அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

March 10, 2012

TNTJ-வருவோம் ஆனா...

SAN அனுப்பின மின்னஞ்சலின் தமிழாக்கம்

மாம்சத்தில் வந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்று அறியப்பட்டவரும் உண்மையான எல்லா தீர்க்கதரிசிகளாலும் அழைக்கப்பட்டவரும் உண்மையான ஒரே இறைவனுமாகிய யொகோவாவின் நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக. ஆமென்.

அன்புள்ள TNTJ நண்பர்களுக்கு,
மார்ச் 8, 2012 அன்று நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றோம்.
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எங்கள் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிய எங்கள் தலைப்பிலே உங்களோடு விவாதித்தோம், அதன் வீடியோ பதிவுகளை எல்லோரும் பார்க்கும் விதத்தில் பதிவேற்றம் செய்தும் இருக்கின்றோம். குர்-ஆன் இறைவனுடைய வார்த்தை என்று நீங்கள் உண்மையிலேயே விசுவாசிப்பீர்களானால், முஸ்லீம்களாக, ஒரு பெரிய ஜமாஅத்தாக இருக்கும் நீங்கள், இந்த விவாதத்திலிருந்து தப்பிக்க, இந்த விவாதம் இரத்து செய்யப்படுவதற்கு எதாகிலும் வழிவாசல்கள் மற்றும் காரணங்கள் கிடைக்காதா என்று தேடிக்கொண்டே, விவாதம் செய்ய விருப்பம் உடையவர்களாக பாசாங்கு செய்து கொண்டு இருப்பதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

காவல் துறை தடை உத்தரவுக்குப் பின்பு, காவல் துறையினரின் ஆணைக்கு இணக்கமான விதத்தில், உங்களுடைய அலுவலகத்தில் வந்து ஒளிப்பதிவுடன் கூடிய தனிப்பட்ட ஒரு விவாதத்தை செய்ய நாங்கள் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டோம். ஆனால் நாங்கள் சட்டத்தை மீற மாட்டோம் என்பதை முழுவதுமாக அறிந்த நீங்கள் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு நடைபெறும் என்று வேண்டுமென்றே தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தீர்கள். குர்-ஆன் இறைவனுடைய வார்த்தை என்று உண்மையிலே நீங்கள் நம்புகிறவர்களாக இருந்தால், அதை நிரூபிக்கத் திறமையுடையவர்களாயிருந்தால், ஒளிப்பதிவுடன் கூடிய தனிப்பட்ட விவாதத்திற்கு நீங்கள் சொன்னபடி வந்து விவாதித்து, பிறகு விருப்பமுடையவர்களுக்கு அந்த ஒளிப்பதிவை கொடுத்திருக்கலாம். அதே வாய்ப்பை ஜனவரி 28ம் தேதி நீங்கள் நடத்திய நாடகத்திற்கு பிறகும் நாங்கள் கொடுத்தோம் ஆனால் இன்னமும் நீங்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்ல. நீங்கள் குர்-ஆனை இறைவனுடைய வேதம் என்று உண்மையிலே நம்புபவர்களாக இருந்திருந்தால், எங்களிடம் அதை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்த நீங்கள்தான் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை எங்களுக்குத் தந்திருக்க வேண்டும். உண்மையிலேயே குர்-ஆன் மீதான விவாதம் நடைபெறவேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்பியிருந்தால், சென்னை காவல் துறையினரிடம் சென்று ரத்து செய்த ஆர்டரை நீக்க வேண்டும் என்று கோருவதற்கு முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் முயற்சி எடுக்க ஆரம்பித்த பிறகும் கூட எங்களுடன் வருவதற்கு நீங்கள் மறுக்கிறீர்கள்.

நீங்கள் குர்-ஆனை இறைவனுடைய வேதம் என்று உண்மையிலே நம்புபவர்களாக இருந்திருந்தால், எங்களிடம் அதை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்த நீங்கள்தான் விவாதம் நடப்பதற்கு முயற்சி எடுக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்ற போதிலும், எங்களுடைய செலவிலே விவாதத்தை வேறொரு இடத்தில் நடத்துவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று சலுகை அளித்தால், குறைந்த பட்சம் அதற்காவது ஒத்துழைப்பு தருவீர்கள் என்று நாங்கள் நினைத்தோம். நீங்கள் விவாதம் செய்வதற்கு விருப்பமுள்ளவர்களாக இருக்கிறிர்கள் என்று மக்களை நம்பவைத்து முட்டாளாக்கி, அதே வேளையில் இந்த விவாதம் ரத்து செய்யப்படவேண்டும் என்று விரும்புகிறவர்களாக எங்களுக்குத் தோன்றுகிறது. சட்டப்பூர்வமான நடைமுறைக்குந்த மூன்று விருப்ப தெரிவுகள் அனைத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கும் போது, கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நடப்பதற்கு நீங்கள் மறுக்கும் நிலையிலும் ஏற்கனவே குறிப்பிட்டது போல செலவுகளை நாங்களே ஏற்றுக் கொண்டு விவாதத்தை நடத்த நாங்கள் தாயராக இருக்கும் போது, உங்களால் செய்யக் கூடிய சிறிய ஒரு காரியம் என்பது இந்த விவாதம் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது தான். ஏதாவது நொண்டிச் சாக்குகளையும் தப்பிக் கொள்ள வழிவாசல்களைத் தேடுவதின் மூலம் நீங்கள் உங்களையே முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள், மற்றவர்களை அல்ல.

நீங்கள் முன்வைத்தை விசயங்களைப் பற்றி முதலில் பேசுவோம்:
(அ) இந்த விவாதமானது இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ போதனைகளை மிகவும் சிறப்பாகப் புரிந்து கற்றுக் கொள்ள உதவக் கூடியதாக இருக்க முடியாது என்று நீங்கள் நினைப்பதால், காவல் துறை ஆய்வாளருக்கு கொடுக்க வேண்டிய கடிதத்தின் வரைவு மாதிரி மாற்றப் படவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். முந்தின விவாதத்தில் நீங்கள் தகுந்த ஆதாரங்களோடு, சரியான வாதங்களை முன் வைப்பதை விட, நீங்கள் ஏன் அதிகம் இழிவான வார்த்தைகளையே பயன்படுத்தினீர்கள் என்பதை விளக்குவதாக் இருக்கின்றது. விவாதமானது மார்க்கங்களைப் பற்றிய சிறந்த புரிந்துகொள்ளுதலில் உதவுக்கூடிய அறிவுசார்ந்த ஒன்றாக இருக்கும் அதே வேளையில், பொய்யானவற்றையும் அம்பலப்படுத்திக் காட்டும் என்று நாங்கள் நம்புகிறோம். எந்த இடத்திலும் காவல் துறை அனுமதிக்கு சமர்ப்பிப்பதற்கு தேவையான பொருத்தமான எல்லாக் குறிப்புகளோடும் நாங்கள் அந்த வரைவு மாதிரியை எழுதினோம். இருப்பினும், எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற சாக்கு போக்கில் சென்னையில் நடந்த விவாதம் பற்றியும் அந்த விவாதத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதையும் நீங்கள் குறிப்பிட விரும்புகிறீர்கள். உங்களுடைய வாதத்தின் படியே நாம் செய்வோமானாலும், தடையைக் குறித்தும் நாம் குறிப்பிட வேண்டும், ஒரு வேளை ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் அதிலிருந்து எல்லாக் காரியங்களும் குறிப்பிடப்பட வேண்டும். உங்களுடைய வாதத்தை நாம் நடைமுறைப் படுத்துவோம் எனில், குழுவின் சில நபர்களுக்கு அவர்களுடைய சொந்த மார்க்கத்தினரிடமிருந்தே அபயாம் ஏற்படும் சூழல் இருக்கிறது என்பதை கேரளா காவல் துறையினர் அறிந்து கொண்டு கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்துவிடாதவாறு, குழுவின் சில முக்கியமான நபர்களைப் பற்றியும் அவர்களுடைய பாதுகாப்பிற்கு இருக்கும் அபாயமான சூழலையும் நாம் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். உங்களுடைய உள்நோக்கத்தை நாங்கள் அறிந்தவர்களாக இருப்பினும், எங்களால் முடிந்த அளவிற்கு உங்களுடைய யோசனைகளோடு இணங்கி செயல்பட்டு காவல் துறை அனுமதிக்காக கொச்சியில் சமர்ப்பிப்போம், உங்களுடைய ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்.
(ஆ) கொச்சி காவல் துறையிடம் நீங்கள் எங்களோடு வரமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நீங்கள் வரவேண்டியவர்களாக இருந்தாலும், நாங்கள் தனியே போக முடியும் என்பதை கூறியிருக்கிறோம். நாங்கள் தனியே போவோம். இருப்பினும், உங்கள் பிரதிநிதிகளை பார்க்க வேண்டும் என்று காவல் துறையினர் வலியுறுத்துவார்கள் எனில், நீங்கள் எங்களோடு வர வேண்டும். அதைத் தான் நாங்கள் முந்திய மின்னஞ்சலிலும் எழுதினோம் அதைத் தான் இப்போதும் எழுதுகிறோம்.
(இ) எப்படியாவது இந்த விவாதம் நடந்தே தீர வேண்டும் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். நீங்கள் உண்மையிலேயே எதிர்பார்ப்பது அதைத்தானா? அப்படியென்றால், இரு தரப்பினரும் சோந்து காவல் துறையை அணுக வேண்டும் என்று கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம் தெளிவாகக் கூறுகின்ற நிலையிலும், எங்களோடு சேர்ந்து சென்னை காவல் துறையினரிடம் தடையுத்தரவை நீக்கும்படி கேட்பதற்கு நீங்கள் ஏன் வர மறுக்கிறீர்கள்? ஒளிப்பதிவுடன் கூடிய ஒரு தனிப்பட்ட விவாதத்திற்கு ஏன் நீங்கள் ஆயத்தமாக இல்லை? கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தில் இல்லாதிருக்கும் நிலையில் நேரடி ஒளிபரப்பு செய்தே ஆகவேண்டும் என்று ஏன் வலியுறுத்திக் கொண்டிருக்கிறீர்கள். எந்த நிலையிலும் குர்-ஆன் விவாதத்திலிருந்து ஓடி ஒளியும் உங்கள் உண்மையான நிறத்தை ஜனங்கள் பார்த்து விடுவார்கள் என்று நீங்கள் பயப்படுவதால் ஒப்பந்தத்தில் இருக்கின்ற இந்தக் காரியங்களைப் பற்றி நாங்கள் குறிப்பிட வேண்டாமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் பரிசுத்த வேதாகமத்தின் தலைப்பில் விவாதித்து எங்களுடைய நிலையை நிரூபித்து விட்டு, உங்களுடைய ஆழமற்ற வாதங்களுக்கு மறுப்பு தெரிவித்து அவற்றை அம்பலப்படுத்தியிருக்கிறோம். குர்-ஆனைப் பற்றி எங்களிடத்தில் ஒருபோதும் உங்களால் விவாதம் செய்து உங்கள் கருத்தை நிரூபிக்க முடியாது. இது தான் உண்மை. (சுவரொட்டிகள் காரியத்தில் செய்தது போல, பிறகு ஒளிப்பதிவுடன் கூடிய தனிப்பட்ட விவாதத்திற்கு நீங்கள் செய்தது போல) நீங்கள் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறுவீர்கள், தப்புவதற்கு ஏதாவது வழிவாசல்களைத் தேடுவீர்கள், விவாதம் ரத்து செய்யப்படக் கூடிய வித்தில் ஏதாவது நிபந்தனைகளை உருவாக்குவீர்கள்.

(ஈ) ஒரு வேளை கொச்சியில் விவாதம் நடத்துவதற்கு கேரள காவல்துறையினர் அனுமதி தர மறுத்தாலும் கூட மற்ற இரண்டு விருப்பத் தெரிவுகள் திறந்தே இருக்கின்றன. (1) காவல் துறையை சேர்ந்து அணுகி தடையுத்தரவை ரத்து செய்யப்பட்டு வாங்கி சென்னையிலேயே விவாதத்தை நடத்துவது. (2) ஒளிப்பதிவுடன் தனிப்பட்ட ஒரு விவாதத்தை நடத்துவது. இந்த இரண்டு விருப்பத் தெரிவுகளும் திறந்து இருக்க வேண்டாம் என்று நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். காவல் துறையினர் அனுமதி மறுக்கவைப்பது அல்லது கடைசி நேரத்தில் அதை ரத்து செய்யவைப்பதற்கு இப்போது நீங்கள் திரை மறைவில் இருந்து விளையாடுவீர்கள். மேலும் நீங்கள் சாக்ஷியை அதற்கு முழுக் காரணம் என்று காட்டி விட்டு அதைச் சாக்காக வைத்து தப்பித்துக் கொள்ள விரும்புகிறீர்கள். குர்-ஆன் விவாதத்திலிருந்து எந்த விதத்திலிருந்தாவது தப்பித்து கொள்வதற்கு நீங்கள் வெட்கமில்லாமல் முயன்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் மறுபடியும் சொல்லுகிறோம். உண்மையிலே குர்-ஆன் தான் இறைவனுடைய வார்த்தை என்று நீங்கள் கருதுவீர்களானால், இப்படிப்பட்ட அற்பமான தந்திரங்களையெல்லாம் நிறுத்திவிட்டு எப்படியாகிலும் இந்த விவாதத்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்பதை உங்கள் செயல்களினால் காண்பியுங்கள். ஒரு புறம் எந்த நிலையிலும் விவாதம் நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்று வாதிட்டுக் கொண்டு மற்றொரு புறம் நீங்கள் செய்ய வேண்டி மிக எளிமையான காரியத்தை கூட செய்யாமலிருக்க உங்களால் கூடாது. கொச்சி காவல் துறை அனுமதி மறுத்தாலும் கூட மற்ற இரண்டு விருப்ப தெரிவுகள் திறந்தே இருக்கின்றன. உங்களுக்கு சட்டப்பூர்வமான நடைமுறைக்குகந்த வேறு ஏதாவது விருப்பத் தெரிவுகள் இருக்குமென்றால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்த விவாதத்தை எந்த நிலைiயிலும் நடத்துவதற்கு உங்களிடமிருந்து உருப்படியான எந்த யோசனையும் வரவில்லை இருப்பினும் இந்த வெற்று வாதத்தையே நீங்கள் இப்போதும் முன்பும் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள். எப்படியாகிலும் இந்த விவாதத்தை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது தான் உண்மையாகும். அதற்கான ஒரே வழி நீங்கள் தப்பி ஓட வேண்டும் அல்லாவிட்டால் உங்கள் குர்-ஆனை தற்காத்து விவாதிக்க உங்களுக்கு திறமை இல்லையென்றும் நீங்கள் நாடகம் நடிப்பதற்கு தான் தகுந்தவர்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

(உ) குர்-ஆனைப் பற்றிய விவாதம் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது என்று நீங்கள் மீண்டும் நகைக்கூடிய ஒரு கூற்றை கூறியிருக்கின்றீர்கள். நாங்கள் இல்லாத இடத்தில் தான் உங்களால் குர்-ஆனைப் பற்றி "விவாதிக்க" முடியும் என்பதையும் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். உங்களால் ஒரு போதும் எங்களோடு விவாதிக்க முடியாது அது உங்களுடைய வாதங்களை தவிடுபொடியாக்கும்.

(ஊ) ஆமாம், உண்மையான இறைவனைப் பின்பற்றுகிறோம் என்று பொய்யாக வாதிடுகின்ற உங்களை போன்ற மற்றொரு குழுவிடமோ அல்லது யெகோவா சாட்சிக்காரரிடமோ நீங்கள் விவாதம் செய்து கொண்டிருப்பீர்கள். உண்மையான இறைவனை பின்பற்றுகிறவர்களாகிய எங்களிடம் நீங்களோ அல்லது யெகோவா சாட்சிக்காரர்களோ விவாதம் செய்தால், மக்கள் அதன் முடிவை பார்க்க முடியும். அது தான் ஜனவரி 21 மற்றும் 22 தேதிகளில் வெளிக்காட்டப்பட்டது. அநேகமாக, எதர்காலத்தில் இப்படிப்பட்ட முடிவுகளை தவிர்ப்பதற்காக நீங்கள் யொகோவா சாட்சிக்காரர்களைப் போன்ற பொய்யான குழுவினரையே சந்தித்தாக வேண்டும்.
இவைகளைக் கூறும் அதே வேளையில், (காவல் துறை அனுமதி மறுக்கப்படுவதற்கு அதிமான சாத்தியக் கூறுகள் இருக்கின்ற) உங்கள் யோசனைகளை நாங்கள் சேர்த்துக் கொண்டு எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து காவல் துறை அனுமதிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம். உங்கள் யோசனைகளை சேர்த்துக் கொண்டு பின்வரும் கடிதத்தை நாங்கள் காவல் துறைக்கு முன்மொழிவோம். உங்களிடமிருந்து கடிதத்ததை நாங்கள் எந்த நாளுக்குள் நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதை தெரியப்படுத்தவும்.

0 comments: