அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

September 26, 2008

ஹிதேந்திரன் : 'இதயத்தை கொள்ளை கொள்பவன்'!

 
ஹிதேந்திரன் என்ற பெயருக்கு என்ன அர்த்தம்'இதயத்தை கொள்ளை கொள்பவன்'!
ஹிதேந்திரன் என்ற பெயர் கடந்த இரண்டு நாட்களாக அனைவரின் வாயிலும் உச்சரிக்கும் ஒரு பெயராக இருக்கிறது. கடந்த சனிக்கிழமையன்று நடந்த சாலைவிபத்தில் மூளைசாவு அடைந்து இனி காப்பாற்றமுடியாது என்ற நிலைவந்த போது அவனுடைய பெற்றோர் எடுத்த முடிவுதான் இன்று அனைவரையும் பேச வைத்திருக்கிறது. ஆம் அவனுடைய உடல் உறுப்புகளை தானம் செய்வது என்ற ஒரு சிறந்த முடிவை எடுத்து இன்று அநேகருக்கு ஒரு எடுத்துகாட்டாக விளங்குகின்றனர். ஒரு வேளை அவர்கள் மருத்துவர்களாக இருப்பதினால் தனது மகனின் சூழ்நிலையை அறிந்திருப்பார்கள். அதினால் ஒரு உறுதியான முடிவுக்கு வரமுடிந்திருக்கும். சாதாரண பெற்றோராக இருப்பின் தனது மகனை இழந்தது மாத்திரமல்லாமல் மருத்துவமனையின் (இறந்த மகனை கடைசி வரை மகன் உயிருக்காக காப்பாற்றி கொண்டு இருப்பதாக சொல்லி) ஒரு பெரிய பில்லை கட்டமுடியாமல் மயங்கியும் விழுந்திருப்பார்கள்.

 


இங்கு காவ‌ல் துறையின் துரித‌ ந‌ட‌வ‌டிக்கையின் கார‌ண‌மாக‌ போக்குவ‌ர‌த்து சீர் செய்ய‌ப்ப‌ட்டு 20 நிமிட‌த்தில் ஹிதேந்திரனின் இத‌ய‌த்தை அபிராமி என்ற‌ சிறுமிக்கு மாற்றமுடிந்த‌து. இத‌ற்கு உறுதுணையாக‌ இருந்த‌ சென்னை கூடுதல் கமிஷனர் (டிராபிக்) சுனில்குமார் அவ‌ர்க‌ளுக்கும் காரை ஓட்டிய கான்ஸ்டபிள் மோகன் அவ‌ர்க‌ளுக்கும் ந‌ம் ந‌ன்றிக‌ளை சொல்வ‌துட‌ன் அரசாங்க‌மும் அவ‌ர்க‌ளுக்கு விருதினை வ‌ழ‌ங்கி கெள‌வ‌ர‌ப்ப‌டுத்த‌வேண்டும். மேலும் இத‌ற்கு கார‌ண‌மாக‌ விள‌ங்கிய‌ ஹிதேந்திரனின் பெற்றோருக்கும் ந‌ம‌து பார‌ட்டுக‌ளையும் அவ‌ர்க‌ளின் ம‌க‌னின் ம‌றைவுக்கு க‌ண்ணீர் அஞ்ச‌லியையும் தெரிவித்துகொள்கிறோம். இறைவ‌னின் ஆறுத‌ல் அவ‌ர்க‌ளுக்கு உண்டாகுவ‌தாக‌. ஆமென்.

 கிறிஸ்துநேசன்

0 comments: