அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 24, 2008

Fwd: ஏகத்துவத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 4 (ஒற்றுமைகள் 101-133)


ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 4  (ஒற்றுமைகள் 101-133)
 
 
குறிப்பு: ஏகத்துவம் தளத்தில் பவுலும் கிறிஸ்தவமும் என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு இருந்தார்கள். இக்கட்டுரைக்கு தொடர் பதிலாக நாம் இயேசுவின் போதனைக்கும் பவுலின் போதனைக்கும் இடையே உள்ள ஒற்றுமையை தொடர் கட்டுரையாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். படிக்கவும்:
இதே தலைப்பில் இந்த மூன்றாம் பாகத்தில் இன்னும் 33 (101 to 133) ஒற்றுமைகளை இக்கட்டுரையில் காணலாம். …

 
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும்
இடையேயான 133 ஒற்றுமைகள் - Part 4

More Similarities between the Lord Jesus Christ and the Apostle Paul

தொகுத்தவர்: அந்தோனி வேல்ஸ் (Anthony Wales)
 
 
 
101. இயேசு யூத சட்டங்களை கைக்கொண்டார்.
Jesus observed the Jewish Law


 
இயேசு: நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (மத் 5: 17)

 
பவுல்: நாம் புத்திர சுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக் கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். (கலா 4: 5, 6)

 
102. திருமணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ஆதியாகமம் 2: 24 மேற்கோள் காட்டப்படுகிறது
Genesis 2:24 quoted when talking about marriage


 
இயேசு: அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? (மத் 19: 3-5)

 
பவுல்: அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான். நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள். (எபே 5: 28-33)

 
103. பூமிக்குரியவைகளை அல்ல பரலோகத்திற்குரியவைகளை நாடுங்கள்
Focus on heaven, not on earthly things


 
இயேசு: பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (மத் 6: 19-21)

 
பவுல்: நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். (கொலோ 3: 1-2)

 
104. இயேசுவின் இரத்தம் இரட்சிக்கிறது
Jesus' blood saves


 
இயேசு: இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மத் 26: 28 )

 
பவுல்:அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று (கொலோ 1: 20)

 
105. இயேசுவில் புதிய உடன்படிக்கை இருக்கிறது
New covenant in Jesus


 
இயேசு: போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். (லூக் 22: 20)

 
பவுல்: போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். (1 கொரி 11: 25)

 
106. இயேசுவுக்கு பிதாவுக்கு கீழ்படிந்தவராயிருந்தார்
Jesus was obedient to the Father


 
இயேசு: என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். (யோவான் 6: 38 )

 
பவுல்: அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். (பிலி 2: 8 )

 
107. விசுவாசிகள் ஒளியாயிருக்கிறார்கள்
Believers are light


 
இயேசு: நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;... (மத் 5: 14)

 
பவுல்: முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ, கர்த்தருக்குள்
வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். (எபே 5: 8 )

 
108. இரண்டு அல்லது மூன்றுபேருடைய சாட்சிகள் ஏற்றுக்கொள்ளப்படும்
Testimony of two or three witnesses


 
இயேசு: அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ (மத் 18: 16)

 
பவுல்: மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக் கொள்ளக் கூடாது. (1 தீமோ 5: 19)

 
109. தேவனுடைய ராஜ்யம்
Kingdom of God


 
இயேசு: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். (மாற் 1: 15)

 
பவுல்:தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது. (1 கொரி 4: 20)

 
110. மரணம் நித்திரை என்று அழைக்கப்படுகிறது
Death called "sleep"


 
இயேசு: இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; (யோவான் 11: 11-14)

 
பவுல்: அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். (1 கொரி 15: 6)

 
 
111. கிரியைகள் கனி என்றழைக்கப்பபடுகிறது
Works called "fruit"


 
இயேசு: கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். (மத் 7: 15-17)

 
பவுல்: அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனி கொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. (ரோமர் 7: 4-5)

 
112. தேவனே சிருஷ்டிகர்
God is Creator


 
இயேசு ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். (மாற்கு 10: 6)

 
பவுல்: தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை. (ரோமர் 1: 19-20)

 
113. தீமையானது இருதயத்திலிருந்து புறப்படுகிறது
Evil comes from the heart


 
இயேசு வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். (மத் 15: 18-19)

 
பவுல்: இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். (ரோமர் 1: 24)

 
114. அப்போஸ்தலருக்கு செவிகொடுக்கிறவர்கள் இயேசுவுக்கும், பிதாவாகிய தேவனுக்கும் செவிகொடுக்கிறார்கள்
Whoever listens to the apostles listens to Jesus and God (the Father)

 

 

இயேசு சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார். (லூக் 10: 16)

பவுல்: நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின் பற்றுகிறவர்களாயிருங்கள். நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; …, ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது. (1 கொரி 11: 1, 23; 1 தெச 2: 13)

 
115. சுவிஷேசத்தின் வருகையினால் நியாயப்பிரமாணம் நிறைவடைகிறது
The Law is completed with the coming of the Gospel


 
இயேசு நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள். (லூக் 16: 16)

 
பவுல்: ஆதலால் விசுவாசம் வருகிறதற்கு முன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல் பண்ணப்பட்டிருந்தோம். இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. (கலா 3: 23-26)

 
116. வேதவாக்கியங்கள் இயேசுவைக் குறிக்கின்றன
The Scriptures point to Jesus


 
இயேசு வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார். (யோவான் 5: 39-40, 46-47)

 
பவுல்: அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கிச் சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான். (அப் 28: 23)

 
117. சபை
The Church


 
இயேசு மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை. (மத் 16: 18 )

 
பவுல்: தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது. (1 தீமோ 3: 15)

 
118. சபையானது அப்போஸ்தலர்கள் மீது கட்டப்பட்டுள்ளது
The Church is built on the apostles


 
இயேசு மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்ட விழ்க்கப்பட்டிருக்கும் என்றார். பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (மத் 16:18-19; 18: 18; 28: 19-20)

 
பவுல்: ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக் கல்லாயிருக்கிறார்; (எபே 2: 19-20)

 
119. கிறிஸ்தவர்கள் ஒன்றாக இருக்கவேண்டும்
Christians should be one


 
இயேசு நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக் கொள்ளும்.அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும் படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். (யோவா 17: 11, 21-23)

 
பவுல்: சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏக யோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். (1 கொரி 1: 10)

 
120. தேவதூதர்கள் என்பவர்கள் இருக்கிறார்கள்
The existence of angels


 
இயேசு பின்னும் அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவா 1: 51)

 
பவுல்: நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம் பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன். (1 தீமோ 5: 21)

 
 
121. கள்ளத்தீர்க்கதரிசிகள் ஓநாய்களாக வர்ணிக்கப்பட்டுள்ளார்கள்
False messengers described as wolves


 
இயேசு:கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். (மத் 7: 15)

 
பவுல்: நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். (அப் 20: 29-30)

 
122. பிசாசுகள் இருக்கின்றன
The existence of demons


 
இயேசு: நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. (மத் 12: 28 )

 
பவுல்: அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. (1 கொரி 10: 20)

 
123. எதிரியானவன் ஜனங்களை வழிவிலகச் செய்வதற்காக பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வான்
The enemy will produce great signs and omens to lead people astray


 
இயேசு: ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். (மத் 24: 24)

 
பவுல்: அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனடியால் அப்படி நடக்கும். (2 தெச 2: 9-10)

 
124. பொறுமையோடு சகிப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்
Those who endure will be saved


 
இயேசு: உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். (லூக் 21: 19)

 
பவுல்: அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; … (2 தீமோ 2: 12)

 
125. எல்லாவற்றையும் விட்டு இயேசுவைப் பின்பற்றுங்கள்
Leave everything and follow Jesus


 
இயேசு: அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். (மத் 19: 21-22)

 
பவுல்: ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். (பிலி 3: 7-11)

 
126. இயேசு கிறிஸ்து மூலமாக மரித்தோரின் உயிர்த்தெழுதல் நடக்கும்
The resurrection of the dead comes through Jesus Christ


 
இயேசு: இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவா 11: 25-26)

 
பவுல்: கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். (1 கொரி 15: 20-23)

 
127. இயேசு கிறிஸ்துவுக்கு எல்லாவற்றையும் செய்ய வல்லமை உண்டு
Jesus Christ has power to do all


 
இயேசு: அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். (யோவா 5: 19-21)

 
பவுல்: நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக் கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். (பிலி 3: 20-21)

 
128. மற்றவர்களை நியாயம் தீர்த்தல்
Judging others


 
இயேசு: நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? (மத் 7: 1-3)

 
பவுல்: ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். இப்படிப் பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ? (ரோமர் 2: 1-3)

 
129. இயேசுவிடமிருந்து விசுவாசிகளை எதுவும் பிரிக்க முடியாது
Nothing can separate believers from Jesus Christ


 
இயேசு: என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப் போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. (யோவா 10: 27-28 )

 
பவுல்: உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். (ரோமர் 8: 35-39)

 
130. பிசாசு ஜனங்களை சோதிக்கிறான்
The devil tempts people


 
இயேசு: அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். (மத் 4: 1, 7)

 
பவுல்: உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடிவாழுங்கள். (1 கொரி 7: 5)

 
131. இயேசு சமாதானத்தைக் கூறி அறிவிக்கிறார்
Jesus proclaims peace


 
இயேசு:சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள். (யோவா 14: 27; 20: 19-20)

பவுல்: அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். (எபே 2: 17)

 
132. விசுவாசிகள் மறுபடியும் பிறந்தவர்கள், புதிய படைப்புகள், புதிய வாழ்க்கையுடையவர்கள்
Believers are reborn, are a new creation with a new life


 
இயேசு: இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். (யோவா 3: 3-6)

 
பவுல்: அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின (ரோமர் 8: 11; 2 கொரி 5: 17)

 
133. பூமியின் மீதான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை தேவ தூதர்கள் கண்டார்கள்
Angels saw Jesus Christ's life on earth


 
இயேசு: அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். பின்னும் அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 4: 11; லூக் 22: 43; யோவா 1: 51)

 
பவுல்: … தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், … (1 தீமோ 3: 16)

 
இக்கட்டுரையை படிக்கும் வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்:

 
இந்த இரண்டு கட்டுரைகளில் இடம் பெறாத இயேசுவிற்கும் பவுலுக்கும் இடையேயான ஒற்றுமைகளை நீங்கள் கண்டு பிடித்தால், எங்களுக்கு அனுப்புங்கள், அவைகளையும் இப்படியலில் நாம் சேர்த்துக்கொள்வோம். ஒற்றுமைகளை வாசகர்கள் எனக்கு அனுப்பினாலோ அல்லது நான் கண்டு கொண்டாலோ இக்கட்டுரை விரிவாக்கப்படும்.

English Source: http://www.answering-islam.org/Wales/jesus_paul_more.htm



 
 
 
 
 

November 23, 2008

ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 3

ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் - 3
 
குறிப்பு: ஏகத்துவம் தளத்தில் பவுலும் கிறிஸ்தவமும் என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு இருந்தார்கள். இக்கட்டுரைக்கு தொடர் பதிலாக நாம் இயேசுவின் போதனைக்கும் பவுலின் போதனைக்கும் இடையே உள்ள ஒற்றுமையை தொடர் கட்டுரையாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். படிக்கவும்:
இதே தலைப்பில் இந்த மூன்றாம் பாகத்தில் இன்னும் 30 (71 to 100) ஒற்றுமைகளை இக்கட்டுரையில் காணலாம். …

 
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும்
இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 3
 
 
100 Similarities between the Lord Jesus Christ and the Apostle Paul
 
 
தொகுத்தவர்: அந்தோனி வேல்ஸ் (Anthony Wales)
 
 
முன்னுரை:
 
  
அநேக முஸ்லீம்கள் இயேசு ஒரு இஸ்லாமிய நபி என்று விசுவாசிக்கின்றனர். மேலும் இதை உறுதிபடுத்துவதற்கு அநேக விவாதங்களையும் எழுப்புகின்றனர். அதில் ஒரு முக்கியமான விவாதம் என்னவென்றால் பவுல் தான் கிறிஸ்தவத்தின் உண்மையான ஸ்தாபகர் என்பதாகும். இந்த விவாதத்தில் அவர்களின் கூற்று, வேதாகமத்தில் புனித பவுலின் போதனைகள் இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாயிருக்கிறது என்பதாகும். இந்தக் கட்டுரையானது பவுலுக்கும் இயேசுவுக்கும் இடையிலான் 100 ஒற்றுமைகளைக் காண்பித்து அவர்களின் கூற்றுக்கு பதில் அளிக்கும் படியாக கொடுக்கப்படுகிறது.
 
 
 
இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமைகள் இயேசு மற்றும் பவுல் பற்றியதான வேதப்பகுதிகளிலிருந்து எடுத்தாளப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் வார்த்தைகள், கிரியைகளை தெரிவிக்கும் ஆதாரப் பகுதியாக சுவிசேஷங்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்) உள்ளது. மேலும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும், வெளிப்படுத்தின சுவிஷேசத்திலும் இயேசுவுடைய சில வார்த்தைகளும் கிரியைகளும் இருக்கிறது. பவுலுடைய வார்த்தைகளும், கிரியைகளும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும் அவருடைய நிருபங்களில் காணப்படுகிறது (ரோமர் நிருபம் முதல் பிலேமோன் நிருபம் வரையிலும்). அவர்களின் வார்த்தைகள், கிரியைகள் மற்றும் வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
 
71. உனக்கு முன்னாக படைக்கபட்டதை சாப்பிடு
Eat what is set before you
 
 
 
இயேசு: ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிற பொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக் கொண்டால் அவர்கள் உங்கள் முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து, (லூக் 10: 8)
 
 
 
பவுல்: அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள். (1 கொரி 10: 27)
 
 
 
72. தலைவர்கள் மேய்ப்பர்களும் மற்றும் விசுவாசிகள் ஆடுகளுமாவர்.
Leaders are shepherds and believers are the flock
 
 
 
இயேசு: அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். .... என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். ...என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். (யோவான் 21: 15, 16, 17)
 
 
 
பவுல்: ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். (அப் 20: 28)
 
 
 
73. விசுவாசிகள் பாம்புகளால் கூட பாதிப்படையார்கள்.
Believers will handle snakes without harm
 
 
 
இயேசு: சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; .... (மாற்கு 16: 18)
 
 
 
பவுல்: பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். (அப் 28: 3-5)
 
 
 
74. வியாதியஸ்தர் மேல் கைகளை வையுங்கள் அவர்கள் சுகமாவார்கள்.
Lay hands on the sick and they will recover
 
 
 
இயேசு: ...வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:18)
 
 
 
பவுல்: புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். (அப் 28: 8)
 
 
 
75. பிசாசுகளைத் துரத்துங்கள்
Cast out demons
 
 
 
இயேசு: விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; ... (மாற்கு 16:17)
 
 
 
பவுல்: பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, (அப் 19:11-15)
 
 
 
76. ஆம் என்றும் இல்லை என்றும் சொல்லாமல் உள்ளதை உள்ளது என்றும் இல்லதை இல்லது என்றும் சொல்
Not Yes and No, but Yes or No
 
 
 
இயேசு: உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். (மத் 5: 37)
 
 
 
பவுல்: இப்படி நான் யோசித்து வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ? நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி. என்னாலும், சில்வானுவினாலம், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார். எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. (2 கொரி 1: 17-20)
 
 
 
77. விவாகரத்தும், மறுமணமும் விபச்சாரமாகும்.
Divorce and remarriage is adultery
 
 
 
இயேசு: அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான். மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார். (மாற்கு 10: 11-12)
 
 
 
பவுல்: அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின் படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல. (ரோமர் 7: 2-3)
 
 
 
78. தேவனுக்கென்று துறவறமும், கன்னித்தன்மையும்
Celibacy/virginity for the Lord
 
 
 
இயேசு: அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள். அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகஜ்யத்தினிமித்தம் தங்களை (மத் 19: 10-12)
 
 
 
பவுல்: நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைகளுக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன். (1 கொரி 7: 32-35)
 
 
 
79. மரணமும் மறுபிறப்பும் விதைப்பதை போன்றது.
Death and rebirth of what is sown
 
 
 
இயேசு: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். (யோவான் 12: 24)
 
 
 
பவுல்: புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. (1 கொரி 15: 36)
 
 
 
80. தீவிரமான பிரச்சனைகள் செல்வத்தோடு தொடர்புடையவை
Serious problems are associated with riches
 
 
 
இயேசு: அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனா யிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத் 19: 21-24)
 
 
 
பவுல்: ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். (1 தீமோ 6: 9-10)
 
 
 
 
81. ஞானஸ்நானம்
Baptism
 
 
 
இயேசு: ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, (மத் 28: 19)
 
 
 
பவுல்: அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்து வந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். (அப் 16: 29-33)
 
 
 
82. பிசாசு
The devil
 
 
 
இயேசு: நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான (யோவான் 8: 44)
 
 
 
பவுல்: நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். (எபே 6: 11)
 
 
 
83. விசுவாசிகளின் மகிமையடைதல்
Glorification of believers
 
 
 
இயேசு: அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோவான் 17: 22)
 
 
 
பவுல்: நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். (ரோமர் 8: 17)
 
 
 
84. சுவிஷேசத்தை பிரசங்கிப்பதின் முக்கியத்துவம்
The importance of preaching the good news
 
 
 
இயேசு: பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். (மாற்கு 16: 15)
 
 
 
பவுல்: ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்? அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. (ரோமர் 10: 13-15)
 
 
 
85. நவமான பாஷைகளை பேசுதல்
Speaking in tongues
 
 
 
இயேசு: விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;(மாற்கு 16: 17)
 
 
 
பவுல்: ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. (1 கொரி 12: 7,8, 10)
 
 
 
86. யூதர்களுக்கு முதலில் பிரசங்கியுங்கள்
Preach to Jews first
 
 
 
இயேசு: அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. (லூக் 24: 47)
 
 
 
பவுல்: யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள். அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம (அப் 13: 45-46)
 
 
 
87. மரித்தோரை எழுப்புங்கள்
Raising the dead
 
 
 
இயேசு: அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப் பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்;; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுகூட அவன் பின்னே போனார். இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு:விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள். ஜனங்கள் வெளியே துரத்தப்பட்ட பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று. (மத் 9: 18-19, 23-26)
 
 
 
பவுல்: வாரத்தின் முதல்நாளிலே, அப்பம்பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது. அப்பொழுது ஜத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான். உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக் கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான். பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப்புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான். அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறதலடைந்தார்கள். (அப் 20: 7-12)
 
 
 
88. நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் வாழ்வதற்குரிய பிரதிபலன்
The results of good and evil living
 
 
 
இயேசு: இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். (யோவான் 5: 28, 29)
 
 
 
பவுல்: தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். (ரோமர் 2: 6-8)
 
 
 
89. உங்களைத் துன்பபடுத்துகிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்
Do good to those who persecute you
 
 
 
 
இயேசு: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்;உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.(மத் 5: 44)
 
 
 
பவுல்: உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள். (ரோமர் 12: 14)
 
 
 
90. இயேசுவும் பவுலும் யூதர்களாயிருந்தனர்
Jesus and Paul were both Jews
 
 
 
இயேசு: . ... அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ளவந்தாள், இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார். யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். (யோவான் 4: 7-9)
 
 
 
பவுல்: மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம். நான் எட்டாம் நாளிலே விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; (பிலி 3: 4-5)
 
 
 
 
91. இயேசுவும் பவுலும் எட்டாம் நாளில் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தார்கள்.
Jesus and Paul were both circumcised on the eighth day
 
 
 
இயேசு: பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். (லூக் 2: 21)
 
 
 
பவுல்: மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம். நான் எட்டாம் நாளிலே விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; (பிலி 3: 4-5)
 
 
 
92. இயேசுவும் பவுலும் உபத்திரவத்திற்கு மூன்று முறை ஜெபித்தார்கள்
Jesus and Paul both prayed three times about suffering
 
 
 
இயேசு: சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி, ஜெபம்பண்ணினார். (மத் 26: 39, 42, 44)
 
 
 
பவுல்: அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். (2 கொரி 12: 7-9)
 
 
 
93. இயேசுவும் பவுலும் தங்களின் ஊழியத்தினிமித்தம் எருசலேமுக்கு போகத் தீர்மானித்தார்கள்
Jesus and Paul were both determined to go to Jerusalem (as part of their mission)
 
 
 
இயேசு: பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம் பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. (லூக் 9: 51-53)
 
 
 
பவுல்: இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்தஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். (அப் 20: 22-24)
 
 
 
94. எருசலேமுக்கு போனால் பாடுபட்டு மரிக்க நேரிடும் என்பதை இயேசுவும் பவுலும் அறிந்திருந்தார்கள்.
Jesus and Paul both knew traveling to Jerusalem would lead to suffering and death
 
 
 
இயேசு: பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்துபோனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்: இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைப் பரியாசம் பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். (மாற்கு 10: 32-34)
 
 
 
பவுல்: இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்தஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். (அப் 20: 22-24)
 
 
 
95. இயேசுவும் பவுலும் யூத ஆலோசனை சங்கத்துக்கு முன்பாக கொண்டுவரப்பட்டார்கள்
Jesus and Paul were both brought before the Jewish council
 
 
 
இயேசு: விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டு வந்து நிறுத்தி: (லூக் 22: 66)
 
 
 
பவுல்: பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதானஆசாரியரையும் அலோசனைச் சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான். (அப் 22:30)
 
 
 
96. இயேசுவும் பவுலும் யூத அதிகாரிகள் முன்னிலையில் தங்கள் வார்த்தைகளினிமித்தம் (தவறாக) அடிக்கப்பட்டார்கள்
Jesus and Paul were both (wrongly) struck because of their words before the Jewish authorities
 
 
 
இயேசு: பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார். இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.(லூக் 18: 19-23)
 
 
 
பவுல்: பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான். அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான். அப்பொழுது பவுல் அவனைப்பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான். (அப் 23: 1-3)
 
 
 
97. இயேசுவும் பவுலும் ரோம ஆளுநர்களுக்கு முன்பாக கொண்டு வரப்பட்டார்கள்
Jesus and Paul were both brought before Roman governors
 
 
 
இயேசு: விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். (மத் 27: 1-2)
 
 
 
பவுல்: அவர்கள் செசரியாபட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள். தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது: உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான். ஐந்து நாளைக்குப் பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாய சாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி: (அப் 23: 33-24:2)
 
 
 
98. இயேசுவும் பவுலும் அவிசுவாசிகளான யூதர்களைப் பற்றிய ஏசாயா தீர்க்கதரிசியின் ஒரே தீர்க்கதரிசனத்தை குறிப்பிட்டார்கள்
Jesus and Paul quoted the same prophecy of Isaiah about unbelieving Jews
 
 
 
இயேசு: ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக் கொண்டார்கள் என்பதே. (மத் 13: 14-15)
 
 
 
பவுல்: இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப் போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது: நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள். இவர்கள் கண்களினால் காணமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்தஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக் கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார். (அப் 28: 25-27)
 
 
 
99. பவுல் இயேசுவுக்காக துன்பப்பட்டார்
Paul suffered for Jesus
 
 
 
இயேசு: .... அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். (அப் 9: 16)
 
 
 
பவுல்: அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிராயணம் பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது (2 கொரி 11: 23-28)
 
 
 
100. புறஜாதிகளுக்கும், யூதர்களுக்கும் ராஜாக்களுக்கும முன்பாக பவுல் இயேசுவைப் பற்றி அறிவிக்கவேண்டியவராக இருந்தார்.
Paul to proclaim Jesus before Jews, Gentiles, and Kings
 
 
 
இயேசு: அதற்கு கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். (அப் 9: 15)
 
 
 
பவுல்: அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக்கேட்டார்கள். உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயுபாஷையிலே பேசத்தொடங்கினான், சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவி கொடுப்பீர்களாக என்றான்.அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது. நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையைநீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத் தொடங்கினான். அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன். தீர்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுய ஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.
(அப் 15: 12; 21: 40-22: 1, 6, 8; 26: 1-2,22-23)
 
 

 
 
இயேசுவுடைய மற்றும் பவுலுடைய போதனைகளிலும் செயல்களிலும் அநேக ஒற்றுமைகளை காண்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை ஏனென்றால் பவுலைத் தன்னுடைய அப்போஸ்தலனாக ஏற்படுத்தியதே இயேசுதான்.
 
 
அதற்கு கர்த்தர்(இயேசு): நீ போ; அவன்(பவுல்) புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும்
என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். (அப் 9: 15)
 
அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய் மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய். (அப் 22: 14-15)
 
மேலுள்ள 100 ஒற்றுமைகளோடு நிறைவடையவில்லை இன்னும் அநேகம் இருக்கிறது.

 
 

 

 
 

November 22, 2008

ஒரு எலியைக் கூட கொல்ல கூட மனது வராது,,ஆனால்.. மனிதனை கொல்ல ஆசைப்பட்டேன்.


வாலித் அவர்களின் சாட்சி




எனது பெயர் வாலித் (walid), நான் இஸ்ரேலில் உள்ள பெத்லகேம் எனும் நகரில்
பிறந்தேன். நான் பிறந்த நாள் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசியான முகமது (Al-
Mauled Al-Nabawi) அவர்களின் பிறந்த‌ நாளாயிருந்தபடியால் அந்நாள் மிகவும்
புனிதமான நாளாகும். இந்த நாளில் நான் பிறந்தபடியால் என் தந்தை அதிக‌
மகிழ்ச்சி அடைந்தார். அதன் காரணமாக எனக்கு அரபி மொழிப்படி வாலித் என
பெயர் சூட்டினார். பிறப்பு என்ற பொருள்படும் அரபி வார்த்தை மௌலத்(Mauled
– The Birth) என்ற வார்த்தைக்கு இணையாக இந்த பெயரை எனக்கு சூட்டினார்.
இஸ்லாமிய தீர்க்கதரிசியின் பிறந்த நாளை எப்போதும் நினைவு கூறுவதாக
அப்பெயர் இருந்தது.


புனித நகரில் ஆங்கிலமும் இஸ்லாமிய கல்வியும் கற்பித்து வந்த எனது தந்தை
ஒரு பாலஸ்தீனிய முஸ்லீமாவார். அமெரிக்கரான எனது தாயாரை 1956 ம் ஆண்டு
உயர் கல்வி கற்க அமெரிக்கா சென்ற எனது தந்தை திருமணம் செய்துக்கொண்டார்.


அமெரிக்காவின் வாழ்க்கை முறை எங்கே த‌ன‌து இர‌ண்டு பிள்ளைக‌ளையும்
பாதித்துவிடுமோ என‌ அஞ்சிய‌ என‌து த‌ந்தை க‌ருவுற்றிருந்த‌ என‌து தாயாரை
அழைத்துக்கொண்டு 1960 ம் ஆண்டு இஸ்ரேல் திரும்பினார். அப்போது அப்ப‌குதி
ஜோர்டான் என‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌து. என‌து பெற்றோர் பெத்ல‌கேம் வந்த‌ போது
நான் பிற‌ந்தேன், என‌து த‌ந்தை வேறு வேலைக்கு சென்ற‌தால் குடும்ப‌மாக‌
நாங்க‌ள் ச‌வுதி அரேபியாவுக்குச் சென்றோம். சிறிது கால‌த்துக்குப்பின்
புனித‌ பூமிக்கு திரும்பினோம், இம்முறை நாங்க‌ள் சென்ற‌டைந்த‌து பூமியின்
தாழ்வான‌ ப‌குதியான‌ ஜெரிக்கோ வாகும்.



ஆறு நாள் யுத்தம் நடப்பதற்கு முன்பு ப‌ள்ளிக்கூட‌த்தில் முத‌ன் முத‌லில்
நான் ப‌டித்த‌ பாட‌லை என்னால் ம‌ற‌க்க‌ முடியாது. அத‌ன் த‌லைப்பு
"அரேபியர் எங்க‌ளுக்கு பிரிய‌மான‌வ‌ர்க‌ள், யூத‌ர்க‌ள் எங்கள் நாய்க‌ள்"
என்ப‌தாகும். அப்போதெல்லாம் யூத‌ர்க‌ள் என்றால் யார் என்றெல்லாம் என‌க்கு
தெரியாது, ம‌ற்ற‌ பிள்ளைக‌ளோடு சேர்ந்து அத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம் என‌
தெரியாம‌லேயே அப்பாட‌லை ப‌டித்து வ‌ந்தேன்.



புனித நகரில் வளர்க்கப்பட்ட நான் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் நடந்த
பல யுத்தங்களை கண்டிருக்கிறேன், அதன் மத்தியில் வாழ்ந்தும்
வந்திருக்கிறேன். நாங்கள் ஜெரிக்கோவில் வசித்து வந்த போது, முதல்
யுத்தமாகிய‌ "ஆறு நாள் யுத்தம் - Six Day War" நடந்தது அந்த யுத்தத்தில்
பழைய ஜெருசலேம் நகரையும், மீதமுள்ள பாலஸ்தீனத்தையும் யூதர்கள்
கைப்பற்றினர். இந்நிகழ்வு உலகளாவிய அரபியர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே
பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கியது.


ஜெருசலேமில் இருந்த அமெரிக்க கவுன்சில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பு
தான் அப்பகுதியில் வசித்த அமெரிக்கரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு
செல்ல முயற்சிகள் எடுத்தது. எனது தாயார் அமெரிக்கரானபடியால் எங்களுக்கும்
உதவிசெய்ய அவர்கள் முயன்றனர் ஆனால் தேசப்பற்றாளரான எனது தந்தை தனது
நாட்டை அதிகமாக நேசித்தபடியால் அந்த உதவியை நிராகரித்து விட்டார். அந்த
யுத்தத்தில் நடந்த பல நிகழ்வுகளை எனது நினைவுக்குக் கொண்டுவர இப்போதும்
முடிகிறது. இரவு பகலாக ஆறு நாட்கள் பொழிந்த குண்டு மழை, பல வீடுகளையும்,
கடைகளையும் அரேபியர் கொள்ளையிட்டது, இஸ்ரேலியரின் தாக்குதலுக்கு பயந்து
ஜோர்டான் நதியை கடக்க ஓடும் மக்கள் என்று, பல நிகழ்வுகளை கூறலாம்.



ஆறு நாட்களில் வெற்றியடைந்த படியால் அந்த யுத்தம் "ஆறு நாள் யுத்தம் -
Six Day War" என அழைக்கப்பட்டது, ஏழாவது நாளில் கோரென்(Goren) என்ற யூத
ரபி ஆட்டின் கொம்பினால் செய்யப்பட்ட பூரிகையை ஜெருசலேமில் உள்ள
"கண்ணீரின் சுவர் - Wailing Wall" என்ற சுவரிடம் நின்றுக்கொண்டு முழங்கி
வெற்றிப் பெற்றதாக அறிவித்தார். ஜெரிக்கோ கோட்டையை யோசுவா(Joshua) என்ற
தலைவரின் தலைமையின் கீழ் ஆறு முறை சுற்றி வந்ததையும் ஏழாவது நாள் ஏழுமுறை
சுற்றி வந்ததையும், அவ்வாறு சுற்றியபின் ஆசாரியர்கள் பூரிகைகளை முழங்கி
பெரிய ஆர்ப்பரிப்போடு ஜெரிக்கோ நகரை கைப்பற்றியதற்கு இணையானது இந்த
வெற்றி என யூதர்கள் பெருமைப்பட்டனர். ஜெரிக்கோவில் வாழ்ந்த எனது
தந்தைக்கு இது ஜெரிக்கோ சுவர் இடிந்து தன் மேல் விழுந்ததைப் போன்ற
அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.



யுத்த காலத்தில் ஜோர்டான் வானொலி நிலையத்தின் செய்திகளையே எனது தந்தை
கேட்டுக் கொண்டிருந்தார், அரேபியர்கள் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார்கள்
என்ற செய்தியையே கூறிக் கொண்டிருந்தார், ஆனால் அந்தோ பரிதாபம் அவர் தவறான
வானொலி நிலையத்தின் செய்தியை கேட்டுக் கொண்டிருந்தார். இஸ்ரேலிய வானொலியோ
அதற்கு மாறாக தாங்கள் யுத்தத்தில் அடையப்போகும் வெற்றியைப் பற்றி
முழங்கிக் கொண்டிருந்தது. எனது தந்தையோ அரேபியர்களின் செய்தியையே
நம்பினார், இஸ்ரேலியர் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர் என நம்பினார்.



பின்னர் நாங்கள் பெத்லகேம் நகருக்கு சென்றோம், அங்கு எனது தந்தை எங்களை
ஒரு ஆங்கிலிக்கன்‍ லுத்தரன் பள்ளியில்(Anglican-Lutheran school)
சேர்த்துவிட்டார். இப்பள்ளியில் ஆங்கிலத்திற்கு நல்ல பாடங்கள்
இருக்கின்றன என்பதால் சேர்த்துவிட்டார். நானும் எனது சகோதரன் மற்றும்
சகோதரி என மொத்தம் மூன்று பேர் தான் அப்பள்ளியில் இஸ்லாமியராக இருந்தோம்.
நாங்கள் பாதி அமெரிக்கராக இருந்ததால் அப்பள்ளியின் ஆசிரியர்கள் எங்களை
அவ்வப்போது அடிப்பார்கள், மற்றவர்கள் எள்ளி நகையாடுவதற்கு இது காரணமாக
இருந்தது. பைபிள் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது நான் வகுப்பை விட்டு
வெளியே சென்று காத்திருப்பேன். ஒரு நாள் பைபிள் வகுப்புக்கு நான் சென்ற
பொது எங்கள் வகுப்பில் இருந்த முரட்டு மாணவன் ஒருவன் என்னோடு சண்டைக்கு
வந்தான். இந்த "அரைகுறை அமெரிக்க முஸ்லீம் இங்கு இருக்க வேண்டாம்!" என
கத்தினான். இதைக்கண்டு நான் வெளியேற மறுத்தேன். பைபிள் வகுப்பு எடுத்த
ஆசிரியை என்னை வகுப்பிலேயே அமருமாறு கூறினார். அப்பள்ளியிலே முதல்
முறையாக இஸ்லாமியனான நான் பைபிள் படிக்கும் வகையில் விதிகளை மாற்றுவதற்கு
நான் காரணமானேன். அதன் பிறகு சுமார் மூன்று ஆண்டுகள் கேலிகளுக்கும்
கிண்டல்களுக்கும் நடுவே பைபிளைப் படித்தேன்.



அதன் பின்னர் எனது தந்தை என்னை ஒரு அரசாங்கப் பள்ளியில்
சேர்த்துவிட்டார், அங்கு இஸ்லாமிய நம்பிக்கையில் வேரூன்றி வளர்ந்தேன்.
என்றாவது ஒரு நாள் முகமது நபியவர்களின் தீர்க்கதரிசன நிறைவேறுதலின் படி
புனித பூமி ஒரு மிக பயங்கரமான யுத்தத்தின் படி மீட்கப்படும் எனவும்
யூதர்கள் மிகப்பெரிய அளவில் அழிக்கப்படுவார்கள் என நம்பினேன்.



இந்த தீர்க்கதரிசனமானது முகமதுவின் பாரம்பரிய நூலில்(ஹதீஸ்களில்)
கூறப்பட்டுள்ளது, அதன்படி :


"நியாயத்தீர்ப்பின் நாளானது இஸ்லாமியர்கள் யூத இனத்தை வெற்றி கொள்ளாதவரை
சம்பவிக்காது (The day of judgment shall not come to pass until a tribe
of Muslims defeat a tribe of Jews.)"

(Narrated by Abu Hurairah, Sahih Muslim, Hadith #6985; Sahih al-
Bukhari, Vol. 4, #177)


எந்த இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என முகமதுவிடம் கேட்டபோது அவர்
"ஜெருச‌லேமிலும் அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் இது நடைபெறும்" என
கூறியுள்ளார்.



எனது இளம் பிராயத்தில் எனது தந்தையைப் போலவே நானும் இஸ்லாமிய
வாழ்க்கையில் திருப்பப்பட்டு இஸ்லாமிய போதகர்கள் வாயிலாக
பயிற்றுவிக்கப்பட்டேன். முகமதுவின் தீர்க்கதரிசனத்தை நம்பி எனது
வாழ்க்கையை புனித போர் எனும் ஜிஹாத்துக்கு அர்ப்பணித்தேன், அதாவது ஜிஹாத்
மூலமாக வெற்றியடைவது இல்லையேல் உயிர்த்தியாக‌ம் செய்து மரிப்பது.
புனிதப்போரின் வாயிலாக உயிர்த்தியாக‌ம் செய்வதன் வாயிலாக மட்டுமே மீட்பை
அடைந்து பரலோகம் செல்லமுடியும். ஏனென்றால் அல்லா அவரது தீர்க்கதரிசியான
முகமது வாயிலாக குர்‍ஆன் மூலமாக இவ்வாறு அருளியிருக்கிறார்:


"அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள்
என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே
இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்."(குர்‍ஆன்
3:169)


பள்ளிப் பிராயத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கெதிராக கலகங்களில் ஈடுபடும்
போது பெரிய உரைகள், இஸ்ரேலிய எதிர்ப்பு கோஷங்கள் போன்றவற்றை தயாரித்தேன்.
இதன்மூலமாக கிளர்ச்சி அடையச் செய்யவும் இஸ்ரேலிய படை வீரர்களை கற்களால்
தாக்கவும் ஏவப்பட்டனர். "எதிரிகளோடு சமாதான உடன்படிக்கை வேண்டாம், எங்கள்
ஆன்மாவும், இரத்தமும் விடுதலைக்கே அர்ப்பணிக்கிறோம், அராபத்திற்கே
பாலஸ்தீனாவிற்கே அர்ப்பணிக்கிறோம், சியோன்காரர்கள்(இஸ்ரேலியர்கள்)
நாசமாய் போகட்டும்" என முழங்கினோம். யூதர்களுக்கு எதிராக போராடுவது
இறைவனுக்கு செய்யும் தொண்டு எனவும் இறைவனின் திட்டத்தை இவ்வுலகில்
நிறைவேற்றுகிறேன் எனவும் அதிகமாக நம்பினேன். ஏதாவது ஒரு வகையில் இஸ்ரேலிய
படையினருக்கு சேதம் வரும்வகையில் திட்டங்களை யோசித்து செயல்படுத்தினேன்.



பள்ளிகளிலும் தெருக்களிலும் மற்றும் அரேபியர்கள் அல்-அக்சர்-மசூதி(Al-
Masjid Al-Aqsa) என்றுச் சொல்லக்கூடிய‌ ஜெருச‌லேமின் மிகப்புனித
இடத்திலும் கூட கலகங்களை தூண்டினேன். எனது பள்ளிப்பிராயத்திலே எந்த ஒரு
கலகத்தையும் தூண்டிவிடுவதில் முன்னால் நின்றேன். பலர் வெடிகுண்டுகளாலும்,
துப்பாக்கிகளாலும் யூதர்களை தாக்கி இஸ்ரேலை விட்டு யூதர்களை
துரத்திவிடலாம் என முனைப்போடு செயல்பட்டனர் ஆனால் அவர்களை இஸ்ரேலில்
இருந்து வேரறுப்பதற்கு இயலாத காரியமாகவே இருந்தது.



எதுவும் என்னை மாற்ற முடியவில்லை, ஒன்று நான் சாக வேண்டும் இல்லையானால்
ஏதாவது ஒரு அற்புதம் நடைபெறவேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால்
இண்டிஃபடா(Intifada) அல்லது எழுச்சி எனும் போராட்டம் நடக்கும் போது
கற்களை கொண்டு தாக்குபவனாகவும், கிள‌ர்ச்சி செய்பவனாகவும் காணப்பட்டேன்,
உங்களில் பல‌ர் சி என் என்(CNN) போன்ற தொலைக்காட்சியில் என்னைப்
போன்றவர்களை பார்த்திருக்கக்கூடும். யூதர்களைப் பொறுத்தவரை நான் ஒரு
மோசமான தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டேன். எனது தீவிரவாதத்தின் மூலமாக
மற்றவர்களை அச்சுறுத்திய நான் எனது தீவிர மத நம்பிக்கைகளின் மூலமாக நானே
அச்சுறுத்தப்பட்டேன் என்பது தான் வியக்கத்தக்க உண்மை.



எனது அதி தீவிர செயல்பாடுகள் என்னை பரலோகம் கொண்டுசெல்ல அதிக வாய்ப்பாக
இருக்கும் என்பது எனது கருத்து. ஆனால் இறைவனின் தராசில் எனது
நற்செய்கைகள் எனது தீய செய்கைகளை விட அதிகமாக இருந்து எனக்கு பரலோகத்தின்
வாசல்களை திறந்துவிடுமா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியவில்லை.
யூதர்களை அழிக்கும் பணியில் உயிர்த்தியாகம் செய்தால் எனது இச்சைகளை
பூர்த்தி செய்ய அழகான கண்களையுடைய மகளிர் எனக்கு பரலோகத்தில் கிடைப்பர்
என்று உறுதியாக நம்பினேன். எனது தீய செயல்களினால் கோபமடைந்துள்ள அல்லாவை
சாந்தப்படுத்த இது உதவும் என எண்ணினேன். எப்படியோ உறுதியாக நான்
வெல்லப்போகிறேன் அதற்கு நான் தேர்ந்தெடுத்தது தீவிரவாதமாகும்.



எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது ஒருமுறை பெத்லகேமில் உள்ள ஒரு
திரையரங்கில் "முனீச் நகரில் 21 நாட்கள் – 21 Days in Munich" என்ற
படத்தை அதிக குதூகலத்தோடு ரசித்து பார்த்தோம். அப்படத்தில் முனீச்
ஒலிம்பிக் போட்டிகளின் போது பாலஸ்தீனியர் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள்
ஏறியிருந்த ஹெலிக்காப்டர் மீது வெடிகுண்டுகள் வீசி அவர்களை கொலை
செய்தனர். அதைக் கண்டு "அல்லாஹு அக்பர்", அதாவது அல்லா மிகப்பெரியவன் என
பொருள்படும்படியாக நாங்கள் முழங்கினோம். வெற்றி பெறும்போது முஸ்லீம்கள்
இவ்வாறு சந்தோஷப்படுவர்.



இஸ்லாமிய வகுப்புகள் நடைபெறும்போது மாணவர்கள் ஆசிரியரைப்பார்த்து
"யூதர்களை வெற்றி கொண்ட பின் அவர்களது பெண்களிடம் முறைகேடாக நடந்து
அவர்களைக் கற்பழிக்க‌ எங்களுக்கு உரிமை உள்ளதா?" என்று கேட்பர். அதற்கு
ஆசிரியர் "அவர்களுக்கு வேறு வழியில்லை தங்கள் எஜமான்களுக்கு ஆசை
நாயகிகளாகவும் (வைப்பாட்டிகளாகவும்) அவர்களது பாலியல் இச்சைகளை பூர்த்தி
செய்பவர்களாகவும் தான் அவர்கள் இருக்க முடியும், இது குர்‍ஆனில்
விளக்கப்பட்டுள்ளது" என கூறுவார்கள்.


இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத்
தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
(இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும்……(குர்‍ஆன்
4:24)


இன்னுமொரு வசனத்தில் குர்‍ஆன் இவ்விதமாகச் சொல்கிறது:


நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த
உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ்
அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம்
உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின்
சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம்
மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் -
இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம்
உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண்
நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால்
அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற
முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற
முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும்,
அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம்
கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள்
ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக
மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.(குர்‍ஆன் 33:50)


இந்த வகையில் முகமது பல பெண்களை அதாவது 14 பெண்களை மணம் புரிந்ததும் பல
அடிமைப்பெண்களை போரின் வாயிலாக பிடித்துக்கொண்டு தான் வைத்துக்கொண்டதும்
எங்களுக்கு பெரிதாகவோ விகற்பமாகவோ தெரியவில்லை. முகமதுவுக்கு எத்தனை
மனைவியர் இருந்தனர் என்பது எங்களுக்கு விவாதத்துக்குரிய பொருளாயிருந்தது,
எத்தனை மனைவிகள் அவருக்கு இருந்தார்கள் என்று எங்களுக்கு சரியாகத்
தெரியாது. தனது வளர்ப்பு மகனின்(Zaid) மனைவியையே அவர் தனக்காக அல்லா
சொன்னபடி எடுத்துக்கொண்டார், அதுபோக பல யூதப்பெண்களை அவர்களின் குடும்ப
ஆண்களை படுகொலை செய்தபின் அடிமைகளாகவும் வைத்துக்கொண்டார்.



பாலஸ்தீனர்களின்(எங்களின்) மனதை மாற்ற இஸ்ரேலிய தொலைக்காட்சி இரண்டாம்
உலகப்போரின் போது நடந்த யூத படுகொலைகளை விளக்கும் காட்சிகளை ஒளிபரப்பு
செய்தது, ஆனால் உணவை கொறித்துக்கொண்டே யூதர்களை படுகொலை செய்யும்
ஜெர்மானியரை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன். யூதர்களை பொறுத்தவரை எனது
இதயம் மாறாததாகவும் கடினமாகவுமே இருந்தது, ஏதாவது ஒரு இதய மாற்று
சிகிச்சை நடந்தால் தான் மாற முடியும் என்ற நிலை.



ஒரு முறை எஷ்தோத்(Eshdod) கடற்கரையில் உள்ள யூத முகாமுக்கு எங்களை
அழைத்து சென்றனர், யூத பள்ளி மாணவர்களோடு நாங்கள் கலந்தால் ஒருவேளை
எங்கள் மனம் இளகும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இப்படிச் செய்தனர். ஆனால்
அத்திட்டம் வெற்றி பெறவில்லை, யூதர்களோடு பேசிய ஆசிரியர்கள் பரியாசம்
செய்யப்பட்டனர்.



எனது தாயாரோ வேறு ஒரு கோணத்தில் "தேவ திட்டம்" என்று ஒரு காரியத்தை
விளக்கினார்கள். அதாவது பைபிள் தீர்க்கதரிசிகளின் படி யூதர்கள் தங்கள்
நாட்டுக்குத் திரும்புதல் என்பது தேவனால் முன்குறிக்கப்பட்டது அது தான்
நிறைவேறியுள்ளது எனவும் கூறினார். "அவரது சித்தத்தின் படி எல்லாம் ஆகும்"
என்பது உலகம் பார்க்கும்படியாக நமது சந்ததியில் நடைபெறும் ஒரு நிகழ்வு என
விளக்கினார்கள். தற்போது நமது சந்ததியில் நடைபெறும் நிகழ்வுகள் வருங்கால
சம்பவங்களுக்கு முன்னோடியாகத்தான் உள்ளன என கூறினார், பல
கள்ளத்தீர்க்கதரிசிகள் பற்றியும் கூறினார்,ஆனால் தீவிர யூத எதிர்ப்பாளனான
எனக்கு இந்த கருத்துக்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.



ஒரு அமெரிக்க மிஷனரி தம்பதிகளால் ஈர்க்கப்பட்ட எனது தாயார் ரகசியமாக
ஞானஸ் நானம் எடுக்க விருப்பினார்கள், பாசி படிந்து இருந்த குளத்தில்
ஞானஸ்நானம் எடுக்க எனது தாயார் விரும்பாததால் அந்த மிஷனரி ஜெருசலேம்
ஒய்.எம்.சி.ஏ(YMCA) பிரதிநிதிகளிடம் குளம் சுத்தம் செய்யப்பட‌ மன்றாட
வேண்டியிருந்தது. அதன் பின்னர் எனது தாயார் ஞானஸ் நானம் எடுத்தார்கள்,
எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் இத்தகவல் தெரியாது.


பல முறை எனது தாயார் என்னை இஸ்ரேலில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு
அழைத்து சென்றார்கள். நான் அகழ்வாராய்ச்சியின் பால் ஈர்க்கப்பட்டது
அப்போது தான். எனது தாயாரோடு வாதம் செய்யும் போது பலமுறை யூதர்களும்
கிறிஸ்தவர்களும் வேதாகமத்தை திரித்து பாழ்படுத்திவிட்டனர் என கூறுவேன்.
ஜெருசலேமில் உள்ள வேதாகம சுருள்கள் இருக்கும் இடத்துக்கு(Museum)
அழைத்துச்சென்று அங்குள்ள ஏசாயா தீர்க்கதரிசியின் சுருளை எடுத்து அது
எவ்வாறு மாறாமல் இருக்கிறது என விளங்கி காட்டினார்கள். வேதாகமம்
திரிக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என கூறினார்கள்.
இதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை.



எனது தாயாரை காபிர்(Infidel) என்று இழித்துரைத்ததையும் ஆதிக்க
வெறிபிடித்த அமெரிக்கர் எனவும் இயேசுவை இறை மகன் என கூறுகிறார்கள் எனவும்
கேவலமாக பேசியிருக்கிறேன். தாக்குதல்களில் உயிரிழக்கும் எண்ணற்ற
வாலிபரின் புகைப்படங்களை செய்தித் தாள்களிலிருந்து எடுத்துக்காட்டி,
இதற்கு என்ன பதில் என அறை கூவல் விடுத்துள்ளேன். இதற்கும் மேலாக எனது
தாயாரை நான் மிகவும் வெறுத்து எனது தந்தையிடம் அவரை விவாகரத்து
செய்துவிடுமாறும் வேறு ஒரு நல்ல இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து
கொள்ளுமாறும் பரிந்துரை செய்திருக்கிறேன்.



பலமுறை போராட்டங்களில் பங்கு கொள்ளும்போது இஸ்ரேலிய படைகளால்
தாக்கப்பட்டு கொல்லப்படும் அபாயத்துக்கு உட்பட்டிருக்கிறேன்,
அந்நேரங்களில் மறுநாள் செய்தித்தாள்களில் நான் உயிர்த்தியாகம் செய்த
செய்தி வரும் என்று நான் நினைப்பதுண்டு. ஆறு நாள் யுத்தம், பி.எல்.ஓ
கிளர்ச்சி, ஜோர்டானிய கறுப்பு செப்டம்பர் உள் நாட்டு போர், லெபனான்
போர்கள், யோம் கிப்புர் யுத்தம் என பல யுத்தங்கள் நடைபெற்ற போது
இஸ்ரேலில் இருந்திருக்கிறேன், இவ்வளவு யுத்தங்கள் நடந்தும் இஸ்ரேலை
அழிக்க முடியவில்லை ஆனால் அவர்களை ஒரே ஒரு பெரிய யுத்தத்தின் மூலம்
அழித்து நிர்மூலமாக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.



இஸ்ரேலிய துருப்புக்களால் நான் சிறையில் அடைக்கப்பட்ட போது எனது பெற்றோர்
அதிக துக்கமடைந்தனர். எனது தாயார் ஜெருசலேமிலிருந்த அமெரிக்க கவுன்சில்
மூலமாக என்னை வெளிக்கொணர முயன்றார்கள். அதிக மன அழுத்தத்தால் அவர்களுக்கு
தலை முடி கொட்டத்துவங்கியது. சிறையில் தீவிரவாதம் குறித்து அதிகம்
தெரிந்து கொண்டேன், வெளியே வந்த போது முன்பைவிட அதிக வெறிபிடித்த
அடிப்படைவாதியாக மாறினேன்.



உயர் நிலைப்பள்ளி படிப்பை முடித்த பின் எனது பெற்றோர் மேற்படிப்பிற்காக
அமெரிக்கா அனுப்பினர். அங்கும் இஸ்ரேலிய எதிர்ப்புக் குழுக்களின் அரசியல்
நடவடிக்கைகளில் என்னை இணைத்துக் கொண்டேன். எனது நண்பர்களிடம் நான்
விளையாட்டாக இவ்வாறு கூறுவது உண்டு "ஹிட்லரை நான் வெறுக்கிறேன் ஏனென்றால்
அவர் வேலையை முழுமையாகச் செய்யவில்லை, இந்த யூத அழிப்பை முழுவதுமாக
செய்து முடிக்கவில்லை" என்பேன்.


ஹிட்லரை கதா நாயகனாகவும் முகமதுவை தீர்க்கதரிசியாகவும் மனதில்
வரித்துக்கொண்ட நான் முஸ்லீம் அல்லாதோர் அதுவும் குறிப்பாக கிறிஸ்தவர்,
யூதரை ஒரு பொருட்டாகவே எண்ணியதில்லை. என்றாவது ஒரு நாள் இஸ்லாமுக்கு இந்த
உலகம் முழுவதுமாக அடிபணியும், பல போர்களில் இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு
பெரிய இழப்புகளை சந்தித்த பாலஸ்தீனுக்கு இந்த உலகம் பெரிய அளவில்
கடன்பட்டுள்ளது எனவும் நம்பினேன். யூதர்கள் அனைவரும் தீர்க்கதரிசிகளை
கொல்பவர்கள் எனவும் தங்களது கெட்ட எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக
வேதாகமத்தை கறைபடுத்தி கெடுத்துவிட்டனர் என்று நம்பினேன், இது தான்
முஸ்லீம்கள் போதிக்கும் போதனை.



எல்லாவற்றுக்கும் மேலாக முகமது தான் உண்மையான தீர்க்கதரிசி எனவும் அவர்
இறைவனுக்கு மிகவும் விருப்பமானவர் என்று போதித்தார்கள்.



நான் அமெரிக்காவில் வசித்த போதும் கடந்த 20 ஆண்டுகளாக ஈரான், ஈராக்,
குவைத், சிரியா, ஜோர்டான், லெபனான், ஆப்கானிஸ்தான் மற்றும் பல முஸ்லீம்
நாடுகளில் கொல்லப்பட்ட பல முஸ்லீம்களை நினைத்துப் பார்க்க தவறுவதில்லை.
இது அனைத்துக்கும் யூதர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் எனவும் ஏதாவது
திரித்து கடைசியில் யூதர்களை குற்றவாளிகளாக நிறுத்துவது எங்கள் கடமையாக
இருந்தது.



ஒரு நாள் ஒரு மனிதனோடு சண்டை யிட்டதில் அவர் கண் பறி போனது அவர்
யூதராயிருந்த படியால் அதிக மகிழ்ச்சியடைந்தேன். இஸ்லாமிய வரலாற்றை
அறிந்து கொள்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. முகமது
ஒருமுறை ஒரு யூத கோத்திரத்தை சவுதி அரேபியாவில் இருந்து பிரித்து எடுத்து
சிறைப்படுத்தி அவர்களது ஆண்கள் அனைவரையும் படுகொலை செய்தார் எனவும்
பெண்களை ஆசை நாயகிகளாக வைத்துக்கொண்டார் என்பதை அறிந்தேன். இஸ்லாமின்
போதனைப்படி இந்த உலகம் இஸ்லாமியரான ஒரு கலீஃப் பால் தான் ஆட்சி
செய்யப்படவேண்டும் எனவும் இஸ்லாம் என்பது தனி நபரின் நம்பிக்கை மட்டுமல்ல
இந்த உலகை சரியான முறையில் ஆட்சிசெய்யும் ஒரு சமூக ஒழுங்குமுறை எனவும்
சமாதான முறையில் இவ்வாட்சிமுறையை அமல்படுத்த முடியாவிட்டால் போர்
செய்தாவது அனைவரையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்பதே எனது
ஆவலாக இருந்தது. சுமார் ஒரு பில்லியன் இஸ்லாமியர் இந்த உலகத்தில்
இருந்ததால் எப்படியாவது இதை அடைந்து விடலாம் என்பது எனது திடமான
நம்பிக்கை.



நான் உண்மையைச் சொல்கிறேன், ஒவ்வொரு முறையும் குர்‍ஆனை வாசிக்கும் போதும்
பாவங்களுக்காக நரகத்தில் அனுபவிக்கவிருக்கும் தண்டனைகளை எண்ணி
நடுங்குவேன். என்னை படைத்தவரை எப்படியாவது அடைந்து எனது தவறுகளுக்காக
என்னை மன்னித்து விடுங்கள் என கெஞ்ச வேண்டும் என்பது எனது ஆவலாக
இருந்தது. ஆனால், நான் இதில் தோல்வி அடைந்தேன், என்னால் என் எல்லா தீய
மற்றும் நல்ல செயல்களை நியாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை. ஒன்று
மட்டும் நிச்சயமாக எனக்குத் தெரியும், அதாவது என் பாவங்கள் என் நல்ல
செயல்களை விட அதிகமாக இருக்கும். எனவே, என் பாவப்பட்ட வாழ்க்கையை என்னை
படைத்தவனின் தயவின் மிதும், அன்பின் மீதும் ஆதாரப்பட்டு வாழ்ந்துவந்தேன்.
என் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் வியப்படைவேன். என் மோட்சத்திற்காக
மற்றவர்களை கொல்வதை வெறுத்தேன். உண்மையைச் சொன்னால், ஒரு எலியைக் கூட
கொல்ல எனக்கு மனது வராது, அப்படியானால், ஒரு யூதனைக் கொள்ள என்னால்
எப்படி முடியும்?



1992 ம் ஆண்டு கிரான்ட் ஜெப்ரி(Grant R. Jeffrey) எழுதிய‌ "Armageddon,
Appointment with Destiny" என்ற‌ புத்த‌க‌த்தை வாசித்து வியந்தேன். அந்த‌
புத்த‌க‌த்தில் இயேசுவை குறித்தும் அவ‌ர‌து பிற‌ப்பு, வாழ்வு, ம‌ர‌ண‌ம்,
உயிர்த்தெழுத‌ல், இஸ்ரேல் தேசம் நிறுவப்படுதல் போன்ற‌ காரிய‌ங்க‌ளை
குறித்து அழ‌காக‌ விள‌க்க‌ப்ப‌ட்டிருந்த‌து. ப‌ல‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ங்க‌ள்
பைபிளில் தேவ‌ன் கூறியிருந்த‌ப‌டி நிறைவேறியிருந்த‌ன‌!



என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் கோடா கோடியில்
ஒருவ‌ரால் தான் வ‌ர‌லாற்றில் 100 அல்லது 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு
எதிர்கால‌த்தில் ந‌டைபெற‌ப் போகும் காரிய‌ங்க‌ளை குறித்து தெளிவாக‌
கூற‌முடியும்(What also amazed me was to find out that the chances for
a man to predict hundreds of historic events written hundreds and
thousands of years before their occurrences are one in zillions ).
மேலும் அதில் த‌வ‌றுக‌ளுக்கான‌ சாத்திய‌க்கூறுக‌ள் அனேக‌மாக‌ இல்லை
ஏனெனில் தீர்க்க‌த‌ரிச‌ன‌மாக‌ உரைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ப‌ல காரிய‌ங்க‌ள்
என‌து கால‌த்திலேயே நிறைவேறியிருந்த‌ன‌. இது போன்ற‌ உண்மையான‌
காரிய‌ங்க‌ள் தேவ‌னிட‌த்தில் இருந்து மாத்திர‌ம் தான் வ‌ர‌ முடியும்.



என‌க்குள் ஒரு போராட்ட‌ம் ஆர‌ம்பித்த‌து, நான் வ‌ள‌ர்ந்து வ‌ந்த‌
நாட்டில் ப‌ல அக‌ழ்வாராய்ச்சிக‌ள் வாயிலாக‌ பைபிளை ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள்
கிடைத்து வ‌ரும் நிலையில் அது எப்ப‌டி யூத‌ர்க‌ளால்
க‌றைப்ப‌டுத்தப்பட்டிருக்க‌ முடியும் என‌ குழ‌ம்பினேன். கும்ரான் என்ற‌
குகையில் முக‌ம‌து தேய்ப் என்ற‌ ஆடு மேய்ப்ப‌வ‌ரால் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌
ஏசாயா தீர்க்க‌த‌ரிசியின் புத்த‌க‌ சுருள் நாம் இன்றைக்கு வைத்திருக்கும்
வேத‌ம் போல‌ அப்ப‌டியே அல்ல‌வா இருக்கிற‌து, அதில் இயேசுவின் வ‌ருகையை
குறித்து ப‌ல‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் பழைய ஏற்பாட்டிற்கு
ஒத்திருக்கின்ற‌ன‌வே என‌ விய‌ந்தேன். இயேசு யார் என்ப‌தை இந்த‌ பைபிளை
நானே ப‌டித்து தெரிந்துகொள்ள‌ விரும்பினேன். தேவ‌னாகிய‌ கிறிஸ்து இவ்வாறு
விள‌ம்பினார்.


"இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்,
நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிக்கிறேன் என்று
திருவுளம்பற்றுகிறார்" வெளி 1:8


யூதர்களை பார்த்து இவ்வாறு கூறுகிறார்:


அதற்கு இயேசு, ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று
மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுறேன் என்றார். யோவான் 8:58.


இந்த மேற்கோள்கள் எனக்கு பிரமிப்பை உண்டாக்கியது ஏனென்றால் முகமதுவும்
இதை போல "நான் எல்லா படைப்பிற்கும் முந்தினவன் மற்றும் கடைசி நபியாக
இருக்கிறேன் (I am the beginning of all creation and the last
prophet)." என்று கூறியிருந்தார்.



மேலும் "ஆதாம் கலிமண்ணால் உருவாக்கப்படும் போதே நான் அல்லாவின் நபியாக
இருந்தேன்(I was a prophet of Allah while Adam was still being molded
in clay)." என‌ கூறுகிறார்.



எல்லாவற்றுக்கும் மேலாக நியாயத்தீர்ப்பின் நாளில் இஸ்லாமியர்களுக்காக
பரிந்து பேசுபவராகவும் முகமது தன்னைப் பற்றி கூறிக் கொள்ளுகிறார். தானே
கடைசி தீர்க்கதரிசி மற்றும் இரட்சகர் என்று கூறுகிறார்.



இந்த காரியங்கள் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தின ஏனென்றால் முகமது தன்னை
இரட்சகர் என பிரகடப்படுத்தினால் பின்னர் இயேசு என்பவர் யார், அவரும்
தன்னை இரட்சகர் என்று அல்லவா கூறுகிறார் என எண்ணினேன். இரண்டு மீட்பர்கள்
இருந்தால் ஏதோ ஒன்று நிச்சயம் பொய்யாக இருக்கவேண்டும் என முடிவு
செய்தேன். இது தேவனோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஏனென்றால் தேவன் தான்
மீட்பராக இருக்கமுடியும். கிறிஸ்துவோ அல்லது முகமதுவோ ஆக இரண்டுபேரில்
ஒருவர் தான் மீட்பராகவோ அல்லது பரிந்துபேசுபவராகவோ இருக்க முடியும்.
பைபிள் அல்லது குர்‍ஆன் இவ்விரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக
இருக்கமுடியும், இரண்டில் ஒன்று சுத்த தங்கம் மற்றொன்று போலி ஆனால் எது?



உண்மையை க‌ண்டுகொள்ள‌ ஆவ‌லாயிருந்த‌ப‌டியால் ப‌ல‌ இர‌வுக‌ள் குர்‍ஆன்
ம‌ற்றும் பைபிள் கூறும் காரிய‌ங்க‌ளை ஒப்பிட்டுப்பார்த்தேன். அப்போது
இறைவ‌னிட‌ம் இவ்வாறு பிரார்த்தித்தேன் "இறைவா இந்த‌ பூமி வான‌ம்
அனைத்தையும் ப‌டைத்தாய், ஆபிர‌காம், மோசே ம‌ற்றும் யாக்கோபின் தேவ‌னே
நீர் தொட‌க்க‌மும் முடிவும் இல்லாத‌வ‌ர், நீர் ஒருவரே உண்மையுள்ளவர்,
நீர் ஒருவரே சத்தியமுள்ளவர் , நீரே ஒரே ஒரு மெய்யான‌ வேத‌த்தை
உருவாக்கினீர். உம‌து ச‌த்திய‌த்தை அறிந்துகொள்ள‌ ஆவ‌லாய் இருக்கிறேன்,
என‌து வாழ்வில் உம‌து நோக்க‌த்தை நிறைவேற்ற‌ ஆவ‌லாய் இருக்கிறேன், உம‌து
அன்பைப் பெற‌ வாஞ்சிக்கிறேன், ச‌த்திய‌த்தின் பெய‌ராலே ஆமேன்" என‌
பிரார்த்தனை செய்தேன்.



என‌க்கு போலியான‌தை வைத்துக்கொள்ள‌ விருப்ப‌மில்லை அத‌னால் பிளாஸ்டிக்
போன்ற‌ உல‌க‌ ம‌த‌ங்க‌ளை எவ்வ‌ள‌வு உண்மை என‌க்க‌ண்டு கொள்ள‌ எவ்வ‌ள‌வு
முடியுமோ அவ்வ‌ள‌வு அதிக‌மாக‌ உர‌சிப்பார்க்க‌ நினைத்தேன்.



குர்‍ஆன் தான் உண்மையான வேதம் என நம்பினேன் ஏனெனில் குர்‍ஆனில் பல
விஞ்ஞான தத்துவங்கள் நிறைந்திருக்கின்றன எனவும் ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன் பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னரே தேவனால் அருளப்பட்டது
என நினைத்தேன். ஒரு மென்பொருளின் வாயிலாக சுமார் ஒரு மாதம் பைபிளில் உள்ள
விஞ்ஞான தத்துவங்களை அறிந்து கொள்ள விழைந்தேன். பல இஸ்லாமியரால்
குர்‍ஆனில் விஞ்ஞான அதிசயம் என நம்பப்பட்ட அனைத்தும் ஏற்கனவே பைபிளில்
இருக்கிறது என கண்டு கொண்டேன். எனது அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று
அறிவின் துணையால் குர்‍ஆனில் எவ்வளவு தவறுகள் நிறைந்திருக்கின்றன என
கண்டுகொண்டேன். பல உண்மைகளை அறிந்துகொண்ட நான் குர்‍ஆன் ஒரு அற்புதம்
என்ற எனது எண்ணம் கேள்விக்குறியானது. பைபிளில் உள்ள அற்புதங்கள் பல
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. எசேக்கியல் தீர்க்கனின் 38 ம்
அதிகாரத்தை வாசித்த போது எனது அஸ்திபாரமே ஆட்டம் கண்டது. அந்த
அதிகாரத்தில் தேவன் அழிக்கப்போவதாக சொன்ன அனைத்து நாடுகளும் இன்றைக்கு
இஸ்லாமிய அடிப்படைவாத்தை அஸ்திபாரமாகக் கொண்டு வளர்ந்து வருபவை என
அறிந்தேன்.



ஒரு எழுத்து கூட மாறாமல் எவ்வாறு பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்கள்
நிறைவேறிவந்துள்ளன என்பதை தேவன் எனக்கு விளக்கி காண்பித்தார். எந்த ஒரு
மனிதனாலும் தவறே இல்லாமல் இதைப்போல எதிர்கால நிகழ்வுகளை அறுதியிட்டு கூற
முடியாது. தேவனால் மாத்திரம் தான் எதிர்கால் நிகழ்வுகளின் கதவுகளை திறக்க
முடியும், பைபிள் தான் அதற்கு திறவுகோல் குர்‍ஆன் அல்ல ஏன் என்றால்
மீட்பு, இரட்சிப்பு குறித்து எந்த வகையிலும் குர்‍ஆன் விளக்குவது இல்லை.
அப்போது தான் இவ்வளவு காலமாக முட்டாள்த்தனமாக வேறு ஒரு கடவுளை வணங்கி
வந்திருக்கிறேன் என அறிந்து கொண்டேன். இறைவன் எப்படியாவது என்னை
குர்‍ஆனின் மூலமாக வழி நடத்தி செல்வார் என நினைத்திருந்தேன் ஆனால் அது
வேறு விதமாக முடிந்தது. எனது பெருமைகளை விட்டுவிட்டு திறந்த மனதோடு
சத்தியத்தை அறிந்து கொள்ள ஆவலானேன்.



இறைவன் பைபிளில் இவ்வாறு கூறுகிறார்:


"முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன்,
வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை
ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும்
அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளைல்லாம்
செய்வேன் என்று சொல்லி," (ஏசாயா 46:9,10)


தேவன் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்தது மட்டுமல்ல அதை நிறைவேற்றியும்
வந்திருக்கிறார் மாறாக குர்‍ஆனில் வன்முறை வாயிலாகத்தான் இஸ்லாமியர்களின்
நம்பிக்கைகள் நிலை நிறுத்தப்படுகின்றன. பைபிள் கறைப்படுத்தப்படவில்லை என
நான் கண்டுகொண்டபடியால் பல நாட்கள் பைபிளை ஆராய்ந்தேன். பைபிளில்
முகமதுவைப் பற்றி ஏதாவது கூறப்பட்டுள்ளதா என தேடியும் அவரை பைபிளில்
கண்டுபிடிக்க முடியவில்லை. பைபிள் கறைப்படுத்தப்பட்டிருந்தால் அது
நிச்சயம் முகமதுவின் வருகைக்குப்பின் தான் நிகழ்ந்து இருக்கவேண்டும்
ஏனென்றால் குர்‍ஆன் பைபிளை பற்றி கூறும்போது அது அவரது கரங்களுக்கு
இடப்பட்டிருந்தது என்று கூறுகிறதே. அன்று முதல் இன்று வரை ஒரு
இஸ்லாமியராலும் கறைப்படுத்தப்பட்ட ஒரு பைபிளையும் உதாரணமாக
காட்டமுடியவில்லை. பைபிளை தவறு என நிரூபிக்க ஒரு வரலாற்று உண்மையோ அல்லது
அகழ்வாராய்ச்சி உண்மையையோ இஸ்லாமியர்களால் கொண்டுவரமுடியவில்லை.



அவ்வளவு ஏன் முகமதுவின் மரணம் கூட இயேசுவின் மரணத்தை விட வித்தியாசமாக
இருந்தது. முகமது தனது பிரியமான மனைவியான ஆயிஷாவின் மடியில் உயிர்
நீத்தார் ஆனால் இயேசுவோ மனுக்குலத்தின் பாவத்தை பரிகரிக்க சிலுவையில்
உயிர் துறந்தார். இதை போன்ற சவாலிடும் சாட்சியை கேள்விப்படாமல்
கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் இருக்கிறார்களே என நினைத்த போது எனக்கு
மிகுந்த கவலை உண்டானது. இஸ்லாமியரும் உலகமும் மூன்று மதங்களை இறைவனை
வணங்கும் வழிகளாக கண்டிருக்கின்றனர் ஆனால் இறைவன் "தான் ஒருவரே, தனது
வார்த்தை ஒன்றே" என்றல்லவா கூறியிருக்கிறார் என யோசித்த போது பிரமிப்பாக
இருந்தது. நான் முன்பு குருடனாயிருந்தேன் ஆனால் இப்போது பார்வையடைந்தேன்,
உண்மையில் நான் காண்கிறேன். ஏனெனில் பல பைபிள் தீர்க்கதரிசனங்கள்
நிறைவேறியிருக்கின்றன, இஸ்ரேல் என்ற நாடு கிட்டத்தட்ட அதன் கல்லறையில்
இருந்து வேதாகம தீர்க்கதரிசனங்களின் படி உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது,
இஸ்லாமியர் மற்றும் ஏனைய உலகத்தார் யூதர்களை நோக்கும் பார்வை இந்த உலகம்
இறுதி காலத்துக்குள் வந்து விட்டதையே காட்டுகிறது.



மனிதன் மாறவேயில்லை, காயீன் தன் சகோதரனான ஆபேலை கொலை செய்தது போல் மனிதன்
தன் சகோதரனை கொலை செய்கிறான், ஒரே ஒரு வித்தியாசம், பழைய முறைப்படி தலையை
வெட்டியோ அல்லது கத்தியால் குத்தியோ கொலை செய்வதில்லை, மாறாக கிருமிகளை
அழிப்பது போல இரசாயன ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி அழிக்கிறான், மனித
வாழ்வு அற்பமான ஒன்றாக மாறிவிட்டது. பாவம் தான் மனிதனின் பிரச்சனை,
பிசாசு தான் மனுக்குலத்தின் எதிரியேயன்றி 50 ஆண்டுகளுக்கு முன்
ஹிட்ல‌ரால் அழிக்க‌ப்ப‌ட்ட‌ 6 மில்லியன் யூதர்கள் அல்ல. இந்த நிகழ்ச்சி
நடக்கவில்லை என்று கணக்கிலடங்கா எண்ணிக்கையில் புத்தகங்கள்
எழுதப்படுகின்றன. ஒருவேளை ஹிட்லரைப் போல அல்லது ஒரு மெஹ்தி அல்லது
கலீப்பை போல யாராவது தற்காலத்தில் பதவியில் அமர்ந்தால் என்ன வாகும் என
யோசித்தேன். இப்போது உள்ள அணு ஆயுதங்கள் முன்பைவிட 7 மடங்கு உலகத்தை
அழிக்கும் தன்மையோடு அல்லவா இருக்கிறது என நினைத்தேன். தேவன் நான் வாழும்
உலகை புரிந்துக்கொள்ளும்படிச் செய்தார், மற்றும் என்னிடம் நானே
கேட்டுக்கொண்டேன், "யூதர்கள் இவ்விதமாக ஹிட்லரால் கொல்லப்பட்டதற்கு
அதிகபடியான ஆதாரங்கள் இருந்தும், அதனை மக்கள் நம்ப மறுக்கிறார்கள், இதே
போல், இயேசு தான் மேசியா(மஸிஹா) என்றும், பைபிளின் நம்பகத்தன்மைக்கு
அதிகபடியான ஆதாரங்கள் இருந்தும் உலக மக்கள் நம்ப மறுப்பதில் எந்த
ஆச்சரியமும் இல்லை".



தேவன் எனது இதயத்தை திறந்தார், எவ்வாறு மக்கள் தவறான வழிபாட்டு முறைகளால்
உண்மையான முறையை நிராகரிக்கிரார்கள் அதுவும் தனது வார்த்தையின் மூலமாக
இவ்வளவு ஆதாரங்களை காண்பித்த பிறகும் மக்கள் நிராகரிக்கிறார்கள். எனது
சிந்தனைகளை எவ்வாறு பிசாசு ஆக்கிரமித்திருந்தான் எனபதை கண்பித்தார்,
இஸ்லாமியனாக இருந்தபோது இப்படிப்பட்ட சிந்தனைகள் எல்லாம் இறைவனின் மூலமாக
வருகிறது என்று நான் நினைத்திருந்தேன். உலகம், வாழ்க்கை பற்றிய‌ ஒரு
புதிய கண்ணோட்டத்தையும், இரட்சிப்பின் அவசியத்தையும் அறிந்துகொள்ளும்படி
ஏவப்பட்டேன். இந்த உலகத்தில் ஒரே உலக அரசாட்சியையும் அதற்கு பிசாசை
அதிபதியாக முன்னிறுத்தும் மனிதனின் குறிக்கோளையும் நாம் இந்நாட்களில்
காணமுடிகிறது.



பாபிலோன் மறுபடியும் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்து மற்றுமொரு முறை
உலகை ஒன்றுபடுத்துகிறது. நாம் இதன் பெயரை மாற்றி "புதிய உலக வழிமுறை
அல்லது தரம்" என்று பெயர் வைத்துள்ளோம், ஆனால், நாம் இதனை "புதிய
பாபிலோன்" என்று அழைக்கவேண்டும். நான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன்,
சகரியாவின் தீர்க்கதரிசனத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன், அதாவது சகரியா ஏன்
இவ்விதமாக தீர்க்கதரிசனம் உரைத்தார்:


"ஜெருச‌லேமுக்கு விரோதமக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்;
நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள்
அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப் போவார்கள்;
மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டு போவதில்லை." (சகரியா 14:2)


எனக்கு கற்றுக்கொடுத்த இஸ்லாமின் படி மேசியாவின் இரண்டாம் வருகை ஒரு
இஸ்லாமிய தீர்க்கதரிசனம் ஆகும். அவர் சிலுவையை முறிப்பவராகவும் பன்றியை
கொல்பவராகவும் காண்பிக்கப்பட்டிருந்தார். இன்னொரு இஸ்லாமிய இன மக்களின்
நம்பிக்கையின் படி "மெஹ்தி" என்ற போலியான ஒரு மேசியா வருவதாக
நம்புகிறார்கள்(Antiochos Epiphinias).



முகமதுவின் தீர்க்கதரிசனத்தின் படி அல்லாமல், யாக்கோபுக்கு உண்டாகும்
உபத்திரவமானது யூதர்களை முழுவதுமாக அழிக்க அல்ல மாறாக இயேசு ஒலிவ மலையில்
மீண்டும் இறங்கி வர அடையாளமாக உள்ளது. அவர் இறங்கி இஸ்ரவேலர்களின்
எதிரிகளோடு போரிடுவார். துரதிருஷ்டவசமாக இதை நம்பாதவர்களுக்கு
மனந்திரும்ப சந்தர்ப்பம் இல்லாமல் போகும்.



இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், யூதர்களை எதிரிகளாக நினைக்கும்
மனப்பான்மையானது பழங்காலத்தில் மட்டும் இருந்தது என்று நினைக்கலாகாது.
இன்றும் பல கோடிக்கணக்கான முஸ்லீம்கள், என்றைக்காவது ஒரு நாள் முகமது
சவுதி அரேபியாவில் உள்ள யூதர்களுக்கு செய்தது போல நாங்களும் புனித
பூமியில் உள்ள யூதர்களுக்கும் செய்வோம் என பரிதாபகரமாக
நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் யூதர்களையும்,
கிறிஸ்தவர்களையும் கொலை செய்து அவர்களது மனைவியரை ஆசை நாயகிகளாக
வைத்துக்கொள்ள குர்‍ஆனில் அனுமதி வழங்கப்பட்டிருப்பது தான் இஸ்லாமியர்
அவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொள்ள காரணமாக அமைகிறது.



சத்தியம் என்ற பதம் இரவு பகலாக விடாமல் என் இதயத்துக்குள் ஒட்டிக்கொண்டு
எனது ஆன்மாவை விடாமல் உரசிக்கொண்டிருந்தது. அதன் பயனாக பைபிளையும்
குர்‍ஆனையும் விடாமல் படித்து பைபிளே சிறிதும் சந்தேகத்திற்கும்
இடமில்லாமல் உண்மையான சொக்கத்தங்கம் என உணர்ந்தேன். பைபிளின்
நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியது என்பதற்காக மட்டுமல்ல‌,
தேவன் யாக்கோபின் காலத்திலிருந்து இன்று வரை நமது தலைமுறைவரை
உறுதிப்படுத்தி நிலை நிறுத்திய இஸ்ரேல் என்ற வார்த்தை கூட பைபிளின்
நம்பகத் தன்மைக்கு ஒரு ஆதாரமே . சந்தேகம் இருப்பவர்கள் இதை பார்த்து
அறிந்து கொள்ளலாம். இஸ்ரேல் உருவானதும் யூதர்கள் பூமியின்
கடையாந்திரங்களிலிருந்தும் கூட்டி சேர்க்கப்பட்டது வேதாகமம் எனும்
பைபிளின் உறுதித் தன்மைக்கு சரியான சான்றாகும். இஸ்ரேல் தேசம் உருவானது
வேதமாகிய பைபிளின் உறுதி தன்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தேவன் அவர்களை உலகம் முழுவதும் சிதறடித்தார் ஆனால் தமது வாக்கின்படி
அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்த்தார்.


"நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான்
உங்கள் சிறையிருப்பைத் திருப்பி நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா
ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை
விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று
கர்த்தர் சொல்லுகிறார்" (எரேமியா 29:14)


மெய்யான தேவன் ஒருபோதும் மாறுவதில்லை, நான் எதிரிகளாக கருதிய யூதர்கள்
வாயிலாக தான் தேவனுடைய வார்த்தை எழுதப்பட்டது, மீட்புக்கான தேவ திட்டம்
மேசியா மூலமாக வெளிப்பட்டது. இயேசு என்ற யூதர் நான் வசித்த ஊரில்
வசித்தவர், எனது ஊரான பெத்லகேம் அப்பத்தின் வீடு என்றல்லவா
பொருள்படுகிறது. இயேசு இவ்வாறாக சொல்லியிருக்கிறாரே:


"இயேசு அவர்களை நோக்கி, ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன்
ஒருக்காலும்பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும்
தாகமடையான்" (யோவான் 6 :35)

பெத்லகேம் என்ற பெயர் இயேசு இந்த உலகத்தில் வருமுன்னே அந்த ஊருக்கு
வழங்கப்பட்டிருந்தது. நான் எதிரியாக கருதிய யூத வம்சத்தில் தான் அவர்
வந்தார், எனது பாவங்களுக்காக மரித்தார். பகையாளி தன்னை பகைப்பவனுக்காக
மரிப்பதைப்பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. தன்னை அடிக்கப்படுவதற்கும்,
துப்பப்படுவதற்கும் சிலுவையில் அறையப்படுவதற்கும் அவர் தன்னை
ஒப்புக்கொடுத்தார், உனது பகையாளி உனக்காக மரிக்கக்கூடுமோ? இருப்பினும்
அவர் இவ்வாறு சொன்னார்.


"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்;
உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு
நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத்
துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" (மத்தேயு 5:44)


சத்தியம் என் கண்களுக்கு முன்பாக இருந்தது, எனது இதயத்தின் கதவுகளை அது
தட்டிக்கொண்டேயிருந்தது, அது உள்ளே வர விரும்பியது. அந்த சத்தியத்தை நான்
அழைத்தேன், தேவன் பதில் கொடுத்தார், குருடனாயிருந்து சத்தியத்தை
தேடினேன், இப்போது பார்க்கிறேன். அவர் எனது கதவை தட்டினார், நான்
திறந்தேன் அவர் என்னை விடுதலையாக்கினார்.


"அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;
என்னாலேயல்லாமல்ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6)


எனது உணர்வுகள், நோக்கங்கள், சிந்தனைகள் அனைத்தும் மாறின. யூதர்களுக்காக
பரிதாபப்பட ஆரம்பித்தேன், எனது காழ்ப்புணர்ச்சிகள் என்னை விட்டு அகன்றன.
அவர்களை காயப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் என் வாழ்விலே இப்போது இல்லை.
ஜெருச‌லேமின் அமைதிக்காக ஜெபிக்கிறேன். யூத படுகொலைகளை தொலைக்
காட்சிகளில் கண்டு ரசிப்பதை விடுத்து அவர்களுக்காக கண்ணீர் வடிக்கிறேன்.
என் இயேசு எனக்காக செய்தது போல‌ எனது உயிரையே அவர்களுக்காக தியாகம் செய்ய
ஆவலாய் உள்ளேன். எனது சொந்த இன மக்களான அரேபியர் இவ்வளவு வெறுப்புணர்வு
கொண்டிருந்தபோதும் இதை தைரியமாக கூறுகிறேன்.



ஆம், முழு உலகத்துக்கும் சொல்கிறேன், நான் யூதர்களை நேசிக்கிறேன்,
அவர்களிடமிருந்து வந்த இரட்சகருக்காக நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள்
மூலமாக ஒளியும் சத்தியமும் இந்த உலகத்துக்குள் வந்தது, இதற்காக நான்
அவர்களை நேசிக்கிறேன். அவர்களை இனியும் வெறுப்பதற்கில்லை ஏனெனில் நான்
பைபிள் மூலமாக அறிந்துக்கொண்டேன், அவர்கள் கர்த்தரால் தெரிந்து
எடுக்கப்பட்ட ஜனம், அரேபியர் மாத்திரம் அல்ல முழு உலகத்துக்கும்
வெளிச்சம் கொடுக்க ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனம். தேவன் உலகம்
முழுவதற்கும் அவர்களை ஆசீர்வாதமாக வைத்தார். நாம் அவர்களை நேசிக்க
வேண்டும் தாங்க வேண்டும். அவர் ஆபிரகாமுக்கு சொன்னபடி


"நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப்
பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" (ஆதியாகமம் 12:2)


சத்தியத்தை அறிந்ததால் ஹிட்லரை நம்பிக்கொண்டிருந்த நான் கிறிஸ்துவை நம்ப
ஆரம்பித்தேன். பொய்களை நம்புவதிலிருந்து உண்மையை, வியாதிப்பட்டிருந்து
பின் சுகமாகி, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, சந்தேகத்திலிருந்து
விசுவாசத்திற்கு, வெறுப்பில் இருந்து அன்பிற்கு இப்படி பல வகைகளில்
மாற்றப்பட்டேன். இந்த மாற்றம் காரணமாக தேவனுடைய சத்தியத்தை அறியாவிட்டால்
வெளியே நன்றாக தெரியும் விஷயங்கள் உள்ளே ஏமாற்றம் அளிக்கும் பொய்யோடு
தான் இருக்கும் என்பதை உணர தவறிவிடுவோம் என அறிந்துகொண்டேன்.
கர்த்தராகியை இயேசு தான் நமது பாவங்களுக்காக மரித்தார் என்பதை
ஏற்றுக்கொண்டேன், அவருக்கே என்னை அர்ப்பணிக்கிறேன்.

இயேசு கூறினார்:

"வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான்
உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28)

உமது வாக்குத்தத்தை நிறைவேற்றியதற்காக நன்றி ஆண்டவரே.



--------------------------------------------------------------------------------

என்னோடு தொடர்பு கொள்ள வேண்டுமானால், எனக்கு மெயில் அனுப்புங்கள்.

அன்பான இஸ்லாமியர்களே, நான் ஏன் இயேசுவை நம்புகிறேன் என்பதை உங்களுக்கு
சொல்லட்டும். பைபிளிலும் குர்‍ஆனிலும் வாலித் அவர்கள் செய்த ஆராய்ச்சி
கட்டுரைகளை படியுங்கள்.

Source: http://www.answering-islam.org/Testimonies/walid.html


--------------------------------------------------------------------------------

இன்னும் அனேக இப்படிப்பட்ட சாட்சிகளை படிக்க சொடுக்கவும்
முகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்