அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label இனவெறி. Show all posts
Showing posts with label இனவெறி. Show all posts

February 3, 2009

சிங்கள இராணுவத்தின் வெறிச்செயல். ஆஸ்பத்திரி மீது தாக்குதல்

ஐயோ என் தம்பி ஐயோ என் தம்பி போயிட்டியடா.. கண்ணுதுறந்து பாருடா.. இதுதான் அந்த ஆஸ்பத்திரியில் கேட்கும் அழுகுரல்.






சிங்கள இனவெறி பிடித்த இராணுவத்தினர் எப்படியும் தமிழ் மக்களை அழித்துவிடுவதில் குறியாக இருப்பதுபோல் தெரிகிறது. அப்பாவி பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த மருத்துவமனைமீதே தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த கூடாது என உலக இராணுவ நீயதி இருக்கும்போது எதைக்குறித்தும் கவலைப்படாமல் தாக்குதல் நடத்திருப்பதை பார்க்கும்போது அப்பாவி தமிழர்களை அழிப்பதுதான் ஒரே குறியாக இருப்பது போல் தெரிகிறது.

உலகத்தின் பார்வை இலங்கைமீது விரைவில் பட வாஞ்சிக்கிறேன். உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்தவேண்டுமெனவும் வாஞ்சிக்கிறேன்

கிறிஸ்துநேசன்