அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 10, 2008

வாகனத்தில் செல்வோரே.. இதையும் கொஞ்சம் கவனிப்பீர்...

அநேக குடும்பங்களை நடுதெருவுக்கு கொண்டுவந்துவிட்டது எது தெரியுமா.. அநேகரை அநாதைகளாக்கியது எது தெரியுமா...இன்னும் அநேக குடும்பங்களில் அழுகுரல் ஒலித்துகொண்டிருப்பத்ற்கு காரணம் என்ன தெரியுமா.. திருமணம் முடிந்த அடுத்த நாள் காலையில் பை சொல்லி சென்ற கணவர் மாலையில் புதுமனைவியை கைம்பெண்ணாக்கியது எது தெரியுமா.... சாலை விபத்துதான்...இதை வாசிக்கும்போதே நம்மில் ஒருவித சோகம்  இழையொடுவ‌து தெரிகிற‌து அல்ல‌வா...

இதை குறித்து வ‌ந்த‌ சில‌ செய்திக‌ளை பாருங்க‌ள்
 

acc.jpg

புதுடில்லி:சாலை விபத்துகளால் உலகிலேயே, அதிகமான உயிரிழப்புகளை சந்திக்கும் நாடாக சீனா இருந்தது. தற்போது, சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. சீனாவில், 2006ல் ஏற்பட்ட சாலை விபத்துகளில், 89 ஆயிரத்து 455 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில், இதே ஆண்டில், சாலை விபத்துகளில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 749. கடந்த 2005ல், சீனாவில் நிகழ்ந்த சாலை விபத்துகளில், 98 ஆயிரத்து 738 பேர் பலியாகி இருந்தனர். இதே ஆண்டில், இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகளில், 95 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கூறியுள்ளது.

http://globaltamilnews.com/?p=40

II.  த‌மிழ் நாட்டிலும்கூட‌ க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் ந‌டந்த‌ சாலைவிபத்துக்களில் 12036 பேர் த‌ங்க‌ளின் இன்னுயிரை ஈந்துள்ள‌ன‌ர்.


CHENNAI: As many as 12,036 persons died in road accidents in Tamil Nadu last year, up from about 9,571 in 2001 and just over 11,000 in 2006.

http://www.hindu.com/2008/04/10/stories/2008041059490800.htm

இத‌ற்கு கார‌ண‌ம் வாக‌ன‌ங்க‌ளின் பெருக்க‌மும் சாலைகளின் தரம்  அந்த‌ அள‌வுக்கு மேம்ப‌டுத்த‌ப‌டாதே கார‌ண‌ம். மேலும் சாலைவிதிக‌ளை க‌டைபிடிக்காத‌துமே. அராச‌ங்க‌ த‌ர‌ப்பில் ப‌ல்வேறு கார‌ண‌ங்க‌ள் இருந்தாலும் ந‌ம்மில் க‌டைபிடிக்க‌வேண்டிய‌ போக்குவ‌ர‌த்து விதிக‌ளை க‌ட்டாய‌ம் க‌டைபிடிப்போம். வேக‌த்தை குறைப்போம். நிதான‌த்தை இழ‌க்க‌வேண்டாம். குடித்துவிட்டு வாக‌ன‌த்தை ஓட்ட‌ வேண்டாம். நம்மை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பத்திற்கு ஏமாற்றத்தை தரவேண்டாம்
 
ந‌ன்றி

 

 

1 comments:

Anonymous said...

Everyone has some Pavam.....

If they pray Jesus....There is no accident...