அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

December 28, 2015

நியாயத்தீர்ப்பு நாளில் யார் "இறைவன்" என்று அழைக்கப்படுபவர்

நியாயத்தீர்ப்பு நாளில் யார் "இறைவன்" என்று அழைக்கப்படுபவர்?

இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தில்  கீழ்கண்டவாறு சொல்கிறார்: (மத்தேயு 7:21-23)
7:21  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 
7:22  அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 
7:23  அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மேற்கண்ட 22ம் வசனத்தில் "அந்நாளில்" என்ற சொல் "நியாயத்தீர்ப்பு நாளை குறிக்கிறது". உலகமனைத்தையும் நியாயத்தீர்ப்பு செய்பவருக்கு முன்பாக அந்த நாளில் ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்க்கைப் பற்றிய கணக்கை ஒப்புவிக்கவேண்டும்.
இயேசு அந்த நியாயத்தீர்ப்பு நாளின் "நியாயாதிபதி" என்று இங்கு பறைச்சாற்றுகிறார்.
ஒரு நாள் வரும், அந்த நாளில் ஒவ்வொருவருக்கும் "யார் இறைவன் (கர்த்தர்)" என்று தெளிவாக தெரியவரும். இதைப் பற்றி எந்த ஒரு குழப்பமும் யாருக்கும் வராது [1].
அந்த நாளில் எல்லோரும் தம்மை "கர்த்தாவே / ஆண்டவரே" என்று அழைப்பார்கள் என்று இயேசு சொல்கிறார். இப்படி மக்கள் அழைக்கும் போது அவர் அதனை மறுக்கவில்லை. இப்படி அழைப்பவர்களைப் பார்த்து "ஏன் எனக்கு இப்படிப்பட்ட தெய்வீகத்தன்மையான பட்டத்தைக் கொடுத்து அழைக்கிறீர்கள்" என்றுச் சொல்லி, அவர்களை குற்றப்படுத்தமாட்டார், அதற்கு பதிலாக அவர்களின் கீழ்படியாமைப் பற்றி கேள்வி எழுப்புவார். கிறிஸ்துவே ஆண்டவர் என்று அறிக்கையிட்டவர்களையும், அவரது ஊழியம் செய்து, அவருடைய பெயரில் பல காரியங்களை செய்தவர்களையும் அவர் கேள்வி கேட்பார், அவர்களின் கீழ்படிதல் பற்றி குற்றம் சாட்டுவார் [2]. இப்படிப்பட்ட ஊழியம் செய்த இவர்கள் இயேசுவிற்கு முழு இருதயத்தோடும் கீழ்படிந்தார்களா? அவரோடு தனிப்பட்ட விதத்தில் உறவுமுறையை வைத்திருந்தார்களா? அல்லது மத சடங்காச்சாரங்களை மட்டும் பின்பற்றிக்கொண்டு, அவர் மீது சாராமல் வாழ்தார்களா என்று கேள்வி எழுப்புவார்.
அந்த நியாயத்தீர்ப்பு நாளில் இயேசு மட்டுமே நியாயாதிபதியாக இருப்பார், எனவே, இன்று அவரை ஆண்டவர் என்று அழைப்பதும் சரியான ஒன்று தான். 
நாமும் எச்சரிக்கையாக இருப்போம், இயேசுவை (உதட்டளவில்) பின்பற்றுகிறோம் என்றுச் சொல்லிக்கொண்டு, அவரை முழுமனதோடு நேசிக்காமல், கீழ்படியாமல் இருந்தால், நம்மிடமும் அந்த நாளில் கேள்விகள் கேட்கப்படும்.
மேற்கண்ட வசனங்களில் மக்களிடம் காணும் பிரச்சனை எதுவென்றால் "அவர்கள் இயேசுவை எப்படி கூப்பிட்டார்கள் என்பது பற்றியது அல்ல, அதற்கு பதிலாக, அவர்கள், அவருக்கு முழுமனதோடு கீழ்படிந்தார்களா?" என்பது தான். 
குர்-ஆனின் 5:116-118 வசனங்கள் சொல்வது போல, இயேசு அந்த நாளில் கேள்விகள்  கேட்கப்படமாட்டார். அதற்கு பதிலாக, அந்த நாளில் நியாயாதிபதியாக அவரே இருப்பார். இவருக்கு முன்பாகத்தான், உலக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் புரிந்த செயல்களுக்கு கணக்கை ஒப்புவிக்கவேண்டும். இயேசுவை எப்படி இவர்கள் கண்டார்கள், என்னவென்று அழைத்தார்கள் என்பதும் கேட்கப்படும், கடைசியாக நியாயத்தீர்ப்பு அளிக்கப்படும்.
மத்தேயு 7:21-23ல் இயேசு கூறியவற்றோடு, முஹம்மது கூறியதாக புகாரி ஹதீஸில் வரும் விவரங்களை ஒப்பிட்டுப்பார்க்கவும் [3]
அடிக்குறிப்புக்கள்
[1] பார்க்க பிலிப்பியர் 2:5-11
[2] பார்க்க "The Easy Sinful Nature Of Christianity".
[3] புகாரி ஹதீஸ்கள்:
6585. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :7 Book :81
6586. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
மறுமைநாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் ('அல்கவ்ஸர்') தடாகத்திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான்.  இதை நபித்தோழர்கள் சிலரிடமிருந்து ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.  . . .Volume :7 Book :81
6587. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அபபோது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தினருகில்) நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி), 'வாருங்கள்' என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம் 'எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்றேன். அவர் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றார்கள்' என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு (வான)வர் தோன்றி, 'வாருங்கள்' என (அவர்களிடம்) கூறுகிறார். நான் '(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்று கேட்டேன். அவர் 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள்' என்று பதிலளித்தார். அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக் கொள்வார்கள் என நான் கருதவில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :7 Book :81

"மனித அவதாரம்" பற்றிய முஸ்லிம்களின் தவறான கண்ணோட்டம்

"மனித அவதாரம்" பற்றிய முஸ்லிம்களின் தவறான கண்ணோட்டம்

(The "Incarnation Fallacy")

இது மிகச் சிறிய கட்டுரையாகும். கிறிஸ்தவர்கள் பைபிளின் அடிப்படையில் "இயேசு இறைவனாக இருக்கிறார் என்றும் அவரே மனிதனாக வந்தார் என்றும்" நம்புகிறார்கள். (மனித அவதாரம் பற்றிய மற்றொரு கட்டுரையை படிக்க இங்கு சொடுக்கவும்.)
பொதுவாக முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு சொல்லும் போது, "இயேசுவை மனிதனாக காட்டும் புதிய ஏற்பாட்டின் சில வசனங்களை எடுத்துக் காட்டி, இவைகளின் படி இயேசு ஒரு மனிதன் தான், அவர் இறைவன் அல்ல" என்றுச் சொல்வார்கள்.
தன் இலக்கை தவறவிட்டுவிட்ட அம்பு போன்றது தான் முஸ்லிம்களின் இந்த வாதம். இங்கு ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், "இயேசு ஒரு மனிதனாகவும் இருக்கிறார்" என்று கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள் என்பதாகும். கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்கள் ஒரு புதிய மற்றும் அறிய விஷயத்தை கண்டுபிடித்து சொல்லவில்லை. கிறிஸ்தவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிற விஷயத்தைத் தான் அவர்கள் சொல்கிறார்கள். மேலும், முஸ்லிம்களின் இந்த வாதத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்கள் "பைபிளிலிருந்து தங்களுக்கு தேவையான வசனங்களைத் தனிமைப்படுத்தி மேற்கோள் காட்டுகிறார்கள்" என்பதாகும். ஆனால், இயேசுவைப் பற்றி கிறிஸ்தவர்களின் புரிந்துக் கொள்ளுதல் தான் சரியானது. பைபிளில் இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ள அனைத்து வசனங்களையும் ஒன்று சேர்த்து கிறிஸ்தவர்கள் பார்க்கிறார்கள். முஸ்லிம்களைப் போல சில வசனங்களை விட்டுவிட்டு கிறிஸ்தவர்கள் பொருள் கொள்வதில்லை. இயேசுவை தெய்வமாக காட்டும் வசனங்களையும், மனிதனாக காட்டும் வசனங்களையும் கிறிஸ்தவர்கள் பார்ப்பதினால், அவர்களின் புரிந்துக் கொள்ளுதலில் தவறு இருப்பதில்லை. "இதோ இவ்வசனங்கள் இயேசுவை மனிதனாக காட்டுகின்றன" என்று முஸ்லிம்கள் நம்மிடம் சொல்வது, அவரைப் பற்றிய தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தும் இதர வசனங்களோடு அவைகள் முரண்படுவதில்லை. 
உண்மையை உள்ளபடியே சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம்கள் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியது "இயேசுவை மனிதனாக காட்டும் வசனங்களை அல்ல, இயேசுவை தெய்வமாக காட்டும் வசனங்களைத் தான்".  இப்படி ஆய்வு செய்வதை விட்டுவிட்டு, இயேசுவை மனிதனாக காட்டும் வசனங்களை ஆய்வு செய்வதினால் முஸ்லிம்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை.
முஸ்லிம்கள் இந்த "மனித அவதார வாதத்தைத்" தான் பெரும்பான்மையாக தங்கள் விவாதங்களில் பயன்படுத்துகிறார்கள். நமக்குத் தெரிந்த விஷயத்தை நம்மிடமே வந்து "ஒரு புதிய விஷயமாக முஸ்லிம்கள்   சொல்வது" வேடிக்கையானதாகும். ஆதாவது நம்முடைய தாய் மொழியிலும், இன்னும் நமக்கு தெரிந்த ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் பைபிளை படிக்கும் நம்மிடம் வந்து "இதுவரை இவ்வசனங்களை நீங்கள் பார்க்கவில்லை, இதோ நாங்கள் முதல் முறையாக இந்த வசனங்களை உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம்" என்று முஸ்லிம்கள் சொல்வது வேடிக்கை என்றுச் சொல்லாமல் என்னவென்றுச் சொல்வது?
இதே போல, இன்னொரு பிழையான வாதத்தையும் முஸ்லிம்கள் முன்வைக்கிறார்கள். அது திரித்துவத்தைப் பற்றிய வாதமாகும். தேவன் திரித்துவராக இருக்கிறார் என்றும், அதே நேரத்தில் தேவன் ஒருவரே என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். கிறிஸ்தவர்களின் நம்பிக்கை இப்படி இருக்கும் போது, முஸ்லிம்கள் நம்மிடம் வந்து "தேவன் ஒருவர் என்பதை வெளிக்காட்டும் பைபிளின் வசனங்களை மட்டும் தனியாக எடுத்து மேற்கோள் காட்டி, பார்த்தீர்களா? தேவன் ஒருவர் தான்" என்று சொல்கிறார்கள்.  இவ்வசனங்கள் எவ்விதத்திலும் நமக்கு முரண்படுவதில்லை. தேவன் ஒருவரே என்பதை கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள், இதில் ஆச்சரியமோ அல்லது முரண்பாடோ இல்லை. 
உண்மையாகவே முஸ்லிம்கள் ஆழமாக ஆய்வு செய்யவேண்டுமென்றால், பைபிளில் "இயேசுவின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் வசனங்களையும், பரிசுத்த ஆவியானவரின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் வசனங்களையும் ஆய்வு செய்யவேண்டும்".  தேவனுக்கு தெய்வீகத்தன்மை இருப்பது போலவே, இயேசுவிற்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் தெய்வீகத் தன்மை உள்ளது என்பதை விளக்கும் பைபிள் வசனங்களை முஸ்லிம்கள் ஆய்வு செய்து, தங்கள் முடிவைச் சொல்லவேண்டும். 


குர்-ஆன் வசனங்களை இரத்து செய்தல் பற்றிய உவமை

குர்-ஆன் வசனங்களை இரத்து செய்தல் பற்றிய உவமை

குர்-ஆன் வசனங்களை இரத்து செய்வது என்பது இறைவசனங்களை திருத்துவதற்கு சமம் என்று ஒருவர் கூறினார், அதற்கு ஒரு முஸ்லிம் கீழ்கண்டவிதமாக பதில் அளித்தார்:
"அல்லாஹ் தன் வசனங்களை இரத்து செய்வது" பற்றி விமர்சனம் செய்த சகோதரருக்கு இந்த பதிலை தருகிறேன்.
நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறேன். நீங்கள் ஒரு அலுவலகத்தின் மேலாளர் (Manager) என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு சில கட்டளைகளை நீங்கள் தரவேண்டியுள்ளது. இதற்காக உங்கள் செயலாளரிடம் (Secretary) கட்டளைகளைக் கொடுத்து, இவைகளை அப்படியே டைப் செய்யும் படி கேட்டுக் கொள்கிறீர்கள். இந்த செயலாளர் உங்கள் அனுமதியில்லாமல், அந்த கட்டளைகளோடு சிலவற்றை கூட்டுகிறார், சிலவற்றை நீக்கிவிடுகிறார். இந்த செயலாளர் செய்தது என்ன? மேலாளர் கொடுத்த மூல கட்டளைகளை இவர் திருத்திவிட்டார். இது தவறாகும். ஆனால், இப்போது இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள். 
மேலாளராகிய நீங்கள் உங்கள் கைகளாலேயே அக்கட்டளைகளை டைப் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் டைப் செய்யும் போது, சிலவற்றை புதியதாக சேர்க்கிறீர்கள், சிலவற்றை நீங்களே நீக்கிவிடுகின்றீர்கள். அதன் பிறகு  உங்கள் செயலாளரிடம் கொடுத்து வேலையாட்களிடம் சேர்க்கும்படி சொல்கிறீர்கள். இந்த எடுத்துக்காட்டில்,  மேலாளராகிய நீங்கள் செய்ததை "மூலத்தை திருத்திவிட்டார்" என்று சொல்லலாமா? நிச்சயமாக இல்லை. இக்கட்டளைகள் உங்களிடமிருந்து நேரடியாக வந்தபடியினால், உங்கள் அலுவலகத்தின் வேலையாட்களும், செயலாளரும் அவைகளை "மூலம்" என்று தான் சொல்வார்கள், திருத்தப்பட்டது என்று சொல்லமாட்டார்கள். இதே போலத்தான் அல்லாஹ் தன் வசனங்களை மாற்றுகிறார், அது மாற்றப்படாத மூலம் என்றே கருதப்படும். சிறந்த உவமைகள் அல்லாஹ்விற்கே சொந்தமாகும். 
கிறிஸ்தவனின் பதில்:
நீங்கள் ஒரு அருமையான உவமையைச் சொல்லியுள்ளீர்கள். எனக்கு உவமைகள் என்றால் அதிகமாக பிடிக்கும், ஏனென்றால், பல வரிகளில் விளக்கவேண்டிய விவரங்களை நச்சென்று நான்கு வரிகளில் அது விளக்கிவிடும். 
ஆனால், உங்கள் உவமையில் அனேக இறையியல் பிரச்சனைகள் இருப்பதை நான் காண்கிறேன்.
ஒரு மேலாளர் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு, கட்டளைகளை மாற்றுவதைப் பற்றி எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த மேலாளர் தன்  செயலாளரிடம் தன் கட்டளைகளை கொடுத்துவிட்ட பிறகும், தன் மனதை மாற்றிக்கொண்டு கட்டளைகளை மாற்றினாலும் தவறில்லை அல்லது செயலாளரிடம் கொடுப்பதற்கு முன்பாகவே கட்டளைகளை மாற்றினாலும் தவறில்லை. இந்த மேலாளருக்கு தன் கட்டளைகளை மாற்றும் அதிகாரம் உள்ளது, அதனை யாரும் கேள்வி கேட்கமுடியாது. 
ஆனால், ஒரு முக்கியமான விவரத்தை  இங்கு கவனிக்கவேண்டும், அதாவது, இந்த மேலாளர் ஒரு சாதாரண மனிதர் ஆவார், இவர் இப்படிப்பட்ட தவறுகளை செய்யத் தான் செய்வார்.  இவர் ஏன் தன் கட்டளைகளை மாற்ற விரும்பினார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால்,  தன் கட்டளைகளில் தவறு இருப்பதாக  இவர் உணருகிறார், அந்த தவறு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். தன் தவறை இவர் உணரும் தருணத்தில் உடனே தன் முந்தைய கட்டளைகளை மாற்ற முயலுகிறார். தான் முன்பு எழுதிய கட்டளைகளை மாற்றுவதற்கு அவருக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது, அதனால் அவர் மாற்றுகிறார். 
இப்போது உங்களால் இந்த உவமையில் உள்ள பிரச்சனையை காணமுடியும் என்று நம்புகிறேன். அல்லாஹ் தன் முந்தைய வசனங்களை இரத்து செய்துவிட்டு, அவைகளுக்கு பதிலாக புதிய கட்டளைகளை கொடுக்க முடிவுசெய்துவிட்டால், இதன் அர்த்தம் என்ன? தாம் தவறு செய்துவிட்டதாக அல்லாஹ்வே சுய ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்று  அர்த்தமாகுமல்லவா? வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், தாம் முன்பு இறக்கிய கட்டளைகள் "பிழையற்ற கட்டளைகள் அல்ல, அவைகளில் தவறு இருக்கிறது, எனவே அவைகளுக்கு பதிலாக புதிய பிழையில்லாத கட்டளைகள் தேவைப்படுகிறது" என்று அல்லாஹ் சொல்வது போல இருக்கிறது.
அன்பான இஸ்லாமிய சகோதரரே, உங்களுடைய உவமையின் மூலமாக, "அல்லாஹ் தவறு செய்துவிட்டார்" என்று நீங்கள் அவரை குற்றப்படுத்துகிறீர்கள்.
ஆனால், இறைவன் சர்வ ஞானியாக இருக்கிறார். புதிய சூழ்நிலைகளைப் பார்த்து, மக்களின் புதிய செயல்பாடுகளைப் பார்த்து அவர் ஆச்சரியப்படுவதில்லை, அவருக்கு சர்வமும் தெரியும். நடந்துவிட்டதும், நடந்துக் கொண்டு இருப்பதும், நடக்கப்போவதும அவருக்குத் தெரியும்.  இறைவன் தன் முந்தையை கட்டளைகளை இரத்து செய்துவிட்டார் என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமிய கோட்பாடு, இறைவனின் தகுதிக்கும், இலக்கணத்துக்கும் இழுக்கை கொண்டு வருகிறது. 
ஒருவேளை அல்லாஹ் குர்-ஆன் வசனங்களை இறக்குவதற்கு முன்பாக மாற்றி இருந்திருந்தால், "இந்த மாற்றத்தைப் பற்றி" நாம் அறிந்திருக்கமாட்டோம். இப்போது நாம் "இரத்து செய்த வசனங்களையும், இரத்து செய்யப்பட்ட வசனங்களையும்" அறிந்திருக்கிறோம்.  இதன் மூலம் இரண்டு விவரங்களை நாம் அறிகிறோம், "முதலாவது, அல்லாஹ் தம்முடைய முந்தையை வசனங்களை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். இரண்டாவதாக, தம்முடைய முந்தைய வசனங்களில் உள்ள தவறை உணர்ந்துக் கொள்ள அவருக்கு அதிக நாட்கள் பிடித்துள்ளது என்பதாகும்". 
முஸ்லிம்களின் படி, குர்-ஆன் என்பது படைக்கப்பட்ட ஒன்று அல்ல, அது நித்திய நித்தியமாக அல்லாஹ்வுடன் இருந்துள்ளது. இப்போது நமக்கு தோன்றும் கேள்வி என்னவென்றால், "முஹம்மதுவிற்கு குர்-ஆன் வசனங்களை இறக்கிவிட்ட பிறகு, எப்படி  அல்லாஹ்விற்கு தன் முந்தைய வசனங்களை மாற்றவேண்டும் என்ற ஞானம் வந்தது? அல்லது தன் முந்தைய வசனங்கள் கட்டாயமாக மாற்றப்படவேண்டும் என்ற அறிவு எப்படி வந்தது?".
என்னை பொருத்தமட்டில், "குர்-ஆன் வசனங்களை இரத்து செய்தல்" என்ற கோட்பாடு அறிவுடையவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. இந்த கோட்பாடு பரிசுத்தமான மற்றும் சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கு மிகப்பெரிய அவமரியாதையாகும். இந்த கோட்பாடு, "இறைவன் தவறு செய்பவன்" என்று அவனை குற்றப்படுத்துகிறது. அதாவது முதல் முறை ஒரு காரியத்தை செய்யும் போது (வசனங்களை இறக்கும்போது) அதனை சரியாக செய்யத் திராணியில்லாதவனாக இறைவன் இதன் மூலம் சித்தரிக்கப்படுகின்றான். அதன் பிறகு, தன் பிழையை சரி செய்ய, முந்தைய வசனங்களை இரத்து செய்கிறான். இப்படிப்பட்ட கோட்பாட்டை நிச்சயமாக என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இஸ்லாமின் இரத்து செய்தல் பற்றிய இதர கட்டுரைகளை படிக்க சொடுக்கவும் "Index to Islam (ஆங்கிலம்)" and "Quran section (தமிழ் மற்றும் ஆங்கிலம்)".
இக்கட்டுரைக்கு ஒரு முஸ்லிம் சகோதரர் பதில் கொடுத்துள்ளார். இவருக்கு கிறிஸ்தவர்கள் இரண்டு பதில்களை கொடுத்துள்ளார்கள், அதனை இங்கு படிக்கவும்: