அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 30, 2008

விவேகானந்தரின் ஞான தீபம்

 

இந்து மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4, 1902). இவர் பின்பு சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) என பிரபலமாக அறியப்பட்டார். இந்தியாவின் பெருமை, யோகா மற்றும் வேதாந்தங்களை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.

இவர் இவ்வாறாக சொல்கிறார்.

"கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரேத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால்,எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 2; பக்கம் 453)

""மகனைப் பார்க்காதவர் தந்தையைப் பார்க்காதவராவர்"என்பது விவிலிய வேத வாக்கு. மகனைப் பார்க்காமல், தந்தையைக் காண இயலாது. மகனைக் காணாமலே தந்தையைக் காணலாம் என்பது பொருளற்ற வீண்பேச்சு; குழப்பம் மிகுந்த தெளிவில்லாதத் தத்துவம்; பகற்கனா, ஆன்ம வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டுமானால்,ஏசுவின் உருவிலே விளக்கமுற்று நிற்கும் கடவுளை மிகவும் நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள்"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 270,271)


""தீமையைத் தீமையால் எதிர்க்காதே" என்ற இயேசு நாதரின் போதனையை இந்த உலக்ம் கடைபிடிக்கவில்லை. அதனால் தான் இவ்வுலகம் இவ்வளவு தீமையுள்ளதாக இருக்கிறது".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 119)

"இந்திவாவிற்குக் கிறிஸ்தவ ஞானப்பணியாளர்கள் வேண்டும். நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவர்கள் இங்கே வந்து திரளட்டும். கிறிஸ்துவின் தூய வாழ்வின் வரலாற்றை எங்களுக்கு நன்கு எடுத்து ஓதுவீர்களாக. அவர் தந்த ஞான நன் மொழி எங்கள் சமூகத்தின் இதயத்தை ஊடுருவிப் பாயட்டும். இயேசு நாதரைப் பற்றி ஒவ்வொரு சிற்றூரின் மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்யுங்கள்".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 1; பக்கம் 128,129)

0 comments: