அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 24, 2009

ஆஸ்கர் ஒன்றும் ஒலிம்பிக் அல்ல: நடிகர் கமல்ஹாசன்

இந்தியாவின் சார்பில் ஸலம்டாக் மில்லினியர் என்ற திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை தட்டிசென்றதில் ஒருபுறம் மகிழ்ச்சி இருந்தாலும் இன்னொரு புறம் இது முழுமையான வெற்றி என்று சொல்லமுடியாது. ஏனெனில் முதலாவதாக இது இந்திய மொழிகளில் எடுக்கபடவில்லை. இது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எடுத்த திரைப்படம். மேலும் அதின் இயக்குனர் தொடங்கி அதில் பணியாற்றிய பெரும்பாலனவர்கள் ஆங்கிலேயர்கள். அதனால் தான் இத்திரைப்படம் அமெரிக்கவரை சென்று ஆஸ்கரையும் தட்டி வந்துள்ளது. அவர்களீன் அறிவு திறமையினால் தான் இது எடுக்கப்பட்டது. என்ன இந்தியர்களின் திறமையை பயன் படுத்திகொண்டார்கள் அவ்வளவே. மேலும் இந்த் திரைப்பட பெயரிலேயே பிரச்சனை நடந்துகொண்டிருக்கிறது. அதாவது தெருநாய் என்று சேரியில் வாழும் மக்களை குறிப்பிடுவதாக சொல்லி போரட்டாமே நடந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் இந்தியாவை அவதித்தாகவே கருத வாய்ப்புண்டு. அதை தான் கமலும் தனது பேட்டியில் ஆஸ்கர் என்பது அமெரிக்காவின் உயர்ந்த விருது அவ்வளவே. என்று கூறியுள்ளார்.


முழுக்க முழுக்க இந்தியர்களை கொண்டு திரைப்படம் எடுத்து அது ஆஸ்கர் விருது பெற்றிருக்குமானால் அது இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்

Kamal said that Oscars is not like Olympics because each entry is judged based on American standards and not on universal standards.
http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-09-04/kamal-23-02-09.html

A perfect convergence of factors, not a carefully orchestrated Oscars campaign, propelled Danny Boyle's crowdpleaser to its Academy Awards triumph

Fox Searchlight Oscar Party - Inside

Hitting gold ... the Slumdog Millionaire cast and crew celebrate their Oscars triumph.

8 comments:

சகாதேவன் said...

கமலும் தன் நாயகன் படத்தில் மும்பையின் தாராவி என்ற ஸ்லம்மில் நடக்கும் கதையைத் தானே காட்டினார்? தசாவதாரம் படத்திற்கு ஆஸ்கர் எதிர்பார்த்திருந்தாரோ? ஒருவருக்கு பரிசு கிடைத்தால் மனதார பாராட்ட வேண்டும். இரண்டு நாட்களாக பத்திரிகைகளில் ஜனாதிபதி, பிரதம மந்திரி எல்லாம் ரகுமானை பாராட்டிய செய்திகள் தானே வருகிறது. இளையராஜா, தேவா, ரகுமானை முதலில் அறிமுகம் செய்த மணிரத்னம் என்று சினிமாதுரையில் யாரும் எதுவும் சொன்ன மாதிரி தெரியவில்லையே. நான் தான் படிக்கவில்லையோ.
சகாதேவன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அமெரிக்கா இந்தியாவுக்கு இந்தப் படம் மூலம் எங்க எலும்பு போட்டது.இது ஒரு இந்தியத் தயாரிப்பல்ல.
இந்தியக் கதை. இந்தியக் கதையானதால் இந்தியர்கள் நடித்துள்ளார்கள். கதைக் களம் இந்தியா அதனால்
இந்தியாவிலே படமாக்கப்பட்டுள்ளது. அதனால் இந்திய தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
அதனால் இது ஒரு இந்தியத் தயாரிப்பு ஆகிவிடாது.
இது ஒரு அமெரிக்கப் பரிசு; உங்கள் பாசையில் அங்கீகாரம் என்றாலும்;உங்களுக்கு அது திரைப்படம் சம்பந்தமான ஒரு உலகம் கவனிக்கும் விருது என்பதில் மாற்றுக் கருத்து இராது என நம்புகிறேன்.
அந்த உலகம் கவனிக்கும் விருதில் இப்போ நம்மவர்களும் பங்கேற்கிறார்கள். என்பதை நாம் ஏன்
பெருமைப்படக் கூடாது.
அரசாங்கம் ஏன் பாராட்டக் கூடாது எனக் கருதுகிறீர்கள்.
நேற்று என் சக வேலைத் தல நண்பர் இப்படத்தை பார்த்துவிட்டு; என்னிடம் நல்ல படம் எனக் கூறினார். அவருக்கு நான் கூறியது "இதற்கு இசை அமைத்து பரிசு வாங்கியவர் தாய்மொழியும்;என் தாய்மொழியும் ஒன்று". அப்போ அவர் ஆச்சரியமாக அப்படியா? என்று கேட்டபோது; மொழியால்
நாம் ஒன்றுபட்டதைக் விளக்கினேன். அவருக்கு இந்திய- இலங்கைப் பூகோள ;மொழி பற்றித் தெரியாது.
இது அற்ப சந்தோசம் என நீங்கள் அருவருக்கலாம். அப்படி நான் கூறியது கேவலம் எனக் கருதுகிறீர்களா??
கருதினாலும் யான் எதுவும் செய்யதற்கில்லை.
அடுத்து உலக அழகிப் போட்டியையும்; இதையும் ஏன் குழப்புகிறீர்கள். அதில் வியாபார நோக்கம் உண்டு. இதில் ஆக்கிரமிப்பு எப்படி வருகிறது.அமெரிக்காவை வெறுப்பதற்காக எல்லாவற்றிற்கும் வெறுப்பதா?
இன்று கீழத்தேய நாடுகள்; ஏன் ? அமெரிக்க விசாவுக்கு ஏங்குகிறார்கள். அந்த நிலையில் நம் நாடுகளை
ஆக்கியது யார்? அமெரிக்க தொழில் வாய்ப்பை வேண்டாம் எனும் தைரியம் நமக்கு இருக்கா??
அமெரிக்காவில் வெளிநாட்டவரைப் பணி நீக்கம் செய்யப்போகிறோம் என அறிவித்தால்; இனிமேல் அமெரிக்க வேலைகள் உள்நாட்டவருக்கே என அறிவித்தால் ஏன்.? நாம் சற்றுப் பதறுகிறோம்.
நான் விரிந்த அறிவில்லாத; தமிழ் மாத்திரம் வாசிப்பவன் புரிய வைக்கவும்.
எனக்கு நம்மையே நாம் ஏமாற்ருகிறோம் போல் உள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் ஆஸ்கார் விருது பெற்ற அந்நியத் திரைப்படத்தில் பங்கேற்ற அத்தனை இந்தியச் சகோதரர்களையும் வாழ்த்துவதுடன்; தம்பி ரகுமானை சிறப்பாகப் பெருமையுடன் வாழ்த்துகிறேன்.
எல்லாம் புகழும் இறைவனுக்கே!



ஆம்!!
கமல் சொன்னது மிகச் சரி!
ஆஸ்கார் திரைத் துறைக்கும்; ஒலிம்பிக் விளையாட்டுத் துறைக்கும் கொடுக்கப்படும் விருது.;
இவை ஒன்றல்லதான்...
கமல் சொன்னதில் நான் காணும் அர்த்தம் சரிதானே...
போங்கையா..; ஒலக நாயகன் - ஒஸ்கார் நாயகன் எனக் கூச்சலிடும் போது எங்கே போனனீங்க..

Unknown said...

ரகுமான் விருது வாங்கியதற்காக பாராட்டலாம். கமல் சொல்வது போல் ஒரு இந்தியத் தயாரிப்புக்கு வழங்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியடையலாம். இது முழுக்க முழுக்க வெளிநாட்டுப் படம். நல்ல படம்தான், ஆனால் இவ்வளவு விருதுகளுக்குத் தகுதியானதா என்பது கேள்விக்குறியது! எல்லாம் வியாபார தந்திரம்தான். உலக அழகி போட்டி போல்!! அணு ஒப்பந்தம் போல்!!

இந்தியா ஒரு மிகப் பெரிய சந்தை. அதுதான் மிக முக்கியமான காரணம் :)
என்று அழியும்/தணியும் நமது விருது பைத்தியம்??

christhunesan said...

//ஒருவருக்கு பரிசு கிடைத்தால் மனதார பாராட்ட வேண்டும்//. பாரட்டத்தான் வேண்டும் சகோதரர் சகாதேவன். ஆனால் முழுமையாக இதில் இந்தியா பெருமையடைய முடியுமா?? என்று தான் யோசிக்கவேண்டியிருக்கிறது

christhunesan said...

வாங்க சகோதரர் யோகன் உங்கள் பின்னுட்டம் வழிதவறி இங்கு வந்துவிட்டது எனகருதுகிறேன். சரிதானே?

christhunesan said...

//இந்தியா ஒரு மிகப் பெரிய சந்தை. அதுதான் மிக முக்கியமான காரணம் :)
என்று அழியும்/தணியும் நமது விருது பைத்தியம்??//
யோசிக்கவேண்டிய விசயந்தான் தஞ்சாவூராரே

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஆமாம் சகோதரரே!

"இறைவனுக்கே"- என்பதற்கு முன் உள்ள அனைத்தும் வேறு இடத்தில் வரவேண்டியதே!!. எடுத்து விட முடிந்தால் நீக்கிவிடவும். அல்லது முழுப் பின்னூட்டத்தையும் நீக்கி இதை ஏற்க்கவும்.
சிரமத்துக்கு மன்னிக்கவும்
நன்றி!!


ஆம்!!
கமல் சொன்னது மிகச் சரி!
ஆஸ்கார் திரைத் துறைக்கும்; ஒலிம்பிக் விளையாட்டுத் துறைக்கும் கொடுக்கப்படும் விருது.;
இவை ஒன்றல்லதான்...
கமல் சொன்னதில் நான் காணும் அர்த்தம் சரிதானே...
போங்கையா..; ஒலக நாயகன் - ஒஸ்கார் நாயகன் எனக் கூச்சலிடும் போது எங்கே போனனீங்க..

Unknown said...

our wishes to RAHMAN. But Everybody needs to know the reality of INDIA. May be the people in high level can say about attomic bombs to so and so. But there are thousands and thousands people are spending their day to day life as given the storey in the film. But no one
(indian) think about them, but they are talking about only RAHMAN and his award...........

Shame to india.