அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label மக்கள். Show all posts
Showing posts with label மக்கள். Show all posts

May 12, 2009

இந்தியருக்கும் ஈழதமிழருக்கும் நல் அரசாக அமையட்டும் புதிய அரசு

தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கட்டும். ஏனோ தனோ என்று இருந்துவிடாமல் பொருப்பை உணர்ந்தவர்களாக நமது வாக்குரிமையை நேரமே சென்று வாக்களிப்போம். நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்ப‌டட்டும். ந‌ல்ல‌ திட்ட‌ங்க‌ள் தீட்டுப‌வ‌ர்க‌ள் ( நாட்டுக்காக‌) நாடாள‌ம‌ன்ற‌த்துக்கு வ‌ர‌ட்டும். ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வு இல்லாம‌ல் அமைதியாக‌ ந‌ட‌க்க‌ட்டும் ந‌ம‌து பாராள‌ம‌ன்ற‌ம். நாள்தோறும் செத்துகொண்டிருக்கும் ந‌ம் அண்டை நாட்டில் வாழும் த‌மிழ‌ர்க‌ள் வாழ்வு ம‌ல‌ர‌ உரிமைக‌ள் காக்க‌ப்ப‌ட‌ எல்லா உத‌விக‌ளும் கிடைக்க‌ செய்வ‌தே புதிய‌தாக‌ அமையும் அர‌சின் த‌லையாய‌ ப‌ணியாக‌ அமைய‌ட்டும். வெறும் வெட்டி பேச்சு பேசி கால‌த்தை க‌ட‌த்துவ‌தும் த‌ந்தி அனுப்பி த‌பால் துறைக்குக்கு ம‌ட்டும் இலாப‌த்தை த‌ந்த‌தும் உண்ணாவிர‌த‌ம், ப‌ந்த் பொன்ற‌வை ந‌ட‌த்தி ந‌ம் ம‌க்க‌ளுக்கும் இன்ன‌ல் த‌ரும் அர‌சாக‌ அமையால் உறுதியான‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் அர‌சாக‌ அமையா வாழ்த்துகிறோம் அதுவே என‌து இறைவேண்ட‌லாக‌வும் இருக்கிற‌து..

February 6, 2009

சினிமாதனம் இல்லாமல் ஒரு டிவி சேனலை நடத்தமுடியுமா?????

இந்த தொலைக்காட்சி சேனலில் காதலர்கள் மரத்தை சுற்றி சுற்றி ஓடும் சினிமா பாடல்கள் இல்லை. காக்கவலிப்பு நடனங்கள் இல்லை. வீட்டு நிம்மதியை கெடுக்கும் பெண்களை செயற்கையாக அழவைக்கும் நீண்ட சீரியல்கள் இல்லை. மாறாக தமிழ் உணர்வு ஊட்டக்கூடிய நிகழ்ச்சிகள். தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கும் விலையாட்டு. தமிழ் கிராமிய கலாச்சாரத்த்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நிகழ்ச்சிகள். தமிழில் தவறலில்லாமல் பேச வைக்கும் நிகழ்ச்சிகள் இப்படி சொல்லிகொண்டே போகலாம் அத்தனை நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பும் அந்த சேனல்தான் மக்கள் தொலைக்காட்சி. (இது அந்த சேனலுக்கான விளம்பரம் இல்லை)

வர்த்தக ரீதியாக வெற்றியடைந்ததாக தெரியவில்லை. ஆனாலும் பயனுள்ள நிகழ்ச்சிகளைத்தான் அதிகமாக ஒளிப்பரப்பு செய்கிறார்கள்.

நாங்கள் தமிழை வளர்க்கிறோம் என்று சொன்னவர்களெல்லாம் தங்களுக்கு வசதி வாய்ப்புக்கள் கிடைத்தபோது அதை தமிழுக்காக செலவிட்டது மாதிரி தெரியவில்லை. மாறாக தங்களை அரசியலில் தக்கவைக்கவே அது பயன்பட்டு வருகிறது. வேண்டுமானால் இந்த மக்கள் தொலைக்காட்சியில் வரும் ஒரு சில தமிழ் வார்த்தைகளை தற்சமயம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். உதாராணமாக லைவ் என்பதை நேரலை என்றும் இன்னும் பிற தமிழ் சொற்களை காப்பியடிக்கிறார்களேயொழிய முழுமையான தமிழ் வளர்க்கும் நிகழ்ச்சிகளை அளிக்க யாரும் தயாரில்லை. காரணம் வியாபாரம் போய் விடும் என்பதுதான். அப்போ தமிழ் தமிழ் என்று முழங்கியதெல்லாம்........ நானொன்றும் சொல்ல விரும்பவில்லை.


இருந்தாலும் தமிழை வளர்க்க ஒரு சேனல் என்றால் தமிழ் நாட்டினர் அனைவரும் வரவேற்கவேண்டுமென விரும்புகிறேன்.

இறைவ‌ன் தொட‌ர்ந்து இந்த‌ சேன‌லை ந‌ட‌த்த‌ அத‌ன் நிர்வாக‌த்தின‌ருக்கு பெல‌ன் த‌ர‌வேண்டுமென‌ வாஞ்சிக்கிறேன்.

கிறிஸ்துநேச‌ன்

இதோ அவ‌ர்க‌ளை தொட‌ : http://www.makkal.tv/