அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 30, 2008

தற்கொலை எதற்கும் முடிவல்ல????? வாழ்க்கை வாழ்வ‌த‌ற்கே!!!!!!

இன்றையதினம் பத்திரிக்கையை எடுத்து பார்ப்போமானால் அதில் தவறாமல் இடம்பிடிக்கும் செய்தி தற்கொலை செய்தியாகத்தான் இருக்கும். நளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுகாக இப்படிப்பட்ட தற்கொலைகள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
 
ஏன் இப்படிப்பட்ட தற்கொலைகள் அதிகரிக்கிறது என்று இதைகுறித்து கொஞ்சம் யோசித்துபார்த்தேன் வலைதளங்களிலும் இதைக்குறித்ததான செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தேன். தற்கொலை செய்துகொள்ளும் நபர் கூறும் பிரச்சனைகள் இன்று உலகில் எல்லோருக்கும் உள்ள பிரச்சனைகளாகாதான் இருக்கும் அப்படிப்பார்த்தால் உலகில் எல்லோருமே தற்கொலை செய்துகொள்ளவேண்டியது தான்.
 

 சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் தற்கொலை செய்துகொள்வதை நாம் பார்க்கிறோம். தேர்வில் தோற்றத்திற்காக, தேர்வில் காப்பி அடிக்கும்போது கையும் களவுமாக பிடிக்கப்பட்ட அவமானம் தாங்கமுடியாமல், ஹோம் வர்க் பண்ணவில்லையே என டீச்சர் திட்டினதிற்காக, காதல் தோல்வியினால் இப்படியே பலப்பல காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்கிறார்கள்

இப்படி தற்கொலைகள் செய்துகொள்வதிற்கு வயது வித்தியாசம் எதுவும் இல்லை சிறியவர் முதல் பெரியவர் வரைக்கும் ஏழை முதல் பணக்காரன் வரைக்கும், பாமரன் முதல் படித்தவன் வரைக்கும் இப்படி இதில் எந்த ஏற்றதாழ்வும் இல்லாமல் இவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.


இதைக்குறித்து ஆராய்ந்த சில ஆராய்ச்சியாளர்களின் கருத்தை அறியாலாம்.

எமில் த‌ர்க்ஹெம் : ச‌முக‌ கலாசார‌ விஷ‌யங்க‌ளில் ஒட்டுத‌ல் இல்லாத‌வ‌ர்க‌ளிடையே த‌ற்கொலை அதிக‌மாக‌ இருப்ப‌தாக‌ சொல்லியுள்ளார்

சிக்ம‌ண்ட் பிராய்ட் : விரும்பிய‌‌வைக‌ளின் இரு வேறுநிலைக் குழ‌ப்ப‌ங்க‌ளின் விளைவாக‌ தாக்குத‌ல் ம‌ற்றும் கோப‌ உண‌ர்வுக‌ளைத் த‌ன்மேல் திருப்பிக்கொள்வ‌த‌ன் வெளிப்பாடுதான் த‌ற்கொலை என்கிறார்.

கார‌ண‌ங்க‌ள்:
 
குடிப்ப‌ழ‌க்க‌ம்:
த‌ற்கொலை செய்ப‌வ‌ர்க‌ளில் 5ல் ஒருவ‌ர் குடிப்ப‌ழ‌க்க‌திற்கு அடிமையான‌வாராக‌ உள்ளார். எனவே குடிப்ப‌ழ‌க்க‌த்திற்கும்  த‌ற்கொலைக்கும் நெருங்கிய‌ தொட‌ர்புள்ள‌து.

ம‌ன‌வருத்த‌ம்:
ம‌ன‌வ‌ருத்த‌ம் உள்ள‌வ‌ர்க‌ளின் உட‌லில் ஹைட்ராக் இண்டோல் அசிடிக் அமில‌த்தின் அள‌வு குறையும் போதும் த‌ற்கொலை எண்ண‌ங்க‌ள் அதிக‌மாக‌ தோன்றுகிற‌து. இதினால் த‌ற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணீக்கை அதிகம்

போதை ம‌ருந்துக‌ள்:
இதுவும் ஒரு கார‌ண‌மாக‌ க‌ருதுகின்ற‌ன‌ர். த‌ங்க‌ளுக்கு தேவைப்ப‌டும்நேர‌த்தில் போதை ம‌ருந்துக‌ள் கிடைக்காத‌ போது அது த‌ற்கொலைக்கு நேராக‌ ந‌ட‌த்துகிற‌து.

பொதுவான‌ கார‌ணிக‌ள்:
ம‌ன‌தைரிய‌ம் இல்லாமை, தாழ்வு ம‌ன‌ப்பான்மை, எதிர்கால‌த்தில் ந‌ம்பிக்கையில்லாமை, ம‌றுஜென்ம‌ ந‌ம்பிக்கை, பிற‌ர் சொல்லும் காரிய‌ங்க‌ளை அப்ப‌டியே ந‌ம்புவ‌து, த‌னிமையை உண‌ர்த‌ல், வாழ்க்கையில் ஒரு வெறுப்பு இப்ப‌டி ப‌ல‌கார‌ண‌ங்க‌ள் உண்டு
 
தீர்வு :
தற்கொலை செய்யும் மனநிலையுள்ளவர்கள் எதையும் எதிர்ம‌றையாக‌ பேசுவார்க‌ள். அடிக்க‌டி த‌ற்கொலையைப் ப‌ற்றி பேசுவார்க‌ள். அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ந‌ல்ல‌ ஆலோச‌னை சொல்லுங்க‌ள். முடிந்தால் ந‌ல்ல‌ ம‌ன‌ந‌ல‌ ம‌ருத்துவ‌ர்க‌ளிட‌ம் அழைத்துசெல்லுங்க‌ள்.

ந‌ம்பிக்கையுண்டும் புத்தக‌ங்க‌ளை ப‌டிக்க‌ சொல்லுங்க‌ள்..

த‌ற்கொலையினால் அல்ல‌து ஒருவ‌ரின் இழ‌ப்பினால் அவ‌ரை சார்ந்த‌ எத்த‌னைபேர் துன்ப‌ங்க‌ளை அனுப‌விக்கிறார்க‌ள் என்று இலைம‌றை காயாக‌ எடுத்து இய‌ம்புங்க‌ள்.

வாழ்க்கை வாழ்வ‌த‌ற்கே. இருப்ப‌து ஒரே வாழ்வு. ம‌றுஜென்ம‌மென்று ஒன்று கிடையாது என‌ கூறுங்க‌ள். இருக்கும் இந்த‌ வாழ்க்கையில் நம்மால் இய‌ன்ற‌ உத‌விக‌ளை இந்த‌ ச‌முதாய‌த்துக்கு செய்ய‌வேண்டும் என‌ உற்சாக‌ப்ப‌டுத்துங்க‌ள்.

பிர‌ச்ச‌னைக‌ளை க‌ண்டு ஒடுவ‌தை விட‌ எதிர் நீச்ச‌ல் போட்டு அதை எதிர் கொள்வ‌தே வாழ்க்கை என‌ உரைத்திடுவீர்.

தற்கொலைக்கு நேராக போய்கொண்டிருக்கிற நம் சகோதரர்களை சகோதரிகளை வாழ வைப்போம். நன்றி
 
வாழ்க்கை வாழ்வ‌த‌ற்கே.....   வாழ்க்கை வாழ்வ‌த‌ற்கே....  வாழ்க்கை வாழ்வ‌த‌ற்கே....
 
 

இறுதியில் ஒரு ந‌ம்பிக்கையூட்டும் ஒரு வேத‌ வார்த்தை :

மத்தேயு 6:27 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

0 comments: