அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 10, 2014

இஸ்லாமிய அரச குடும்பம் - பாகம் 2 - புதிய அரசர்

அல்லாஹ் என்ற வார்த்தையை பிறமதத்தவர்

பயன்படுத்தக் கூடாதா..??



அல்லாஹ் என்ற வார்த்தையை பிறமதத்தினர் பயன்படுத்தக் கூடாது என்ற மலேசிய
நீதிமன்ற தீர்ப்பை உலக இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாத்துக்கு ஒரு
வெட்கமாகவும் தலைகுனிவாகவும் கருதும்போது, TNTJ அந்த சட்டத்தை அல்லாஹ்வே
போட்ட சட்டமாக நினைத்து அதனை ஆதரித்து அறிக்கையிடுவது அவர்களின்
அறியாமையை காட்டுகிறதா? இல்லை TNTJ எது சொன்னாலும் சரியாகதான் இருக்கும்
என்று தலையாட்டும் அப்பாவி இஸ்லாமியரை ஏமாற்றி பிழைப்பு நடாத்துவதை
காட்டுகிறதா? என்பதுதான் இப்போதுல்ல சந்தேகம்.



முஹம்மது நபியின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பதில் எந்த இஸ்லாத்தை
சேர்ந்தவர்களுக்கும் இதுவரை கருத்துமுரண்பாடு வந்ததாக தெரியவில்லை. (இந்த
கட்டுரையை வாசித்துவிட்டு TNTJக்கு வரலாம்). முஹம்மது பிறக்கும்போது
மக்காவில் இஸ்லாத்தை பின்பற்றுகிறவர்கள் யாரும் இருக்கவில்லை என்பது
இஸ்லாமியரின் கருத்து. ஏன் முஹமதுவை வளர்த்து, வியாபாரம் சொல்லிகொடுத்த
முஹமது நபியின் சித்தப்பாவும் இஸ்லாத்தை தழுவ வில்லை என்றே இஸ்லாமிய
சரித்திரம் சொல்கிறது. அப்படியானால் அல்லாஹ் என்ற வார்த்தை இஸ்லாத்துக்கு
முன்பு இருந்தது என்பதற்கு சிறந்த ஆதாரம் முகமது நபியின் இனிஸியல் ஆகும்!



அல்லாஹ் என்ற வார்த்தை இஸ்லாத்துக்கும் இஸ்லாமியருக்கும்தான் சொந்தம்
என்று சொல்லும் TNTJ முஹமது இப்னு அப்துல்லாஹ் என்ற முஹமது நபியின்
முழுபெயரில் வரக்கூடிய அப்து – அல்லாஹ் என்பது இஸ்லாத்துக்கு மட்டும்
சொந்தமான பெயர் என்று சொல்வீர்களானால் முஹமது நபி தனது 40 வது வயதின்
பின்புதான் தனது தகப்பனார் அல்லாஹ்வின் அடிமையாகதான்
இருந்திருக்கவேண்டும் என்ற தீர்மானத்தில் தனது பெயருடன் அப்துல்லாஹ்
என்று தந்தையின் பெயரை சேர்த்துகொண்டார் என்ற முடிவுக்கு
வரவேண்டியிருக்கும். அதாவது 40 வயது வரைக்கும் முஹமது தந்தை யார் என்று
தெரியாமல் இருந்தார் என்ற முடிவுக்கே வரவேண்டிவரும். இதனை எந்த
இஸ்லாமியரும் ஏற்கமாட்டார் என்றே நான் நம்புகிறேன். ஆகவே அல்லாஹ் என்ற
சொல் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னமே பாவிக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமே
முஹமது நபியாவார்.



அதிகாலையிலேயே TNTJ ரசிகர்களை குஷிபடுத்தும் TNTJ நடிகர் சங்க நகைச்சுவை
நாயகம் செய்யிது இப்ராஹிம் அவர்கள் "அல்லாஹ் என்ற வார்த்தையை
கிறிஸ்தவர்கள் பாவிப்பதால் அல்லாஹ் அழுதார் போன்றெல்லாம் சொல்லி
அல்லாஹ்வை கேவளப்படுத்துவார்கள்" என்று சொன்ன ஜோக் TNTJ தலையாட்டிகளுக்கு
நல்லதொரு விருந்தாகவே அமைந்துவிட்டது. ஆனால் குர்ஆனை விடவும் பழைமையான
அரபு பைபிளில் தேவன் என்ற இடத்தில் அல்லாஹ் என்ற சொல்
பாவிக்கப்பட்டுள்ளது மலேசிய நீதிபதிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால்
பைபிளை கரைத்து குடித்தமாதிரி பேசும் இந்த TNTJ இஸ்லாமியருக்கு
தெரியவில்லையே?



பைபிளின் முதல் புத்தகத்தின் முதல் வசனம் "ஆதியிலே தேவன் வானத்தையும்
பூமியையும் படைத்தார்." என்ற வசனம் அரபு பைபிளில் "பில்பித்இ கலக –
அல்லாஹு சமாவாதி வல் அர்ழ்" என்றுதான் உள்ளது. இது குர்ஆனுக்கு
முற்பட்டது என்பதை சரித்திரம் தெரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.

அப்போஸ்தலர்

2 அதிகாரம்

6. அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள்
பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.

7. எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ,
பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?

8. அப்படியிருக்க நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக்
கேட்கிறோமே, இதெப்படி?

9. பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா,
கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,

10. பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச்
சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே
சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,

11. கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய
மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.



பெந்தேகோஸ்தே நாளில் அரபிகள் இருந்ததையும் அரபு மொழியில் தேவனுடைய
மகத்துவங்களை பேசகேட்ட இந்த அரபிகள் தேவன் எந்த சொல் வரும் இடத்தில் எந்த
அரபு சொல்லை கடவுள் தேவன் என்பதற்கு அரபியில் பாவித்திருப்பார்கள் என்ற
இஸ்லாமிய யூகத்தையும் TNTJ தங்கள் தலையாட்டி ஆதரவாளர்களுக்கு
தெளிவுபடுத்தினால் நலமாகயிருக்கும் என்றே கருதுகிறேன்.



கடைசியாக கசாப்புக்கடை உதாரணம் ஒன்றை சொல்லி கிறிஸ்தவர்கள் அல்லாஹ் என்று
சொல்வதில் எந்த தப்பும் இல்லை என்று சொல்லாமல் சொன்னார் செய்யிது
இப்ராஹிம். தயவு செய்து அந்த கசாப்பு கடை உதாரணத்தை இன்னுமொரு முறை
அவதானியுங்கள். "கசாப்புக்கடையில் இருந்து தலையை வெட்டு என்பதற்கும் போர்
களத்திலிருந்து தலையை சீவு என்பதற்கும் வித்தியாசம் உண்டு என்றார். நான்
நினைக்கிறேன் வெட்டுவது சீவுவது என்ற இரண்டு சொற்களையும் தலையை
துண்டித்தல் என்ற அர்த்ததில் சொன்னாலும் சொல்லும் இடத்தை பொருத்து
வேறுபடுகிறது என்பதை அவர் சொல்லவந்தாலும். தங்களின் பொய்
பிரச்சாரத்துக்கு அது எதிராக இருக்கிறது என்பதை பற்றி எந்த கவலையும்
அவருக்கு இல்லை. ஏனெனில் தனது நகைச்சுவையை ரசிக்கும் கூட்டத்துக்கு
சிந்திக்கதெரியாது என்ற தைரியம் அவருக்கு!



ஆம் கசாப்புக்கடையிலிருந்து தலையை வெட்டு என்பதற்கும் போர்களத்தில் தலையை
வெட்டு என்பதற்கும் எப்படி ஒற்றுமையில்லையோ அதேபோல பைபிளில் அல்லாஹ்
என்பதற்கும் குர்ஆனில் அல்லாஹ் என்பதற்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை.
மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. இந்த நிலைப்பாட்டில்
ஏகோபித்த கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். அநேக கிறிஸ்தவ அறிஞர்கள் பல
ஆண்டுகளாக அல்லாஹ் என்ற வார்த்தையை பாவிக்கவே வேண்டாம் என்று சொல்வதை
நாங்கள் அவதானித்து வருகிறோம். ஆனாலும் அரபு கிறிஸ்தவர்கள் அரபியில்
கடவுள் என்ற வார்த்தைக்கு அல்லாஹ் என்பதை விட்டு வேறு வார்த்தை
இல்லாததாலும் குர்ஆனுக்கும் இஸ்லாத்துக்கும் முன்பே அரபு கிறிஸ்தவர்கள்
தேவன் என்ற இடத்தில் அல்லாஹ் என்றும் கர்த்தர் என்ற இடத்தில் ரப்பு
என்றும் பாயன்படுத்தி வந்தபடியாலும் இன்றும் அந்த வார்த்தையை
பாவிக்கின்றனர்.



உண்மையில் அரபு கிறிஸ்தவர்களுக்கும் அரபு பைபிளுக்கும் சொந்தமான அல்லாஹ்
என்ற வார்த்தையை ஒரு சூழ்ச்சிக்காரனுக்கு கொடுத்த இஸ்லாமியருக்கு
விரோதமாக கிறிஸ்தவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கவேண்டும்! ஆனால்
கிறிஸ்தவர்கள் அகில உலகை படைத்த ஏக இறைவனின் கிருபையால் இஸ்லாமியரும்
இரட்சிக்கப்படவேண்டும் என்ற வாஜ்ஜையில் அவர்களுக்கா இறைவனிடம் கையேந்திக்
கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியரோ சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்து
அவற்றில் தங்களுக்கு உதவிகளை எதிர்பார்த்து நீதிமன்றங்களில் கைகளை
ஏந்திக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் ஏகத்துவம் என்பதுபோல
தமாஷ்பண்ணிகொண்டிருக்கிறார்கள் இந்த TNTJ.



குறிப்பு - மலே மொழியில் இறைவன் என்பதற்கு என்ன என்ன சொற்கள் உள்ளது.
ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் எந்த சொல்லை பாவித்தார்கள் என்று அதுகுறித்த
அறிவுள்ள யாராவது ஒரு கட்டுரையை எழுதினால் உதவியாக இருக்கும்.





--
Source : http://isakoran.blogspot.in/

0 comments: