அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

July 7, 2010

சவுதி பெண்களுக்கு எதிராக பாத்வா...

சவூதி அரேபியாவில் பெண்கள் தங்கள் கார் ஓட்டுநர்களுக்குப் பால் கொடுக்கவேண்டும் என்று சவூதி இமாம் ஒருவர் உத்தரவிட்டுள்ளார். பால் கொடுத்தால் பெண் தாயாகிவிடுவாராம். இதையடுத்து சவுதியிலுள்ள இஸ்லாமிய பெண்கள் கொதித்துப்போய் உள்ளனர். இந்த பைத்தியக்காரத்தனமான உத்தரவுக்குக் காரணம், இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது அளித்த தீர்ப்புதான் காரணம்.

(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூ ஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன்'' என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூ ஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நீ அவருக்குப் பால் கொடுத்து விடு'' என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் "அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே! அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்?'' என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு "அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 2878

பால்குடி உறவு ஏற்படுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை; பருவ வயதை அடைந்த ஆணுக்கு ஒரு பெண் பால் புகட்டினாலும் அந்தப் பெண் அந்த ஆணுக்குத் தாயாக மாறி விடுவாள்' என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது.

இந்த செய்தியை ஒரு இஸ்லாமியர் தன் ப்ளாக்கில் வெளியிட்டு அதற்கு சப்பைக்கட்டும் கட்டியுள்ளார்
 
 
 
 
 
நன்றி : சகோதரர் இராபின்

0 comments: