அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 22, 2018

ஷைத்தானின் புண்ணியத்தினால் ஆயத்துல் குர்ஸியை முஸ்லிம்கள் (ஷைத்தானை துரத்த‌) ஓதிக்கொண்டு இருக்கிறார்கள்!

ஷைத்தானிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆயத்துல் குர்ஸி[1]
என்ற ஒரு குர்ஆன் வசனத்தை முஸ்லிம்கள் ஓதுகிறார்கள்.

முஸ்லிம்களே! இந்த வசனத்தை ஓதினால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு
கிடைக்குமென்று உங்களுக்கு கற்றுக் கொடுத்தவன் யார் என்று சிந்தித்து
பார்த்து இருக்கின்றீர்களா? சரி, இப்போதாவது அதனை அறிந்துக்கொள்வோம்.

ஆயத்துல் குர்ஸியை ஓதினால், ஷைத்தான் நெருங்கமாட்டான் என்று
கற்றுக்கொடுத்தவன் யார்?

அல்லாஹ் கற்றுக்கொடுத்தானா - இல்லை!

முஹம்மது கற்றுக்கொடுத்தாரா - இல்லை!

அப்படியானால் இதனை கற்றுக் கொடுத்தவர் யார்?

இதனை கற்றுக் கொடுத்தவன் ஷைத்தான் ஆவான்! ஆம் அவன் தான்
கற்றுக்கொடுத்தான். மேலும் முஹம்மது அதனை அங்கீகரித்தும் இருக்கிறார்
என்பதை அறியும் போது, மனது உண்மையாகவே வலிக்கிறது.

சஹீஹ் புகாரி ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை
படித்துப் பாருங்கள், அப்போது தான் உண்மை உங்களுக்கே புரியும்.

நூல்: புகாரி ஹதீஸ், எண்: 5010

5010. முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார்

அபூ ஹுரைரா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப்
பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன்
என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான்
பிடித்து, 'உன்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்'
என்று சொன்னேன்' என்று கூறிவிட்டு, - அந்த நிகழ்ச்சியை முழுமையாகக்
குறிப்பிட்டார்கள். - (இறுதியில், திருட வந்த) அவன், 'நீங்கள்
படுக்கைக்குச் செல்லும்போது (ஆயத்துல் குர்ஸீ'யை ஓதுங்கள்! (அவ்வாறு
செய்தால்,) விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப்
பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; எந்த
ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்' என்று கூறினான். (இதை நான் நபி(ஸல்)
அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், 'அவன் பெரும்
பொய்யானாயிருப்பினும அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்;
(உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்' என்று கூறினார்கள் என்றும்
கூறினார்கள். 35

Volume :5 Book :66 (மேலும் பார்க்க புகாரி ஹதீஸ் எண்கள்: 2311 & 3275)

என்ன ஆச்சரியம்!

இந்த நிகழ்ச்சியை நீங்கள் கற்பனை செய்து பார்க்கமுடியுமா?

ஷைத்தான், தன்னை எப்படி விரட்ட வேண்டும் என்று தானே முஸ்லிம்களுக்கு
நேரடியாக‌ சொல்லிக் கொடுக்கின்றானா! இது எப்படி சாத்தியமாகும்? இதுவும்
ஒரு உண்மையான நிகழ்ச்சி என்று நம்பும் அளவிற்கு முஸ்லிம்கள் அறியாமையில்
இருக்கிறார்களா?

ஒரு திருடனின் அறிவுரை:

இதனை கற்பனை செய்துப்பாருங்கள், அதாவது ஒரு திருடன் அல்லது கொலைக்காரன்,
உங்களிடம் குழந்தைகள் விளையாடும் தண்ணீர் பாய்ச்சும் போலி துப்பாக்கியைக்
கொடுத்து, என்னிடமிருந்து உங்களை காப்பாற்ற இந்த ஆயுதம் உதவும். இதனைக்
கொண்டு என்னை சுட்டால், என்னால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது. என்னை
நம்புங்கள், நான் உண்மையைச் சொல்கிறேன். இதோ இந்த துப்பாக்கியை உங்கள்
படுக்கையின் பக்கத்தில் வைத்துக்கொண்டு நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்.
நான் வரும் போது, இதனைக் கொண்டு என்னை சுட்டால் போதும் என்று சொல்கிறான்
என்று வைத்துக்கொள்வோம்.

ஒரு திருடன் இப்படி உங்களிடம் சொன்னால், எப்படி இருக்கும் உங்களுக்கு?
அதனை நீங்கள் நம்புவீர்களா?

இதுமட்டுமல்ல, தன்னை எப்படி விரட்டமுடியும் என்று ஷைத்தான் கொடுத்த
ஆலோசனையை (அல்லது குறுக்குவழியை) அல்லாஹ்வின் இறைத்தூதரான முஹம்மது
அங்கீகரித்தும் விட்டார், என்னே ஆச்சரியம்!

இக்கேள்விகளை சிந்தித்துப்பாருங்கள்:

தன்னை விரட்டும் வழிமுறைகளை முஸ்லிம்களுக்கு ஏன் ஷைத்தான் கற்றுக்கொடுப்பான்?
ஷைத்தான் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்வான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இப்படி ஷைத்தான் சொன்னான் என்று நம்புவது அறிவுடமையாக இருக்கின்றதா?

சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை
செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி
நிலைநிற்கும்? (இயேசு - மத்தேயு 12:26),

முஹம்மது கூறிய விவரத்தில் உள்ள லாஜிக்கை பார்த்தீர்களா?

அப்போது நபியவர்கள், 'அவன் பெரும் பொய்யானாயிருப்பினும்

அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்;' (புகாரி எண்: 5010)

இது என்ன ஆச்சர்யம்! ஒரு பெரும் பொய்யன், சொன்னது உண்மையா?

வேடிக்கையாக உள்ளதல்லவா? முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதராக இருப்பதோடு
மட்டுமல்லாமல், ஷைத்தானுக்காக வழக்காடும் வழக்கறிஞராகவும் இருக்கிறாரா
என்ன? என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

ஒருவனைப் பார்த்து, "நீ உலக மகா பொய்யன்" என்ற பட்டத்தை கொடுத்துவிட்ட
பிறகு, "நீ சொன்னதும் உண்மையே" என்றுச் சொன்னால், இப்போது நாம் யாரை
நொந்துக்கொள்வது? அந்த பொய்யனையா (ஷைத்தானையா) அல்லது அவனை
அங்கீகரித்தவரையா (முஹம்மதுவையா)?

அடுத்ததாக, ஷைத்தான் கூறியதையும் கவனியுங்கள்:

அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில
வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். (நூல்: புகாரி ஹதீஸ், எண்
2311)

அல்லாஹ் "இந்த‌ நன்மையைச் செய்வான்" என்ற முடிவு எடுக்க ஷைத்தானுக்கு
அதிகாரம் கொடுத்தவன் யார்?
ஷைத்தான் சொல்லிவிட்டானே என்பதற்காக, அதன் படி செய்ய அல்லாஹ்வால்
முடியுமா? அல்லாஹ் ஷைத்தானுக்கு ஏதாவது கடமைப்பட்டுள்ளானா?
அல்லது ஷைத்தான் அல்லாஹ்வோடு சேர்த்து செயல்படும் கூட்டாளியா?

இந்த ஹதீஸ் முழுவதையும் படித்தால், இன்னும் பல தர்மசங்கடமான கேள்விகள்
எழும்புகின்றன, ஆனால், இதோடு என் கேள்விகளை முடித்துக்கொள்கிறேன்.

முஸ்லிம்களே, அடுத்த முறை நீங்கள் ஆயத்துல் குர்ஸியை ஓதும் போது, இதனை
மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள், அது என்னவென்றால், இந்த ஆயத்தை ஓதினால்,
ஷைத்தான் ஒன்றுமே உங்களை செய்யமுடியாது என்று உங்களுக்கு ஆலோசனை
சொன்னவனே, அதே ஷைத்தான் தான்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், ஷைத்தான் உங்களை (முஸ்லிம்களை) தெளிவாக
குழப்பி ஏமாற்றியுள்ளான். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று அவன்
விரும்பினானோ, அதனைத் தான் நீங்கள் பல நூற்றாண்டுகளாக செய்துக்கொண்டு
இருக்கிறீர்கள், அல்ஹம்துலில்லாஹ்!

அடிக்குறிப்புக்கள்:

1) ஆயத்துல் குர்ஸி என்பது, குர்‍ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 255வது வசனமாகும்.

2:255. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன்
என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி
துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும்
அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய
முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப்
பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும்,
அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம்
(குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது;
அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக
உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்).

2) இந்த நிகழ்ச்சி பற்றி பதிவு செய்யப்பட்ட ஸஹீஹ் புகாரி ஹதீஸ்கள்:

2311. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை
என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை
அள்ளலானார். அவரை நான் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு
செல்லப் போகிறேன்!' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை!' எனக்குக்
குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை
நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே!
நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தான்? என்று
கேட்டார்கள்.நான், 'இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில்
இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார்.
எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன்! என்றேன். அதற்கு நபி(ஸல்)
அவர்கள், 'நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன்
வருவான்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று
நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி
அவனுக்காக(அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப்
பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். 'உன்னை நபி(ஸல்)
அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன்,
'என்னைவிட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனிநான்
வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன்.
விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன்
என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! அவன்
(தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே,
அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன்! என்றேன். 'நிச்சயமாக அவன்
உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்!
என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது,அவன் வந்து உணவு
பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி(ஸல்)
அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல்
வரமாட்டேன்! என்று செல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும்
வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் 'என்னைவிட்டுவிடு! அல்லாஹ்
உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!'
என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். 'நீர்
படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து
கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின்
தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து
கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!' என்றான்.
விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன
செய்தான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப்
பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்;
அதனால் அவனைவிட்டு விட்டேன்!' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன? என்று
நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது
ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால்,
விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்)
ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!
என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள்
நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக
இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக
இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று
இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று
கேட்டனர். 'தெரியாது' என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!' என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Volume :2 Book :40

3275. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த
(ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக்
கொண்டேன்; 'உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்'
என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச்
சொல்கிறார்..) இறுதியில் அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது
ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர்
(வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை
ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்' என்று என்னிடம் சொன்னான். (இதை
நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) 'அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம்
உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்' என்று கூறினார்கள்.

Volume :3 Book :59

5010. முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார்

அபூ ஹுரைரா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப்
பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன்
என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான்
பிடித்து, 'உன்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்'
என்று சொன்னேன்' என்று கூறிவிட்டு, - அந்த நிகழ்ச்சியை முழுமையாகக்
குறிப்பிட்டார்கள். - (இறுதியில், திருட வந்த) அவன், 'நீங்கள்
படுக்கைக்குச் செல்லும்போது (ஆயத்துல் குர்ஸீ'யை ஓதுங்கள்! (அவ்வாறு
செய்தால்,) விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப்
பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; எந்த
ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்' என்று கூறினான். (இதை நான் நபி(ஸல்)
அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், 'அவன் பெரும்
பொய்யானாயிருப்பினும அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்;
(உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்' என்று கூறினார்கள் என்றும்
கூறினார்கள். 35 Volume :5 Book :66

மூலம்: http://www.faithbrowser.com/ayat-al-kursi-by-courtesy-of-satan/

________________________________

ஃபெயித் ப்ரவுசர் தள இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/faith_browser/ayat-al-kursi-by-courtesy-of-satan.html


Source : http://isakoran.blogspot.in/

August 11, 2016

முஹம்மதுவின் செய்தி, பரிசுத்த பவுலடியாரின் செய்தி – சாட்சிகள் எங்கே?

ஞாயிறு, 27 மார்ச், 2016

முஹம்மதுவின் செய்தி, பரிசுத்த பவுலடியாரின் செய்தி – சாட்சிகள் எங்கே?

(2016ம் ஆண்டின் – இயேசு உயிர்த்தெழுந்த நாள் சிறப்புக் கட்டுரை)

முன்னுரை: இன்று 2016ம் ஆண்டு, மார்ச் மாதம் 27ம் தேதி, நான்
திருச்சபையில் ஆராதனையில் உட்கார்ந்து இருந்தேன். இன்று உலகமெங்கும்
கிறிஸ்தவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுந்த நாளை நினைவு கூறுகிறார்கள். என்
சபையின் போதகர் இன்று 1 கொரிந்தியர் 15ம் அத்தியாயத்திலிருந்து பிரசங்கம்
செய்தார். அப்போது எனக்கு தோன்றிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி
சுருக்கமாக இந்த கட்டுரையில் எழுதவுள்ளேன்.

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரங்கள் என்ன? முஹம்மதுவின்
நபித்துவத்திற்கு சாட்சி யார்? பவுலடியாரின் சீஷத்துவத்திற்கு சாட்சி
யார்? இந்த இரண்டு கேள்விகள் இக்கட்டுரையில் கேட்கப்பட்டு ஆய்வு
செய்யப்படுகிறது.


1) முஹம்மது பற்றிய கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு

முஸ்லிம்கள் முஹம்மது என்பவரை தீர்க்கதரிசியாக (இறைத்தூதராக)
கருதுகிறார்கள், இவர்களின் நம்பிக்கைக்கு ஆதாரம் குர்-ஆன் ஆகும்.
கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை ஒரு "கள்ளத் தீர்க்கதரிசி" என்று
நம்புகிறார்கள், இவர்களின் நம்பிக்கைக்கு ஆதாரம் பைபிள் ஆகும்.

முஹம்மதுவை ஒரு தீர்க்கதரிசியாக கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்
என்று முஸ்லிம்கள் பெரும் முயற்சி எடுக்கிறார்கள், ஆனால், அவர்களால்
வெற்றிப்பெற முடிவதில்லை. சில முஸ்லிம் அறிஞர்கள், பைபிளின்
அடிப்படையிலேயே முஹம்மதுவின் நபித்துவத்தை நிருபிக்க இமாலய முயற்சி
எடுக்கிறார்கள், ஆனால், அதுவும் தோல்வி அடைகிறது.

பைபிளின் படி, முஹம்மது ஒரு பொய் தீர்க்கதரிசி ஆவார். இயேசுவின்
போதனைகளின் படியும், அப்போஸ்தலர்களின் போதனைகளின் படியும், முஹம்மது ஒரு
பொய்யராவார்.

2) பரிசுத்த பவுலடியார் பற்றிய முஸ்லிம்களின் நிலைப்பாடு

புதிய ஏற்பாட்டின் படி, பவுலடியார் ஒரு அப்போஸ்தலர் ஆவார். இயேசுவின்
சீடர்களாகிய பரிசுத்த பேதுரு, யோவான் போன்ற வரிசையில், பவுலடியாரையும்
கிறிஸ்தவம் "அப்போஸ்தலர்" என்று அழைக்கிறது. ஆனால், முஸ்லிம்களின் படி,
"பவுலடியார் ஒரு கள்ள சீடர், இயேசு போதிக்காதவற்றை போதித்தவர்". மேலும்,
"இயேசு தாம் ஒரு தீர்க்கதரிசி மட்டுமே என்று போதித்தார், ஆனால், பவுல்
வந்து இதனை மாற்றி, இயேசு தேவகுமாரன் என்றும், இயேசுவிற்கு
தெய்வீகத்தன்மை உண்டு என்றும் போதித்தார்" என்று முஸ்லிம்கள் பரிசுத்த
பவுலடியார் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

ஒரு சராசரி மனிதன் புதிய ஏற்பாட்டை படிப்பாரானால், முஸ்லிம்களின்
மேற்கண்ட நிலைப்பாட்டில் உள்ள பிழைகளை சுலபமாக கண்டுபிடிப்பார். இந்த
சவாலை ஏற்கவிரும்பும் முஸ்லிம்கள் புதிய ஏற்பாட்டை படிக்க இன்று முதல்
ஆரம்பிக்கட்டும்.

3) கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாகிய இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய
பரிசுத்த பவுலையாரின் போதனைகளுக்கு சாட்சிகள் உண்டா?

கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் இயேசுவின் உயிர்த்தெழுதல் ஆகும். இதனை
சுருக்கமாக பரிசுத்த பவுலடியார், கொரிந்திரருக்கு எழுதிய நிருபத்தில்
எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 15:14

15:14 கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா,
உங்கள் விசுவாசமும் விருதா.


மேற்கண்ட வசனத்தில் "கிறிஸ்தவத்தின் நம்பிக்கை" இயேசுவின்
உயிர்த்தெழுதலில் அடங்கியுள்ளது என்பதை பரிசுத்த பவுலடியார்
குறிப்பிடுகிறார். 1 கொரிந்தியர் 15ம் அத்தியாயத்தை முழுவதுமாக
படிக்கவும், நான் இங்கு சில வசனங்களை மட்டும் மேற்கோள் காட்டுகிறேன்.

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு யார் சாட்சிகள்? இதனை மக்கள் நம்புவது எப்படி?

பவுலையார் ஒருவர் மட்டும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக
இருந்திருந்தால், முஸ்லிம்களின் நிலைப்பாட்டில் நியாயம் இருக்கிறது என்று
நாம் கருதலாம். ஆனால், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு அவரது உள்வட்ட
சீடர்கள் தான் முதலாவது சாட்சிகள் என்று பவுலடியார் குறிப்பிடுகிறார்,
இதனை வரிசைப்படுத்தி எழுதுகிறார், இதனை இப்போது படியுங்கள்:

1 கொரிந்தியர் 15:3 - 8


15:3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும்
என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக
மரித்து,
15:4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
15:5 கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
15:6 அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும்
ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும்
இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
15:7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
15:8 எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.


இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பவுலடியார் போதனை செய்துள்ளார்,
உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது கண்டவர் பவுலடியார் ஆவாரா? இல்லை! இவர்
உயிர்த்தெழுந்த இயேசுவை கடைசியாக கண்டவர் ஆவார்.

மேலேயுள்ள வசனங்களை கவனிக்கும் போது, உயிர்தெழுந்த இயேசுவானவர்:

அ) பேதுருவிற்கு காணப்பட்டார்
ஆ) இதர சீடர்களுக்கு காணப்பட்டார்
இ) அதன் பின்பு, ஐந்நூறு பேருக்கும் அதிகமானவர்களுக்கு காணப்பட்டார்
ஈ) கடைசியாக, பவுலடியாருக்கு காணப்பட்டார்.


இயேசுவின் சீடர்களில் சிலரும், அந்த ஐந்நூறு பேர்களில் பலரும் இந்த
நிருபத்தை பவுலடியார் எழுதிய போது உயிரோடு இருந்துள்ளார்கள்.
அக்காலக்கட்டத்தில், பவுலடியாரின் போதனையின் நம்பகத்தன்மையை சரி பார்க்க
விரும்புகிறவர்கள், உயிரோடு இருந்த இதர சீடர்களிடம் கேட்டு தெரிந்துக்
கொள்ளலாம். உயிர்த்தெழுந்த இயேசுவை பார்த்தவர்களில் பவுலடியார் தம்மை
"கடைசியாக குறிப்பிடுகிறார்" என்பதை கவனிக்கவும்.

பரிசுத்த பவுலையார் பொய் சொல்கிறார் என்று முஸ்லிம்கள் கூறுவார்களானால்,
முதலாவது அவர்கள் இயேசுவின் முக்கிய சீடர்களாகிய பேதுரு, யோவான் போன்ற
சீடர்களைத் தான் குற்றப்படுத்த வேண்டும். மேலும் இதர 500 சீடர்களை
குற்றப்படுத்தவேண்டும். இந்த வசனத்தில் "நாங்கள்" என்று பவுலடியார்
குறிப்பிடுவது, இயேசுவின் சீடர்களையும் சேர்த்துத் தான்.

1 கொரிந்தியர் 15:15 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத
கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச்
சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும்
காணப்படுவோமே.



ஆனால், இயேசுவின் இந்த சீடர்கள் பற்றி 7ம் நூற்றாண்டில் வந்த குர்-ஆன்
என்ன சொல்கிறது? இச்சீடர்கள் பொய் சொல்பவர்கள் என்றோ, இவர்களின்
விசுவாசம் கெடுக்கப்பட்டுவிட்டதென்றோ சொல்கிறதா? குர்-ஆன் வசனத்தைப்
பாருங்கள்:

குர்-ஆன் 61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை
நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க,
சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று
கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும்,
இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ
நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு
எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.
(முஹம்மது ஜான் தமிழாக்கம்)


இந்த வசனத்தில் வரும் "அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்" என்பது
இயேசுவின் சீடர்களைத் தான் குறிக்கும். இந்த வசனம் இறக்கப்பட்டது 7ம்
நூற்றாண்டில், இயேசுவின் சீடர்களும் பவுலடியாரும் வாழ்ந்த காலம் முதலாம்
நூற்றாண்டாகும். இந்த வசனத்தின் படி, வெற்றியாளர்களாக அல்லாஹ் மாற்றியது
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களாகிய இயேசுவின் சீடர்கள் மற்றும்
பவுலடியாரைத் தான். மேலும் இவர்களின் போதனைகளின் படி வாழ்ந்த
கிறிஸ்தவர்களைத் தான்.

இதுவரை கண்ட விஷயங்களின் படி, பரிசுத்த பவுலடியாரின் போதனைகளுக்கு
முதலாவது சாட்சிகள், ஐந்நூறுக்கும் அதிகமாக இயேசுவின் சீடர்கள் ஆவார்கள்.

பரிசுத்த பவுலடியாரின் செய்திக்கு இன்னொரு ஆதாரத்தையும் இயேசு
கொடுத்திருந்தார், அது "அற்புதங்களும் அடையாளங்களுமாகும்". இறைவன் தன்
இறைத்தூதர்களை அனுப்பும் போது, மக்கள் நம்பிக்கை கொள்வதற்காக,
அற்புதங்களைச் செய்யும் அதிகாரத்துடன் அனுப்புவார். இதனை பழைய ஏற்பாட்டு
தீர்க்கதரிசிகளாகிய மோசே முதற்கொண்டு, இயேசுவின் அப்போஸ்தலர் பவுலடியார்
வரை நாம் பரவலாக காணலாம். பவுலடியார் மூலமாக இயேசு செய்த அற்புதங்களை காண
புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தை படிக்கவும்.

சுருக்கமாக சொல்வதென்றால், இயேசுவின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்தின்
அஸ்திபாரம் ஆகும், இதனை இயேசுவின் சீடர்களோடு கூட சேர்ந்து, பவுலடியாரும்
போதனை செய்துள்ளார். பவுலடியாரின் போதனைகளுக்கு இராண்டு வகையான சாட்சிகளை
ஆதாரங்களை தேவன் கொடுத்திருந்தார். முதலாவது ஆதாரம், உயிர்த்தெழுந்த
இயேசுவைக் கண்ட ஐந்நூறுக்கும் அதிகமான சீடர்கள், இரண்டாவது ஆதாரம்,
பவுலடியார் மூலமாக இயேசு செய்த அற்புதங்கள் ஆகும். இவ்விவரங்கள்
முஸ்லிம்களின் பவுலடியார் பற்றிய குற்றச்சாட்டை
தவிடுபொடியாக்கிவிடுகிறது.

இப்போது, முஹம்மதுவின் செய்திக்கு என்ன சாட்சிகளை அல்லாஹ் கொடுத்துள்ளான்
என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

4) இஸ்லாமின் அஸ்திபாரமாகிய முஹம்மதுவின் நபித்துவமும், மற்றும்
குர்-ஆனின் நம்பகத்தன்மையை நிருபிக்கும் சாட்சிகளும்

இஸ்லாமின் முதலாவது அஸ்திபாரம் "முஹம்மதுவின் நபித்துவம் ஆகும்",
இரண்டாவது அஸ்திபாரம் குர்-ஆன் ஆகும். முஹம்மதுவின் நபித்துவத்தின்
வெளிப்பாடு தான் குர்-ஆன். குர்-ஆனில் உள்ளவைகளை முஹம்மது போதித்தார்.
குர்-ஆனில் இல்லாதவைகளையும் முஹம்மது போதித்தார், அதனை ஹதீஸ்கள் என்று
கூறுவார்கள்.

பரிசுத்த பவுலடியாரின் "அப்போஸ்தலத்துவத்தையும், செய்தியையும் மேலே ஆய்வு
செய்தது போல, முஹம்மதுவின் நபித்துவத்தையும், செய்தியையும் ஆய்வு
செய்வோம்".

அ) முஹம்மது ஒரு இறைத்தூதர் என்றுச் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
ஆ) குர்-ஆன் இறைவேதம் என்றுச் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?


இந்த கேள்விகளை நாம் முஸ்லிம்களிடம் கேட்டால்,

முஹம்மது இறைத்தூதர் என்று குர்-ஆன் சொல்கிறது என்று முதலாவது கேள்விக்கு
பதில் சொல்வார்கள்.
குர்-ஆன் இறைவேதம் என்று முஹம்மது சொல்கிறார் என்று இரண்டாவது கேள்விக்கு
பதில் சொல்வார்கள்.


இது எப்படிப்பட்ட வேடிக்கையாக இருக்கிறது என்று பாருங்கள்.
முஹம்மதுவிற்கு குர்-ஆன் சாட்சி, குர்-ஆனுக்கு முஹம்மது சாட்சி.
இவ்விரண்டிற்கு வெளியே இஸ்லாமில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இஸ்லாம்
இறைவனால் (பைபிளின் தேவனால்) கொண்டுவரப்பட்ட மார்க்கம் என்றுச்
சொல்வதற்கு, எந்த ஒரு ஆதாரத்தையும் இஸ்லாம் கொடுப்பதில்லை. பைபிளின்
தீர்க்கதரிசிகளுக்கு தேவன் கொடுத்து அனுப்பியது போல, எந்த ஒரு அற்புதமும்
முஹம்மதுவிற்கு கொடுக்கப்படவில்லை.

பரிசுத்த பவுலடியாருக்கு முன்னோடிகளாக, இயேசுவின் சீடர்கள் இருந்தார்கள்,
பவுலடியாரின் செய்தியை சரி பார்க்கும் உரைக்கற்களாக அப்போஸ்தலர்கள்
இருந்தார்கள். ஆனால், முஹம்மதுவின் செய்தியை பரிசோதிக்க, இயேசுவிற்கு
பிறகு முஹம்மதுவிற்கு முன்பு, எந்த ஒரு தீர்க்கதரிசியும் இல்லை, இதனை
இஸ்லாமே சொல்கிறது. முஹம்மதுவின் செய்தியின் நம்பகத்தன்மையை சரிப்பார்க்க
இருந்த ஒரே ஆதாரம் பைபிள் தான். இதனை குர்-ஆன் பல இடங்களில்
சொல்லியுள்ளது, முந்தைய வேதங்களை மெய்ப்பிக்க குர்-ஆன் வந்தது என்றுச்
சொல்லும் குர்-ஆன் வசனங்களே, பைபிளை நீதிபதியின் இருக்கையில்
அமர்த்திவிட்டு, குற்றவாளி கூண்டில் தன்னை நிறுத்திக்கொண்டது. எந்த
பைபிளை நிருபிக்க குர்-ஆன் வந்ததோ, அந்த பைபிளுக்கு எதிராக குர்-ஆன்
போதனை செய்துள்ளது.

ஆக, இஸ்லாமின் முதலாவது அஸ்திபாரமாகிய "முஹம்மதுவின் நபித்துவத்தை"
நிருபிக்கும் ஆதாரம் இஸ்லாமிடம் இல்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

இரண்டாவதாக, பரிசுத்த பவுலடியாரின் மூலமாக இயேசு செய்த அற்புதங்களைப்போல,
ஒரு அற்புதத்தையும் முஹம்மது மூலமாக அல்லாஹ் செய்யவில்லை. வியாதிகளை
குணமாக்குவது, மரித்தவர்களை உயிரோடு எழுப்புவது போன்ற அற்புதங்கள்
ஒன்றையும் முஹம்மது செய்து தன் "நபித்துவத்தையும், குர்-ஆன் இறைவேதம்
தான்" என்பதையும் நிருபித்துக் கொள்ளவில்லை.

முடிவுரை: இச்சிறிய கட்டுரையில், கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமாகிய
"இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பவுலடியாரின் செய்தியைப் பற்றிப்
பார்த்தோம்". தன் செய்திக்கு சாட்சிகளை பவுலடியார் கோர்வையாக
கொடுத்துள்ளதை, 1 கொரிந்தியர் 15ம் அத்தியாயத்திலிருந்து எடுத்துக்
காட்டினோம். பழைய ஏற்பாட்டின் படி, ஒரு வழக்கிற்கு இரண்டு சாட்சிகள்
தேவைப்படுகிறது, ஆனால், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு 500க்கும்
அதிகமானோரின் சாட்சி இருப்பதைக் கண்டோம்.

இதே போல, இஸ்லாமின் அஸ்திபாரமாகிய முஹம்மதுவின் நபித்துவம் மற்றும்
குர்-ஆன் பற்றி என்னென்ன ஆதாரங்களை இஸ்லாம் கொடுத்துள்ளது என்று ஆய்வு
செய்யும் போது, நமக்கு எந்த ஒரு சாட்சியும் கிடைக்கவில்லை.
முஹம்மதுவைப்போல கள்ளத்தீர்க்கதரிசிகள் அனேகர் எழும்புவார்கள், தங்கள்
போதனைகளை ஒரு புத்தகமாக மாற்றி, இது தான் இறைவேதம் என்றுச் சொல்வார்கள்.
நீ ஒரு இறைத்தூதர் என்பதற்கு என்னய்யா ஆதாரம் என்று கேட்டால்,
புத்தகத்திற்கு நேராக தங்கள் விரலை நீட்டுவார்கள். இந்த புத்தகம்
இறைவேதம் தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், இறைத்தூதர் நான்
சொல்கிறேன் என்றுச் சொல்வார்கள். ஏதாவது அற்புதம் செய்து உம்
நபித்துவத்தை நிருபியுங்கள் என்று கேட்டால், இந்த புத்தகம் தான் என்
அற்புதம் என்றுச் சொல்வார்கள். இப்படிப்பட்டவரை முஸ்லிம்கள் நபி என்று
நம்புவார்களா? நிச்சயமாக இல்லை, இதே போலத்தான் கிறிஸ்தவர்களும்
முஹம்மதுவை தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை.

குர்-ஆனின் இலக்கிய நடை "அது இறைவேதம் என்பதற்கு ஆதாரம்" என்று
முஸ்லிம்கள் சொன்னால், திருக்குரளும், இதர பண்டைய இலக்கியங்களும்
குர்-ஆனை மிஞ்சும் இலக்கிய நடையில் இருப்பதை இவர்கள் கவனிக்க
தவறுகிறார்கள் என்று அர்த்தம். மேலும், குர்-ஆன் இறைவேதம் என்று எண்ணும்
முஸ்லிம்கள், இதர மொழி/தமிழ் இலக்கியங்களையும் இறைவேதம் என்று
நம்பவேண்டும்.

குர்-ஆன் சொல்லும் செய்தி வேறு நூலில் இல்லை என்று முஸ்லிம்கள் சொன்னால்,
இது மிகப்பெரிய பொய்யாகும். நான் சவால் விடுகிறேன், குர்-ஆனை விட
கருத்தில், கட்டளைகளில் மேன்மையுள்ள நூல்கள் உலகில் அனேகம் உள்ளன.
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், தரத்தில் குர்-ஆனின் சில கட்டளைகள்
மிகவும் கேவலமானதாகவும், சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும்
கட்டளைகளாகவும் இருக்கின்றன (உதாரணத்திற்கு, ஒரு முஸ்லிம் நான்கு
திருமணங்களைச் செய்ய குர்-ஆன் அனுமதிப்பதையும், அடிமைப்பெண்களோடு
விபச்சாரம் புரிவதை குர்-ஆன் அனுமதிப்பதையும் சொல்லலாம்.)

ஆக, இயேசு உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் நினைவு கூறும் இந்த நாளில்,
முஹம்மதுவின் நபித்துவம், பவுலின் அப்போஸ்தலத்துவத்திற்கு முன்பாக
மண்டியிட்டுள்ளதை காணமுடிகின்றது. அருமையான அப்போஸ்தலர்களை கொடுத்த
இயேசுவையும், இவ்வப்போஸ்தலர்கள் செய்த ஊழியத்தையும் பார்த்து நாங்கள்
பிரமிக்கிறோம். இயேசுவை துதிக்கிறோம். அவர் உயிர்த்தெழுந்தது போல,
எங்களையும அவரது வருகையில் உயிர்ப்பிப்பார் என்ற விசுவாசத்துடன்,
உவ்வுலகப் பயணத்தை தைரியத்துடன் தொடருகிறோம்.

Source: http://www.isakoran.blogspot.in/2016/03/blog-post_27.html

Posted by Isa Koran at ஞாயிறு, மார்ச் 27, 2016


--
Source : http://isakoran.blogspot.in/

July 26, 2016

குர்-ஆன் 4:3 குறிப்பிடுவது ஓர் அடிமைப் பெண்ணையா? (அ) பல அடிமைப் பெண்களையா?

குர்-ஆன் 4:3 குறிப்பிடுவது ஓர் அடிமைப் பெண்ணையா? (அ) பல அடிமைப் பெண்களையா?

(மொழியாக்கம் செய்தவர்களின் குழப்பத்திற்கு காரணமென்ன?)
முன்னுரை: 
ஒரு புத்தகத்தை அதன் மூல மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு முழு தரத்துடன் மொழியாக்கம் செய்வது என்பது சிறிது கடினமே. அதிலும், மத சம்மந்தப்பட்ட புத்தகங்களை மொழியாக்கம் செய்யும் போது அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு, குர்-ஆனை மற்றும் பைபிளைச் சொல்லலாம். இவைகளை தமிழாக்கம் செய்பவர்கள், தாங்கள் வாழும் காலகட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவைகள் எழுதப்பட்ட காலகட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். 
குர்-ஆனை எடுத்துக் கொண்டால், குர்-ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்தின் பின்னணி என்ன? ஒவ்வொரு வசனத்தின் பின்னணி என்ன? போன்ற சரித்திர விவரங்களை சரிவர அறிந்துக்கொண்டு அதன் பின்பு மொழியாக்கம் செய்யவேண்டும். குர்-ஆனின் முழு இறையியலை சரியாக புரிந்துக் கொண்டு மொழியாக்கம் செய்யவேண்டும். இதுமட்டுமல்ல, அரபி மொழியின் அக்கால இலக்கிய நடை, இலக்கணம், அரபி வார்த்தைகளின் சரியான அர்த்தங்கள் (அருஞ்சொற்பொருள்) போன்ற அனைத்தையும் கவனத்தில் கொண்டு மொழியாக்கம் செய்யவேண்டும். 

முஸ்லிம் அறிஞர்களின் குர்-ஆன் மொழியாக்க குழப்பங்கள்

குர்-ஆனை மொழியாக்கம் செய்யும் முஸ்லிம் அறிஞர்களில் சிலர், இன்னொரு முக்கியமான விவரத்தையும் கவனத்தில் கொள்கிறார்கள். அதாவது, முஸ்லிம்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும் குர்-ஆன் வசனங்களை தெரிந்தே பொருளை மாற்றி மொழியாக்கம் செய்கிறார்கள். அல்லாஹ்விற்கும், முஹம்மதுவிற்கும் வரும் கெட்டப்பெயரை நீக்குவதற்கு சில வசனங்களின் பொருளை திருத்தி மொழியாக்கம் செய்கிறார்கள். இப்படி செய்யப்பட்ட ஒரு வசனத்தை இந்த கட்டுரையில் சுருக்கமாக காண்போம்.
குர்-ஆன் 4:3ம் வசனம்:
ஒரு முஸ்லிம் எத்தனை அடிமைப் பெண்களோடு விபச்சாரம் செய்யலாம்? அதாவது திருமணம் செய்துக் கொள்ளாமலேயே எத்தனை அடிமைப் பெண்களோடு உடலுறவு கொள்ளலாம்? இந்த விவரத்தை குர்-ஆன் 4:3ம் வசனத்தில் காணலாம். இந்த வசனத்தை ஐந்து குர்-ஆன் தமிழாக்கங்களிலிருந்து காண்போம்.
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். 
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
4:3. அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள வேண்டும்.) அல்லதுநீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள்.நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும். 
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
4:3. அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும். 
பிஜே குர்-ஆன் தமிழாக்கம்:
4:3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்!106 (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.  
மன்னர் ஃப்ஹ்து புனித முஸ்ஹஃப் அச்சக வளாகம் – பதித்த குர்-ஆன் தமிழாக்கம்:
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதம் செய்யமுடியாது என நீங்கள் அஞ்சினால் (மற்றப்)பெண்களில் உங்களுக்கு விருப்பமானவகளை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கிடையில், நீங்கள் நீதமாக நடக்கமுடியாதெனப் பயந்தால், ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ளுங்கள்) அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்பெண்ணில் உள்ள)தை(க் கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்). நீங்கள் அநீதி செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமான வழியாகும். 
(இந்த வாக்கியத்தில் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை. 
"உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்பெண்ணில் உள்ள)தை(க் கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்)"
"அடிமைப்பெண்ணில் உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்" என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஆபாசமாக சொல்வதுபோல உள்ளது. எனவே, தற்போதைய கட்டுரையில் இந்த தமிழாக்கத்தை நாம் புறக்கணித்துவிடுவோம், தேவைப்பட்டால் இன்னொரு ஆய்வு கட்டுரையில் இந்த மொழியாக்கம் பற்றி காண்போம்.) 
ஆங்கிலத்தில் (யூசுஃப் அலி - Yusuf Ali)
If ye fear that ye shall not be able to deal justly with the orphans, Marry women of your choice, Two or three or four; but if ye fear that ye shall not be able to deal justly (with them), then only one, or (a captive) that your right hands possess, that will be more suitable, to prevent you from doing injustice.
மூன்று இஸ்லாமிய அறிஞர்களை தர்மசங்கடத்தில் தள்ளிய வசனம்
மேற்கண்ட தமிழாக்கங்களில், முஹம்மது ஜான் அவர்களும், அப்துல் ஹமீது பாகவி அவர்களும் இவ்வசனத்தை எப்படி தமிழாக்கம் செய்துள்ளார்கள் என்பதை கவனிக்கவும். மேலும் யூசுஃப் அலி அவர்களின் ஆங்கில மொழியாக்கத்தையும் கவனிக்கவும். 
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
4:3. . . . அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - . . . 
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
4:3. . . . அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். . . .
ஆங்கிலத்தில் (யூசுஃப் அலி - Yusuf Ali)
. . . , or (a captive) that your right hands possess, . . .
ஒரு முஸ்லிம் தன் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்களோடு (அடிமைப் பெண்களோடு) உடலுறவு கொள்ளலாம் என்று குர்-ஆன் 4:3ம் வசனம் சொல்லியிருக்கும் போது, மேற்கண்ட மூன்று முஸ்லிம் அறிஞர்கள் "ஒருமையில் – அடிமைப் பெண்" என்று எழுதியுள்ளார்கள். இவர்களை இவ்வசனம் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனை மறைக்க அடைப்பிற்குள் "ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) என்று முஹம்மது ஜான் அவர்கள் எழுதுகிறார், அப்துல் ஹமீது பாகவி அவர்களோ, "நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே" என்று எழுதுகிறார். வலக்கரம் சொந்தமான அடிமைப்பெண் என்றோ அல்லது பெண்கள் என்றோ அவ்வசனம் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லையென்றாலும், அடிமைப்பெண்கள் பற்றிய இஸ்லாமிய கட்டளைகளை பார்க்கும் போது, பன்மை (அடிமைப்பெண்கள்) என்பது தான் சரியான மொழியாக்கமாக இருக்கும். இதனை மறுப்பவர்கள் தகுந்த ஆதாரத்தோடு மறுக்கட்டும்.
வலக்கரத்திற்கு சொந்தமானவர்கள்:
முஹம்மது ஜான் அவர்களும், அப்துல் ஹமீது பாகவி அவர்களும் இதர குர்-ஆன் வசனங்களில் "வலக்கரத்திற்கு சொந்தமானவர்கள்" என்பதை பன்மையிலேயே தமிழாக்கம் செய்துள்ளார்கள். உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனங்களை கவனிக்கவும்.
குர்-ஆன் 23:6:
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி:
23:6. எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலதுகரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள்.
குர்-ஆன் 4:24
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. . . .
அப்துல் ஹமீது பாகவி:
4:24. கணவனுள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது. (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத்தவிர. . . .
குர்-ஆன் 33:52
இவ்வசனம் முஹம்மதுவின் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்பெண்கள்) பற்றி பேசுகின்றாது.
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; . . .
அப்துல் ஹமீது பாகவி:
33:52. . . .  ஆயினும், உங்களது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்அவ்வாறன்று. (அவள் உங்களுக்கு ஆகுமானவளே!) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கின்றான்.
மேற்கண்ட வசனத்தில் அப்துல் ஹமீது பாகவி அவர்கள், "முஹம்மதுவின் வலக்கரம் சொந்தமாக்கிய அடிமைப்பெண்கள்" பற்றி தமிழாக்கம் செய்யும் போதும், "ஒருமையிலேயே" சொல்லியுள்ளார். இங்கு இவர் என்ன சொல்ல வருகிறார்? முஹம்மதுவிற்கு ஒரே ஒரு அடிமைப்பெண் மட்டுமே இருப்பாளா? இப்பெண்ணிடம் மட்டுமே முஹம்மது திருமணம் செய்துக் கொள்ளாமல் உடலுறவு (விபச்சாரம்) செய்யலாம் என்று சொல்ல வருகிறாரா? ஆனால், குர்-ஆன் இந்த இடத்தில் பன்மையில் தான் சொல்கிறது. இவரை இந்த வசனம் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது என்று நினைக்கிறேன்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கத்தின் மிகப்பெரிய தவறு:
"கிணறு வெட்ட பூதம் கிளம்பிய" கதை என்றுச் சொல்வார்கள், அது போல ஒரு சிறிய விவரத்திற்கு குர்-ஆன் வசனங்களை படித்து ஆய்வு செய்தால், பல விவரங்கள் வெளிப்படுகின்றன.
புத்திசாலித்தனமாக இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தன் குர்-ஆன் தமிழாக்கத்தில் ஒரு உண்மையை மறைத்துள்ளது. இதை அவர்கள் தெரிந்து செய்தார்களா அல்லது இவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்று சரியாக தெரியவில்லையா? என்று சந்தேகமாக உள்ளது. இன்னொரு முறை அவ்வசனத்தை படிப்போம்.
4:3. அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையேமனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும். 
முஸ்லிம் ஆண்கள் திருமணம் செய்துக் கொள்ளாமல் அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொள்ளலாம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லியிருக்கும் போது, இந்த அசிங்கத்தை தர்மசங்கடத்தை ஜீரணித்துக் கொள்ளாத இவர்கள் "மனைவியாக்கிக் கொள்ளுங்கள்" என்ற வார்த்தையை இடையில் சொறுகி,  குர்-ஆனின் அசிங்கத்தை மூட முயற்சி எடுத்துள்ளார்கள்.
இஸ்லாமில் "மனைவிக்கும், அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வதற்கும்" இடையே இருக்கும் வித்தியாசங்கள் என்னவென்று இவர்களுக்கு தெரியுமா?
  • குர்-ஆனின் படி, ஒரு முஸ்லிமுக்கு ஒரு சமயத்தில் நான்கு பெண்கள் தான் மனைவி என்ற ஸ்தானத்தில் இருக்கமுடியும், ஆனால் அடிமைப்பெண்கள் எத்தனையானாலும் இருக்கலாம்.
  • மனைவிக்கு இருக்கும் உரிமைகள், அடிமைப்பெண்களுக்கு இல்லை.
  • மனைவியை மற்றவர்களுக்கு அடிமையாக விற்கமுடியாது, ஆனால், அடிமைப்பெண்களை பல நாட்கள் கற்பழித்துவிட்டு மறுபடியும் மற்றவர்களுக்கு அடிமையாக விற்றுவிடலாம்.
இப்படிப்பட்ட அடிப்படை விவரங்கள் கூட தெரியாமல் எப்படி இவர்கள் குர்-ஆன் தமிழாக்கம் செய்ய வந்துவிட்டார்கள்? உண்மையில் இவர்களுக்கு இஸ்லாம் தெரியும், ஆனால் குர்-ஆனில் உள்ள அசிங்கங்களை ஜீரணிக்க முடியாமல், இப்படி குளறுபடிகள் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். 
முடிவுரை: தாம்பத்தியம் – கற்பழிப்பு – விபச்சாரம்:
குர்-ஆன் 4:3ம் வசனம்,  திருமணம் செய்துக் கொள்ளாமல் அடிமைப்பெண்களோடு உடலுறவு கொள்ள முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி அளிக்கிறது. 
ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் அவளை மனைவி என்று அழைப்பார்கள். ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு ஆண் கட்டாயப்படுத்தி அவளோடு உடலுறவு கொண்டால், அதனை "கற்பழிப்பு" என்று கூறுவார்கள். ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு ஆண் அவளின் அனுமதியோடு அவளோடு உடலுறவில் கொண்டால், அதனை "விபச்சாரம்" என்று கூறுவார்கள். குர்-ஆன் 4:3ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட சலுகைக்கு என்ன பெயர் சூட்டுவது? தாம்பத்தியமா? கற்பழிப்பா விபச்சாரமா? இந்த தர்ம சங்கடத்திலிருந்து எப்படி விடுபடுவது? இதிலிருந்து முழுவதுமாக விடுபடமுடியாவிட்டாலும்,  தங்களால் இயன்ற விதத்தில் இதன் பாதிப்பை குறைக்கலாம் என்று எண்ணி, முஹம்மது ஜான் அவர்களும், அப்துல் ஹமீது பாகவி அவர்களும், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்க அறிஞர்களும் முயற்சி எடுத்துள்ளார்கள் என்று தெரிகின்றது. ஒருவேளை இவர்களுக்கு இஸ்லாமில் "வலக்கரத்துக்கு சொந்தமான அடிமைப்பெண்கள்" பற்றிய இறையியலே (கட்டளைகளே) தெரியாமல் போய்விட்டதா? இப்புதிருக்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.