அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

April 30, 2009

இந்த தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரிக்கலாமா?

இந்த தேர்தலில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. யாரை ஆதரிக்கலாம்? யாருக்கு ஓட்டு போடலாம் என்று ஒரு குழப்பம் உள்ளது.
அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை பொருத்தவரை இந்த தேர்தலில் சில தெளிவான உறுதியான தீர்மானங்களை எடுத்துள்ளார் . அதில் முக்கியமானது இலங்கையில் தனி ஈழம். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் அமைச்சர்களுக்கு கடுமையான தனது எதிர்ப்பை தெரிவித்து தனி ஈழம் அமைந்தே தீரும். இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கு தனி ஈழம் அமைத்தே தீருவோம் என உறுதியாக சொல்லியுள்ளார்.
எல்லா அரசியல் வாதிகளும் சொல்லுவார்கள் ஆனால் அதை செயல்படுத்துவார்களா என்பது சந்தேகமே... ஆனால் எல்லா அரசியல் தலைவர்களும் தேர்தல் நேரத்தில் அநேக வாக்குறுதிகள் தருகிறார்கள். தந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ஆகவே ஏதாவது ஒன்றை நாம் ஏற்றுகொள்ளதானே வேண்டும்.
இன்னும் ஒரு வாக்குறுதியை தெளிவாக‌ கூற‌வேண்டும். அதாவ‌து தேர்த‌லுக்கு பின் ம‌த‌வாத‌ ச‌க்திக‌ளுட‌ன் கூட்ட‌ணி சேர‌க்கூடாது என்று. ஏற்க‌ன‌வே மோடியுட‌ன் அம்மையார் வைத்துள்ள‌ அர‌சிய‌ல் தொட‌ர்பை கூட்ட‌ணி அமைக்க‌ ப‌ய‌ன்படுத்த‌ கூடாது என்ப‌தே என் போன்றோர் விருப்ப‌ம்.
எப்ப‌டியும் மே 13க்கு பிற‌கு இந்த‌ குழ‌ப்ப‌ம் இருக்காது. அதுவ‌ரை ஒரே குழ‌ப்ப‌ம்தான்.. பார்ப்போம். தெளிவான‌ முடிவெடுத்த‌வ‌ர்க‌ளுக்கோ என் வாழ்த்துக்க‌ள்

0 comments: