யஹ்யா (யோவான்) எப்படி இயேசுவை மெய்ப்படுத்துவார்?
(குர்-ஆனின் அரைகுறை விவரங்களின் தன்மைக்கு இன்னொரு உதாரணம்)
யோகன் கட்ஜ்
ஜகரிய்யா மற்றும் யோவான் ஸ்நானகனைப் பற்றி குர்-ஆனில் ஆங்காங்கே சில
விஷயங்களை காணலாம். அவைகளில், யோவான் பற்றிய குர்-ஆனின் ஒரு கூற்றை நாம்
இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்போகிறோம்.
தனக்கு ஒரு மகனை கொடுக்கும் படி வேண்டுதல் செய்த ஜகரிய்யாவிற்கு,
தேவதூதன் கீழ்கண்டவாறு பதில் அளிக்கிறர், இதனை குர்-ஆன் 3:39ம் வசனத்தில்
காணலாம் (நான்கு குர்-ஆன் தமிழாக்கங்களிலிருந்து மேற்கோள்கள்):
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை
சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு
குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு
வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய
(தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
3:39. ஆகவே அவர் மாடத்தில் ("மிஹ்ராப்") நின்று தொழுது கொண்டிருந்த
சமயத்தில் (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள்:
(ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் "யஹ்யா" (என்ற ஒரு மக)வை உங்களுக்கு
அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை
(முன்னறிக்கையை) உண்மைப்படுத்தி வைப்பார்.(மனிதர்களுக்குத்) தலைவராகவும்,
(பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம்
உடையவராகவும் இருப்பார்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கம்:
3:39. அதற்கு மறுமொழியாக அவர், மிஹ்ராபில் மாடத்தினுள் நின்று தொழுது
கொண்டிருக்கும்போது, வானவர்கள் குரல் கொடுத்தார்கள்: "அல்லாஹ் உமக்கு
யஹ்யா (என்ற மக)வைக் கொண்டு நிச்சயமாக நற்செய்தி சொல்கின்றான். அவர்
அல்லாஹ்விடமிருந்து வரப்போகும் ஒரு வாக்கினை, மெய்ப்படுத்தக் கூடியவராய்
விளங்குவார். மேலும், அவரிடம் தலைமைத்துவம் மற்றும் மகத்துவத்தின்
பண்புகள் காணப்படும். மனக்கட்டுப்பாடு கொண்டவராகவும் இருப்பார்;
நபித்துவம் அருளப்பட்டவராகவும் இருப்பார். மேலும் ஒழுக்க சீலர்களில்
ஒருவராகவும் திகழ்வார்."
பீ. ஜைனுல் ஆபீதின் தமிழாக்கம்:
3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப்
பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை90
அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு
மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள்
அவரை அழைத்துக் கூறினர்.
தேவதூதர்களிடமிருந்து ஜகரிய்யாவிற்கு ஒரு மகன் பிறக்கப்போகிறார் என்ற
நற்செய்தியும், அவரது பெயர் என்னவென்றும் செய்தி வருகிறது. யஹ்யா
ஒழுக்கமுள்ளவராகவும், தலைவராகவும், நபியாகவும் இருப்பார். மேலும்
ஜகரிய்யாவிற்கு பிறக்கப்போகும் குழந்தை இன்னொரு முக்கியமான கடமையையும்
செய்வார். அதாவது, யஹ்யாவின் வாழ்வின் முக்கிய நோக்கத்தை குர்-ஆன்
இப்படியாகச் சொல்கிறது: "அல்லாஹ்வின் வார்த்தையை அவர்(யஹ்யா)
உண்மைப்படுத்துவார் / மெய்ப்படுத்துவார்" என்பதாகும்.
யோவான் மெய்ப்படுத்தக்கூடிய "அல்லாஹ்வின் வார்த்தை" எது? அதனை எப்படி
யோவான் மெய்ப்படுத்துவார்?
மேற்கண்ட முதல் கேள்விக்கான பதில், ஆறு வசனங்களுக்கு பிறகு
காணப்படுகின்றது. அதாவது, "மரியாளுக்கும் ஒரு மகன் பிறப்பார் என்ற
நற்செய்தி அறிவிக்கப்படும்" அவ்விடத்தில் அந்த வார்த்தை யார் என்று
சொல்லப்படுகிறது.
முஹம்மது ஜான் டிரஸ்ட்:
3:45. மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து
வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி)
நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்.
அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு)
நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
அப்துல் ஹமீது பாகவி:
3:45. (மேலும், மர்யமை நோக்கி) மலக்குகள் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ்
தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு
குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகின்றான்" என்றும் "அதன் பெயர் அல்
மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்" என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க
கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும்
இருப்பார்" என்றும் கூறினார்கள்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்:
3:45. வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: "மர்யமே! திண்ணமாக
அல்லாஹ் உனக்கு தனது கட்டளை பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர்
மர்யத்தின் குமாரர் ஈஸா 'அல் மஸீஹ்' என்பதாகும். அவர் இம்மையிலும்,
மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய
நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார்.
பீ ஜைனுல் ஆபீதின்:
3:45. "மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை90 பற்றி உமக்கு நற்செய்தி
கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ்92 என்பது அவரது பெயர்.
இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு)
நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை
நினைவூட்டுவீராக!
யோவான் மெய்ப்படுத்தவேண்டிய வார்த்தை "இயேசு" ஆவார். இதனை பீ ஜைனுல்
ஆபீதின் அவர்களின் தமிழாக்கம் தெளிவாக கூறுகின்றது, பார்க்க குர்-ஆன்
3:39:
3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப்
பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையைஅவர்
உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும்,
நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் அவரை அழைத்துக்
கூறினர். (பீ. ஜைனுல் ஆபீதின் தமிழாக்கம்)
ஹிலாலி மற்றும் கான் என்ற ஆங்கில மொழியாக்கத்தில் யோவான் பற்றி
சொல்லும்போது, அடைப்பு குறிக்குள் அவர் "நம்பிக்கை" கொள்வார் என்று
கொடுக்கப்பட்டுள்ளது.
Then the angels called him, while he was standing in prayer in
Al-Mihrab (a praying place or a private room), (saying): "Allah gives
you glad tidings of Yahya (John), confirming (believing in)the Word
from Allah [i.e. the creation of 'Iesa (Jesus), the Word from Allah
("Be!" - and he was!)], noble, keeping away from sexual relations with
women, a Prophet, from among the righteous." S. 3:39 Al-Hilali & Khan
இந்த ஆங்கில மொழியாக்கத்தில் அடைப்பிற்குள் கொடுத்த "நம்பிக்கை" கொள்வார்
என்ற வார்த்தையினால் எந்த ஒரு பயனும் இல்லை. "மெய்ப்படுத்துவார்" மற்றும்
"நம்பிக்கை கொள்வார்" என்ற வார்த்தைகள் இரண்டும் வெவ்வேறானவைகளாகும்.
நம்பிக்கை என்பது மௌனமாகவும், யாருக்கும் தெரியாமலும் மனதிற்குள்
நம்பிக்கை கொள்ளலாம். ஆனால், மெய்ப்படுத்துவது அல்லது உண்மைப்படுத்துவது
(confirm) என்பது மக்களுக்கு முன்பாக வெளிப்படையாக சாட்சி சொல்வதாகும்.
"மெய்ப்படுத்துவார்" என்ற வார்த்தையில் "யாரை மெய்ப்படுத்துவார்?"
"யாருக்கு முன்பாக மெய்ப்படுத்துவார்?" என்ற இரண்டு கேள்விகள்
உள்ளடக்கியுள்ளன.
குர்-ஆனில் யோவானின் பிறப்பு பற்றிய தீர்க்கதரிசன செய்தி கொடுக்கப்பட்ட
பிறகு, அவர் அந்த வார்த்தையை எப்படி மெய்ப்படுத்தினார் என்பதை
குர்-ஆனிலிருந்து காண மக்கள் அதிகமாக விரும்புவார்கள். குர்-ஆனின் 3:39
மற்றும் 3:45ம் வசனங்களை படிக்கும் போது, யோவான் மெய்ப்படுத்தக்கூடிய
அந்த வார்த்தை "இயேசு" என்பதை தெளிவாக அறியமுடியும். குர்-ஆனின் இந்த
அறிவிப்பில், அனேக கேள்விகள் பதில் சொல்லப்படாமல் விடப்பட்டுள்ளது,
அதாவது:
இயேசுவைப் பற்றி யோவான் எவைகளை மெய்ப்படுத்துவார்?
எந்த காலக்கட்டத்தில் யோவான் இயேசுவை மெய்ப்படுத்துவார்?
யோவான் எப்படி இயேசுவை மெய்ப்படுத்துவார்?
யோவான் இயேசுவை மெய்ப்படுத்தும் போது, அதனை கேட்பவர்கள்/பெற்றுக்
கொள்பவர்கள் யார்? அல்லது எந்த மக்களுக்கு முன்பாக யோவான் இயேசுவை
மெய்ப்படுத்துவார்?
இயேசு என்ற "அல்லாஹ்வின் வார்த்தை" பிறக்கப் போகிறார் என்று யோவான்
முன்னறிவிக்கவேண்டிய (அ) மெய்ப்படுத்தவேண்டிய அவசியமென்ன? இயேசு
இருக்கிறாரா அல்லது இல்லையா என்று மக்களில் யாராவது சந்தேகம்
கொள்வார்களா? யோவானின் காலத்தில் வாழ்ந்த மக்களில் யாராவது "இயேசு" என்ற
நபர் பிறந்திருக்கிறார் என்பதை நம்ப மறுப்பார்களா?
மக்கள் இப்படியெல்லாம் சந்தேகம் கொள்ளமாட்டார்கள் என்று கருதினால்,
யோவான் ஏன் அவரை மெய்ப்படுத்த வரவேண்டும்?
மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் பைபிள் பதில் தருகின்றது. ஆனால்,
"அல்லாஹ்வின் வார்த்தையை மெய்ப்படுத்துவார்" என்று யோவானின் பிறப்பு
விஷயத்தில் ஒரு தீர்க்கதரிசன நற்செய்தியை சொல்லிவிட்டு, அதன் பிறகு
குர்-ஆன் வேறு ஒன்றையும் விவரிக்காமல் அமைதியாக இருந்துவிட்டது. வேறு
சில இடங்களில் யோவானைப் பற்றி குர்-ஆன் பேசுகின்றது, ஆனால், அந்த யோவான்
எப்படி இயேசுவை மெய்ப்படுத்தினார் என்பதை மட்டும் விவரிக்க குர்-ஆன்
தவறிவிட்டது. யோவான் பற்றி குர்-ஆன் சொல்லும் அனைத்து வசனங்களையும் நாம்
கீழே காணலாம் (முஹம்மது ஜான் தமிழாக்கம்):
குர்-ஆன் 3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை
செய்தவராகக் கூறினார் "இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான
சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச்
செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்."
குர்-ஆன் 3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது,
மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும்
பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்;
அவர்அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும்,
கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும்,
நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.
குர்-ஆன் 6:85. இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள்
யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
குர்-ஆன் 6:89. இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும்,
நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை
நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.
குர்-ஆன் 19:7. "ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த்
தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு
முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).
குர்-ஆன் 19:12. (அதன் பின்னர்) "யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப்
பற்றிப் பிடித்துக் கொள்ளும்" (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக
இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
குர்-ஆன் 19:13. அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும்,
பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்); இன்னும் அவர் மிகவும்
பயபக்தியுடையவராக இருந்தார்.
குர்-ஆன் 19:14. மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும்
இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ
இருக்கவில்லை.
குர்-ஆன் 19:15. ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும்,
(மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி)
நிலைத்திருக்கும்.
குர்-ஆன் 21:89. இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் "என் இறைவா! நீ என்னை
(சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில்
மிகவும் மேலானவன்" என்று பிரார்த்தித் போது:
குர்-ஆன் 21:90. நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக
அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு
யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில்
விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும்,
பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம்
கொண்டவர்களாக இருந்தார்கள்.
யோவான் தன் கடமையை செய்தாரா? அவர் பிறந்ததற்கான நோக்கத்தை
நிறைவேற்றினாரா? போன்ற கேள்விகளுக்கு பதில் தராமல் குர்-ஆன் அமைதியாக
இருந்துவிட்டது. இயேசுவின் போதனையை அல்லது இயேசுவை எவ்வாறு மற்றும்
எப்போது யோவான் மெய்ப்படுத்தினார்? இதற்கு குர்-ஆனிடம் பதில் இல்லை.
இப்போது நம் முன் நிற்கும் முக்கியமான கேள்விகள் என்னவென்றால்,
யோவானின் மெய்ப்படுத்துதல் (சாட்சி) இயேசுவிற்கு ஏன் அவசியமாக உள்ளது?
ஒரு நபி (யோவான்), இன்னொரு நபியை (இயேசுவை) ஏன் மெய்ப்படுத்தவேண்டும்?
குர்-ஆனில் தரப்பட்டிருக்கும் விவரங்களை சேர்த்து பார்த்தோமானால்,
யோவானும், இயேசுவும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்களா? என்ற
சந்தேகம் வரும், ஏனென்றால், முக்கியமான இவ்விருவர் பற்றி மிகக் குறைவான
விவரங்கள் தான் குர்-ஆனில் காணப்படுகின்றது. இவ்விருவர் சந்தித்ததாக எந்த
ஒரு விவரத்தையும் குர்-ஆன் கொடுப்பதில்லை.
யோவான் கொண்டுவந்த செய்தி என்ன?
யோவான் ஒரு நபி என்று அழைக்கப்பட்டார் (குர்-ஆன் 3:39), மேலும அவருக்கு
நபித்துவமும், வேதமும் கொடுக்கப்பட்டு இருந்தது என்றும் குர்-ஆன்
சொல்கிறது (பார்க்க குர்-ஆன் 6:85, 89). இந்த யோவான் என்ற நபி கொண்டு
வந்த செய்தி என்ன? அவர் எவைகளை போதனைச் செய்தார்? போன்ற விவரங்கள்
குர்-ஆனில் இல்லை. யோவான் எதனை போதித்தார் என்ற ஒரு சிறிய துரும்பு கூட
குர்-ஆனில் காணப்படுவதில்லை. யோவானின் வாழ்க்கைப் பற்றி குர்-ஆனில்
காணப்படும் விவரங்கள் வெறும் பொதுவானவைகளாக உள்ளன. உதாரணத்திற்கு, யோவான்
ஒழுக்கமுடையவராக இருந்தார், பக்தியுள்ளவராக இருந்தார், பெற்றோர்களுக்கு
கடமைகளைச் செய்தார், நற்காரியங்களைச் செய்தார், இறைவனுக்கு
கீழ்படிந்தவராக இருந்தார் போன்ற பொதுவான வரிகள் மட்டுமே யோவான் பற்றி
குர்-ஆனில் காணப்படுகின்றது. ஒரு தீர்க்கதரிசியாக யோவானின் செய்தி
எப்படிப்பட்டதாக இருந்தது? அவருக்கு கொடுத்த வேதம் எப்படிப்பட்டதாக
இருந்தது? குர்-ஆனில் இக்கேள்விகளுக்கு பதில் இல்லை (பைபிளின் படி,
யோவான் ஒரு தீர்க்கதரிசியாவார், ஆனால், அவருக்கு எந்த ஒரு வேத
புத்தகமும் கொடுக்கப்படவுமில்லை என்பது தான் உண்மை).
யோவான் இயேசுவை எப்படி மெய்ப்படுத்தினார்? இதற்கான பதில் குர்-ஆனில்
அல்ல, பைபிளில் காணப்படுகின்றது: பார்க்க லூக்கா 1:1-25,39-45, 57-80;
3:1-22; யோவான் 1:14-37.
யோவான் பற்றி குர்-ஆனில் அரைகுறை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
குர்-ஆன் சொல்லும் பாதி விவரங்களை புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால்,
ஒவ்வொரு முஸ்லிமும் குர்-ஆனை விட்டு வெளியே வரவேண்டும், அதன் பிறகு அவர்
பைபிளை படித்து தெரிந்துக் கொள்ளவேண்டும்.
குர்-ஆனை தமிழில் மொழியாக்கம் செய்தவர்கள் "தவறாக
மொழிப்பெயர்த்துள்ளார்கள்". இயேசு எப்படி உருவாகினார் என்ற கருத்தில்
தான் "அல்லாஹ்வின் வார்த்தை" என்ற வாசகம் வருகிறது அதே போல "யோவானும்
மெய்ப்படுத்துவார்" என்ற வாசகமும் வருகிறது என்று முஸ்லிம்கள் தவறாக
மொழிப்பெயர்த்துள்ளார்கள்.
யோவான் வந்ததின் நோக்கம்:
"கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துவதற்கு ஆகும்" (ஏசாயா 40:3, மத்தேயு 3:1-17).
இயேசு கர்த்தர் என்றும், அவருக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்றும் யோவான்
குறிப்பிட்டார் (யோவான் 1:23,27).
இயேசு உலக மக்களின் பாவங்களை சுமந்த ஆட்டுக்குட்டியாக பலியாவார் என்றும்
யோவான் சாட்சி பகிர்ந்தார் (யொவான் 1:29-30).
பைபிளின் இந்த அடிப்படை கோட்பாடுகளை குர்-ஆனின் ஆசிரியர் மறுக்கிறார்.
இதன் அடிப்படையில் பார்க்கும் போது, யோவானின் செய்தி பற்றி குர்-ஆன்
மூச்சு விடவில்லை என்றுச் சொல்வது ஆச்சரியப்படவேண்டிய விஷயமல்ல.
கீழண்ட மூன்று கட்டுரைகள், யோவானின் செய்தியில் இயேசுவின் தெய்வீகத்தன்மை
எவ்விதம் வெளிப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்கிறது : 1, 2, 3.
யோவான் ஒரு தலைவராக இருந்தாரா?
குர்-ஆன் 3:39ல் இன்னொரு பிரச்சனையும் உள்ளது. இப்போது அதைப் பற்றி நம்
தமிழ் குர்-ஆன் மொழியாக்கங்கள் என்ன சொல்கின்றன என்பதைக் காண்போம்.
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை
சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு
குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு
வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும் (சய்யிதன்), ஒழுக்க
நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்"
எனக் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
3:39. ஆகவே அவர் மாடத்தில் ("மிஹ்ராப்") நின்று தொழுது கொண்டிருந்த
சமயத்தில் (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள்:
(ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் "யஹ்யா" (என்ற ஒரு மக)வை உங்களுக்கு
அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை
(முன்னறிக்கையை) உண்மைப்படுத்தி வைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும்
(சய்யிதன்), (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும்,
நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார்.
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கம்:
3:39. அதற்கு மறுமொழியாக அவர், மிஹ்ராபில் மாடத்தினுள் நின்று தொழுது
கொண்டிருக்கும்போது, வானவர்கள் குரல் கொடுத்தார்கள்: "அல்லாஹ் உமக்கு
யஹ்யா (என்ற மக)வைக் கொண்டு நிச்சயமாக நற்செய்தி சொல்கின்றான். அவர்
அல்லாஹ்விடமிருந்து வரப்போகும் ஒரு வாக்கினை, மெய்ப்படுத்தக் கூடியவராய்
விளங்குவார். மேலும், அவரிடம் தலைமைத்துவம் (சய்யிதன்) மற்றும்
மகத்துவத்தின் பண்புகள் காணப்படும். மனக்கட்டுப்பாடு கொண்டவராகவும்
இருப்பார்; நபித்துவம் அருளப்பட்டவராகவும் இருப்பார். மேலும் ஒழுக்க
சீலர்களில் ஒருவராகவும் திகழ்வார்."
பீ. ஜைனுல் ஆபீதின் தமிழாக்கம்:
3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப்
பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை90
அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும் (சய்யிதன்), ஒழுக்கக் கட்டுப்பாடு
மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள்
அவரை அழைத்துக் கூறினர்.
இவ்வசனத்தில் வரும் "ஒழுக்கமுள்ளவர்" என்ற சொற்றொடரானது, அவர் திருமணம்
செய்துக்கொள்ளாமல், வனாந்திரத்தில் வாழ்ந்தவராக இருந்தார் என்பதை
காட்டக்கூடியதாக உள்ளது. அவர் நபியாகவும், நல்லவராகவும் இருந்தார் என்ற
குர்-ஆன் சொற்றொடரானது, "மனந்திரும்புங்கள், தீய வழிகளை விட்டுவிட்டு,
நல் வழியில் வாழுங்கள்" என்று மக்களுக்கு அவர் செய்த போதனையை காட்டுவதாக
உள்ளது (லூக்கா 3:1-20).
எனினும் "சய்யித் (தலைவர், எஜமான்)" என்ற குர்-ஆனின் சொற்றொடர் யோவான்
ஸ்நானகனுக்கு பொருந்துவதாக இல்லை. யோவான் வாழ்ந்த முதல் நூற்றாண்டு கால
சமுதாய சூழ்நிலையில், திருமணம் செய்துக்கொள்ளாமல், பிள்ளைகளும் பெறாமல்
இருக்கும் ஒரு வாலிபன், தன் இன மக்களுக்கு தலைவராக இருப்பது என்பது
கடினமாகும். அவர் வாழ்ந்த சமுதாயத்தில் யோவான் மக்களின் தலைவராக
ஒருபோதும் இருந்ததில்லை. அவர் ஒரு வாலிபனாக இருந்த சமயத்திலேயே,
அதிகாரத்தில் இருந்த பெரிய தலைவர்களை கேள்வி கேட்டு, அவர்களின் தீய
செயல்களை கண்டித்தது உண்மை தான். உதாரணத்திற்கு,ஏரோது இராஜாவின் தீய
செயல்களை அவர் கண்டித்தார் (லூக்கா 3:19). அவர் இதனை ஒரு நபியாக,
வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாக செய்தாரே தவிர, தன் யூத
ஜனங்களின் தலைவராக பதவி வகித்தவராக இதனை செய்யவில்லை (லூக்கா 3:4. ஏசாயா
40:3).
ஆக, யோவானை "தலைவன்" என்று குர்-ஆன் அழைப்பது, அதன் ஆசிரியருக்கு
யோவானின் உண்மையான வாழ்க்கை வரலாறு தெரியவில்லை என்பதை
வெளிக்காட்டுகிறது. இதனால் தான் கீழ்கண்ட மொழியாக்கங்கள், தலைவர் என்று
அவரை மொழிபெயர்க்காமல், வெறு வகையாக எழுதி, குர்-ஆனின் அறியாமையை/பிழையை
மறைத்துள்ளார்கள்.
முஹம்மது ஜான் "கண்ணியமுடையவராகவும்" என்று மொழியாக்கம் செய்துள்ளார்:
3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை
சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு
குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு
வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய
(தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.
(முஹம்மது ஜான் தமிழாக்கம்)
பிக்தால், Lordly என்று மொழியாக்கம் செய்கிறார்:
And the angels called to him as he stood praying in the sanctuary:
Allah giveth thee glad tidings of (a son whose name is) John, (who
cometh) to confirm a word from Allah, lordly, chaste, a prophet of the
righteous. Pickthall
யூசுப் அலி, Noble என்று மொழியாக்கம் செய்கிறார்:
While he was standing in prayer in the chamber, the angels called unto
him: "Allah doth give thee glad tidings of Yahya, witnessing the truth
of a Word from Allah, and (be besides) noble, chaste, and a prophet,-
of the (goodly) company of the righteous." Yusuf Ali
சஹி இண்டர்னாஷ்நல், honorable என்று மொழியாக்கம் செய்கிறது:
So the angels called him while he was standing in prayer in the
chamber, "Indeed, Allah gives you good tidings of John, confirming a
word from Allah and [who will be] honorable, abstaining [from women],
and a prophet from among the righteous." Saheeh International
ஹிலாலி & கான் noble என்று மொழியாக்கம் செய்கிறார்கள்:
Then the angels called him, while he was standing in prayer in
Al-Mihrab (a praying place or a private room), (saying): "Allah gives
you glad tidings of Yahya (John), confirming (believing in) the Word
from Allah [i.e. the creation of 'Iesa (Jesus), the Word from Allah
("Be!" - and he was!)], noble, keeping away from sexual relations with
women, a Prophet, from among the righteous." Al-Hilali & Khan
முஹம்மது அஸத் outstanding amoung men என்று எழுதுகிறார்:
Thereupon, as he stood praying in the sanctuary, the angels called out
unto him: "God sends thee the glad tiding of [the birth of] John, who
shall confirm the truth of a word from God, and [shall be] outstanding
among men, and utterly chaste, and a prophet from among the
righteous." Muhammad Asad
பிக்தால், lordly என்று எழுதுகிறார், ஒரு உயர்ந்த ஸ்தானத்தில்
இருப்பவருக்கு உரிய தரத்தில்/தகுதியில் என்று இதனை புரிந்துக்
கொள்ளவேண்டுமா? "தலைவராக" இருப்பதற்கும், தலைவர் பதவி வகிக்காமல் ஆனால்,
"தலைவருக்கு உரிய தகுதிகளோடு" இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இதர
மொழியாக்கங்கள் செய்தவர்கள், தலைவர் என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக
"கண்ணியமான" போன்ற வார்த்தைகளைக் கொண்டு, குர்-ஆனின் தவறை
மொழியாக்கங்களில் திருத்தியுள்ளார்கள்.
எனினும், ஆங்கிலத்தில் ஹானரபுல் (honorable) என்ற வார்த்தை "சய்யித்"
என்ற அரபி வார்த்தைக்கு பயன்படுத்தியது சரியா தவறா என்று உறுதியாக
கூறமுடியாது. ஏனென்றால், சய்யிதன் என்ற அரபி வார்த்தையானது, குர்-ஆனில்
காணப்படும் அனேக குழப்பமான வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகும்.
இவ்வார்த்தையின் அர்த்தம் என்னவென்று யாருக்கும் தெரியாது. குர்-ஆன்
முரண்பாடுள்ள, புரியாத மற்றும் குழப்பம் தரக்கூடிய வார்த்தைகளை
பயன்படுத்துவது, அதன் நம்பகத்தன்மையை கெடுத்துவிடுகின்றது.
குர்-ஆனில் "சய்யித்" என்ற வார்த்தை, இன்னொரு இடத்திலும் வருகிறது. அது
குர்-ஆன் 12:25ம் வசனமாகும். குர்-ஆன் மொழியாக்கம் செய்தவர்கள், குர்-ஆன்
3:39ல் சய்யித் என்ற வார்த்தை வரும் போது, "honorable" அல்லது "noble"
என்று மொழியாக்கம் செய்தார்கள். ஆனால், இந்த இரண்டாவது இடத்தில்(12:25)
மட்டும் "தலைவர்/எஜமான்" என்றே மொழியாக்கம் செய்துள்ளார்கள். இவர்கள்
உண்மையை மறைக்கிறார்கள் என்பது இதன் மூலம் விளங்குகிறது.
யூசுஃப் அலி:
So they both raced each other to the door, and she tore his shirt from
the back: they both found her lord(sayyidaha) near the door. She said:
"What is the (fitting) punishment for one who formed an evil design
against thy wife, but prison or a grievous chastisement?" Yusuf Ali
பிக்தால்:
And they raced with one another to the door, and she tore his shirt
from behind, and they met her lord and master at the door. She said:
What shall be his reward, who wisheth evil to thy folk, save prison or
a painful doom? Pickthall
ஹிலாலி & கான்:
So they raced with one another to the door, and she tore his shirt
from the back. They both found her lord (i.e. her husband) at the
door. She said: "What is the recompense (punishment) for him who
intended an evil design against your wife, except that he be put in
prison or a painful torment?" Al-Hilali & Khan
முஹம்மத் அஸத்:
And they both rushed to the door; and she [grasped and] rent his tunic
from behind - and [lo!] they met her lord at the door! Said she: "What
ought to be the punishment of one who had evil designs on [the virtue
of] thy wife - [what] but imprisonment or a [yet more] grievous
chastisement?" Muhammad Asad
இவ்வசனத்தின் பின்னணியை பார்ப்போம். இந்த நிகழ்ச்சியில் வரும் அந்தப்
பெண், பல முறை யோசேப்போடு தவறான உறவு கொள்ளமுயற்சி எடுத்து இருக்கிறாள்.
ஆனால், அது பயன் அளிக்கவில்லை. மேலும், அவள் "சய்யித்" இடம் யோசேப்பு
பற்றி குற்றம் சுமத்துகிறாள். இந்த இடத்தில் சய்யித் என்றால்,
"கண்ணியமிக்க" என்று அர்த்தம் கொள்ளமுடியாது. அவளது கணவனுக்கு யோசேப்பை
தண்டிக்கும் சக்தி இருப்பதினாலும், அதற்கான அதிகாரம் அவரிடம்
இருப்பதினாலும் தான் அவள் முறையிடுகிறாள்.
ஆக, குர்-ஆன் 12:25ல் வரும் சய்யித் என்ற வார்த்தையின் அர்த்தம், தலைவர்
அல்லது எஜமானன், அதிகாரம் உடையவர் என்பதாகும். எனவே, குர்-ஆன் 3:39ல்
யோவானை "தலைவர்" என்று மொழியாக்கம் செய்தவர்களின் மொழியாக்கம் தான்
சரியானது. குர்-ஆன் 3:39ல் "கண்ணியமிக்க" என்று மொழிப்பெயர்த்தவர்கள்
தவறு செய்துள்ளார்கள்.
சய்யித் என்றால் கணவன் என்று அர்த்தமா?
சில மொழியாக்கங்களில் சய்யித் என்ற வார்த்தையை "கணவன்" (12:25) என்று
மொழியாக்கம் செய்துள்ளார்கள். ஆனால், இது சரியான எழுத்தின் படியான
மொழியாக்கம் ஆகாது. இது தான் சரியான மொழியாக்கம் என்று சொன்னால், இது
இன்னொரு புதிய பிரச்சனையை குர்-ஆனுக்கு கொடுக்கும். ஏனென்றால், யோவான்
ஒரு கணவனாக இருப்பான் என்று அல்லாஹ் சொல்வதாக அமைந்துவிடும். எனவே,
பெரும்பான்மையான மொழியாக்கங்களில், யோவானின் விஷயத்தில் "தலைவர்" என்று
மொழிப்பெயர்த்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றாகத் தெரியும், கணவன் என்று
யோவானின் வசனத்தில் பயன்படுத்தினால், அது மிகப்பெரிய தவறாக இருக்கும்.
யோவான் பற்றிய இதர குர்-ஆன் வசனங்களில் உள்ள பிழைகளை அறிய கீழ்கண்ட
இரண்டு கட்டுரைகளை படிக்கவும்:
• None else was named "John" before John the Baptist?
• Did All Prophets Receive the Same Book?
முடிவுரை (உமர்):
யோவான் பற்றிய அனேக விஷயங்களை நாம் இக்கட்டுரையில் ஆய்வு செய்தோம்.
குர்-ஆனின் அரைகுறையான விளக்கங்கள் அல்லது தீர்க்கதரிசனங்கள் குர்-ஆனின்
நம்பகத்தன்மையை கேள்வி கேட்பதாக இருக்கிறது. இப்போது இக்கட்டுரையில்
முன்வைத்த கேள்விகளைப் பார்ப்போம். முஸ்லிம்கள் இதைப் பற்றி மேலும் ஆய்வு
செய்ய சில புதிய கேள்விகள் இங்கே தரப்படுகின்றன.
அ) யோவான் எப்படி இயேசுவை மெய்ப்படுத்தினார்? [குர்-ஆனில் இதற்கு பதில் இல்லை].
ஆ) ஏன் யோவான் இயேசுவை மெய்ப்படுத்தவேண்டும்? ஒரு நபி இன்னொரு நபியை ஏன்
மெய்ப்படுத்த வேண்டும்? [இதற்கும் குர்-ஆனில் பதில் இல்லை].
இ) ஒரே காலக்கட்டத்தில், ஒரே இன மக்களுக்கு ஏன் இரண்டு தீர்க்கதரிசிகளை
அல்லாஹ் அனுப்பினார்? யோவான் இயேசுவிற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக
பிறக்கிறார், ஏன் இவர் ஆறு மாதங்களுக்கு பிறகு பிறக்கப்போகும் இயேசுவை
மெய்ப்படுத்தவேண்டும்? [இதற்கும் குர்-ஆனில் பதில் இல்லை].
ஈ) இயேசு அல்லாஹ்வின் வார்த்தையென்று யோவானின் பிறப்பு பற்றிய
தீர்க்கதரிசனங்களில் ஏன் அல்லாஹ் குறிப்பிடவேண்டும்? [இதற்கும்
குர்-ஆனில் பதில் இல்லை].
உ) உண்மையாகவே, யோவான் ஒரு தலைவராக இருந்தாரா? [இதற்கும் குர்-ஆனில் பதில் இல்லை].
ஊ) கடைசியாக, ஏன் குர்-ஆன் மொழியாக்கங்கள் செய்தவர்கள், "அல்லாஹ்வின்
வார்த்தை" என்று வரும் இடத்தில், வெவ்வேறு விதமாக மொழியாக்கம்
செய்துள்ளார்கள்? இவர்கள் மறைக்க விரும்பும் விஷயம் என்ன?
மூலம்: http://www.answering-islam.org/Quran/Incoherence/john_confirming.html
________________________________
யோகன் கட்ஜ் கட்டுரைகள்
குர்-ஆன் இதர கட்டுரைகள்
source: http://www.answeringislam.org/tamil/authors/jochenkatz/john_confirming.html
--
Source : http://isakoran.blogspot.in/2015/09/blog-post.html
அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)
September 12, 2015
August 4, 2015
ஏன் கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்?
ஏன் கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்று சொல்லாமல்
தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்?
கேள்விகள் - பதில்கள்
1. முஸ்லீம்கள் இயேசுவின் பெயரை, முகமதுவின் பெயரை மற்ற
தீர்க்கதரிசிகளின் பெயரைச் சொல்லும்போது, "அவர் மீது சாந்தி
உண்டாகட்டும்" என்றுச் சொல்கிறார்கள், ஆனால் ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிச்
சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்?
இக்கேள்விக்கான பதிலை மூன்று வகையாக பிரித்துச் சொல்லலாம்:
ஏன் கிறிஸ்தவர்கள் முகமது பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி
உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.
ஏன் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி
உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.
ஏன் கிறிஸ்தவர்கள் மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரைச் சொல்லும்போது "அவர்
மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.
________________________________
1. ஏன் கிறிஸ்தவர்கள் முகமது பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி
உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.
இதற்கான பதிலை நாம் தெரிந்துக்கொள்வதற்கு முன்பு, கிறிஸ்தவர்களின்
நம்பிக்கை என்ன? பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொள்ளவேண்டும்.
பைபிள் நமக்கு தெளிவாகச் சொல்கிறது. இயேசு தனக்கு பின்பு கள்ள (பொய்
தீர்க்கதரிசிகள்) வருவார்கள் என்று தெளிவாக எச்சரித்துள்ளார்.
1. இயேசுவிற்கு பின்பு நிறைய பேர் தங்களை தீர்க்கதரிசிகள் (நபிகள்) என்று
சொல்லிக்கொண்டு வருவார்கள், அவர்களை நம்பவேண்டாம்.
மத்தேயு 24:24
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி,
கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய
அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
2. கலாத்தியர் 1:8-9 வசனத்தின்படி இயேசு தேவனுடைய குமாரன் இல்லை, அவர்
சிலுவையில் அறையப்படவில்லை, அவர் உயிர்த்தெழவில்லை என்றுச் சொல்கிற (வேறு
ஒரு சுவிசேஷம் (அ) நற்செய்தி கொண்டுவருகிற) எந்த மனிதனானாலும் அல்லது
தேவதூதனானாலும் அவன் சபிக்கப்பட்டவன்.
கலாத்தியர் 1:8-9
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது,
வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப்
பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட
சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப்
பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
முகமதுவிற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கள்ள
நபிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கசொல்லியுள்ளது. இதன்படி கிறிஸ்தவர்கள்
முகமதுவை ஒரு தீர்க்கதரிசி என்று நம்பமுடியாது, நம்பமாட்டர்கள். எனவே
முகமதுவின் பெயரைச் சொல்லும்போது கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி
உண்டாகட்டும்" என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள்
இஸ்லாமியர்கள் எல்லாரையும் நேசிக்கிறார்கள் என்பதை மட்டும் நினைவில்
கொள்ளவேண்டும்.
2. ஏன் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி
உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை.
"அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்பதின் பொருள், நாம் அவரை வாழ்த்தும்
படி தேவனிடம் கேட்பது ஆகும். நாங்கள் இயேசு தான் தேவன் என்று
நம்புகிறோம். இயேசுவிடமிருந்து தான் நமக்கு, சாந்தி சமாதானம், இரட்சிப்பு
எல்லாம் கிடைக்கிறது. அவர் தான் எங்கள் சமாதான கர்த்தர், சர்வவல்லமையுள்ள
தேவன், நித்திய பிதா, ஆதியும் அந்தமுமானவர். இப்படியிருக்க,
கிறிஸ்தவர்கள் எப்படி இயேசுவின் பெயரைச் சொல்லும்போது "அவர் மீது சாந்தி
உண்டாகட்டும்" என்றுச் சொல்லமுடியும்? இப்படிச் சொல்வது எங்கள் அடிப்படை
நம்பிக்கையையே பாதிக்கும்.
இஸ்லாமியர்கள் "அல்லாவின்" பெயரைச் சொல்லும் போது ஏன் "அவர் மீது சாந்தி
உண்டாகட்டும்" என்றுச் சொல்லமாட்டார்களோ, அதே காரணம் தான்
கிறிஸ்தவர்களுக்கும். எனவே இயேசுவின் பெயரைச் சொல்லும் போது
கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச்
சொல்லமாட்டார்கள்.
3. ஏன் கிறிஸ்தவர்கள் மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரைச் சொல்லும்போது "அவர்

மற்ற தீர்க்கதரிசிகளுடைய பெயர்களைச் சொல்லும்பொது இப்படி அவர்கள் மீது
வாழ்த்துதல் சொல்லும்படி பைபிள் எங்களுக்கு கட்டளையிடவில்லை. எனவே
கிறிஸ்தவர்கள் சொல்வதில்லை. மட்டுமில்லை இப்படி சொல்வது சில நேரங்களில்
நமக்கே ஒரு கண்ணியாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. சிலர் தீர்க்கதரிசிகளை
ஆராதிக்கும் நிலைக்கும் வந்துவிடுவார்கள். தீர்க்கதரிசிகளும்
நம்மைப்போன்ற மனிதர்களே. தீர்க்கதரிசிகள் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு ஒரு
பாடமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டுமே ஒழிய அவர்கள் நமக்கு
விக்கிரமாகக்கூடாது அல்லது ஆராதனைக்குரியவர்களாக மாறக்கூடாது.
தமிழ் நாட்டில் உள்ள நாகூர், இன்னும் ஏனைய தர்காக்கள் எல்லாம்
உருவாவதற்கு காரணமே, சில இறைவனடியார்களுக்கு கொடுத்த அதிகபடியான மரியாதை
தான். அவர்கள் மரித்தபின்பு அவர்கள் மீது அதிகமாக அன்பு, மதிப்பு வைத்த
அன்பர்கள் அவர்களுடைய சமாதிக்கு ஒரு கோவில் கட்டி அவர்களிடம் சென்று
முறையிடுகின்றனர். படைத்தவன் தவிர படைப்பு நமக்கு ஒரு வணக்கப்பொருளாகக்
கூடாது.
எனவே தான், கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசிகளின் பெயர்களைச் சொல்லும்போது
"அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்வதில்லை. இதற்காக
கிறிஸ்தவர்கள் இவர்களை மதிக்கவில்லை என்று பொருள் அல்ல. ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும் சபையில் சொல்லப்படும் செய்திகள் பெரும்பான்மையாக,
இத்தீர்க்கதரிகளுடைய வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களாகவே
இருக்கும்.
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
உமரின் இதர தலைப்புக் கட்டுரைகள்
Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/general-topics/pbuh.html
--
http://isakoran.blogspot.in/2015/07/blog-post.html
http://www.answeringislam.org/tamil/newarticles.html
--
Source : http://isakoran.blogspot.in/

2015 கடிதம் 16 – அபூ பக்கரின் ரித்தா போர்கள் – ஜனநாயகமா? (அ) மதவாத அடக்குமுறையா?

[உமருக்கும் அவரது தம்பிக்கும் இடையே நடைப்பெற்ற கடித உரையாடல்களை படிக்க
சொடுக்கவும்: 2015 ரமளான் கடிதங்கள். ரமளான் மாதம் முடிந்து அடுத்த
மாதத்தில் நுழைந்துவிட்டாலும், இக்கடித உரையாடல்கள் தொடர்கின்றன.]
அன்புள்ள அண்ணாவிற்கு,
உங்கள் தம்பி சௌதி அரேபியாவிலிருந்து எழுதிக் கொள்வது.
ரமளான் முடிந்து பல நாட்கள் கடந்துவிட்டது, நானும் கொஞ்சம் பிஸியாகவே
இருந்துவிட்டேன், இன்று உங்களுக்கு மெயில் அனுப்பலாம் என்று நினைத்து
இதனை எழுதுகிறேன்.
உங்களுடைய 14வது கடிதத்தில், எங்கள் முதல் கலிஃபா அபூ பக்கர் அவர்களை
விமர்சித்து எழுதியிருந்தீர்கள். அதற்கு தக்க பதில் கொடுக்கத்தான் இந்த
கடிதத்தை எழுதுகிறேன்.
1. ஒரு ஜனநாயக நாட்டின் அதிபதி எவைகளைச் செய்வாரோ, அதைத் தான் அபூ பக்கர்
அவர்களும் "ரித்தா போர்களில்" செய்தார்கள். உதாரணத்திற்கு, இதனை
கவனியுங்கள். இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் ஒரு
மாநிலத்தின் தலைவர்கள் (முதலமைச்சரும் ஆளுநரும்) ஒன்றாக
சேர்ந்துக்கொண்டு, இனி நாங்கள் மத்திய அரசுக்கு உட்படமாட்டோம், எங்களை
அவர்கள் ஆளக்கூடாது, நாங்கள் வரிகளை செலுத்தமாட்டோம் என்றுச் சொல்லி,
சண்டைக்கும் வந்தால், மத்திய அரசு என்ன செய்யும்?
2. இந்திய அரசு ஜனநாயக ஆட்சி என்பதால், "சண்டையில்லாமல் விட்டுவிடுவோம்"
என்று மத்திய அரசு முடிவு செய்யுமா? அல்லது அந்த மாநிலத்தை மறுபடியும்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தேவையான (இராணுவ) நடவடிக்கை எடுக்குமா?
3. மதினாவில் இஸ்லாமின் மத்திய அரசு இருந்தது, அங்கிருந்து தான் எங்கள்
இறைத்தூதர் அவர்களும் ஆட்சி செய்தார்கள். அவருக்கு பிறகு, அவரது
ஸ்தானத்தில் இருந்து தான் அபூ பக்கர் அவர்களும் ஆட்சி செய்தார்கள்.
இஸ்லாமின் முதல் கலிஃபா செய்தது, ஒரு சதவிகிதம் கூட தவறில்லை.
நான் மேலே சொன்ன எடுத்துக்காட்டுக்கு, உங்கள் பதிலை எழுதுங்கள்.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
உங்கள் தம்பி
சௌதி அரேபியா
தேதி: 1 ஆகஸ்ட் 2015
-----------------------------------------
அபூ பக்கரின் ரித்தா போர்கள் – ஜனநாயகமா? (அ) மதவாத அடக்குமுறையா?
அன்புள்ள தம்பிக்கு,
அண்ணன் உமர் வாழ்த்தி எழுதும் கடிதம்.
ரமளான் முடிந்து பல நாட்கள் கடந்துவிட்டது, இன்னும் தம்பியிடமிருந்து
எந்த ஒரு மெயிலும் வரவில்லையே என்று சிந்தித்துக் கொண்டு இருந்தேன்.
இன்று உன் மெயில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
தம்பி, இவ்வாண்டின் ரமளானை நீ நன்றாக என்ஜாய் செய்திருப்பாய் என்று
நம்புகிறேன். முப்பது நாட்கள் நோன்பு இருந்ததின் விளைவாக, உன் எடை ஓரிரு
கிலோ கூடியிருக்கும் என்று நினைக்கிறேன்! உண்மை தானே! ரமளான்
பண்டிகையன்று உன் நண்பர்களோடு நீ எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எங்களுக்கு
அனுப்பினாயே, அதைப் பார்த்தால், அப்படித் தான் தெரிகின்றது.
சரி, இப்போது நீ கேட்ட கேள்விகளுக்கு வருகிறேன்.
உன் கடிதத்தில் கீழ்கண்ட விவரங்களை நீ கூறியுள்ளாய்:
இஸ்லாமிய ஆட்சி ஒரு ஜனநாயக ஆட்சியாகும்.
அபூ பக்கர் ஒரு ஜனநாயக தலைவரைப் போல ஆட்சி செய்தார்.
ஜனநாயக ஆட்சியிலும் கூட, வரம்புமீறும் மாநிலங்களை எப்படி நடத்தவேண்டுமோ
அப்படித்தான் அபூ பக்கரும் செய்தார்கள்.
நீ இஸ்லாமை புரிந்துக் கொண்டதில் பல தவறுகள் உள்ளது.
1) இஸ்லாமிய ஆட்சி ஜனநாயக ஆட்சியன்று, அது ஒரு சர்வாதிகார ஆட்சியாகும்
தம்பி நீ இஸ்லாமிய ஆட்சியை ஜனநாயக ஆட்சியோடு ஒப்பிட்டாய், இது மிகப்பெரிய
தவறாகும். இந்தியாவின் ஜனநாயக ஆட்சிக்கும், இஸ்லாமின் சர்வாதிகார
ஆட்சிக்கும் சம்மந்தமில்லை.
அப்ரகாம் லிங்கன் சொல்லிய ஒரு கூற்றை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்:
"Democracy is the government of the people, by the people, for the people"
ஜனநாயக அரசு என்பது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களின் அரசாகும்.
இஸ்லாமின் ஆட்சி இப்படிப்பட்ட ஜனநாயக ஆட்சி என்று நீ நினைக்கிறாயா?
இஸ்லாமிய அரசு என்பது அல்லாஹ்விற்காக, அல்லாஹ்வால் நடத்தப்படும்
அல்லாஹ்வின் ஆட்சியாகும்.
முஹம்மது அமைத்த இஸ்லாமிய அரசு சர்வாதிகார ஆட்சியாகும். முஹம்மது எப்படி
இஸ்லாமிய அரசை மதினாவில் அமைத்தார்?
மக்காவில் முஹம்மதுவிற்கு தொல்லைகள் பெருகியபோது, மதினாவிலிருந்த ஒரு
இனக்குழுவினர் இவருக்கு உதவி செய்வதாக உடன்படிக்கை செய்தனர்.
இதனால் இவர் உயிர் தப்பி மதினாவிற்கு ஓடிப்போனார்.
மதினாவில் ஒரு இனக்குழுவோடு இவரும் ஒன்று சேர்ந்தார்.
மக்காவின் வியாபாரிகள் மீது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டார், மக்களைக்
கொன்று, செல்வங்களை கொள்ளையிட்டார். இந்த செயல்களுக்கு அல்லாஹ்வின்
அங்கீகாரம் உள்ளதென்று காட்டினார். மக்காவினர் உங்களை உங்கள்
வீடுகளிலிருந்து துரத்தினார்கள், அதற்காக நீங்கள் இப்போது அவர்களை
கொள்ளையிடுங்கள் என்பது தான் அந்த அங்கீகாரம்.
மதினாவைச் சுற்றியுள்ள இதர இனக்குழுக்கள் மற்றும் யூதர்கள் இவரை
இறைத்தூதர் என்று ஏற்கவேண்டுமென்று விரும்பினார், எதிர்த்தவர்களோடும்,
இவரை விமர்சித்தவர்களோடும் சண்டையிட்டு அவர்களின் ஊர்களை கைப்பற்றினார்.
மதினாவைச் சுற்றியுள்ள இதர குழுக்கள் இவரது ஆள்பலத்தைக் கண்டு,
சண்டையில்லாமல் இஸ்லாமை ஏற்க முன்வந்தனர், சிலர் சண்டையிட்டு, தோல்வி
அடைந்து இஸ்லாமின் ஆட்சிக்குள் வந்தனர்.
கடைசியாக, பெரும்படையுடன் சென்று மக்காவையும் கைப்பற்றினார்.
இது மட்டுமல்ல, இவராகவே இதர நாடுகளுக்கு இஸ்லாமை ஏற்கவேண்டுமென்று கடிதம்
எழுதினார். மறுத்தால் தன் இராணுவம் அவர்களின் மண்ணில் இரத்தம்
சிந்துவதற்கு தயாராக இருக்கிறது என்றும் அதட்டினார். சிலர் ஏற்றனர்,
சிலர் எதிர்த்து சண்டையிட்டு தோல்வி அடைந்தனர், இஸ்லாம் அவர்கள் நாடுகளை
பிடித்தது.
இப்படி அமைக்கப்பட்டது தான் இஸ்லாமிய அரசு, இதனையா நீ ஜனநாயகம் என்று
கூறுவாய்? அரேபிய தீபகர்ப்பத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் ஒன்று
கூட்டி, ஓட்டு போடவைத்தா உங்கள் இறைத்தூதர் ஜனாதிபதியானார்?
முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, ஆட்சியில் அமர்ந்தவர் தான் அபூ பக்கர்.
இவரென்ன ஜனநாயக ஆட்சியா புரியப்போகிறார்? தலைவர் சென்ற வழி இவருக்கு
தெரியாதா என்ன? அன்றும் சரி, இன்றும் சரி, ஜனநாயகத்துக்கும்
இஸ்லாமுக்கும் சம்மந்தமில்லை. சில இஸ்லாமியர்களின் கருத்துப்படி, ஜனநாயக
ஆட்சி முறை என்பது இஸ்லாமுக்கு எதிரானதாகும். இஸ்லாம் விரும்புவது
கலிஃபாவின் ஆட்சியின் கீழ் அனைத்து நாடுகளும் வரவேண்டுமென்பது, அதற்காக
இரத்தம் சிந்தவும் இஸ்லாம் அனுமதிக்கிறது.
2) அபூ பக்கரின் – ஆக்கிரமிப்பு யுக்தி
"முஹம்மது மரித்துவிட்டார், அவரோடு செய்திருந்த உடன்படிக்கை இதோடு
முடிவிற்கு வந்துவிட்டது, இனி நாங்கள் மதினாவிற்கு அடிமைகளல்ல" என்று
மதினாவை சுற்றியுள்ள இனக்குழுக்கள் எண்ணினர். முஹம்மது மரித்ததால்,
இஸ்லாமின் பலம் குன்றிவிட்டது என்று எண்ணினர். முஹம்மதுவைப் போல
நாங்களும் தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக்கொண்டும் சிலர் எழும்பினர்.
தேவைப்பட்டால் மதினாவோடு சண்டையிட தயார் என்று சில குழுக்கள் எண்ணினர்,
சிலர் அதற்கு தயாராகிக் கொண்டும் இருந்தனர்.
முஹம்மது செய்ததும் இதைத் தானே! முஹம்மது இனக்குழுக்கள் மீது கடந்த
காலத்தில் செய்ததை, இன்று இவர்கள் இஸ்லாமுக்கு செய்ய ஆரம்பித்தார்கள்.
பதிலுக்கு பதில், பழிக்கு பழி. [முஹம்மது மற்றவர்களின் கழுத்துக்களை
வெட்டினார், இதே நிலை தன் அன்பான பேரனுக்கும் நடந்தது, அதுவும்
முஸ்லிம்களாலேயே நடந்தது. முஹம்மது புளிப்பு காய்களை சாப்பிட்டார்,
இவரின் குடும்ப நபர்களின் பற்கள் கூசியது. முஹம்மது விதைத்த இஸ்லாமிய
விதை, அவரது பேரனின் காலத்தில் கனி கொடுத்தது, அவ்வளவு ஏன் இன்றும்
உலகத்தில் கனிகளை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இதைப் பற்றி அடுத்தடுத்த
கடிதங்களின் நான் உனக்கு விளக்குவேன்.]
பலவீனமான நாடுகள் மற்றும் இனக்குழுக்கள் மீது தாக்குதல் செய்து, அவர்கள்
மண்ணை கவ்விக்கொண்டால், இது எதிர்காலத்தில் வெடிக்கவிருக்கும் ஒரு
புரட்சியின் விதை என்பதை முஹம்மதுவும், அல்லாஹ்வும் ஏன் அறியவில்லை?
உலக வரலாற்றில் வெடித்த பெரும்பான்மையான புரட்சிகளுக்கு ஆணிவேர்,
சர்வாதிகாரமும், அடக்குமுறையும் தான் காரணம் என்பதை நீ அறியமாட்டாயா
தம்பி?
இன்றுள்ள முஸ்லிம்கள் அமைதி மார்க்கம் என்று கருதும் இஸ்லாமை அன்று அபூ
பக்கர் பின்பற்றுபவராக இருந்திருந்தால், உமரின் அறிவுரைப்படி
செய்திருக்கவேண்டாமா?
வலிய சண்டைக்கு வருபவரிடம் சண்டையிடலாம், தவறு இல்லை. ஆனால், நாங்கள்
முஸ்லிம்களாக இருந்துவிடுகிறோம், எங்கள் நாட்டை நாங்கள்
ஆண்டுக்கொள்கிறோம், உங்களுக்கு இனி ஸகாத்தை கொடுக்கமாட்டோம் எங்களை
அமைதியாக வாழவிட்டுவிடுங்கள் என்றுச் சொல்கின்ற இனக்குழுக்களோடு ஏன்
சண்டையிடவேண்டும்? அவர்களும் முஸ்லிம்கள் தானே என்று உமர் அறிவுரை
கூறினார். அபூ பக்கர் இந்த அறிவுரையை கேட்கவில்லை, ஏனென்றால், அபூ
பக்கருக்கு இஸ்லாமின் அடிப்படை நன்றாகவே தெரியும்.
அபூ பக்கர் எப்படி ஒரு இனக்குழுவோடு சண்டையிடவேண்டும் என்று தம் இராணுவ
தளபதிகளுக்கு கட்டளையிட்டார் என்பதை பார், தம்பி:
அ) சண்டையிடவேண்டிய இனக்குழு இருக்கும் ஊருக்கு வெளிவே செல்லுங்கள்.
ஆ) நீங்கள் தொழுவதற்கு அழைப்பு விடுக்கும் அதான் (அஜான்/பாங்கு) கொடுங்கள்.
இ) அந்த இனக்குழுவிடமிருந்து "பதில் பாங்கு" வருமானால், அவர்களை
தாக்காதீர்கள். அவர்களிடம் சென்று, நீங்கள் இஸ்லாமிய ஆட்சிக்குள்
இருப்பீர்களா? ஸகாத் கொடுப்பீர்களா? என்று கேளுங்கள். அவர்கள் "ஆம்"
என்று இரண்டிற்கும் ஒப்புக்கொண்டால், அவர்களை தாக்காதீர்கள்.
ஈ) இஸ்லாமிய ஆட்சிக்கு உட்படுகிறோம், ஸகாத் கொடுக்கிறோம் என்று
சொல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தாதீர்கள்.
உ) யார் உங்கள் "பாங்கு" சத்தத்திற்கு பதில் "பாங்கு" சொல்லவில்லையோ,
ஒருவேளை "பதில் பாங்கு" கொடுத்துவிட்டு, ஸகாத் கொடுக்க மறுப்பார்களோ,
அவர்களிடம் சண்டையிடுங்கள்.
ஊ) இஸ்லாமை விட்டுவெளியேறி முஸ்லிம்களை கொன்ற அனைவரும்
கொல்லப்படவேண்டும். (https://en.wikipedia.org/wiki/Ridda_wars)
"மார்க்கத்தில் கட்டாயமில்லை" என்ற வசனம் எங்கே போய்விட்டது?
மேற்கண்ட விதமாக சண்டைக்கு செல்லும் படி அபூ பக்கர் கட்டளையிட்டார்.
இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், "முஸ்லிமாக
இருக்கிறோம்" என்று சொன்னாலும் விடக்கூடாது, அவர்கள் ஸகாத்
கொடுக்கிறார்களா? என்று கேட்கவேண்டும், கொடுப்போம் என்று சொன்னால்
சண்டையில்லை, "கொடுக்க மாட்டோம்" என்று சொன்னால், "சண்டையிடவேண்டும்,
இஸ்லாமிய வாளால் அவர்களுக்கு பதில் கொடுக்கவேண்டும்".
ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் கொல்லும் காட்டுமிராண்டித் தனம் தான் இது.
• நீ அல்லாஹ்வை மட்டுமே நம்பினாலும் போதாது,
• நீ முஹம்மதுவை இறைத்தூதர் என்று நம்பினாலும் போதாது,
• நீ ஐந்து வேளை தொழுதாலும் போதாது,
• நீ நோன்பு இருந்தாலும் போதாது,
• நீ ஹஜ் செய்தாலும் போதாது, உன்னோடு இஸ்லாம் சண்டையிடும்.
• நீ இஸ்லாமிய ஆட்சிக்கு கீழ்படிந்து, "ஸகாத்" கொடுத்தால் தான் உன் உயிர்
தப்பும், இல்லையேல் இஸ்லாமிய வாள் உன் கழுத்தை அறுக்கும்.
தம்பி, மார்க்கத்தில் கட்டாயமில்லை (2:256) என்ற குர்-ஆன் வசனம் எங்கே?
இவ்வசனம் குர்-ஆனில் இருப்பது அபூ பக்கருக்கு தெரியாதா?
தலைவர் எவ்வழியோ தொண்டர் அவ்வழி:
முஹம்மது எவ்வழியோ அபூ பக்கரும் அவ்வழி தான். மேற்கண்ட முறையில் போர்
புரிவது என்பது அபூ பக்கருக்கு புதிதல்ல. முஹம்மதுவும் இப்படித்தான்
செய்திருக்கிறார். ஒரு ஊரை தாக்குவதற்கு முன்பாக, இராத்திரியில்
அவ்வூருக்கு முன்பாக தங்குவது, அதிகாலையில் அங்கிருந்து இஸ்லாமிய
தொழுகையின் அழைப்பு (பாங்கு) வருகிறதா என்று பார்ப்பது, பாங்குச் சத்தம்
வந்தால் சண்டையில்லை. அவ்வூரிலிருந்து பாங்கு சத்தம் வரவில்லையானால்,
அவர்களின் உடல்கள் பங்கு பங்காக வெட்டப்படும் மேலும் அவர்களின்
பெண்களும், பிள்ளைகளும் முஸ்லிம் ஜிஹாதிகளுக்கு பங்காக கொடுக்கப்படும்.
இதே வழியை கொஞ்சம் மாற்றி அபூ பக்கர் பின்பற்றினார். முஹம்மது
இருந்திருந்தாலும் இதையே செய்திருப்பார்.
புகாரி ஹதீஸ்கள் (2943 & 610)
2943. அனஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார் மீது படையெடுத்துச் சென்றால்
காலை நேரம் வரும் வரை தாக்குதல் நடத்த மாட்டார்கள். (அந்த மக்களிடையே
தொழுகை அழைப்பான) பாங்கின் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்த
மாட்டார்கள். பாங்கின் ஓசையைக் கேட்காவிட்டால் காலை நேரம் வந்த பின்
தாக்குதல் நடத்துவார்கள். கைபரில் நாங்கள் இரவு நேரத்தில் சென்று
தங்கினோம். Volume :3 Book :56
610. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால்
களத்தில் ஸுபுஹ் நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள்.
ஸுபுஹ் நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து பாங்கு
சொல்லும் சப்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த்
தாக்குதல் நடத்துவதும் நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது.
இந்நிலையில் நாங்கள் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் அந்த
இடத்தைச் சென்றடைந்தோம். ஸுபுஹ் நேரம் வந்ததும்பாங்கு சப்தம் கேட்காததால்
நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறினார்கள். நான் அபூ தல்ஹாவுக்குப்
பின்னால் அவரின் வாகனத்தில் ஏறிக் கொண்டேன். என்னுடைய பாதம் நபி(ஸல்)
அவர்களின் பாதத்தில் (அடிக்கடி) படும் (அளவுக்கு நெருக்கமாகச் சென்றோம்),
அப்போது கைபர் வாசிகள் தங்களின் மண் வெட்டிகளையும் தானியம் அளக்கும்
(மரக்கால் போன்ற) அளவைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து
கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் (கிலியுடன்)
'அல்லாஹ்வின் மீது ஆணையாக அதோ முஹம்மத்! அவரின் படை!' என்றனர். நபி(ஸல்)
அவர்கள், அம்மக்களைக் கண்டதும் 'அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கைபர்
வீழ்ந்தது! நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால், அவர்களின் காலைப்போது
கெட்டதாயிருக்கும்" என்றார்கள். Volume :1 Book :10
முஸ்லிம் ஹதீஸ் எண்: 626
626. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போர்க் காலத்தில்) ஃபஜ்ர் நேரம்
ஆரம்பிக்கும்போது போர் தொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.(போரை
ஆரம்பிக்கு முன்) ஃபஜ்ர் தொழுகையின் அறிவிப்பு சப்தத்தை எதிர்பார்ததுக்
கொண்டிருப்பார்கள். அப்படி தொழுகை அறிவிப்பு சப்தத்தைக் கேட்டால் போரை
நிறுத்திவிடுவார்கள். இல்லையென்றால் தாக்குவார்கள்.
(ஒரு முறை) ஒரு மனிதர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லக்
கேட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீ இயற்கையில்
(இஸ்லாத்தில்) இருக்கிறாய் என்று சொன்னார்கள். பின்பு அவர், அஷ்ஹது
அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீ நரகத்திலிருந்து (விடுதலை
பெற்று) வெளியேறி விட்டாய் என்று சொன்னார்கள். நபித்தோழர்கள் அவர்
யாரென்று பார்த்தபோது அவர் வெள்ளாடுகளை மேய்க்கும் ஓர் இடையர் என்று
தெரிந்தது.Book :4
3) இந்திய மாநில அரசுகளும், மதினாவின் பழக்குடி இன குழுக்களும்
தம்பி, இஸ்லாமின் நியாயமற்ற தாக்குதல்களை மறைப்பதற்கு, நீ இந்திய ஜனநாயக
முறையை உதாரணம் காட்டினாய். இது மிகப்பெரிய மோசடியாகும்.
ஜனநாயக ஆட்சி முறையில் இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இருக்கின்றன, நீ
சொல்வது போல நடக்காது, ஒருவேளை ஏதாவது ஒரு மாநிலம் தனி நாடாக
இருக்கவிரும்பினால், மதத்தின் அடிப்படையில் மத்திய அரசு அவர்களோடு
செயல்படாது. எனவே, உன் ஒப்பிடுதல் தவறானதாகும்.
ஆனால், முஹம்மதுவின் ஆட்சி, பயமுறுத்தல்கள் மற்றும் மதத்தின்
அடிப்படையில் அமைக்கப்பட்டது, அபூ பக்கரின் ரித்தா போர்கள் என்று
அழைக்கப்படும் "இஸ்லாமை விட்டு வெளியேறியவர்களுடன் நடந்த போர்கள்"
மதத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது.
தற்காலக் கட்டத்தில் ஒரு இஸ்லாமிய கலிஃபா உருவாகிவிட்டால், அவனும் அபூ
பக்கர் செய்தது போலவே செய்வான். பாகிஸ்தானிடமும், சௌதி அரேபியாவிடமும்
மற்றும் இதர இஸ்லாமிய நாடுகளிடமும், என் தலைமையை ஏற்றுக்கொண்டு, என்
அரசுக்கு ஸகாத் கொடுப்பாயா இல்லையா என்று கேட்பான். இஸ்லாமிய நாடுகள்
என்ன தான் சாக்குபோக்கு சொன்னாலும், தலை தப்பாது, உடனே சண்டை தான்
நடக்கும். எங்கள் நாட்டில் தான் மக்கா மதினா இருக்கிறது, நாங்கள்
ஒசத்தியாக்கும் என்று சௌதி அரேபியா சொன்னாலும் சரி, எனக்கு ஸகாத்
கொடுத்தால் சண்டையில்லை, மறுத்தால், சண்டை தான் என்று கலிஃபா சொல்வான்.
அப்போது தான் எல்லா நாடுகளுக்கும் இஸ்லாமின் உண்மை முகம் தெரியும்.
இப்போது நான் சொன்ன இவ்வார்த்தைகளை நீ எழுதி வைத்துக் கொள், இது தான்
இஸ்லாமிய கலிஃபாவால் நடக்கவிருக்கும் எதிர்கால நிகழ்வுகள். இதனைச் சொல்ல
ஒரு தீர்க்கதரிசி வரத்தேவையில்லை, இஸ்லாமை சரியாக புரிந்துக்கொள்பவர்கள்
இதனை அறிவார்கள். இதனை நோக்கியே ஐஎஸ் என்ற தீவிரவாத குழு முன்னேறிச்
சென்றுக்கொண்டு இருக்கிறது. தம்பி, நீ ஒரு முஸ்லிம் நாட்டில்
இருப்பதினாலோ, ஒரு முஸ்லிமாக மாறியிருப்பதினாலோ, அல்லது மக்கா என்ற புனித
பூமியுள்ள நாட்டில் இருப்பதினாலோ இஸ்லாமிய கலிஃபாவிடமிருந்து தப்பித்துக்
கொள்ளலாம் என்று கனவு காணாதே. காபாவில் ஒளிந்துக் கொண்டாலும் கலிஃபாவின்
ஆட்கள் காபாவிற்குள்ளேயே வெட்டுவார்கள், இதனை மனதில் வை.
வலிய போருக்கு வருபவர்களிடம் அபூ பக்கர் சண்டையிடுவது தவறில்லை, ஆனால்,
முஸ்லிமாகவில்லை என்றுச் சொல்லி, ஸகாத் கொடுக்கவில்லை என்றுச் சொல்லி
போரிடுவது சர்வாதிகாரமாகும், மத அடக்குமுறையாகும்.
இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமென்று கூப்பாடு போடும் முஸ்லிம்கள் இஸ்லாமின்
ஆரம்ப கால சரித்திரத்தை முழுவதுமாக படிக்கவேண்டும். முஸ்லிம் கலிஃபாக்கள்
செய்தது போலவே இதர மார்க்க தலைவர்கள் செய்தால், இதனையும் முஸ்லிம்கள்
அங்கீகரிப்பார்களா?
பலமுள்ளவர்கள் பலவீனமாவர்கள் மீது தொடுக்கும் போர் தான் காலாகாலமாக
நடந்துவருகிறது. முஹம்மது மக்காவில் இருக்கும்போது பூனையைப் போல அடங்கி
நடந்துக்கொண்டார், அதற்கு ஏற்றாற்போல வசனங்களையும் அல்லாஹ் இறக்கினார்.
ஆனால், ஆள்பலம் கூடி முஹம்மது பலமுள்ளவராக மாறிய போது வலியச் சென்று
சண்டையிட்டார் இது நியாயமானது என்று கருதினால், இதே போல மற்றவர்கள் ஏன்
செய்யமாட்டார்கள்? முஹம்மதுவிற்கு ஒரு நியாயம், இதர மக்களுக்கு ஒரு
நியாயமா? தம்பி.
இதுமட்டுமல்ல, அபூ பக்கர் செய்த இன்னொரு தவறு என்ன தெரியுமா? இதர நாடுகள்
மீது வலியச் சென்று போர் செய்தார். யார் இவருக்கு போர் செய்யச்
சொன்னார்கள்? இதைப் பற்றி அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.
தம்பி, நீ கொஞ்சம் நியாயமாக சிந்தித்துப் பார்.
இப்படிக்கு
உன் தம்பி
உமர்
தேதி: 1 ஆகஸ்ட் 2015
________________________________
இதர ரமளான் கடிதங்கள்
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answeringislam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day16.html
http://isakoran.blogspot.in/2015/08/2015-16.html

Subscribe to:
Posts (Atom)