று பீஜே அவர்கள் தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்.
இரண்டாவதாக‌, இயேசு சொன்ன எடுத்துக்காட்டின் பொருளை பீஜே அவர்கள் தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்.

மத்தேயு 17:24 லிருந்து 27 வரையில் உள்ள விவரங்கள் அரசாங்க வரியைப் பற்றி கூறவில்லை, அது தேவாலய வரியைப் பற்றி கூறுகின்றது, இதனை பீஜே அவர்கள் புரிந்துக்கொள்ள மேலே நான் சொன்னது போல கொஞ்சம் ஆராய்ச்சி செய்து இருக்கவேண்டும்.

20 வயதை அடைந்த ஒவ்வொரு யூதனின் கடமை:

யூத கணக்கெடுப்பில் வரும் இருபது வயதை அடைந்த ஒவ்வொரு ஆணும் தேவாலயத்தின் (பரிசுத்த ஸ்தலத்தின்) பராமரிப்பு செலவுகளுக்காக ஆண்டு ஒன்றுக்கு அரைசேக்கல் காணிக்கை தேவாலயத்திற்கு கொடுக்கவேண்டும். இதனை வசூலித்து ஆலயத்தின் செலவுகள் செய்யப்படும். இந்த கட்டளை மோசே மூலமாக தேவன் யூதர்களுக்கு கொடுத்து இருந்தார். இதனை யூதர்கள் கடைபிடித்தனர், அவர்கள் இஸ்ரவேலில் இருந்தாலும் சரி, வேறு நாட்டில் வாழ்பவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் செலுத்தி வந்தனர். இந்த விவரங்களை யாத்திராகமத்தில் படிக்கலாம்:

எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.

எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும். (யாத்திராகமம் 30:13-14, இன்னும் பார்க்க யாத்திராகமம் 38:26)

தேவாலயத்திற்கு செலுத்தும் வரியைப் பற்றி தெரிந்துக்கொள்ளாமலேயே தன் வியாக்கீனத்தைக் கொடுக்கிறார் பீஜே.

மத்தேயு 17:24ம் வசனம் - ஆங்கில மொழியாக்கம்:

பீஜே அவர்கள் ஆங்கில மொழியாக்கத்தில் இவ்வசனங்களை படித்து இருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். ஒருவேளை படிந்து இருந்திருந்தாலும், தேவாலய வரியைப் பற்றித் தான் இவ்வசனம் பேசுகின்றது என்று புரிந்து இருந்திருந்தாலும், தான் சுமத்தவேண்டும் என்று நினைத்த குற்றச்சாட்டை சுமத்தவேண்டும் என்பதற்காக‌ மறைத்து இருந்திருப்பார். ஏன் இப்படி சொல்கின்றேன் என்றுச் சொன்னால், பீஜே அவர்கள் மத்தேயு 17ம் அதிகாரம் 25 லிருந்து 27 வரையுள்ள வசனங்களை மேற்கோள் காட்டினார், ஆனால், மத்தேயு 17:24ம் வசனத்தை மேற்கோள் காட்டவில்லை, இந்த வசனத்தில் தான் வரியைப் பற்றிய விவரம் வருகிறது.

இப்போது மத்தேயு 17:24ம் வசந்த்தை நாம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிப்போம்:

அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். (மத்தேயு 17:24)

Matthew 17:24 (New International Version)

The Temple Tax

24 After Jesus and his disciples arrived in Capernaum, the collectors of the two-drachma tax came to Peter and asked, "Doesn't your teacher pay the temple tax[a]?"

Footnotes:

a. Matthew 17:24 Greek the two drachmas

Link: http://www.biblegateway.com/passage/?search=mat%2017:24&version=NIV

மேலேயுள்ள வசனத்தில் ஆங்கில மொழியாக்கத்தில் "இரண்டு திராக்மா" பணம் இயேசு செலுத்துவதில்லையா? என்று வரியை வசூலிப்பவர் கேட்கிறார். இந்த இரண்டு திராக்மா என்பது கிரேக்க நாணயமாகும். இந்திய பணத்தை "ரூபாய்" என்றுச் சொல்வது போல, கிரேக்க பணத்தை திராக்மா என்று அழைப்பார்கள். (கிரேக்க வார்த்தை: "டிட்ரக்மோன்" - δίδραχμον – didrachmon - did'-rakh-mon)

இந்த வரியானது ஆலயத்திற்கு கொடுக்கவேண்டும் என்று மோசே கட்டளையிட்ட அரைசேக்கல் காணிக்கையாகும், இதனை கிரேக்க நாணயத்தில் இரண்டு திராக்மா என்று சொல்வார்கள். (கிரேக்க திராக்மா பற்றி அறிய படிக்கவும்: http://en.wikipedia.org/wiki/Greek_drachma)

மீனின் வயிற்றில் வெள்ளி நாணயம்:

பேதுரு இயேசுவிடம் இந்த ஆலய வரிப்பணம் பற்றி கேட்பதற்கு முன்பாகவே, இயேசு பேதுருவிடம் அதைப் பற்றி பேசி, ஒரு மீனைப்பிடித்து முதலில் பிடிக்கும் மீனின் வாயில் இருக்கும் ஒரு வெள்ளி நாணயத்தை "உனக்காகவும் எனக்காகவும்" (இரண்டு பேருக்காக) ஆலய வரியை செலுத்து என்று கூறுகிறார்.

இந்த வெள்ளிப்பணமானது, நான்கு திராக்மாவிற்கு சமமானது, எனவே இது இரண்டு நபர்களுக்கு ஆலய வரியை செலுத்த போதுமானது. (இந்த வார்த்தை கிரேக்கத்தில் ஸ்தாத்தேர் என்பதாகும் : στατήρ, statēr - stat-air' - கிரேக்க எபிரேய அகராதி - http://www.bibletools.org/index.cfm/fuseaction/Lexicon.show/ID/G4715/stater.htm)

இதுவரை நாம் மேலே கண்ட விவரங்கள் மூலம் அறிவது என்னவென்றால், பைபிள் வசனங்கள் ஆலய வரியைப் பற்றி பேசும் போது, அதை அரசாங்க வரி என்று நினைத்து எழுதி பீஜே அவர்கள் தவறு செய்துள்ளார்.

2) பீஜே அவர்கள் செய்த இரண்டாம் தவறு: இயேசு சொன்ன எடுத்துக்காட்டின் பொருளை அறியாமல் எழுதிய பீஜே:

முதலாவது, பீஜே அவர்கள் தேவாலய பணிக்காக வசூலிக்கப்படும் வரியைப் பற்றி புரிந்துக்கொள்ளாமல், அதை அரசாங்க வரி என்று நினைத்து முதல் தவறைச் செய்தார். இரண்டாவதாக, அவர் இயேசு சொன்ன வார்த்தைகளின் பொருளையும் புரிந்துக்கொள்ளாமல் இரண்டாம் தவறையும் புரிந்துள்ளார்.

இயேசு என்ன கூறினார் என்பதை இப்போது படிப்போம்:

மத்தேயு 17:25-26

அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.

அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.

இந்த வசனங்களை எப்படி பீஜே புரிந்துக்கொண்டார் என்பதை கீழே படியுங்கள்:

பீஜே அவர்கள் எழுதியது:

அந்நியரிடத்தில் தான் வரி வாங்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் இருந்த நியதிக்கு மாறாக குடிமகன்களிடமே அன்று வரி வாங்கியுள்ளனர். அதைத் தவறு என்று கண்டிக்கும் இயேசு வரி செலுத்தாவிட்டால் அதனால் இடைஞ்சல் ஏற்படும் என அஞ்சி வரி செலுத்த ஏற்பாடு செய்கிறார்.

அந்நியர்களிடம் தான் வரி வாங்க வேண்டும், குடிமக்களிடம் வாங்கக்கூடாதாம், இப்படி ஒரு சட்டம் இருந்ததாக இயேசு கூறினாராம். மேலே உள்ள இரண்டு வசனங்களை படித்து, இஸ்லாமிய அறிஞர் புரிந்துக்கொண்டதைப் பார்த்தால், ஆச்சரியமாக உள்ளது.

பீஜே அவர்களே, இரண்டு வசனங்களை படித்து புரிந்துக்கொள்ளத் தெரியாத நீங்கள் எல்லாம் எப்படி புத்தகம் எழுத வந்துவிட்டீர்கள்?

சரி, இப்போது இயேசு சொன்ன வார்த்தைகளின் பொருளை பார்ப்போம்.

ஒரு அரசர் புதிய வரியை சுமத்தும்போது, அதை யாரிடம் வாங்குவார்?

தன் குடும்ப நபர்களிடம் வாங்குவாரா? அதாவது இளவரசர்களிடம், இளவரசிகளிடம் வாங்குவாரா? - தன் சொந்த மகன்/மகளிடம் வாங்குவாரா?

அல்லது

தன் நாட்டு மக்களிடம் வாங்குவாரா?

இந்த கேள்விக்கு பீஜே அவர்கள் என்ன பதில் சொல்லுவார்? அரசர் நாட்டு மக்களிடம் வாங்குவார், தன் சொந்த மகனிடமோ, மகளிடமோ வாங்கமாட்டார் என்று தான் பதில் சொல்வார் என்று நினைக்கிறேன். இதே பதிலைத் தான் பேதுருவும் சொன்னார்.


"அந்நியர்" என்று இயேசு சொன்னது, குடிமக்களைத் தானே தவிர, வேறு நாட்டு மக்களை அல்ல. ஆனால், பீஜேவிற்கு அந்நியர் என்று இயேசு சொன்னது, வேறு நாட்டு மக்களைப் பற்றி என்று புரிந்துள்ளது. பீஜே அவர்களே, உங்களுடைய லாஜிக் எல்லாம் கிறிஸ்தவர்களிடமும், பைபிளிடமும் பளிக்காது.

ஆக, இயேசு சொன்ன வசனங்களில் "அந்நியர்" என்றுச் சொன்னது, அந்த அரசனின் நாட்டு மக்களை குறிக்கும், இந்த சாதாரண விஷயத்தையும் பீஜேவிற்கு விளக்கவேண்டும் என்ற நிலையில் பீஜே இருக்கிறார்.

இயேசு அந்த நாட்டு அரசனின் மகனாக இருந்தாரா, இளவரசராக இருந்தாரா?

இயேசு பிள்ளைகள் வரியை கட்டவேண்டியதில்லை என்றுச் சொன்னதினால், தன்னை பிள்ளை என்றுச் சொல்லிக்கொண்டார். அப்படியானால், "இயேசு அந்த நாட்டு அரசனின் மகனாக இருந்தாரா, இளவரசராக இருந்தாரா?" என்ற கேள்வி எழும். இயேசு அந்த நாட்டு அரசனின் மகன் அல்ல, அப்படியிருக்கும் போது பிள்ளைகள் வரியை செலுத்த வேண்டியதில்லையே என்று ஏன் கூறினார்?

இந்த இடத்தில் உள்ள விவரத்தை சரியாக புரிந்துக்கொள்ளாததினால் தான் பீஜே அவர்கள் தவறுகளுக்கு மேல் தவறுகளை செய்து இருக்கிறார்.

இயேசு சொன்ன உதாரணத்தின் பொருள்

எருசலேமில் இருக்கும் தேவாலயம் பிதாவாகிய தேவனின் அரசசபையாகும், தேவன் அதன் அரசராவார், இயேசுக் கிறிஸ்து அவரது பிள்ளை, அதாவது இளவரசர். அப்படியிருக்கும் போது, தேவாலய வரி என்பது, அரசனாகிய தேவன் விதிக்கும் வரி. இந்த வரியை யாரிடம் வாங்கவேண்டும்? அந்நியர்களிடம் வாங்கவேண்டுமே அதாவது குடிமக்களிடம் வாங்கவேண்டுமே ஒழிய, தேவனின் குமாரனாகிய இயேசுவிடம் (இளவரசரிடம்) வாங்கக்கூடாது. இதைத் தான் இயேசு ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கினார்.

அரசன், அரச சபை = தேவன், தேவாலயம்

இளவரசன் = தேவனின் குமாரனாகிய இயேசுக் கிறிஸ்து.

அரச சபை பராமரிப்பிற்கு வாங்கப்படும் வரி = நாட்டு குடிமக்களிடம் பலவகையான வரிகளாக‌ வாங்கவேண்டும்

இதைத் தான் இயேசு மேற்கண்ட வசனங்களில், பிள்ளைகள் (இயேசு) வரியை செலுத்தவேண்டுவதில்லை என்று கூறினார்.

இதனை புரிந்துக்கொள்ளாமல், பீஜே அவர்கள் அந்நியர்கள் என்றுச் சொன்னால், வேறு நாட்டு மக்களிடம் என்று நினைத்துக் கொண்டார். எந்த அரசனாவது தான் ஆட்சி செய்யாத நாட்டு மக்கள் தன் அரச சபை / நாட்டு பராமறிப்பிற்கு தேவையான பணத்திற்காக வரியை வேறு நாட்டு மக்களிடம் வாங்கமுடியுமா? கெட்கத்தான் முடியுமா? இந்த சிறிய விஷயத்தையும் பீஜே புரிந்துக்கொள்ளவில்லை என்பது கவலையைத் தருகிறது. பீஜே அவர்கள், இப்படி தவறாக புரிந்துக்கொண்டு, அதை அக்காலத்தில் ஒரு வழக்கம் /சட்டம் இருந்தது என்று இயேசு சொன்னதாக கதை விடுகிறார்.

ஆக, பீஜே அவர்கள் இந்த ஓவரிலும் ஒரு விக்கட்டையும் எடுக்கவில்லை, அதற்கு பதிலாக ஒவ்வொரு ப‌ந்தும் தமிழ் கிறிஸ்தவர்களால் பவுண்டிரிக்கு துரத்தப்பட்டது என்பது தெளிவாக புரிகின்றது.

இயேசு பயந்து தான் வரியை செலுத்தினாரா?

இப்போது பீஜே அவர்கள் போட்ட அடுத்த ஓவருக்குச் செல்வோம் (இது இந்த கட்டுரையின் கடைசி ஓவரும் கூட‌)

பீஜே அவர்கள் எழுதியது:

அந்நியரிடத்தில் தான் வரி வாங்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் இருந்த நியதிக்கு மாறாக குடிமகன்களிடமே அன்று வரி வாங்கியுள்ளனர். அதைத் தவறு என்று கண்டிக்கும் இயேசு வரி செலுத்தாவிட்டால் அதனால் இடைஞ்சல் ஏற்படும் என அஞ்சி வரி செலுத்த ஏற்பாடு செய்கிறார்.

தவறாக வரி வசூலித்தால் அந்த வரியைச் செலுத்த முடியாது எனக் கூறி அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க அவர் அஞ்சியிருக்கிறார்.

இப்போது தான் இந்த கட்டுரை எழுதுவதற்கு என்னைத் தூண்டிய, பீஜே அவர்களின் வரிகளை நாம் அலசப்போகிறோம்.

பீஜே அவர்கள் செய்த முதல் தவறு: எந்த வரி என்று புரிந்துக்கொள்ளாமையாகும்.

இரண்டாம் தவறு: இயேசுவின் வார்த்தைகளை புரிந்துக் கொள்ளாமையாகும்.

மூன்றாம் தவறு: மேற்கண்ட இரண்டு தவறுகளால் ஏற்பட்ட மூன்றாம் தவறாகும். அதாவது இயேசு அநீதிக்கு எதிராக அவர் குரல் கொடுக்கவில்லை, அநீதியை எதிர்க்கவில்லை என்று பொருள் படவேண்டும் என்பதற்காக, "இயேசு பயப்பட்டுத் தான் வரியை செலுத்தினார்" என்று தன் முடிவைச் சொல்லியுள்ளார்.

முதலாவதாக, இந்த வசனங்களில் அரசாங்கத்தின் இடையூறு இல்லை என்பதை நாம் மேலே விளக்கினோம். அதாவது இது தேவாலய வரியைப் பற்றிச் சொல்கிறது, அரசாங்கத்தின் வரியைப் பற்றி அல்ல.

இரண்டாவதாக, இயேசு பேசும் போது முக்கியமான ஒரு வாக்கியத்தைச் சொல்லியுள்ளார், இது போதும், இயேசு பயப்பட்டு வரி செலுத்தவில்லை என்பதற்கு, அதனை பீஜே அவர்கள் மேற்கோள் காட்டிய வசனங்களிலேயே படிப்போம்.

மத்தேயு 17: 26-27

அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.

ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.

எருசலேம் தேவாலயத்தைவிட பெரியவராக இருந்தவராகிய இயேசுக் கிறிஸ்து, தேவாலய வரியை செலுத்த வேண்டியதில்லை காரணம்,அவர் தேவகுமாரன். இருந்தபோதிலும் நாம் வரியை செலுத்துவோம் என்று இயேசு கூறியுள்ளார்.

மட்டுமல்ல, நியாயமானபடி நாம் தேவாலய வரியை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும் , "அவர்களுக்கு ஒரு இடறலாக, ஒரு தடங்களாக இல்லாதபடிக்கு" நாம் வரியை செலுத்துவோம் என்று இயேசு கூறினார்.

யாருக்கும் தடங்கலாக இருக்ககூடாது என்று இயேசு விரும்பினார், முக்கியமாக தேவாலயத்தின் பராமரிப்பிற்காக, ஒழுங்கிற்காக செலுத்தப்படவேண்டிய வரியை செலுத்த வேண்டும் என்று விரும்பினார்.

நற்செயல்கள் பற்றி போதிக்கும் இயேசுக்கிறிஸ்து, தேவாலயத்தில் நடக்கும் அட்டூழியங்களை சகித்துக்கொள்ளாமல் கண்டித்த இயேசுக்கிறிஸ்து, அதே தேவாலயத்திற்கு செலுத்தவேண்டிய வரியை செலுத்தவில்லை என்று மக்கள் அறிந்தால், அதனை ஒரு வாய்ப்பாக எண்ணி சிலர் வரியை செலுத்த மறுப்பார்கள். இதனால், வரி வசூல் செய்யும் தேவாலய ஊழியர்களுக்கு அனேக பிரச்சனைகள் உண்டாகும். இதனை தடுக்க‌ இயேசு வரியைச் செலுத்தினார்.

ஆக,பீஜே அவர்களுக்கு நான் தெளிவாக்க விரும்புவது என்னவென்றால், "இயேசு பயப்பட்டு வரியை செலுத்தவில்லை, இயேசு அவர்களுக்கு தடங்கலாக இருக்கவேண்டாம்" என்ற காரணத்திற்காகவே வரியை செலுத்தும்படி பேதுருவிடம் கூறினார்.

எனவே, பீஜே அவர்களே, உங்களின் ஆராய்ச்சியை சிறிது நிதானமாகவும், ஆழமாகவும் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன். நான் மாறமாட்டேன், இப்படித் தான் செய்வேன், எழுதுவேன் என்று மறுபடியும் அடம்பிடித்தால், ஒவ்வொரு தமிழ் கிறிஸ்தவனும் உங்கள் முகத்திற்கு நேராக விரலை நீட்டி, உங்களின் இந்த வரிகளுக்கு என்ன பொருள் என்று கேட்பான். இன்று நான் கேட்கும் இதே கேள்விகளை தமிழ் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் உங்களிடம் கேட்பார்கள் என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும்.

விடுபட்ட ஒரு சில விவரங்கள்: இந்த நிகழ்ச்சியின்போது, வரி கேட்பவர்கள் பேதுருவிடம் கேட்கும் கேள்வி "உங்கள் போதகர் தேவாலய‌ வரியை செலுத்துவதில்லையா?" என்பதாகும். அதற்கு பேதுரு செலுத்துகிறார் என்றுச் சொன்னார், நான் இயேசுவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றுச் சொல்லவில்லை. ஆக, ஒவ்வொரு ஆண்டும் (கிட்டத்த மூன்றரை ஆண்டுகள் பேதுரு இயேசுவுடன் இருந்தார்) இயேசு ஆலய வரி செலுத்துவது பேதுருவிற்கு தெரிந்துஇருக்கும், அதனால் தான் "செலுத்துகிறார்" என்று பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம், இயேசு சர்வ வியாபி, சர்வ வல்லமையுள்ளவர் மற்றும் சர்வ ஞானி என்பதை நிருபித்துள்ளார். ஒரு மீனின் வயிற்றில் இருக்கும் நாணயம் அவருக்கு தெரிந்து இருக்கிறது, மற்றும் அந்த மீன் சரியாக பேதுரு போடும் தூண்டியில் வந்து விழவேண்டும் என்றுச் சொல்லி அவர் அற்புதம் செய்துள்ளார். ஆக, பீஜே அவர்களே, இந்த நிகழ்ச்சிப் பற்றி எழுதி, இந்த விவரங்களை எழுத உதவி செய்தபடியால் உங்களுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

அரசாங்க வரியைக் குறித்து இயேசுக் கிறிஸ்து:

தேவாலய வரியைப் பற்றி நாம் இதுவரைக் கண்டோம், அரசாங்க வரி பற்றி இயேசு என்ன கூறுகின்றார் என்பதை அறிய மத்தேயு 22:15-22 வரை படிக்கவும். அரசனுக்கு செலுத்தும் வரியை அரசனுக்கும், ஆண்டவருக்கு செலுத்தவேண்டிய வரியை ஆண்டவருக்கும் செலுத்தும்படி இயேசு கூறினார்.

இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். (மத்தேயு 22:21)

கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள், இயேசு காட்டிய வழியில் நடக்கின்றோம் என்றுச் சொல்லுகின்ற நாம், அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய வரியை சரியாக கட்டுகின்றோமா? திருச்சபையின் பராமறிப்பிற்கும், இதர செலவுகளுக்கும் தேவையானவற்றை செலுத்துகின்றோமா? அரசாங்கத்தை ஏமாற்றி சரியான வரியை கட்டத்தவறும் கிறிஸ்தவன், கிறிஸ்துவை உடையவன் அல்ல. இயேசு தேவாலய வரியை செலுத்த வேண்டிய அவசியம் இல்லாதவராக இருந்தாலும், அந்த‌ வரியை செலுத்தினார். இயேசுவே தேவாலய வரியை செலுத்தவில்லை நாம் ஏன் செலுத்தவேண்டும் என்று மக்கள் சொல்லக்கூடாது என்பதற்காகவும், யூத அதிகாரிகளுக்கு ஆலய பராமரிப்பு செய்வவற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், இயேசு வரியை செலுத்தினார். நாம் இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துகின்றோமா? சிந்திக்க வேண்டுகின்றேன்.

முடிவுரை: அருமை இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்களே, உங்களின் ஆய்வு தவறானது, வியாக்கீனங்கள் தவறானது. நான் உங்கள் முழு புத்தகத்திற்கும் பதில்கள் தரும் வரை அடுத்த பதிப்பை பதிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், பெரும்பான்மையான விவரங்களை நீங்கள் உங்கள் புத்தகத்தில் மாற்றவோ, நீக்கவோ வேண்டி வரும்.

இப்படி தவறாகவும், வேண்டுமென்று திருத்தியும் கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். நியாயமான கேள்விகள், விவரங்களை எழுதினால், பதில்கள் தருவதற்கு நன்றாக இருக்கும். அதை விட்டுவிட்டு, சொந்தமாக பொய்களை எழுதி, யார் கேட்பார்கள் என்ற எண்ணத்துடன் எழுதுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

கடைசியாக தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், இயேசு பயந்து வரியை செலுத்தவில்லை, அவர்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், தேவாலத்தின் செலவுகளுக்காக கேட்கப்படும் வரி நியாயமானது என்பது மக்களும் உணர்ந்து கொடுக்கவேண்டுமென்பதற்காகவும் செலுத்தினாரே தவிர பயந்து அல்ல.

கடவுளுக்கு அச்சமில்லை என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய அடுத்த வரிகளுக்கு பதிலை அடுத்த கட்டுரையில் தருகிறேன்.

 

SOURCE : http://isakoran.blogspot.com/2010/08/blog-post_07.html

August 9, 2010

குர்‍ஆன் எரிப்பு நாள் 9/11: இது சரியா? தவறா?": KajaNazimudeenக்கு பதிலாக இதை படிக்கலாம்

//PortoNovo KajaNazimudeen said...

ஆம்; ஆம், குரானை படியுங்கள்! முகம்மதுவின் ஹதீசையும் படியுங்கள்!! அப்பொழுதானே அவைகளுடைய வெளிச்சஒளி கீற்று உங்களுடைய இதயங்களை வியாபித்து, ஆன்மாக்களை சுத்தப்படுத்தும். ஆம் - எரிப்பதை விட, குரானை படிப்பதினால் அதிக நன்மை உண்டாகும் என்பது எல்லோருடைய கருத்தும் கூட.//

குர்‍ஆனை படிக்கச்சொல்லி கிறிஸ்தவர்களாகிய நாங்ககளே இஸ்லாமியர்களை உற்சாகப்படுத்துகிறோம், ஏன் தெரியுமா? ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும் படிக்கச்சொல்கிறோம் ஏன் தெரியுமா?

அப்போது தான், உண்மை இஸ்லாம் என்றால் என்ன என்பது விளங்கும் என்பதற்காக:

குர்‍ஆனை படிப்பதினால் கீழ்கண்ட விவரங்களை அறிந்துக்கொள்ளலாம்:

1) ஒரு முஸ்லீம் தன் மனைவியை அடிப்பதற்கு அல்லாஹ் உரிமை கொடுத்து இருக்கிறார் என்று அறிந்துக்கொள்ளலாம்.

 2) ஒரு முஸ்லீம் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று அறிந்துக்கொள்ளலாம்.
(முதல் மனைவியின் விருப்பமெல்லாம் அவசரமில்லை)

3) வீட்டில் அடிமைப்பெண்கள் இருந்தால், அவர்களோடு விபச்சாரம் செய்யலாம் என்றுச் சொல்லி அல்லாஹ் கொடுக்கும் உரிமையை தெரிந்துக்கொள்ளலாம்.

4) குர்‍ஆனை படித்தால் பெரும்பான்மையாக புரியாது என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

5) ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கையையும் படித்தால்,  இன்று ஏன் இஸ்லாமை தீவிரவாத மதம் என்றுச் சொல்கிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

6) மனைவி கிழவியாகி விட்டால், அவளை விவாகரத்து செய்யலாம், இதனை முஹம்மதுவின் வாழ்க்கையில் கண்டுக்கொள்ளலாம்.

7) ஆறு வயது சிறுமியானாலும் சரி, தாத்தா வயதில் இருக்கும் இஸ்லாமியர் வெட்கமில்லாமல் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

8) வளர்ப்பு மகனாக இருந்தாலும் சரி, அவனது மனைவியை திருமணம் செய்துக்கொள்ளலாம், அதற்கு அல்லாஹ் வழி வகுப்பான், அதாவது விவாகரத்து செய்த பிறகு "இந்த பாக்கியமுள்ள திருமணத்தை" தானே வகுத்தான் என்று அல்லாஹ் சொல்லியுள்ளதை புரிந்துக்கொள்ளலாம்.

9) இஸ்லாமை ஏற்றுக்கொள் இல்லையானால் நீ உயிரோடு இருக்கமாட்டாய் என்று முஹம்மது சொல்லி, மற்ற நாட்டு மன்னர்களுக்கு கடிதங்கள் எழுதி "இஸ்லாமிய அழைப்பு" கொடுத்த விவரங்களை அறிந்துக்கொள்ளலாம்.

10)  போரில் பிடிப்பட்ட பெண்களை அன்றே கற்பழிக்க அனுமதி கொடுத்த முஹம்மதுவின் தியாக மனப்பான்மைப் பற்றி அறிந்துக்கொள்ளலாம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...


இப்படி அனேக நன்மைகள் குர்‍ஆனை,ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும் படிப்பதினால், இஸ்லாமிய்ர்கள் அறிந்துக்கொள்ளலாம்.

Umar


குர்‍ஆன் எரிப்பு நாள் 9/11: இது சரியா? தவறா?

குர்‍ஆன் எரிப்பு நாள் 9/11: இது சரியா? தவறா?

அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் இருக்கும் ஒரு சபை, செப்டம்பர் 11ம் தேதியன்று, பன்னாட்டு குர்‍ஆன் எரிப்பு நாள் என்றுச் சொல்லி, அன்று குர்‍ஆனை எரிக்கப்போவதாக அறிக்கை வெளியிட்டு வெளியிட்டு இருக்கிறது. இதற்கு இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள். இதர கிறிஸ்த சபைகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த குர்‍ஆன் எரிப்பு நாளை தமிழ் கிறிஸ்தவர்களாகிய நாமும் எதிர்க்கிறோம். எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்த புளோரிடா சபை போதகர் கீழ்கண்டவாறு கூறியுள்ளார், இஸ்லாம் என்பது ஒரு வன்முறை மார்க்கம், அது ஏமாற்றும் மார்க்கம் என்றுச் சொல்லியுள்ளார்.
Quote:
"We believe that Islam is of the devil, that it's causing billions of people to go to hell, it is a deceptive religion, it is a violent religion and that is proven many, many times," church pastor Terry Jones was quoted as saying by the CNN.

http://www.hindustantimes.com/US-church-to-burn-Quran-on-Sep-11/Article1-580352.aspx

BurnQuran.jpg

அவர் சொல்வது உண்மை தான், இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம் தான், அது வன்முறையை தூண்டும் மார்க்கம் தான், ஆனால், நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு குர்‍ஆனை எரிப்பது என்பது சரியான வழி அல்ல‌.

புளோரிடா சபை போதகருக்கு:

புளோரிடா சபை போதகரே, உங்கள் கோபம் நியாயமானது, உலக வர்த்தக மையத்தை செப்டம்பர் 11ம் தேதியன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்கியது, கண்டிக்கப்படவேண்டியது தான். ஆனால், உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதம் சரியானது அல்ல. குர்‍ஆனை எரிப்பது சரியானது அல்ல, இது தவறானது.

குர்‍ஆன் எரிப்பதற்கு அல்ல, குர்‍ஆன் படிப்பதற்கு.

நீங்கள் உருப்படியாக ஏதாவது சமுதாயத்திற்கு நன்மை செய்யவேண்டும் என்று விரும்பினால், முதலில் இந்த குர்‍ஆனை எரிக்கும் இந்த செயலை விட்டுவிடுங்கள். இது தேவையில்லாத ஒன்று. குர்‍ஆனை எரித்து என்னத்தை சாதிக்கப்போகிறீர்கள். உங்கள் சுற்றுப்புற சூழலில், நல்ல காற்றோட்டம் இருக்கும் சூழலில் எரியும் புகையை பறக்கவிட்டு, நல்ல காற்றோட்டத்தை கெடுக்கப்போகிறீர்கள் அவ்வளவு தான்.

ஆனால், இதை விட நல்ல ஆலோசனை என்ன தெரியுமா? குர்‍ஆனை படியுங்கள், ஹதீஸ்களை படியுங்கள், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படியுங்கள். இஸ்லாம் ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் இல்லை புரிந்துக்கொள்ள கடினம் என்றுச் சொல்வதற்கு, எனவே, குர்‍ஆனை படியுங்கள் எரிக்காதீர்கள்.

என் சமுதாயத்திற்கு நான் நன்மை செய்யவேண்டும், இஸ்லாமிலிருந்து மக்களை காப்பாற்றவேண்டும் என்று விரும்பினால், உங்கள் சபை மூலமாக இஸ்லாமிய குர்‍ஆன் வகுப்புகளை உருவாக்கி, நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள அவர்களை ஊக்குவியுங்கள். பைபிள் கல்லூரிகளில் இஸ்லாமை ஒரு பாடமாக வைத்து, அங்கு இஸ்லாம் பற்றிய உண்மையை கற்றுக்கொடுங்கள். எனனைக் கேட்டால், இஸ்லாம் பற்றி கிறிஸ்தவர்கள் அறிந்துக்கொள்வதை விட, இஸ்லாமியர்கள் தான் அதிகமாக மொத்தமாக அறிய கடமைப்பட்டு இருக்கிறார்கள். இஸ்லாமின் கையில் மாட்டிக்கொண்டு, துன்பத்தை அனுபவித்துக்கொண்டு இருப்பது அவர்கள் தான். எனவே, அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய முழு அறிவை புகட்டுங்கள். அதோடு கூட, இஸ்லாமியரல்லாதவர்களும் இஸ்லாமை அறிந்துக்கொள்ள உதவி செய்யுங்கள், முடிந்தது வேலை.


மக்களுக்கு இஸ்லாம் பற்றிய அறிவை புகட்டுங்கள், இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் பொய்யை உலகிற்கு தெரிவியுங்கள். இஸ்லாமிய வாதம் புரிய அனேகர் உருவாகியுள்ளனர், உதாரணத்திற்கு சாம் ஷமான், டேவிட் உட், ராபர்ட் ஸ்பென்சர் போன்றவர்கள் இருக்கிறார்கள், இவர்களை அழைத்து இஸ்லாமிய அறிஞர்களோடு பல தலைப்புக்களில் விவாதம் புரியவையுங்கள்.

முஹம்மதுவின் வாழ்க்கையை முழுவதுமாக மக்கள் அறியும்படி செய்யுங்கள்.

குர்‍ஆனை எரிப்பதை விட, அதை படிப்பதினால் அதிக நன்மை உண்டாகும் என்பது என் கருத்து.

சத்தியத்திற்கு எதிர்த்து நிற்க குர்‍ஆனுக்கு சக்தியில்லை, இஸ்லாமுக்கும் சக்தி இல்லை, எனவே, இயேசு சொன்னது போல, சத்தியத்தையும் அறிவீர்கள், அந்த சத்தியமே உங்களை விடுதலையாக்கும் என்பதை மனதில் வைத்தவர்களாக, இந்த குர்‍ஆன் எரிப்பு வேலையை நிறுத்திவிடுங்கள்.
-----------
SELECTED

SOURCE : http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=5&topic=1874&Itemid=287

August 7, 2010

விபச்சார பாவமும் பீஜே அவர்களும்: திருத்தல் மன்னர் இவர் தானோ!

இயேசு இறைமகனா புத்தகத்திற்கு மறுப்பு

விபச்சார பாவமும் பீஜே அவர்களும்: திருத்தல் மன்னர் இவர் தானோ!

இயேசு இறைமகனா என்ற பீஜே அவர்களின் புத்தகத்திற்கு மறுப்புக்கள் கொடுத்துக்கொணடு இருக்கிறோம்.  பீஜே அவர்கள்  "கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்" என்ற தலைப்பில்  தங்கள் திருத்தல் வேலையை அரங்கேற்றியுள்ளார்.  இந்த மறுப்புக் கட்டுரை பீஜே அவர்களின் திருத்தல் வேலையை உலகிற்கு வெளிச்சம் காட்டும்.  பைபிள் சொல்லாத ஒன்றை தானாகவே கற்பனை செய்துக்கொண்டு தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். இதனை இக்கட்டுரையை படிக்கும் இஸ்லாமியர்களும் புரிந்துக் கொள்ளலாம். 

பீஜே எழுதியவைகளின் சுருக்கம்:

1) விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை தண்டிக்கவிபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறினாராம்.

 

2) யூத சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லையாம். (பீஜேவின் கண்டுபிடிப்பு 1)

 

3) இயேசுவின் சீடர்களும் விபச்சாரம் செய்துள்ளார்களாம்! (பீஜேவின் கண்டுபிடிப்பு 2)

 

4) இயேசுவும் விபச்சாரம் செய்தார் என்று பைபிள் மறைமுகமாகச் சொல்கிறதாம் (பீஜேவின் கண்டுபிடிப்பு 3).

 

5) இது தான் கடவுளின் இலக்கணமாஎன்று கேள்வியை பீஜே எழுப்புகிறார்.

 

6) இயேசு விபச்சாரம் செய்யவில்லையானால்ஏன் அவளை அப்போதே தண்டிக்கவில்லை என்று இரண்டாவது கேள்வியை எழுப்புகிறார்

இதனை படிக்கும் நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால்இப்படியெல்லாம் நாங்கள் பைபிளில் படிக்கவில்லையே என்று எண்ணுவீர்கள். உங்கள் சந்தேகம் உண்மை தான்ஆனால்பீஜே அவர்கள் மிகப்பெரிய ஆய்வு செய்து இதனை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இக்கட்டுரையில் அவைகளுக்கு நாம் பதிலைக் காண்போம்.

இக்கட்டுரையின் தலைப்புக்கள்:

1) பைபிள் மீது பீஜே அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு

2) மோசே சொன்னது போலவிபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை இயேசு ஏன் தண்டிக்கவில்லை?

 

 

1) பைபிள் மீது பீஜே அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு

பீஜே அவர்கள்இயேசு இறைமகனா புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதுகிறார்

12. கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்

விபச்சாரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது பைபிள்.

(நீதிமொழிகள் 6:29)

ஒரு பெண் விபச்சாரம் செய்த போது விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் கூறுகிறது.

(யோவான் 8:3-11)

அந்தச் சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லை. இயேசுவின் சீடர்களும் கூட அதைச் செய்துள்ளனர். ஏன் இயேசுவும் கூட அதில் ஈடுபட்டதாக அந்த வசனம் மறைமுகமாகக் கூறுகிறது. (நாம் அவ்வாறு நம்பவில்லை)

இது தான் கடவுளின் குமாரனுக்குரிய இலக்கணமாஇயேசு அந்தப் பாவத்தைச் செய்திருக்கவில்லையானால் கடவுளின் கட்டளைப் படி அவராவது தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா?

கிறித்தவர்கள் விசுவாசிக்கின்ற பைபிளே அவரை இவ்வாறு அறிமுகம் செய்யும் போது அவரைக் கடவுள் என்று எவ்வாறு கருதுகிறார்கள்?

 

 

இன்னொரு முறை அவர் எழுதியவைகளின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்:

 

1) விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை தண்டிக்கவிபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறினாராம்.

2) யூத சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லையாம்.

3) இயேசுவின் சீடர்களும் விபச்சாரம் செய்துள்ளார்களாம்?

4) இயேசுவும் விபச்சாரம் செய்தார் என்று பைபிள் மறைமுகமாகச் சொல்கிறதாம் (இதனை பீஜே எப்படியோ கண்டுபிடித்து இருக்கிறார்).

5) இது தான் கடவுளின் இலக்கணமாஎன்று கேள்வியை பீஜே எழுப்புகிறார்

6) இயேசு விபச்சாரம் செய்யவில்லையானால்ஏன் அவளை அப்போதே தண்டிக்கவில்லை என்று இரண்டாவது கேள்வியை எழுப்புகிறார்.

 

பீஜே அவர்களின் வரிகளுக்கு செல்வதற்கு முன்பாகஅவர் மேற்கோள் காட்டிய நிகழ்ச்சி பற்றி சுருக்கமாக நாம் பார்ப்போம்.

 

இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்அக்கால யூதகுருக்கள்  விபச்சாரத்தில் பிடிப்பட்ட ஒரு பெண்ணை கொண்டு வந்து, மோசேயின் சட்டத்தின்படி இப்பெண் கல்லெரிந்து கொல்லப்படவேண்டும்நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று இயேசுவிடம் கேட்டார்கள்.

 

இது சாதாரண கேள்வி அல்லஇதில் அனேக பிரச்சனைகள் உள்ளது. அதாவது,அக்காலத்தில் ரோமர்கள் இஸ்ரவேலை ஆண்டுக்கொண்டு இருந்தார்கள்ரோம சட்டம் அமுலில் இருந்தது.

 

மோசேயின் சட்டத்தை ஆதரித்துரோம சட்டத்தை மீறலாமா அல்லது ரோம சட்டத்திற்கு கீழ்படிந்து மோசேயின் சட்டத்தை மீறலாமா? (இதில் எதை இயேசு செய்வார் என்று அவர்கள் காத்திருந்தார்ஆனால்,இயேசு வேறு ஒன்றை செய்தார்).

 

 மோசேயின் சட்டத்தை ஆதரிக்கலாமா:

 

ஆம்மோசேயின் சட்டத்தின் படிஇப்பெண் கல்லெரிந்து கொல்லப்படவேண்டும் என்று இயேசு சொன்னால்உடனே யூத தலைவர்கள்இவர் "ரோம சட்டத்தை மீறிவிட்டார்" என்றுச் சொல்லிஅரசாங்கத்திடம் இயேசுவை சிக்கவைத்துவிடுவார்கள். ஏனென்றால்ரோமர்களின் ஆட்சியில்மரண தண்டனை விதிக்கும் உரிமை ரோம அரசாங்கத்திற்கே தவிரதனி மனிதனுக்கு இல்லை. எனவே இயேசுமக்களிடத்தில் கலகத்தை உண்டாக்கிசட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்று ரோம அரசாங்கத்திடம் சொல்லிவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

 

ரோம சட்டத்தை ஆதரிக்கலாமா:

 

ஒருவேளைஇவளுக்கு மோசேயின் சட்டத்தின்படி தண்டனை இல்லை என்றுச் சொல்லிவிட்டால்,  பொது மக்களிடம் இயேசுவிற்கு இருக்கும் செல்வாக்கை அல்லது நற்பெயரை கெடுப்பதற்கு இந்த பதில் யூத குருக்களுக்கு உதவியாக இருக்கும். அதாவதுநம்முடைய மோசேயின் சட்டத்தை இவர் மீறிவிட்டார்,அல்லது அதனை அவமதித்துவிட்டார் என்றுச் சொல்லிமக்களிடையே இயேசு பற்றி சொல்லலாம் என்று யூதகுருக்கள் நினைத்தனர்.

 

இந்த இரண்டு தெரிவுகளையும்இயேசு செய்யாமல்கீழ்கண்டவாறு கூறினார் யூத குருக்கள் தோல்வி அடைந்தார்கள், (இதே போலபீஜே அவர்களும் தோல்வி அடைந்துவிட்டார்).

 

யோவான் 8:4 லிருந்து 11 வசனங்கள் வரை:

 

போதகரேஇந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.  இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசேநியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரேநீர் என்னசொல்லுகிறீர் என்றார்கள்.  அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம்உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்.இயேசுவோ குனிந்துவிரலினால் தரையிலே எழுதினார்.  அவர்கள் ஓயாமல்அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில்,

 

அவர் நிமிர்ந்து பார்த்துஉங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவதுகல்லெறியக்கடவன் என்று சொல்லி,

 

அவர் மறுபடியும் குனிந்துதரையிலே எழுதினார்.  அவர்கள் அதைக் கேட்டுதங்கள்மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டுபெரியோர்முதல்சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள்இயேசுதனித்திருந்தார்அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.

 

இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்:ஸ்திரீயேஉன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கேஒருவனாகிலும் உன்னைஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.  அதற்கு அவள்இல்லை,ஆண்டவரேஎன்றாள்.

 

இயேசு அவளை நோக்கிநானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை;நீ போஇனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

 

 

இந்த வரிகளை படித்துவிட்டுத் தான் பீஜே அவர்கள் மேலே நாம் படித்தது போல எழுதியுள்ளார்.

 

மேலேயுள்ள வசனங்களை படித்த நீங்கள்பீஜே அவர்கள் சொன்னதை ஒப்பிட்டுப் பாருங்கள்.

 

 

பீஜே அவர்கள் எழுதியவைகளை ஒரு முறை படிப்பது நல்லது:

ஒரு பெண் விபச்சாரம் செய்த போது விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் கூறுகிறது.

(யோவான் 8:3-11)

 

பீஜே அவர்களுக்கு கேள்விகள்:

 

1)       ஆய்வு செய்து புத்தகம் எழுதிய பீஜே அவர்களே, "விபச்சாரம்" செய்யாதவன் எவனோ அவன் முதலாவது கல்லெரியக்கடவன் என்று இயேசு சொன்னாரா அல்லது  "பாவம் செய்யாதவன் எவனோ அவன் முதலாவது கல்லெரியக்கடவன்" என்றுச் சொன்னாரா?

2)       "பாவம்" என்ற வார்த்தை உங்களுக்கு எப்படி "விபச்சாரம்" என்று தெரிந்தது?

3)       உங்களுக்கு ஏன் இந்த திருத்திச் சொல்லும் வேலைஉள்ளதை அப்படியே சொல்லி உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் அல்லவா?

4)       "பாவம்" என்ற வார்த்தை பொதுவான வார்த்தைஎல்லா வித தீய செயல்களை குறிக்க பொதுவாக "பாவம்" என்று பயன்படுத்தலாம்.அதாவது பொய் சொல்லுதல்,  ஏமாற்றுதல்திருடுதல்கொலை செய்தல்,விபச்சாரம் செய்தல்தீவிரவாத செயல்களில் ஈடுபடுதல் என்று அனேக தீய செயல்களை நாம் பொதுவாக பாவம் என்று அழைக்கிறோம். இந்த சாதாரண விஷயம் கூடவா உங்களுக்கு தெரியவில்லைஅல்லது வேண்டுமென்றே பைபிள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் உங்கள் வெறுப்புணர்ச்சியை வெளிக்காட்டும் செயலாஎது எப்படியோ உங்கள் திருத்தல் வேலை உலகிற்கு காட்டப்பட்டுவிட்டதுசாயம் வெளுத்துவிட்டது.

 

விபச்சாரம் செய்யாதவன் கல்லெரியவேண்டும் என்று இயேசு கூறவில்லை, "பாவம்" செய்யாதவன் கல்லெரியட்டும் என்று தான் கூறினார்இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்.

 

"பாவம்" என்று இயேசு சொன்னதை ஏன் நாம் "விபச்சாரம்" என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சில இஸ்லாமியர்கள் கேட்பார்கள்:

 

இந்த கேள்விக்கு இடமே இல்லைகாரணங்களை கீழே படிக்கவும்:

 

அ) பாவம் என்ற வார்த்தை பைபிள் முழுவதும் "விபச்சாரத்திற்கு" மட்டும் பயன்படுத்தப்படவில்லைஎல்லா வித தீய செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (குர்‍ஆனிலும் இதே நிலைதான்யாராவது மறுக்க தயாரா?)

 

ஆ)  உங்களில் பாவம் இல்லாதவன் முதலாவது கல்லை எறியட்டும் என்று இயேசு சொன்னதைஅந்த பெண்ணை கொண்டு வந்த எல்லாருக்கும் புரிந்தது (பீஜேவிற்கு மட்டும் புரியாது). நான் எப்படி இதை அவ்வளவு நிச்சயமாக சொல்லமுடியும்?   அதாவதுபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒவ்வொருவராக ஒன்றும் செய்யாமல் சென்றுவிட்டனர்அதாவது பெரியவர்கள் மட்டுமல்லஅவர்களோடு வந்திருந்த சிறியவர்கள் கூட சென்று விட்டனர். பீஜேவின் கூற்றுப்படி சிறியவர்கள் கூட விபச்சாரம் செய்ததாக நாம் அர்த்தம் கொள்ளவேண்டும்இது  சாத்தியமில்லையல்லவாஆனால்சிறுவர்கள் பொய் சொல்வார்கள்இதர சிறிய சிறிய தவறுகளைச் செய்வார்கள்இது சாத்தியம்.

 

இ) சிறியவர்களும் சென்றுவிட்டார்கள் என்றுச் சொல்வதினால்இயேசு கூறியது,சிறிய சிறிய தவறுகளாகிய பெற்றோர்களிடம் பொய் சொல்லுதல்இன்னும் பல தீய செயல்களை செய்தலை கூட‌ குறிக்கும் என்பதை அங்குள்ளவர்கள் புரிந்துக்கொண்டதினால்அவர்கள் சென்றுவிட்டனர்.

 

 

ஈ) சரிஇயேசு சொன்னது "பொதுவான தீய செயல்களைக் குறிக்கும் பாவம்" என்பதாக இருந்தாலும்ஏன் ஒரு யூத குருவும்அல்லது பெரியவர்களும்அல்லது சிறியவர்களும் கல்லெரியவில்லை?

 

பாவமில்லாதவன் ஒருவனுமில்லைஏதோ ஒரு சிறிய பாவத்தையாவது செய்து இருப்பார்கள்பொய் சொல்லியிருக்கலாம், பெற்றோருக்கு கீழ்படியாமல் இருந்திருக்கலாம்கெட்ட வார்த்தைகளை கோபத்தில் சொல்லியிருக்கலாம்ஒரு சிலர் விபச்சாரமும் செய்து இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது செய்து இருக்கலாம். ஆனால்யாருக்கு தெரியப்போகுதுஒரு கல்லை எடுத்து அந்த பெண்ணின் மீது வீசிவிட்டால் போதுமே என்று ஏன் யாருமே நினைக்கவில்லை?இதற்கும் வாய்ப்பு இல்லை.

 

 

சாதாரண பாவம் செய்து இருந்தாலும் அதனை மறைத்துஅப்பெண்ணின் மீது கல்லெரிய யாருக்கும் தைரியமில்லை ஏன்?  ஏனென்றால்அங்கு உட்கார்ந்து தரையில் எழுதிக்கொண்டு இருப்பவர் யார் தெரியுமாஏதோநான் தான் நபி என்னை நம்புங்கள் என்றுச் சொல்லுகின்ற பொய் தீர்க்கதரிசி அல்ல, தேவைப்படும் போதுதனக்கு வெளிப்பாடு வந்தது என்றுச் சொல்லி அல்லாஹ்விடமிருந்து வசன பொட்டலங்களை வாங்கித் தருபவர் அல்ல.

 

 

இயேசு மிகப்பெரிய அற்புதங்களை அடையாளங்களைச் செய்துள்ளார்யூத தலைவர்களின் மடங்கடிக்கும் கேள்விகளுக்கு தக்க பதில் சொல்லியுள்ளார்,அவர்கள் உள்ளத்தில் நினைப்பதையும் அப்படியே சொல்லியுள்ளார். எனவே,யாராவது உண்மையாகவேதான் பாவம் செய்யவில்லை என்றுச் சொல்லி,இயேசுவை ஏமாற்றலாம் என்று நினைத்து ஒரு கல்லை எரிந்து இருந்தால்,உடனேஇயேசு அந்த கல்லை எரிந்தவனிடம்நீ இந்த நாள் இந்த நாழிகையில் இந்த பாவத்தைச் செய்தாயே என்றுச் சொல்லிவிட்டால் என்ன செய்வது? இருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரும் கெட்டுவிடுமேஊரே சிரிக்குமே! நமக்கு ஏன் வம்பு என்று தலையை தொங்க போட்டுக்கொண்டு மூச்சு விடாமல் சென்றுவிட்டனர்.  எனவேயாரும் ஏமாற்றமுடியாதுதான் ஒரு சிறிய பாவமும் செய்யவில்லை என்றுச் சொல்லி கல்லை எடுக்கமுடியாது.  ஏன் அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்றுச் சொல்லிஇயேசு தலை குனிந்து இருந்தார். இது தான் வாய்ப்பு என்று முகத்தில் அசடு வழிந்தவர்களாக‌ ஒவ்வொருவராக சென்றுவிட்டனர்.

 

ஆகஇயேசு சொன்னது "சிறிய பெரிய பாவங்களை,தவறுகளை உள்ளடக்கிய" பாவம் என்ற வார்த்தையே தவிரகுறிப்பிட்டுச் சொல்லக்கூடிய "விபச்சார பாவத்தை" அல்ல. இனியும்,ஏதாவது விளக்கம் தேவையா?

 

சரிஇனி பீஜே அவர்களின் அடுத்தடுத்துள்ள வரிகளுக்குச் செல்வோம்:

 

பீஜே எழுதுகிறார்:

 

அந்தச் சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லை.

 

 

பீஜ அவர்களேநீங்கள் முதலாவது கொடுத்த விளக்கமே தவறுஅதாவது "எந்த ஒரு சிறு பாவமும் செய்யாமல் இருப்பவன் கல்லெரியவேண்டும்" என்று இயேசு சொன்னதைநீங்கள் திருத்தி "விபச்சாரம்  செய்யாதவன்" என்று பொருள் கொடுத்து இருக்கிறீர்கள்.

 

இரண்டாவதாகஅந்த பெண்ணை கொண்டு வந்த கூட்டமக்கள்இயேசு சொன்னதின் பொருளை அறிந்தவர்களாக திரும்பிச் சென்றுவிட்டனர். இயேசு மீது குற்றம் சுமத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த கூட்டத்தினர் திரும்பிச்சென்று இருக்கும் போது, "அந்த சமுதாயமே" விபச்சாரம் செய்தவர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள் நீங்கள்?

 

எருசலேமில் இருக்கும் எல்லா யூதர்களும் ஒன்று கூடி வரவில்லை பீஜே அவர்களேஇயேசு மீது குற்றம் சுமத்தவேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே வந்தார்கள். ஏன் இப்படி ஒரு சமுதாயமே அப்படி செய்தது என்றுச் சொல்கிறீர்கள்உலகத்தில் ஒரு கூட்ட இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள்பெண்களை கற்பழிப்பவர்களாக இருக்கிறார்கள்மனைவிகளை கொடுமைபடுத்துபவர்களாக இருக்கிறார்கள்இதனால்உலகில் இருக்கும் எல்லா இஸ்லாமியர்களும் அதே போல இருக்கிறார்கள் என்றுச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களோ?

 

எனவேஉங்களின் இப்படிப்பட்ட திருத்தல் வேலை இனி தமிழ் கிறிஸ்தவர்களிடம் பலிக்காதுஇனியாவது இப்படி சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்,நிறுத்தமாட்டேன் என்றுச் சொல்வீர்களானால்இப்படி மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

எனவேமேலே நீங்கள் சொன்னது மிகப்பெரிய  இஸ்லாமிய பொய்யாகும்.

 

 

பீஜே எழுதுகிறார்: 

இயேசுவின் சீடர்களும் கூட அதைச் செய்துள்ளனர்.

 

 

 

பீஜே அவர்களேஇந்த நிகழ்ச்சியின் போதுஇயேசுவின் சீடர்கள் அவ்விடத்தில் இருந்தார்கள் என்று நீங்கள் படித்த வசனங்களில் உள்ளதா?  பீஜே அவர்களே வேண்டாம்,  உங்களைப்போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் இப்படியெல்லாம் கீழ்தரமாக பொய்யைச் சொல்வது தகுதியாக இருக்காதுஇது உங்களுக்கு அடுக்காதும் கூட.

 

ஒரு வேளை சீடர்கள் அங்கு இருந்திருந்தாலும்:

 

அந்த இடத்தில் இயேசுவின் சீடர்கள் அப்போது அங்கே இருந்தார்களா இல்லையா என்று வசனங்கள் சொல்லவில்லை. உங்கள் பேச்சுக்கே வருகிறேன்ஒரு வேளை,சீடர்கள் அங்கு இருப்பதாகவே எடுத்துக்கொள்வோம். அப்படி அவர்கள் இருந்திருந்தாலும்இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் யூத மத தலைவர்கள் மற்றும் அவர்களோடு வந்தவர்களாவார்கள். ஆகஇயேசு சொன்னது தன் மீதுகுற்றம் சுமத்த வந்தவர்களிடமே தவிரதன் சீடர்களிடமில்ல


(SELECTED)
SOURCE : http://isakoran.blogspot.com/2010/08/blog-post.html