அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 5, 2011

Answering PJ: பீஜே அவர்களின் “இது தான் பைபிள்” புத்தகத்திற்கு மறுப்பு - 1

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - 1

திரு பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் "இது தான் பைபிள்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்கள். இந்த புத்தகத்தில் அவர் பைபிளை தாக்கி அனேக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்கள். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை நாம் தொடர் கட்டுரைகளாக காணப்போகிறோம். இவர், "இயேசு இறைமகனா?" என்ற இன்னொரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். அதற்கு சில பதில்களை நாம் அளித்துள்ளோம், ஆனால், அவைகளுக்கு அவர் மறுப்போ அல்லது பதிலோ அளிக்கவில்லை.

குறைந்த பட்சம் இந்த "இது தான் பைபிள்" என்ற புத்தகத்திற்கு தமிழ் கிறிஸ்தவர்கள் அளிக்கும் பதில்களுக்காகவது அவர் மறுப்பு எழுதுவார் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். இந்த தொடர் பதில்கள் கிறிஸ்தவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் உண்மை என்ன என்பது விளங்க ஆரம்பிக்கும். என்னிடமுள்ள பதிப்பு, "இது தான் பைபிள்" ஒன்பதாம் பதிப்பாகும், இது ஜனவரி 2010ல் வெளியானது.

நூலின் பெயர்: இது தான் பைபிள்

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

பதிப்பு: ஒன்பதாம் பதிப்பு, ஜனவரி 2010

வெளியீடு: நபிலா பதிப்பகம்.


பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - பாகம் 1

இந்த கட்டுரையில் பீஜே அவர்கள் தங்கள் புத்தகத்தின் "முன்னுரை"யில் எழுதிய விவரங்களை பார்ப்போம்.

பீஜே அவர்கள் எழுதியது:

முன்னுரை


அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்...

அன்புக் கிறித்தவ நண்பர்களே! புத்தகத்தின் தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும். உங்களை ஆச்சரியப்படுத்துவதோ புன்படுத்துவதோ என் நோகக்ம் அன்று. (பக்கம் 2-3)

கிறிஸ்தவன் (உம‌ர்) எழுதியது:

முந்தினவரும் பிந்தினவருமாகிய கர்த்தரின் ஈடு இணையற்ற பெயரில் உங்களுக்கும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் என் வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பீஜே அவர்களே, உங்களின் இந்த புத்தகத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படவில்லை. தமிழ் கிறிஸ்தவர்களின் சமீப கால முன்னேற்றம் மற்றும் தமிழ் எழுத்து உலகில் கிறிஸ்தவர்கள் காட்டும் ஆர்வம், தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் புத்தகத்திற்கு நாங்கள் எழுதும் மறுப்புக்கள் உங்களை ஆச்சரியப்பட வைப்பதற்கோ அல்லது புண்படுத்துவதற்கோ அல்ல, மாறாக, உங்கள் கண்கள் தெளிவாக்கப்படவேண்டும் என்றும், அதே நேரத்தில் உங்களைப் போன்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ, பைபிள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை கேட்டு எந்த வகையில் உங்களுக்கு பதில்களைத் தரலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துவதற்குமே இந்த மறுப்புக்கள் எழுதப்படுகின்றன. ஆக, தமிழ் பேசும் முஸ்லிம்களை புண்படுத்துவது எங்கள் நோக்கமன்று, இதனை நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பீஜே அவர்கள் எழுதியது:

பல விஷயங்களில் உங்களுக்கும் முஸ்லிம்களாகிய எங்களுக்குமிடையே நல்லிணக்கமும் ஒத்த கருத்தும் இருக்கின்ற உரிமையில் உண்மையை உங்களுக்கு உரைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு நோக்கம் ஏதும் எனக்கில்லை.

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, சரியாகச் சொன்னீர்கள்.

முஸ்லிம்கள் மற்றும் உங்களைப் போல உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மறுப்புக்களை எழுதுகின்றோம். இந்த மறுப்புக்கள் எழுதும் வேளையில், தேவையான இடத்தில் குர்‍ஆன் பற்றிய கேள்விகளும், சந்தேகங்களும் மற்றும் விவரங்களையும் நாங்கள் குறிப்பிடுவோம். நீங்களும் உண்மையை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இப்படி எழுதுகிறோம். இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை.

பீஜே அவர்கள் எழுதியது:

பரலோக ராஜ்ஜியத்தில் கர்த்தரின் முன்னிலையில் நீங்களும் முஸ்லிம்களாகிய நாங்களும் விசாரிக்கப்பட இருக்கின்றோம். இந்த உலகில் நமது நம்பிக்கையும் நடத்தையும் சரியானதாக அமைந்தால் தான் அந்த விசாரணையில் தப்பிக்க முடியும். இதை நன்றாக நீங்கள் அறிவீர்கள்.

கிறிஸ்தவன் எழுதியது:

ஆம் பீஜே அவர்களே. கர்த்தரின் முன்னிலையில் (அல்லாஹ்வின் முன்னிலையில் அல்ல) நாம் அனைவரும் அந்நாளில் நிற்போம். நம்முடைய இவ்வுலக நம்பிக்கை (விசுவாசம்) மற்றும் நடத்தைகள் மீது ஆதாரப்பட்டு அந்நாளின் நியாயந்தீர்ப்பு இருக்கும்.

அந்த நாளின் நியாயத்தீர்ப்பில் நாம் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கை கிறிஸ்தவர்களுக்கு உண்டு (இதனை கிறிஸ்தவர்கள் வழக்கப்படி „இரட்சிப்பின் நிச்சயம்" என்றுச் சொல்வார்கள்). அந்த நம்பிக்கை எங்களுக்கு திடமாக உள்ளது. நாம் மரித்த பிறகு நமக்கு மோட்சத்தை கொடுப்பது அல்லது மறுப்பது அந்த இறைவனின் அப்போதைய விருப்பம் போன்ற கோட்பாடு எங்களுக்கு இல்லை. இந்த உலகிலேயே எங்களுக்கு 100% இரட்சிப்பின் நிச்சயம் உண்டு. இதனால் தான் நாங்கள் உங்களுக்கு மறுப்பை எழுதிக்கொண்டு இருக்கிறோம், வாழ் நாள் எல்லாம் பயத்தோடும், அல்லாஹ் எனக்கு சொர்க்கம் அளிப்பானா இல்லையா? என்ற சந்தேகத்தோடும் வாழாமல் இருக்கும்படியான ஒரு வழியை இயேசு திறந்து வைத்துச் சென்றுள்ளார். அந்த இடுக்கமான வாசல் வழியாக செல்ல உங்களுக்கு விருப்பமா?

பீஜே அவர்கள் எழுதியது:

உங்களது வேதம், உங்களின் நம்பிக்கை, பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உதவுவதாக இல்லை. உங்கள் மதகுருமார்கள் உங்களைத் தறவறான வழியில் இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மையை பைபிளின் துணையுடன் இந்நூலில் நிறுவியுளளோம்.

கிறிஸ்தவன் எழுதியது:

உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த இஸ்லாமிய அறிஞருக்கும் இஸ்லாமியர்களுக்கும் நாங்கள் இஸ்லாம் பற்றி தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் அனேகம் உண்டு, அதே நேரத்தில் பைபிள் பற்றியும் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டிய விஷயங்களும் உண்டு. நித்திய ஜீவனை அடைய உலக மக்களுக்கு பைபிள் போதும், குர்‍ஆன் அதற்கு உதவாது என்பதை இந்த உங்களின் புத்தகத்திற்கு நாங்கள் மறுப்பை கொடுத்துக் கொண்டு இருக்கும்போதே அனேக இஸ்லாமியர்கள் அறிந்துக்கொள்வார்கள். எங்கள் நம்பிக்கை மற்றும் எங்கள் பரிசுத்த வேதம் எங்களை பரலோக இராஜ்ஜியத்தில் வெற்றியடையச் செய்யும், இதில் அணு அளவேனும் சந்தேகமில்லை.

பீஜே அவர்களே உங்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் கொண்டுள்ள அன்பினிமித்தம் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், "உங்கள் குர்‍ஆனும், உங்கள் முஹம்மது மீது நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையும் கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாளில் உங்களை வெற்றியடையச் செய்யாது, உங்களுக்கு சொர்க்கத்தை அளிக்காது என்பதை மிகவும் தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்".

எங்கள் மத குருமார்கள் எங்களை தவறான வழியில் இழுத்துச் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளீர்கள். இது முழுக்க் முழுக்க மிகப் பெரிய பொய்யாகும். பைபிள் என்பது உலகத்தை படைத்த இறைவனால் எங்களுடைய வழிகாட்டுதலுக்காக கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷமாகும். இது மட்டுமல்ல, எங்களை வழி கெடுக்க எந்த ஒரு மத குருவாலும் முடியாது ஏனென்றால், நாங்கள் எங்கள் வேதத்தை எங்கள் தாய் மொழியில் படிக்கிறோம். உங்களைப் போன்று குர்‍ஆனை அரபியில் படித்தால் தான் நன்மை என்ற "தவறான" கோட்பாடு கிறிஸ்தவத்தில் இல்லை. எந்த ஒரு கிறிஸ்தவ சபையிலாவது "நீங்கள் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் பைபிளை படித்தால் தான், நன்மை" என்று எந்த ஒரு போதகரும் சொல்வதில்லை, இப்படிச் சொன்னால் அது முட்டாள் தனம். இப்படிபட்ட ஒரு கோட்பாட்டை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்.

குர்‍ஆன் இறைவனால் கொடுக்கப்பட்ட வேதமல்ல, முஹம்மது ஒரு தீர்க்கதரிசி அல்ல என்ற உண்மையை நாங்கள் சில ஆண்டுகளாக ஆதாரங்களோடு எழுதி வருகிறோம். அதே வரிசையில் உங்கள் இந்த புத்தகத்திற்கு நாங்கள் தரவிருக்கும் மறுப்புகள் "உண்மை எது பொய் எது" என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள வழி வகுக்கும். எனவே, நீங்கள் சொன்ன அதே பைபிளைக் கொண்டு "நீங்கள் சொல்வது பொய், உங்கள் குற்றச்சாட்டுக்கள் பொய்" என்பதை நாங்கள் நிருபிக்கப்போகிறோம், மட்டுமல்ல, குர்‍ஆன் ஒரு வேதமல்ல என்பதும் இதன் மூலம் தெளிவாக விளங்கும்.

பீஜே அவர்கள் எழுதியது:

எழுதியவன் யார்? என்பதைப் புறக்கணித்துவிட்டுக் காலம் காலமாக உங்கள் மதகுருமார்கள் கர்த்தரின் போதனைக்கு முரணாக உங்களுக்குப் போதித்தவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, மதகுருமார்கள் மீதுள்ள அளவு கடந்த மரியாதையை ஒதுக்கிவிட்டு நான் இந்நூலில் எடுத்து வைத்திருக்கின்ற வாதங்களையும் அதில் உள்ள நியாயங்களையும் நடுநிலையோடு, திறந்த மனதுடன் நீங்கள் சிந்தித்தால் நாங்கள் வந்த முடிவை நோக்கி நீங்களும் நிச்சயம் வருவீர்கள்.

கிறிஸ்தவன் எழுதியது:

உண்மையை அறிந்துக்கொள்ள விரும்புகிறவர்கள், "யார் எழுதினான்? அவன் முகவரி என்ன? அவன் பெயர் என்ன?" போன்ற விவரங்களை கேட்காமல், "அவன் சொன்னதில் உண்மை உண்டா? அவன் ஆதாரங்களை முன்வைக்கின்றானா?" போன்ற கேள்விகளை கேட்டு ஆராய்ந்தால் சத்தியம் எது அசத்தியம் எது என்பது விளங்கும். ஆனால், இன்றைய தமிழ் இஸ்லாமியர்களின் நிலை எப்படி உள்ளது என்றால் (பீஜே அவர்களே உங்கள் நிலையும் கூட), 'பெயரைச் சொன்னால் மட்டுமே, முகவரியை கொடுத்தால் மட்டுமே நாங்கள் நம்புவோம். அவன் எழுதியதில் உண்மை இருந்தாலும், ஆதாரங்கள் இருந்தாலும் அதனை நாங்கள் பார்க்கமாட்டோம் படிக்கமாட்டோம்' என்ற நிலைக்கு இஸ்லாமியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பீஜே அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், "கர்த்தரின் போதனைக்கு முரணாக எங்கள் மதகுருக்கள் போதிக்கவில்லை, ஆனால், அதே கர்த்தரின் போதனைக்கு விரோதமாகவும், முரணாகவும், போதித்தவர் உங்கள் முஹம்மதுவும், அவரது அடிச்சுவடியில் நடந்துக்கொண்டு இருக்கும் உங்களைப்போல இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களுமேயாவார்கள்".

இன்று கிறிஸ்தவர்கள் செய்யவேண்டிய ஒரு முக்கியமான காரியம் என்னவென்றால், "உங்களைப் போல இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் தூக்கி எறிய வேண்டும், மத நல்லிணக்கனம் என்ற போர்வையில், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற போர்வையில் விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் குடிக்கும் பாலில் (மக்களின் மனதில்) கலக்கும் இஸ்லாமிய போதனையை கிறிஸ்தவர்கள் தூக்கி எறிய வேண்டும்".

எங்களுக்கு எங்கள் கிறிஸ்தவ ஊழியர்கள் மீது இருக்கும் அந்த அளவு கடந்த மரியாதை என்பது, அவர் எந்த அளவு பைபிளுக்கு சார்ந்து போதிக்கிறார் என்பதை பொறுத்து இருக்கும். எந்த ஒரு கிறிஸ்தவ போதகராவது, பைபிளுக்கு எதிராக எதையாவது போதித்தால் நாங்கள் அவரை ஒதுக்கிவிடுவோம், எங்களை யாரும் கட்டுப்படுத்தமுடியாது, நாங்கள் சுதந்திர பறவைகள். நீங்கள் உங்கள் முஹம்மது மீது வைத்திருக்கும் அளவு கடந்த மரியாதை எங்களுக்கு இல்லை. தவறு செய்தால் நீ நபியாக இருந்தாலும் சரி தவறு தவறு தான் , அதே நேரத்தில் நன்மை செய்து, கர்த்தருக்கு ஊழியம் செய்தால், "கர்த்தரின் ஊழியர்" என்ற மரியாதை நிச்சயம் உண்டு. (இந்த மரியாதை பட்டியலில், மக்களை ஏமாற்றும் ஊழியர், கொல்லையடிக்கும் ஊழியர் வரமாட்டார்).

ஆக, பீஜே அவர்களே, எங்கள் கிறிஸ்தவ ஊழியர்கள் மீது நீங்கள் சுமத்தும் இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் சவாலை நான் ஏற்கிறேன், உங்கள் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலை அல்லது மறுப்பை தருகிறேன். பீஜே அவர்களே, உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்கள் எடுத்த முடிவு மீது உங்களுக்கு முழு நிச்சயம் இருந்தால், நான் எழுதப்போகும் பதில்களை படியுங்கள், ஆதாரங்களை சரிபாருங்கள், என் வரிகள் பற்றிய உங்கள் மறுப்பை எழுதுங்கள், எங்கள் ஆதாரங்களையும், உங்கள் ஆதாரங்களையும் மக்கள் படிக்கும்படி மக்களின் முன்னிலையில்கொண்டு வாருங்கள். இப்படி நீங்கள் செய்தால், நிச்சயமாக எங்கள் முடிவிற்கு நீங்கள் வருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

பீஜே அவர்கள் எழுதியது:

பைபிள் கர்த்தரின் வார்த்தைகளாக இருக்கவே முடியாது; மனிதனது வார்த்தைகள் கலந்துள்ளன; கர்த்தரின் வார்த்தைகள் பல நீக்கப்பட்டுள்ளன; மாற்றப்பட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாகவே இந்த நூலிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்.

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, நீங்கள் வருந்த மாட்டீர்கள் என்ற எண்ணத்தில் ஒரு உண்மையைச் சொல்கிறேன் "குர்‍ஆன் இறைவனின் வார்த்தையாகவே இருக்கவே முடியாது, இதற்கு ஒரு கடுகளவும் வாய்ப்பில்லை". ஆனால், பைபிள் இறைவனின் வேதமாகும், இதனை கொஞ்ச கொஞ்சமாக நான் என் மறுப்புக்களில் விளக்குவேன், இதனை என் கட்டுரைகளை படிக்கும் எந்த ஒரு நபராக இருந்தாலும் சரி, அவர் இஸ்லாமியரோ அல்லது கிறிஸ்தவரோ அதனை அவர் அறிந்துக்கொள்வார்". உங்கள் வரிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், உங்கள் தளத்தில் என் மறுப்புக்களின் தொடுப்பை கொடுப்பீர்களா? " நீங்கள் முன்வைத்த வாதங்கள் சரியானவை தான்" என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், என் தொடுப்புக்களை உங்கள் தளத்தில் குறிப்பிட்டு மறுப்போ அல்லது பதிலோ எழுதுவீர்களா? இணைய வாசகர்கள் நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும், அவைகளுக்கு நாங்கள் கொடுக்கும் பதில்களையும் படிக்க உதவுவீர்களா? அப்படி உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.

பீஜே அவர்கள் எழுதியது:

இந்நூலில் நான் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்கும் கருத்துக்களுக்கும் தக்க ஆதாரத்துடன் மறுப்பைத் தெரிவித்தால், அதைப் பரசீலித்து, ஏற்று, திருத்திக் கொள்ளவும் தயாராகவுள்ளேன். நாங்களும் நீங்களும் கர்த்தரின் பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உரிய வழி எது என்பதை அறிய வேண்டும் என்பதே என் ஆவல். அதற்காகவே இந்நூலைத் தந்துள்ளேன்.

அன்புடன்

P. ஜைனுல் ஆபிதீன்

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, இந்த விஷயத்தில் நீங்கள் பலவீனமானவர்கள், தோற்றுப்போனவர்கள், சத்தியத்தில் நிலை நிறகாதவர்கள். ஏனென்றால், "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை எழுதினீர்கள், அதற்கு நான் சில பதில்களைக் கொடுத்துள்ளேன். இதுவரை என் பதில் கட்டுரையை குறிப்பிட்டு, அவைகளுக்கு தகுந்த பதிலை கொடுத்துள்ளீர்களா? (எனக்கு தெரிந்தவை நீங்கள் என் மறுப்புக்களுக்கு பதிலை தரவில்லை, என் கண்களில் படாமல் இருந்தால், உடனே அவைகளை எனக்கு தெரிவிக்கவும்).

குறைந்த பட்சம் இந்த உங்களின் புத்தகத்திற்கு நான் அளிக்கும் மறுப்புக்களை உங்கள் தளத்தில் பதித்து மறுப்பு எழுதுவீர்களா?

உங்களிடம் தமிழ் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பார்ப்பது:

1) எங்கள் மறுப்பு கட்டுரையின் தொடுப்பை உங்கள் தளத்தில் தாருங்கள் (ஏனென்றால், நீங்கள் எழுதிய புத்தகத்திற்கு தான் நாங்கள் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறோம், மற்றவர்கள் எழுதிய புத்தகத்திற்கு அல்ல, எனவே பொறுப்பு உங்களுக்கு உண்டு).

2) தொடுப்பை கொடுத்து, உங்கள் மறுப்பையும் எழுதுங்கள் அல்லது வீடியோவில் பேசியாவது பதியுங்கள்.


இப்படி செய்வதை விட்டுவிட்டு, நேரடியாக உமர் வந்தால் தான் நான் பதில் தருவேன் என்ற வாதத்தை மட்டும் முன் வைக்கவேண்டாம். இப்படி நீங்கள் செய்தால், மக்கள் உங்களிடம் இப்படியாக கேட்பார்கள் "பின் எந்த தைரியத்தில் நீங்கள் மட்டும் கிறிஸ்தவத்திற்கு எதிராக புத்தகத்தை வெளியிடுகிறீர்கள்? எழுத்து வடியில் உங்கள் கருத்துக்களை சொல்கிறீர்கள்?".

நீங்கள் உங்கள் புத்தகத்தின் முன்னுரையில் வாக்கு கொடுத்துள்ளீர்கள், அதனை நிறைவேற்ற தவறவேண்டாம்.

கடைசியாக பீஜே அவர்களே, நீங்களும், இதர இஸ்லாமியர்களும் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கவேண்டும் என்பதே எங்கள் ஆவலும் கூட, முக்கியமாக என்னுடைய ஆவல், ஏனென்றால், நானும் ஒரு இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்தவன் என்பதால், என் ஜனங்கள் (இஸ்லாமியர்கள்) மீது எனக்குள்ள அக்கரையே இந்த எழுத்து ஊழியத்தை நான் கையில் எடுக்க காரணமாக உள்ளது.

உங்களை என் அடுத்த மறுப்பில் சந்திக்கும் வரை...

அன்புடன்

தமிழ் கிறிஸ்தவன்

பீஜே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இதர மறுப்புக்களில் சில‌:

1. இஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1

2. பதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1

3. உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!

4. ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்

5. பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

6. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2

7. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

8. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்

9. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)



September 29, 2011

பீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:குர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கருதமுடியாது? - ஏன்?

  

பீஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:

பீஜே அவர்கள் தங்கள் குர்‍ஆன் தமிழாக்கத்தில் "4. முன்னர் அருளப்பட்டது என்ற தலைப்பின் கீழ்" பக்கம் 1086ல் குர்‍ஆனைப் பற்றி கீழ்கண்ட வரிகளை எழுதியுள்ளார்: "திருக்குர்‍ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த ஒரு வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்பவேண்டும்".

இந்த தற்போதையை எங்கள் கட்டுரை பீஜே அவர்களின் வரிகளை அலசுகிறது அல்லது குர்‍ஆன் முழுமையானது அல்ல என்பதை இஸ்லாமிய ஆதாரங்களைக் கொண்டு வெளிப்படுத்துகிறது. மேற்கண்ட வரிகளை படித்தவர்கள், இந்த கட்டுரையையும் முழுவதுமாக படிக்க வேண்டுகிறோம்.

குர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டு முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கருதமுடியாது? - ஏன்?

Why the Quran cannot be considered completely preserved and inspired

ஆசிரியர்: கொர்நெலியு

அன்பான இஸ்லாமிய நண்பனுக்கு,

ந‌ம்முடைய‌ ச‌ம‌கால‌ இஸ்லாமிய நூல்கள்/பத்திரிக்கைகள் இரண்டு விவரங்களைக் குறித்து பெருமைப்பட்டுக் கொள்கின்றன‌, அவைகள்:

1. அன்று முஹம்மது ஓதிய அதே குர்‍ஆன் தான் இன்று அவர்களிடம் எழுத்துக்கு எழுத்து மாற்றமடையாமல் இருக்கின்றது.

2. குர்‍ஆன் இறைவனால் அருளப்பட்டுள்ளது, தெய்வீகமானது, அது இறைவேதமாகும்.

மேலே கூறிய வாதங்களை நாம் கீழ்கண்ட இஸ்லாமியர்களின் மேற்கோள்கள் மூலமாக அறியலாம்

"பரிசுத்த குர்‍ஆன் என்பது ஒரு வாழும் அற்புதமாகும், இதனை அல்லாஹ் தம்முடைய நபிக்கு கொடுத்தார். பரிசுத்த ஆவியின் (காபிரியேல் தூதன்) மூலமாக இந்த அல்லாஹ்வின் புத்தகம் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது. இன்று வரை கணக்கிட்டால் 1400 ஆண்டுகள் கடந்துவிட்டது, இந்த குர்‍ஆனிலிருந்து ஒரு எழுத்தையும் ஒருவராலும் மாற்றமுடியவில்லை அல்லது குர்‍ஆன் கூறுவது போல இதற்கு இணையாக வேறு ஒரு வேதமும் மனிதர்களால் உருவாக்கமுடியவில்லை (ஸூரா ஹிஜ்ர் 15:9) [1]

"இறைவனின் நேரடி வார்த்தைகள் தான் குர்‍ஆன் ஆகும். காபிரியேல் தூதன் மூலமாக அல்லாஹ் முஹம்மது நபிக்கு இந்த குர்‍ஆனை வெளிப்படுத்தினார். முஹம்மது குர்‍ஆனை மனனம் செய்துக்கொண்டு, பிறகு அதனை தன் தோழர்களுக்கு ஒப்புவிப்பார். அதனை அவர்கள் மனனம் செய்து, அதனை எழுதி வைப்பார்கள், பிறகு அதனை முஹம்மதுவிற்கு வாசித்துக்காட்டி தாங்கள் எழுதியதில் ஏதாவது தவறுகள் இருந்தால் அதனை சரிப் படுத்திக்கொள்வார்கள். இது மாத்திரமல்ல, முஹம்மது நபி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் காபிரியேல் தூதன் மூலமாக குர்‍ஆனை சரிப்பார்த்துக்கொள்வார்கள். தம்முடைய கடைசி ஆண்டில் குர்‍ஆனை இரண்டு முறை காபிரியேல் தூதன் மூலமாக வாசித்து சரி பார்த்துக்கொண்டார்கள். குர்‍ஆன் வெளிப்படுத்தப்பட்ட அந்த நாளிலிருந்து இன்று வரை கணக்கிலடங்கா இஸ்லாமியர்கள் குர்‍ஆனை மனனம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள், எழுத்துக்கு எழுத்து அவர்கள் மனனம் செய்துள்ளார்கள். இஸ்லாமியர்களில் அனேகர் முழு குர்‍ஆனையும் தங்களுடைய 10வது வயதிலேயே மனனம் செய்துள்ளார்கள். நூற்றாண்டுகளாக குர்‍ஆனின் ஒரு எழுத்தும் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது. [2]

இஸ்லாமியர்களின் இந்த வாதங்கள் குர்‍ஆனிலிருந்தே வந்துள்ளது:

1. குர்‍ஆன் பாதுக்காக்கப்பட்டுள்ளது என்ற வாதம் குர்‍ஆன் 15:9ம் வசனத்தில் காணலாம்:

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (குர்‍ஆன் 15:9 - பீஜே தமிழாக்கம்)

2. குர்‍ஆனில் உள்ள ஒரு அத்தியாயம் போல ஒரு அத்தியாயத்தை ஒருவராலும் உருவாக்க முடியாது என்று பெருமைப்படுகிறார்கள். ஒரு தற்கால இஸ்லாமியரின் கூற்றுப்படி, குர்‍ஆன் தெய்வீகமானது என்ற சான்று குர்‍ஆனே ஆகும்.

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! (குர்‍ஆன் 2:23 - பீஜே தமிழாக்கம்)

முழு குர்‍ஆனையும் பின்பற்றவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முக்கியமான கடமையாகும். எந்த ஒரு முஸ்லிமாவது குர்‍ஆனின் ஒரு "வசனத்தை" அல்லது "ஆயத்"ஐ மறுத்தால்,குர்‍ஆனின் படி அவர் தம்மீது ஒரு பயங்கரமான சாபத்தை வருவித்துக் கொள்வார்.

(முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தமக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர் வழிக்காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (குர்‍ஆன் 3:3,4 - பீஜே தமிழாக்கம்)

மேற்கண்ட வசனங்களில் "வெளிப்படுத்தினான்/அருளினான்" என்பது "பையதி (بِـَٔايَـٰتِ)" என்ற அரபி வார்த்தையின் தமிழாக்கமாகும், இதனை நாம் "அல்லாஹ்வின் வசனங்களில்" என்று புரிந்துக்கொள்ள முடியும்.

குர்‍ஆனின் படி, தற்கால இஸ்லாமியர்களுக்கு தண்டனை காத்திருக்கிறது, இதனை கீழ்கண்ட மேற்கோளில் காணலாம். ஏனென்றால், தற்கால இஸ்லாமியர்கள் குர்‍ஆனின் ஒரு சில வசனங்களை புறக்கணிக்க வில்லை, அவர்கள் இரண்டு முழு குர்‍ஆன் அத்தியாயங்களை (ஸூராக்களை) புறக்கணித்துள்ளார்கள்.

தற்காலத்தில் நம்மிடமுள்ள குர்‍ஆனை விட வித்தியாசமான ஒரு குர்‍ஆனை (தொகுப்பை) உபை இப்னு கஅப் தொகுத்து இருந்தார் என்ற விவரம் எல்லா இஸ்லாமிய அறிஞர்கள் அறிந்த விஷயமாகும். தற்கால குர்‍ஆன் "ஸைத் இப்னு ஸாபித்" என்வரின் தொகுப்பிலிருந்து வந்ததாகும். ஜையத் மற்றும் உபை தொகுத்த குர்‍ஆன்களுக்கு இடையே இருக்கும் அனேக வித்தியாசங்களில் மிகவும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், உபையின் குர்‍ஆனில் இரண்டு அதிகபடியான அத்தியாயங்கள் (ஸூராக்கள்) இருந்தன என்பதாகும், அவைகள் அல்-ஹ‌ப்த் மற்றும் அல்-கஹ்ல் என்ற அத்தியாயங்களாகும். (இதைப் பற்றி மேலும் அறிய "அஸ் சுயுதி, அல் இத்கான் ஃபீ உலூம் அல்-குர்‍ஆன்" என்ற புத்தகத்தை படிக்கவும் அல்லது கிள்கிறைஸ் அவர்களின் புத்தகத்தை படிக்கவும் "ஜம் அல்-குர்‍ஆன், அத்தியாயம் 3 , பக்கம் 72-78". தற்கால குர்‍ஆனில் விடுபட்ட இரண்டு ஸூராக்களை இந்த கட்டுரையில் படிக்கவும்: ஸூரத் அல்-ஹப்த் மற்றும் அல்-க்ஹல்)

இந்த விவரத்தை உமர் அங்கீகரித்துள்ளார் இதனை ஹதீஸில் நாம் காணலாம். சஹி புகாரி ஹதீஸ் பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005ல், குர்‍ஆனை நன்கு ஓதத்தெரிந்தவர்களில் உபை சிறந்தவர் என்று முஹம்மதுவினால் புகழப்பட்டுள்ளார். உபையின் குர்‍ஆன் தொகுப்பில் இருந்த இரண்டு முழு அத்தியாயங்கள், ஸைத்வுடைய குர்‍ஆன் தொகுப்பில் இல்லை. இந்த வித்தியாசத்தை உமர் கண்டபிறகு அதனை சரி செய்ய அவர் கீழ்கண்ட விளக்கத்தை கூறியுள்ளார். இதனை கீழ்கண்ட புகாரி ஹதீஸில் நாம் காண்போம்.

பாகம் 5, அத்தியாயம் 66, எண் 5005

உமர்(ரலி) கூறினார்

எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். நாங்கள் உபை(ரலி) அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, 'எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அது போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளான்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். Source

உபை இப்னு கஅப் என்பவரின் குர்‍ஆனில் இருந்த இரண்டு அத்தியாயங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு உமர் கூறிய பதில் அல்லது காரணங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டது என்று உமர் கூறிய காரணம் அனேக பிரச்சனைகளை உருவாக்குகிறது. அவைகளை இப்போது காண்போம்:

1. அந்த இரண்டு அத்தியாயங்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று உமர் கூறியதிலிருந்து , அந்த இரண்டு ஸூராக்கள் அதற்கு முன் குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தது என்று அவர் அங்கீகரிக்கிறார்.

2. இந்த இரண்டு ஸூராக்கள் "தொலைந்துவிட்டன‌" அல்லது "மறக்கப்பட்டுவிட்டன" என்று யாரும் கூறமுடியாது . ஏனென்றால், உபையும், உமரும் மற்றும் இதர நபித்தோழர்களும் அவைகளை அறிந்து இருந்தனர், இவர்கள் மறக்கவில்லை. ஸைத் என்பவரின் குர்‍ஆன் தொகுப்பை அதிகார பூர்வமான ஒரு பிரதியாக உஸ்மான் பிரகடனம் படுத்தியத‌ற்கு முன்பு மற்றும் இதற்கு வித்தியாசமானதாக இருக்கும் இரத குர்‍ஆன்களை எரித்துவிடுங்கள் என்று உஸ்மான் கட்டளை பிறப்பிப்பதற்கு முன்பு வரை, உபை என்பவரின் குர்‍ஆன் சிரியா நாட்டில் அதிகாரபூர்வமாக கற்றுக்கொடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. இன்றும் அனேக‌‌ர் உபையின் அந்த‌ இர‌ண்டு குர்‍ஆன் அத்தியாய‌ங்க‌ளை அறிந்துவைத்துள்ள‌ன‌ர். இந்த‌ இர‌ண்டு அத்தியாய‌ங்க‌ள் தொலைந்துப் போக‌வில்லை, அவைக‌ள் இஸ்லாமிய‌ த‌லைவ‌ர்க‌ளால் "ஒதுக்கித் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌ன‌". குர்‍ஆன் 3:3-4 என்ற‌ வ‌ச‌ன‌ங்க‌ளின் ப‌டி, இந்த‌ இஸ்லாமிய‌ த‌லைவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் மீதும், அவ‌ர்க‌ளின் சொற்க‌ளை கேட்டு ந‌ட‌க்கும் இத‌ர‌ இஸ்லாமிய‌ர்க‌ள் மீதும் மிக‌ப்பெரிய‌ த‌ண்ட‌னையை வ‌ருவித்துக்கொண்டு உள்ளார்க‌ள்.

3. அந்த இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் அல்லாஹ்வினால் இரத்து செய்யப்படவில்லை , அவைகள் ஸைத் என்பவரால் இரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும் இவரின் குர்‍ஆன் தொகுப்பை பின்பற்ற விரும்பியவர்களால் (உஸ்மான், உமர் போன்றவர்களால்) இரத்து செய்யப்பட்டுள்ளது.

4.இரத்து செய்யப்படும் அல்லது மறக்கப்படும் குர்‍ஆன் வசனங்களுக்கு இணையாக அல்லது அவைகளை விட சிறப்பான வேறு குர்‍ஆன் வெளிப்பாடுகளை அல்லாஹ் இறக்குவார் என்று குர்‍ஆன் உறுதியளிக்கிறது (குர்‍ஆன் 2:106). முஹம்மதுவிற்கு பிறகு இரத்து எப்படி செய்யமுடியும்? அவைகளுக்கு பதிலாக அல்லாஹ் எப்படி முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு வசனங்களை கொண்டுவரமுடியும்?

5. உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட அதிகபடியான ஸூராக்கள் அவருடைய தொகுப்பில் மட்டுமே காணப்பட்டு இருந்தாலும் அவைகளை ஸைத் மற்றும் அவருடைய கூட்டணி ஏற்றுக்கொண்டு இருக்கவேண்டும். ஏனென்றால் இதே போன்று "குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ" என்பவரின் பிரதியில் மட்டுமே இருந்த குர்‍ஆன் பகுதியை ஸைத் மற்றும் அவருடைய கூட்டணி ஏற்றுக்கொண்டு இருக்கிறது (Bukhari, Vol. VI, #509, #510). உபையின் சிறப்பு (நம்பகத்தன்மை) இந்த "குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ" என்பவரை விட உயர்ந்ததாகும்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.

எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸ¤பைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். அந்த இறைவசனம் இதுதான்: "அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்". (திருக்குர்ஆன் 33:23)

எந்த ஒரு இஸ்லாமியராவது, "உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட இந்த அதிகபடியான அத்தியாயங்கள், குர்‍ஆனுடையது இல்லை" என்று சொல்வாரானால், குர்‍ஆன் இறைவனிடமிருந்து வந்தது என்ற வாதம் பொய்யானதாகிவிடும். ஏனென்றால், குர்‍ஆனில் இருக்கும் அத்தியாயங்களைப் போலவே, இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் இருக்கின்றன ஆனால் அவைகள் இன்றைய குர்‍ஆனில் காணப்படுவதில்லை என்று ஆகிவிடும்.

குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறப்பானவரும், அல்லாஹ்வே முஹம்மதுவிடம் குர்‍ஆனை "உபையிடம்" ஓதிக்காட்டு என்றுச் சொல்லும் அளவிற்கு சிறப்பு மிகுந்தவர் "உபை இப்னு கஅப்" என்பவராவார். குர்‍ஆனில் இருக்கும் இதர ஸூராக்களைப் போலவே இந்த இரண்டு ஸூராக்கள் இருப்பதினால், இந்த இரண்டு ஸூராக்கள் "உபை இப்னு கஅப் என்ற சிறப்புமிக்கவரை ஏமாற்றி முட்டாளாக்கியுள்ளது".

சஹீ முஸ்லிம் புத்தகம் 31, எண் 6031 அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்' என்று கூறினார்கள். உபை(ரலி), 'அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்), அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை(ரலி), (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.

உபை இப்னு கஅப் என்பவரின் குர்‍ஆனில் காணப்பட்ட அந்த இரண்டு ஸூராக்கள் குர்‍ஆனின் இதர ஸூராக்கள் போல் காணப்படவில்லை என்று உபைக்கு சவால் விடும் அளவிற்கு அவரை விட சிறப்பு வாய்ந்த ஒரு இஸ்லாமிய அறிஞரை இஸ்லாமிய சமுதாயம் உருவாக்க முடியுமா?

சஹீ புகாரி தொகுப்பு 6, ஹதீஸ் எண் 527ல் உமர் "குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறந்தவர்" என்று உபையை குறித்துச் சொல்லும் வரிகளை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். கில்கிறைஸ்ட் தம்முடைய "ஜம் அல் குர்‍ஆன்" என்ற புத்தகத்தில், 67 லிருந்து 72 வரையிலான பக்கங்களில் இந்த விவரம் குறித்து இன்னும் அதிகபடியான விவரங்களைத் தருகிறார். மேலும் கீழ்கண்ட மேற்கோளை அவர் தருகிறார், இந்த மேற்கோளில் முஹம்மது "உபையை" குர்‍ஆன் ஓதுபவர்களில் சிறந்தவர் என்று கூறுகிறார்.

அஃபன் இப்னு முஸ்லிம் நமக்கு அறிவித்ததாவது, ... அனஸ் இப்னு மாலிக் என்பவரின் அதிகார பூர்வமான ஹதீஸ் மற்றும் அவருக்கு இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாவதாக) மூலமாக கிடைத்த விவரமாவது, "இறைத்தூதர் கூறினார்: என் மக்களில் மிகவும் சிறப்பாக குர்‍ஆனை ஓதுபவர் உபை இப்னு கஅப் என்பவராவார்" (இப்னு ஸைத், கிதாப் அல் தபாகத் அல் கபீர், தொகுப்பு 2, பக்கம் 441)

முஹம்மதுவும் உமரும் "குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறப்பு மிகுந்தவர் என்று புகழாரம் சூட்டிய உபையை விட எங்களுக்கு நன்றாக குர்‍ஆனை ஓதத்தெரியும்" என்று யாராவது வாதம் புரிந்தால், அவர்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்று கூறுகிறார்கள் என்று பொருள்.

இந்த இரண்டு ஸூராக்கள் குர்‍ஆனின் ஒரு பாகமாக இருந்ததில்லை என்றுச் சொல்வதற்கு உமருக்கும் தைரியமில்லை. அப்படி அவர் கூறுவாரானால் முஹம்மது ஒரு பொய்யர் என்று உமர் கூறுவதாக ஆகிவிடும், மட்டுமல்ல குர்‍ஆனின் தெய்வீகத்தன்மைக்கும் பங்கம் விளைந்துவிடும், கடைசியாக, குர்‍ஆன் 2:23ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட சவாலும் சந்தித்துவிட்டது போலாகிவிடும். எனவே, உமர் இவைகள் குர்‍ஆனி பாகமில்லை என்று கூறவில்லை.

இப்போது நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் தெளிவாக இருக்கின்றன.

முதலாவதாக, ஸைத் என்பவரின் குர்‍ஆன் முழுமையற்றது என்று ஒதுக்கிவிட்டு, உபையின் குர்‍ஆனில் காணப்பட்ட அதிகபடியான ஸூராக்களை மறுபடியும் இன்றைய‌ குர்‍ஆனில் சேர்க்கவேண்டும். இப்படி செய்தால், இந்நாள் வரை உபையின் குர்‍ஆனை புறக்கணித்துவிட்டு மரித்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அல்லாஹ்விடமிருந்து வேதனையான தண்டணை காத்திருக்கிறது என்று அங்கீகரித்ததுபோல் ஆகிவிடும். இந்நாள் வரை குர்‍ஆன் முழுமையானது என்றுச் சொல்லி உங்களுக்கு பிரச்சாரம் செய்த இஸ்லாமிய அறிஞர்களுக்கு குர்‍ஆன் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று அர்த்தமாகிவிடும், அல்லது அவர்கள் உங்களிடம் பொய் கூறியுள்ளார்கள் மற்றும் அவர்கள் உங்களையும் மிகப்பெரிய ஆபத்தில் தள்ளியுள்ளார்கள் என்று அர்த்தமாகிவிடும். இந்த இஸ்லாமிய அறிஞர்கள் அறியாமையில் இப்படி செய்து இருக்கலாம் அல்லது மிகப்பெரிய பொய்யர்களாக இருந்திருக்கலாம். இதனால் அவர்கள் உங்களுக்கு அறிவுரைச் சொல்ல (இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய) தகுதியற்றவர்களாகி விடுவார்கள்.

இரண்டாவதாக, இப்போது செய்துக்கொண்டு இருப்பதுபோலவே, ஸைத்வுடைய குர்‍ஆனை நம்பிக்கொண்டு இருப்பதாகும், ஆனால், இந்த குர்‍ஆனும் இறைவனுடைய வேதமல்ல அதற்கு இறைத்தன்மையல்ல‌ என்று நம்பவேண்டும். ஏனென்றால், உபையுடைய இரண்டு குர்‍ஆன் அத்தியாயங்கள் "குர்‍ஆனைப் போலவே" இருப்பதினால், குர்‍ஆனை ஓதுபவர்களில் சிறந்தவராகிய உபையை முட்டாளாக்க போதுமானதாக அவ்விரு அத்தியாயங்கள் இருந்துள்ளது. குர்‍ஆன் இறைவனிடமிருந்து வரவில்லை என்று அங்கீகரித்தால், இனி உங்கள் வாழ்க்கையை ஆளுவதற்கு குர்‍ஆனுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் போகிறது.

மூன்றாவதாக, ஸைத் உடைய குர்‍ஆனை நம்பிக்கொண்டு இருக்கவேண்டும், மற்றும் உபை உடைய ஸூராக்கள் குர்ஆனின் ஒரு பாகமாக இருக்கவில்லை என்று நம்பவேண்டும். இப்படி நம்புவதினால், நீங்கள் மற்றும் உங்களைப்போல நம்பும் இன்றைய இஸ்லாமியர்களும் "உபையை விட சிறப்பாக குர்‍ஆனை ஓதுபவர்கள்" என்று சொல்வதாக ஆகிவிடும். இதன் பலனாக, நீங்கள் உங்கள் முஹம்மதுவையும், உமரையும் பொய்யர்கள் என்ற முத்திரையை குத்திவிடுகின்றீர்கள். இப்படி "முஹம்மது பொய்யர்" என்ற முத்திரையை குத்துவதினால், அவர் எல்லா இஸ்லாமியர்களுக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்ற நிலையிலிருந்து அவரை தள்ளிவிடுகின்றீர்கள். ஏனென்றால், ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்ட் அவருடைய வார்த்தைகள் பொய்யானவை என்று அங்கீகரிக்கிறீர்கள்
.

குர்‍ஆன் தொகுக்கப்பட்ட விவரங்களை நீங்கள் ஹதீஸ்களிலும், இதர இஸ்லாமிய நூல்களிலும் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இவைகளை நீங்கள் படிக்கும் போது ஆரம்பத்திலிருந்தே குர்‍ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பதை அறிந்துக்கொள்வீர்கள். குர்‍ஆனின் சில பகுதிகள் நீக்கப்பட்டும், இன்னும் சில பகுதிகள் தொலைந்தும் போய் இருக்கின்றன என்பதை அறிந்துக்கொள்வீர்கள். சிந்துத்து உணருங்கள், அதாவது முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு தொலைந்துப்போன குர்‍ஆன் பகுதிகளுக்கு பதிலாக வேறு குர்‍ஆன் வசனங்கள் இறக்கப்படவில்லை. இதன் படி பார்த்தால், அல்லாஹ் ஒரு பொய்யர் என்பது விளங்கும் அதாவது, குர்‍ஆன் 2:106ன் படி மறந்துப்போன குர்‍ஆன் வசனங்களுக்கு பதிலாக அவைகளை விட சிறந்ததையோ அல்லது சமமானதையோ கொடுப்போம் என்ற வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றவில்லை. அல்லாஹ் ஒரு "கைரு அல் ம‌கீரீன்" (வ‌ஞ்சிப்ப‌தில் சிற‌ந்த‌வ‌ர்) என்ப‌தை அறிந்துக்கொள்ளுங்கள் (குர்‍ஆன் 3:54 மற்றும் 8:30). அல்லாஹ்வின் வ‌ஞ்ச‌னையிலிருந்து (மக்ரா) நீங்க‌ள் த‌ப்பிக்க‌வே முடியாது (குர்‍ஆன் 7:99). தோராவின் ம‌ற்றும் ந‌ற்செய்தியின் இறைவ‌னிட‌த்திற்கும், பொய் சொல்லாத‌ இறைவ‌னிட‌த்திற்கும் திரும்புங்க‌ள்.

அன்பான நண்பர்களே, நாம் அனைவரும் தீயவர்கள் தான், நாம் இறைவன் தரும் தண்டனைக்கு தகுதியானவர்கள் தான், ஆனால், இயேசுவின் மூலமாக உங்களுக்கு மன்னிப்பு உண்டு. இன்ஜிலில் இயேசு கூறுகிறார் " வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்" (மத்தேயு 11:28,29). மறுபடியும் அவர் இவ்விதமாக கூறுகிறார் "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை " (யோவான் 6:37) .இந்த மிகப்பெரிய இரட்சிப்பை புறக்கணிக்கவேண்டாம்.


பின் குறிப்புகள்:

1 The Miracles of the Prophet Muhammad, p. vi of the introduction to The Translation of the Meanings of Sahih Al-Bukhari, Vol. I, by Dr. Muhammad Muhsin Khan. Published by Dar AHYA Us-Sunnah Al Nabawiya.

2 A Brief Illustrated Guide To Understanding Islam by I. A. Ibrahim, Second Edition. Published by Darussalam Publishers and Distributors P.O. Box 22743, Riyadh 11416 K. S. A., p. 5; also available in the U.S.A. from Darussalam Houston P.0. Box 79194, Houston, Tx 77279.

கொர்நெலியு அவர்களின் கட்டுரைகள்

ஆங்கில மூலம்:  http://www.answering-islam.org/authors/cornelius/complete_inspired.html

http://isakoran.blogspot.com/2011/09/blog-post_21.html

குர்‍ஆனின் இன்னொரு இலக்கண பிழை - "நாங்கள் இறைத்தூதர் தான்"

குர்‍ஆனின் இன்னொரு இலக்கண பிழை

"நாங்கள் இறைத்தூதர் தான்"

ஆசிரியர்கள்: அந்தோனி ரோகர்ஸ் & சாம் ஷமான்

தான் ஒரு இறைத்தூதர் என்றும், தீர்க்கதரிசி என்றும், அல்லாஹ்வின் அப்போஸ்தலர் என்றும் சுயபிரகடனம் செய்துக்கொண்ட முஹம்மதுவின் நபித்துவத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரே அற்புதம் "குர்‍ஆன்" மட்டும் தான் என்று இஸ்லாமியர்கள் சொல்வதை அனைவரும் அறிவோம். "குர்‍ஆன் எந்த ஒரு பிழைக்கும் அப்பாற்பட்டது, எந்த ஒரு இலக்கண பிழைக்கும் அப்பாற்பட்டது" என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள், இதனால் தான் மேற்கண்ட வாதத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் இந்த கட்டுரைகளை (1, 2, 3, 4, 5, 6) நாம் படிப்போமானால், இஸ்லாமியர்களின் இந்த வாதம் பொய்யானாது என்பது விளங்கும்.

இதன் வரிசையில் குர்‍ஆன் 26:16ம் வசனத்தில் இன்னொரு இலக்கண பிழையை நாம் காணலாம்.

முதலில் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மற்றும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கங்களிலிருந்து இவ்வசத்தை காண்போம்.

குர்ஆன் 26:16

ஃபிர்அவ்னிடம் சென்று "நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம் ....." (பீஜே தமிழாக்கம்)

குர்ஆன் 26:16

ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர் அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்: "நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள் ..." . (முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு தமிழாக்கம்)

இந்த வசனத்தை இஸ்லாமியர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட அனேக ஆங்கில மொழியாக்கங்களிலிருந்து படிக்கலாம்.

And both of you approach Pharaoh and say: We are the Messengers of the Lord of the worlds, - Dr. Laleh Bakhtiar

Go to Pharaoh, both of you, and say, We are messengers from the Lord of the Worlds: - Wahiduddin Khan

Go to Pharaoh and say: " We are messengers from the Lord of the Universe. – T. B. Irving

"So both of you go to Pharaoh and Say: " We are messengers of the Lord of the worlds" – Progressive Muslims

So go ye twain unto Fir'awn and say: verily we are the apostles of the Lord of the Worlds, - Abdul Majid Daryabadi

So approach Pharaoh and say, '' We are indeed envoys of the Lord of the worlds – Ali Quli Qarai

They came to the Pharaoh and said, " We are the Messengers of the Lord of the Universe. – Muhammad Sarwar

So go, both of you, to Pharaoh and say, ' We both are messengers of the Lord of all the worlds, - Muhammad Taqi Usmani

Go together to Pharaoh and say, " We are Messengers from the Lord of the Worlds." – Shabir Ahmed

"So both of you, go forth to Firon (Pharaoh), and say: ' We are the messengers of the Lord (and Cherisher) of the Worlds (Rab-ul-'Ala'meen); - Syed Vickar Ahamed

Go to Pharaoh and say, ' We are the messengers of the Lord of the worlds, - Umm Muhammad (Sahih International)

Go to Pharoah and tell him: " We are the Messengers from the Lord of the Worlds. – Farook Malik

So go to the pharaoh and say, " We are the messengers of the Lord of the entire universe." – Dr. Munir Munshey

So go both of you to Pharaoh and say: We are the Messengers (sent) by the Lord of all the worlds. – Tahir-ul-Qadri Mohammed

"Therefore approach Firaun then proclaim, ' We both are Noble Messengers of the Lord Of The Creation.' – Faridul Haque

"Go to Pharaoh and say, ` We are messengers from the Lord of the universe.' – Rashad Khalifa

`So go to Pharaoh and say, ` We are the Messengers of the Lord of the Worlds – Sher Ali

"And when you both come to Firaun (Pharaoh), say: We are the Messengers of the Lord of the Alameen (mankind, jinns and all that exists), - Hilali & Khan

மேலே உள்ள ஆங்கில மொழியாக்கங்களை படிக்கும்போது அவைகள் இலக்கணப்படி சரியாக இருப்பது போல் காணப்படுகிறது. ஆனால், இன்னுமுள்ள இதர இஸ்லாமியர்கள் செய்த ஆங்கில மொழியாக்கங்களை படிக்கும்போது, இந்த மொழியாக்கம் செய்பவர்கள் ஏதோ ஒன்றை நம்மிடமிருந்து மறைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இப்போது இன்னுமுள்ள இதர இஸ்லாமியர்கள் செய்த ஆங்கில மொழியாக்கங்களை கீழே காண்போம்.

And go, both of you, unto Pharaoh and say, 'Behold, we bear a message from the Sustainer of all the worlds: - Muhammad Asad

And come together unto Pharaoh and say: Lo! we bear a message of the Lord of the Worlds, - M. M. Pickthall

Go, both of you, to Pharaoh and say, "We bring a message from the Lord of the Worlds: - Abdel Haleem

"So go, both of you, to the Pharaoh and say: 'We have come with a message from the Lord of the worlds (He Who has created and sustains everything): - Ali Unal

"And go to Pharaoh and say, ´Verily, we bear a message from the Lord of the Worlds - (v. 17) Hamid S. Aziz

Go to the Pharaoh and tell him: 'We bring a message from the Lord of all the worlds – Muhammad Ahmed Samira

இப்போது நாம் மேலே கண்ட ஆங்கில மொழியாக்கங்களை பார்க்கும் போதும் இலக்கணப்படி அவைகள் சரியானதாக இருக்கிறது. ஆனால், இவர்களோடு நாம் முதலில் பதித்த ஆங்கில மொழியாக்கங்களை ஒப்பிட்டால் இரண்டு வித்தியாசங்களைக் காணலாம். அதாவது இரண்டாவதாக நாம் கண்ட மொழியாக்கத்தில் "தூதர்கள்" என்ற பெயர்ச்சொல்லை "தூது" என்று மாற்றியுள்ளார்கள். மற்றும் இரண்டாவது மாற்றம் என்னவென்றால், "பன்மையை" ஒருமையாக மாற்றியுள்ளார்கள் ("தூதர்கள் என்பதற்கு பதிலாக தூது" என்று ஒருமையாக மாற்றியுள்ளார்கள்).

மேலும், குர்‍ஆனை மொழியாக்கம் செய்த இஸ்லாமியர்களில் இன்னொரு குழுவும் உள்ளது, இவர்களும் குர்‍ஆன் வசனத்தை சரியான இலக்கணத்தோடு மொழியாக்கம் செய்துள்ளார்கள். ஆனால், இவர்கள் இன்னொரு மாற்றத்தையும் செய்துள்ளார்கள், அதாவது மேலே கண்ட முதலாவது குழு மற்றும் இரண்டாவது குழு செய்த மாற்றங்களை ஒன்றாக கலந்து இவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார்கள். இப்படி இவர்கள் எல்லாரும் செய்வதினால், இந்த வசனத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது? என்று நாம் ஆச்சரியத்தோடு கேள்வி கேட்கும் படி உள்ளது மற்றும் யார் மூல குர்‍ஆனுக்கு இணையான மொழியாக்கத்தை செய்கிறார்கள் என்று நம்மை தேட‌ வைக்கிறது. இந்த மூன்றாவது குழுவின் மொழியாக்கத்தை கீழே காண்போம்.

"And so, both of you go to Pharaoh and say to him:" "We are bearers of the divine message sent by Allah, Creator of the worlds, the visible and the invisible, past, present and those to come", - Al-Muntakhab

`Go to Pharaoh both of you and say, "We are bearers of a Message from the Lord of the worlds. – Ahamtul Rahman Omar

Then come to Pharaoh, and say: We are bearers of a message of the Lord of the worlds: - Maulana Muhammad Ali

கடைசியாக, இன்னொரு குழுவும் இருக்கிறது, இவர்கள் செய்த ஆங்கில மொழியாக்கம் உண்மையிலேயே அந்த வசனத்தில் உள்ள பிரச்சனையை நமக்கு காட்டுகிறது. ஏன் மேலே கண்டவர்கள் பல வகையாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்? என்பது இப்போது புரிய ஆரம்பிக்கிறது. இப்போது இந்த குழு செய்த மொழியாக்கத்தைப் படிப்போம்:

Go to Pharaoh and say, "We are the Messenger of the Lord of all the worlds – Aisha Bewley

So come up to Firaawn, then say (to him), "We (both) are the Messenger of The Lord of the worlds; - Muhammad Mahmoud Ghali

When you see Pharaoh, tell him: "We are the Lord's Messenger for all His intelligent beings." – Bijan Moeinian

go both to Pharaoh and both of you say to him: 'We are (each) a Messenger from the Lord of all the Worlds. – Hasan Al-Fatih Qaribullah

ஜியார்ஜ் சேல் என்ற இந்த இஸ்லாமியரல்லாதவர் இவ்வசனத்தை கீழ்கண்ட விதமாக மொழியாக்கம் செய்கிறார்.

Go ye therefore unto Pharaoh, and say, verily we are the apostle of the Lord of all creatures:

நாம் காண்பது போல, கடைசியாக மொழியாக்கம் செய்தவர்களின் மொழியாக்கம் இலக்கணத்தின் படி தவறான ஒன்றாகும். இந்த இலக்கண பிழையை சரி செய்ய ஹசன் அல்பதி கரிபுல்லாஹ் என்பவர் அடைப்பு குறிக்குள் "ஒவ்வொருவரும் (each) " என்ற வார்த்தையை சேர்த்து, அந்த இலக்கண பிழையை சரி செய்துள்ளார்.

இந்த விடுகதைக்கு பதில் (இதனை நாம் பதில் என்று அழைக்க விரும்பினால்), நாம் இந்த வசனத்தின் அரபி மூலத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

Transliteration:
Fatiya firAAawna fa-qoola inna rasoolu rabbi alAAalameena


ஃபதிய ஃபிர்அவ்ன ஃப-கூல இன்ன ரசூலு ரப்பி அல்ஆலமீன‌

மேலேயுள்ள வசனத்தில், "ஃபதிய" மற்றும் "கூல" என்ற வினைச்சொற்கள், "இருமை(dual form)" வடிவில் உள்ளது, ஆகையால் அது இருவரை குறிப்பிடுகிறது. ஆனால், "இன்ன" என்றச் சொல்லானது "பன்மையில்" உள்ளது. இந்த இடத்தில் இருமையை பயன்படுத்துவது சரியான ஒன்றாகும், ஏனென்றால், மோசே மற்றும் ஆரோன் என்ற இருவரையும் இது குறிப்பிடுகிறது, பார்வோனிடம் சென்று இஸ்ரவேலர்களை அனுப்பிவிடும்படி கேட்கும் படி இவ்விருவரும் கட்டளையிடப்படுகிறார்கள்.

ஆனால், "தூதர்" என்ற வார்த்தை, அரபியில் "ரசூலு" என்று இவ்வசனத்தில் வருகிறது, இந்த வார்த்தை ஒரு பெயர்ச்சொல்லாகும் மற்றும் ஆண்பாலாகும். மட்டுமல்ல, இது "ஒருமையில்" கூறப்பட்டுள்ளது. ரசூலு என்ற வார்த்தை மோசே மற்றும் ஆரோன் இருவருக்கும் சேர்த்து பயன்படுத்தப்பட்டு இருந்த போதிலும், இது "ஒருமையில்" கூறப்பட்டுள்ளது.

இந்த வசனத்தை நாம் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்தால், இந்த மூல அரபி வசனத்தில் உள்ள இலக்கண பிழை தெரியவரும், இதனை கீழ்கண்ட வாறு மொழியாக்கம் செய்யவேண்டும்.

Both of you go to Pharaoh and both of you say: "We are the messenger of the Lord of the worlds."

நீங்கள் இருவரும் பார்வோனிடம் செல்லுங்கள், மற்றும் நீங்கள் இருவரும் கூறுங்கள் "நாங்கள் அகிலத்தை படைத்த இறைவனின் தூதர் ".

"ரசூலு" என்ற வார்த்தைக்கு பதிலாக "ரசூல" என்று "இருமை வடிவில்" (dual form) மாற்றியிருந்தால், இந்த இலக்கண பிழை வந்திருக்காது. இப்படி இருந்தபோதிலும், வேறு ஒரு இடத்தில் இந்த வார்த்தைகளை குர்‍ஆன் சரியாகச் பயன்படுத்தியுள்ளது மற்றும் இந்த வசனமும் மோசே மற்றும் ஆரோனை பார்வோனிடம் அனுப்புவது பற்றியே பேசுகிறது.

"ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள் , பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும் அவர்களை வேதனை படுத்தாதே, திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்" (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்). (20:47 முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு)

`So go ye both to him and say, `We are the Messengers of thy Lord; so let the Children of Israel go with us; and torment them not. We have, indeed, brought thee a great Sign from thy Lord; and peace shall be on him who follows the guidance; S. 20:47, Sher Ali

Transliteration:
Fatiyahu fa-qoola inna rasoola rabbika ...

ஃபதியஹு ஃப-கூல இன்ன ரசூல ரப்பிக‌ ….

மேற்கண்ட விவரங்களோடு இந்த இரகசியம் வெளிப்பட்டுவிட்டது: பல மொழிப் பெயர்ப்பாளர்களின் மொழியாக்கங்களில் நிலவிய வித்தியாசங்கள் மற்றும் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் என்னவென்றால், அரபி மூல குர்‍ஆனின் வசனத்தில் நிலவிய இலக்கண பிழையாகும். இதனை சரி செய்வதற்கு அல்லது இலக்கண பிழையை மூடி மறைப்பதற்கு இஸ்லாமியர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலன் தான் அனேக வித்தியாசங்களோடு கூடிய மொழியாக்கங்கள். மூல அரபி குர்‍ஆனில் உள்ளது போல மொழியாக்கம் செய்தால், அது இலக்கண பிழையோடு அமைந்துவிடும், ஏனென்றால் மூலத்திலேயே இலக்கண பிழை இருக்கிறது. ஒரு அறைகுறையாக படித்த ஒரு நபரிடம் நாம் எதிர்ப்பார்க்க முடிந்ததெல்லாம் இப்படிப்பட்ட பிழையுள்ள ஒரு வெளிப்பாடுகளாகத் தானே இருக்கமுடியும். சர்வஞானம் படைத்த இறைவனின் நேரடி பேச்சை இப்படிப்பட்ட ஒரு அறைகுறை மனிதனிடம் எதிர்ப்பார்க்க முடியுமா?

மேலும் அறிய படிக்கவும்:
குர்‍ஆன் மொழியாக்கங்களில் பொதிந்துள்ள மூல குர்‍ஆனின் குழப்பங்கள்.

அந்தோனி ரோகர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்

ஆங்கில மூலம்: "Don't Shoot Us, We Are Just the Messenger" - Another Grammatical Mistake in the Qur'an

http://isakoran.blogspot.com/2011/09/blog-post.html