அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 27, 2015

2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்



[2015ம் ஆண்டு ரமளான் மாதத்தின் முந்தைய 14 கடிதங்களை படிக்க இங்குசொடுக்கவும். ரமளான் மாதத்தின் கடைசி கடிதம் இது தான். இந்த (புனிதமான) ரமளான் மாதத்தில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட புனிதமான செயல்களை தம் தம்பிக்கு உமர் தொகுத்து எழுதுகிறார். இதைத் தொடர்ந்து, நேர்வழி நின்ற கலிஃபாக்களின் ஆய்வுக் கடிதங்கள் அடுத்த மாதத்திலும் தொடரும்.]

அன்பான தம்பிக்கு,

உமர் வாழ்த்துதல் சொல்லி எழுதும் கடிதம். கடந்த ஒரு மாதமாக நாம் பல விஷயங்களை விவாதித்தோம். இவ்வாண்டின் ரமளான் இன்றோடு முடிவுக்கு வருகிறது.  உனக்கு இன்று சௌதி அரேபியாவில் ரமளான் பண்டிகை கொண்டாடப்படுகின்றது என்று நினைக்கிறேன். ஆனால், இந்தியாவில் நாளைக்கு கொண்டாடுவார்கள். 

என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும், ஒவ்வொரு நொடியும் வானத்தில் நடக்கும் நிகழ்வுகளை துள்ளியமாக கணிக்கும் கருவிகள், ஞானம் மனிதனுக்கு கிடைத்திருந்தாலும், அடுத்த 100 ஆண்டுகள் நிலவு எந்த சுற்றுப்பாதையில் எப்படி சுற்றும் என்று மனிதனால் கணிக்கமுடியும் என்றாலும், இன்றும் வானத்தின் பக்கம் தங்கள் வெறும் கண்களை திருப்பிக்கொண்டு, நிலவு தெரிகின்றதா? என்று பார்த்து பண்டிகை கொண்டாடும் வரட்டு தைரியமும், அறியாமையும், முஸ்லிம்களை விட்டு இன்னும் அகலவில்லை என்பதை அறியும் போது என் மனம் காயமடைகிறது. இப்படிப்பட்ட குழுவில் என் தம்பியும் குழுமியிருக்கிறான் என்று நினைக்கும் போது, அந்த காயத்தில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது தம்பி. ஹும்…. என்னால் என்ன செய்யமுடியும்? காலம் இதற்கு பதில் சொல்லும் என்ற நம்பிக்கையில் என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்.

ரமளான் என்றால் உபவாசம் என்ற பொய்யான போர்வையில், அனேக நடுத்தர முஸ்லிம் குடும்பங்களின் பணப்பை காலியானது தான் மிச்சம். ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் அதிகமாக அல்லாஹ்வை நெருங்கி வாழ்கிறார்கள் என்று சொல்லப்படுகின்றது, ஆனால், அவர்கள் அதிகமாக உணவு பக்கம் தான் திரும்புகிறார்கள் என்பது தான் உண்மை, இதற்கு கிடைக்கும் கூட்டு வட்டி, அனேகரின் உடல் பருமனானது தான் மிச்சம். இதர மாதங்களை விட பல மடங்கு அதிகமாக உணவுப் பொருட்கள் இம்மாதத்தில் தான் விற்பனையாகிறது என்பதை யார் கவனத்தில் கொள்கிறார்? ஆ…. என்னே ஒரு மார்க்க மோசடி! தாங்கள் மோசம் போய்க்கொண்டு இருக்கிறோம் என்பதையும் அறியாமல் மக்கள் வாழ்கிறார்கள்.

பிரச்சனை எங்குள்ளது? முஸ்லிம்களின் மூளையிலா? இஸ்லாமின் மூலத்திலா?

சரி தம்பி, ரமளான் மாதத்தின் கடைசி கடிதத்தில், உனக்கு ஒரு முக்கியமன விஷயத்தை எழுதிவிடுகிறேன். நேற்று நீ எனக்கு போன் செய்த போது, இந்த ரமளான் மாதத்திலும் அனேக தீவிரவாத செயல்கள் நடந்துள்ளது என்று நான் சொன்னேன். உடனே அதற்கு நீ இஸ்லாமிய ஆன்மீகத்துக்கும், அரசியலுக்க்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை மக்கள் சரியான புரிந்துக்கொள்ளாமல் இருப்பதினால் தான் இப்படி தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று விளக்கம் கொடுத்தாய். 

தம்பி, எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை, 

  • முஸ்லிம்கள் கிறிஸ்தவத்தை சரியாக புரிந்துக்கொள்கிறார்கள் 
  • முஸ்லிம்கள் இதர மதங்களை வேதங்களை சரியாக புரிந்துக்கொள்கிறார்கள்
  • முஸ்லிம்கள் விஞ்ஞானத்தை சரியாக புரிந்துக் கொள்கிறார்கள்
  • ஆனால் முஸ்லிம்கள் ஏன் இஸ்லாமை மட்டும் தவறாகவே புரிந்துக்கொள்கிறார்கள்?
  • இஸ்லாமைத் தவிர மீதமுள்ள அனைத்தையும் முஸ்லிம்கள் ஏன் சரியாக புரிந்துக் கொள்ளுகிறார்கள்? 
  • முஸ்லிம்களின் புரிந்துக் கொள்ளுதலில் தான் தவறு என்றால், அவர்கள் மற்றவற்றையும் தவறாக புரிந்துக் கொள்ளவேண்டுமல்லவா? 
  • மற்றவர்களின் வேதங்களை மேலோட்டமாக படித்து சரியாக புரிந்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு ஞானம் முஸ்லிம்களுக்கு இருந்தால், எப்போது பார்த்தாலும், குர்-ஆனிலேயே ஊறிக்கொண்டு இருப்பவர்கள், ஹதீஸ்களை கறைத்துக்குடிப்பவர்கள், இஸ்லாமின் மூல மொழி அரபியிலேயே எல்லாவற்றையும் படிக்கும் இவர்கள் ஏன் தவறாக இஸ்லாமை புரிந்துக் கொள்கிறார்கள்?
  • தம்பி, உனக்கு பிரச்சனை எங்கே என்று தெரிகின்றதா? முஸ்லிம்களின் மூளையில் பிரச்சனையில்லை, இஸ்லாமின் மூலத்தில் பிரச்சனை உள்ளது. 

இனி என்னிடம், முஸ்லிம்கள் இஸ்லாமை தவறாக புரிந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றுச் சொல்ல தைரியம் கொள்ளாதே!

2015ம் ஆண்டு ரமளானில் நிகழ்த்தப்பட்ட அமைதி மார்க்க செயல்கள்:

இவ்வாண்டு ரமளான் 29வது நாள் வரை, முஸ்லிம்கள் உலக அளவில் நடத்திய அமைதி மார்க்க செயல்களை கவனி.  இஸ்லாமிய மத செயல்களோடு இதர மார்க்க செயல்களையும் ஒப்பிட்டுப் பார். யார் முன்னிலையில்  இருக்கிறார்கள் என்பதை பார்.

2015 ரமளான் வன்முறை செயல்களின் பட்டியல்

 

ரமளான் நாள் 29அமைதி மார்க்கம் இஸ்லாமின் பெயரால்இதர மார்க்கங்களின் பெயரால்இஸ்லாமை எதிர்ப்பவர்களின் பெயரால்
தீவிரவாத தாக்குதல்கள்29100
தற்கொலை தாக்குதல்கள்5600
மரித்தவர்கள்2765 00
காயமுற்றவர்கள்3271 00

முஸ்லிம்கள் இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள், எனவே

  • ரமளானின் மட்டும் 2765 மனிதர்களை கொன்று குவித்துள்ளார்கள்!
  • ரமளானின் மட்டும் 3271 மனிதர்களை காயப்படுத்தியுள்ளார்கள்! 
  • 56 தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்
  • 291 தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்

ஏன் தம்பி, இப்படி முஸ்லிம்கள் மட்டும் செய்கிறார்கள்?

ஒரு ஹிந்து இத்தனை! செயல்களில் ஈடுபடுவதில்லை, ஏனென்றால், அவன் தன் வேதத்தை சரியாக புரிந்துக் கொண்டுள்ளான் என்பதாலா?

ஒரு கிறிஸ்தவன் இத்தனை! செயல்களில் ஈடுபடுவதில்லை, ஏனென்றால், அவன் தன் வேதத்தை சரியாக புரிந்துக் கொண்டுள்ளான் என்பதாலா?

ஒரு நாத்தீகன் இத்தனை! செயல்களில் ஈடுபடுவதில்லை, ஏனென்றால், அவன் தன் வேதமில்லாததை சரியாக புரிந்துக் கொண்டுள்ளான் என்பதாலா?

எங்கே தவறு இருக்கிறது? மனிதனிலா அல்லது அவன் படிக்கும் வேதத்திலா?

இஸ்லாமை, எல்லா நாடுகளிலுமா தவறாக புரிந்துக் கொள்வார்கள்?

இவ்வாண்டு ரமளான் மாதத்தில் நடந்த அனைத்து தீவிரவாத செயல்களை அறிய இந்த தொடுப்பை சொடுக்கிப் பார்: http://www.thereligionofpeace.com/index.html

இன்னும் ஒரு கேள்வி என்னை துளைத்துக் கொண்டே இருக்கிறது. உன் கூற்றுப்படி, இஸ்லாமை இமாம்கள், அறிஞர்கள் தவறாக புரிந்துக் கொண்டு, முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள் என்பது உண்மையானால், அதனை ஏதாவது ஒன்று அல்லது இரண்டு  நாடுகளில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் தவறாக புரிந்துக் கொள்கிறார்கள் என்று சொல்லலாம். உதாரணத்திற்கு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற சில நாடுகளில் தான் இப்படி புரிந்துக் கொள்ளப்படுகின்றது என்று கருதினால், இதில் நியாயம் இருக்கிறது. ஆனால், சொல்லிவைத்தாற் போல, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளில் வாழும் இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்களும் ஒரே மாதிரியாக தவறை எப்படி புரிந்துக் கொள்ளமுடியும்?

இந்த கீழ்கண்ட நாடுகளில் மற்றும் பகுதிகளில் உள்ள இமாம்கள், ஒரே மாதிரியாக இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள் என்று சொல்லமுடியுமா?

இந்தியா, சூடான், அல்ஜீரியா, நியூ யார்க் (அமெரிக்கா), பாகிஸ்தான், இஸ்ரேல், ரஷ்ஷியா, செசன்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, நைஜீரியா, இங்கிலாந்து, தாய்லாந்து, ஸ்பெயின், எகிப்து, பாங்களாதேஷ், சௌதி அரேப்பியா, துருக்கி, மொராக்கோ, யெமன், பிரான்ஸ், உஜ்பெகிஸ்தான், துனிஷியா, கொசோவோ, போஸ்னியா, கென்யா, சிரியா, சொமாலியா, குவைத், எத்தியோப்பியா, ஜோர்டான், யுனைடட் அரப் எமிரேட்ஸ், டான்ஜானியா, பெல்ஜியம், டென்மார்க், கத்தர், தஜிகிஸ்தான், நெதர்லாண்டு, ஆப்கானிஸ்தான், மாலி, அங்கோலா, உக்ரைன், உகாண்டா, ஜெர்மனி, லெபனேன், ஈரான், ஸ்வீடன், ஈராக், ஸ்காட்லாண்ட், ஆஸ்திரேலியா….இன்னும் இருக்கிறது….

மேற்கண்ட நாடுகளில் உள்ள அனைத்து முஸ்லிம்களும்  ஏன் ஒரே மாதிரியாக இஸ்லாமை தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்கள்?  

தம்பி, உனக்கு புரிகின்றதா? உன் வாதத்தில் உள்ள குறைபாட்டை உன்னால் பார்க்கமுடிகின்றதா? ஒருவர் தவறாக புரிந்துக் கொள்ளமுடியும், இரண்டு பேர் தவறாக புரிந்துக் கொள்ளமுடியும், ஆனால், எல்லோருமா இஸ்லாமை தவறாக கொள்வார்கள்? தவறு எங்கே நடந்துள்ளது என்பதை உன்னால் உணரமுடிகின்றதா தம்பி?

இப்படி ஒரு பன்சு டையலாக்கை, நாம் அடிக்கடி சொல்லுவோம். 

சிலரை எல்லா நேரங்களிலும் ஏமாற்றமுடியும், எல்லோரையும் சில நேரங்களில் ஏமாற்றமுடியும், ஆனால், எல்லோரையும், எல்லா நேரங்களிலும் ஏமாற்றமுடியாது.

ஆனால், இஸ்லாமை பொறுத்தமட்டில் மேற்கண்ட கூற்று தவறாகும். எல்லோரும், எல்லா நேரங்களிலும், எல்லா நாடுகளிலும்,  இஸ்லாமை இப்படித்தான் புரிந்துக் கொள்கிறார்கள். இதிலிருந்து புரிவது என்ன? அவர்கள் புரிந்துக் கொண்டது தான், உண்மையான இஸ்லாம் என்பதாகும். இதனை மறுப்பவர்கள், அடுத்த வாரத்திற்குள் எத்தனை தீவிரவாத செயல்கள் அல்லாஹ்வின் பெயரால் நடக்கிறது என்பதை செய்தித்தாள்களில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். தெரிந்துக்கொண்ட பிறகு, "அவர்கள் இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டார்கள்" என்ற வசனத்தை திரும்ப திரும்ப இஸ்லாமியரல்லாதவர்களின் காதுகளில் ஊதிக்கொண்டே இருங்கள். ஒரு நாள் வரும் அன்று, உங்கள் வீட்டு வாசற்படியில், ஒரு முஸ்லிமின் வெடிகுண்டு வெடித்து, உங்கள் அன்பான பிள்ளைகளின் பிணங்கள், இரத்த வெள்ளத்தில் மிதக்கும் போது, அன்று சரியாக உங்களுக்கு இஸ்லாம் புரிய ஆரம்பிக்கும், ஆனால் அதற்குள் உங்கள் கதை முடிந்துவிடும், குடும்பமில்லாமல், நீங்கள் நேசிப்பவர்கள் இல்லாமல், இனி எத்தனை ஆண்டுகள் "இஸ்லாமை சரியான புரிந்துக் கொள்ளுதலுடன்" வாழ்தாலும் என்ன பயன்?

குர்-ஆன்  9:5. எனவே, சங்கைக்குரிய மாதங்கள் கழிந்துவிட்டால், இறைவனுக்கு இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்! மேலும், அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்! மேலும், எல்லா இடங்களிலிருந்தும் அவர்களைக் கண்காணியுங்கள். பிறகு, அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்தால் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும் பெரிதும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.

குர்-ஆன்   9:29. வேதம் வழங்கப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவற்றை 'தடுக்கப்பட்டவை' என்று கருதாமலும் சத்திய மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள்; அவர்கள் சிறுமை அடைந்தவர்களாகி (தமது) கையால் ஜிஸ்யா வரியைச் செலுத்தும் வரை!

குர்-ஆன் 9:123. இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறை மறுப்பாளர்களில் யார் உங்களை அடுத்திருக்கிறார்களோ அவர்களுடன் போர் புரியுங்கள்! அவர்கள் உங்களிடம் கடினமான போக்கைக் காணவேண்டும். மேலும், அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களோடு இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் வெளியீடு)

தம்பி, என் உள்ளம் மிகுந்த பாரத்தால் நிரம்பியுள்ளது. உனக்கு ரமளான் நல்வாழ்த்துக்கள் சொல்லவும் என்னால் முடியவில்லை. விரல்கள் மேற்கொண்டு டைப் செய்ய மறுக்கின்றன. என்னை மன்னித்துவிடு, இந்த கடிதத்தை இதோடு முடிக்கிறேன்.

சத்தியத்தை அறிந்துக் கொள், அது உன்னை விடுதலையாக்கும்.

இப்படிக்கு,

துக்கத்துடன் உன் அண்ணன்

உமர்.

தேதி: 17 ஜூலை 2015


உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day15.html





--

2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: "ஸகாத்" உன்
அப்பன் சொத்து அல்ல!


[ரமளான் தொடர் கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும். இவ்வாண்டு
ரமளானின்13வது கடிதத்தை இங்கு சொடுக்கி படித்து, அதன் பிறகு தற்போதைய
கடிதத்தை படிக்கவும்.]

உமரின் தம்பி சௌதி அரேபியாவிலிருந்து எழுதிய கடிதம்:

அன்புள்ள அண்ணாவிற்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நான் உங்களுக்கு இஸ்லாமிய விவரங்களை இனி எழுதமாட்டேன் என்று என் முந்தைய
கடிதத்தில் எழுதியிருந்தேன். ஆனால், உங்களின் 13வது கடிதம் கண்டு என்
மனதை மாற்றிக்கொண்டேன். ஏதாவது ஒன்றை என்னால் இயன்ற மட்டும் நான்
இஸ்லாமுக்காக செய்யவேண்டும்.

அடி மீது அடி அடித்தால், அம்மியும் நகரும் என்பார்கள், அது போல உங்களை
சொர்க்கவாசியாக மாற்றும் வரை நான் ஓயமாட்டேன். நாம் இருவரும்
எழுதிக்கொள்வது, சொத்துகளுக்காக போடும் அண்ணன் தம்பி சண்டையில்லையே! எந்த
கோட்பாடு உண்மையென்பது தான் கேள்வி. உங்களால் ஆனதை நீங்கள் எழுதுங்கள்,
என்னால் முடிந்ததை நான் எழுதுவேன். அல்லாஹ்விற்காக நான் பேனாவை
தூக்கியிருக்கிறேன், உங்களுக்கு உங்கள் விருப்பப்படி கத்னா
(விருத்தசேதனம்) செய்யாமல் அந்த பேனாவை நான் கீழே வைக்கமாட்டேன். [இந்த
வயதில் கத்னா செய்வது தகுமா? என்று கேட்காதீர்கள், ஆபிரகாம் மற்றும்
மோசேக்கு எந்த வயதில் விருத்தசேதனம் செய்யப்பட்டது என்று பழைய
ஏற்பாட்டில் படித்துப் பாருங்கள்.]

இன்னொரு முக்கியமான விஷயம், ரமளான் மாதம் முடிந்துவிட்டாலும் நம்முடைய
இந்த கடித உரையாடலை நாம் தொடருவோம்.

அப்போஸ்தலர் சொர்க்கவாசிகளே! என்று உங்கள் முந்தைய கடிதத்தில்
எழுதியிருந்தீர்கள். நான் இன்னும் அதிகமாக ஆய்வு செய்து அப்போஸ்தலர்கள்
பற்றி அடுத்தடுத்த கடிதங்களில் எழுதுவேன்.

இப்படிக்கு,

உங்கள் தம்பி,

சௌதி அரேபியா

---------------

உமரின் கடிதம்:

அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: "ஸகாத்" உன் அப்பன் சொத்து அல்ல!

அன்பான தம்பிக்கு,

உன் கடிதம் கண்டேன், மகிழ்ந்தேன்.

தோல்வியைக் கண்டு நீ தொலைந்துபோ என்றும், சோர்வைக் கண்டு நீ செத்துவிடு
என்றும் சொல்லும் தெம்பு என் தம்பியிடம் இருப்பதைக் கண்டு மகிழ்கிறேன்.
இதே போல, மரணமே உன் கூர் எங்கே, பாதாளமே உன் ஜெயம் எங்கே என்றும்
கேட்டுவிடு, அப்போது இன்னும் அதிகமாக நான் மகிழுவேன். இப்படி கேட்கும்
விசுவாசமும், வீரமும் உனக்கு வரவேண்டுமென்று எல்லாம் வல்ல தேவனிடம்
வேண்டுகிறேன். எனக்கு விருத்தசேதனம் செய்ய நீ விரும்புகிறாய், ஆனால்
உனக்கு இருதயத்தில் விருத்தசேதனம் செய்ய நான் விரும்புகிறேன்.
பார்க்கலாம்! யாருக்கு யார் விருத்தசேதனம் செய்யப்போகிறார்கள் என்று!
சத்தியத்தை தேட முடிவு செய்துவிட்டாய், நிச்சயமாய் அதனை கண்டுக்கொள்வாய்.

உன் கடிதத்தில் நீ குறிப்பிட்டது போல, இந்த ரமளான் மாதம்
முடிந்துவிட்டாலும், நம்முடைய இந்த கடித உரையாடலை நாம் தொடரலாம், பல
உண்மைகளை தொடலாம்.

அபூ பக்கர் "முதல் கலிஃபாவாக" பதவியேற்ற பிறகு அவர் செய்த சாதனைகளை
சுருக்கமாக இனி காணப்போகிறோம்.

தம்பி இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை உன் ஞாபகத்திற்கு கொண்டு வருகிறேன்.
இந்த ரமளான் மாதத்தின் ஆரம்பத்தில், நீ என்னிடம் "இஸ்லாமை தூயவடிவில்
காணவேண்டுமென்றால், தற்கால முஸ்லிம்களிடமோ, ஐஎஸ் போன்ற தீவிரவாதிகளிடமோ
காணமுடியாது, அதற்கு பதிலாக, ஆரம்ப கால இஸ்லாமியர்களாகிய சஹாபாக்களிடம்
தான் காணமுடியும்" என்று கூறினாய். அதன் அடிப்படையில் தான் நான் என்
ஆய்வை ஆரம்ப கால இஸ்லாமியர்களின் பக்கம் முக்கியமாக முதல் நான்கு
கலிஃபாக்களின் பக்கம் திருப்பினேன்.

உன் கருத்துப்படி (முஸ்லிம்களின் பொதுவான நம்பிக்கையின் படி):

அ) முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக இஸ்லாமை தூயவடிவில் பின் பற்றியவர்கள்,
ஆரம்ப கால இஸ்லாமியர்கள் ஆவார்கள்.

ஆ) அவர்களிலும் முக்கியமாக அவரது நெருங்கிய சஹாபாக்கள் இஸ்லாமை
தூயவடிவில் பின் பற்றினார்கள்.

இ) இந்த சஹாபாக்களிலும், முதல் நான்கு கலிஃபாக்கள் தான் "நேர் வழி நின்ற
கலிஃபாக்கள்" என்று பட்டப்பெயரோடு திகழ்கிறார்கள்.

ஈ) இந்த நான்கு கலிஃபாக்களின் பெயர்கள் அபூ பக்கர், உமர், உஸ்மான்
மற்றும் அலி என்பவைகளாகும்.

இவர்களின் வாழ்க்கையில் காணப்படும் இஸ்லாம் தான் உண்மையான இஸ்லாமாகும்.
ஏனென்றால், இவர்கள் முஹம்மதுவை கண்டு, அவரோடு பேசி, அவரோடு வாழ்ந்து,
அவரை நெருக்கமாக பார்த்தவர்கள். இஸ்லாமின் கோட்பாடுகளை இடைத்தரகர்கள்
இல்லாமல் தூயவடிவில் பெற்ற பாக்கியசாலிகள். ஆக, இவர்களிடம் இஸ்லாமின் தூய
வடிவத்தை மக்கள் தேடுவதில் எந்த குற்றமுமில்லை.

தம்பி, இந்த கடிதத்தில், முதல் கலிஃபா அபூ பக்கர் அவர்களின் சாதனைகளின்
ஆரம்பத்தை சிறிது சோதித்துப் பார்ப்போம்.

முஹம்மது மரித்த பிறகு, அபூ பக்கர் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவர்
ஏக மனதாக தெரிவு செய்யப்படவில்லை, பல எதிர்ப்புகளின் மத்தியில், உமரின்
தைரியமான செயலினால் இவர் தலைவரானார். இவர் இரண்டாண்டுகள் (கிபி 632 முதல்
கிபி 634 வரை)ஆட்சி செய்தார்.

இஸ்லாமை புறக்கணித்த முஸ்லிம்கள்:

முஹம்மதுவின் காலத்தில் அரேபியாவில் இருந்த அனேக இனக்குழுக்கள்
முஹம்மதுவுடன் உடன்படிக்கை செய்திருந்தார்கள். முஹம்மதுவின் ஆள் பலத்தைக்
கண்டு இஸ்லாமை பின் பற்றுவதாகச் சொல்லி, முஹம்மதுவிற்கு ஜகாத் (ஸகாத்
வரி) கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். சிலர் விரும்பி இஸ்லாமை
ஏற்றார்கள், சிலர் தங்களுக்கு சண்டையிட வலிமையில்லை என்பதால்,
விருப்பமில்லாமலும் இஸ்லாமை ஏற்றார்கள்.

முஹம்மது மரித்தவுடன், அபூ பக்கர் கீழ்கண்ட சவால்களை சந்தித்தார்:

1) அரேபிய இனக்குழுக்கள் "நாங்கள் முஹம்மதுவுடன் தான் உடன்படிக்கைச்
செய்தோம், அவர் மரித்துவிட்டார், அரேபிய வழக்கத்தின் படி அவரோடு நாங்கள்
புரிந்த உடன்படிக்கையும் முரிந்துவிட்டது, இனி நாங்கள் மதினாவிற்கு ஜகாத்
(ஸகாத் வரி) செலுத்துவதில்லை" என்று கூறினார்கள். நாங்கள் முஸ்லிம்களாகவே
இருப்போம், ஆனால், ஜகாத் அபூ பக்கருக்கு தரமாட்டோம், எங்களை நாங்களே
ஆட்சி செய்துக்கொள்வோம் என்று கூறினார்கள்.

2) இன்னும் சிலர், இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டார்கள், தாங்கள் கடந்த
காலத்தில் பின்பற்றின மதத்திற்கே திரும்பி விட்டார்கள்.

3) சிலர் தங்களை நபிகள் என்றுச் சொல்லிக்கொண்டு, இஸ்லாமுக்கு இனி நாங்கள்
அடிமைகள் இல்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

தம்பி, இந்த சூழ்நிலையில் அபூ பக்கரின் இடத்தில் நீ இருந்திருந்தால் என்ன
செய்து இருப்பாய்? இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று ஓயாமல்
சொல்லிக்கொள்ளும் (தற்கால) முஸ்லிம்கள் என்ன செய்து இருந்திருப்பார்கள்?
இஸ்லாமை தூயவடிவில் பின்பற்றக்கூடியவர்கள் "இஸ்லாமில் கட்டாயமில்லை, உன்
மார்க்கம் உனக்கு என் மார்க்கம் எனக்கு" என்றுச் சொல்லி அப்படியே விட்டு
விடுவார்களா? நாங்கள் முஸ்லிம்களாகவே இருந்து எங்களை நாங்கள்
ஆண்டுக்கொள்வோம் என்றுச் சொன்ன முஸ்லிம்களோடு சண்டையிடுவார்களா?

இஸ்லாம் அமைதி மார்க்கம் தான் என்று நிரூபிக்கம் சமயம் வந்தது, அதுவும்
முதல் தலைவர் அபூ பக்கருக்கு வந்துள்ளது. இவர் என்ன செய்து
இருந்திருக்கவேண்டும்? இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றும், இஸ்லாமை
கட்டாயப்படுத்தி யார் மீதும் திணிக்கக்கூடாது என்றும் நினைத்து
செயல்பட்டு இருந்திருக்கவேண்டும். இவர் செய்தது என்ன?

ரித்தா போர்கள் - இஸ்லாமைவிட்டு வெளியேறியவர்களுடன் நடந்த போர்கள்(War of
Apostasy):

அபூ பக்கருக்கும் உமருக்கும் இடையே நடைப்பெற்ற ஒரு சிறிய உரையாடலை,
முஸ்லிம்களின் அதிகார பூர்வமான புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து காண்போம்.
தம்பி, இந்த கடிதத்தை இந்த ஒரு ஹதீஸோடு நான் முடிக்கிறேன்.

புகாரி ஹதீஸ் எண்: 1399

1399. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும்
அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர்.
(அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), 'லா இலாஹ
இல்லல்லாஹ்" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக்
கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை
அல்லாஹ்விடமே உள்ளது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது,
நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?' என்று கேட்டார். அபூ
பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும்
ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத்
செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்)
அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால்
கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்" என்றார். இது பற்றி
உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான
தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு
கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்" என்றார்.
Volume :2 Book :24

இதே விவரங்கள் வேறு ஹதீஸ்களிலும் வருகிறது, அவைகளின் எண்கள்: 1400,
1456-1457, 6925, 7284-7285.

தம்பி, நன்றாக மேற்கண்ட ஹதீஸ்களை படித்துப் பார்.

முஹம்மதுவின் கூற்றுப்படி, "லா இலாஹ இல்லல்லாஹ்" என்றுச் சொல்லி,
முஸ்லிமாக வாழ்பவன் பாதுகாப்பாக இருப்பான், அவன் மீது போர்
செய்யக்கூடாது. இதனை உமர் அபூ பக்கருக்கு ஞாபகப்படுத்துகிறார். ஆனால்,
அபூ பக்கரின் கூற்றுப்படி "அவன் முஸ்லிமாக இருந்தாலும் சரி, அல்லாஹ் தான்
உண்மையான இறைவன் என்று சொன்னாலும் சரி, ஸகாத் கொடுக்கவில்லையென்றால்,
அவன் காஃபிர் தான், எனவே அவனோடு நான் போரிடுவேன். ஸகாத்தாக அவன் ஒரு
ஒட்டகக்குட்டியை முஹம்மதுவிற்கு கொடுத்தவனாக இருந்திருந்தால், அதனை நான்
இப்போது வசூலிக்காகமல் விடமாட்டேன்" என்பதாகும்.

இதற்கு உமர் அளித்த பதிலை நன்றாக கவனி. அபூ பக்கருக்கு அல்லாஹ் நேர் வழி
காட்டி இந்த முடிவை எடுக்கக்கூடிய ஞானம் கொடுத்ததாக உமர் கூறுகிறார்.

". . . இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின்
இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ்
விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என
நான் விளங்கிக் கொண்டேன்" என்றார்."

யார் குற்றவாளி? அல்லாஹ்வா அல்லது அபூ பக்கரா?

தம்பி, உன்னிடம் நாம் கீழ்கண்ட கேள்விகளை கேட்கவிரும்புகிறேன். இது
மிகவும் முக்கியமான விஷயம், முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, இஸ்லாம்
தூயவடிவில்! வெளிப்பட்ட நேரம் அது!

1) முஹம்மது உயிரோடு இருந்த போது, அரேபியாவின் இனக்குழுக்கள் இஸ்லாமை
எதன் அடிப்படையில் தழுவினார்கள்?

2) முஹம்மது மரித்தவுடன் ஏன் அவர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டு
தங்கள் முந்தையை மதத்தை பின்பற்ற ஆரம்பித்தார்கள்?

3) முஹம்மதுவின் வாளுக்கு பயந்து இவர்கள் இஸ்லாமை ஏற்றார்கள் என்று
பொருள்படுகின்றதல்லவா?

4) இன்னும் சிலர், ஸகாத் மட்டும் நாங்கள் தரமாட்டோம், ஆனால்,
முஸ்லிம்களாகவே இருப்போம் என்றுச் சொன்ன பிறகும் ஏன் அபூ பக்கர்
அவர்களோடு போர் புரிந்தார்?

5) ஸகாத்திற்காக அல்லாஹ்வின் அடியார்களை வெட்டிச் சாய்க்கும் இந்த மதம்,
ஒரு வன்முறையின் மதம் என்பதை, அந்த மக்களுக்கு அபூபக்கர் நேரடியாக
தெரிவித்தது போல ஆகிவிட்டதல்லவா?

6) இஸ்லாமில் கட்டாயமில்லை என்ற வசனமும் இறையியலும், வெறும் பேச்சுக்காகத் தானா?

7) இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம் என்று அபூ பக்கர்
நினைத்திருந்தால், ஏன் அவர்களோடு போர் புரிந்தார்? ஏன் உமரின் ஆலோசனையை
ஏற்றுக் கொள்ளவில்லை? சில சஹாபாக்களை அனுப்பி அவர்களுக்கு இஸ்லாமை
இன்னும் அழமாக விளக்கியிருக்கலாம் அல்லவா? ஸகாத் என்பது ஒரு முஸ்லிமின்
ஐந்து கடமைகளில் "ஒன்று" என்று விளக்கியிருந்திருக்கலாம் அல்லவா? ஒருவேளை
அவர்கள் அப்போதும் ஏற்க மறுத்தால், முடிவை அல்லாஹ்விடம் விட்டுவிட்டு
இருந்திருக்கலாம் அல்லவா? அவர்களோடு சண்டையிடாமல் இருந்திருந்தால்,
இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று தெரிந்திருக்கும் அல்லவா?

8) அற்பமான பணத்திற்காக, இன்னொரு முஸ்லிமோடு போர் புரிந்து இரத்தம்
சிந்துவது பாவமில்லையா?

9) இஸ்லாமின் படி, அபூ பக்கர் நேர் வழி நின்ற கலிஃபா என்றால், இந்த
செயல்களுக்கெல்லாம் மூல காரணம் அல்லாஹ் தானே! இந்த வழியை அபூ பக்கரின்
மனதில் போட்டவர் அல்லாஹ் என்றால், யார் குற்றவாளி? அபூ பக்கர் வெறும்
அம்பு தான், எய்தவன் அல்லாஹ் தானே!

10) ஸகாத் கொடுப்பது பொருளாதார கடமையென்றால், அந்தந்த இனக்குழுக்கள்
தங்கள் சொந்த தலைவருக்கு ஸகாத் கொடுத்துவிட்டு போகிறார்கள்! அவர்களும்
முஸ்லிம்கள் தானே! ஏன் அவர்கள் மீது அபூ பக்கர் போர் தொடுத்தார்?

11) அபூ பக்கர் நடந்தது நேர் வழியென்றால், நாளைக்கு இந்த ஐஎஸ் போன்ற
தீவிரவாத கும்பல், ஒரு நாட்டை முழுவதுமாக பிடித்து ஆட்சி பிடித்தால்,
உடனே பக்கத்தில் உள்ள இதர இஸ்லாமிய நாட்டைப் பார்த்து எனக்கு ஸகாத் கொடு,
இல்லையேல், அபூ பக்கர் செய்த ரித்தா போர் போல, நான் உன் மீது போர்
தொடுப்பேன் என்றுச் சொன்னால், அதனை இன்றுள்ள சௌதி அரேபியா, பாகிஸ்தான்
போன்ற நாடுகள் அவருக்கு அடிபணியுமா? அடிபணியவேண்டுமா? அல்லது
சண்டையிடுமா?

12) முதல் கலிஃபா "அபூ பக்கர்" மாதிரி, இன்றைய "அபூ பக்கர் பக்தாதி (ஐஎஸ்
தலைவர்)" பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதி, நீ முஸ்லிமாக இருந்தாலும்,
அல்லாஹ்வை மட்டுமே வணங்கினாலும், என் கலிஃபாத்துவத்திற்கு அடிபணிந்து,
எனக்கு ஸகாத் கொடுக்கவில்லையென்றால், உன் மீது போர் தொடுக்கப்படும்
என்றுச் சொன்னால்? பாகிஸ்தான் முஸ்லிம்கள் என்ன செய்வார்கள். இந்த அபூ
பக்கர் பக்தாதியையும் "நேர்வழி நின்ற கலிஃபா" என்றுச் சொல்வார்களா?

13) அன்று அந்த அபூ பக்கரின் இருதயத்தை விரிவாக்கிய அல்லாஹ், இன்று இந்த
அபூ பக்கர் பக்தாதியின் இருதயத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான் என்று
முஸ்லிம்கள் நம்புவார்களா?

14) அபூ பக்கரின் இந்த செயல் இஸ்லாமை தூயவடிவில் காட்டுகின்றதா தம்பி?
ஆமாம் என்றுச் சொன்னால், "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று முஸ்லிம்கள்
சொல்லிக்கொண்டு இருப்பதெல்லாம் ஏமாற்றுவேலையாகும்.

15) அபூ பக்கர் "அரசை நடத்தும் தலைவர் முறையில் நடந்துக்கொண்டார்" என்று
முஸ்லிம்கள் சொல்வார்களானால், இதனை கவனியுங்கள். தற்போது நம் இந்திய
திரு நாட்டில், பீஜேபியின் (BJP) ஆட்சி நடைப்பெறுகிறது (பீஜேயின் ஆட்சி
என்று நான் சொல்லவில்லை). இவர்கள் ஜனநாயகத்தை புறக்கணித்துவிட்டு, இனி
எல்லா முஸ்லிம்களும், இந்துக்களாக மாறவேண்டும் என்று சட்டம் போட்டு,
முஸ்லிம்களோடு சண்டையிட்டு, அவர்களை ஒடுக்கினால், "இவர்களும் நேர் வழி
நின்ற கலிஃபாக்களைப் போன்றவர்கள் என்று முஸ்லிம்கள் இவர்களை
அங்கீகரிப்பார்களா?". இவர்கள் இந்துக்களாக இருந்தாலும், இந்துத்துவ
ஆன்மீகத்தை பக்கத்தில் வைத்துவிட்டு, இந்த செயலை செய்கிறார்கள் என்று
வைத்துக் கொள்வோம். அபூ பக்கரைப் போல இவர்களும் ஒரு அரசை நடத்துவதால்,
இவர்களின் இருதயங்களை இவர்களின் தெய்வங்கள் விரிவாக்கினபடியால், இப்படி
மாற்று மதங்கள் மீது போர் தொடுத்தால் எப்படி இருக்கும்? அபூ பக்கரின்
இருதயத்தை அல்லாஹ் விரிவாக்கினால், ஏன் மற்ற மக்களின் இருதயத்தை
அவர்களின் இறைவன் விரிவாக்கமாட்டான்?

தம்பி, இப்போது உனக்கு எங்கு தவறு நடந்துள்ளது என்று புரிகின்றதா!

முடிவுரை:

முதல் கலிஃபா செய்த மற்ற விவரங்களை அடுத்தடுத்த கடிதத்தில் உனக்கு
எழுதுவேன். நாம் மேலே கண்ட ஹதீஸின் படி, அபூ பக்கரின் செயல், உமருக்கு
ஆச்சரியத்தை கொடுத்தது. உடனே உமர் அபூ பக்கருக்கு அறிவுரை கூறுகின்றார்.
ஆனால், அபூ பக்கர் மறுப்பு தெரிவித்தபோது, இது அல்லாஹ்வினால் அபூ
பக்கருக்கு கிடைத்த ஞானம் என்றுச் சொல்லி, உமர் அமைதியாக
இருந்துவிடுகின்றார். ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் கொல்லும்படலம் இந்த
அபூ பக்கர் காலத்திலிருந்து துவங்கியது என்று சொல்லலாமா தம்பி? அபூ
பக்கரின் கருத்துப்படி, ஸகாத் தனித்தனி நாடுகளின் சொத்துக்கள் அல்ல
(அவர்களின் அப்பன் சொத்து அல்ல), அது உலகமனைத்தையும் ஆட்சி செய்யும்
கலிஃபாவின் கீழ் இருக்கும் இஸ்லாமிய அரசின் சொத்து ஆகும்.

அபூ பக்கர் ஒரு அரசை நடத்தும் தலைவர் என்று நீ சொல்லக்கூடும். உனக்கு ஒரு
வேலையை நான் தருகிறேன். இஸ்லாமிய ஆன்மீகம், இஸ்லாமிய அரசு, இந்த
இரண்டிற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன? எந்த நேரத்தில்
இஸ்லாமிய ஆன்மீகம், இஸ்லாமிய அரசை மேற்கொள்ளும், அதே போல, இஸ்லாமிய அரசு
எந்த நேரங்களில் ஆன்மீகத்தை மேற்கொள்ளும்? போன்றவற்றை ஆய்வு செய்து
எனக்கு எழுதமுடியுமா? இஸ்லாமை மக்கள் தவறாகவே புரிந்துக்கொள்கிறார்கள்
என்று முஸ்லிம்கள் அடிக்கடி சொல்வார்கள். இஸ்லாமை மக்கள் தவறாக
புரிந்துக்கொள்வதற்கு, இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை
"முஸ்லிம்கள்" மற்றவர்களுக்கு சரியாக விளக்காதபடியினால் தான் வருகிறது.
தம்பி, இந்த வேலையை நீ செய்யவில்லையென்றால், அதனை நான் செய்யவேண்டி
வரும். முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமை விமர்சிப்பதற்கு காரணம்,
முஸ்லிம்கள் இஸ்லாமை நேர்மையாக விளக்காமல் இருப்பதினால் தான்.

உன் கருத்துக்களையும், விமர்சனங்களையும் நான் எதிர்ப்பார்க்கிறேன்.

அடுத்த கடித்தத்தில் இன்னும் அதிக விவரங்களோடு உன்னை சந்திக்கிறேன்.

இப்படிக்கு,

உன் அண்ணன் உமர்

தேதி: 16 ஜூலை 2015

________________________________

உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.backend.ai-deutschland.de/tamil/authors/umar/ramalan/ramalan2015day14.html



--
Source : http://isakoran.blogspot.in/2015/07/2015-14.html

2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா)
அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

[2015 ரமளான் மாத முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்.

இவ்வாண்டு ரமளான் மாதத்தில் கலிஃபாக்களை விமர்சித்து உமர் சில கடிதங்களை
தம் தம்பிக்கு எழுதியுள்ளார். இக்கடிதத்தில், உமரின் தம்பி, உமருக்கு ஒரு
விஷயத்தை தெளிவுபடுத்துகிறார். அதாவது முஹம்மது பத்து பெயர்களை
குறிப்பிட்டு இவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று நற்செய்தி
சொல்லியுள்ளார். அல்லாஹ்வினாலும், முஹம்மதுவினாலும், சொர்க்கவாசிகள்
(அஷரத்துல் முபஷ்ஷரா) என்று முன்குறிக்கப்பட்டவர்கள் மீது எந்த
குற்றத்தையும் நீங்கள் சாட்டமுடியாது என்று உமரின் தம்பி இக்கடிதத்தில்
குறிப்பிடுகிறார். இதற்கு உமர் எழுதிய பதிலையும் இதே கடிதத்தில் காணலாம்.
இந்த அஷ்ரத்துல் முஹஷ்ஷரா என்ற ஒரு விஷயத்தைச் சுற்றியுள்ள இஸ்லாமிய
இறையியல் பிரச்சனைகளை உமர் இக்கடிதத்தில் அலசுகிறார்.]

அல்லாஹ்வின் சொர்க்கவாசிகள் - அஷரத்துல் முபஷ்ஷரா

அன்பான உமரண்ணாவிற்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்கள் கலிஃபாக்களை விமர்சித்து எழுதிய கடிதத்தை படித்தவுடன் ஒரு
முக்கியமான விஷயத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்று
விரும்பினேன், ஆனால் மறந்தே போய்விட்டேன். உங்களுடைய நேற்றைய கடிதத்தை
படித்தவுடன், அந்த முக்கியமான விஷயம் நினைவுக்கு வந்தது. அதனை உங்களுக்கு
இப்போது நான் எழுதுகிறேன், கவனமாக படிக்கவும், இந்த விஷயத்தைப் பற்றி
நீங்கள் கொடுக்கப்போகும் பதிலுக்கு முன்பாக நூறு முறை சிந்திக்கவும். இது
உங்களுக்கே (கிறிஸ்தவத்திற்கு) தலைவலியாக மாறக்கூடும் என்பதை மனதில்
வைத்துக் கொள்ளவும்.

நீங்கள் எங்கள் கலிஃபாக்கள் நால்வரைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்க
ஆரம்பித்துள்ளீர்கள். அவர்கள் பற்றி மேலும் நீங்கள் எழுதுவதற்கு முன்பாக,
அவர்களின் மேன்மையை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொருவரின் அதிமுக்கியமான ஆசை:

எந்த இறைவனை நம்புபவனாக இருந்தாலும், அவனுடைய முதல் இலட்சியம், அவன்
சொர்க்கம் செல்லவேண்டும் என்பதாகும். இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துத்துவம்
என்று எந்த மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும், சொர்க்கம் செல்லவேண்டும்
அல்லது முக்தி அடையவேண்டும் என்ற நோக்கத்தை மனதில் வைத்தவர்களாகவே
அவர்கள் அனைத்து காரியங்களையும் செய்கிறார்கள். இதனை நீங்களும்
அறிந்துள்ளீர்கள்.

எங்கள் இறைத்தூதர் சஹாபாக்களில் பத்து பெயர்களை குறிப்பிட்டு, இவர்கள்
சொர்க்கம் செல்வார்கள் என்று நற்செய்தி கூறியுள்ளார். ஒரு மனிதன் உயிரோடு
இருக்கும்போது, இப்படிப்பட்ட நற்செய்தியைப் பெறுவது பாக்கியங்களிலெல்லாம்
மிகப்பெரிய பாக்கியும். இந்த பத்து பெயர்களில், கீழ்கண்ட நான்கு பெயர்கள்
முதலாவது வருகிறது, நீங்கள் கலிஃபாக்களை விமர்சித்தபடியினால், அவர்களை
மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன்.

1) அபூபக்கர் (ரலி) – முதல் கலிஃபா

2) உமர் (ரலி) – இரண்டாம் கலிஃபா

3) உத்மான் (ரலி) – மூன்றாம் கலிஃபா

4) அலி (ரலி) – நான்காம் கலிஃபா

இவர்களின் மேன்மை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை நீங்கள் கவனத்தில்
கொள்ளவேண்டும். மனிதன் உயிரோடு இருக்கும் போதே அவனுக்கு சொர்க்கம்
கிடைக்கும் என்று நற்செய்திச் சொல்வதை வேறு எந்த மதத்திலாவது நீங்கள்
பார்த்தது உண்டா? குறைந்தபட்சம் கிறிஸ்தவத்திலாவது இதனை நீங்கள் பார்த்து
இருக்கிறீர்களா?

இறைத்துதர் முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக இவர்கள் இஸ்லாமிலே மிகவும்
மேன்மையுள்ளவர்கள். இவர்களை அல்லாஹ்விற்கு சமமாக நீங்கள் கருதுங்கள்
என்று நான் சொல்லவில்லை, ஆனால், இவர்களின் மேன்மையை எப்படி அல்லாஹ்
உயர்த்தியுள்ளான் என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே இவர்களைப் பற்றி
நீங்கள் எழுதப்போகும் ஒவ்வொரு வரியையும் பல முறை சிந்தித்து எழுதவும்.

எச்சரிக்கை: இஸ்லாமிய இறையியலை நீங்கள் தொட்டால், இவ்விஷயத்தைப் பற்றி
கிறிஸ்தவ இறையியல் தொடப்படும் என்பதை மனதில் வைக்கவும்.

இந்த கடிதத்தைக் கண்டவுடன், இனி கடிதம் எழுதுவதை நிறுத்திக் கொள்ளவேண்டாம்.

உங்கள் பதிலுக்காக ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டு இருப்பேன்.

இப்படிக்கு

உங்கள் தம்பி

சௌதி அரேபியா

________________________________

உமரின் பதில் கடிதம்:

சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு கர்த்தரின் கிருபையும், சாந்தியும் உண்டாவதாக.

உன் உச்சக்கட்ட விசுவாசத்தை உன் கடிதம் பிரதிபலிக்கிறது. இஸ்லாமின் மீது
உனக்கு நம்பிக்கை இருக்கலாம், ஆனால் மித மிஞ்சிய நம்பிக்கை
இருக்கக்கூடாது.

மணலைக் கொண்டு அனேக நல்ல பயனுள்ள காரியங்களைச் செய்யலாம், ஆனால், மணலின்
மீது மாளிகையை எழுப்பக்கூடாது. நீ மணலின் மீது மாளிகையை எழுப்ப முடிவு
செய்துள்ளாய், அந்த மாளிகை நிற்காது, சீக்கிரத்தில் தரைமட்டமாகும் என்பதை
கவனத்தில் கொள்ளவும்.

பொதுவாக நான் தான் உனக்கு எச்சரிக்கை தருவேன், ஆனால், இந்த முறை நீ என்னை
எச்சரித்துள்ளாய். இஸ்லாமிய இறையியலை நான் தொட்டு எழுதினால்,
கிறிஸ்தவத்தின் இறையியல் உன்னால் ஆய்வு செய்யப்படும் என்ற தோரணையில் நீ
எழுதியது, எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இது தான் சரியான போட்டி,
உனக்கு என் வாழ்த்துக்கள். உன் இஸ்லாமிய இறையியலின் இரண்டு கண்களிலும்
என் விரல்களை விட்டு, ஆட்டோ ஆட்டு என்று ஆட்டாமல் நான் விடப்போவதில்லை.
கிறிஸ்தவத்தின் இறையியலை தட்டிப்பார்க்கவும், தொட்டுப்பார்க்கவும்,
தழுவிப்பார்க்கவும் உன்னை அன்புடன் வரவேற்கிறேன். நீ எதைச் செய்தாலும்,
கிறிஸ்தவர்கள் உன்னை தட்டிவிடமாட்டார்கள், தைரியமாக நீ ஆய்வு செய்யலாம்.

முதலில், சொர்க்கவாசிகள் பற்றிய உன் கேள்விகளுக்கு விடையை
கொடுத்துவிட்டு, அதன் பிறகு "முதல் கலிஃபா மற்றும் சொர்க்கவாசி அபூ
பக்கர் அவர்களின் ஆட்சி பற்றி" ஆய்வு செய்வோம்.

உபதலைப்புக்கள்

சொர்க்கவாசிகள் பத்து பேர் - ஹதீஸ்களின் சாட்சியும் முரண்பாடுகளும்
இந்த பத்து பேருக்கு "தாங்கள் சொர்க்கவாசிகள்" என்ற விஷயம் முஹம்மது
உயிரோடு இருந்த போதே தெரியுமா?
சொர்க்கவாசிகளும், இஸ்லாமிய இறையியலின் பிரச்சனைகளும்.
முடிவுரை

-----------------------------------

1) சொர்க்கவாசிகள் பத்து பேர் - ஹதீஸ்களின் சாட்சியும் முரண்பாடுகளும்

சொர்க்கவாசிகள் இவர்கள் தான் என்று பெயர் குறிப்பிட்டு குர்-ஆன்
சொல்வதில்லை, அவைகளை நாம் ஹதீஸ்களில் காணலாம், அதுவும் ஸஹீஹ் புகாரி,
முஸ்லிம் ஹதீஸ்களில் இவைகளை காணமுடியாது. இதர ஹதீஸ் தொகுப்புகளாகிய அபூ
தாவுத் மற்றும் திர்மிதியில் இவைகளை காணமுடியும்:

சுனன் அபூ தாவூத் ஹதீஸ்

Dawud :: Book 40 : Hadith 4632

Narrated Sa'id ibn Zayd:

AbdurRahman ibn al-Akhnas said that when he was in the mosque, a man
mentioned Ali (may Allah be pleased with him). So Sa'id ibn Zayd got
up and said: I bear witness to the Apostle of Allah
(peace_be_upon_him) that I heard him say: Ten persons will go to
Paradise: The Prophet (peace_be_upon_him) will go to Paradise, AbuBakr
will go to Paradise, Umar will go to Paradise, Uthman will go to
Paradise, Ali will go to Paradise, Talhah will go to Paradise:
az-Zubayr ibn al-Awwam will go to paradise, Sa'd ibn Malik will go to
Paradise, and AbdurRahman ibn Awf will go to Paradise. If I wish, I
can mention the tenth. The People asked: Who is he: So he kept
silence. The again asked: Who is he: He replied: He is Sa'id ibn Zayd.

திர்மிதி

Narrated Abdur Rahman bin Awf:

that the Messenger of Allah (sallallahu 'alayhi wa sallam) said: "Abu
Bakr is in Paradise, 'Umar is in Paradise, 'Uthman is in Paradise,
'Ali is in Paradise, Talhah is in Paradise, Az-Zubair is in Paradise,
'Abdur Rahman bin Awf is in Paradise, Sa'd bin Abi Waqqas is in
Paradise, Sa'id ibn Zayd is in Paradise, and Abu 'Ubaidah bin
Al-Jarrah is in Paradise."

https://en.wikipedia.org/wiki/Hadith_of_the_ten_promised_paradise

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் பெயர்கள்:

எண்

அபூ தாவுத் ஹதீஸ் தொகுப்பு

திர்மிதி ஹதீஸ் தொகுப்பு

1

முஹம்மது

அபூ பக்கர்

2

அபூ பக்கர்

உமர்

3

உமர்

உஸ்மான்

4

உஸ்மான்

அலி

5

அலி

தல்ஹா

6

தல்ஹா

ஜுபைர்

7

ஜுபைர் இப்னு அவாம்

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்

8

ஸைத் இப்னு மாலிக்

ஸஃது இப்னு அபீ வக்காஸ்

9

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்

ஸயீது இப்னு ஸைது

10

ஸயீது இப்னு ஸைது

அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ்

மேலே கொடுக்கப்பட்ட இரண்டு பட்டியல்களையும், நாம் பார்த்தால், பல
முரண்பாடுகளை காணமுடியும்.

திர்மிதி ஹதீஸில்:

முஹம்மதுவின் பெயர் காணப்படவில்லை.
"ஸைத் இப்னு மாலிக்" என்பவரும் காணவில்லை.

அபூ தாவுத் ஹதீஸில்:

"ஸஃது இப்னு அபீ வக்காஸ்" என்பவர் காணப்படவில்லை.
"அபூ உதைபா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ்" என்பவர் காணப்படவில்லை.

இந்த இரண்டு பட்டியலை நாம் ஒன்று சேர்த்தால், நமக்கு 12 நபர்களின்
பெயர்கள் வருகின்றன. இதில் எந்த பட்டியலில் கொடுக்கப்பட்டதை சரியானதாக
கருதுவது?

எண்

அபூ தாவுத் / திர்மிதி

1

முஹம்மது

2

அபூ பக்கர்

3

உமர்

4

உஸ்மான்

5

அலி

6

தல்ஹா

7

ஜுபைர் இப்னு அவாம்

8

ஸைத் இப்னு மாலிக்

9

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்

10

ஸயீது இப்னு ஸைது

11

ஸஃது இப்னு அபீ வக்காஸ்

12

அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ்

புகாரி மற்றும் முஸ்லிமில் இது ஏன் காணப்படவில்லை?

சுன்னி முஸ்லிம்களின் ஆறு ஹதீஸ் தொகுப்புகளில், முதல் இரண்டு
தொகுப்புகளாகிய புகாரி மற்றும் முஸ்லிம் 100% ஆதாரமானவை என்று
கருதப்படுகின்றது. ஆனால், இந்த சொர்க்கவாசிகள் பற்றிய ஹதீஸ் இந்த இரண்டு
தொகுப்புக்களில் வராமல் விடப்பட்டதற்கு ஏதாவது காரணம் இருக்குமா? புகாரி,
முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பாளர்கள், "சொர்க்கவாசிகள் பற்றிய ஹதீஸ் ஒரு
பொய்யான ஹதீஸ்" என்று அருதி தங்கள் தொகுப்பில் சேர்க்காமல்
விட்டிருப்பார்களா? இது ஒரு முக்கியமில்லாத சாதாரண விஷயம் அல்ல.
சஹாபாக்களின் மேன்மையை எடுத்துக் காட்டக்கூடிய ஒரு ஹதீஸ் இவர்களின்
கண்களில் படாமல் விடப்பட்டதா? அல்லது பட்டதை இவர்கள் பொய் என்றுச் சொல்ல
வருகிறார்களா? முதல் நான்கு கலிஃபாக்களின் காலம் முடிந்த பிறகு வந்த
முஸ்லிம்கள், இந்த பத்து சஹாபாக்களின் மேன்மையை உயர்த்துவதற்கு இட்டுக்
கட்டியதா இந்த ஹதீஸ்? புகாரி முஸ்லிம் ஹதீஸ்களில் கட்டாயமாக எல்லா
ஹதீஸ்களும் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால், இவ்வளவு
முக்கியமான ஹதீஸ் விடப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. ஷியா முஸ்லிம்கள்
இந்த ஹதீஸ் இட்டுக்கட்டியது என்று நம்புகிறார்கள்.

இந்த ஹதீஸ் உண்மை என்று கருதினால் வரும் இறையியல் பிரச்சனைகளை நான் இந்த
கடிதத்தில் எழுதுகிறேன்.

2) இந்த பத்து பேருக்கு "தாங்கள் சொர்க்கவாசிகள்" என்ற விஷயம் முஹம்மது
உயிரோடு இருந்த போதே தெரியுமா?

தம்பி, நாம் இதுவரை முதல் நான்கு கலிஃபாக்களின் செயல்களை முழுவதுமாக
பார்க்கவில்லை. அபூ பக்கர் ஆட்சி தொடங்கி, அலி அவர்கள் மரணிக்கும்
வரைக்கும் நாம் ஆய்வு செய்தால், நமக்கு கீழ்கண்ட கேள்விகள் எழும்:

இவர்களா சொர்க்கவாசிகள்?
தாங்கள் சொர்க்கவாசிகள் என்று அவர்களுக்கு தெரிந்திருந்ததா?
ஒருவருக்கு இன்னொருவர் சொர்க்கவாசி என்று தெரிந்து இருந்ததா? அபூ பக்கர்
சொர்க்கவாசி என்று அலிக்கு தெரியுமா?
இவர்களின் நடத்தைகள், சொர்க்கத்திற்கு தகுதியானவர்களின் செயல்களாக
காணப்படவில்லையே? அல்லாஹ் இவர்களின் செயல்களை அங்கீகரித்தானா?
இவர்கள் சொர்க்கவாசிகள் என்று அல்லாஹ் சொல்லி தவறு செய்துவிட்டானா?

அலியின் அதிகார ஆசைப் பற்றியும், ஃபாத்திமாவிற்கு கிடைக்கவேண்டிய ஆஸ்தி
கிடைக்கவில்லையே என்ற கோபத்தினால், முதல் கலிஃபாவிற்கு ஒத்துழைப்புத்
தராமல் இருந்ததைப் பற்றியும் நாம் சுருக்கமாக பார்த்துள்ளோம். இவர்களைப்
பற்றி அடுத்தடுத்த கடிதங்களில் நாம் அதிகமாக தெரிந்துக் கொள்வோம்.

இந்த கடிதத்தில், "சொர்க்கவாசிகள் பற்றிய வஹியை அல்லது செய்தியை"
முஹம்மதுவிற்கு இறக்கிய அல்லாஹ்வின் செயலினால், உண்டாகும் இறையியல்
பிரச்சனையை மட்டும் பார்ப்போம்.

3) சொர்க்கவாசிகளும், இஸ்லாமிய இறையியலின் பிரச்சனைகளும்

தம்பி, இஸ்லாமிய இறையியலின் படி, இந்த பூமியிலே முஸ்லிமாக வாழும் ஒரு
நபர் "நான் மரித்தால் நிச்சயமாக சொர்க்கம் செல்வேன், அல்லாஹ் அதை
கொடுப்பான், இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை" என்றுச் சொல்லக்கூடாது.
ஏனென்றால், தீர்ப்பு நாளில், இந்த முடிவை எடுப்பவன் அல்லாஹ், எனவே,
மனிதர்கள் தங்கள் தரப்பிலிருந்து செய்யவேண்டியவைகளைச் செய்யவேண்டுமே
ஒழிய, "எனக்கு சொர்க்கத்துக்கு டிக்கெட் கட்டாயம் கிடைக்கும்" என
மரிப்பதற்கு முன்பு சொல்லக்கூடாது.

இது ஒரு புறமிருக்க, பத்து நபர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்று
முஹம்மது சொல்லியுள்ளார். மறுபடியும் இஸ்லாமிய இறையியலின் படி,
முஹம்மதுவின் இந்த வார்த்தைகள் கூட ஒரு வகையான வஹி தான். இதனையும்
அல்லாஹ்விடமிருந்து பெற்றுத் தான் முஹம்மது சொல்லியிருக்கிறார், ஆக, இதனை
அல்லாஹ்வின் வார்த்தையாகவே கொள்ளவேண்டும்.

சஹாபாக்களில் சிலர் மரிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, முஹம்மது இதனை
சொல்லியுள்ளதால், இதனை முஸ்லிம்கள் நம்புவதினால், இஸ்லாமிய இறையியல்
(அல்லாஹ்) கீழ்கண்ட பிரச்சனைகளை/கேள்விகளை சந்திக்கிறது:

அ) சொர்க்கவாசிகள் என அறிவிக்கப்பட்ட நாள் முதல் அவர்கள் மரிக்கும் நாள்
வரை சொர்க்கவாசிகள் பாவங்களை செய்யமாட்டார்கள், அவர்கள் அல்லாஹ்வைப் போல
(இனி) பாவமே செய்யாதவர்கள் என்பதால் அல்லாஹ் வாக்கு கொடுத்தானா?

ஆ) ஒருவேளை, அவர்கள் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்தாலும், அதனை கண்டுக்
கொள்ளமாட்டேன் என்று அல்லாஹ் முடிவு செய்துவிட்டு, இப்படி வாக்கு
கொடுத்தானா?

இ) அல்லது அவர்கள் செய்யும் பாவங்களுக்கு ஏற்றபடி, முதலாவது நரகத்தில்
அவர்களை தண்டித்து, அதன் பிறகு சொர்க்கத்துக்கு அனுப்பலாம் என்று அல்லாஹ்
கருதினானா?

ஈ) அவர்கள் எந்த பாவம் செய்தாலும் சரி, "நேரடி சொர்க்கம் தான்" என்று
முடிவு செய்து, அல்லாஹ் சொர்க்கவாசி ஹதீஸை இறக்கினானா?

உ) இப்படி செய்தால், அல்லாஹ்வின் இறையான்மைக்கு என்ன மதிப்பு இருக்கிறது?
இதர சஹாபாக்களும் பாவங்கள் செய்தபோதும்,நேரடியாக சொர்க்கத்துக்கு
அனுப்பாதது ஏன்?

ஊ) ஒரு சொர்க்கவாசி, இன்னொரு சொர்க்கவாசியோடு போர் புரிந்தாரே (அலியும்,
தல்ஹாவும், ஜுபைரும்), இப்படி இருக்கும் போது இவர்களை எப்படி ஒரே
சொர்க்கத்தில் அல்லாஹ் அனுமதிப்பான்?

எ) ஒரு முஸ்லிமுக்கு எதிராக இன்னொரு முஸ்லிம் போர் செய்தால் அவர்கள்
இருவரும், காஃபிர்கள் என்று சொல்லப்படுவதற்கு இணங்க, தல்ஹா மற்றும்
ஜுபைர் அவர்கள் அலிக்கு எதிராக போர் செய்தார்களே இவர்களில் யார் காஃபிர்?
அல்லது இவர்களுக்கு எதிராக போர் செய்த அலி காஃபிரா? இஸ்லாமின் படி என்ன
பதில்?

ஏ) சண்டையிடும் இரண்டு முஸ்லிம்களும் காஃபிர்கள் என்றால், அவர்கள்
நரகத்துக்குச் செல்வார்கள். இதன்படி இந்த மூன்றுபேரும் நரகம்
செல்வார்களா? அப்படியானால், சொர்க்கவாசிகள் என்ற ஹதீஸ்
இட்டுக்கட்டப்பட்டதா?

ஐ) இப்படி இவர்கள் ஜமல் போரில் ஒருவரோடு ஒருவர் சண்டையிடுவார்கள் என்ற
எதிர்கால நிகழ்வை அல்லாஹ் அறியாமல் வாக்கு கொடுத்துவிட்டானா?

ஒ) அல்லாஹ்விற்கு எல்லாமே தெரியும் என்றால், இவர்கள் தவறு
செய்திருந்தாலும், இவர்களை சும்மாவே மன்னித்துவிடலாம் என்று அல்லாஹ்
நினைத்தானா? இப்படி செய்தால், சஹாபாக்களிடையே பாகுபாடு உண்டாக்குவது போல
ஆகுமல்லவா?

ஓ) நாம் ஏற்கனவே சொர்க்கத்தின் பிரஜையாகிவிட்டதால், இனி நல்ல அமல்கள்
அதிகமாகச் செய்யத்தேவையில்லை என்று அவர்களில் ஒருவர் நினைத்திருந்தால்?
மனிதர்கள் என்ற முறையில் இப்படிப்பட்ட எண்ணங்கள் வர வாய்ப்பு அதிகம்
உள்ளது.

4) முடிவுரை:

தம்பி, சொர்க்கவாசிகள் என்ற ஹதீஸ் அல்லாஹ்வின் இறையான்மையை
கேள்விக்குரியாக்குகிறது. இஸ்லாமின் இறையியலை சந்தேகிக்கிறது. மேற்கண்ட
கேள்விகள் அனைத்தும், இந்த ஹதீஸ் ஒரு பொய்யான ஹதீஸ் என்று சொல்வதாக
உள்ளது. குர்-ஆனின் இறையியல் சொல்வதற்கு எதிராக இந்த சொர்க்கவாசிகள்
ஹதீஸ் இருப்பதினால், பீஜே போன்ற இஸ்லாமியர்கள் இதனை பொய்யான ஹதீஸ் என்று
எதிர்காலத்தில் தள்ளக்கூடும்.

உன்னிடம் கடைசியாக கேட்கவிரும்பும் கேள்விகள்:

1) சொர்க்கவாசிகள் என்பதால் அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா?

2) இவர்களின் கடைசி கால வாழ்க்கையை பார்த்தால், மிகவும் படுகேவலமாக
இருக்கிறது. பதவிக்காக, பணத்திற்காக ஒருவரை ஒருவர் கொல்வது இவர்கள்
மத்தியிலே சாதாரணமாக காணப்படும் ஒரு செயலாக உள்ளது. இவர்களை யார்
சொர்க்கவாசிகள் என்று ஏற்றுக்கொள்வார்கள்?

3) இவர்கள் மரிப்பதற்கு இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் போது,
இவர்கள் சொர்க்கவாசிகள் என்று வாக்கு செய்வது சரியானதா? இது இஸ்லாமிய
இறையியலுக்கும், குர்-ஆனுக்கும் எதிரானது அல்லவா?

தம்பி, நீ என்னை எச்சரிக்காதே, முதலாவது கலிஃபாக்களின், சஹாபாக்களின்
நடபடிகளை அறிந்துக் கொள்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்,

இப்படிக்கு

உன் அண்ணன்

உமர்

தேதி: 11 ஜூலை 2015

________________________________

உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source:
--
Source : http://isakoran.blogspot.in/2015/07/2015-12_11.html

July 8, 2015

2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

அன்புள்ள தம்பிக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

உனக்கு சில நாட்களாக உடல் நிலை சரியில்லை என்பதால், நேற்று நீ அம்மாவோடு
தொலைபேசியில் பேசும் போது, உனக்காகவும், நீ எல்லா நோன்புகளையும் சிறப்பாக
முடிக்கவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டாய்
என்று சொன்னார்கள். அம்மா என்னிடம் "நீயும் தம்பியின் நோன்புக்காக ஜெபம்
பண்ணு" என்றுச் சொல்லிவிட்டு, என் பதிலை எதிர்ப்பார்க்காமல் நழுவி
விட்டார்கள்.

இதை அம்மா என்னிடம் சொல்லும்போது உள்ளுக்குள் எனக்கு சிரிப்பு தான்
வந்தது, இருந்தாலும் அதனை நான் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஆனால்,
உன்னிடம் நான் தாராளமாக கேள்விகளையும் கேட்கலாம் என்பதால், சில
கேள்விகளைக் கேட்கிறேன், அதன் பிறகு இக்கட்டுரையின் தலைப்பிற்குச்
செல்கிறேன்.

• உன்னுடைய ஆரோக்கியத்திற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் நான் தினமும்
ஜெபிக்கிறேன்.

• ஆனால், நீ அல்லாஹ்விற்காக இருக்கும் நோன்புக்காக, நாங்கள் இயேசுவிடம்
பிரார்த்தனை செய்யமுடியுமா? ஒரு வேளை நாங்கள் ஜெபித்தாலும் அது
கேட்கப்படுமா?

• ஒரு வேளை அது கேட்கப்பட்டாலும், அதனை உன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்
ஏற்றுக் கொள்வானா? அவனுடைய "பிள்ளையை", சாரி "அடிமையை" இயேசு
சுகப்படுத்தினால், அது அல்லாஹ்விற்கு அவமானமில்லையா?

• இயேசுவிடம் இல்லாமல், அல்லாஹ்விடம் ஜெபிக்கலாம் என்று பார்த்தால்,
எங்கள் விசுவாசம் தடையாக இருக்கிறது. எம்மதமும் சம்மதம் என்ற
நிலைப்பாட்டில் நானில்லை. எங்கள் நிலைப்பாட்டின் படி, நாங்கள் உனக்காக
உங்கள் அல்லாஹ்விடம் ஜெபிக்கமுடியாது, ஏனென்றால், நாங்கள் அவனை இறைவன்
என்று விசுவாசிப்பதில்லையே! இல்லாத ஒன்றை இருக்கிறது போல தேவன் அழைப்பார்
அது வந்துவிடும். ஆனால், இல்லாத அல்லாஹ்விடம் நாங்கள் அழைத்து எப்படி
ஜெபிப்பது?

• இப்போது எங்களை என்ன செய்யச் சொல்கிறாய்? நீ வாய் திறந்து என்
நோன்புக்காக ஜெபியுங்கள் என்று கேட்டுவிட்டாய், அம்மாவும் சரி என்று
சொல்லிவிட்டார்கள். அம்மா கொடுத்த வாக்கை காப்பாற்றுவதா அல்லது தவறுதலாக
வாக்கு கொடுத்தபடியினால், அப்படியே இதனை காற்றிலே பறக்கவிட்டுவிடுவதா?

• நீ நோன்புக்காக ஜெபிக்கச் சொன்னது முதல் தவறு, மகன் என்ன கேட்கிறான்
என்று தெரிந்துக் கொள்ளாமல் (தாய் பாசத்தினால்) சரி ஜெபிக்கிறேன் என்று
அம்மா சொன்னது இரண்டாவது தவறு. இக்கட்டுரையின் தலைப்பை தொடாமல் இதுவரை
மற்ற விஷயங்களை நான் எழுதிக்கொண்டு இருப்பதுமூன்றாவது தவறு. கடைசியாக
அல்லாஹ் செய்த நான்காவது தவறையும் ஒருமுறையும் படித்துவிடு தம்பி.

நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். இன்னும் நான் வணங்குகிறவனை
நீங்கள் வணங்குகிறவர்களல்லர். அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான்
வணங்குபவனல்லன். மேலும் நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். (குர்-ஆன்
109:1-6)

தம்பி, இவைகள் என் வார்த்தைகள் அல்ல, இவைகள் அல்லாஹ்வின் வார்த்தைகள்.
என்னே! வசனங்கள்!!. உனக்கு உன் மார்க்கம் எனக்கு என் மார்க்கம், நமக்குள்
ஏன் சண்டை என்ற கோணத்தில் ஒரு அத்தியாயமே அல்லாஹ் இறக்கியிருந்தார்,
சபாஷ்! ஆனால் என்ன செய்வது, இந்த முழு அத்தியாயமும் இரத்து
செய்யப்பட்டுவிட்டதே. இஸ்லாம் தவிர வேறு மார்க்கத்தை அல்லாஹ்
அங்கீகரித்துக் கொ(ல்)ள்(ல)ளமாட்டான்.

சரி தம்பி, தலைப்புக்கு வருவோம்.

________________________________

இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள்

(யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

இஸ்லாமின் இருகண்கள் முஹாஜிர்களும், அன்ஸார்களும் என்று நான் என் முந்தைய
கடிதத்தில் எழுதியிருந்தேன். முஹம்மது மரித்தவுடன், இவர்கள்
தங்களுக்குள் ஒரு தலைவரை தெரிவு செய்யவேண்டும் என்று தனித்தனியாக
விரும்பினார்கள். முஹாஜிர்களுக்கு தெரிவிக்காமல், அன்ஸார்கள் தலைவரை
நியமிக்க கூட்டம் போட்டனர். இதனை முந்தைய கடிதத்தில் பார்த்தோம்.

நம்முடைய கவனத்தை முஹாஜிர்கள் பக்கம் திருப்புவோம். இந்த முஹாஜிர்கள்
யார்? இவர்களில் இருந்த முக்கிய நபர்கள் யார்? என்று பார்த்தால்,
முஹம்மதுவின் சொந்தம் பந்தமெல்லாம் இந்த பக்கத்தில் தான் அதிகமாக ஒட்டிக்
கொண்டு இருந்தார்கள்.

இவர்களில் முக்கியமான நான்கு நபர்களைப் பற்றி நாம் பார்ப்போம். இவர்களைத்
தான் சுன்னி முஸ்லிம்கள் "நேர் வழி நின்ற கலிஃபாக்கள்" என்று
அழைக்கிறார்கள்.

அபூ பக்கர் – முதல் கலிஃபா (முஹம்மதுவின் மாமனார்)
உமர் – இரண்டாம் கலிஃபா (முஹம்மதுவின் மாமனார்)
உஸ்மான் – மூன்றாம் கலிஃபா (முஹம்மது இவருக்கு மாமனார்)
அலி – நான்காம் கலிஃபா (முஹம்மது இவருக்கு மாமனார்)

அபூ பக்கரை தலைவராக நியமிப்பதில், இவர்களிடையே ஒற்றுமை இருந்ததா?

இப்போது, அபூ பக்கர் தலைவராக நியமிப்பற்கு முன்பாக இருந்த முஸ்லிம்களின்
நிலைப்பாட்டை காண்போம்:

1) உமரின் நிலைப்பாடு – அபூ பக்கர் தலைவராக வரவேண்டும்.

2) அலியின் நிலைப்பாடு – தலைவர் பதவிக்கான தகுதி தனக்கு அதிகம் உண்டு.

3) ஜுபைரின் நிலைப்பாடு – அலி தலைவராக வரவேண்டும்.

4) அபூ சுஃப்யானின் நிலைப்பாடு – என் ஜாதிக்காரன் (அலி) தான் தலைவர் ஆகவேண்டும்.

---------------------------------------

தம்பி, நாம் சரித்திர விவரங்களை பார்ப்பதற்கு முன்பாக, ஜுபைர் என்பவரைப்
பற்றியும் அபூ சுஃப்யான் என்பவரைப் பற்றியும் சுருக்கமாக காண்போம்.

அல்ஜுபைர் யார்?

இவர் மதிப்புமிக்க ஒரு முஸ்லிமாக இருந்தார், முஹம்மதுவின் நெருங்கிய
நண்பராகவும் இருந்தார். இவர் ஒரு நல்ல இஸ்லாமிய அடியாராக (சீடராக)
இருந்தார். இது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட காலத்தில் அலி அவர்களுடன்
இணைந்து இவர் ஒரு முக்கியமான செயலை செய்தார். இதனை நேரம் வரும் போது
உனக்கு எழுதுவேன்.

அபூ சுஃப்யான் யார்?

இவர் முஹம்மதுவின் மிகப்பெரிய எதிரியாக இருந்தார். மக்காவின் ஒரு
புகழ்பெற்ற வம்சத்தில் பிறந்த இவர், மக்காவினருக்கு தலைவராக இருந்தார்.
உஹூத் என்ற போரின் போது, முஸ்லிம்களை தோற்கடித்த மக்காவினரின்
படைத்தலைவராக இருந்தவர் இவர் தான். இந்த போரின் போது முஹம்மது அதிகமாக
காயப்பட்டார் மேலும் அதிகமாக பயந்துபோய் இருந்தார். இந்த போரில் அனேக
முஸ்லிம்களை கொன்று அதனை சுவாரசியமாக கண்டு களித்தவர் இவர், மேலும் இந்த
வெற்றியைப் பற்றி புகழ்ந்துப்பேசி, முஹம்மதுவை ஏளனப்படுத்தினார் அபூ
சுஃப்யான். ஒரு காலக் கட்டத்தில் இந்த அபூ சுஃப்யானை கொலை செய்யும் படி
முஹம்மது சிலரை அனுப்பினார், ஆனால் அவர்கள் தோல்வியடைந்தார்கள், அபூ
சுஃப்யானை கொலை செய்ய அவர்களால் முடியவில்லை. அதன் பிறகு முஹம்மது ஒரு
வலிமை வாய்ந்த நபராக மாறிவிட்டபிறகு, அவர் மக்காவை நோக்கி தன்
படைகளோடுச் சென்றார். இந்த நேரத்தில் அபூ சுஃப்யான் முஹம்மதுவை
சந்திக்கச் சென்றார். இந்த இடத்தில் அபூ சுஃப்யான் ஒரு முஸ்லிமாக மாற
கட்டாயப்படுத்தப்பட்டார், இல்லையானால் அவர் அங்கேயே கொலை செய்யப்பட்டு
இருக்கவேண்டும் (ஆரம்பத்தில் அபூ சுஃப்யானுக்கு பாதுகாப்பு அளிப்பதாக
முஸ்லிம்கள் வாக்கு கொடுத்தனர், அதன்பிறகு முஸ்லிம்கள் தங்கள் முடிவை
மாற்றிக்கொண்டனர், முஹம்மதுவை இவர் சந்திக்கும் நேரத்தில் கொலை
செய்யப்படக்கூடும் என்ற சூழ்நிலை நிலவியது).

இந்த நேரத்தில் தான் திடீரென்று "முஹம்மது ஒரு இறைத்தூதர்" என்று இவர்
ஒப்புக்கொண்டார்! புத்தருக்கு போதிமர நிழலில் ஞானம் கிடைத்தமாதிரி,
இவருக்கு முஹம்மதுவின் வாளின் நிழலிலே ஞானம் கிடைத்தது. அதாவது தன்
உயிருக்கு பயந்து முஹம்மது ஒரு தீர்க்கதரிசி என்று இவர் நம்பினார்.
முஹம்மது மக்காவை முழுவதுமாக கைப்பற்றிக்கொண்ட பிறகு, ஒரு விலை உயர்ந்த
பரிசு ஒன்றை முஹம்மது அபூ சுஃப்யானுக்குக் கொடுத்தார், இதனால் அனேக
இஸ்லாமியர்கள் கோபமும் அடைந்தார்கள். மேலும் இவரை கிறிஸ்தவ நகரமாகிய
நஜ்ரான் என்ற நகரத்திற்கு பிரதிநிதியாக முஹம்மது நியமித்தார். அபூ
சுஃப்யான் தனக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை அதிகமாக விரும்பினார்.
அரசியல் அதிகாரம் என்றால் என்ன என்பதை இவர் சரியாக புரிந்துக்கொண்டார்,
தனக்கும் தன் மகன்களுக்கும் இந்த அதிகாரம் "இஸ்லாமிய சமுதாயத்தின்"
மூலமாக கிடைக்கும் என்று இவர் நம்பினார்.

உமரின், ஜுபைரின் மற்றும் அலியின் நிலைப்பாட்டை இந்த தபரி
சரித்திரத்திலிருந்து அறிந்துக் கொள்ளலாம்.

தபரியின் சரித்திரம் புத்தகம், வால்யூம் 9 லிருந்து விவரங்கள்:

"இறைத்தூதர் அவர்கள் ரபிவுல் மாதம் இரண்டாம் நாள் திங்கட்கிழமையன்று
காலமானார்கள். இறைத்தூதர் மரித்த அதே திங்கட்கிழமையன்று அபூ பக்கர்
அவர்கள் தலைவராக இருப்பதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது (பக்கம் 184).

உமர் எழுந்து நின்று இவ்விதமாக கூறினார், "உங்களில் யார் அபூ பக்கர்
அவர்களை விட்டு வேறு பிரிந்துவிட்ட விரும்புகிறீர்கள்? ஆனால், இவருக்குத்
தான் இறைத்தூதர் முன்னுரிமை கொடுத்தார்". நானும் இவருக்கு என் ஆதரவைத்
தருகிறேன் என்றார். உமருடைய வார்த்தைகளுக்கு மக்கள் கீழ்படிந்தார்கள்,
அவர் சொன்னது போலவே செய்தார்கள். ஆனால், அன்சாரிகள் அல்லது
அங்கிருந்தவர்களில் சிலர் "நாங்கள் அலி அவர்களுக்குத் தவிர வேறு
யாருக்கும் எங்கள் ஆதரவை தரமாட்டோம்" என்று கூறினார்கள் (பக்கம் 186).

உமர் அவர்கள் அபூ பக்கர் அவர்களின் கரங்களை உயர்த்திப்பிடித்து,
இவ்விதமாக கூறினார்கள், "என் அதிகாரம் உங்களுக்குத் தான், ஆதரவு உங்கள்
அதிகாரத்திற்குத் தான்". இதைக் கண்ட மக்களும் இதே போல தங்கள் ஆதரவை
கொடுத்தார்கள். இந்த ஆதரவை உறுதிபடுத்தும்படி கேட்டுக்கொண்ட போது,
அலியும் அல்ஜுபைரும் ஒதுங்கி நின்றுவிட்டார்கள். ஜுபைர் தன் வாளை அதன்
இடத்திலிருந்து உருவி, இவ்விதமாக கூறினார் "அலி அவர்கள் தலைவர் ஆவதற்கு
முழு ஆதரவும் கிடைக்கும் வரை, இந்த வாளை அதன் உறையில் வைக்கமாட்டேன்".
இந்தச் செய்தி அபூ பக்கர் மற்றும் உமர் அவர்களுக்கு எட்டியது. அப்போது
உமர் "அவனை கல்லால் அடித்து, அவன் வாளை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு
வாருங்கள்" என்று கூறினார் (1). உமர் அங்கு விரைந்துச் சென்று, ஜுபைரின்
வாளை கட்டாயமாக பிடுங்கிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும்
"விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்கள் ஆதரவை அபூ பக்கருக்கு
கொடுத்தே ஆகவேண்டும்" என்று உமர் கூறினாராம் (பக்கங்கள் 188, 189).

குறிப்பு 1: அந்த நேரத்தில் ஜுபைர் ஃபாத்திமாவின் வீட்டில் இருந்தார்.
ஃபாத்திமா அலியின் மனைவியாவார்கள் மற்றும் முஹம்மதுவின் மகள் ஆவார்கள்)

மேற்கண்ட விவரங்களின் சுருக்கம் இது தான்:

அ) உமர் தம் ஆதரவை அபூ பக்கருக்கு கொடுத்தார்

ஆ) அன்ஸார்கள் தங்களுக்கு தலைவர் பதவி வேண்டுமென்று விரும்பினர், ஆனால்
அது எடுபடாது என்பதை உணர்ந்த பிறகு, அபூ பக்கர் தலைவராக வரக்கூடாது,
அலிக்கு தான் எங்கள் ஆதரவு என்றனர். இதுவும் எடுபடவில்லை.

இ) ஃபாத்திமாவின் விட்டில் நடந்த உரையாடலில், ஜுபைரும், அலியும் அபூ
பக்கருக்கு ஆதரவு தர மறுத்துவிட்டனர்.

ஈ) ஜுபைர் தன் வாளை உறுவி, அலிக்கு முழு ஆதரவு கிடைக்கும் வரை நான்
சண்டையிடுவேன் என்று ஆவேசமாக கூறினார்.

உ) இதனை அறிந்த உமர், "ஜுபைரை கல்லால் அடித்து, வாளை பிடுங்குங்கள்"
என்றுச் சொன்னார், மேலும் அவரே சென்று வாளை பிடுங்கிக்கொண்டு வந்தார்.

ஊ) விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆதரவு அபூ பக்கருக்கு தரத்தான்
வேண்டும் என்று உமர் சொன்னார்.

அபூ சுஃப்யானின் ஜாதி வெறி:

அபூ பக்கர் கலிஃபாவாக பதவி ஏற்பதைப் பற்றி அபூ சுஃப்யானின் கருத்து என்ன
என்பதை தபரி கீழ்கண்ட விதமாக விவரிக்கிறார்.

அபூ சுஃப்யான் அலியிடம் இவ்விதமாக கூறினார், "குறைஷிகளில் மிகவும்
தாழ்ந்த வம்சத்திடம் இந்த கலீஃபா பதவி கொடுக்கும் அளவிற்கு நமக்கு என்ன
ஆனது? இறைவனின் பெயரில் சத்தியமிட்டுக் கூறுகிறேன், நீங்கள்
விருப்பினால், இந்த இடம் முழுவதும் போர் வீரர்களாலும், குதிரைகளாலும்
நிரப்பிவிடுகிறேன்". இதற்கு அலி பதில் அளித்தார்: "ஓ அபூ சுஃப்யான்,
நீண்ட காலமாக நீங்கள் இஸ்லாமுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக போர்
புரிந்தவராக இருந்தீர், ஆனால் எந்த ஒரு தீயகாரியத்தையும் செய்ய உங்களால்
முடியாமல் போனது. இந்த பதவிக்கு தகுதியானவராக அபூ பக்கரை நாங்கள்
காண்கிறோம் (பக்கம் 198)".

இறைத்தூதருக்கு பிறகு, அபூ பக்கர் அந்த பதவியை ஏற்ற போது, அபூ சுஃப்யான்
கூறியதாவது, "நமக்கும் அபூ ஃபசில் வம்சத்தாருக்கும் சம்மந்தமேது?
உண்மையில் இந்த தலைமைத்துவம் அப்த் மனாஃப் வம்சத்திற்கே உரியது". [அபூ
சுஃப்யானின் மகன் யாஜித் ஆளுநர் ஆக்கப்பட்டபோது,] அவரிடம் "உம்முடைய
மகனிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது" என்று சொல்லப்பட்டது. இதற்கு அபூ
சுஃப் இப்படி பதில் அளித்தார், "அவர் தன் வம்சங்களுக்கிடையே உள்ள உறவை
அன்புடன் பெலப்படுத்திக்கொண்டார்" (பக்கம் 199)

அபூ சுஃப்யானுக்கு "தான்" உயர்ந்த ஜாதி என்ற பெருமை உண்டு, அதை
பயன்படுத்திக் கொண்டு, அலியை கெடுக்க பார்த்தார் (அலி பதவி விஷயத்தில்
ஏற்கனவே கெடுக்கப்பட்டு இருந்தார் என்பது வேறு விஷயம்).

தேவைப்பட்டால், நான் போர் வீரர்களால் இந்த இடத்தை நிரப்பிவிடுகிறேன்,
நாம் அபூ பக்கர் மற்றும் உமரிடம் சண்டைபோடலாம் என்றுச் சொன்னார். இதனை
அலி மறுத்தார், அந்த சமயத்தில் சண்டைபோட அலி தயாராக இல்லை.

அலியின் நிலைப்பாடு (நான் தான் ஹீரோ மற்றவர்கள் எல்லாம் ஜீரோ):

முஹம்மதுவின் மருமகன் அலி முழு மனதோடு அபூ பக்கர் தலைவராக வரவேண்டும்
என்று விரும்பினாரா என்று பார்த்தால், அதுவும் இல்லை. முஹம்மதுவின்
குடும்பத்தார் (முஹம்மதுவிற்கு ஆண்வாரிசு இல்லாதபடியினால், ஃபாத்திமாவின்
கணவர்) என்ற முறையில் அடுத்த வாரிசு நான் தான் எனக்குத் தான் பதவி என்று
விரும்பினார். இதனை அறிந்துக் கொண்ட ஜுபைரும், அபூ சுஃப்யானும், அலி தான்
தலைவராக வரவேண்டும் என்று அடம் பிடித்தனர்.

அலியின் இந்த பதவி ஆசை, பல ஆண்டுகள் சாகாமல் இருந்தது. அலி நான்காவது
தலைவராக (கலிஃபாவாக) பதவி ஏற்ற சமயம் வரை இந்த ஆசை அவர் மனதை
உறுத்திக்கொண்டே இருந்தது. முதல் மூன்று கலிஃபாக்களைக் காட்டிலும்
தனக்குத் தான் தலைவர் ஆவதற்கான தகுதி அதிகம் என்று இவர் கூறியுள்ளார்.
கட்டாயத்தின் பெயரில் என் ஆதரவை இவர்கள் பெற்றார்கள் என்று முஹம்மதுவின்
மருமகன் அலி அவர்கள் குற்றம் சுமத்துகிறார்.

சரித்திர ஆசிரியர் தபரி அவர்களால் பதிவு செய்யப்பட்ட அலி அவர்களின்
வார்த்தைகளை இப்போது படிப்போம் (தபரி, வால்யும் 16, பக்கம் 51)

இறைத்தூதர் மரித்துவிட்டார்கள். இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவர் பதவிக்கு
தகுதியானவர் என்னைத் தவிர வேறு யாருமில்லை. ஆனால், மக்கள் அபூ பக்கர்
அவர்களுக்கு தங்கள் ஆதரவை கொடுத்தனர், எனவே, நானும் என் ஆதரவை அபூ
பக்கருக்கு கொடுத்தேன். அதன் பிறகு அபூ பக்கர் மரித்துவிட்டார்கள்.
இப்போது கூட இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்னைத்
தவிர வேறு யாருமில்லை. ஆனால், மக்கள் உமர் அவர்களுக்கு தங்கள் ஆதரவை
கொடுத்தார்கள், நானும் அப்படியே செய்தேன். இதன் பிறகு உமர் அவர்களும்
மரித்துவிட்டார்கள். இப்போதும் தலைவர் பதவிக்கு என்னைத் தவிர
பொறுத்தமானவர் யாருமில்லை. இருந்தபோதிலும் ஆறு வாக்கெடுப்பில் ஒரு வாக்கை
போடும்படி மக்கள் எனக்கு அதிகாரம் கொடுத்தனர், மற்றும் உஸ்மான் தங்கள்
தலைவராக வரவேண்டும் என்று அவர்கள் விரும்பி தங்கள் ஆதரவை கொடுத்தனர்,
மறுபடியும் நான் என் ஆதரவையும் தரவேண்டியதாக இருந்தது.

இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள், இவைகளுக்கு இடையே ஒருமனத்தை
உண்டாக்காத அல்லாஹ்:

தம்பி இதுவரை நாம் கண்ட விவரங்கள் அனைத்தும், இஸ்லாமிய நூல்களிலிருந்து
எடுத்தவைகள். இதனை தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் அறிந்துள்ளார்கள்.

அன்ஸார்கள் இஸ்லாமின் ஒரு கண் என்றால், மேற்கண்ட முஸ்லிம்கள் இஸ்லாமின்
இன்னொரு கண்.

இந்த முஹாஜிர்களுக்கு இடையே இப்படிப்பட்ட பதவி ஆசையும், அதிகாரத்திற்காக
கொல்லவேண்டும், இரத்தம் சிந்த வேண்டும் என்ற ஆர்வத்தையும் உண்டாக்கியது
யார்?

நல்ல முஸ்லிமும், நல்ல மனிதனும்:

இந்த செயல்களுக்காக, இவர்களை நான் குற்றப்படுத்தமாட்டேன், ஏனென்றால்,
இவர்கள் வெறும் சாதாரண மனிதர்கள் தான். ஆனால், இவர்களை நல்ல மனிதர்களாக
மாற்றாமல் செத்துப்போனது முஹம்மதுவின் முதல் தவறு.

இவர்கள் ஐந்து வேளை தொழுபவர்கள், தவறாமல் ஜகாத் தருபவர்கள், தவறாமல்
நோன்பு இருப்பவர்கள், குர்-ஆனை அதிகமாக மனப்பாடம் செய்தவர்கள், இப்படி
இருக்க "இவர்கள் நல்லவர்கள் இல்லை" என்று எப்படி நீங்கள் சொல்லலாம் என்று
என்னிடம் நீ கேட்கலாம். ஆனால், தம்பி, மேலே நீ சொன்ன விவரங்கள்
அனைத்தும், "நல்ல மனிதர்களுக்கு அடையாளங்கள் அல்ல" அவைகள் "ஒரு
பக்தியுள்ள முஸ்லிமுக்கு அடையாளங்கள் ஆகும்".

அப்படியானால், "பக்தியுள்ள முஸ்லிம்களை" நாம் "நல்ல மனிதர்கள்" என்றுச்
சொல்லக்கூடாதா என்று கேள்வி கேட்டால் "சொல்லக்கூடாது" என்று தான் பதில்
சொல்லவேண்டி வருகிறது. இதற்கு ஆதாரம், "முஹம்மதுவின் சஹாபாக்களின்
நடபடிகள் தான்".

புரியவில்லையா? குழப்பமாக இருக்கின்றதா?

பக்தியுள்ள முஸ்லிம் அல்லாஹ்விற்கு 100% கேள்வி கேட்காமல் கீழ்படிய
முயற்சி எடுப்பான், இதனை மேற்கண்ட நபர்கள் செய்தார்கள். ஆனால், அவர்கள்
தங்கள் சக முஸ்லிம்களை தங்களைப் போலவே நேசிக்கவில்லை.

இஸ்லாமின் 5 தூண்களும்

மோசேயின் 10 கட்டளைகளும்

இயேசுவின் 2 கட்டளைகளும்

இஸ்லாமின் ஐந்து தூண்களில், "இதர மனிதர்களை தங்களைப் போல
நேசிக்கவேண்டும்" என்ற தூண் (துரும்பு) காணப்படுவது இல்லை. இஸ்லாமின்
ஐந்து கடமைகளும் "தனி மனிதனுக்கும் அல்லாஹ்விற்கும் இடையே இருக்கவேண்டிய
கடமைகள் போன்றவற்றை மட்டுமே தன்னகத்தே கொண்டுள்ளது". எனவே, ஒரு முஸ்லிம்,
இந்த ஐந்து கடமைகளை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற முயற்சி எடுத்தால், அதுவே
அல்லாஹ்வை திருப்தி படுத்தபோதுமான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறான்.

ஆனால், தன்னோடு இருக்கும் இதர மனிதர்களிடம் காட்டவேண்டிய கடமைகள்
அவனுக்கு இரண்டாம் தரமாக தெரிகின்றது. அல்லாஹ்வை முதலாவது திருப்தி
படுத்தலாம், அதன் பிறகு மனிதர்களுக்காக வாழலாம் என்ற முடிவை ஒரு முஸ்லிம்
எடுக்கிறான்.

இஸ்லாமின் ஐந்து கடமைகளில் மனிதர்களுக்கு முஸ்லிம்கள் செய்யவேண்டிய
கடமைகள் காணப்படாததினால், இஸ்லாமிய உலகில் அதிகமாக தீவிரவாத செயல்கள்,
வன்முறைகள் இடம் பெறுவதைக் காணலாம்.

மோசேயின் 10 கட்டளைகளை நாம் காணும் போது, முதல் நான்கு கட்டளைகள்
மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே காணப்படவேண்டிய தொழுகையை உறவு முறையை
வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். மீதமுள்ள ஆறு கட்டளைகள் ஒரு மனிதன்
இன்னொரு மனிதனுக்கு செய்யவேண்டிய கடமைகள் அல்லது ஒழுக்க நெறிமுறைகள்
சொல்லப்பட்டு இருக்கும். அதாவது, சமுதாயத்தில் ஒரு மனிதன் எப்படி இன்னொரு
மனிதனை பார்க்கவேண்டும், நேசிக்கவேண்டும் போன்றவற்றைப் பற்றியதாக
இருக்கும்.

பழைய ஏற்பாட்டின் 10 கட்டளைகள், இஸ்லாமின் 5 கடமைகளைக் காட்டிலும்
சிறப்பானதாக காணப்படுகின்றது என்பதை இதன் மூலம் அறியலாம்.

மூன்றாவதாக, இயேசு பழைய ஏற்பாட்டின் அனைத்து கட்டளைகளையும், இரண்டே
கட்டளைகளில் சுருக்கிவிட்டார். முதலாவது உன் தேவனிடத்தில் அன்பு கூறு,
இரண்டாவது உன்னைப்போல மற்றவனையும் நேசி. இயேசுவின் இந்த இரண்டு
கட்டளைகளில் 50% மனிதனுக்கு மனிதன் செய்யவேண்டியவைகளும், 50% மனிதன்
இறைவனுக்கு கொடுக்கவேண்டிய தொழுகையையும் சொல்லப்பட்டுள்ளது

மோசேயின் பத்து கட்டளைகளிலும், இயேசுவின் இரண்டு கட்டளைகளிலும்
காணப்படும், மனிதனை நேசிக்கும் கட்டளைகள் இஸ்லாமின் ஐந்து கடமைகளில்
காணப்படவில்லை. அதனால் தான் முஸ்லிம் சமுதாயத்தில் வன்முறைகள் அதிகம்,
இதர சமுதாயங்களில் அது குறைவு.

எனவே, சஹாபாக்கள் ஐந்து வேளை தவறாமல் தொழுதுவிட்டு, இதர முஸ்லிம்களை
கொல்ல வாளை எடுக்க சபதம் எடுக்கிறார்கள். அதிகாரத்திற்காவும்,
பணத்திற்காகவும் முஹம்மதுவின் நெருங்கிய தோழர்களையும் வெறுக்க
தயங்குவதில்லை.

முடிவுரை:

உமர் ஜுபைரை உதைக்கச் சொல்கிறார், ஜுபைர் வாளை உறையிலிருந்து எடுத்து,
அலிக்கு ஆதரவு முழுவதுமாக கிடைக்கும்வரை உறையிலே திரும்ப போடுவதில்லை
என்கிறார். அலி அபூ பக்கருக்கு ஓட்டு போட மறுத்துவிட்டார். அபூ சுப்யானோ
ஜாதி வெறி கொண்டு, போருக்கு தயாராகிறார். அபூ பக்கரோ, இந்த தலைவர் பதவி,
முஹாஜிர்களுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும், அன்ஸார்களுக்கு
கிடைக்கக்கூடாது என்று விரும்புகிறார். இத்தனை விஷயங்கள் நடந்துக்
கொண்டு இருக்கும் போது, பாவம் அல்லாஹ், கண்களிலிருந்தும் காணாதவராகவும்,
காதுகள் இருந்தும் கேளாதவராகவும் காணப்படுகிறார்.

இவைகள் எல்லாம், முஹம்மது மரித்தவுடன் நடைபெறுகிறது, பத்து ஆண்டுகளுக்கு
பிறகு அல்ல. இவைகள் எல்லாம், இஸ்லாமை தூய வடிவில் கண்ட முஸ்லிம்களால்
அரங்கேற்றப்படுகின்றது, 1400 ஆண்டுகள் கழித்த பிறகு, அல்கெய்தா, அல்லது
ஐஎஸ் போன்ற தீவிரவாத குழுக்களால் நடைபெறவில்லை என்பதை கவனிக்கவும்.

சஹாபாக்களின் சூடான விஷம் கலந்த செயல்களைப் பார்த்துக்கொண்டு இருந்த
இஸ்லாமிய இறையியல் மௌனமாக இருந்துவிட்டது. 23 ஆண்டுகள் வளவளவென்று பேசிய
வாயை மூடிக்கொண்டு மூளையில் முடங்கிவிட்டது. இந்த தவறுகளுக்கெல்லாம் தாம்
காரணமென்று சாட்சி கொடுத்து மௌனத்தில் இறங்கிவிட்டது இஸ்லாம்.

தம்பி, இதுவரை அபூ பக்கரின் தெரிவு விஷயத்தில் காணப்பட்ட எதிர்ப்புகளைக்
கண்டோம். அடுத்த கடிதத்தில், அபூ பக்கரின் ஆட்சியை அலசுவோம்.

கர்த்தர் உனக்கு உண்மையை காண்கின்ற தெளிவான மனக்கண்களை
கொடுக்கவேண்டுமென்று வேண்டுகிறேன்.

உன் நோன்புகள் சிறக்க என் வாழ்த்துதல்கள் (ஜெபங்கள் அல்ல!)

இப்படிக்கு

உன் அண்ணன்

உமர்

தேதி: 4 ஜூலை 2015

இக்கட்டுரைக்கு உதவிய கட்டுரை: இஸ்லாமிய அரச குடும்பம் - பாகம் 2 - புதிய அரசர்

________________________________

உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day11.html



--
Source : http://isakoran.blogspot.in/

2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!


ரமளான் மாத தொடர் கடிதங்களை இங்கு சொடுக்கி படிக்கலாம். 

[நேற்று எழுதிய கடிதத்தை படித்தவுடன், உமரின் தம்பி தொலைபேசியில் அழைத்து உமருடன் பேசுகிறார். இவ்வுரையாடலில் முஹம்மதுவிற்கு பிறகு சஹாபாக்களின் நிலை, இயேசுவிற்கு பிறகு சீடர்களின் நிலை ஒப்பிடப்படுகின்றது. இவர்களில் யார் வழிகாட்டுதல் இல்லாத அனாதைகள்? தெரிந்துக் கொள்ள மேற்கொண்டு படிக்கவும். உமரின் மொபைள் அலறுகிறது, உங்களுக்கு பிடித்தமான ட்யூனை நீங்கள் கற்பனை செய்துக் கொள்ளலாம்….]

உமர்: ஹலோ, தம்பி

தம்பி: ஹலோ அண்ணா, அஸ்ஸலாமு அலைக்கும்.

உமர்: வாஅலைக்கும் ஸலாம் தம்பி. நீ எப்படி இருக்கிறாய்?

தம்பி: இது நலம் விசாரிக்கின்ற நேரமல்ல, அதை அப்புறம் விசாரித்துக் கொள்ளலாம். 

இப்போது ஒரு முக்கியமான விஷயத்துக்கு வருகிறேன். உங்களின் கடிதத்தை படித்தவுடன், உங்களுக்கு போன் செய்து, நச்சென்று நாலு கேள்விகள் கேட்கலாம் என்று நினைத்து போன் செய்தேன். உங்களுக்கு இப்போது நேரமிருக்கிறதா?

உமர்: நீ ரொம்ப கோபமாக இருக்கிறாய் போல தெரிகிறது. கோபத்தில் எதையும் பேசவேண்டாம், நாம் பிறகு பேசலாம்.

தம்பி: இல்லை.. இல்லை.. நான் கோபமாக இல்லை. இப்போதே பேசனும்.

உமர்: சரி, உன் விருப்பம். 

தம்பி: நேற்று நீங்க அனுப்பிய கடிதத்தில் அனேக தவறான விவரங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். அதில் ஒன்று, "சஹாபாக்கள் அனாதைகளாக விடப்பட்டார்கள்" என்றுச் சொன்னது தான்.

உமர்: உண்மை தானே! சஹாபாக்கள் அனாதைகளாகவும், சரியான வழிநடத்துதலும், உதவியும் இல்லாமலும் தங்கள்  மனம் போன போக்கில் நடந்துக்கொண்டார்கள் இல்லையா?

தம்பி: நீங்க என்ன சொல்ல வருகிறீங்க? எங்க இறைத்தூதர் சஹாபாக்களோடு நிரந்தரமாக வாழ்ந்திருக்கவேண்டும் என்றுச் சொல்கிறீர்களா? இது சாத்தியமான ஒன்றா? மனிதனாக பிறந்தவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும், ஒரு நாள் மரணித்தே ஆகவேண்டுமல்லவா? இது கூடவா உங்களுக்கு தெரியவில்லை?

உமர்: முஹம்மது பல நூறு ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லையே!

தம்பி: இப்படி இல்லையென்றால், உங்க வரிகளுக்கு வேறு என்ன அர்த்தமாம்?

உமர்: சஹாபாக்கள் அனாதைகள் என்றுச் சொன்னது, மனித வடிவில் முஹம்மது அவர்களோடு இருந்திருக்கவேண்டும் என்று  அர்த்தமில்லை.  இது சாத்தியமும் இல்லை என்று எனக்குத் தெரியும்.

முஹம்மதுவிற்கு பிறகு அவர்களை நேர் வழியில் நடத்த எந்த ஒரு ஏற்பாட்டையும் அல்லாஹ்வோ அல்லது முஹம்மதுவோ செய்யவில்லையே! என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

தம்பி: என்ன ஏற்பாடு தேவைப்படுகின்றது என்று நீங்க நினைக்கிறீங்க? சஹாபாக்கள் என்ன  சின்ன பிள்ளைகளா? அவர்களை கண்காணிக்க கார்டியன் (Guardian) வைத்துப்போக!  அவர்கள் அனைவரும் முதிர்ச்சி அடைந்தவர்கள், உலகத்தைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் நன்கு அறிந்தவர்கள். 

இது மட்டுமல்ல, அவர்களை நேர் வழியில் நடத்த அவர்களிடம் குர்-ஆனும், சுன்னாவும் இருந்தன. மேலும் அவர்கள் முஹம்மதுவை நேரடியாக பார்த்த முதல் தர சாட்சிகளாக இருந்தார்கள். 

உமர்: என் கேள்வியும் இதைப் பற்றியது தான். குர்-ஆனும் சுன்னாவும் சஹாபாக்களை நேர்வழியில் நடத்தியிருந்தால், இப்படி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டும், எதிரிகளைப்போல கருதிக்கொண்டும் இருந்திருப்பார்களா?

முஹம்மது உயிரோடு இருந்தபோது, காணப்பட்ட அந்த ஐக்கியம் அவர் மரித்தவுடன் ஏன் காணாமல் போய்விட்டது?

தம்பி: அப்படி என்ன செய்துவிட்டார்கள் சஹாபாக்கள்?

உமர்: விடிய விடிய இராமாயணம் கேட்டு, சீதை இராமனுக்கு என்ன உறவு என்று கேட்டானாம் ஒருத்தன், அது போல இருக்கு உன் கேள்வி.

முதலாவதாக, முஹம்மது மரித்த பிறகு, ஃபாத்திமாவும், அலியும் சொத்துக்காக போட்ட சண்டையை என் கடிதங்களில் எழுதினேன்.

அண்ணன் எப்போ காலியாவான், திண்ணை எப்போ காலியாகும் என்பதற்கு ஏற்றாற்போல, முஹம்மது மரித்தவுடன் அடுத்த தலைவர் யார் என்று முடிவு செய்ய முக்கியமானவர்களுக்கும் சொல்லாமல் கூட்டம் கூடிவிட்டார்கள் அன்ஸார்கள். அங்கு சென்ற அபூ பக்கரும், உமரும் தங்களுக்குத் தான் அந்த பதவி, முஹம்மது எங்களைத் தான் தலைவராக நியமிக்க விரும்பினார் என்றெல்லாம் சொல்லி சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். 

இதுவரை மேற்கண்ட இரண்டு விஷயங்களை மட்டுமே பார்த்துள்ளோம், இன்னும் அனேக விவரங்கள் பாக்கியுள்ளது. அவைகளை சொல்வதற்கு முன்பாகவே, "சஹாபாக்கள் அப்படி என்ன செய்தார்கள்?" என்று நீ கேட்கிறாய்?  இது ஆரம்பம் தான் இன்னும் பார்க்கவேண்டியது நிறைய இருக்கிறது தம்பி. 

இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள், சஹாபாக்கள் அல்ல

தம்பி: நீங்க என்ன சொல்லவருகிறீங்க என்று எனக்கு புரியலே! 23 ஆண்டுகள் இறைத்தூதர் ஊழியம் செய்தார், குர்-ஆனை கொடுத்தார், குர்-ஆனின் விளக்கமாக தானே வாழ்ந்துவிட்டுச் சென்றார். இத்தனை வழிகாட்டுதல் இருந்தும், சஹாபாக்களை அனாதைகள் என்றுச் சொல்ல என்ன இருக்கிறது?

இன்னும் சொல்லப்போனால், இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்.  இயேசு மரித்த பிறகு அவர்களிடம் புதிய ஏற்பாடு இல்லை, குறைந்த பட்சம் நற்செய்தி நூல்களும் அவர்களிடம் இல்லை.  அவர்கள் மத்தியிலே இயேசு வாழ்ந்த 3.5 ஆண்டுகள் தான் இவர்களின் சொத்துக்களாக இருந்தது. ஆக, இஸ்லாமோடு ஒப்பிடும் போது:

  1. சஹாபாக்களிடம் --> குர்-ஆன் இருந்தது மற்றும் சுன்னா இருந்தது (23 ஆண்டுகால முஹம்மதுவின் வாழ்க்கை)
  2. அப்போஸ்தலர்களிடம் --> புதிய ஏற்பாடு இல்லை, நற்செய்தி நூல்கள் இல்லை, இயேசுவின் சுன்னா மட்டும் இருந்தது அதுவும் 3.5 ஆண்டுகள் மட்டும் தான்.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள், சஹாபாக்கள் அல்ல. 

இப்போது உங்களுக்கு சரியாக புரிந்திருக்குமே! நச்சென்று உச்சந்தலைக்கு காரம் ஏறியிருக்குமே!

உமர்: தம்பி, நீ முன்னேறி விட்டாய் என்று நினைக்கிறேன். லாஜிக்கை நல்லா பிடிக்கிறாயே!

தம்பி: உங்களிடம் பதில் இல்லையா?!? அதனால் தான் சொல்கிறேன், அதிகமாக இஸ்லாமோடு விளையாடாதீர்கள், "மாட்டேன்" என்று அடம் பிடித்தால், இப்படி மூக்கு அறுக்கப்பட்டுப் போகவேண்டி வரும். இது எப்படி இருக்கு?

உமர்: நான் இன்னும் முடிக்கவில்லையே தம்பி. யாருடைய மூக்கு அறுக்கப்போகுது என்று கடைசியில் தானே தெரியும். என் தரப்பு வாதத்தை நான் வைக்கட்டும். தம்பி, இப்புடு சூடு!?! [தமிழே பாதி தான் வரும், இதில் தெலுங்கு வேறா…]

சஹாபாக்களை குர்-ஆனும், ஹதீஸ்களும் நேர் வழியில் நடத்தியிருந்தால், அவர்கள் ஒருவரை ஒருவர் கடித்துக் கொண்டு, வசை மொழிகளை கூறிக்கொண்டு, அடித்துக் கொண்டு செத்து இருந்திருக்கமாட்டார்கள். இவர்களை குர்-ஆனும், சுன்னாவும் நேர் வழியில் நடத்தவில்லை என்பது தான் உண்மை.

இயேசுவின் சீடர்கள் அனாதைகளாக வாழவில்லை, அவர்கள் நேர் வழியில் நடத்தப்பட்டார்கள்.

தம்பி: உங்களால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால்,  எதையோ சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.

உமர்: உனக்கு தெளிவாக விளக்குகிறேன்.  

நாம் இந்த வருடம் ரமளான் மாதத்தில், சஹாபாக்களின் நடபடிகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இதுவரை ஐந்து சதவிகிதம் கூட நான் எழுதி முடிக்கவில்லை. அதற்குள், நீ சஹாபாக்களை இயேசுவின் அப்போஸ்தலர்களோடு ஒப்பிட முந்திவிட்டாய். இந்த ஒப்பிடுதலை நான் கடைசியில் செய்யலாம் என்று விரும்பியிருந்தேன், ஆனால், நீ கேள்வியை இப்போதே கேட்டபடியினால், ஒரு சுருக்கத்தை உனக்குத் தருகிறேன். இதனை ஞாபகத்தில் வைத்துக்கொள், அதாவது, சஹாபாக்களின் நடபடிகளில் இன்னும் 95% சதவிகித விவரங்களை நாம் நம் உரையாடல்களில் தொடவே இல்லை.

அப்போஸ்தலர்கள் நேர்வழியில் நடத்தப்பட்டார்கள் (Rightly Guided Apostles)

இயேசுவின் சீடர்கள் நேர்வழியில் நடத்தப்பட்டார்கள் (Rightly Guided Apostles) என்பதை இப்போது விளக்குகிறேன்.  இந்த தொடர்கள் அனைத்தும் முடிக்கும்  போது, முஹம்மதுவின் சஹாபாக்கள் தவறான வழியில் நடத்தப்பட்டார்கள் (Wrongly Guided Caliphs) என்பதை நீயே புரிந்துக் கொள்வாய்.

தம்பி: போதும் போதும்… முதலில் இயேசுவின் சீடர்கள் எப்படி அனாதைகள் இல்லை என்பதை விளக்குங்கள். எனக்கு வளவளவென்று பேசிக்கொண்டு இருக்க நேரமில்லை.

உமர்: அடப்பாவமே!  நீ தானே என்னை அழைத்து உடனே பேசனும் என்றுச் சொன்னாய்!  இப்போது அப்படியே தலைகீழாக பேசுகிறாயே! நீ அவசரக்காரணுக்கு தம்பியாக இருப்பாய் போல் இருக்கிறதே!

தம்பி: உங்களின் கடைசி வரியை நான் மனப்பூர்வமாக அங்கீகரிக்கிறேன் [கிண்டலாக சிரிக்கிறார்….]

உமர்: சிரிப்பாய் தம்பி, சிரிப்பாய்…. 

சரி போகட்டும் விவரத்திற்கு வருகிறேன்,

அப்போஸ்தலர்களை இயேசு எப்படி வழிநடத்தினார் என்பதை உனக்கு விளக்குகிறேன். 

நீ அப்போஸ்தலர் நடபடிகளை வாசிக்கும்போது, சீடர்களோடு எப்படி தேவன் இடைப்பட்டார் என்பதை கவனிக்கமுடியும். அதே நேரத்தில், சஹாபாக்களை எப்படி அல்லாஹ் அம்போ என்று விட்டுவிட்டார் என்பதையும் ஒப்பிட்டு பார்க்கமுடியும்.

அப்போஸ்தலர்கள் நடபடிகள்சஹாபாக்கள் நடபடிகள்
இயேசுவின் ஊழியம் 3.5 ஆண்டுகள்
முஹம்மதுவின் ஊழியம் 23 ஆண்டுகள்.
இயேசுவின் சொல்லும் செயலும் மட்டுமே அவர்களின் சொத்து. பழைய ஏற்பாடு அவர்களிடம் இருந்தது.
குர்-ஆனின் 6236+ வசனங்களும், 23 ஆண்டுகால சுன்னாவும் (முஹம்மதுவின் சொல்லும் செயலும்)
உலக பிரகாரமாக, இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் கூட அவருடைய சீடராகவில்லை. இயேசுவின் தாய் மரியாள் விசுவாசியாக இருந்தார்கள்.
முஹம்மதுவிற்கு பெண் கொடுத்த மாமனார்கள், முஹம்மதுவின் மருமகன்கள், இதர சொந்தக்காரர்கள், மதினா முஸ்லிம்கள், இதர முஸ்லிம்கள் இருந்தார்கள்.
தலைவர்கள்: பேதுருவும், யோவானும். இவர்களை இதர சீடர்கள் தலைவர்களாக அல்லது முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாக கண்டார்கள். இயேசுவும் பேதுருவை "சீடர்களை வழி நடத்தும் படி தயார் படுத்தியிருந்தார்".  பார்க்க யோவான் 21:15-17
தலைவர்கள்: முஹம்மதுவிற்கு நெருங்கிய தோழர்களில், சிலர் தாங்கள் தலைவராக வேண்டும் என்றனர், ஒருவர் "இன்னார் தலைவராக வரும்வரை நான் உருவிய வாளை உறையில் போடுவதில்லை" என்றார்.  அன்ஸார்கள் தாங்கள் தான் தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் என்றனர், முஹாஜிர்கள் தங்களுக்கு தலைவர் பதவி வேண்டுமென்றனர்.  இவர்கள் மத்தியிலே ஒருமனம் இல்லை.
அப்போஸ்தலர்கள் இயேசுவின் சொல்லையும் செயல்களையும் மனதில் பதித்து இருந்தனர்.
சஹாபாக்கள் முஹம்மதுவின் சொல்லையும் செயல்களையும் மனதில்  பதித்து இருந்தனர். குர்-ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்தவர்களும் இருந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
இயேசு மரித்தார், உயிர்த்தெழுந்தார், 40 நாட்கள் அவர்களோடு அனேக காரியங்களை பேசினார், சீடர்களை தயார்படுத்தினார்.
முஹம்மது மரித்தர், மண்ணோடு மண்ணாக மாறிவிட்டார். சஹாபாக்களை தயார்படுத்தவில்லை, தனக்குப்பிற்பாடு யார் தலைவர் என்று தெளிவாக சொல்லிவைக்கவில்லை, எழுதியும் வைக்கவில்லை.
இயேசுவின் சீடர்களிடம் ஒருமனம் இருந்தது.
சஹாபாக்களிடம் ஒருமனம் தவிர்த்து மற்ற அனைத்தும் இருந்தது.
இயேசு பரலோகம் சென்றார், பரிசுத்த ஆவயானவர் சீடர்களிடம் வந்தார். உங்களை நான் திக்கற்றவர்களாக விடேன் என்றார் (பார்க்க யோவான் 14:16-18, 6:7-11)
முஹம்மது மரித்தார், ஜிப்ராயீல் தூதனும் தன் ஜிராக்ஸ் கடையை முடிவிட்டு சென்றுவிட்டார் (இனி ஜிராக்ஸ் எடுக்க ஒன்றுமில்லை என்பதால், அவர் சென்றுவிட்டார் என்று முஸ்லிம்கள் சொல்லுவார்கள்)
சீடர்கள் ஒருமனப்பட்டு, தங்கள் ஆஸ்திகளை நிலங்களை விற்று பொதுவாக அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். (அப் 2:45,46)
தந்தை மரித்த அடுத்த நாளே தனக்கு ஆஸ்திகளை கொடுங்கள் என்று சண்டை போட்ட மகள் ஃபாத்திமா. ஆறு மாதங்கள் இதனால் அபூ பக்கரிடம் பேசாமல் இருந்து அப்படியே மௌனமாக மரித்துவிட்டர். ஆஸ்திக்காக மருமகனும், முஹம்மதுவின் இதர மனைவிகளும், சொந்தக்காரர்களும் போட்டி போட்டனர். 

முஹம்மது மரித்த பிறகு, சஹாபாக்கள் தங்கள் இச்சைகளின் படி வாழ ஆரம்பித்தனர். இவர்களை வழி நடத்த யாருமே இல்லை, பெற்றோர்கள் இருந்தும் அனாதைகளாகவும், பிள்ளைகள் இருந்தும் மலடிகளாகவும் காணப்படும் மக்களைப் போல இவர்களும் வாழ்ந்தார்கள். 

தம்பி: இன்னும் நீங்கள் "இயேசுவின் சீடர்கள் அனாதைகள் இல்லை என்று நிருபிக்கவில்லையே!".

உமர்: வருகிறேன்.. வருகிறேன். 

அ) இயேசுவைப் போல அற்புங்கள் செய்த சீடர்கள்: 

அற்புதங்களும் அடையாளங்களும் சீடர்கள் மூலமாக இயேசு செய்தார். இதனால், இவர்களுக்கு மக்கள் கீழ்படிந்தார்கள், இவர்களின் வார்த்தைகளுக்கு தெய்வீக அங்கீகாரம் உள்ளது என்பதை மக்கள் கண்டனர், இந்த வசனங்கள் ஒவ்வொன்றிலும்  ஒரு அற்புத அடையாளமுண்டு, நீயே இவைகளை படித்துப் பார் தம்பி: அப் 3:1-11, 5:15-16, 5:19-20, 8:5-13, 9:32-42, 12:7-17, 13:8-11, 14:8-10, 16:16-18, 16:24-33, 19:11-20.

ஆனால், சஹாபாக்கள் முஹம்மதுவைபோல, சண்டைபோட்டார்களே  தவிர, தெய்வீக கரம் இவர்களோடு இருந்தது என்பதற்கு அடையாளமாக எந்த அற்புதமும், அடையாளமும் சஹாபாக்கள் செய்யவில்லை. சஹாபாக்கள் மூலமாக அல்லாஹ் செய்யவில்லை.

ஆ) பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்:

இயேசுவின் சீடர்களுக்கு வழிகாட்டியாக பரிசுத்த ஆவியானவர் இருந்தார், தேவைப்படும் நேரத்தில் சரியான வழியில் அவர்களை நடத்தினார் (பார்க்க அப்: 8:26-40, 13:2-4, 16:6-7).

சீடர்களுக்கு தரிசனங்கள் மூலமாக வழி காட்டினார், (பார்க்க அப் 10:1-48, 16:9-10). 

இவர்களையா தம்பி நீ அனாதைகளென்றுச் சொல்கிறாய்? இப்படிப்பட்ட வழிகாட்டல்கள் சஹாபாக்களுக்கு இல்லை என்பதால், அவர்களை அனாதைகள் என்றேன்.

தேவன் தீர்க்கதரிசிகளை எழுப்பி சபை செய்யவேண்டிய காரியங்களை முன்கூட்டியே சொன்னார் (பார்க்க அப் 11:27-30). இயேசு தரிசனத்தில் காணப்பட்டு, பவுலை பலப்படுத்தினார் (பார்க்க 18:9-10)

இப்படி பல வகைகளில், தேவனின் கரம் அப்போஸ்தலர்களோடு இருந்து, வழி காட்டியது. 

இஸ்லாமை எடுத்துக் கொண்டால், நான் ஒருவன் (அல்லாஹ்) எனக்கு ஒருவன் (முஹம்மது) அவ்வளவு தான் கதை முடிந்துவிட்டது. முஹம்மதுவிற்கு பிறகு மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? சஹாபாக்களுக்கு குர்-ஆன் வழிகாட்டிவிடும் என்ற ஆசையில் அல்லாஹ் கவனக்குறைவாக இருந்துவிட்டார் என்று சொல்லத் தோன்றுகிறது.

இ) சீடர்களின் பரம எதிரியை, பரலோக நண்பனாய் மாற்றினார்:

சவுல் என்ற பெயரில் ஒரு யூத அறிஞன், சீடர்களை துன்புறுத்திக் கொண்டு இருக்கும் போது, இயேசு அவனை சந்தித்து, இரட்சித்து, சபையிலே சேர்த்தார், இவர் தான் பவுல், இவரை அறியாமல் தற்கால முஸ்லிம்கள் இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் (பார்க்க அப் 9:1-30).

இப்படி, இயேசுவின் சீடர்களோடு, பரிசுத்த ஆவியானவர் இருந்தார், தேவைப்படும் போதெல்லாம் வழி காட்டினார். ஆனால், இப்படிப்பட்ட வழிகாட்டுதல் இஸ்லாமிலே எங்கே என்று தேடிப்பார் தம்பி.

முஹம்மது உயிரோடு இருந்தபோது,  அற்பமான விஷயங்களுக்கெல்லாம், ஓடிப்போய் குர்-ஆன் வசனங்களை கொண்டு வந்த ஜிப்ராயீல் தூதன், சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, கழுத்தை வெட்டிக்கோண்டு செத்துக் கொண்டுஇருக்கும் போது ஏன் ஒரு முறை கூட வரவில்லை?  

சஹாபாக்களும் மனிதர்கள் என்பதால், அவர்களுக்கு வழிக்காட்டல் தேவைப்பட்டது. குர்-ஆனை தனக்கு ஏற்றாற்போல பொருள் கொள்வதும், எதைச் செய்தாலும், முஹம்மது இப்படிச் சொன்னார் என்று சாக்கு சொல்லிக்கொண்டு, இதர முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி கொல்வதும், சஹாபாக்களின் வாழ்வில் அனுதின நிகழ்வு ஆகிவிட்டது. இதற்கு ஒத்தாசையாக குர்-ஆனின் வசனங்கள் இருந்தது தான் முக்கியமான காரணம். வேலியே பயிரை மேய்ந்தால், யாரிடம் சென்று முறையிடுவது? குர்-ஆனை அடிப்படையாக வைத்து தான் அனைத்து தீய செயல்கள் இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் நடந்தது.

முதல் நான்கு கலிபாக்கள் "நேர் வழி நின்ற கலிஃபாக்கள் அல்ல, கோணலான வழிநின்ற கலிஃபாக்கள்" ஆவார்கள். இதற்கு முழுவதுமாக பொறுப்பேற்கவேண்டியவர், குற்றவாளி கூண்டில் நிற்கவேண்டியவர் "அல்லாஹ்" தான்.  இந்த விஷயத்தில் முஹம்மதுவையும் நான் குற்றவாளியாக தீர்க்கமாட்டேன், அவர் வெறும் அம்பு தான், எய்தவனுடையது தான் எல்லா குற்றமும்.

தம்பி: போதும் நிறுத்துங்கள்! உங்களுக்கு அவசர அவசரமாக போன் செய்து பேசினேன் பாருங்கள், என் புத்தியை ….

உமர்: வேண்டாம் தம்பி, உன் புத்தியை திட்டாதே, அதை சரியாக தீட்டு. 

தம்பி: வாய் ஜாலம் எல்லாம் போதும், அடுத்த முறை பார்க்கலாம்.  ஒரு நாள் உங்களை நான் சரியான லாஜிக்கை வைத்து வாரப்போகிறேன் பாருங்க, அப்போது, துண்டைக்காணும், துணியக்காணும் என்று நீங்க ஓடப்போறீங்க. 

உமர்: என்ன தான் இருந்தாலும், நீ என் தம்பி உன்னிடம் தோற்பது எனக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால், கிறிஸ்தவத்தை யாரிடமும் தோற்கவிடமாட்டேன். நீ தோற்றுப்போகும் பக்கத்தில் இருக்கிறாய் அல்லவா… அதை நெனச்சாத் தான்…

[கால் கட்டாகி விட்டது… பீப்… பீப்… பீப்… மறுபடியும் கால் செய்தால், "நீங்கள் அழைத்த இந்த எண் இப்போது உபயோகத்தில் இல்லை" என்ற சத்தம் வருகிறது…]

உமர்: ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டியா…. அடுத்த முறை நான் கடிதம் எழுதாமல் இருப்பேனா… நீ படித்து மறுபடியும் எனக்கு கால் பண்ணாமல் தான் இருக்கப்போகிறாயா… பார்த்துக் கொள்ளலாம் தம்பி…. 

அன்பான ஆண்டவரே, என் தம்பியை இரட்சியும்.

தேதி: 2 ஜூலை 2015


உமரின் ரமளான் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்

Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day10.html



Source : http://isakoran.blogspot.in/