அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 8, 2008

படம் சொல்லும் செய்தி : No Short Cut

தன் தன் சிலுவையை எடுத்துகொண்டு என்னை பின்பற்ற சொன்னார் இயேசு. இங்கு சிலுவை என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் வரும் பாடுகளை குறிக்கும். ஆனால் எனக்கு பாடுகள் வரும்போது அதை குறுக்கு வழியில் குறுக்கு புத்தியில் அதை மேற்கொள்வேன் என்பது நமக்கு புத்திசாலிதனமாக தோன்றலாம். ஆனால் அது தேவ சித்தமாகவும் இருக்காது. முடிவில் அது ஆசிர்வாதமாகவும் இருக்காது என்பதைதான் கீழே கண்ட படங்கள் நமக்கு விளக்குகிறது
 
 
 
 
அணைவரும் தன் தன் சிலுவையை சுமந்து பரலோகத்தை நோக்கி பிரயாணம் செய்கின்றனர்.


ஒருவர் மட்டும் கணம் அதிகமாக இருப்பதாக உணர்கிறார்.

கணத்தை குறைக்க சுயத்தில் முடிவு செய்கிறார்.

குறைத்தும் விட்டார்

மீண்டும் தொடர்கிறார்

மீண்டும் அவ்வாறே நினைக்கிறார்

மீண்டும் சுயத்தில் முடிவு எடுக்கிறார்.

மீண்டும் அவ்வாரே செய்கிறார்.

தன் சுமையை (குறுக்கு வழியில்) குறைத்த சந்தோசத்தில் செல்கிறார்.

மற்றவர்களை காட்டிலும் (குறுக்குவழியில் சென்றதால்) வேகமாக முன்னேறுகிறான்

முன்னால் சென்றவன் நிற்கிறான்.(அதிர்ச்சியில்)

சிலுவையை மகிழ்ச்சியுடன் சுமந்தவர்கள் அவனை கடந்து அவன் கண்முன்பாகவே பரலோகம் செல்கின்றனர்.

தன்னால் போக முடியாமல் தவிக்கிறான்.

தன் தவற்றை உணர்ந்து கதறுகிறான்.



இப்படம் உங்களிடம் பேசியதா?
 
 

0 comments: