அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label அல்லாஹ். Show all posts
Showing posts with label அல்லாஹ். Show all posts

July 29, 2012

ரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா?

ரமளான் நாள் 9 - இஸ்லாமியர்களின் நோன்பு இயேசுவின் நோன்பா?



[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: 
கடிதம் 1(http://isakoran.blogspot.in/2012/07/1.html),
கடிதம் 2, http://isakoran.blogspot.in/2012/07/2_21.html
கடிதம் 3, http://isakoran.blogspot.in/2012/07/3.html
கடிதம் 4, http://isakoran.blogspot.in/2012/07/4_23.html
கடிதம் 5, http://isakoran.blogspot.in/2012/07/5.html
கடிதம் 6,  http://isakoran.blogspot.in/2012/07/6.html

கடிதம் 7, http://isakoran.blogspot.in/2012/07/7.html
கடிதம் 8 http://isakoran.blogspot.in/2012/07/8.html

அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நீ ஒரு அருமையான கடிதத்தை எழுதியிருந்தாய். பைபிளின் வசனங்களைமேற்கோள் காட்டி கடிதம் எழுதினாய், அதற்காக மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

என்னுடைய முதல் கடித்தத்தில் நான் முன்வைத்த விவரத்திற்கு நீ பதிலைஎழுதினாய், அதாவது இஸ்லாமியர்களின் நோன்பு என்பது ஏதோ பழங்குடிமக்களின் சடங்காச்சரமல்ல, அது இஸ்லாமுக்கு முன்பு வாழ்ந்த மக்களின்வழக்கமல்ல, அது இயேசு பின்பற்றிய நோன்பு, யூதர்கள் பின்பற்றிய நோன்புஎன்றுச் சொல்லி பதில் எழுதியிருந்தாய். அதற்காக, கீழ்கண்ட மூன்று பைபிளின்வசனங்களை மேற்கோள் காட்டியிருந்தாய்.

இயேசு 40 நாட்கள் நோன்பு (உபசாவம்) இருந்தார்: மத்தேயு 4:2 அவர் இரவும்பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

இவ்விதமான பிசாசு உபவாசத்திலும்,ஜெபத்தினாலுமே தவிர போகாது –மத்தேயு 17:21 இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றிமற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

நோன்பு இருக்கும் போது மாயக்காரரைப்போல இருக்கவேண்டாம் என்றுஇயேசு கூறிய அறிவுரை: – மத்தேயு 6:16 நீங்கள் உபவாசிக்கும்போது,மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதைமனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள்தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

17 நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல்,அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்குஎண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.

18 அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப்பலனளிப்பார்.

உன்னுடைய பதிலுக்காக மிக்க நன்றி, ஆனால் மேற்கண்ட வசனங்களை காட்டி நீஎடுத்த முடிவு தவறானதாகும், அதாவது இஸ்லாமிய நோன்பும், பைபிளின்நோன்பும் ஒன்று தான் என்று நீ நினைத்துக்கொண்டாய். மேலோட்டமாகவசனங்களை நாம் பார்த்தால், இரண்டும் ஒன்று போல காட்சி அளிக்கும், ஆனால்,சிறிது ஆய்வு செய்தோமானால் அனேக வித்தியாசங்கள் காணப்படும். நீமேற்கோள் காட்டிய வசனங்களிலிருந்தே உனக்கு நான் சில விவரங்களைவிளக்குகிறேன்.

இஸ்லாமிய நோன்பிற்கும், கிறிஸ்தவ நோன்பிற்கும் இடையே இருக்கும்வித்தியாசங்கள்:

1) இஸ்லாமிய நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒரு கடமையாகும்.அதை தகுந்த காரணங்கள் இல்லாமல் மீறுவது இஸ்லாமிய சட்டத்தின் படிகுற்றமாகும். ஆனால், கிறிஸ்தவத்தில் நோன்பு (உபவாசம்) என்பதுநிச்சயமாக கடைபிடிக்கவேண்டிய கடமையல்ல. நம்முடைய தேவையைபொருத்து நாம் கடைபிடிக்கலாம். பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒரு ஆபத்து வந்தாலோ, யாராவது மரித்துவிட்டாலோ யூதர்கள் உபவாசம் இருப்பார்கள். யூதர்களுக்கு மோசேயின் மூலமாக ஒரு குறிப்பிட்ட நாளில் உபவாசம் இருக்கும்படி கூறப்பட்டுள்ளது.

2) இஸ்லாமிய நோன்பு என்பது அதிகாலை ஆரம்பித்து, சூரியன் அஸ்தமிக்கும்வரை தொடருகிறது, ஆனால், கிறிஸ்தவ உபவாசம் என்பது நாள்முழுவதும் தொடரும். இத்தனை மணிக்கு ஆரம்பித்து, இத்தனை மணிக்குமுடிக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லை. பழைய மற்றும் புதியஏற்பாட்டில் நாள் முழுவதும் உபவாசம் இருந்ததாக அனேகஎடுத்துக்காட்டுகளை காணலாம். இதுமட்டுமல்லாமல், யூதர்கள் தனிப்பட்ட ஒரு நாள் உபவாசம் இருக்கும் போது, ஒரு நாளின் மாலையில் ஆரம்பித்து மறுநாள் மாலைவரை இருப்பார்கள் (முழூ நாள்).

3) இஸ்லாமில் வருடத்திற்கு ஒரு முறை ரமளான் மாதத்தில் 30 நாட்கள்நோன்பு இருக்கவேண்டும் என்பது கட்டளை, ஆனால், கிறிஸ்தவத்திலேவருடத்தின் இந்த குறிப்பிட்ட மாதம் இத்தனை நாட்கள் நோன்புஇருக்கவேண்டும் என்ற கட்டளையில்லை. அவரவருக்கு விருப்பமானநாட்களில், விருப்பமான எண்ணிக்கையில் உபவாசம் இருப்பார்கள்.

4) இஸ்லாமிய நோன்பில், அதிகாலையில் எழுந்திருந்து, சாப்பிடுவார்கள்,கிறிஸ்தவத்திலே இப்படி அதிகாலையில் எழுந்து சாப்பிடும்கட்டளையில்லை.

5) முக்கியமாக, இஸ்லாமிலே ஒரு குறிப்பிட்ட மாதம் ஒதுக்கி ரமளான்நோன்பு இருப்பதினால், எல்லாருக்கும் இவர் நோன்பு இருக்கிறார் என்பதுதெரியவரும். ஆனால், கிறிஸ்தவத்தில் ஒருவன் உபவாசம் இருக்கிறேன்என்று சொன்னால் தவிர வெளியே தெரிய வழியில்லை.இஸ்லாமியர்களின் ரமளான் நோன்பு மத்தேயு 6ம் அதிகாரத்தில் இயேசுசொன்ன அறிவுரைக்கு எதிராக இருக்கிறது. அதாவது வெளிப்படையானஒன்றாக இருக்கிறது.

6) இஸ்லாமிய ரமளான் நோன்பு என்பது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றாகஇருப்பதினால், ஒருவேளை நோன்பு வைக்கமுடியாதவர்கள் அதற்கானபரிகாரங்கள் செய்யவேண்டும். ஆனால், கிறிஸ்தவ உபவாசத்தில்இப்படிப்பட்ட பரிகாரங்கள் ஒன்றுமில்லை.

7) ரமளான் மாதம் நோன்பு என்றுச் சொல்கிறீர்களே தவிர, மீதமுள்ளமாதங்களில் உணவுக்கு செலவாகும் பணத்தை விட ரமளான் மாதத்தில்அதிகமாக செலவாகும். அதாவது உணவு பணடங்களின் விற்பனையும்இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆகிறது. ஏதோஅதிகாலையிலிருந்து மாலைவரை நோன்பு இருக்கிறார்கள், மீதமுள்ள பாதிநாள் நன்றாக சாப்பிடுகிறார்கள். இப்படி பாதி நாள் நன்றாக சாப்பிடுவதைநான் தவறு என்றுச் சொல்லவில்லை, ஆனால், இப்படிப்பட்ட வழக்கங்கள்கிறிஸ்தவத்தில் இல்லை என்றுச் சொல்கிறேன், அவ்வளவு தான்.

8) புகாரி ஹதீஸில் ”ரமளான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், கிறிஸ்தவத்தில் உபவாசம் இருப்பதினால் நம்முடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற கோட்பாடு இல்லை. (புகாரி பாகம் 2, அத்தியாயம் 30,எண் 1901). இயேசுக் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து, நம்முடைய பாவங்களை அவர் சிலுவையில் சுமந்து தீர்த்தர் என்பதை நம்பி, மேற்கொண்டு பாவமில்லாத வாழ்க்கையை வாழ நம்மை ஒப்புக்கொடுப்பதினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

இஸ்லாமிய நோன்பிற்கு, கிறிஸ்தவ உபவாசத்திற்கும் இடையே இருக்கும்வித்தியாசத்தை கண்டாய், ஆனால், இஸ்லாமிய நோன்பிற்கும், சேபியன்கள்என்ற ஜனங்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை காண்போமானால்,உனக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த சேபியன்கள் ரமளான் மாதத்தில் நோன்புஇருப்பார்கள், காபாவை மதிப்போடு தெய்வீகமாக கருதுவார்கள் மற்றும் தாங்கள்தொழுதுக்கொள்ளும் போது காபாவை நோக்கிய தொழுவார்கள். இவர்களைப்பற்றி குர்-ஆனில் குறிப்பு உண்டு, இவர்களை நம்பிக்கையாளர்களின் பட்டியலில்குர்-ஆன் சேர்த்து பேசுகிறது (குர்-ஆன் 2:62, 5:69 & 22:17 பார்க்க http://answering-islam.org/Silas/pagansources.htm)
தம்பி, இஸ்லாமிய நோன்பும், பைபிளின் நோன்பும் ஒன்றல்ல. சேபியன்கள்பின்பற்றிய பழக்கங்களை, மத சடங்காச்சாரங்களை ஓர் இறைக்கொள்கை என்றுச்சொல்லிக்கொள்கின்ற இஸ்லாமில் முஹம்மது புகுத்தியுள்ளார். கிறிஸ்தவமற்றும் யூதர்களை குறிப்பிடும் போது குர்-ஆன் மூன்று இடங்களில்சேபியன்களையும் குறிப்பிடுகிறது. இஸ்லாம் ஓர் இறைக்கொள்கை என்றுசொல்லிக்கொண்டாலும், அதில் அனேக பல தெய்வ வழிபாட்டு மக்களின்பழங்கங்கள் உள்ளன என்பது திண்ணம். இதுமட்டுமல்ல, அஷூரா நாள் நோன்பு கூட யூதர்கள் கடைபிடிக்கிறார்கள் என்பதால் முஹம்மது கடைபிடிக்க ஆரம்பித்தார். ரமளான் மாத நோம்பு கடமையாக்கப்பட்டதும் இந்த அஷூரா நோன்பு தளர்த்தப்பட்டது.

தம்பி, நீ எழுதிய விவரங்கள் தவறானதாகும், அதாவது இயேசுவின் நோன்பும்,இஸ்லாமிய நோன்பும் ஒன்றல்ல. பைபிளில் காணப்படும் அனேக விவரங்களை,நிகழ்ச்சிகளை நாம் குர்-ஆனில் காண்பது உண்மை தான், ஆனால் குர்-ஆனில்காணப்படும் தொழுகை, மற்றும் நோன்பு போன்ற விவரங்கள் மட்டும்பைபிளிலிருந்து எடுக்கப்பட்டதல்ல, அவைகள் இஸ்லாமுக்கு முன்பு இருந்த பலதெய்வ வழிப்பாட்டு மக்கள் பின்பற்றிய பழக்கங்களாகும்.



உன்னை அடுத்த கடித்ததில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு

தமிழ் கிறிஸ்தவன்.

Source : http://isakoran.blogspot.in/2012/07/9.html

July 28, 2012

ரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்




ரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்

[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, கடிதம் 7 ]

அன்புள்ள தம்பி,


உனக்கு சமாதானம் உண்டாவதாக.

குர்-ஆன் பற்றியும், இஸ்லாமிய தொழுகைப்பற்றியும் அதிகமாக எழுதிவிட்டேன். அல்லாஹ்வின் சொர்க்கம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுத விரும்புகிறேன். சில விஷயங்கள் உரைநடையில் படித்தால் கருத்து விளங்கும், சில முக்கியமான காரியங்களை நாடகவடிவில் அல்லது கதை வடிவில் விளக்கினால், அதன் சாரம் சரியாக புரியும், எனவே இந்த கடிதத்தில் ஒரு கதையைப் போல உனக்கு ஒரு விஷயத்தை தெளிவாக்க விரும்புகிறேன்.

நான் உனக்கு ஒரு சூழ்நிலையை விளக்குகிறேன், அதை கேட்டுவிட்டு, எனக்கு நீ பதில் அளிக்கவேண்டும்.

நீ ஒரு பட்டணத்திற்குள் முதல் முறை நுழைகிறாய், அது உலகிலேயே மிகவும் அழகான பட்டணம். எங்கு பார்த்தாலும் மக்கள் அழகான வீடுகளில் உட்கார்ந்துக்கொண்டு, பழங்கள் சாப்பிட்டுக்கொண்டும், பானங்கள் பருகிக்கொண்டும், அனேக பெண்களோடு உள்ளாசமாக உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஏதோ ஒரு வீட்டில் நடக்கும் நிலை அல்ல, ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சி அல்ல, தொடர்ந்து நித்திய நித்தியமாக இது நடந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு கையில் பானம், இன்னொரு கையில் சோலைமயில், எப்போது பார்த்தலும், எங்கு பார்த்தாலும் ஆண்கள் அழகான பெண்களோடு உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதுவும் ஒரே பெண்ணுடன் இல்லை, பல பெண்களுடன். இவைகளைக் கண்டவுடன் ‘ஒரு சராசரி ஆண் எப்படி இப்படி தொடர்ந்து உடலுறவில் ஈடுபடமுடியும், விஞ்ஞானத்தின் படி இது முடியாதல்லவா?” என்ற கேள்வி உன் மனதில் எழுகிறது. உடனே உன் செவிகளில் ‘இம்மக்களின் இறைவன், இவர்களுக்கு இப்படிப்பட்ட வினோத சக்தியை கொடுத்துள்ளான்’ என்ற சத்தம் கேட்கிறது.

இப்பொழுதுச் சொல், நீ சென்றுக்கொண்டு இருந்த இடத்திற்கு என்ன பெயர் வைப்பாய்?
1) பரிசுத்தமான இறைவன் தங்கும் இடமா?

2) அல்லது பரிசுத்தமில்லாத பட்டணமா?

இவைகளைக் கண்டால் ஒரு விபச்சார விடுதிபோலவும், விபச்சார பட்டணம் போலவும் காட்சி அளிக்கிறது.

தம்பி, இது வேறு எந்த இடமும் இல்லை, நீ வணக்கும் அல்லாஹ்வின் சொர்க்கம் ஆகும். இம்மக்களுக்கு இப்படிப்பட்ட அதீத சக்தியை கொடுக்கப்போகிறவர் வேறு யாருமில்லை, தினமும் ஐந்து வேளை நீ தொழுதுக்கொள்ளும் அல்லாஹ் தான். இஸ்லாமின் அல்லாஹ், முஸ்லிம்களுக்கு 100 ஆண்களின் சக்தியை கொடுத்து, மேலும் அவர்கள் உடலுறவுக்கு பெண்களை தயார்படுத்தியும் கொடுக்கிறார்.

கீழ்கண்ட வசனங்களை ஒரு முறை படித்துப்பார், முக்கியமாக இவ்வசனங்கள் பற்றி இஸ்லாமிய விரிவுரையாளர்களாகிய இப்னு கதீர் போன்றவர்களின் விரிவுரையை நீயே படித்துப்பார். மேலும், இஸ்லாமிய சொர்க்கம் பற்றிய பயான்களை கேட்டுப்பார்.

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (குர்-ஆன் 55:56)

[எந்த மனிதனும், ஜின்னும் இப்பெண்களை தொடவில்லை என்று அல்லாஹ் ஏன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்? ஆண்களின் ஆர்வத்தை அதிகமாக தூண்டும் வண்ணமாக அல்லாஹ் தன் வஹியை இறக்கியுள்ளார். நிச்சயமாக இது உண்மை இறைவனின் வசனமாக இருக்கமுடியாது]

அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர். (குர்-ஆன் 55:70)

ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். (குர்-ஆன் 55:72)

அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (குர்-ஆன் 55:74)

(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (குர்-ஆன் 55:76)

(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். (குர்-ஆன் 56:22)

நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, (குர்-ஆன் 56:35)

அப்பெண்களைக் கன்னிகளாகவும், (குர்-ஆன் 56:36)

(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், (குர்-ஆன் 56:37)

வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). (குர்-ஆன் 56:38)

ஒரே வயதுள்ள கன்னிகளும். (குர்-ஆன் 78:33)

பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). (குர்-ஆன் 78:34)

(முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)

நீ இவைகளைக் கண்டு சிறிது வேதனைப்பட்டு இருப்பாய், ஆனால், நாம் ஒன்றும் செய்வதற்கில்லை, இது தான் இஸ்லாமிய சொர்க்கம். இஸ்லாமின்படி ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லாஹ் கொடுப்பாராம். ஒரு நாளுக்கு ஒரு ஆண் 100 பெண்களிடம் உடலுறவு கொள்ளமுடியும். இஸ்லாமிய இறைவன் எவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை கவனி.

இஸ்லாமின் சொர்க்கத்தில் வெறும் கன்னிகள் மட்டும் கிடைப்பார்கள் என்று நான் சொல்லவில்லை, கனிவகைகள், மயக்கம் வராத பானங்கள் என்று அனேகம் உண்டு என்று குர்-ஆன் கூறுகிறது. இஸ்லாமிய பரலோகில் முஸ்லிம்கள் உடலுறவு கொள்வதற்காகவே அழகான பெண்களை படைப்பதாக அல்லாஹ் கூறுகிறார். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இஸ்லாமிய பெண்களுக்கும் சொர்க்கத்தில் கணவரல்லாத ஆண்களோடு உடலுறவு கொள்ள அல்லாஹ் வகை செய்வானாம். ஒரு முறை பீஜே என்ற இஸ்லாமிய அறிஞர், இஸ்லாமிய ஆண்களுக்கு புதிய பெண்கள் கிடைப்பது போல, இஸ்லாமிய பெண்களுக்கும் புதிய ஆண்கள் கிடைப்பார்கள் என்று கூறுகிறார், என்னே அல்லாஹ்வின் சொர்க்கம்!

உனக்கு யெகோவா தேவனின் பரலோகம் பற்றி தெரியுமல்லவா?

இறைவன் இருக்கும் இடம் பரிசுத்த இடமாகும், அங்கு பெண் கொடுப்பதுமில்லை, பெண் கொள்வதுமில்லை என்று பைபிள் சொல்கிறது. முக்கியமாக, உடலுறவு என்பது மனித இனம் பூமியில் பெருக இறைவன் அமைத்த ஒரு வழியாகும். அது பரலோகில் தேவையேயில்லை.

தம்பி, உன்னிடம் தனிப்பட்ட முறையில் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்:

உனக்கு அல்லாஹ் அனேக பெண்களை சொர்க்கத்தில் கொடுக்கவேண்டுமென்று விரும்புகிறாயா?

இறைவன் இருக்கும் இடத்தில் ஒரு ஆண் அனேக பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்ற கோட்பாட்டை நீ ஜீரணித்துக் கொள்கிறாயா? அல்லது இதுவரை இந்த விவரம் பற்றி உன் இஸ்லாமிய நண்பர்கள் உன்னிடம் கூறவே இல்லையா?

பைபிளின் பரலோகம் மற்றும் குர்-ஆனின் சொர்க்கம், இவைகளில் எது சரியானதாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்? இஸ்லாமியனாக மாறிய நீ, விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இஸ்லாமிய சொர்க்கமே சரியானது என்பதை நம்பவேண்டும். இதைப் பற்றி உன் தனிப்பட்ட கருத்தை அறிய விரும்புகிறேன்.

தம்பி, நீ இதைப்பற்றி அதிகமாக ஆய்வு செய்யவேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்கிறேன். இந்த கடிதத்தில் நான் சொன்ன விவரங்கள் சரியானவையா இல்லையா என்பதை நீயே சோதித்துப்பார். இமாம்கள், அறிஞர்கள் இந்த சொர்க்கம் பற்றி அதிகம் பேசி இஸ்லாமிய ஆண்களை மூளைச் சலவை செய்வதாக ஒரு குற்றச்சாட்டும் உண்டு, அதாவது ஜிஹாதில் ஆண்கள் ஈடுபடவேண்டும் என்பதற்காக இப்படி செய்வதாக கேள்விப்பட்டுள்ளேன்.

ஒரு தம்பியிடம் இஸ்லாமிய சொர்க்கம் பற்றி பேச வெட்கமாகத் தான் உள்ளது, ஆனால், என்ன செய்யமுடியும் சிலருக்கு சில சத்தியங்கள் சொல்ல இவைகளை சொல்லவேண்டியுள்ளது. நீ எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதைப் பற்றிக்கொள்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.


இப்படிக்கு, உன் சகோதரன்


தமிழ் கிறிஸ்தவன்.

sOURCE :

http://isakoran.blogspot.in/2012/07/8.html

July 27, 2012

ரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா?


[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6 ]


அன்புள்ள தம்பி,

உனக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

எனக்கு நீண்ட நாட்களாக இஸ்லாமியர்களிடம் ஒரு குறிப்பிட்ட கேள்வியை  கேட்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை எந்த முஸ்லிமிடம் கேட்பது? இன்று அதற்கு எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, ஏனென்றால், என் தம்பி தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லியுள்ளான்.

என் கேள்வி இது தான்:
அல்லாஹ் தன்னை வணங்க படைத்தது இயந்திரங்களையா? அல்லது மனிதர்களையா?

தம்பி, நான் ஏன் இந்த கேள்வியை கேட்கிறேன் என்று உனக்கு புரிகின்றதா? அதாவது உனக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் ஒரு சில இதர மொழிகள் தெரியும். உனக்கு அரபி மொழி தெரியாது என்று எனக்குத் தெரியும்.
ஆனால்,
·         நீ அல்லாஹ்வை எப்படி தொழுதுக்கொள்கிறாய்? எவைகளைச் சொல்லி தொழுதுக்கொள்கிறாய்?
·         உனக்கு புரியும் மொழிகளாகிய தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அல்லாஹ்வை தொழுதுக்கொள்கிறாயா? அல்லது அரபியில் தொழுதுக்கொள்கிறாயா?
·         நீ நமாஜ் செய்யும் போது எந்த மொழியை முக்கியமாக பயன்படுத்துகிறாய்? எந்த மொழியில் கலிமாக்களை சொல்கிறாய்?
·         நீ அரபியில் தான் நமாஜ் செய்கிறாய் என்பது நிச்சயம். அப்படியானால், நீ என்ன சொல்கிறாயோ அது உனக்கு புரிகின்றதா? அல்லது ஒரு டேப்ரிகார்டர் போல, மனப்பாடம் செய்ததை புரியாமல் ஒப்புவிக்கிறாயா?
·         நீ அரபியில் சில வசனங்களை மனப்பாடம் செய்து, அவைகளை ஒப்புவிக்கிறாய் என்றால், நீ மனிதனா அல்லது இயந்திரமா?

இயந்திரங்களில் விவரங்களை சேமித்து வைத்துவிட்டால், தேவைப்படும்போதெல்லாம் அவைகள் ஒலிப்பெருக்கியில் வாசித்துத்தள்ளும். ஒரு இலட்சம் முறை அவைகளை அது வாசித்தாலும், அந்த இயந்திரத்திற்கு எந்த ஒரு உணர்வும், சொரணையும் இருக்காது.  தான் வாசித்துத் தள்ளிய வார்த்தைகளில் உள்ள உண்மையும், கருத்துக்களும் அந்த இயந்திரத்திற்கு தெரியாது.

தம்பி, இந்த இயந்திரத்தைப் போல நீயும் அரபியில் தான் உன் இறைவனை தொழுதுக்கொள்கிறாயா? ஆம் என்று தான் நீ பதில் அளிக்கவேண்டும்.

உனக்கு புரியாத மொழியில் நீ எப்படி மற்றவர்களிடம் பேசுவாய்? உனக்கு புரியாதவற்றை ஒப்புவிப்பதினால், உன் உள்ளத்தில் எந்த ஒரு மாற்றமோ அல்லது பேசப்பட்ட வார்த்தைகளில் இருக்கும் பொருளோ புரியப்போவதில்லை, இதனால் என்ன பயன்? இப்படி செய்வதினால் இயந்திரத்திற்கும், உனக்கும் இடையே எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

காது கேளாதவர்கள் செய்திகளை அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக செய்திகள் வாசிக்கும் போது, “காது கேளாதவர்கள் புரிந்துக்கொள்ள சைகை மூலமாக” செய்திகளை தெரிவிக்கிறார்கள்.  உலக செய்திகளுக்கே இவ்வளவு முக்கியத்துவம் என்றால், இறைவனை தொழுதுக்கொள்வதற்கு எவ்வளவு முக்கியத்துவம் இஸ்லாம் கொடுத்திருக்கவேண்டும்? உலக விஷயங்களுக்கே இவ்வளவு முக்கியத்துவம் என்றால், ஆன்மீக விஷயங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும்?

தம்பி, உனக்கு ”பிரைலி” என்று ஒன்று இருப்பது தெரியுமா? அதாவது கண்கள் தெரியாதவர்கள் படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு எழுத்துமுறையாகும்.  எனக்கு கண்கள் தெரியாது எனவே நான் படிக்கவில்லை, உலகை புரிந்துக்கொள்ள வில்லை என்று யாரும் இந்த காலத்தில் சொல்லமாட்டார்கள். ஆனால், கண்கள் இருந்தும், காதுகள் இருந்தும், இன்னும் நீ உன் இறைவனை புரியாமலேயே தொழுதுக்கொள்கிறாய். என்ன ஆச்சரியம் பார்த்தாயா? குருடர்கள் பிரைலி முறையை கற்றுக்கொண்டு படித்து தெரிந்துக்கொள்கிறார்கள், காது கேளாதவர்கள் கூட சைகை மொழியை கற்றுக்கொள்கிறார்கள், ஆனால் நீ என்ன செய்யப்போகிறாய்?

ஒரு உண்மையான இறைவன், தன்னை வணங்கும் மனிதர்கள் வெறும்  மனப்பாடம் செய்த வசனங்களை தலை கால் புரியாமல் மடமடவென்று ஒப்புவிப்பதை விரும்புவானா? அல்லது தன்னை வணங்கும் மனிதன் தன் இருதய ஆழத்திலிருந்து நான்கு வார்த்தைகளைச் சொல்லி, இறைவனை புகழ்ந்து, அவன் செய்த நன்மைகளை நினைத்து, நன்றி சொல்லுவதை விரும்புவானா?  இறைவனை தொழுதுக்கொள்கின்றவர்கள் உண்மையோடும்,  தாம் பேசும் வார்த்தைகளின் பொருளை புரிந்துக்கொண்டும் தொழவேண்டும் என்று பரிசுத்த பைபிளில் இயேசு கூறியுள்ளார். 

மனிதனுக்குத் தான் இயந்திரங்கள் தேவை, இறைவனுக்கு மனிதன் தான் தேவை இயந்திரங்கள் அல்ல.

ஒரு மனிதன் 50 ஆண்டுகள் இஸ்லாமியனாக வாழ்ந்து, ஒவ்வொரு நாளும் 5 வேளை தொழுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இந்த 50 ஆண்டுகளில் அவன் (50*365*5)  91250 முறை தொழுகை செய்வான், ஆனால், தனக்கு புரியாத, மொழியில் இத்தனை முறை தொழுதுக்கொண்டும், எந்த ஒரு பயனும் அவனுக்கு கிட்டுவதில்லை. பெயரளவிற்கு ஒரே பயன் மட்டும் கிட்டும் என்றுச் சொல்லிக்கொள்ளலாம், அது என்ன? ”நான் இஸ்லாமிய கடைமையை நிறைவேற்றினேன் (என்ன செய்கிறோம் என்று புரிந்துக்கொள்ளாமலேயே). அதாவது, படிப்பு படிக்காமலேயே பெயருக்கு பின்னால், M.A. MSc. என்று சிலர் எழுதிக்கொள்கிறார்களே, அது போல நானும் இறைவனை தொழுதுக்கொண்டேன் என்ற வரட்டு திருப்தி மட்டும் கிடைக்கும்.  இதனை இறைவன் அங்கீகரிப்பான் என்று நீ நினைக்கிறாயா?

”அல்லாஹ் தான் இப்படி சொல்லியுள்ளான்” என்று நீ சொல்லலாம், இப்போது கேள்வி அதுதான், இயந்திரங்களைப் போல  தன்னை வணங்க உண்மையான இறைவன் விரும்புவானா? “ஆம்” என்று நீ சொன்னால் அவன் உண்மையான இறைவன் இல்லை என்பது தான் உண்மை.

நீ இவைகளைப் பற்றி சிறிது சிந்துத்துப்பார்க்கவேண்டுமென்று உன்னை உற்சாகப்படுத்துகிறேன்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்,

இப்படிக்கு உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.

Source :  http://isakoran.blogspot.in/2012/07/7.html

July 26, 2012

ரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு?

[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4கடிதம் 5 ]
அன்புள்ள தம்பிக்கு,
சாந்தியும் சமாதானமும் உனக்கு உண்டாகட்டும்.
நீ என் கடிதங்களை படித்து, எனக்கு பதில் எழுதுகிறபடியால் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
தம்பி, உன் பதில் கடிதத்தில், நான் எழுதும் விவரங்கள் பற்றி இன்னும் ஆழமாக ஆராய்வதை விட்டுவிட்டு, அதைக் குறித்து என்னிடம் கேள்விகள் கேட்பதை விட்டுவிட்டு, நீ ஒரு தலைப்பிலிருந்து இன்னொரு தலைப்பிற்கு தாவுகிறாய். குர்-ஆனின் இலக்கிய நடையும், அழகும் உலகில் வேறு எந்த ஒரு நூலிலும், அல்லது வேதத்திலும் இல்லை என்று என்னிடம் சவால் விடுகிறாய். இந்த என்னுடைய கடிதத்தில் நீ குறிப்பிட்டு இருந்த விவரம் பற்றி ஆராய்வோம்.
பல நாட்களுக்கு முன்பு நான் ஒரு சிறிய கட்டுரையை படித்தேன், அது உன்னுடைய கேள்விக்கு பதில் அளிக்கும் என்று நம்புகிறேன். ஒரு மனிதன் கீழ்கண்ட விதத்தில் ஒரு வாதத்தை வைப்பதாக நினைத்துக்கொள்வோம்.

1. உலகத்திலேயே என் மனைவி தாம் மிகவும் அழகான பெண்
2. உங்களால் முடிந்தால், இவளைப் போல இன்னொரு பெண்ணை கொண்டுவாருங்கள்!
3. உங்களால் முடியவில்லையானால், இவள் சொல்லும் அனைத்தும் உண்மையானது என்று நீங்கள் எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

தம்பி, மேற்கண்ட வாதம் சரியான வாதம் இல்லை என்று எண்ணுகின்றாய் அல்லவா? ஆம், நீ நினைப்பது சரியானது தான், அதாவது மேற்கண்ட வாதம் சரியான வாதமன்று. இதைப் போலத்தான் இஸ்லாமியர்கள் கூட "குர்-ஆன் பற்றிய வாதத்தை முன்வைக்கிறார்கள்".  அதாவது, "உங்களால் முடிந்தால் குர்-ஆனை போல உள்ள ஒரு ஸூராவையோ வசனத்தையோ கொண்டுவாருங்கள், உங்களால் முடியவில்லையானால், குர்-ஆனை இறைவன் தான் இறக்கினான் என்று நீங்கள் நம்பவேண்டும், அது சொல்லும் அனைத்தையும் நீங்கள் நம்பவேண்டும்", இது தான் இஸ்லாமியர்களின் வாதம்.
ஒரு பெண்ணைப் பற்றி நாம் கவனித்தோமானால், அவளது அழகிற்கும், அறிவிற்கும் ஒற்றுமை எதுவுமே இல்லை. அதாவது அவள் அழகாக இருக்கிறாள் எனவே, நிச்சயமாக அவள் அறிவுள்ளவளாக ஞானியாக இருப்பாள் என்று எந்த ஒரு மனிதனும் முடிவு செய்யமுடியாது.  இதே போலத்தான், குர்-ஆனின் இலக்கிய நடைக்கும், அதன் தெய்வீகத்திற்கும் இடையே எந்த ஒரு ஒற்றுமையும் இல்லை. உலகத்திலே இலக்கிய நடை அழகாக இருக்கும் நூல் நிச்சயமாக தெய்வீகமானது என்று உன்னால் கூறமுடியுமா?  ஒருவேளை இலக்கிய நடை நன்றாக இருக்கும் புத்தகமெல்லாம் தெய்வீகமானது என்று ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொண்டாலும், அந்த இலக்கிய நடை உலகிலேயே சிறந்தது என்று யார் முடிவு செய்வார்கள்? எந்த தரத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்த முடிவை எடுப்பது?
ஒரு பெண்ணுடைய அழகும், ஒரு நூலுக்கு இருக்கும் இலக்கிய அழகும் ஒன்று தான். அதாவது பல வகையான மக்கள் பலவகையான விருப்பங்களை, கொண்டு இருப்பார்கள். உலகில் யாராவது வந்து:
• "என் மனைவி தான் உலகத்திலேயே அழகானவள் என்று நான் முடிவு செய்துவிட்டேன், எனவே உலகில் வேறு எந்த பெண்ணின் அழகும் என் மனைவியின் அழகிற்கு குறைவானதாகத் தான் இருக்கும்" என்று கூறினால், அது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமாக இருக்குமா?

• "என் வேதத்தில் உள்ள இலக்கிய அழகு தான் உலகில் சிறந்த இலக்கிய அழகு என்று நான் முடிவு செய்துவிட்டேன், எனவே உலகில் வேறு எந்த புத்தகத்தின் இலக்கிய அழகும் இதைவிட குறைவானதாகத் தான் இருக்கும்" என்று கூறினால், அது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமாக இருக்குமா?
சிலர் குர்-ஆனின் இலக்கிய நடை சிறந்தது என்பார்கள், வேறு சிலர் அது தவறு என்பார்கள். ஒரு கணவன் தன் மனைவி தான் 'உலக அழகி' என்றுச் சொல்கிறான், ஒரு முஸ்லிம் 'குர்-ஆனின் இலக்கிய அழகு உலகிலேயே சிறந்தது' என்றுச் சொல்கிறான். இவ்விதமாக இவர்கள் சொல்வதற்கு காரணமென்ன? ஒரு மனிதன் தன் மனைவியை உண்மையாக நேசித்தால், தன் மனைவி தான் உலகில் சிறந்தவள் என்று நம்பக்கூடும், ஆனால், மற்ற மனிதன் அந்தப் பெண்ணை அப்படி உலக அழகி என்று நினைக்கமாட்டார், இது உண்மையே.  ஒருவருக்கு உலக அழகியாக தெரியும் பெண், எல்லாருக்கும் உலக அழகியாக தெரியும் என்று நாம் நிச்சயமாகச் சொல்லமுடியாது. காரணம் என்னவென்றால், மற்றவர்கள் அந்த பெண்ணோடு கொண்டு இருக்கும் உறவுமுறை கணவன் கொண்டு இருக்கும் உறவுமுறை போன்றதல்ல. தம் மனைவி மீது கொண்டுள்ள (குருட்டுத்தனமான)
அன்பினிமித்தம் கூட, அவளே உலகில் சிறந்த அழகி என்பான்,
அல்லது மனைவிக்கு பயப்படும் கணவனாக இருந்தால், மற்றவர்கள் முன்பு அவள் அவ்வளவு அழகி இல்லை என்று சொல்லமாட்டான்.
இதே போலத்தான், முஸ்லிம்கள் குர்-ஆனை (குருட்டுத்தனமாக) நேசிக்கிறார்கள், அதைப் பற்றி நல்லதையே பேசுவார்கள். ஒருவேளை குர்-ஆனில் காணப்படும் தீய விஷயங்கள் பற்றி பேச அவர்கள் பயப்படுகிறவர்களாக இருக்கலாம். குர்-ஆனைப் பற்றிய எதிர்மறை கருத்துக்களை வெளியே சொன்னால் என்ன தண்டனை கிடைக்கும் என்று இஸ்லாமியர்களுக்கு தெரியும்.
எனவே, "உலகத்திலேயே என் மனைவி தாம் மிகவும் அழகான பெண்" என்ற சவாலை யாராளும் சந்திக்கமுடியாது. இந்த மனிதன் தன்னையே "நீதிபதி" என்று கருதிக்கொண்டு தீர்ப்பை கொடுத்துவிட்டான், எனவே, இந்த விஷயத்தில் (அம்மனிதனின் மனைவி விஷயத்தில்) அவனை மிஞ்சி யாரும் தீர்ப்பு அளிக்கமுடியாது. ஒருவேளை இந்த மனிதனிடம் குறுக்குக் கேள்வி கேட்டால், நான் என் மனைவியின் உள்ளான அழகைச் சொன்னேன், இதனை அறிய உங்களால் முடியாது. (இதன் அர்த்தம் என்ன? ஒரு மனிதன் இந்த பெண்ணின் கணவனாக மாறினால் தவிர அந்த உள்ளான அழகு அவனுக்குத் தெரிய வாய்ப்புஇல்லை).
இதே வகையில் இஸ்லாமியர்களிடம், தர்க்க ரீதியான கேள்விகள் குர்-ஆன் பற்றி கேட்கும் போது, அரபியில் படித்தால் தான் குர்ஆனின் அழகு உங்களுக்கு தெரியும் என்பார்கள். சரி, எனக்கு அரபி நன்றாகத் தெரியும், குர்-ஆனை அரபியில் முழுவதுமாக படித்துவிட்டேன். ஆனால், அப்படியொன்றும் குர்-ஆனின் இலக்கிய அழகு சிறந்த அழகாக தெரியவில்லையே என்று அரபி அறிஞர்கள் கூறினால், அதற்கும் முஸ்லிம்களிடம் பதில் இருக்கும், அதாவது நீங்கள் முஸ்லிமாக மாறி அரபியில் படித்தால் தான் உள்ளான அழகு தெரியும், முஸ்லிமல்லாதவர்களுக்கு அதன் அழகு தெரியாது என்றுச் சொல்வார்கள்.
தம்பி, அந்த மனிதனுக்கும், இந்த முஸ்லிம்களுக்கும் இடையே ஏதாவது வித்தியாசம் இருப்பதாக உனக்குத் தெரிகின்றதா?
ஆக, உன்னுடைய சவால் அல்லது கேள்வி பிரயோஜனமற்ற ஒரு சவாலாக உள்ளது. உன் கேள்வி தர்க்க ரீதியாக எவ்வளவு பலவீனமானது என்று உனக்கு இப்போது புரிந்து இருக்கும்.
கடைசியாக முக்கியமான கேள்வியை கேட்கிறேன்:  நீ இஸ்லாமியனாக மாறி ஒரு சில மாதங்களே ஆகியுள்ளது, இன்னும் ஒரு முறை கூட குர்-ஆனை அரபியில் நீ முழுவதுமாக படித்து இருந்திருக்கமாட்டாய். ஒருவேளை அரபியில் படித்து இருந்தாலும், பொருள் தெரியாமல் ஒரு இயந்திரம் போல மூளைக்கு எட்டாமல் படித்து இருந்திருப்பாய். இப்படி இருக்கும் போது, எந்த தைரியத்தில் "குர்-ஆனே உலகில் இலக்கிய நடையில் சிறந்தது என்று சவால் விடுகிறாய்?" அரபி மொழியே தெரியாத உனக்கு அரபி மொழி பற்றிய சவால் விடுவதற்கு உரிமை எங்கே இருந்து வந்தது? ஒரு மொழியை தெரிந்துக்கொள்ளாமல், அந்த மொழியில் இலக்கிய நடைப்பற்றி சவால் விடுவது அறிவுடமையாக உனக்கு தென்படுகின்றதா?
நான் உன் அண்ணன் என்பதால் நான் சொல்வதை அங்கீகரிக்கவேண்டும் என்பதில்லை, நீயே சுயமாக சிந்தித்துப்பார், ஆராய்ந்து பார் உனக்கே உண்மை புரியும்.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு உன் அண்ணன்
தமிழ் கிறிஸ்தவன்.
Source : http://isakoran.blogspot.in/2012/07/6.html

July 25, 2012

ரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல

[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4 ]
அன்பு தம்பிக்கு,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
என்னுடைய முந்தைய கடிதத்தை நீ படித்து இருப்பாய் அதாவது, அல்லாஹ்விற்கும், பைபிளின் தேவனுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்பதை விளக்கியிருந்தேன். 
இந்த கடிதத்தில் கிறிஸ்தவர்களிடம் இஸ்லாமியர்கள் சொல்லும் இன்னொரு தவறான தகவல் பற்றி விளக்குகிறேன்.
சபை ஐக்கியம்: ஒரு கிறிஸ்தவர் சபை ஐக்கியத்தில் தொடர்ந்து பங்கு பெற்று, பைபிளை படித்து தியானித்து, பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டின் பொதுவான வேத அறிவை பெற்று இருந்தால், அவரிடம் இஸ்லாமியர்களின் வாதம் எடுபடாது. அவர்கள் சொல்லும் விவரங்களை அந்த கிறிஸ்தவன் பைபிளோடு உரசிப்பார்த்து அவர்கள் சொல்லும் விவரங்களில் எது உண்மை எது தவறு என்று அறிந்துக்கொள்வான். ஆனால், சபை ஐக்கியத்தில் ஈடுபடாமல், வேதத்தில் அதிகமாக முக்கியத்தும் காட்டாத சராசரி கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களின் வாதத்தை நம்பிவிடுகின்றனர். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களாக மாறுவதற்கு அனேக காரணங்கள் உண்டு, அதில் சபை ஐக்கியத்தை விட்டுவிடுதலும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.
ஏன் இஸ்லாம் கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இல்லை என்பதை இப்போது காண்போம்:
1.       அல்லாஹ் தம்மை பைபிளின் தேவனோடும், அவரது தீர்க்கதரிசிகளோடும், பைபிளின் நிகழ்ச்சிகளோடும் சம்மந்தப்படுத்திக் கொள்கிறார். இது தவறானதாகும், ஏனென்றால், நான் உனக்கு எழுதிய முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டதுபோல, அல்லாஹ்வும் பைபிளின் தேவனும் வெவ்வேறானவர்கள்.
2.       பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் படி, தேவன் மேசியாவை அனுப்பி தம் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். அதாவது இயேசுவின் முதல் வருகை மற்றும் அவர் நிறைவேற்றிய காரியங்கள் யெகோவா தேவனின் மிகப்பெரிய வெற்றியாகும்.
3.       அதே பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் படி, மேசியாவின் இரண்டாம் வருகைக்காக உலகம் காத்துக்கொண்டு இருக்கிறது. பைபிள் தெளிவாக முழு விவரங்களையும் சொல்லும் போது, இடையில் இஸ்லாம் எங்கேயிருந்து வந்தது?
4.       குர்-ஆனில் பல பைபிள் நிகழ்ச்சிகள், தீர்க்கதரிசிகளின் பெயர்கள் குறிப்பிட்டு இருந்தால், அதனை யெகோவா தேவன் தான் அனுப்பினார் என்று எப்படி நம்பமுடியும்? பைபிளின் அடிப்படை சத்தியத்திற்கு எதிராக குர்-ஆன் பேசும் போது, எப்படி இவ்விரு வேதங்களையும் அனுப்பினவர் ஒருவராக இருக்கமுடியும்?
5.      பைபிளின் தேவன் தம்மை "பிதா" என்ற உறவு முறையில் தம்மை வெளிப்படுத்துகிறார், இதனை குர்-ஆன் நிராகரிக்கிறது. இயேசு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார், தேவகுமாரனாக இருக்கிறார் என்று பைபிள் சொல்லும் போது குர்-ஆன் அதனை நிராகரிக்கிறது. இயேசுவின் பாடுகள், சிலுவையில் அறையப்படுதல், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை குர்-ஆன் நிராகரிக்கிறது. இப்படி இருக்கும் போது எப்படி கிறிஸ்தவத்தின் தொடர்ச்சியாக "இஸ்லாம்" இருக்கமுடியும்? கிறிஸ்தவத்தை நிராகரிக்கும் இஸ்லாம், கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி அல்ல.
6.      பைபிளில் காணப்படும் நிகழ்ச்சிகளை குர்-ஆன் எடுத்துக்கொண்டதோடு  மட்டுமல்லாமல், அவைகளை மாற்றியும் திருத்தியும் கூறியுள்ளது, இப்படி இருக்க பைபிளையும் குர்-ஆனையும் கொடுத்தவர் எப்படி ஒரே இறைவனாக இருக்கமுடியும்? எப்படி அந்த தேவன் கிறிஸ்தவத்திற்கு பிறகு இஸ்லாமை தொடரச்செய்வார்?
7.       பிதாவையும்,குமாரனையும் மறுதலிக்கிறவன் பொய்யன் என்றும், அந்திக்கிறிஸ்து என்றும் முதல் நூற்றாண்டிலேயே புதிய ஏற்பாடு ஆணித்தரமாக கூறுகிறது, ஆறு நூற்றாண்டுகளுக்கு பிறகு வந்த இஸ்லாம் சொல்லிவைத்தாற் போல பிதாவையும், குமாரனையும் மறுதலித்துள்ளது. புதிய ஏற்பாட்டின் பாடி  இஸ்லாம் ஒரு பொய்யான மற்றும் அந்திக் கிறிஸ்துவின் மார்க்கம் என்றுச் சொல்லவேண்டும்.
8.       முஹம்மது என்ற பெயரில் ஒரு நபி/தீர்க்கதரிசி வருவார் என்று இயேசு முன்னுரைத்தார் என்று அறியாமையில் இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் பற்றி இயேசு கூறிய முன்னறிவிப்பை திருத்தி, முஹம்மதுவிற்கு முடிச்சு போட இஸ்லாமியர்கள் முயற்சி எடுக்கிறார்கள், இதுவும் இஸ்லாமியர்களின் தவறான தகவலாகும்.  (யோவான் 14.16-17, 14.26, 15.26 & 16.70)
9.       இயேசு முன்னுரைத்தது முஹம்மதுவை அல்ல, அவர் பரிசுத்த ஆவியானவரைத் தான் என்பதை நிருபிக்க அனேக காரணங்களை காட்டலாம், அவைகளில் சிலவற்றை நான் உனக்காக சுருக்கமாக குறிப்பிடுகிறேன். இயேசு வருவார் என்றுச் சொன்ன 'தேற்றரவாளனை' தம்முடைய சீடர்களுக்கு இயேசு வாக்குபண்ணினார். அதாவது பேதுரு, யோவான், மத்தேயூ போன்ற சீடர்கள் உயிரோடு இருக்கும் போதே 'தேற்றரவாளனை'  அனுப்புவேன் என்று இயேசு சொன்னாரே தவிர, 600 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அரேபிய மக்களுக்காக 'தேற்றரவாளனை'  அனுப்புவேன் என்று கூறவில்லை.
10.    உங்களோடு கூட அவர் (தேற்றரவாளன்) எப்போதும்  இருப்பார் என்று இயேசு கூறினார். இயேசுவின் காலத்தில் முஹம்மது வரவில்லை மற்றும் அவர் எப்போதும் மக்களோடு இருக்கப்போவதுமில்லை. 63 ஆண்டுகள் வாழ்ந்து முஹம்மது மரித்துவிட்டார். ஆகையால் இயேசு கூறியது பரிசுத்த ஆவியானவரைத்தான், முஹம்மதுவை அல்ல என்பது திண்ணம்.
11.    இயேசு சீடர்களிடம் கூறும் போது, அவர் உங்களுக்குள் வாழுகிறார், உங்களோடு இருக்கிறார் என்று கூறினார். முதல் நூற்றாண்டின் சீடர்களுக்குள் எப்படி 7ம் நூற்றாண்டில் வந்த முஹம்மது வாழமுடியும் அல்லது அவர்களோடு இருக்கமுடியும்?
எந்த வசனங்களை இஸ்லாமியர்கள் மேற்கோள் காட்டுகிறார்களோ அதே வசனங்களைக் கொண்டு இயேசு முன்னறிவித்தது பரிசுத்த ஆவியானவரைத் தான் முஹம்மதுவை அல்ல என்று தெளிவாக முடியும்.
எனவே, பரிசுத்த ஆவியானவர் பற்றிய முன்னறிவிப்பை, முஹம்மதுவிற்கு முடிச்சுப்போடுவது அறியாமையாகும். மேலும், கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி தான் இஸ்லாம் என்றுச் சொல்வதும் அடிப்படையிலிருந்தே தவறானதாகும்.
 தம்பி, இதைப் பற்றி மேலும் அறிய நீ ஆவலாக இருந்தால், ஒரே ஒரு முறை புதிய ஏற்பாட்டை படித்துப்பார்,  பரிசுத்த ஆவியானவர் பற்றிய ஒரு சில வசனங்களை படித்து ஆராய்ந்துப்பார், உனக்கே உண்மை விளங்கும்.  மேலும் விளக்கம் தேவை என்று விரும்பினால், எனக்கு எழுது, நான் மறுபடியும் உனக்கு அதிக விளக்கங்களைத் தருவேன்.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.

Source http://isakoran.blogspot.in/2012/07/5.html

July 24, 2012

ரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல


[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3 ]
அன்பு தம்பிக்கு,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
நீ எழுதிய மெயில் (கடிதம்) கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடைய மூன்று கடிதங்களுக்கு ஒரு பதிலையாவது நீ எழுதினாய் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.  நீ அந்த கடிதத்தில். பைபிளின் தேவனாகிய "யெகோவா தேவனும், அல்லாஹ்வும் ஒருவரே" என்று குறிப்பிட்டு இருந்தாய். இன்று அதே தலைப்பு குறித்து ஒரு சில விவரங்களை சுருக்கமாக நான் உனக்கு எழுதட்டுமா? நம்முடைய இந்த உரையாடல் மிகவும் உபயோகமான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒரு தவறான தகவலை முஸ்லிம்கள் உனக்குச் சொல்லியுள்ளார்கள். பைபிளின் தேவனும், குர்-ஆனின் அல்லாஹ்வும் ஒரே நபர் அல்ல, இவர்கள் வெவ்வேறானவர்கள். வானத்துக்கும் பூமிக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு இடைவெளி இவ்விருவருக்கும் இடையே உள்ளது.  நீ சௌதி சென்ற பிறகு பல மாதங்களாக சபை ஐக்கியத்தையும், சகோதர ஐக்கியத்தையும் உதறி தள்ளிவிட்டதினால் தான், நீ இஸ்லாமியர்களின் சொற்களை கேட்டு, அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பியுள்ளாய். சரி விஷயத்திற்கு வருகிறேன். யெகோவா தேவனும், அல்லாஹ்வும் வெவ்வேறானவர்கள் என்பதை விளக்க ஒரு புத்தகமே எழுதலாம், ஆனால், நீண்ட விளக்கங்களை படித்தால் என் தம்பிக்கு சலிப்பு உண்டாகுமே என்ற எண்ணத்தால்,  சுருக்கமாக சில குறிப்புக்களை எழுதுகிறேன். உனக்கு நேரம் கிடைக்கும்போது நான் சொல்லும் விவரங்களை நீயே படித்து தெரிந்துக்கொள்.
• முதலாவதாக, பைபிளின் இறைவன் தன்னை திரித்துவ தேவனாக வெளிப்படுத்துகிறார், பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராக  இருக்கிறார். ஆனால், அல்லாஹ்வோ ஏக இறைவனாக தம்மை வெளிப்படுத்துகிறார்.
• இரண்டாவதாக, பைபிளின் தேவன் தம்மை ஒரு பிதாவாக அனேக இடங்களில் தம்மை வெளிப்படுத்துகிறார். ஆனால், அல்லாஹ்வோ ஒரு எஜமானன் போல காட்சி அளிக்கிறார். தம்மை பின்பற்றுபவர்களை தன் பிள்ளைகளைப்போல அன்பாக பார்க்காத இறைவனாக அல்லாஹ் இருக்கிறார். உனக்கு சந்தேகம் இருந்தால், இஸ்லாமிய அறிஞர்களை கேட்டுப்பார், அதாவது "நான் அல்லாஹ்வை அப்பா என்று அழைக்கலாமா? அப்பா என்ற உரிமையோடு வேண்டிக்கொள்ளலாமா?" என்று கேட்டு தெரிந்துக்கொள். ஜாக்கிரதை நீ இஸ்லாமியர்களிடம் கேட்கும் கேள்விகள் உன்னை ஆபத்தில் கொண்டுச் சேர்க்கும்.
• மூன்றாவதாக, பைபிளின் தேவன் மக்களின் மீது "நிபந்தனையற்ற அன்பை பொழிகிறார், பாவி மீதும் அன்பு கொள்கிறார், அவன் திருந்தி மறுபடியும் தன்னிடம் வருவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார்". ஆனால், அல்லாஹ் இப்படி இல்லை. அவர் தீயவர்களை நேசிப்பதில்லை, பாவிகளை நேசிப்பதில்லை (ஸூரா 28:77, 30:45).  நற்செயல்களைச் செய்து தம்மை தொழுதுக்கொள்கிறவர்களை மட்டுமே நேசிக்கிறார் (ஸுரா 2:195, 2:222, 3:76, 3:146, 3:159, 5:13). நாம் பாவிகளாக இருக்கும் போதே நம் தேவன் நம்மீது அன்பு கூர்ந்து, தம்மைத் தாமே நமக்காக ஒப்புக்கொடுத்தார் (உனக்கு பைபிள் வசனங்களை அதிகமாக மேற்கோள் காட்டவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இன்னும் உன் பைபிள் உன்னிடம் உள்ளதா? அல்லது அதனை தூக்கி எறிந்துவிட்டாயா?)
• நான்காவதாக, பைபிளின் தேவன்  நம் நிலைக்கு இறங்கிவந்து நம்முடன்  ஒரு நண்பனைப்போல நட்புறவை வைத்துக்கொள்ள  விரும்புகிறார். நாமும் முழு இருதயத்தோடு அவரை நேசிக்கவேண்டும் என்று விரும்புகிறார்.  ஆனால், அல்லாஹ் தன் மக்களிடம் எதிர்ப்பார்ப்பதெல்லாம் 'கீழ்படிதல்' மட்டுமே ஆகும்.  இயந்திரங்களைப் போல மக்கள் தன்னை தொழுதுக்கொள்ள வேண்டும், புரிந்தாலும், புரியாவிட்டாலும் தன் வேதத்தை படிக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். கிறிஸ்தவர்களுக்கு தேவன் ஆறுதல்படுத்தும் பிதாவாகவும் உற்ற நண்பனாகவும் இருக்கிறார். ஆனால், முஸ்லிம்களுக்கு அல்லாஹ் அதிகாரம் செலுத்தும் ஒரு எஜமானனாக இருக்கிறார்.
• ஐந்தாவதாக,  பைபிளின் தேவன் அன்பானவர் மட்டுமல்ல, அவர் பரிசுத்தராகவும் பரிபூரண நீதியுள்ளவராகவும் இருக்கிறார். அதாவது நாம் பாவம் செய்யும் போது நம் தேவனுக்கு அவமானத்தை கொண்டு வருகிறோம், அவருக்கு எதிராக செயல்படுகிறோம், இதற்காக நீதியுள்ள தேவனிடமிருந்து நமக்கு தண்டனை காத்திருக்கும். அவர் நீதியுள்ளவர் என்பதால் தண்டனை நமக்கு தப்பாது.  அதே நேரத்தில் அவர் அன்புள்ளவராக இருப்பதினால், நம்முடைய தண்டனையை  அவர் தம்முடைய வார்த்தையை குமாரனாக அனுப்பி தாமே அதனை சுமந்தார். ஆனால், மக்கள் பாவங்கள் செய்து அல்லாஹ்வை அவமானப்படுத்தினாலும் சரி, சில சடங்காச்சாரங்களை செய்து மன்னிப்பு கேட்டால் அதனை அல்லாஹ் மன்னித்துவிடுகிறார், தன் நீதி பற்றி தனக்கே அக்கரையில்லாத இறைவனாக அல்லாஹ் காணப்படுகிறார்.  தம்மை மக்கள் அவமானப்படுத்தினதை காற்றில் விட்டுவிட்டார். எனவே அல்லாஹ் "பரிபூரண நீதியுள்ள நியாயாதிபதி" அல்ல. பைபிளின் தேவன் பரிபூரண நீதியுள்ள நியாயாதிபதியாகவும் இருக்கிறார், அதே நேரத்தில் அன்பாகவும் இருக்கிறார்.
• ஆறாவதாக பைபிளின் தேவன் தம்மை விட பெரியவர் யாரும் இல்லை என்பதால் தம்மீது மட்டுமே சத்தியம் செய்வார். ஆனால், அல்லாஹ் அனேக காரியங்கள் மீது சத்தியம் செய்வார், அதாவது இரவின் மீதும், மலையின் மீதும், நட்சத்திரங்கள் மீதும், நகரத்தின் மீதும், காலத்தின் மீதும் இன்னும் அனேக விஷயங்கள் மீதும் சத்தியம் செய்கிறார்.  இவ்விருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைப் பார்.
• ஏழாவதாக, பைபிளின் தேவனின் பரலோகம் அல்லது சொர்க்கம் ஆவிக்குரிய சொர்க்கமாகும். பரலோகில் திருமணம் இல்லை, உடலுறவு இல்லை என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது. ஆனால், அல்லாஹ்வின் சொர்க்கமோ, மோகம் நிறைந்த ஒரு இடமாக காட்சி அளிக்கிறது. குறைந்த பட்சம் ஒரு முஸ்லிம் சொர்க்கத்தில் தன் மனைவியோடு உடலுறவு கொள்கிறார் என்று சொன்னாலும் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அல்லாஹ்வின் சொர்க்கம் கிட்டத்தட்ட ஒரு விபச்சார விடுதி போல காட்சி அளிக்கிறது (தம்பி இந்த வார்த்தையை பயன்படுத்த எனக்கு வேதனையாக உள்ளது, ஆனால் வேறு வழியில்லை, உண்மை கசக்கத்தான் செய்யும்). அனேக கன்னிப்பெண்கள் முஸ்லிம்களுக்கு கிடைப்பதாகவும், அவர்களோடு முஸ்லிம்கள் உடலுறவில் ஈடுபட்டு இருப்பதாகவும் இஸ்லாம் கூறுகிறது. நீ சிந்தித்துப்பார், பைபிளின் தேவனின் சொர்க்கத்திற்கும், அல்லாஹ்வின் சொர்க்கத்திற்கும் இடையே எவ்வளவு பெரிய இடைவெளி, இவ்விருவரும் ஒருவராக இருக்கமுடியுமா? நிச்சயமாக இல்லை.
இப்படி அனேக வித்தியாசங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம். ஒரு சில மாதங்களாக இஸ்லாமியனாக இருக்கின்ற நீ, நிச்சயம் இஸ்லாமிய சொர்க்கம் பற்றி, அல்லது இஸ்லாமியர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் பெண்கள் பற்றிய ஒரு பிரசங்கத்தையாவது (பயானை) கேட்டு இருப்பாய் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன். 
ஆகவே, தம்பி நீ நினைப்பதுபோல, பைபிளின் தேவனும் குர்-ஆனின் அல்லாஹ்வும் ஒருவரல்ல என்பதை நீ புரிந்துக்கொள்ளவேண்டும்.
இதைப் பற்றி இன்னும் அதிகமாக உனக்கு விவரம் தேவைப்பட்டால் எனக்கு தெரிவிக்க மறந்துவிடாதே.
அடுத்த கடிதத்திலுல் உன்னை சந்திக்கிறேன்.
இப்படிக்கு
உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.

Source : http://isakoran.blogspot.in/2012/07/4_23.html

July 23, 2012

ரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா?

ரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா?
[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2]
அன்பு தம்பிக்கு,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
என்னுடைய இரண்டாவது கடிதத்தை படித்தாயா? நான் கேட்கச்சொன்ன விவரங்களை கேட்டாயா?
இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசங்களை நீ அறியாததால் தான் இஸ்லாமை தழுவியுள்ளாய்.
இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசங்கள் இவைகளாகும்:
  •  இஸ்லாமின் தெய்வம் ஒரு எஜமான், நீ அவனது அடிமை (Master and Slave)
  • கிறிஸ்தவத்தின் தெய்வம் ஒரு தந்தை, நீ அவரது செல்லக்குமாரன். (Father and Son) 
  • ஒரு மனிதனுக்கும் அல்லாஹ்விற்கும் இடையே இருப்பது ஒரு "ஒப்பந்தம்" (Contract).
  • ஒரு மனிதனுக்கும் யெகோவா தேவனுக்கும் இடையே இருப்பது ஒரு "உறவு முறை" (Relationship).
ஒரு அன்பான அப்பாவிற்கு மகனாக இருப்பதை உதறி தள்ளிவிட்டு, நீ ஒரு கடினமான எஜமானனுக்கு அடிமையாக வேலை செய்ய உன்னை விற்றுவிட்டாய்.
பைபிளின் தெய்வமாகிய நம் பரம பிதா தன் மகனுக்காக எதையும் செய்வார். இந்த பிதா தன் மகனுக்காக தன் நிலையிலிருந்து இறங்கி வருவார், தன் மகனை தன் தோளில் சுமப்பார், முதிர்வயது வரையும் சுமப்பார், ஆறுதல்படுத்துவார், கடினமான நேரங்களில் பலப்படுத்துவார், தன்னால் முடிந்த அனைத்தையும் தன் மகனுக்காக மகளுக்காக செய்வார். ஏன் இப்படி சர்வ வல்ல தேவன் செய்கிறார் என்று நாம் பார்த்தால், அதற்கு ஒரே ஒரு பதில் தான் நமக்கு கிடைக்கும், அது என்னவென்றால் "அவர் நம்மை நேசிக்கிறார்" என்பதாகும். இதைவிட வேறு எந்த காரணமும் இருக்கமுடியாது. இப்படிப்பட்ட பிதாவை நாம் நேசிக்க நமக்கு வேறு ஒரு பலமான காரணம் ஒன்று தேவையா?
ஆனால், அல்லாஹ் தன் அடியார்களிடம் நெருங்கி வந்து ஆறுதல்படுத்துகிறாரா? ஒரு தந்தையைப் போல அன்போடு நடந்துக்கொள்கிறாரா? சிந்தித்துப்பார்.
இதோ "நான் உனக்காக இவைகளை செய்தேன், இதோ உனக்காக நான் இவ்வளவு அதிகமாக அன்பு கூறுகிறேன்" என்று பைபிளின் தேவன் தன் அன்பை வெளிப்படுத்துகிறார். ஆனால், அல்லாஹ், எனக்கு கீழ்படிகிறாயா? நான் சொன்ன சட்டங்களை கைக்கொள்கிறாயா? எனக்கு அடிமையாக எப்பொதும் இருப்பாயா? என்று மக்களிடம் கேட்டு தம்முடைய ஒப்பந்தத்தை வெளிப்படுத்துகிறார். மனிதனுக்காக தன் நிலையிலிருந்து இறங்கி வருகிற ஒரு அப்பாவாக  அல்லாஹ் இல்லை என்பது தான் மிகவும் வேதனையான விஷயம்.
நீ அப்பா இல்லாத அனாதையாக இருப்பதை நான் விரும்பவில்லை தம்பி. எனக்கு பரலோகில் ஒரு பிதா உண்டு.  அவரே உனக்கும் பிதாவாக இருக்கிறார், நீ அவரை உதறிதள்ளிவிட்டாய். ஆனால், இன்னும் அவர் உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். இளையக் குமாரன் எப்போது வருவான் என்று எதிர்ப்பார்த்து வாசலிலேயே காத்துக்கிடந்த அந்த உவமையில் வரும் பிதாவைப்போல, நம் தேவன் கூட உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். நீ எப்போது வேண்டுமாலும் வரலாம், நிபந்தனைகளோ சட்டங்களோ கிடையாது. மகன் அப்பா வீட்டிற்கு வருவதற்கு  எது தடையாக இருக்கமுடியும்?
இன்று நீ நோன்பு ஆரம்பித்து மூன்றாம் நாள் ஆகிறது. நீ உன் பரலோக அப்பாவின் பிரசன்னத்தை மற்றும் அன்பை உணர்ந்தாயா? அல்லது அல்லாஹ்விற்கு பயந்து ஒரு எஜமானனுக்கு முன்பாக நடுங்கிக்கொண்டு நிற்கும் ஒரு அடிமையைப்போல தொழுதுக்கொள்கிறாயா? சிந்தித்து பாரடா தம்பி சிந்தித்து பாரு,
அம்மாவின் அன்பை நீ ருசி பார்த்துள்ளாய்; நம் அப்பாவின் அன்பையும் நீ ருசி பார்த்துள்ளாய், நம் சகோதர சகோதரிகளின் அன்பையும் நீ ருசி பார்த்துள்ளாய், உன் நல்ல நண்பர்களின் நட்பையும் நீ ருசி பார்த்துள்ளாய். ஆனால், உன்னை படைத்த இறைவன் உன்னை அதிகமாக நேசிக்கிறார் என்பதை உணராமல் போய்விட்டாயே, அவரது அன்பை ருசி பார்க்காமல் சென்று விட்டாயே!
இன்று நீ அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் போது "யா அல்லாஹ், நீங்கள் என் தந்தை, நான் உம்முடைய மகன், நான் உம்மை நேசிக்கிறேன், நீங்களும் என்னை நேசிக்கிறீர்களா இல்லையா என்பதை எனக்கு எவ்விதத்திலாவது தெரியப்படுத்தும்" என்று வேண்டிக்கொள்.  ஆனால், தம்பி இஸ்லாமில் இப்படி வேண்டுவது பாவமாகவும், மிகப்பெரிய தவறாகவும் கருதப்படுகிறது என்பதை நீ அறிந்துக்கொள்.  நீ அல்லாஹ்வை ஒரு அப்பாவைப்போல  நேசிக்கமுடியாது. ஒரு அடிமையைப் போல வெறும் கீழ்படிய மட்டுமே உன்னால் முடியும். உன் அல்லாஹ் உன் வேண்டுதலுக்கு பதில் அளிக்கமாட்டார், ஆனால், நான் உனக்கு சவால் விடுகிறேன், அல்லாஹ்விடம் நீ கேட்ட வேண்டுதலுக்கு நம் தேவன் பதில் அளிப்பார்.  இந்த சவாலை ஏற்க நீ தயாராக இருந்தால், தினமும் இந்த வேண்டுதலை செய்துப்பார்.
நான் உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்,
இப்படிக்கு உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.
Source : http://isakoran.blogspot.in/2012/07/3.html


July 22, 2012

ரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை




அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1ஐ இங்கு சொடுக்கி படிக்கவும்.



ரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை

அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நேற்று நான் அனுப்பிய கடிதத்தை படித்து இருப்பாய் என்று நம்புகிறேன். 

நீ ஒரு முஸ்லிமோடு அதிகமாக நட்பாக இருக்கிறாய், உங்கள் இருவரின்  நட்பு அதிகமாக உள்ளது என்று சௌதியில் இருக்கும் என் நண்பன் எனக்கு கூறியபோது, "இதிலென்ன தவறு? எனக்கும் இஸ்லாமியர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள் அல்லவா?" என்று நான் கூறினேன்.  என் தம்பி என்ன குழந்தையா? இவனோடு பேசு அவனோடு பேசாதே என்று கட்டுப்பாடு விதிப்பதற்கு? அவன் நண்பர்களோடு சுதந்திரமாக பழகட்டுமே, சுதந்திரத்திற்கு தடை போடவேண்டாம் என்று நான் என் நண்பனிடம் கூறினேன்.

ஆனால், சில நாட்களுக்கு பிறகு நீ ஒரு மெயில் அனுப்பி "நான் முஸ்லிமாகிவிட்டேன்" என்று கூறினாய், நான் சுயமாக இந்த முடிவை எடுத்தேன் என்றும் கூறினாய். அப்பா அன்று அதிகமாக துக்கப்பட்டார், நான் அவ்வளவு துக்கம் அடையவில்லை, ஏனென்றால் உன்னுடைய பலம் மற்றும் பலவீனம் எது என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீ சுதந்திரமாக எடுத்த முடிவை நான் மதிக்கிறேன். 

நான் உன்னிடம் ஒரு விஷயத்தை பற்றி கேட்க விரும்புகிறேன்.  நீ சுதந்திரமாக இஸ்லாமை தழுவினாய், அதற்கு உனக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், நீ இஸ்லாமை விட்டு வெளியே வர விரும்பினால், அப்படி செய்ய உனக்கு சுதந்திரம் உண்டா? 

உன்னை இஸ்லாமை தழுவும் படி உற்சாகப்படுத்திய உன் நண்பர்கள், நீ மறுபடியும் அதைவிட்டு வெளியேறவேண்டும் என்று விரும்பினால், அவர்கள் உனக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாமல் வெளியேற அனுமதிப்பார்களா? 

நான் ஏன் இந்த கடிதங்களை எழுதுகிறேன் என்பதை உனக்கு விளக்குகிறேன். நீ நம் குடும்பத்தின் ஒரு அங்கம், நீ எங்கு இருந்தாலும், நன்றாக இருந்தால் அது போதும் எங்களுக்கு. ஆனால்,  ஒரு நாள் கர்த்தரிடத்தில் மறுபடியும் நீ வரவிரும்புகிறாய் என்று வைத்துக்கொள்வோம், அப்போது நீ இஸ்லாமை விட்டு வெளியேற விரும்பினால், இஸ்லாம் இடம் கொடுக்குமா? இஸ்லாமியர்கள் உன்னை வாழவிடுவார்களா? இது தான் என் பயம்.

உனக்கு நெருங்கிய நல்ல நேர்மையான இஸ்லாமிய நண்பன் ஒருவன் இருந்தால், அவனிடம் "ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேற விரும்பினால், நீங்கள் அனுமதிப்பீர்களா?" என்று கேட்டு அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறான் என்று கவனித்துப்பார். என் தம்பி இஸ்லாமில் பாதுகாப்பாக இருப்பானா? அவன் வெளியே வரவிரும்பினால் கூட பாதுகாப்பாக இருப்பானா? என்பதை கேட்டு எனக்குச் சொல்வாயா?

இஸ்லாமை விட்டு வெளியேறும் முஸ்லிம்கள் இஸ்லாமிய நாடுகளில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று சிறிது கவனித்துப்பார்? ஷரியா சட்டம் இஸ்லாமியர்களை என்ன பாடுபடுத்துகிறது என்று கவனித்துப்பார். இஸ்லாமை விட்டு வெளியேறியவர்கள் சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனைகளை  செய்தித்தாள்களில் படித்துப்பார்? நீ குழந்தையல்ல, எனவே, அனைத்தையும் சோதித்துப் பார்.

நல்லவேளை நாம் இந்தியாவில் பிறந்தோம், இஸ்லாமிய நாட்டில் பிறக்கவில்லை, அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். ஆனால், அதிகமாக சந்தோஷப்பட முடியாது, இங்கும் மறைவாக அனேக தீங்குகள் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிராக நடந்துக்கொண்டு இருக்கிறது. தம்பி, ஒரு மனிதனுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான பொக்கிஷம், அவன் சுதந்திரமாக வாழுவதும், சுதந்திரமாக முடிவுகளை எடுப்பதுமாகும், இந்த இரண்டும் இந்நாள் வரை உனக்கு இருந்தது, இனி இப்படிப்பட்ட சுதந்திரம் உனக்கு கிடைக்குமோ என்பது தான் என் கேள்வி?

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன். நான் கேட்ட விஷயத்தை மட்டும் உன் நண்பர்களிடம் கேட்டுச் சொல்வாயா? நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" 

இப்படிக்கு, உன் அண்ணன்,
தமிழ் கிறிஸ்தவன்.

July 21, 2012

கடிதம்-1, ரமளான் நாள் 1 – நோன்பு

தலைப்பு: ரமளான் நாள் 1 – நோன்பு
முன்னுரை:
உமரின் தம்பி சௌதி அரேபியாவில் மூன்று வருடங்களாக வேலை செய்கிறார். ஒரு நாள் திடீரென்று 'தான் இஸ்லாமியராக மாறிவிட்டதாக' ஒரு மெயில் அனுப்பினார். அதன் பின்பு குடும்பத்தோடு தொலைபேசியில் பேசுவதையும் சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டு வருகிறார். உமர் இந்த ரமளான் மாதத்தில் தன் தம்பிக்கு கடிதங்கள் எழுத முடிவு செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் ஒரு கடிதத்தை எழுதி தன் தம்பிக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்.
ரமளான் நாள் 1 – நோன்பு
அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
இந்த வருடம் என்னோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவாய் என்று நினைத்தேன், ஆனால், நீ ரமளான் பண்டிகையை கொண்டாடப்போகிறாய்.  இந்த வருடம் டிசம்பர் மாதம் ஊருக்கு வருவாய் என்று நாங்கள் எல்லாரும் காத்திருக்கிறோம். ஆனால், நீயோ இன்னும் இரண்டு வருடங்கள் ஊருக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டாய். உனக்குள் ஏற்பட்ட மாற்றம் பற்றி சிறிது அறிந்துக் கொள்ளலாம் என்றும், நீ இஸ்லாம் பற்றி முழுவதும் அறிந்த பிறகு தான் அதனை தழுவினாய் என்பதை அறிந்துக் கொள்ளவும் என்றும் இந்த கடிதங்களை எழுதுகிறேன்.
நானும் நீயும் ஒன்றாக சேர்ந்து வேதம் வாசித்தோம், ஜெபித்தோம், அனேக விஷயங்களை தியானித்தோம், எனவே உனக்கும் எனக்கும் இடையே இருக்கும் உறவு "அண்ணன் தம்பி" என்ற முறையில் இருந்தாலும், நாம் அதையும் தாண்டி நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். இதன் அடிப்படையில் இந்த ரமளான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய கடிதத்தை உனக்கு எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். இவைகளை நீ படித்து எனக்கு பதில் எழுதுவாய் என்று நம்புகிறேன். இந்த கடிதத்தை கண்டவுடன் நீ இதனை கிழித்துப்போடவேண்டாம், ஏனென்றால், இது உன் நித்தியத்தைப் பற்றிய விஷயமாகும். நீ எடுக்கும் முடிவுகளில் அதிமுக்கியமான முடிவு, உன் நித்தியம்  பற்றிய முடிவாகும். உன்னுடைய வெற்றி இந்த அண்ணனின் வெற்றியாகும், உன்னுடைய தோல்வி இந்த அண்ணனின் தோல்வியாகும்.
இன்று ரமளான் முதல் நோன்பு ஆரம்பமாகியுள்ளது, நீயும் நோன்பு இருக்கிறாய் என்று நம்புகிறேன்.
நாம் இருவரும் அனேக முறை உபவாசம் இருந்துள்ளோம், அந்நாட்களில் அதிகமாக பல விஷயங்களுக்காக ஜெபித்துள்ளோம். உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நான் என் முகத்தை மிகவும் வாடலாக வைத்திருந்த போது என்னை நீ கண்டித்தாய், முகத்தை உற்சாகமாக வைத்திருக்கவேண்டும், மற்றவர்களுக்கு நாம் உபவாசம் இருப்பது தெரியக்கூடாது என்று கூறினாய், அந்தரங்கத்தில் தேவனுக்கு காணப்படவேண்டிய உபவாசத்தை மக்களின் முன்பாக மறந்தும் கூட காட்டக்கூடாது என்று கடிந்துக்கொண்டாய்.   ஆனால், இன்று நீ உபவாசம் இருக்கிறாய், எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையாக எல்லா சடங்காச்சாரங்களையும் செய்கிறாய், இஸ்லாமுக்கு முன்பு வாழ்ந்த 'பல தெய்வ வழிப்பாட்டு மக்கள்' பின்பற்றின "30 நாட்கள் நோன்பு" என்ற சடங்காச்சாரத்தை இன்று நீ பின்பற்றுகிறாய்.  இஸ்லாமிய நோன்பு என்பது 'பல தெய்வங்களை வணங்கும் மக்களின்' மதச்சடங்கு என்று உனக்குத் தெரியுமா? மேலும் இஸ்லாமில் காணப்படும் அனேக சடங்காச்சாரங்களாகிய தொழுகை செய்வதிலிருந்து, மக்காவிற்கு ஹஜ் செய்யும் வரையுள்ள பெரும்பான்மையான சடங்குகள் பழங்குடி மக்கள் பின்பற்றியவைகள் என்று உனக்கு தெரியுமா?
அன்று தேவனுக்கு மட்டும் தெரிந்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு அந்தரங்கத்தில் உன் பக்தியை காண்பித்த நீ, இன்று எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்கிறாய். இதைப் பற்றி நீ சிந்தித்து பார்த்ததுண்டா? கதவு மூடப்பட்ட ஒரு அறைக்குள்ளே உன் பிதாவை நோக்கி அந்தரங்கத்தில் வேண்டுதல் செய் என்ற கட்டளைக்கு எதிராக உலக மக்கள் காணும்படியாக வெளிப்படையாக நீ தொழுதுக்கொள்கிறாய்.
மெய்யான தேவனாகிய யெகோவா தான் 'அல்லாஹ்' என்று நீ சொல்கிறாய், ஆனால், அந்த பைபிளின் மெய் தேவன் விதித்த கட்டளைகளை நீ மறந்துபோனாய்? அந்நிய தெய்வங்களையும், அவர்களின் பாரம்பரியங்களையும் பின்பற்றாதீர்கள் என்று அவர் கட்டளையிட்டு இருக்கும் போது, நீ இஸ்லாமிய போர்வையில், அந்நிய தெய்வத்தை பின் பற்றிக்கொண்டு இருக்கிறாய். 
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும் போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம் (உபாகமம் 18:9) .
நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் (லேவியராகமம் 18:3-4).
நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் (மத்தேயு 6:16-18).
தம்பி, நீ எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து முடிவு எடுப்பவன் என்று எனக்குத் தெரியும், ஆனால், இந்த விஷயத்தில் மட்டும் நீ சரியாக இஸ்லாமை சோதிக்காமல் முடிவு எடுத்துள்ளாய் என்பதை உனக்கு சொல்லிக்கொள்கிறேன். நம்முடைய இந்த கடிதத்தொடர்பு நம் இருவருக்கும் உபயோகமாக இருக்கும். உன்னுடைய புதிய மார்க்கம் பற்றி நீ அறிந்துக்கொண்டவைகளை என்னோடு பகிர்ந்துக்கொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பாகும். எனவே, இதனை நீ நல் முறையில் பயன்படுத்திக்கொள்வாய் என்று நம்புகிறேன்.
இந்த கடிதத்தை படித்த பிறகு எனக்கு நீ பதில் எழுதுவாய் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு,
கிறிஸ்துவிற்குள் உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்


Source : http://isakoran.blogspot.in/2012/07/1.html

June 23, 2009

[ஈஸா குர்-ஆன் - Isa Koran] அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?


அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?

ஆசிரியர்: முடே அல்ஃபதி

பல சமயங்களில் நமது இஸ்லாமிய நண்பர்கள் தங்களது அல்லாஹ்வைக் குறித்து உண்மைக்கு மாறாக மிகவும் நேர்த்தியான ஒரு தோற்றத்தைக் காட்ட முயற்சிக்கிறார்கள். அதாவது அல்லாஹ் பைபிளின் தேவனைப் போல‌, கருணையும் அன்பும் நிறைந்தவராக இஸ்லாமியர்களால் சித்தரிக்கப்படுகிறார்.

தீவிர‌ இஸ்லாமிய நாடாகிய ச‌வுதி அரேபியாவில் என்னுடைய சொந்த ஊரில் ஒரு பக்தி வைராக்கியமான வஹாபி முஸ்லீமாக வாழ்ந்து, கிறிஸ்தவர்களுடன் எவ்விதத் தொடர்புமின்றி வளர்ந்த நான், இப்போது என்னுடைய‌ இஸ்லாமிய மக்கள், கிறிஸ்தவர்களிடம் அல்லாஹ்வைப் பற்றியும் இஸ்லாமைப் பற்றியும் பகிர்ந்துகொள்ளும் ஒரு சில விவாதங்களைக் குறித்து மிகவும் ஆச்சரியப்படுகிறேன். அவர்கள் அல்லாஹ்வைக் குறித்து, மசூதிகளில் நான் ஒருபோதும் கேள்விப்பட்டிராத வண்ணமாயும், குறிப்பாக மதப் பற்றான முஸ்லீம்களின் மத்தியில் சொல்லப்படாத வகையினில் அவரை ஒரு மாறுபட்ட விதமாகச் சித்தரிக்கின்றார்கள். மக்கள் அல்லாஹ்வை, கூப்பிடும் போதெல்லாம் ஜனங்களின் ஜெபங்களைக் கேட்டு அதற்கு பதிலளிக்கும் கடவுளாக அல்லாஹ்வை சித்தரிக்க முஸ்லீம்கள் அரும்பாடு படுகிறார்கள். இந்தக் காரணத்திற்காக அவர்கள் சில கு‍ர்‍ஆன் வசனங்களை நம் முன் வைக்கிறார்கள், ஆனால் அவைகளைச் சற்று ஆராய்வோமானால், அவர்களின் கூற்றுக்கு எதிரானவையாக அவ்வசனங்கள் இருப்பதைக் காணலாம். அதாவது, அவர்கள் காட்டும் கடவுள், சாதாரண மனிதர்களைப் போலவே அவர்கள் மீது உண்மையான அக்கரை கொண்டவராக அல்லாமல், மாறாக தமது நலனிலேயே குறியாக இருப்பவராகவே இவ்வசனங்கள் நமக்குக் காண்பிக்கின்றன‌.

நமது ஜெபங்களுக்குப் பதிலளிப்பதில் அல்லாஹ் விருப்பம் கொண்டவராகவோ அல்லது அவ‌ர் நமது விண்ணப்பங்களை நாம் இருக்கும் வண்ணமாகவே அவரிடம் சொல்ல‌ சாத்தியமுள்ளவராகவோ நாங்கள் ஒருபோதும் கற்பிக்கப்பட்டதில்லை. ஆயினும், ஒரு மேற்கத்திய நாட்டில் வசிக்கும் நான், பைபிள் போதிக்கும் தேவனின் சாயலை இஸ்லாமியர்கள், அல்லாஹ்வுக்கு ஒப்பாக்கவும், அவர் பைபிளின் தேவன் போன்றே கருதப்படவும் வேண்டுமென்று முயற்சிக்கிறார்கள் எனக் காண்கிறேன். அதாவது, வேறு விதமாகச் சொல்வோமாயின், அல்லாஹ்வின் தோற்றத்தை அவர்கள் "கிறிஸ்துவ மயமாக்க" (Christianize Allah's image) முயற்சிக்கிறார்கள் .

இச்சிறிய கட்டுரையில், மேற்கத்திய முஸ்லீம்கள் அல்லாஹ்வை எவ்விதம் சித்தரிக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தைக் காண்பிக்க விரும்புகிறேன். இதற்காக இஸ்லாமியர்கள் பொதுவாகக் குறிப்பிட்டுக் காட்டும் இரண்டு குர்‍ஆன் வசனங்களையும், அதற்கான இஸ்லாமிய அறிஞர்களின் அதிகார பூர்வமான விளக்கங்களையும் எடுத்துக் கொள்ளுவோம். அவைகளின் மூலம் நமது வாசகர்களும், குறிப்பாக இஸ்லாமின் ஆதரவாளர்களும், "அல்லாஹ்வின் கருணையும் நம் ஜெபங்களுக்கான அவரின் பதிலும்" சில இஸ்லாமிய நண்பர்களின் மனதில் உதித்த‌ புதிய‌ விருப்பத்தின் தோற்றமே தவிர வேறல்ல என்பதினைத் தாமே புரிந்துகொள்ளும் வகையில் ஒரு எளிதாக்கப்பட்ட விளக்கத்தினைக் கொடுக்க முற்படுகின்றேன்.

நாம் ஆராய‌ப்போகும் முத‌லாவ‌து வ‌ச‌ன‌ம் சூரா: 2:186 ல் அட‌ங்கியுள்ள‌து

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.

"And when My servants ask you concerning Me, then surely I am very near; I answer the prayer of the suppliant when he calls on Me, so they should answer My call and believe in Me that they MAY walk in the right way." – Q. 2:186 Shakir (emphasis ours)

இந்த வசனம் எடுத்த எடுப்பில், இஸ்லாமிய‌ரின் க‌ட‌வுளாகிய‌ அல்லாஹ், அவரைப் பின்பற்றுவோரின் ஜெபங்களைக் கேட்டு அவைகளுக்குப் பதிலளிப்பவராக தெரிந்தாலும், இவ்வசனத்தின் வரிகளுக்கு ஊடே இழையோடியிருக்கும் அர்த்தத்தைச் சிந்திப்போமானால், இவ்விதம் நடைபெறுவதற்குச் சில நிபந்தனைகள் இடப்பட்டிருப்பதினைக் காணலாம்.

1. அல்லாஹ்வை நோக்கிக் கூப்பிடும் நபரை இந்த வசனம் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கைக்கொள்ளும்படிச் சொல்கின்றது. அதாவது அந்த நபர் தனது கடமையைச் செய்தல் வேண்டும்; அநீதியானவற்றையோ அல்லது அல்லாஹ் வெறுக்கும் காரியங்களையோ செய்தல் கூடாது.

2. அந்த நபர் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். குழப்பம் இங்குத் தான் உருவாகின்றது. இந்த வசனம் அல்லாஹ்வால் அவரது அடியார்க்கு (இஸ்லாமியர்கள்) கொடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் அல்லாஹ்வை நம்பும்படிக்கு மறுபடியும் கேட்டுக் கொண்டிருக்கப்படுவதின் அவசியம் என்ன? இது அல்லாஹ் அவர்களின் பக்தியினையும் அவர்களது உள்ளுணர்வினையும் குறித்துச் சந்தேகத்துடன் இருப்பதாகத் தோற்றமளிக்கிறது. உண்மையில், இவ்விதமான எதிர்பார்ப்பு, அல்லாஹ், அவரது அடியார்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போதெல்லாம் அவர்களுக்கு பதிலளிக்கும்படியான உறுதியினை வழங்கும் தெய்வம் அல்ல என்பதனையே காட்டுகின்றது.

3. இந்த‌ வ‌ச‌ன‌ம், அல்லாஹ்வை நோக்கிக் கூப்பிடும் ஒருவருக்கு, அவர் அல்லாஹ்வின் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நல் வழியில் நடந்திருப்பினும் அவ‌னின்/அவ‌ளின் ஜெப‌ங்க‌ளுக்கு அவ‌ர் உண்மையிலேயே ப‌தில‌ளிப்பார் என்கின்ற வகையில் எந்த விதமான‌ உத்திரவாத‌த்தையும் கொடுக்க‌வில்லை.

அல்-குர்துபி (Al Qurtubi)[1], இந்த வசனத்தின் விளக்க உரையில், ஒரு முஸ்லீமின் வேண்டுதல் அல்லாஹ்வினால் பதிலளிக்க‌ப்படுவதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன எனக் குறிப்பிடுகிறார்:

• அல்லாஹ்வை நோக்கி ஜெபித்து விண்ணப்பம் செய்யும் ஒருவர் அறிந்தோ அல்லது அறியாமலோ அல்லாஹ்விற்கு எதிரான பாவங்களைச் செய்து இருத்தலாகாது. இதற்கு ஆதாரமாக அவர் சூரா 7:55 ஐக் காட்டுகிறார்.

(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.

"வரம்பு மீறுதல்" என்றால் என்ன‌?

அல்-குர்துபி சொல்வதின்படி இதன் அர்த்தம் என்னவென்றால்:

• தடை செய்யப்பட்ட எவற்றையும் கேளாதிருத்தல்

• உங்களுடைய வாழ்கையில், உங்கள் பணத்திற்கு வட்டி வாங்குதல், பிறர் பொருளை அபகரித்தல், பணப் பற்றுவரவில் நாணயமற்று இருத்தல் போன்ற பாவங்கள் செய்து கொண்டிருக்கும் போது அல்லாஹ்விடம் எதனையும் கேளாதிருத்தல்.

• தான் கேட்பதற்கு அல்லாஹ் பதிலளிப்பாரென்ற நம்பிக்கையின்றி ஒரே காரியத்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருத்தல்.

• அல்லாஹ்வை நோக்கிக் கூப்பிடும் ஒருவர் தெளிவான சிந்தையுடன் தூய மனதுடன் அவ்வாறு செய்ய வேண்டும். ஜெபிக்கும் போது மனதினை வேறு திசையில் அலைய விடக்கூடாது.

உண்மையில், இபின் அட்டாவின் (Ibn Atta) கூற்றுப்ப‌டி அல்லாஹ்வை வேண்டிக்கொள்ளும் போது, வேண்டிக்கொள்ளும் ந‌ப‌ர் க‌டைப்பிடிக்க‌ வேண்டிய‌ சில‌ நிபந்தனைக‌ள் உள்ளன‌ என‌ அல்-குர்துபி சொல்கிறார். இந்த‌ நிபந்த‌னைக‌ள் கீழ்க‌ண்ட‌வ‌ற்றை உள்ள‌ட‌க்கிய‌து:

• மனத்தாழ்ச்சியுடன் கூடிய பணிவு, பயம், நம்பிக்கை, தொடர்ந்து விண்ணப்பித்தல், தடை செய்யப்படாத உணவையே (ஹலால்) உண்ணுதல்.

• விண்ணப்பம் செய்தல் உண்மையுடன் கூடியதாக இருக்க வேண்டும் என இபின் அட்டா கூறுகிறார்.

• விண்ணப்பம் செய்தல், கீழ்கண்டவாறு ஏற்ற வேளையிலே செய்யப்படுதல் வேண்டும்:

o உப‌வாச‌த்தை முடிக்கும் போதோ அல்ல‌து விடிய‌லுக்கு முன்பாக‌ உப‌வாச‌த்தைத் தொட‌ங்கும் போதோ, தொழுகைக்கான‌ அழைப்பிற்கும் தொழுகை ஆரம்பிக்கும் வேளைக்கும் இடைப்பட்ட நேரம், நாளின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொழுகை வேளைக்கு இடைப்ப‌ட்ட‌ நேர‌ம், ம‌ற்றும் புத‌ன் கிழ‌மைக‌ள். ஏனைய‌ வேளைக‌ள் தேவைக்கேற்ப துரித ம‌ற்றும் அவ‌ச‌ர‌ கால‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கும்.

o விண்ணப்பத்தின் முதன்மையான நோக்கம் முஹம்மது நபியினை மகிமைப்படுத்தும் வண்ணம் இருத்தல் வேண்டும்.

o விண்ணப்பம் கேட்பதற்குத் தெளிவாக இருக்கும் வண்ணம் செய்தல் வேண்டும். முணுமுணுத்தல் இருத்தலாகாது.

மேலே கண்ட நிபந்தனைகளை வாசிக்கும்போது, கட்டுகளுடன் கூடிய ஒரு சட்டரீதியான ஒப்பந்த பத்திரத்தினை வாசிப்பது போன்ற ஒரு உணர்வினையே ஒருவர் பெறுவாரேயன்றி, திறந்த வாசலை உடையவர் என்று வர்ணிக்கப்படக்கூடிய கடவுளின் (அல்லாஹ்) வார்த்தைகளைப் ப‌டிக்கும் உணர்வினை அடையமாட்டார்.

நாம் ஆராய‌ப் போகும் அடுத்த‌ வ‌ச‌ன‌ம் சூரா 40:60ல் அட‌ங்கியுள்ள‌து.

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

உங்கள் இறைவன் கூறுகிறான்; "
என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்."

"And your Lord says: Call upon Me, I will answer you; surely those who are too proud for My service shall soon enter hell abased" – Q. 40:60 Shakir

அரபியில் இது கீழ் கண்டவாறு வாசிக்கப்படுகிறது[2].

"Waqala rabbukumu odAAoonee astajib lakum inna allatheena yastakbiroona AAan AAibadatee sayadkhuloona jahannama dakhireena"

மேலே காணப்பட்ட வசனத்தில் ஆய்வுக்குரிய வார்த்தை "Call upon Me" அரபி மொழியில் "odAAoonee" (ادْعُونِي) என்பதாகும். இதன் விளக்கத்தினை/விளக்கவுரையை[3] நாம் வாசிப்போமானால், ஆரம்ப கால இஸ்லாமியர்கள் "odAAoonee" (ادْعُونِي)" என்ற வார்த்தைக்கு "என்னையே தொழுதுக்கொள்ளுங்கள் – Worship me" அல்லது "சேவியுங்கள் – Serve me" என்றே பொருள் கொண்டார்கள் என்பதினைக் காணலாம். உண்மையில் இஸ்லாமின் நபியாகிய முஹம்மதுவிடம், இந்த வசனத்தின் பொருள் குறித்துக் கேட்டபோது, "Call upon Me" அல்லது "odAAoonee" (ادْعُونِي)" என்ற வார்த்தை அரபி மூலத்தில் "D-A-A" (دعا) என்பதில் இருந்து உருவாக்கப்பட்டது எனக் காண்பித்தார். அவரது கூற்றின்படி இந்த வார்த்தையின் அர்த்தம் என்னவெனில் "அல்லாஹ்வைத் தொழுகையின் மூலம் சேவித்தல் - serve Allah in worship" என்பதாகும். (அதாவது அரபியில் Ibada). மேலும், முஹம்மது உபயோகித்த வார்த்தையை நாம் அரேபிய அகராதியில்[4] பார்த்தால் ("A-B-D" (عبد) ) என்ற மூல வார்த்தை "சமய தொழுகையை – Religious Worship" குறிப்பதை காணலாம்.

இஸ்லாமிய‌ர்க‌ள், அல்லாஹ் தங்களின் ஜெபங்களுக்கு பதிலளிக்கக் காட்டும் ஆர்வத்திற்கு ஆதாரமாகச் சொல்லும் இந்த இரு வசனங்களை நன்கு ஆராய்ந்த பின்பு இவைகளில் இதற்கான சான்றோ, அல்லாஹ்வின் பதிலளிக்கும் முனைப்போ அல்லது அவர்களை அவர் இக்கட்டுகளிலிருந்து காப்பாற்ற விரைந்து வரும் பண்போ இருப்பதாக சிறிதளவேனும் நம்மால் காண முடியவில்லை. இதற்கு ஒப்பீடாகவுள்ள மெய்யான கடவுளாகிய பைபிளின் தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு தங்களின் ஜெபங்களுக்கு பதிலினை காலங்காலமாக வாக்களிப்பவராக இருக்கிறார்.

"ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப் படுத்துவாய்." (சங்கீதம் 50:15)

"
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (மத்தேயு 7:7-11)

"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்." (யோவான் 14:12-14)

"அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில்
கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.… இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்." (யோவான் 16:23-27)

"அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.(எபேசியர் 3:19-21).

"
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.." (I யோவான் 5:14-15)

இதன் பயனாக, நமது இஸ்லாமிய நண்பர்கள் முன்பு நாம் குறிப்பிட்ட‌ வசனங்களை முன்னிறுத்தி முனைவதினைக் குறித்து அவர்கள் தவறாக நடத்தப்படுகிறார்களோ அல்லது தவறாகப் பிறரை வழி ந‌டத்த விழைகிறார்களோ என்ற சந்தேகத்துடன் பார்ப்பதைத் தவிர‌ நமக்கு வேறு வழி இல்லை. இதன் பின்னணியில், உண்மையாகவே இக்காரியத்தினை ஆராய முற்படும் இஸ்லாமியர்களை நான் வரவேற்பதுடன், தேவன் தாமே இவர்களின் சத்திய தாகத்தினை ஆற்றும்படிக்கு வேண்டிக்கொள்கிறேன்.

"ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" (யோவான் 8:36)

கேட்கிறவரும் பதிலளிப்பவருமாகிய நம் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கே, சதாகாலங்களிலேயும் மகிமையும் மகத்துவமும் உண்டாகியிருப்பதாக, ஆமென்.

Footnotes

1
Arabic source, translation is my own.
2
Source
3
Ibn Kathir, Al Jalalayn, Al Tabari and Al Qurtubi
4 Lane's Lexicon,
source

ஆங்கில மூலம்:
Does Alah Answer Prayers?

ஆசிரியரின்
இதர கட்டுரைகளை படிக்க‌வும்