இலங்கையின் வடக்கே மாங்குளம் மல்லாவி வீதியில் இன்று இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கிளிநொச்சியில் செயற்பட்டு வரும் வடக்குகிழக்கு மனித உரிமைகள் பிரதேச செயலகத்தின் தலைவராகிய அருட்தந்தை கருணரத்னம் அடிகளார் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவல் யாழ் ஆயர் இல்லத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். ஆனால் தங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் அவர்களே இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். | |||||
அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
Showing posts with label அருட்தந்தை. Show all posts
Showing posts with label அருட்தந்தை. Show all posts
April 21, 2008
இலங்கை படையின் குண்டுத்தாக்குதலில் மனித உரிமைகள் தலைவர் பலி
Labels:
அருட்தந்தை,
மனித உரிமை
Subscribe to:
Posts (Atom)