வினையெலாம் தொலைய வேண்டில் வீட்டின்பம் அடையவேண்டில்
மகா வித்வான் H.A.கிருஷ்ண பிள்ளை அவர்கள் (H.A. Krishna Pillai 1827-1900) கிறிஸ்து குறித்து இரட்சன்ய யாத்திரிகம் (Iratcaniya Yattirikam ) எனும் நூலை எழுதியுள்ளார். அதிலிருந்து சில வரிகள்
கன்னி பாலனாய்க் காசினி தனில் அவதரித்து
மன்னு ஜீவகோ டிகளெலாம் வான்கதி மருவத்
தன்னு யிர்ப் பரித் தியாகமுஞ் சிலுவையிற் றந்த
என்னு பாசனா மூர்த்தியை அஞ்சலித் திடுவோம்.
முனைவனை அறிய வேண்டில் முற்றும் நீ இயற்றும் பாவ
வினையெலாம் தொலைய வேண்டில் வீட்டின்பம் அடையவேண்டில்
இனிவரும் தேவ கோபம் எரிந்திடா திருக்க வேண்டில்
மனுவுரு ஆய யேசு மலரடி வணங்காய் நெஞ்சே.
தனியிடத் திருந்து பாவச் சழக்கினைக் கருதி,ஆவி
அனுமதி பெற்றுத் தேவ அன்பினை இதயத் துன்னி
கனியும்உள் ளன்பி நோடு கண்கணீர் ததும்ப நின்று
மனுஉரு ஆய யேசு மலரடி வணங்காய் நெஞ்சே.
தனுகரணங்கள் ஓய்ந்து தளர்ந்து மூச் சொடுங்குங் காலை
மனைமகார் துணையா வாரோ மருங்கிருந் தழுவதல்லால்
அனவர தமும் உனக்கோர் ஆம் துணை விரும்பில் இன்னே
மனுஉரு ஆய யேசு மலரடி வணங்காய் நெஞ்சே.
உலகம் மகிழ்ந்தீடேறப் பரலோக வாசிகளுக் குவகையேற,
அலகை உளந் திகில் ஏற, அகண்டபரி பூரணனார் அருள் மெய்வாக்கு
விலகிலதாய் நிறைவேறத் துதியேற நர உருவாய் விளங்கி அன்பால்
சிலுவைமிசை ஏறிய மெய்ஞ் ஞான சூரியனடியைச் சிந்தை செய்வோம்.
மல்கியா 4:2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
Malachi 4:2 But unto you that fear my name shall the Sun of righteousness arise with healing in his wings; and ye shall go forth, and grow up as calves of the stall.
0 comments:
Post a Comment