அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label காவல்துறை. Show all posts
Showing posts with label காவல்துறை. Show all posts

September 10, 2012

மக்கள் சேவையாளரை மதியுங்கள்

கடந்த வியாழன் ஒடிசா தலை நகர் புவனேஸ்வரில் காங்கிரஸார் நடந்திய ஊர்வலம் கலவரத்தில் முடிந்தது.. ஆனால் இறுதியில் அடிப்பட்டது யாரென்றால் காவல் துறையை சார்ந்த ஒரு பெண் காவலர். அவர் என்ன தவறு செய்தார்..தன் கடமையை செய்தது தவறா... கட்சிகாரர்கள் அரசின் கொள்கைகளை தான் எதிர்க்கவேண்டுமெ ஒழிய அரசு ஊழியர்களை அல்ல.. அவர்கள் தங்களுக்கு என்ன கட்டளை இடுகிறார்களோ அதை கடமை உணர்வோடு செய்வபர்கள்... அவர்களை தாக்குவது என்பது நம்மை நாமே தாக்குவதுபோலாகும்.. இதனால் சொல்ல வந்த விஷயமும் எடுபடாமல் போய்விடும்.. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தில் யாராவது இது போன்ற அரசாங்க பணியில் இருப்பார்களானால் அவர்களை தாக்க மனது வருமா?? சிந்தியுங்கள்... அதிலும் காவல் துறை என்பது மக்களுக்கு சேவை செய்யும் மற்றும் பாதுகாப்பு தரும் ஒரு அமைப்பு.. அவர்களூடைய தொழிலுக்கு நாம் மரியாதை செய்யவேண்டும்.. 24 மணி நேரமும் அவர்களுக்கு பணியுண்டு. .. அவர்கள் தங்களை கடமைகளை சரியாக செய்ய அனுமதித்தால் தான் அரசாங்கத்தின் அனைத்து சக்கரமும் சரியாக சூழலும்.. ...இனியாவது அவர்களின் சேவைக்கு மதிப்பளிப்போம்.. இப்படிப்பட்ட சம்பவங்கள் இனி நடக்காவண்ணம் உறுதி ஏற்போம்..

November 13, 2008

சட்டம் பயிலும் மாணவர்களும்..சட்டத்தை காப்பாற்றும் காவல்துறையும்.. சட்டத்தை மீறினார்கள்..

இந்த வீடியோவை பாருங்கள். இவர்கள்தான் இந்தியாவின் எதிர்கால தூண்களா வேதனை... வெட்கம்.. சென்னை அம்பேத்கார் சட்ட கல்லூரியில் நேற்று அரகேறிய கோர சம்பவம்தான் இது.. கல்லூரி மாணவர்களுக்கிடைய ஏற்பட்ட கோஷ்டி மோதலே இதற்கு காரணமாம். அதாவது தேவர் ஜெயந்தி விழா அழைப்பிதலில் அம்பேத்கார் பெயர் இடம்பெறவில்லையாம். இதற்காக நண்பர்களாக பழகவேண்டிய கல்லூரி வாழ்க்கையில் கோஷ்டிகளாக பிரிந்து தங்களுக்குள்ளே கொலைவெறிதாக்குதல் நடத்தியுள்ளனர். பாடபுத்தகத்தையும் சட்டபுத்தகத்தையும் கையிலேந்தவேண்டிய இந்த மாணவர்கள் தங்கள் கைகளில் ஆயுதமேந்தியது கொடுமையிலும் கொடுமை. இதிலும் கொடுமை சட்டத்தை காப்பாற்ற இரவு பகல் பாராது உழைக்கும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே இது அரங்கேறியுள்ளதை என்னவென்று சொல்ல..
நாங்க‌ள் புகார்ம‌னுவை பெற்றால் தான் ந‌ட‌வ‌டிக்கை எடுப்போம் அதுவ‌ரை எதுந‌ட‌ந்தாலும் நாங்க‌ள் க‌ண்டுகொள்ள‌மாட்டோம் என்று சொல்லுவ‌து எந்த‌ வ‌கையில் நியாய‌ம்...

இறைவா எங்க‌ள் மாண‌வ‌ர்க‌ளை நேர்வ‌ழிப‌டுத்துங்க‌.. காவ‌ல்துறையினரின் பொறுப்பை உண‌ர்த்துங்க‌...

கிறிஸ்துநேச‌ன்