அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

January 27, 2011

இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதற்கான ஐந்து காரணங்கள்


cFive Reasons Why Jesus is Not Merely a Prophet

ஆசிரியர்: கெய்த் தாம்சன்

இயேசுவை தேவனாக அல்லாது ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக மட்டுமே புதிய ஏற்பாடு போதிக்கிறது என்று நம்பும் முஸ்லீம் வாசகர்களுக்கு இந்தக் கட்டுரை கேள்விகளையும் வாதங்களையும் முன் வைக்கும். இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசி என்று குர்‍ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உதாரணமாக சூரா 5:75ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்:

" மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை....".

ஆனால் இயேசுவை நேரடியாகக் கண்டவர்கள் மற்றும் இயேசு பேசினதைக் கேட்டவர்களால் எழுதப்பட்ட முதல் நூற்றாண்டு நூல்கள் இக்கருத்துக்கு மாறான உண்மையான இயேசுவை நமக்கு காண்பிக்கின்றன. எனவே முதல் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதை இக்கட்டுரை நிரூபிக்கும். இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்றாலும் கூட அவர் சாதாரண தீர்க்கதரிசி மட்டுமல்ல என்பது இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்படும். அவர் தேவன் ஆவார். கிறிஸ்துவிடமாக பிதாவானவர் இழுத்துக் கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு புதிய ஏற்பாடு, இயேசுவைக் குறித்து என்ன போதிக்கிறது என்பதைக் குறித்த தெளிவான‌ கருத்தை இந்தக் கட்டுரை அளிக்கும் என்பதே எனது நம்பிக்கையாக இருக்கிறது.

#1. இயேசு சாதாரணமான ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால் ஏன் யோவான் 5:22-23 ஆகிய வசனங்கள்:

"பிதாவைக் கனம்பண்ணுகிறது போல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல் நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்" என்று கூறுகிறது?

இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால் இயேசுவைக் கனம் பண்ணுதல் அல்லது பிதாவைக் கனம் பண்ணுவது போல இயேசுவைக் கனம் பண்ணுதல் என்பது தேவ தூஷணமாகுமல்லவா? அல்லாஹ்வைக் கனம் பண்ணுவது போலவே முஹம்மது நபியைக் கனம் பண்ணுதல் என்பது ஒரு முஸ்லீமுக்கு ஏற்புடையதாக இருக்குமா?

"போல" என்பதைக் குறிக்கும் "kathōs" என்கிற கிரேக்க வார்த்தைக்கான பொருள்/விளக்கம்: "… ஒரே விதத்தில், உள்ள படி, சமமான படி, அதே அளவின் படி, அந்த நிலையில்..." என்று வருகிறது.

The primary definition of Greek word for "just as" (kathōs) is "… according as, just as, even as, in proportion as, in the degree that." 1

ஆகவே, நாம் பிதாவாகிய தேவனைக் கனம் பண்ணி பயபக்தியுடன் இருப்பது போலவே, இயேசுவையும் அதே நிலையில் வைத்து கனம் பண்ணி பயபக்தியுடன் இருக்க வேண்டும் என்று இந்த வசனம் விசுவாசிகளுக்கு கட்டளையிடுகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. பிதாவாகிய தேவன் மிக உயர்ந்த நிலையில் தேவனாக இருக்கிறார். இயேசுவும் அதே போல மிக உயரிய நிலையில் இருக்கிறார். ஆகவே, இயேசு சாதாரண தீர்க்கதரிசியை விட மேலானவர் ஆவார்.

#2. இயேசு ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால், பின்னர் ஏன் வெளிப்படுத்தல் 5:8-14 வரையிலான வசனங்கள் தேவ தூதர்கள் மற்றும் மூப்பர்கள் ஆகியோரையும் சேர்த்து பரலோகத்திலுள்ளவைகள் அனைத்தும் இயேசு துதிக்கும் மகிமைக்கும் கனத்திற்கும் மற்றும் வல்லமைக்கும் என்றும் பாத்திரர் என்று ஏன் கூறுகின்றன?

இயேசு தேவனாக இல்லாமல் சாதாரண தீர்க்கதரிசியாக இருந்தால், தேவனுக்கு மட்டுமே உரிய ஆராதனையிலிருந்து தவறுவதாக அது இருக்குமல்லவா? அது தேவனுக்கு மட்டுமே உரிய ஆராதனையாக இருக்குமென்றால், அது இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதை உறுதிப்படுத்துகிறது அல்லவா? வெளிப்படுத்தல் 5:8-14 கூறுவதாவது:

அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

#3. மனுக்குலத்தில் உள்ள அனைவரையும் போல வாழ்க்கையை கரு தோன்றியதில் இருந்து ஆரம்பித்த இயேசு சாதாரணமானதொரு தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், ஏன் புதிய ஏற்பாடு, இயேசுவானவர் பிதாவோடு கூட முன்னமே தனித்துவமான மகிமையில் வாசம் செய்தார் என்று போதிக்கிறது?

பிலிப்பியர் 2:6-11 குறிப்பிடுவதாவது:

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

இயேசு தேவனுடைய ரூபமாக (தேவனுடய மகிமையாக) முன்பே இருந்தார் என்பதையும், ஒரு மனிதனாக தம்மைத் தாழ்த்தினார் என்பதையும் கவனியுங்கள். தேவனின் வல்லமை மற்றும் சக்தி இருந்தாலொழிய இயேசு தம்மைத்தாமே தாழ்த்தி மனிதனாக வருவது என்பது சாத்தியமில்லாத காரியமாயிருக்கிறபடியால் இயேசு தெய்வீக வல்லமை உடைவராக இருந்தார் என்பதை இது காண்பிக்கிறது. இதேபோல, யோவான் 8:58ல் இயேசு தாம் மனிதனாக தோன்றுவதற்கு முன்பே இருந்து வருகிறதை பின்வருமாறு விளக்கினார், "அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்".

கவனியுங்கள் ஆபிரகாம் வாழ்வதற்கு முன்னமே நான் இருந்தேன் என்று மட்டும் இயேசு சொல்லாமல், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னமே தாம் தேவனாக இருந்ததாக சொல்வதை "நான்...இருக்கிறேன் – I AM" என்று தேவனுக்கு உரிய பதத்தை பயன் படுத்துவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.2

#4. இயேசு சாதாரண‌மான ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால், தாம் கொல்லப்படும் போது, தம்மைத் தாமே உயிரோடெழுப்புவதற்கு தனக்கு வல்லமை உண்டு என்று ஏன் கூறினார்?

ஒரு தீர்க்கதரிசியால் எப்பொழுதாவது இப்படிக் கூற முடியுமா? தாம் மரித்த பிறகு தமது சரீரத்தை உயிரோடு எழுப்பிக்கொள்ள தன்னால் முடியும் என்று இயேசு கூறியதால், அவர் மரித்த பிறகும், இறைவனைப் போல தெய்வீக வல்லமையோடு இருப்பதாக இந்த வார்த்தைகள் காட்டவில்லையா? தேவன் மனிதனானால் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று நாம் எதிர்பார்க்கிற ஒரு காரியமாக இது இருக்கிறதல்லவா?

யோவான் 2:19-21 மற்றும் யோவான் 10:17 குறிப்பிடுவதாவது:

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். (யோவான் 2:19-21)

நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். (யோவான் 10:17)

#5. இயேசு தமது தீர்க்கதரிசன அழைப்பை மட்டும் பிரசங்கித்துக் கொண்டு ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், ஏன் அவருடைய கூற்றுகள் தாம் தேவனுக்கு சமமாக இருப்பதாகவும், தாம் தேவனாக இருப்பதாகவும் கூறுகின்றன‌?

யோவான் 10:33 மற்றும் யோவான் 5:18ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்:

அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ் சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

(யோவான் 5:18)

யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.

(யோவான் 10:33)

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் மற்றும் அப்போஸ்தலனாகிய யோவான் எழுதிய எழுத்துக்களும் இங்கே அவர் பயன்படுத்தியிருக்கிற வார்த்தைகள் அவருடைய தெய்வீகத்தை உறுதிப்படுத்துவதில் மிகவும் வெளிப்படையாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. அவர் தம்மை தேவனாக உரிமைப் பாராட்டினார் என்பதை அவர்கள் சந்தேகமின்றி அறிந்திருந்தனர். வேதாகமம் அல்லது குர்‍ஆனில் ஏதாவது ஒரு தீர்க்கதரிசியின் போதனையைக் கேட்ட மக்கள், அவர் தன்னை தேவனாக உரிமைப் பாராட்டுவதாக நம்பச் செய்யும்படிக்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றதா?

முடிவுரை:

முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான குறிப்புகள் இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசியிலும் மேலானவர் என்பதைக் காண்பிக்கின்றன என்பதே உண்மை ஆகும். எந்த தீர்க்கதரிசியும் பேசாத செய்யாத காரியங்களை இயேசு செய்தார். ஒரு சாதாரண தீர்க்கதரிசியால் செய்ய முடியாத பல காரியங்கள் இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்படியாக வரலாற்றுப் பூர்வமாகவும் மற்றும் இறையியல் பூர்வமாக சொல்லுவதானால் - இயேசு ஒரு தீர்க்கதரிசியை விடவும் மேலானவர்- இயேசு இறைவன் ஆவார்.

இயேசுவைக் குறித்து முதல் நூற்றாண்டுக் குறிப்புகள் என்ன சொல்லுகின்றன என்பதை உண்மையாகவே அறிந்துகொள்ள விரும்பி; கிறிஸ்துவிடமாக இழுக்கப்படும் ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இந்த தகவல்கள் பிரயோஜனமாக இருப்பதாக.

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். அவர்" கர்த்தர்.

பின் குறிப்புக்கள்:

1 Joseph Henry Thayer, A Greek-English lexicon of the New Testament, [Harper, 1887], p. 315

2. "இருக்கிறேன் (I AM)" என்பது பழைய ஏற்பாட்டில் தேவன் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட தெய்வீகப் பட்டப்பெயராகும். உதாரணத்திற்கு, யாத்திராகமம் 3:14ல் தேவன் மோசேயை நோக்கி: "அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் (I AM WHO I AM) என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் (I AM) என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்". இந்த தெய்வீக பட்டப்பெயர் பழைய ஏற்பாட்டின் செட்பாஜின்ட் கிரேக்க மொழியாக்கத்தில் "egō eimi" என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதே வார்த்தையைத் தான் இயேசுவும் யோவான் 8:58ல் தனக்குத் தானே "இருக்கிறேன் (I AM)" என்று கூறினார், அதாவது தன்னை தேவன் என்று வெளிப்படுத்தினார்.

ஆங்கில மூலம்: Five Reasons Why Jesus is Not Merely a Prophet

கெய்த் தாம்சன் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2011. All rights reserved.
 
 

January 25, 2011

முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?


முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?

Does Muhammad Pass the 1 John 4 Prophethood Test?

ஆசிரியர்: கெய்த் தாம்சன்

பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. (1 யோவான் 4:1-3)

இஸ்லாமிய அறிஞர்கள் 1 யோவான் 4ம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களை மட்டும் மேற்கோள் காட்டி, இதன் படி, முஹம்மது நபித்துவ பரிட்சையில் வெற்றி பெற்று இருக்கிறார் என்று சொல்கிறார்கள். இந்த இஸ்லாமிய அறிஞர்களின் வாதம் என்னவென்றால், மனிதனாக (மாமிசத்தில்) வந்த கிறிஸ்துவை முஹம்மது அறிக்கையிடுவதினால், முஹம்மது இந்த பரிட்சையில் வெற்றி பெறுகிறார், ஆகையால் முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் ஒரு உண்மை தீர்க்கதரிசி (நபி) என்று நம்பவேண்டும் என்பதாகும். சமி ஜாதாரி என்ற இஸ்லாமிய அறிஞர் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள "விசுவாசியின் தன்மைக்கு" முஹம்மது சரியாக பொறுந்துகிறார்!

....

ஆகையால் க‌வ‌னியுங்கள், இயேசு தான் கிறிஸ்து என்று யார் சொல்கிறாரோ (அறிக்கையிடுகிறாரோ) அவர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்று பொருள். இதன்படி, யார் யாரெல்லாம் "இயேசு, கிறிஸ்து அல்ல" என்றுச் சொல்கிறார்களோ அவர்கள் "அந்திக் கிறிஸ்து" என்று அர்த்தமாகும். இதனால், முஹம்மது இறைவனிடமிருந்து வந்தவராகிய நபியாவார்கள், ஏனென்றால் முஹம்மது, "இயேசு தான் கிறிஸ்து (ஈஸா மஸீஹா)" என்று அறிக்கையிட்டுள்ளார்கள். (மூலம்)

சமி ஜாதாரி அவர்களின் இப்படிப்பட்ட வாக்குவாதங்களில் உள்ள குறைகளை கீழ்கண்ட விவரங்களின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

1) "கிறிஸ்து மாமிசத்தில் வந்தார் என்கின்ற அறிக்கை" என்பதின் பொருளை ஜாதாரி புரிந்துக்கொள்ளவில்லை.

2) ஒரு தீர்க்கதரிசியை பரிசோதிக்க தேவையான பரிட்சை, வெறும் முதல் மூன்று வசனங்களில் மட்டும் சொல்லப்படவில்லை, அதற்கு பதிலாக இந்த பரிட்சை அந்த அதிகாரம் முழுவதும் வியாபித்து உள்ளது.

நாம் மேலே கண்ட முதல் விவரம் பற்றி இரண்டு விளக்கங்கள் உள்ளது. இதில் முதலாவது விளக்கம் என்னவென்றால், "மாமிசத்தில் வந்த கிறிஸ்துவை அறிக்கை பண்ணுவது" என்பது, "இறைவன் மனிதனாக வந்தார், அதாவது இயேசு மனித அவதாரமெடுத்தார்" என்பதை குறிப்பதாகும். (யோவான் 1:1-3, பிலிப்பியர் 2:6-11, யோவான் 8:58).

இதைப் பற்றி டாக்டர் பிரான்ஸிஸ் எ கீப்பெர் (Dr. Francis A. Schaeffer) கீழ்கண்டவிதமாக கூறுகிறார்:

"தீர்க்கதரிசிகளையும் ஆவிகளையும் பரிசோதிக்க, அவர்கள் இயேசு மனிதனாக (மாமிசத்தில்) வந்தார் என்று அறிக்கையிடுகின்றனவா இல்லையா என்பதை பார்க்கவேண்டும். இந்த அறிக்கை இரண்டு பிரிவுகளை உட்கொண்டது. அதாவது இயேசு ஆதி முதலே இருக்கிறார் என்பதையும், அவர் மனிதனாக வந்தார் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. வேறுவகையில் கூறவேண்டுமானால், ஆவிகளும் தீர்க்கதரிசிகளும் இயேசு ஆதிமுதலே இருக்கிறார் என்பதை அங்கீகரிக்கவேண்டும், அதோடு கூட அவர் மனிதனாக வந்தார் என்பதையும் அறிக்கையிடவேண்டும்.

"The Spirits and prophets are to be tested by whether they confess that Jesus "is come in the flesh," a confession that has two elements of content. It affirms both that Jesus existed before and also that He has come in the flesh. In other words, spirits and prophets must acknowledge both Jesus' pre-existence and His incarnation."[1]

ஆகையால், இயேசு ஆதிமுதலாக இறைவனாக இருக்கிறார், அவர் மனிதனாக வந்தார் என்று வேதம் தெளிவாகச் சொல்வதை முஹம்மது அறிக்கையிடவில்லை, எனவே முஹம்மது நபித்துவ பரிட்சையில் தோற்றுவிடுகிறார். இரண்டாவதாக, "மாமிசத்தில் இயேசு வந்தார் என்று அறிக்கை பண்ணுவது" என்பது, நாக்ஸ்டிக் (Gnostic) என்ற ஒரு மார்க்கத்தின் கோட்பாட்டிற்கு எதிராக உள்ளது எனலாம். இந்த குறிப்பிட்ட மார்க்கத்தவர்களின் நம்பிக்கையின் படி, உலகம் எல்லாம் தீயதாக உள்ளது, அப்படி இருக்கும்போது இயேசு மனிதனாக வந்தார் என்பதை ஏற்கமுடியாது என்பது அவர்களின் நம்பிக்கை. இவர்களின் படி, இயேசு ஒரு ஆவியாக இருந்தார், அவர் மனிதனாக இல்லை என்பதாகும் [2]. இவர்களின் விளக்கத்தை ஒருவேளை சரி என்று நாம் நினைத்தாலும், "இயேசு மனிதனாக வந்தார்" என்பது அவரின் உண்மை தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. அதாவது அவர் ஆதியிலிருந்தே (உலக தோற்றத்திற்கு முன்பே) இருக்கிறார் மற்றும் அவர் மனிதனாக வந்தார் என்பதை காட்டுகிறது. இந்த இரண்டு விவரங்களும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. அதாவது இயேசு மாமிசத்தில்(மனிதனாக) வந்தார் என்று கூறினால், அவர் ஏற்கனவே இருந்திருக்கிறார் (Pre-Exist) என்பது புரிகின்றது. வேதத்தின் வெளிச்சத்தில் காணும் போது, திரித்துவத்தில் இரண்டாம் நபராக உள்ள இயேசு பரலோகத்தை விட்டு மகிமையை விட்டு இறங்கி மனிதனாக வந்தார் என்பது புரியும்.

ஒரு வேளை இஸ்லாமிய அறிஞராகிய ஜாதாரி மேற்கண்ட வசனத்தை மேலோட்டமாக புரிந்துக்கொண்டு, யார் யாரெல்லாம் "இயேசு தான் மேசியா (கிறிஸ்து)" என்று அறிக்கையிடுகிறார்களோ அவர்கள் எல்லாம் இறைவன் அனுப்பிய நபிகள் (தீர்க்கதரிசிகள்) என்று முடிவை எடுப்பாரானால், இது அவருக்கு பிரச்சனையாக மாறும். ஏனென்றால், அவரின் இந்த வாதத்தின் படி அவர் மர்மோனிசம் என்ற மார்க்கத்தை ஸ்தாபித்த ஜோசப் ஸ்மித் என்பவரும் இறைவன் அனுப்பிய நபி (தீர்க்கதரிசி) என்று நம்பவேண்டும். ஏனென்றால், ஜோசப் ஸ்மித் என்பவரும் "இயேசு தான் மஸீஹா" என்று அறிக்கையிட்டார், அங்கீகரித்தார். ஆனால், ஜோசப் ஸ்மித் ஒரு நபி என்று ஜாதாரி அங்கீகரிக்கமாட்டர் என்று நமக்கு நன்றாகத் தெரியும். இயேசு தான் மேசியா (மஸீஹா) என்று முஹம்மது கூறியதால், அவர் ஒரு உண்மையான நபி என்றும் அவர் இறைவனிடமிருந்து வந்தார் என்றும் ஜாதாரி கூறுவாரானால், அதே நிலையில் உள்ள ஜோஸப் ஸ்மித்தையும் ஒரு நபி என்றும் அவரையும் இறைவன் தான் அனுப்பினார் என்றும் ஜாதாரி நம்பவேண்டும். ஆனால், இப்படி ஜாதாரி நம்புவாரா? நம்பமாட்டார் [3]. ஆக, 1 யோவான் 4ம் அதிகாரம் முதல் மூன்று வசனங்கள் கூறும் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை ஜாதாரி அறியாததால், அவரின் வாதம் இதோடு தோற்றுப்போகிறது.

1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் முஹம்மது தோற்றுப் போகிறார்:

ஜாதாரி செய்த இரண்டாம் பிழை என்னவென்றால், நபித்துவத்தின் பரிட்சை வெறும் முதல் மூன்று வசனங்களில் மட்டுமே அடங்கியுள்ளது என்று தவறாக நினைத்துவிட்டார். ஆனால், அந்த அதிகாரம் முழுவதும் உண்மையான கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு எப்படிப்பட்ட பரிட்சைகளில் நாம் வெற்றிப் பெறவேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்றது. இந்த பரிட்சைகளில் முஹம்மது தோல்வியை தழுவுகிறார். உதாரணத்திற்கு, முஹம்மது ஒரு கிறிஸ்து எதிரி (அந்திக் கிறிஸ்து) என்பதற்கும், இதனால் அவரை நாம் பின் பற்றக்கூடாது என்பதற்கும், 1 யோவான் 4:15ம் வசனத்தை பார்ப்போம்:

இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். (1 யோவான் 4:15)

பரிட்சை என்பது மூன்று வசனங்களோடு மட்டும் முடிந்துவிடவில்லை என்பதை இந்த வசனம் தெளிவாக காட்டுகின்றது. இந்த 15ம் வசனத்தில் நாம் பார்க்கிறோம், அதாவது ஒருவர் தேவனுக்குள் இருக்கிறார் (அல்லது) உண்மையான விசுவாசியாக இருக்கிறார் என்றுச் சொல்லவேண்டுமானால், அவர் இயேசு தேவகுமாரன் என்பதை நம்பவேண்டும் மற்றும் அறிக்கையிடவேண்டும். ஆனால், கிறிஸ்துவின் எதிரியாகிய (அந்திக் கிறிஸ்துவாகிய) முஹம்மது இதனை மறுத்தார், அதாவது இயேசு தேவகுமாரன் இல்லை என்று கூறினார், பார்க்க குர்‍ஆன் 19:34-35.

இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது. (குர்‍ஆன் 19:34-35)

ஆக, 1 யோவான் 4ம் அதிகாரத்தின் நபித்துவ பரிட்சையில் முஹம்மது தோற்றுப்போகிறார் மற்றும் அவர் ஒரு பொய் நபி என்பதும் இதன் மூலம் நிரூபனமாகிறது. தேவனின் அன்பின் உண்மைச் செய்தி என்னவென்றால், தேவன் தம்முடைய குமாரனை உலக மக்களின் பாவங்களுக்காக மரிக்க அனுப்பினார் என்பதாகும்.

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. (1 யோவான் 4:10)

அந்திக் கிறிஸ்துவின் ஆவியினால் ஆட்கொள்ளப்படவராக முஹம்மது தோல்வியுற்று ஒரு பொய் நபி என்று நிருபிக்கப்பட்டுள்ளார். இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் செய்த அந்த தியாக பலியை முஹம்மது மறுத்தார் மற்றும் அந்த சிலுவை நிகழ்ச்சியை கண்ட அனைவரையும் அல்லாஹ் தந்திரமாக‌ ஏமாற்றியதாக முஹம்மது கூறினார்.

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (குர்‍ஆன் 4:157)

முடிவுரை:

1 யோவான் 4ம் அதிகாரத்தைக் காட்டி இஸ்லாமிய அறிஞர்கள் முஹம்மதுவின் நபித்துவத்தை நிலை நிறுத்த முயற்சி எடுத்தாலும், அந்த முயற்சி தோல்வியுற்றதை நாம் கண்டோம். "இயேசுக் கிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டார்/வந்தார்" என்பதின் பொருளை அவர்கள் அறிந்துக்கொள்ளவில்லை. இந்த வசனங்கள் இயேசுவின் ஆதித் தன்மையையும், அவரது மனித அவதாரத்தையும் காட்டும் வசனமாக இருப்பதை நாம் கண்டோம். மேலும், நபித்துவ பரிட்சையானது 4ம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களோடு நின்றுவிடவில்லை அது முழு அதிகாரமும் வியாபித்து உள்ளது என்பதையும் கண்டோம். இதன் மூலமாக முஹம்மது ஒரு பொய்யான தீர்க்கதரிசி என்றும், அவர் அந்திக் கிறிஸ்துவின் ஆவியை உடையவர் என்றும் நிருபனமாகியுள்ளது. நற்செய்தி நூல்களில் கூறப்பட்டுள்ள இயேசுவின் குமாரத்துவம் மற்றும் சிலுவை மரணத்தை மறுப்பதினால் முஹம்மது அந்திக் கிறிஸ்துவின் ஆவியை உடையவர் என்பது திண்ணம்.

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அவரே தேவன்.

பின் குறிப்புக்கள்:

1 Francis A. Schaeffer, A Christian View of spirituality, Vol. 3, [Good News Publishers, 1985], p. 179
2 Wayne Grudem, Systematic Theology: An Introduction to Biblical Doctrine, [Zondervan, 1994], p. 540
3 ஜாதாரி அவர்கள் ஜோசப் ஸ்மித் என்பவர் மட்டும் உண்மையான நபி இல்லை, மிர்ஜா குலாம் அஹமத் மற்றும் பஹாயுல்லாஹ் போன்றவர்களும் உண்மையான நபிகள் என்று அங்கீகரிக்கவேண்டும். ஏனென்றால், அஹமதீயா இயக்கத்தின் தலைவராகிய மிர்ஜா குலாம் அஹமத் அவர்களும், பஹாய் மத ஸ்தாபகருமான பஹாயுல்லாஹ் அவர்களும், முஹம்மதுவைப் போலவே, பூமியில் ஒரு மனிதராக வாழ்ந்த இயேசு ஒரு மஸீஹா என்று அங்கீகரித்தார்கள்.

ஆங்கில மூலம்: Does Muhammad Pass the 1 John 4 Prophethood Test?

கெய்த் தாம்சன் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2011. All rights reserved.
 
 

January 24, 2011

அன்புள்ள அப்துல்லாவிற்கு கிறிஸ்தவ நண்பன் எழுதும் கடிதம் 1



அன்புள்ள அப்துல்லாவிற்கு கிறிஸ்தவ நண்பன் எழுதும் கடிதம் 1

ஆசிரியர்: ஜெரார்ட் நெல்ஸ்

[இது இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே தெளிவை உண்டாக்க உதவும்படிக்கு எழுதப்பட்ட கற்பனை உரையாடல் கடிதம் ஆகும். "அப்துல்லா" என்ற பெயர் அரபி மொழி பெயராகும், இதன் பொருள் "அல்லாஹ்வின் அடிமை/ஊழியன்" என்பதாகும். இந்த கடிதங்களை எழுதும் ஆசிரியரின் பெயர் "தியோபிலஸ்" என்பதாகும், இது ஒரு கிரேக்க மொழி பெயராகும், அதன் பொருள் "இறைவனால் நேசிக்கப்பட்டவன்" என்பதாகும்.]

அன்புள்ள அப்துல்லா,

நான் உன்னை சந்தித்ததில் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் என்பதை தெரிவிப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஒரு இஸ்லாமியனாகிய நீயும், கிறிஸ்தவனாகிய நானும் சந்தித்து பேசிக்கொண்டது போல எல்லாருக்கும் சம்பவிக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. எந்த ஒரு பெரிய வித்தியாசமுமே இல்லை என்பதாகக் காட்டிக் கொள்ளாமல், நாம் நம் இருவருக்கும் பொதுவான பல காரியங்களைக் கண்டு கொண்டோம். நாம் நம் நம்பிக்கைகளுக்கு இடையேயான வித்தியாசங்களையும் மற்றும் அவைகளை முழுமையாக ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையும் அறிந்திருக்கிறோம். நம் விவாதம் நட்புணர்வுடனும், தலைப்பிற்கு பொருத்தமானதாகவும் இருக்கவேண்டும் என்ற நம் உறுதிமொழியை, முற்றிலும் மனதுக்கு இனியதானதாக நான் கருதுகிறேன். இதன் மூலமாக இறைவன் உயர்த்தப்படுவாராக.

வாழ்க்கையைக் குறித்த எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நம் இருவருக்கும் ஒன்றுபட்டு இருப்பதை உணர்ந்து கொள்வது நல்லது. குறிப்பாக, இறைவனைப் பற்றிய நமது உணர்வு என்னை ஈர்க்கிறது. மார்க்க சித்தாந்தங்கள் பற்றிய நம் புரிதல் வேறுபடலாம் என்ற போதிலும், இறைவனைக் குறித்த உள்ளுணர்வு, அன்பு மற்றும் விருப்பம் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் ஒன்றுபோல காணப்படுகிறது. இது எனக்கு உணர்த்தும் காரியம் என்னவெனில், மனிதன் இயற்கையாகவே இறைவனைக் குறித்த உள்ளார்ந்த அறிவைப் பெற்றிருக்கிறான், அதை அவரே நம் இருதயங்களில் வைத்திருக்கிறார் என்பதே.

இறைவனுடைய பார்வையில் நாம் சுத்த இருதயமுள்ளவர்களாக இருக்க வேண்டிய அவசியத்தை நாம் இருவரும் நன்கறிந்து இருக்கிறோம் என்ற உண்மை இத்துடன் தொடர்புடையதாகவும் எனக்கு மிகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் மாத்திரமே இறைவனைக் காண்பார்கள் (மத்தேயு 5:8) என்று இயேசு ஒரு முறை கூறியிருப்பது போல இது மிகவும் முக்கியமானதாகும். இது எனக்கு கீழ்கண்ட வசனங்களை ஞாபகப்படுத்துகிறது:

இது எனக்கு கீழ்கண்ட வசனங்களை ஞாபகப்படுத்துகிறது:

நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். (1 பேதுரு 1:14,15)

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. (எபிரேயர் 12:14)

நம்மிடம் உள்ளான பரிசுத்தம் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். நம்முடைய சிந்தனைகளும், செயல்களும் பெரும்பாலும் பரிசுத்தமில்லாததாகவே காணப்படுகிறது. நாம் எவ்வளவு தான் மத சடங்குகளை சட்டங்களை பின்பற்றினாலும், நம் இருதயத்தின் ஆழத்தில் நம் குறைபாட்டினால் உண்டான ஆன்மீகக் குறை குறித்து அறிந்திருக்கிறோம் என்று நான் எண்ணுகிறேன். மரணத்துடனான ஒவ்வொரு சந்திப்பு அல்லது எதிர்கொள்ளலும் நமக்குள் பிரச்சனைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றன. அவை மரணத்தைக் குறித்த பயத்தை நமக்குண்டாக்குகிறது - அல்லது மரணத்துக்குப் பின் என்ன நேரிடும் என்பதைக் குறித்த பயத்தை உண்டாக்குகிறது. இறைவனைத் தள்ளி விட்ட சூழ்நிலையில் ஒருவன் வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக வாழலாம், ஆனால் இறுதியில் மரணத்தைக் குறித்த எதிர்பார்ப்பு அவை எல்லாவற்றையும் பாழாக்கிவிடுகிறது. ஏனெனில் நாம் அனைவரும் பின்வரும் வேத கூற்றை அறிந்திருக்கிறோம்;

ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயந்தீர்ப்பு அடைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறது (எபிரேயர் 9:27)

இறுதியாக மனுக்குலமனைத்தும் ஒரே படகில்தான் அமர்ந்திருக்கிறோம். சிந்தனை, செயல் மற்றும் வார்த்தை ஆகிய அனைத்திலும் நாமனைவரும் இறைவனுடைய பார்வையில் குறைவுள்ளவர்களாகவே இருக்கிறோம்.

இந்தச் சூழலில் சுத்திகரிப்பை முக்கியப்படுத்துகிற மதச் சடங்காச்சாரங்களை எல்லா மதங்களும் பின்பற்றுகின்றன என்பதைக் குறிப்பிடுவது மிகவும் ஆச்சரியமானதாயிருக்கிறது அல்லவா? இவை வெறும் அடையாளச் சின்னங்களே அன்றி எந்த ஒரு மாற்றத்தையும் உண்டாக்காதவை ஆகும். இந்த சடங்காச்சாரங்களினால் நம்முடைய உடலை வெளிப்பிரகாரமாக நாம் சுத்தப்படுத்திக்கொண்டாலும், தண்ணீர் பாவத்தைக் கழுவி, ஒரு சுத்த இருதயத்தை உண்டாக்க முடியாது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.

உணவு சாப்பிடுவதற்கு முன்பாக கைகளைக் கழுவும் மத சடங்காச்சாரத்தை ஒரு முறை இயேசு எதிர்க்கொள்ளும் போது, கீழ்கண்ட வார்த்தைகளைச் சொன்னார்:

அதற்கு இயேசு நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து

பொல்லாத சிந்தனைகளும்,
கொலைபாதகங்களும்,
விபசாரங்களும்,
வேசித்தனங்களும்,
களவுகளும்,
பொய்ச்சாட்சிகளும்,
தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார். (மத்தேயு 15:16-20)

மதச் சடங்குகள் என்பவை, நாம் பரிசுத்தமற்றவர்கள் என்பதை நாம் அறிந்திருக்கிற படியால், நமக்கு சுத்திகரிப்பு தேவை நினைவுபடுத்தும் ஒன்று என்பதேயன்றி வேறல்ல. தாவீது குறிப்பிட்ட ஒரு கேவலமான பாவத்தை செய்துவிட்ட பிறகு, தன்னுடைய விருப்பத்தை தன் சங்கீதத்தில் கீழ்க்கண்டவாறு மிகவும் அழகாக வெளிப்படுத்துகின்றார்.

தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.

என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.

தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்;
நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.

என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். (சங்கீதம் 51:1-4, 9-10)

இதுவரை பார்த்த விவரங்களை நாம் இருவரும் அங்கீகரிப்போம் என்றும் இவைகளை நாம் உணர்ந்துள்ளோம் என்றும் நான் நம்புகிறேன். எனினும் நாம் ஒத்துப்போக விரும்பாத தலைப்புகள் இன்னும் பல உண்டு. ஆன்மீக உரையாடல்களில் நம் பரஸ்பர நம்பிக்கைகளின் படி விவாதிப்பது இயற்கைதான். ஒருவர் இவ்விதமாக கூறினார், அதாவது "நம்முடைய திட நம்பிக்கைகள் பொய்களுக்கு எதிரிகளாக இருப்பதைக் காட்டிலும், உண்மைக்கு அதிகமாக எதிரிகளாக இருக்கின்றன". "திட நம்பிக்கைகள்" கருத்துக்களைக் காட்டிலும் ஒரு படி மேலே இருக்கின்றன.இந்த அடிப்படையில் விவாதங்கள் முன் அனுமானிக்கக் கூடியவைதான் : "எல்லாரும் பேசுவார்கள், மற்றவர்கள் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்". நாம் இப்படிப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றக் கூடாது. நம் பதிலானது விவாதம் எழுப்பிய கேள்வியை நேர்மையாக எதிர்கொள்வதாகவும், எது நம்பத்தக்கது, ஏன் அதை நம்ப வேண்டும் என்பதை நாம் இருவரும் சேர்ந்து கண்டுகொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துடனும் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இது நம் நித்தியத்தை பாதிக்கிற காரணியாக இருக்கிறது. ஆகவே நாம் நம் தேடலில் மேலோட்டமாக இருக்கத் துணியக் கூடாது. நம்மில் ஒருவர் வழிவிலகிப் போய்விடுவார் என்கிற சூழலை நாம் விரும்ப வில்லை. இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாட்டின் மீது நம் நம்பிக்கை அமையாதவரையில், நாம் இக்கட்டான நிலையிலிருப்போம். அனைத்திற்கும் மேலாக, நாம் இறைவனின் உண்மையைப் பின்பற்றி அதை நம்புவோமாகில், நித்தியத்தை இழந்து போவது குறித்து நாம் பயப்பட என்ன இருக்கிறது? தெய்வீக உண்மை கண்டு கொள்ளக் கூடியதாகவும், ஆதாரச் சான்று உடையதாகவும் இருக்க வேண்டும்.

இப்பொழுது நாம் ஒருவரையொருவர் ஓரளவுக்கு அறிந்திருக்கிறோம். ஆகவே நாம் இருவரும் சேர்ந்து வெறுப்பின்றி, புரிந்து கொள்ளுதல் மற்றும் தெளிவான எண்ணத்துடன் இந்த உலகில் இருக்கும் எதைக்காட்டிலும் மிகவும் அதிக முக்கியமானதாக நாம் கருதுகிறதைக் கண்டு கொள்வோம் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு உண்மையுடன்
தியோபிலஸ்

ஆங்கில மூலம்: Dear Abdulla - Letter 1

அன்புள்ள அப்துல்லா கடிதங்கள்
ஜெரார்ட் நெல்ஸ் அவர்களின் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2011. All rights reserved.