அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 30, 2013

ஏன் ’முஹம்மதுவின் வாழ்க்கை’ படமாக அடிக்கடி இஸ்லாமியரல்லாதவர்களால் எடுக்கப்படுகின்றது?


ஏன் 'முஹம்மதுவின் வாழ்க்கை' படமாக அடிக்கடி இஸ்லாமியரல்லாதவர்களால் எடுக்கப்படுகின்றது?

முன்னுரை:
இஸ்லாமியர்கள் "முஹம்மதுவை" நபியாக கருதுகின்றனர். இஸ்லாமின் ஆணிவேர் முஹம்மது ஆவார். சமீப காலங்களில் இந்த முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படங்கள் இஸ்லாமியரல்லாதவர்களால் அதிகமாக படமாக்கப்பட்டு வருகின்றது. உதாரணத்திற்கு, கீழ்கண்ட இரண்டு வீடியோ படங்களைக் கூறலாம்:

1) முஸ்லிம்களின் அறியாமை (The Innocence of the Muslims) [1]
2) அறியாமையுள்ள நபி (The Innocent Prophet) [2]

மேலும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதையாகவும்  (காமிக்ஸ்) வெளிவந்துள்ளது, இதன் தொடுப்பை கீழே காணலாம்.


Biography of Prophet Muhammad - Illustrated - Vol. 1  
(இந்த படக்கதை புத்தகம், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இந்தோனேஷியன் மொழிகளில் கிடைக்கிறது).[3]

மேற்கண்ட வீடியோக்களில் "அறியாமையுள்ள நபி" என்ற வீடியோவை இந்த வாரம் நான் பார்த்தேன். இந்த வீடியோவை பார்த்தவுடன் இந்த சிறிய கட்டுரையை எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

இஸ்லாமியரல்லாதவர்கள், ஏன் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை சொல்ல முற்படுகிறார்கள்? இவர்களுக்கு இதைப் பற்றிய ஆர்வம் எங்கே இருந்து வந்தது? ஏன் தங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவழித்து இந்த வீடியோ படங்களை எடுக்கிறார்கள்? என்று சில கேள்விகள் எனக்குள் எழுந்தன. அதற்கான பதிலை தேடிப்பார்த்ததில் (உண்மையில் சொல்லவேண்டுமென்றால் சிந்தித்து பார்த்ததில்) உதித்தது தான் இந்த சிறிய கட்டுரை.

ஏன் இஸ்லாமியரல்லாதவர்கள் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறார்கள்?


1) ஏனென்றால், இஸ்லாமியர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இமாலய அளவிற்கு வேறுபாடு "இஸ்லாமியரல்லாதவர்களுக்குத்" தெரிகின்றது.


பொதுவாக தற்கால இஸ்லாமியர்களின் பேச்சுக்களையும், புத்தகங்களையும் நாம் படித்தால், அவர்களின் இஸ்லாமிய மார்க்கம்  ஒரு அழகான மார்க்கமென்றும், அமைதியை விரும்பும் மார்க்கமென்றும் எழுதியிருப்பார்கள். இவைகளை படிக்கும், வேற்று மார்க்கத்தார்களுக்கும், நாத்தீகர்களுக்கும் இஸ்லாம் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டாகிவிடும்.


அதன் பிறகு இஸ்லாமியர்களின் செயல்களையும், இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளையும் மக்கள் பார்க்கும் போது, இஸ்லாமிலிருந்து வெளியேறியவர்களை கொல்ல இஸ்லாம் துடிப்பதை மக்கள் பார்க்கும் போது, இஸ்லாமியர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் மாற்று மார்க்கத்தார்களுக்கு புரிந்துவிடுகிறது. இது இஸ்லாமியர்களின் நம்பிக்கைத் துரோகம் என்றும், ஏமாற்று வேலை என்றும் மக்கள் புரிந்துக்கொள்கின்றனர்.


இஸ்லாமியர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம் என்று கேள்வி கேட்டால், அதற்கும் ஒரு சப்பைக் கட்டு வைத்திருப்பார்கள் இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்களின் இந்த பதிலை கேட்கும் போது, "நம்மை அவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து பேசுகின்றார்கள்" என்பதை தெளிவாக புரிந்துவிடும். 


ஆகையால், இஸ்லாமியர்களிடம் சென்று 'எங்களுக்கு இஸ்லாமை விவரியுங்கள்' என்றுக் கேட்பது ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதை அறிந்துக்கொள்ளும் இஸ்லாமியரல்லாதவர்கள் தாங்களாக இஸ்லாமிய மூல நூல்களாகிய குர்-ஆன், ஹதீஸ்கள் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்ளும் இஸ்லாமியரல்லாதவர்கள், தங்களுக்கு ஏற்றபடி வீடியோ படங்களை வெளியிட, படக்கதைகள் வெளியிட ஆரம்பித்துவிடுகின்றனர். இப்படி வெளியிடும் போது, சிலர் நேர்மையற்ற முறையில் சில சொந்த கருத்துக்களையும் சேர்த்து வெளியிடுகின்றனர்.


இந்த நிலைக்கு யார் காரணம்? சிந்தியுங்கள். இஸ்லாம் பற்றிய உண்மைகளை மறைக்கும் இஸ்லாமியர்கள் தான்.


2) முஹம்மதுவின் இருண்ட பக்கங்களை மறைத்து, இஸ்லாமியர்கள் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அந்த இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர மற்றவர்கள் முயற்சிக்கிறார்கள்.


முஸ்லிம்கள் 'இஸ்லாமிய உண்மைகளை' மட்டும் மறைப்பதில்லை, முஹம்மது பற்றிய சில உண்மைகளை அப்படியே மறைக்க முயற்சிக்கிறார்கள். அதாவது இஸ்லாமிய மூல நூல்கள் சொல்லும் விவரங்களில் உள்ள சில தர்மசங்கடமான நிகழ்வுகளை வெளியே சொல்லாமல் மறைக்கின்றனர். இதனை அறிந்துக்கொள்ளும் இஸ்லாமியரல்லாத மக்கள், இஸ்லாமிய மூல நூல்களை படித்து, ஆராய்ந்துப்பார்த்து முஸ்லிம்களின் மறைக்கப்பட்ட முழுபூசணிக்காயை வெளியே காட்டிவிடுகின்றனர். 


எந்த ஒரு மார்க்கமாக இருந்தாலும், அந்த மார்க்கத்தின்: 


அ) இறைவன், 

ஆ) தூதுவன் (ஸ்தாபகர்), 

இ) மார்க்க கட்டளைகள் அடங்கிய வேத புத்தகம் 


ஆகிய மூன்றும் அந்த மார்க்கத்தின் உண்மை நிலையை அறிந்துக்கொள்ள உதவும் முக்கியமான ஆதாரங்களாகும்.  இஸ்லாமியர்கள் இந்த மூன்று விஷயங்களிலும் பொய்களை கலந்து இதர மக்களுக்கு போதிக்கிறார்கள். இவைகளை யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடியாது. முக்கியமாக இஸ்லாமிய நபியாகிய முஹம்மது என்பவர் ஒரு நல்ல வழிகாட்டி என்று பொய்களை அள்ளிவீசுகிறார்கள். ஆனால், அவரின் வாழ்க்கை சரிதையை படிக்கும் இதர மக்கள் முஹம்மதுவின் வாழ்வை நெருப்பில் புடமிட்டு சோதித்துப் பார்க்கும் போது, அவர் சுத்த தங்கமல்ல, அவர் ஒரு கலப்படமுள்ள தங்கம் என்பதை உணர்ந்து அதனை இதர மக்களுக்கு அறிவிக்க முயற்சி எடுக்கிறார்கள். இதன் பயனாக அனேக வீடியோ படங்கள் வெளியாகின்றன. 


இதற்கு காரணம் யார்? உண்மையை மறைத்து பொய்களை பேசும் முஸ்லிம்கள் தானே!


முஸ்லிம்கள் மடியில் நெருப்பை வைத்துக்கொண்டு அதனை மறைக்க முயன்றால் அது பயனளிக்காது என்பதை உணரமாட்டார்களா?


3) முஸ்லிம்களே, நீங்கள் ஏன் உங்கள் முஹம்மது பற்றிய 'அனைத்து' உண்மைகளையும் மக்களுக்கு  விளக்கக்கூடாது?


சில முஸ்லிம்கள் இப்போது கீழ்கண்டவிதமாக கேள்விகளை என்னிடம் கேட்கலாம்:

அ) நாங்கள் இஸ்லாம் பற்றிய விளக்க புத்தகங்களை எழுதவில்லையா?

ஆ) முஹம்மதுவின் வாழ்க்கை பற்றிய புத்தகங்களை எழுதவில்லையா?

இ) "த மெசேஜ் (The Message)" என்ற படம் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பற்றி எடுக்கப்பட்டுள்ளதே?


அருமையான முஸ்லிகளே, நீங்கள் சொன்ன மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும் உண்மை தான். ஆனால், மேற்கண்ட அனைத்து விஷயங்களிலும் நீங்கள் 100% உண்மையை சொல்லியுள்ளீர்களா என்பது தான் கேள்வி?  இஸ்லாமியரல்லாதவர்களுக்கு படிக்க நீங்கள் கொடுக்கும் புத்தகங்களில் முஹம்மது பற்றிய அனைத்து விவரங்களும் சொல்லப்பட்டுள்ளதா? நிச்சயமாக இல்லை. அனேக இருண்ட பக்கங்களை நீங்கள் மறைத்து இருக்கிறீர்கள். முஹம்மதுவைப் பற்றி இஸ்லாமிய மூல நூல்கள் சொல்லும் நல்ல விஷயங்களை மட்டுமே சொல்கிறீர்கள், அதே மூல நூல்கள் சொல்லும்  முஹம்மது பற்றிய தர்மசங்கடமான விஷயங்கள் பற்றி மூச்சு விடுவதில்லையே, அது ஏன்?


ஆகையால், தான் இஸ்லாமியரல்லாதவர்கள் உங்கள் இஸ்லாமை விளக்க முன்வந்துவிட்டனர், உங்கள் நபியைப் பற்றி அனைத்து விவரங்களையும் படித்து ஆராய முன்வந்துவிட்டனர். 


முஸ்லிம்களே, இது 19ம் நூற்றாண்டு காலக்கட்டம் அல்ல, இது 21ம் நூற்றாண்டு ஆகும். இணையம் வந்துவிட்டது, மக்களின் அறிவு பசிக்கு, ஆர்வ பசிக்கு, ஆய்வு பசிக்கு சரியான தீணி கிடைக்க எந்த தடையும் இப்போது இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் மனதில் ஆழமாக பதித்துவைத்துக் கொள்ளுங்கள், அதாவது நீங்கள் சொல்லும் அனைத்தையும் மக்கள் கேள்வி கேட்காமல் நம்பவேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்காதீர்கள். ஒருவேளை இஸ்லாமியர்கள் இப்படி வாழக்கூடும், ஆனால், இஸ்லாமியரல்லாதவர்கள் இனி உங்களின் அனைத்து விஷயங்களையும் கேட்டுவிட்டு, தலை ஆட்டமுடியாது. 


எனவே, நீங்கள் இஸ்லாமை சரியாக விளக்கப்போகிறீர்களா? அல்லது மற்றவர்கள் அதனை விளக்க இடம் கொடுக்கப்போகிறீர்களா? 


என்னைப்பொறுத்தமட்டில், நீங்கள் இஸ்லாமை விளக்கும் போது எப்படி சிலவற்றை மறைக்கிறீர்களோ அதே போல, இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்ட அந்த வீடியோ படங்களை எடுத்த மற்றவர்களும், சிலவற்றை சுயமாக சேர்த்து வெளியிட்டுள்ளனர். நீங்கள் இருவரும் தவறு செய்கிறீர்கள். ஆனால், இதனால் யாருக்கு அதிக நஷ்டம் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.


இஸ்லாமிய அறிஞர்களாகிய உங்கள் செயல்களினாலும், இஸ்லாமிய தீவிரவாதிகளினாலும், சாதாரண நல்ல முஸ்லிம்கள் அனேக இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஹைதராபாத் போன்ற பட்டணங்களில் இஸ்லாமியர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட மற்ற மக்கள் பயப்படுகிறார்கள். முக்கியமாக, ஒரு நல்ல வேலையில் இருக்கும் ஒரு நல்ல முஸ்லிம், தாடி வைத்து தொப்பி வைத்துக்கொண்டும்  வீட்டை வாடகைக்கு கேட்டால், வீடு காலியாக இருந்தாலும் மக்கள் அவருக்கு வாடகைக்கு கொடுக்க பயப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நபர் தெருவில் நடந்துச் செல்லும் போது, மற்ற மக்கள் ஒரு மாதிரியாக (இவர் ஒரு தீவிரவாதியாக இருப்பாரோ என்ற எண்ணத்தில்) பார்க்கிறார்கள். 


இஸ்லாம் பற்றி உள்ளதை உள்ளதென்று எழுதவும், பேசவும் உங்களுக்கு ஏன் தயக்கம்? மற்றவர்கள் அந்த வேலையை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள ஏன் நீங்கள் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறீர்கள்?


4) இஸ்லாமியரல்லாதவர்களுக்கு ஒரு வேண்டுகோள்


இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, ஒரு இந்துவாகவோ, கிறிஸ்தவராகவோ அல்லது நாத்தீகராகவோ இருந்தாலும் சரி, இஸ்லாம் பற்றி உண்மையை நீங்கள் அறிந்துக்கொண்டால், அதனை அப்படியே சமுதாயத்திற்குச் சொல்ல முற்படுங்கள். அதனோடு எவைகளையும் சேர்க்கவேண்டாம். இஸ்லாமிய மூல நூல்களில் சொல்லப்பட்ட 'இஸ்லாமை' அப்படியே நீங்கள் சமுதாயத்திற்குச் சொன்னால் போதும், சமுதாயம் விழிப்புணர்ச்சி அடைந்துவிடும்.  உண்மையை மனிதன் அறியும் போது, அந்த உண்மை அவனை விடுதலையாக்கிவிடும், அந்த சக்தி உண்மைக்கு உண்டு, அதனை கிரகித்துக்கொள்ளும் தன்மையும் மனித மனதுக்கு உண்டு.


எனவே, இஸ்லாமிய படக்கதைகள், வீடியோ படங்கள் எடுக்கும் பொது, உள்ளதை உள்ளது போலவே சொல்லப்பாருங்கள், அதனால் அதிக பயன் உண்டாகும்.


நான் தனிப்பட்ட முறையில் மேலே சுட்டிக்காட்டப்பட்ட இரண்டு வீடியோக்களை பார்த்தேன், அவைகளில் இஸ்லாம் பற்றிய அனேக மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியே கொண்டுவரப்பட்டது, அதே நேரத்தில், சில பொய்யான கற்பனையான விவரங்கள் ஆங்காங்கே இருப்பதை என்னால் காணமுடிகிறது.   எனவே, இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும் என்ற நல்ல எண்ணம் யாருக்கு இருந்தாலும் சரி, அவர்கள் இஸ்லாம் பற்றிய மூல நூல்களில் சொல்லப்பட்ட உண்மைகளை மட்டுமே சொல்லவேண்டும்.


முடிவுரை:

முஸ்லிம்களே, இப்போது முடிவு உங்கள் கையில் உள்ளது. உண்மை இஸ்லாமை சமுதாயத்திற்கு நீங்கள் சொல்லப்போகிறீர்களா? அல்லது இஸ்லாமியரல்லாதவர்கள் உங்கள் இஸ்லாமை விளக்க இடம் கொடுக்கப்போகிறீர்களா?  இது ஏழாம் நூற்றாண்டு அல்ல. நீங்கள் சொல்வதையெல்லாம் அப்படியே நம்பும் மக்கள், மிகக்குறைவு என்பதை மனதில் வையுங்கள். 


ஒவ்வொரு ஆண்டும், ஏதோ ஒரு விதத்தில் இஸ்லாம் மற்ற மக்களால் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அது ஒரு படமாகவோ, புத்தகமாகவோ வெளிவருகிறது. இனி காலம் செல்லாது, உண்மை மட்டுமே நிலைத்து நிற்கும், பொய் தானாக அழிந்துவிடும்.


ஒரு வேளை நீங்கள் சொல்லலாம், கடந்த 14 நூற்றாண்டுகளாக இஸ்லாம் இந்த சவால்களை சந்தித்துக்கொண்டு வருகிறது, இருந்தும் நிலைத்து நிற்கிறது என்று நீங்கள் சொல்லக்கூடும், ஆனால், ஒரு விஷயம் மனதில் வையுங்கள், இது அந்த காலமல்ல, இது 21ம் நூற்றாண்டு, இன்று மனிதனுக்கு அரபி மொழியில் உள்ள ஒரு விவரம் தேவைப்பட்டால், உங்களிடம் விளக்கத்திற்கு வருவதில்லை, இணையத்தில் ஒரு சொடுக்கில் தெரிந்துக்கொள்கிறான். எனவே, இஸ்லாமியரல்லாதவர்களை மிகவும் தரங்குறைவாக நினைக்காதீர்கள்.


பின்குறிப்புகள்

[1] The Innocence of the Muslims – யூடியூபில் தேடிப்பாருங்கள்.

[2] The Innocent Prophet - யூடியூபில் தேடிப்பாருங்கள்

[3] முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - http://www.prophetmuhammadillustrated.com/

ஹிந்தி - http://www.prophetmuhammadillustrated.com/hindi.html

இந்தோனேசியன் - http://www.prophetmuhammadillustrated.com/buku-riwayat-hidup-nabi-muhammad.html

ஆங்கிலம் - http://www.prophetmuhammadillustrated.com/the-book.html



அன்று சத்தாம், நேற்று லாடன் இன்று அஜ்மல் கசாப் - நீதி தூங்குவதில்லை


அன்று சத்தாம், நேற்று லாடன் இன்று அஜ்மல் கசாப் - நீதி தூங்குவதில்லை

2008ம் ஆண்டு, மும்பை மாநகரத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பிடிபட்ட அஜ்மல் கசாப் இன்று அதாவது நான்கு ஆண்டுகளுக்கு பின்பு காலை 7:30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்.

அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 150க்கும் மேலானோர் கொல்லப்பட்டனர், அனேகர் காயப்பட்டனர். அனேகர் பெற்றோர்களை இழந்த அனாதைகள் ஆனார்கள், சிலர் விதவைகள் ஆனார்கள், வேறு சிலர் பிள்ளைகளை இழந்த பெற்றோர்களானார்கள். இவர்களின் எதிர் கால கனவுகள் மண்ணோடு மண்ணாக மறைந்துவிட்டது. இந்த செயல்களை புரிந்தவர்களில் ஒருவன் உயிரோடு இருந்தான் (அஜ்மல் கசாப்), இவனால் துன்பத்துக்கு ஆளானவர்கள் இவனுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்? தங்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்? என்று காத்திருந்தனர். நீதி தூங்கிவிட்டதா? அல்லது செத்துவிட்டதா? ஏன் நீதிமன்றங்கள் தாமதிக்கின்றன என்று புலம்பினார்கள்.

அஜ்மல் கசாப்புக்காக கருணை மனு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதி இந்த மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது, இவனுக்கு கருணை காட்டக்கூடாது என்று மக்கள் விரும்பினர்.

நீதி தூங்குவதில்லை:

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வண்ணமாக, இந்திய மண்ணில் நீதி இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வண்ணமாக, நம் ஜனாதிபதி இந்த கருணை மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை, கசாப்பிற்கு கருணை மன்னிப்பு அளிக்கவில்லை. இதன் பயனாக இன்று காலை 7:30 மணிக்கு கசாப் தூக்கில் இடப்பட்டார். இவரது உடலை தரும்படி இதுவரை யாரும் கேட்கவில்லை, முக்கியமாக பாகிஸ்தானும் கேட்கவில்லை என்று இன்று காலைச் செய்தி தெரிவிக்கிறது.

கடைசியில் அசத்தியம் அழிந்தது, சத்தியம் ஜெயித்தது.

நீதி தாமதித்தாலும், சரியான தண்டனையை கசாப்பிற்கு கொடுத்தது என்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்தனர்.

சிறப்புத் தொழுகை:

உலக மகா தீவிரவாதியாம் பின்லாடனின் மரணத்திற்கு பிறகு, இஸ்லாமியர்கள் அவனுக்காக சிறப்பு தொழுகை நடத்தினர். இந்தியாவில் நடந்த கோர தீவிரவாத செயலில் ஈடுபட்ட இந்த கசாப்பிற்காக முஸ்லிம்கள் (முக்கியமாக தமிழ் முஸ்லிம்கள்) சிறப்பு தொழுகை நடத்துவார்களா? அல்லது இந்திய மண்ணில் தீவிரவாத செயலை அரங்கேற்றியவன் யாராக இருந்தாலும் சரி அவன் ஒரு முஸ்லிமல்ல என்றுச் சொல்லி, கசாப்பின் செயலை கண்டித்து, அவனுக்கு கிடைத்த தண்டனையை ஆதரித்து தமிழ் முஸ்லிம்கள் செயல்படுவார்களா? தமிழ் முஸ்லிம்கள் தங்கள் இணைய தளங்களிலும், வார, மாத பத்திரிக்கைகளிலும் கசாப்பிற்கு கிடைத்த தண்டனை சரியானது தான் என்றுச் சொல்லி அறிக்கைவிடுவார்களா? இப்படி செய்து தாங்கள் எக்காலத்திலும் தீவிரவாத செயலுக்கு உடந்தையாக இருந்ததில்லை, இனியும் இருக்கமாட்டோம் என்பதை நிருபிப்பார்களா?

கசாப்கள் பிறந்துக்கொண்டே இருப்பார்கள்:

ஏதோ பின் லாடன் மரித்துவிட்டார், சத்தாம் உசேன் மரித்துவிட்டார், கசாப்பை நாம் தொலைத்துவிட்டோம் என்று யாரும் அதிக மகிழ்ச்சி அடையமுடியாது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் உலகில் இருக்கும் வரை (எந்த நாடுகள் என்று நான் சொல்லத்தேவையில்லை), இன்னும் அனேக லாடன்கள், சத்தாம் உசேன்கள், அஜ்மல் கசாப்கள் பிறந்துக்கொண்டே இருப்பார்கள், அவர்களை அந்நாடுகள் மற்ற நாடுகள் மீது ஏவிக்கொண்டே இருக்கும். ஆனால், நமக்கு இருக்கும் ஒரு நம்பிக்கை என்னவென்றால், இறைவன் இன்னும் இறந்துவிடவில்லை, இந்தியாவில் நீதி இன்னும் நிர்மூலமாகவில்லை என்பதாகும். தாமதித்தலும், நீதி தன் கடமையைச் செய்யும், இறைவன் பொறுமையாக இருந்து மக்களுக்கு நீதி செய்வான் என்பதாகும்.

எனவே, இந்தியாவில் நீதி தன் கடமையை செய்தமைக்காக, இந்த தண்டனை கசாப்பிற்கு கிடைக்க உழைத்த அனைத்து அரசாங்க ஊழியர்களுக்காக நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளவேண்டும்.

துன்மார்க்கனின் மரணத்தை தேவன் விரும்பாமல்…

ஒரு சராசரி இந்தியன் என்ற முறையில் நான் மேற்கண்ட விவரங்களை எழுதினேன். ஆனால், ஒரு கிறிஸ்தவனாக இருந்து பார்க்கும் போது, இந்த கசாப் மனந்திருந்தி இறைவனிடம் தான் செய்த பாவ செயலுக்கு மன்னிப்பை பெற்று இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணத்தோன்றுகிறது. அனேகரின் மரணத்திற்கு காரணமான ஒரு மனிதன் மரித்தான், அவனுக்கு சரியான தண்டனை கிடைத்தது என்ற மகிழ்ச்சி ஒரு புறமிருக்க, உண்மையான இறைவனை அறியாது ஒரு உயிர் மரித்துவிட்டதே என்ற வேதனை உள்ளத்தை அதிகமாக வாதிக்கிறது.
துன்மார்க்கனின் மரணத்தை தேவன் விரும்பாமல், அவனின் மனந்திரும்புதலையே அவர் விரும்புகிறார்.

இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்ட தண்டனையின் மூலமாக, இந்திய மண்ணில் தன் கைவரிசையை யார் காட்டினாலும் சரி, அதை அரசு சகித்துக்கொள்ளமுடியாது என்பது நிருபணமாகியுள்ளது. தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களும், அதனை ஆதரிப்பவர்களையும் இந்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும் என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.

இப்படிக்கு
உமர்

Source : http://isakoran.blogspot.in/2012/11/blog-post_21.html

கேலியும் கௌரவமும்: முஹம்மது மற்றும் இயேசுவின் செயல்கள்



கேலியும் கௌரவமும்: முஹம்மது மற்றும் இயேசுவின் செயல்கள்

ஆசிரியர்: ரோலண்ட் கிளார்க்

முஹம்மதுவை கேலி செய்ததின் காரணமாக பெருகிவந்துக்கொண்டு இருக்கும் வன்முறையை சாந்தப்படுத்த, சி என் என் (CNN) என்ற தொலைக்காட்சி, ஒரு நிகழ்ச்சியில் சல்மான் ஷேக் என்ற ஒரு புத்திசாலி இஸ்லாமிய விரிவுரையாளரின் மேற்கோளை காட்டியது:

"லிபியா, எகிப்து, துனிஷியா, யெமன் மேலும் இதர இடங்களில் அரங்கேரிய புத்தியில்லாத வன்முறைகள், குற்றமற்ற அனேகரின் மரணத்திற்கு காரணமாக இருக்கிறது, மேலும் அதிக ஆபத்தை அது உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் இது ஒரு சரியான வழிமுறையல்ல, இதைப் பற்றி ஒன்றும் செய்வதற்கில்லை".

இந்த கட்டுரை வெளியான சில நாட்களுக்குள்ளேயே, பாகிஸ்தானில் 15 பேர் கொல்லப்பட்டார்கள், இவர்கள் அப்பாவிகளாவார்கள், அதாவது இவர்களுக்கும் அந்த "முஸ்லிம்களின் அறியாமை" என்ற வீடியோவிற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை.

தற்போது நடந்துக்கொண்டு இருக்கும் இந்த வன்முறை செயல்கள், நமக்கு 2006 ஆண்டு நடந்த வன்முறையை ஞாபகப்படுத்துகிறது, அதாவது இஸ்லாமின் மதிக்கத்தக்க நபி முஹம்மதுவை கேவலப்படுத்தும்படியாக வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் அந்த வன்முறைக்கு காரணமாக இருந்தன. அந்த காலகட்டத்தில் முக்கியமான அனேக இஸ்லாமிய அறிஞர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை உணர்ந்தார்கள், அது என்னவென்றால் "குற்றமில்லாத மக்களை கொல்லும் இந்த வன்முறைகளினால், இஸ்லாம் கறைபடுத்தப்படுகிறது" என்பதாகும். ஆப்கானிஸ்தானின் ஒரு முக்கியமான இஸ்லாமிய இமாம், முஹம்மது உஸ்மான் என்பவர் "இந்த வன்முறை செயல்கள் இஸ்லாமுக்கு கெட்ட பெயரை கொண்டுவருகிறது" என்று கூறியுள்ளார் (Islamism: A Cartoon of Islam).

தாவீது இராஜாவின் குமாரன் சாலொமோன் கூறிய நீதிமொழிக்கு ஏற்றது போல, உள்ளது மேற்கண்ட இஸ்லாமியர்களின் எச்சரிக்கைகள்: நீதிமொழிகள் 19:11 மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்த மேற்கண்ட வசனம் சொல்வதை கைக்கொள்ளவேண்டும். மேலும், இஸ்லாமியர்கள் கூட முந்தைய நபிகளுக்கு இறக்கப்பட்டதை நம்புகிறபடியினால், நாம் இப்படிப்பட்ட நல்ல அறிவுரைகளை ஏற்கவேண்டும். குற்றத்தை மன்னிப்பது நமக்கு மகிமையாக இருக்கிறது என்பதை நாம் நம்பினால், முஹம்மதுவும், இயேசுவும் இந்த விஷயத்தில் (கேலி செய்தல் பற்றி) எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதை கவனிப்பது சாலச்சிறந்தது. இவ்விருவர் இஸ்லாமையும் மற்றும் கிறிஸ்தவத்தையும் தோற்றுவித்தவர்கள் / மூலைக்கற்கள் ஆவார்கள். எனவே, இவர்கள் எப்படி எதிர் கொண்டார்கள் செய்தார்கள் என்பதை கவனிப்போம்.

கேலி செய்தவரை கொல்வது (முஹம்மது):

சஹீஹ் புகாரி ஹதீஸில் எப்படி ஒருவன் முஹம்மதுவை கேலிசெய்து அவர் மனதை புண்படுத்திவிட்டான் என்பதை வாசிக்கமுடியும். சஹீஹ் புகாரி பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4037

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று கூறினார்கள்.

உடனே முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள்.

உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(சரி) சொல்" என்றார்கள். . . .

இந்த ஹதீஸ் மிகவும் நீளமாக இருப்பதினால், வெறும் சுருக்கத்தை இங்கு கொடுத்துள்ளோம். இதன் முடிவுரை என்னவென்றால், கஅப் என்பவர் கொலை செய்யப்பட்டார்( MUHAMMAD AND THE MURDER OF KAB BIN AL-ASHRAF). உண்மையில், இஸ்லாமிய ஆதார நூல்களின் படி, தம்மை கேலிசெய்து எதிர்த்தவர்களை முஹம்மது கொலை செய்தார். துரதிஷ்டவசமாக மேற்கண்ட ஹதீஸ்களை படிக்கும் முஸ்லிம்கள் தங்கள் நபியை கெலிசெய்யும் நபர்களைக் கண்டால், மூர்க்கவெறி கொண்டு கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் சென்றுவிடுகின்றனர். தம்மை கேலி செய்பவர்களிடம் முஹம்மது எப்படி நடந்துக்கொண்டார் என்பதை அறிய இந்த விவரமாக கட்டுரைகளை படிக்கவும் கட்டுரை 1, கட்டுரை 2.

கேலிசெய்பவர்களிடம் பொறுமையுடன் இருந்து மன்னித்தல் (இயேசுக் கிறிஸ்து):

முஹம்மதுவை கேலி செய்து எதிர்த்தது போலவே இயேசுவையும் கேலி செய்து எதிர்த்தனர், ஆனால், இப்படிப்பட்டவர்களை கொல்லும் படி, இயேசு தம் சீடர்களுக்கு கட்டளையிடவில்லை. மக்கள் தன்னை கேலி செய்யவும், அவமானப்படுத்தவும், அவ்வளவு ஏன், தம் முகத்தில் துப்பவும் இயேசு அனுமதித்தார். இயேசுவை சிறைபிடித்து, அவரை சிலுவையில் அறைந்த நிகழ்ச்சியை நீங்கள் கீழ்கண்ட மத்தேயு 27:1-54 வரையுள்ள வசனங்களில் படியுங்கள்:

விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.

. . . . தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான் .

அதற்கு இயேசு : நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.

அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்.

அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்.

பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள். தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான்.

அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.

பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.

தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான்.

அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.

கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.

அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள். அவரைப் பரியாசம்பண்ணினபின்பு , அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.

அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.

அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.

அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.

அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி: மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள் .

ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

இயேசு அவமானப்பட்டார், நிந்திக்கப்பட்டார் என்பதை காட்ட நான் அதிக வசனங்களை மேற்கோள் காட்டினேன். உண்மையில் அவரை அனேகர் நிந்தித்தார்கள்,

1) ரோம காவலாளர்கள்

2) யூத மத தலைவர்கள்

3) மக்கள் கடைசியாக

4) அவருரோடு சிலுவையில் அறியப்பட்ட கள்ளர்கள் கூட நிந்தித்தார்கள் .

இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், இயேசு தம்மை நிந்தித்தவர்களிடம் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதாகும். முஹம்மதுவின் வாழ்வில் காணப்பட்டது போல, தம்மை நிந்தித்தவர்களை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம், இயேசுவிடம் காணப்பட்டதா? மேலும், சமீப காலத்தில் நாம் செய்தித்தாள்களில் படித்ததுபோல, முஹம்மதுவை கேலி செய்து வெளியான படத்திற்கு எதிராக முஸ்லிம்கள் கொண்ட மூர்க்கவெறி இயேசுவிடம் காணப்பட்டதா?

இயேசு தம்மை அவமானப்படுத்தியவர்களை பழி வாங்கவில்லை என்று வேதம் நமக்கு தெளிவாக கூறுகிறது. அதற்கு பதிலாக, இயேசு பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் காட்டினார். தனக்கு எதிராக செய்த தவறுகளை அவர் மன்னித்தார் (இது நமக்கு நீதிமொழிகள் 19:11ம் வசனத்தை ஞாபகப்படுத்துகிறது). மத்தேயு 26:52-54ல் காண்பதுபோல, அனேக ஜனங்கள் ஆயுதங்களுடன் வரும் போது கிறிஸ்து பொறுமையுடன் சர்வ வல்லவரில் சார்ந்திருந்தார். அந்த மக்கள் அவரை கைது செய்ய வந்தார்கள். வாளை பயன்படுத்திய பேதுவை நோக்கி இயேசு "உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள் என்றார். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்".

மக்கள் இயேசுவிற்கு எதிராக செய்த குற்றங்களை அவர் பொறுமையோடு சந்தித்தது மட்டுமல்ல, அவைகளை அவர் மன்னித்தும் விட்டார். இதனை நாம் லூக்கா 23:34ல் காணலாம், அங்கே அவர் "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார் ".

இயேசு தன்னுடைய எதிர்களிடம் கிருபையையும், அன்பையையும் காட்டினார். இயேசுவின் இந்த செயல் முஹம்மதுவின் செயல்களுக்கும், போதனைக்கும் எதிரானதாகும். உண்மையில் இயேசு, அநீதியை பொறுமையுடன் சகித்துக்கொள்வதைப் பற்றிய ஒரு மாதிரியை மட்டும் காண்பித்துச் செல்லவில்லை. மேலும் தன்னை பின்பற்றும் மக்கள் கீழ்கண்டவைகளை செய்ய போதித்துச் சென்றுள்ளார், " நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் "(மத்தேயு 5:44)

இயேசுவின் மாதிரியை பின்பற்றுதல்:

இன்று இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் நிந்திக்கப்படுகிறார்கள், பல பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை யாரும் நிராகரிக்கமுடியாது. இயேசுவின் போதனையும் இந்த நிலையை முன்னறிவித்துள்ளது. இயேசு தாம் எப்படி பாடுகள் அனுபவித்தாரோ அதே போல கிறிஸ்தவர்கள் துன்பப்படுத்தப்படுவார்கள் என்று இயேசு எச்சரிக்கை விடுத்துள்ளார் (யோவான் 15:18-20, 1 பேதுரு 2:21-23; 4:12, பிலிப்பியர் 1:28-29). மேலும் தம்மை பின்பற்றுபவர்களை சிலர் இறைவனின் பெயரில் கொலை செய்வார்கள் என்று இயேசு முன்னறிவித்துள்ளார் (யோவான் 16:2).

கிறிஸ்தவர்களை இஸ்லாமியர்கள் கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள் என்பது எல்லாரும் அறிந்த உண்மையாக இருக்கிறது. அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை அதிகமாக முஸ்லிம்கள் கொடுமைப்படுத்துகிறார்கள். முக்கியமாக சலீம் மன்ஸூர் என்ற அரசியல் பாட பேராசிரியர், மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவ சிறும்பான்மையினர் மீது இஸ்லாமியர்களின் வன்முறை என்பது "சகிக்கமுடியாதது, மனிதாபமற்றது" என்று கூறுகிறார்.

இறைவனின் பிள்ளைகளின் வெற்றி:

ஒரு கிறிஸ்தவன் தேவனுக்காக உயிர்த்தியாகம் செய்கிறானோ இல்லையோ, ஆனால் தன்னை எப்போதும் தேவன் கவனித்துக்கொண்டு இருக்கிறார், இந்த தீய உலகத்திலிருந்து தன்னை காப்பார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது (யோவான் 17:11-15). இதே போல நம்பிக்கையை "1 யோவான் 5:4,5,11,12" தருகிறது:

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

ஒரு வெற்றியுள்ள உயிர்த்தியாகம் பற்றி பைபிள் இவ்விதமாக கூறுகிறது: மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 12:11)

வெற்றியும் கௌரவமும்:

மார்க்கத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை கௌரவப்படுத்தி, அவர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள் என்று புகழாரம் சூட்டுவது என்பது இஸ்லாமியர்களுக்கு தெரியாத ஒன்றல்ல. இஸ்லாமை பொறுத்தமட்டில், ஒருவர் சொர்க்கத்தை அடையும் நிச்சயமான வழி என்னவென்றால், ஜிஹாதில் தன் உயிரை கொடுத்து மரிப்பதாகும். எனினும், பைபிளை பொறுத்தமட்டில், சாத்தானை வெற்றிக்கொண்டு, தேவனால் சொர்க்கத்தில் அனுமதிக்கப்படுவதற்கு நம்முடைய சொந்த நீதியான காரியங்கள் உதவாது, அதற்கு பதிலாக, ஆட்டுக்குட்டியின் (இயேசுவின்) இரத்தத்தின் மூலமாக கிட்டும் கிருபை அதற்கு உதவும்.

உயிர்த்தியாகம் மற்றும் கௌரவம் என்றால் என்ன என்பதை இயேசுவின் போதனை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தம்மை பின்பற்றுபவர்கள் யார் என்பதையும், உயிர்த்தியாகம் செய்பவர்கள் யார் என்பதையும் இயேசு அடையாளம் காட்டியுள்ளார். அதாவது, தங்கள் உயிரை அதிகம் நேசிக்காதவர்கள், அப்படியானால், மரிப்பதற்கு பயப்படாதவர்கள் யார் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். (யோவான் 12:25,26)

மேற்கண்ட வசனங்களுக்கு (25,26) முன்னான வசனங்களில் , இயேசு தாம் மகிமையில் செல்வதைப் (மரிப்பதைப்) பற்றிய ஒரு உவமையை கூறினார், அதாவது ஒரு கோதுமை மணியானது மரித்தால் மட்டுமே, மிகுந்த அறுவடையை கிடைக்கும் என்பதைக் குறித்து விவரித்தார்.

இந்த தற்போதைய கட்டுரையின் தலைப்பு பற்றிய இதர முக்கியமான கட்டுரைகள்:

1) இயேசுவும் முஹம்மதுவும் நிந்தனையை எப்படி எதிர்க்கொண்டு செயல்பட்டார்கள் என்ற ஒரு ஒப்பிட்டை கட்டுரையாக ஜான் பைபர் மிகவும் அழகாக எழுதியுள்ளார்: நிந்திக்கப்படும் போது: முஹம்மதுவின் செய்ல்பாடுகளில் அல்ல, கிறிஸ்துவின் செயல்பாடுகளில் உள்ள சாராம்சம்.

2) கேலிச்சித்திரத்தினால் உண்டான கலவரங்கள் பற்றிய 2006ம் ஆண்டு நான் எழுதிய கட்டுரை: இஸ்லாமை இழிவுப் படுத்துவது எது? - What Defames Islam?

3) இயேசுவையும் முஹம்மதுவையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட இரண்டு முக்கியமான கட்டுரைகள்: Jesus and Muhammad: Fifteen Major Differences and The Cornerstone: Muhammad or Jesus?

4) கடைசியாக, இந்த ஒரு கட்டுரையை நான் உங்களுக்கு பரிந்துரை செய்வேன், அதாவது சமீபத்தில் வெளியான அந்த வீடியோவை முஹம்மது கண்டிருந்தால், எப்படி செயல்பட்டு இருப்பார் என்பதைப் பற்றிய கட்டுரையாகும்: அந்த வீடியோவை முஹம்மது பார்த்து இருந்திருந்தால், என்ன செய்து இருப்பார்?

ஆங்கில மூலம்: Mockery & Honor: Muhammad and Jesus

ரோலண்ட் கிளார்க் அவர்களின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.