அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 3, 2008

பிஜேபின் எடியூரப்பா.......... தமிழ்நாட்டின் நல்ல திட்டத்திற்கு நீர் இடையூரப்பா...........

ஒகேனக்கல்  (Hogenakal )  தமிழ் நாடு, கர்நாடகம் ஆகியவற்றின் எல்லையில், காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தர்மபுரியில் இருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
  படிமம்:Arun image38.jpg
 
 
ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல இது அருவிகளின் தொகுப்பு. ஒகேனக்கல் என்ற கன்னட சொல்லுக்கு புகையுடைய கல்\பாறை என்று பொருள்.

தமிழகத்தின் வறண்ட பகுதிகளான தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் வகையில் ஒகேனக்கல் பகுதியில் காவேரி நீரை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் வழங்கும் திட்டம் நீண்ட காலமாகவே பரிசீலனையில் இருந்து வந்துள்ளது.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை ஆதரித்து வந்துள்ளன. மத்திய அரசும் இத்திட்டத்தை நிறைவேற்ற வெளிநாட்டு நிதி ஆதாரங்களை பெற்றுத் தர உதவியது.

இந்த‌ ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து ஜப்பான் நாட்டு அதிகாரிகளுடன் உள்ளாட்சித் துறை அமைச்சர்  பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஜப்பான் நாட்டு வங்கி உதவியுடன் இக்கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற அவர்களின் நிதி உதவியுடன் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது
 
இந்நிலையில் தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் ஒகேனக்கல் பகுதிக்கு வந்த பிஜேபியின் எடியூரப்பா, மின் மோட்டார் பொருத்திய படகில் உயிர்க் காக்கும் உபகரணங்களை அணிந்து கொண்டு, காவிரி ஆற்றில் கர்நாடக எல்லை பகுதிகளை பார்வையிட்டார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழகம் நிறுத்தவில்லை எனில் பெரிய அளவில் பாஜக போராட்டம் நடத்தும்  என்றார்.இவர் தொடங்கி வைத்த இத்தீப்பொறி இப்போது பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இது விரைவில் அணைக்கப்படவேண்டும் இல்லையானால் இத்தீயில் எரிவது இந்தியாவின் ஒற்றுமையும் இறையாண்மையும் தான்

ஆனால் கர்நாடக மாநிலம், அரசியல் உள்நோக்கத்துடன் இத்திட்டத்தை எதிர்த்து வருவது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இத்திட்டத்தால் கர்நாடகாவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது.
 
காவிரி ஆற்றைக் குடிநீர் ஆதாரமாகக் கொண்டு, பெங்களூரு குடிநீர்த் திட்டத்தை கர்நாடகா செயல்படுத்தி வரும் நிலையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறை யாண்மைக்கும் எதிரானது.

இத்தீ விரைவில் அணைக்கப்படவேண்டும் இல்லையானால் இத்தீயில் எரிவது இந்தியாவின் ஒற்றுமையும் இறையாண்மையும் தான். சமாதனம் நிலவ இணைந்து ஜெபிப்போம்

 

 

0 comments: