அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

August 6, 2009

முஹம்மதுவின் வினோதமான போதனைகள்: ஜகரியா பூட்ரோஸின் நேர்க்காணல்

முஹம்மதுவின் வினோதமான போதனைகள்: ஜகரியா பூட்ரோஸின் நேர்க்காணல்


 

The Strange Teachings of Muhammad By: FrontPage Magazine


 

Tuesday, June 02, 2009



ப்ரண்ட் பேஜ்  (Front Page Magazine Interview) நேர்க்காணலின் இன்றையை விருந்தினர் காப்டிக் பாதிரியார் தந்தை ஜகரியா போட்ரோஸ் என்பவராவார்.  இவரை அல்-கைதா "உலக‌த்தில் அதிகமாக தேடப்பட்டுக் கொண்டு இருக்கும் இஸ்லாமியரல்லாதவர்" என்றுச் சொல்லி, இவரது தலைக்கு "60 மில்லியன் டாலர் பரிசை  நிர்ணயித்துள்ளது. ஒரு புகழ்பெற்ற அரபி பத்திரிக்கை இவரை "இஸ்லாமின் எதிரி நம்பர் 1" என்று அழைக்கிறது. இவர் லைஃப் டீவி (Life TV) என்ற தொலைக்காட்சியில்  "உண்மை உரையாடல்கள்" என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார். இவரது இரண்டு இணைய தளங்கள் இவைகளாகும் 1. islam Christianity      2. Father zakaria dot net  . இவருக்கு சமீபத்தில் "டானியேல் ஆஃப் தி இயர் – Daniel of the Year  " என்ற சன்மானமும் செய்யப்பட்டது.


FrontPage: தந்தை ஜகரியா பூட்ரோஸ் அவர்களே, உங்களை ப்ரண்ட் பேஜ் நேர்க்காணலுக்கு வரவேற்க்கிறேன்.

 

Botros:  என்னை அழைத்ததற்காக உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

FrontPage: நேர்க்காணலின் ஆரம்பமாக, உங்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய உங்கள் அனுபவங்கள் பற்றியும் சிறிது நேரம் பேசுவோம்.

 


Botros: நான் ஒரு காப்டிக் ஆவேன். என்னுடைய 20வது வயதிலே நான் ஒரு போதகரானேன். இஸ்லாமியர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள எகிப்திலே கிறிஸ்தவ போதகர்களோ அல்லது இதர சமயத்தார்களோ, இஸ்லாமியர்களிடையே "சமயம்" பற்றி பேசக்கூடாது. கிறிஸ்தவத்தில் அதிகம் ஆர்வமாக இருந்த என்னுடைய மூத்த சகோதரர் இந்த உண்மையை மிகவும் தாமதமாக கற்றுக்கொண்டார். அவர் இஸ்லாமியர்களுக்கு போதித்தார், இதனால் அவர் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார், இஸ்லாமியர்கள் அவரது நாவை துண்டித்தார்கள், மற்றும் அவரை கொலை செய்தார்கள்.

 

இஸ்லாமியர்களை வெறுப்பதை விட, நான் அவர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல அதிகமாக தூண்டப்பட்டேன். இயற்கையாகவே, என்னுடைய இந்த எண்ணம் அனேக பிரச்சனைகளை கொடுத்தது.  நான் தொடர்ந்து பயமுறுத்தப்பட்டேன், தூஷிக்கப்பட்டேன், சிறையில் அடைக்கப்பட்டேன், ஒரு ஆண்டு காலம் சிறைச்சாலையில் கொடுமைப்படுத்தப்பட்டேன், இதற்கெல்லாம் ஒரே காரணம், இஸ்லாமியர்களுக்கு நான் சுவிசேஷத்தைச் சொன்னதால் தான். எகிப்திய ஆதிகாரிகள், "அபோஸ்டசி" என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமை விட்டு வெளியெறி கிறிஸ்தவத்திற்கு மாறுவதற்கு நான் உதவி புரிவதாக என் மீது புகார் கொடுத்தார்கள்.  இன்னொரு முறை நான் எகிப்திலிருந்து வேறு நாட்டிற்கு விமானத்தில் செல்ல விமான நிலையத்தில் காத்திருக்கும் போது கைது செய்யப்பட்டேன். இந்த பிரச்சனைகளினால், நான் என் சொந்த நாட்டை விட்டு ஓடி ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் சில நாட்களை கழித்தேன். கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பற்றிய என்னுடைய வாழ்க்கை வரலாறு மிகவும் நீண்டது மற்றும் அனேக திருப்புமுனைகளைக் கொண்டது.  சமீபத்தில், என் வாழ்க்கை வரலாறு (http://www.islam-christianity.net/Defynedeath.html)  ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது.

FrontPage:  இதை நான் கேட்பதால் உங்களிடம் மன்னிப்பை கோறுகிறேன், நீங்கள் சிறைச்சாலையில் எப்படி துன்புறுத்தப்பட்டீர்கள், சிறிது விளக்கமுடியுமா?

Botros: நான் இயேசுவின் நற்செய்தியை பிரசங்கித்ததால், எகிப்திய இராணுவம் என் வீட்டிற்குள் நுழைந்து என் நெத்தியில் துப்பாக்கியை வைத்தார்கள்.  ஏன் என்னை கைது செய்கிறார்கள் என்பதை எனக்குச் சொல்லாமலேயே என்னை ஒரு சிறிய அறையாக இருந்த சிறைச்சாலையில் அடைத்தார்கள் (1.8  x 1.5 x 1.8 மீட்டர் அளவு கொண்ட சிறிய அறையில் அடைத்தார்கள், என் உயரம் 1.83  மீட்டர் இருந்ததால், இது எனக்கு இன்னும் அதிக பிரச்சனையாக இருந்தது). அந்த அறையில் இன்னும் அனேகர் இருந்தனர், அவ்வறையின் வெட்பநிலை 100 டிக்ரியைவிட அதிகமாக இருந்தது, வெளிச்சம் இல்லை, ஜன்னல்கள் இல்லை மற்றும் காற்றோட்டமும் இல்லை. அந்த அறையில் எந்த கட்டில்களும் இல்லை, மற்றும் நாங்கள் தரையிலேயே படுத்துக்கொண்டோம், எல்லாரும் ஒரே நேரத்தில் தூங்க அங்கு இடமில்லாமல் இருந்ததால், நாங்கள் நேரத்தை பிரித்துக்கொண்டு ஒவ்வொருவராக தூக்கினோம். ஆக்ஸிஜனும் இல்லாமல் இருந்ததால், கதவின் ஓரத்தின் உடைந்த பகுதியின் பக்கத்தில் நாங்கள் எங்கள் மூக்கை வைத்து சுவாசித்தோம். இதுவும், நாங்கள் நேரத்தை பகிர்ந்துக்கொண்டு ஒவ்வொருவராக செய்தோம். இந்த நிலையில் நான் இருந்ததால், எனக்கு கிட்னி பிரச்சனை வந்தது, அவர்கள் எந்த மருத்துவ உதவியும் செய்யவில்லை. கொசுக்கள் எங்கள் மீது உலாவின.  உணவை அவர்கள் வாலிகளில் கொடுப்பார்கள். கூழ் என்றால் என்ன என்று அப்போது தான் எங்களுக்கு தெரியவந்தது. அந்த சிறைச்சலையின் பாதுகாவலன் அடிக்கடி எங்களுக்கு உணவு வழங்கும் வாலிகளில் எங்களுக்கு முன்பாகவே துப்புவான், மற்றும் மூக்கை சிந்தி அந்த வாலிகளில் போடுவான்.

 

FrontPage: நீங்கள் அனுபவித்த இந்த கொடுமைகளை கேட்கும் போது, எனக்கு இதயம் பதபதக்கிறது. இப்படி செய்து நீங்கள் துன்பம் அனுபவிப்பதற்கு உங்களின் முக்கியமான நோக்கம் தான் என்ன?

 

Botros: அதாவது "மனிதர்களின் இரட்சிப்பிற்காக" இப்படி நான் செய்கிறேன். நான் அடிக்கடி சொல்வதுண்டு, நான் எந்த அளவு இஸ்லாமை விமர்சிக்கின்றேனோ, அவ்வளவு அதிகமாக இஸ்லாமியர்களை நேசிக்கிறேன். ஆகையால், இஸ்லாமியர்களை காப்பாற்ற, இரட்சிப்படையச் செய்ய இதைவிட வேறு மார்க்கம் இல்லை, அதாவது "இஸ்லாமின் பொய்களை உலகிற்கு தெரிவிப்பதை தவிர வேறு வழியே இல்லை".  உலகிற்கு நற்செய்தியைச் சொல்லும்படி, கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டுள்ளார். இஸ்லாமியர்களை கிறிஸ்துவிற்கு மாற்றுவது மிகவும் ஆபத்தான காரியமாகும். ஆபத்து இருக்கிறது என்பதற்காக‌ நாங்கள் அவர்களை அப்படியே அனாதைகளாக விட்டுவிடமாட்டோம். அனேக இஸ்லாமியர்கள் அதிக பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இறைவனை திருப்திப்படுத்த விரும்புகிறார்கள், ஆனால், அவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது, அவ்வளவு தான்.  ஆகையால், அவர்களின் ஆர்வத்தை மதித்து, நான் அவர்களுக்கு உண்மையான வெளிச்சத்தை காட்ட முயற்சிக்கிறேன்.

 

FrontPage: இஸ்லாம் ஒரு "பொய்யான மார்க்கம்" என்பதை சுருக்கமாக விவரிக்கிறீர்களா?

 

Botros: இறையியல் முறையில் நான் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் ஆவேன். எனவே, கிறிஸ்தவம் மட்டுமே உண்மையைச் சொல்கிறது என்று நான் நம்புகிறேன். கிறிஸ்துவில் எனக்கு இருக்கும் நம்பிக்கையால், நான் இதர மார்க்கங்கள் மனிதர்களால் உண்டானவை என்று அவைகளை புறக்கணிக்கிறேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, முஹம்மது செய்த மிகப்பெரிய குற்றம் மற்றும் இந்தக் குற்றம் மன்னிக்கப்படாத குற்றம், என்னவென்றால், "கிறிஸ்து கொண்டு வந்த இரக்கத்தையும், கிருபையையும் அவர் மறுத்தது தான்" மற்றும் முஹம்மது மனித இனத்தை மறுபடியும் பழைய சட்டத்தின் காலத்திற்கு அழைத்துச் சென்றது தான்.

ஆனால், நம் சமய நம்பிக்கையை பக்கத்தில் வைத்துவிட்டு, பொதுவாக‌ சிந்தித்தாலும், உலகில் இருக்கும் பெரிய மதங்களில் இஸ்லாம் மட்டுமே கண்டிப்பாக தவறானதாக இருக்கும். உதாரணத்திற்கு, நான் புத்த சமயத்தில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தாலும், புத்தசமயம் நல்ல கோட்பாடுகளை தருகிறது மற்றும் மக்கள் அதன் நல்ல கட்டளைகளுக்காக அதனை பின் பற்றுகிறார்கள். இதே போல இஸ்லாமுக்கு நாம் சொல்லமுடியாது.   உலகில் இருக்கும் எல்லா மதங்களிலும் இஸ்லாம் மட்டுமே தன்னை பின்பற்றும் மனிதர்களை பயப்படவைத்து, அதாவது இஸ்லாமை விட்டுவெளியேறினால் உன்னை கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்துகிறது, மரண பயத்தை கொடுத்து இஸ்லாம் மனிதர்களை தக்கவைத்துக் கொள்கிறது. மற்றும் போரிட்டு நாடுகளை பிடிக்கும் ஆசைக் காட்டி, ஆபாசத்தில் ஈடுபட ஆசைக்காட்டி, இன்னும் பொருட்கள் கொள்ளையிட ஆசைக்காட்டி மக்களை தக்கவைத்துக்கொள்கிறது.

இஸ்லாமிய சரித்திரமே, இவைகளுக்கு சாட்சியாக ஆதாரமாக இருக்கின்றது.  ஆனால், கிறிஸ்தவம் தனக்காக உயிரை விடும் கிறிஸ்தவர்களால் அவர்களின் வாழ்க்கையை தியாகம் செய்யப்பட்டு பரப்பப்பட்டது, கிறிஸ்தவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதாலேயே கொல்லப்பட்டனர்.  இஸ்லாம் வன்முறை மூலமாக பரப்பப்பட்டது, வாளின் முனையில் இஸ்லாம் பரவியது, பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கி இஸ்லாம் பரவியது. இஸ்லாம் மனிதனின் பலவீனங்களை புரிந்துக்கொண்டு அவனுக்கு ஆசைக்காட்டி அதன் மூலமாக பரவியது. இறையியல் முறையிலும், தத்துவ ரீதியிலும் இன்னும் சரித்திர பூர்வமாகவும் இஸ்லாம் ஒரு தவறான மார்க்கம் என்பது நிருபனமாகிறது.

 

 

FrontPage:  நீங்கள் உங்கள் உரையாடல்களை, விவாதங்களை இஸ்லாமிய ஆதாரங்களை முன்வைத்தே செய்கிறீர்கள்.  ஏன் இஸ்லாமிய போதகர்களும், இமாம்களும்,   தங்கள் இஸ்லாமிய நூல்கள் என்ன சொல்கின்றன என்று தெரிந்துக் கொள்வதற்கு பதிலாக, அதன் படி விவாதிப்பதற்கு பதிலாக, உங்களை ஏன் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள்?

 

 


Botros
: இதன் பதில் தெளிவாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இஸ்லாமிய ஆதாரங்கள், நூல்கள் அனைத்தும் இஸ்லாம் பற்றி அவைகளே பேசுகின்றன.  உலகத்திலேயே இஸ்லாமியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய எதிரி, அவர்களின் இஸ்லாமிய நூல்களேயாகும். அதாவது ஹதீஸ்களும், முஹம்மதுவின் சரிதைகளும் தான் அவர்களுக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கின்றன. இவைகள் தான் இஸ்லாமியர்களை தர்மசங்கடமாக்குகின்றன.  இந்த நாள் வரை நான் கிட்டத்தட்ட 500 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இஸ்லாமிய பல தலைப்புக்கள் பற்றி ஒளிபரப்பியுள்ளேன். இந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் நான் இஸ்லாமிய நேரடி ஆதாரங்களையும் நூல்களையும் பயன்படுத்தியுள்ளேன், அதாவது குர்‍ஆன், ஹதீஸ்கள், தஃப்சீர்கள் (இஸ்லாமிய விரிவுரைகள்) போன்றவற்றை பயன்படுத்தியுள்ளேன்.

 

ஆகையால், இஸ்லாமிய அறிஞர்கள் இமாம்களுக்கு என்ன செய்யமுடியும்? இஸ்லாமிய ஆதார நூல்களிலிருந்தும், ஷரியா சட்டங்களிலிருந்தும் நான் மேற்கோள் காட்டும் விவரங்களுக்கு அவர்கள் பதில் சொல்லவேண்டுமானால், அவர்களுக்கு நான் சொல்வதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வாய்ப்பு இல்லாமல் போகிறது, உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமில் வைப்பாட்டி வைத்துக்கொள்வது சட்டபூர்வமானது, ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிப்பதும் ஆதார பூர்வமான விவரமாக உள்ளது, இதனை அவர்கள் அங்கீகரித்தே ஆக வேண்டும். அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி என்னவென்றால், நான் சொல்வதையெல்லாம் உதரித்தள்ளிவிட்டு, தனிப்பட்ட முறையில் என்னை தாக்குவது மட்டுமேயாகும்.

 

 

ஆனால், சாதாரண முஸ்லிம்கள் தங்கள் இமாம்களிடம்  அறிஞர்களிடம்  இந்த என் குற்றச்சாட்டுகளுக்கு பதிலைத் தாருங்கள் என்று  கேட்கும் போது, பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் பதில் "உங்களை பாதிக்கும் கேள்விகளை கேட்காதீர்கள்" என்பதேயாகும்.

 

FrontPage: ஆக, தங்கள் மத நூல்கள் சொல்வதையே புறக்கணித்துவிடும் இஸ்லாமிய அறிஞர்களும், இஸ்லாமியர்களும் பின்பற்றும் இஸ்லாமைப் பற்றி என்ன சொல்லமுடியும்? இதலிருந்து நாம் எதனை தெரிந்துக்கொள்கிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

Botros: இது நமக்கு எதை காட்டுகிறது என்றால், இஸ்லாமில் நம்பிக்கை குறைவு, ஆனால், ஆட்சி அதிகாரங்கள் அதிகம் என்பதைக் காட்டுகிறது.  நீங்கள் சொன்னது போல, ஒருமனிதன் தான் பின் பற்றும் நம்பிக்கையின் கோட்பாடுகளை புறக்கணித்துவிட்டு, அதற்கு வேறுவகையான அர்த்தங்களை கொடுத்துக்கொண்டு இருப்பதினால், அவனுக்கு என்ன பயன் உண்டாகமுடியும்?  உண்மையைச் சொல்லவேண்டுமானால், பெரும்பான்மையான இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமிய நூல்களில் என்ன இருக்கிறது என்பதே தெரிவதில்லை. பொதுவாக அவர்கள் தெரிந்துக்கொண்டு இருப்பதெல்லாம் இங்கே ஒரு கட்டளை அங்கே ஒரு கட்டளை முக்கியமாக "இஸ்லாமின் ஐந்து தூண்கள்" போன்றவைகள் மட்டுமே.  இதனால் தான் நான் பேசும் தலைப்புக்களை கேட்கும் இஸ்லாமியர்களுக்கு கன்னத்தில் அறைவது போன்ற ஒரு அதிர்ச்சியைத் தருகிறது. ஆனால், இவைகளை புரிந்துக்கொள்ளாத இஸ்லாமியன் "எங்களுக்கு அவர்கள் எதிரி" என்றுச் சொல்லி, உண்மை எதுவாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி கவலைப்படாமல் என்னை கொலை செய்ய முயற்சி எடுப்பான்.  அதே போல, உண்மையான சத்தியம் எது என்று விரும்பும் இஸ்லாமியர்கள், சத்தியத்தை தேடும் இஸ்லாமியர்கள், இஸ்லாமின் உண்மை நிலையை அறிந்துகொண்டு, 1400 ஆண்டுகளாக நம்பிக்கொண்டு இருந்த மிகப்பெரிய பொய்யிலிருந்து விடுபட்டு சத்தியத்தை நோக்கி வெற்றி நடை போடுகிறார்கள்.

ஒரு நேர்மையான கேள்வி என்னவென்றால், ஏன் இஸ்லாமிய உலேமாக்கள் போதகர்கள், இந்த விஷயங்களை எல்லாம் சாதாரண இஸ்லாமியர்களிடமிருந்து மறைக்கிறார்கள்? ஏன் இஸ்லாமியரல்லாதவர்களிடமிருந்து மறைக்கிறார்கள் என்பதேயாகும்? உண்மை யாரிடம் எதிர்ப்பார்க்க முடியும் என்று ஒருவர் சிந்தித்தால், "உலேமாக்களிடம் தான் எதிர்ப்பார்க்கமுடியும்" என்பது தான் பதிலாக இருக்கும். ஆனால், உண்மையில் உலேமாக்கள் உண்மையை மறைத்துவிடுகிறார்கள்.  ஒரு உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால், எப்போதெல்லாம் ஒரு இஸ்லாமிய நூலிலிருந்து நான் ஒரு பிரச்சனையுள்ள மற்றும்  இஸ்லாமியர்களுக்கு தர்மசங்கடமான விவரத்தை மேற்கோள் காட்டுகின்றேனோ, உடனே இஸ்லாமிய உலக‌ அரபி நூலகங்களிலிருந்து அந்த நூல் மாயமாக மறைந்துவிடும்.

ஒரு அடிப்படை என்னவென்றால், அனேக இஸ்லாமியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், "இஸ்லாம் என்பது இந்த உலகில் சத்தியத்திற்காக ஆன்மீக வாழ்க்கையை வாழ்வைதை விட, கேள்வி கேட்காமல் இஸ்லாமை பின்பற்றினால் போதும், எதிர் காலத்தில் கிடைக்கும் சொர்க்கம் மட்டுமல்ல, இந்த பூமியிலும்  கூட தங்களுக்கு வெற்றியும், மரியாதையும் அதிகாரமும் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்".

 

FrontPage: நீங்கள் ஒரு முறை ஒரு இஸ்லாமிய பெண் ஆண்களுக்கு பாலுட்டலாம் என்ற ஹதீஸ் பற்றி சொல்லியுள்ளீர்கள். உண்மையாக அது என்ன விவரம், இதைப் பற்றி உலேமாக்கள் (கடந்தகால நிகழ் கால உலேமாக்கள்) இதைப் பற்றி என்ன கூறுகிறார்கள்?

 

Botros: நான் இதற்கு முன்னால் சொன்ன விவரத்திற்கு இது சரியான ஒரு எடுத்துக்காட்டாகும். நான் இந்த "இஸ்லாமிய பெண்கள் ஒரு புதிய மனிதருக்கு பால் ஊட்டலாம்" என்ற ஹதீஸ் பற்றிய பிரச்சனையை வெளிக்காட்டியபோது, உலேமாக்கள், தங்கள் இஸ்லாமிய ஹதீஸைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு என்னை தாக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேட்டால், அவர்களிடம் சரியான பதில் இல்லை. தங்கள் நூல்களில் இருக்கும் பிரச்சனைகளை அலசுவதை விட என்னை தாக்கி பேசுவது அவர்களுக்கு சுலபமான வழியாகும்.

 

கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, உலேமாக்கள் இந்த கீழ்தரமான பழக்கத்தை ஆதரித்துவந்தார்கள், இதில் இபின் தமிய்யா "ஷேக் அல் இஸ்லாம்" என்பவரும் அடங்குவார்.  இதற்கும் மேலாக, நான் இந்த ஹதீஸ் பற்றி பேசிய பிறகு, அல் அஜர் என்ற சுன்னி இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் அறிஞர், ரிதா அல் கபீர் என்ற இஸ்லாமிய அறிஞர் இதற்கு ஒரு பத்வா வெளியிட்டார், அதாவது "இஸ்லாமிய பெண்கள் புதிய மனிதர்களுக்கு பால் ஊட்டலாம்" என்று பத்வா வெளியிட்டார். இதற்கு எகிப்திய மக்கள் (சந்தோஷமாக) எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் தனியாக இதனைப் பற்றி குறிப்பிட்டபோது "நான் இஸ்லாமின் கோட்பாடுகளை திருத்தமுயற்சிப்பதாக" குற்றம் சாட்டுகிறார்கள்.

FrontPage: ஆக, இஸ்லாமிய ஆதார நூல்கள் புதிய மனிதர்களுக்கு பெண்கள் பாலூட்டலாம் என்றுச் சொல்கிறது. சரி, இப்படிப்பட்ட ஒரு விவரத்தை யார் சொல்லியிருப்பார்கள்? எந்த நோக்கத்திற்காக இப்படி சொல்லியிருப்பார்கள்? யாராவது சொன்னாலும் எழுதி வைத்தவர்கள் யார்? நான் இந்த விவரத்தை ஒரு சரியான போதனையாகவே ஏற்றுக்கொள்வதாகவும் வைத்துக்கொண்டாலும், இந்த கட்டளையின் பின்னால் என்ன நன்மை இருக்கப்போகிறது?

Botros: முஹமம்து (அல்லாஹ்வின் வேண்டுதலும், பாக்கியமும் அவர் மீது உண்டாவதாக) சொன்னார் என்று எழுதிவைத்திருக்கிறார்கள். யார் இப்படிப்பட்ட ஒரு விவரத்தை உருவாக்கியவர்? முஹம்மது தான். ஏன் உருவாக்கினார்? யாருக்குத் தெரியும் ஆண்களுக்கு பாலூட்டிவிடு என்று அந்த பெண்ணுக்குச் சொல்லிவிட்ட பிறகு முஹம்மது தனக்குள் தானே சிரித்துக் கொண்டும் இருக்கக்கூடும்.  ஒருவேளை அவர் இதை ஒரு நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கலாம், அதாவது தன்னை ஒரு நபி என்று எவ்வளவு தூரம் இவர்கள் நம்புகிறார்கள் என்பதை அறியவும், அவர் வேடிக்கைக்காக சொல்லியிருக்கலாம். ஹதீஸ்களை சேகரித்த  பெரியவர்கள் இதனை எழுதியும் வைத்துள்ளனர், எதிர் கால சந்ததிகளுக்கு உதவும் என்பதால்.  இந்த ஹதீஸினால் என்ன பயன் என்று ஒருவர் கேட்கலாம், இப்படி கேட்பதாக இருந்தால், முஹம்மது செய்த அனேக காரியங்களைப் பற்றி கேட்கவேண்டிவரும்.

ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிப்பதால் என்ன பயன்?

ஆண்கள் தங்கத்தை அணியக்கூடாது, வெள்ளியை மட்டுமே அணியவேண்டும் என்ற கட்டளையினால் என்ன நனமை?

தங்கம் அணிவதை விட வெள்ளியை ஆண்கள் அணிவதினால் அதிக நன்மை எப்படி கிடைக்கும்?

"இசை" கூடாது என்றுச் சொல்வதினால் என்ன நன்மை உண்டாகப்போகிறது?

நாய்களை வெறுத்து தூரப்படுத்துவதினால் என்ன நன்மை உண்டாகும்?

மனிதர்கள் வெறும் தங்கள் வலது கையினால் மட்டும் சாப்பிடவேண்டும், இடது கையினால் சாப்பிடக்கூடாது என்ற கட்டளை எந்த நன்மையைத் தரப்போகிறது? 

எல்லா இஸ்லாமியர்கள் தாங்கள் சாப்பிட்ட பிறகு தங்கள் விரல்களை நக்கவேண்டும் அல்லது வாயினால் உருஞ்சி சுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டளையினால் என்ன நன்மை?

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், ஷரியா சட்டம் தான் நடுநிலையாக இருக்கவேண்டும், சர்வ அதிகாரமும் படைத்ததாக இருக்கவேண்டும் என்ற கட்டளைகளினால், இஸ்லாமியர்கள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்? இஸ்லாமியர்கள் இயந்திரங்களைப் போல இஸ்லாமை கேள்வி கேட்காமல் பின்பற்ற உற்சாகப்படுத்தப்படுகிறார்கள், குர்‍ஆனை கேள்வி கேட்கவிரும்புவதில்லை, "உங்களை பாதிக்கும் படியாக, கேள்விகளை கேட்கவேண்டாம்" என்று சொல்லப்படுகிறார்கள்.

 

FrontPage: முஹம்மதுவின் செக்ஸ்/பாலுறவு வாழ்க்கையைப் பற்றி இஸ்லாமிய நூல்களில் பதிவு செய்யப்பட்டவைகள் என்ன என்று சிறிது சொல்லுங்களேன்.

 

Botros: உரையாடுவதற்கு இது எனக்கு மிகவும் தர்மசங்கடமான தலைப்பாகும். இந்த விவரங்களை இஸ்லாமியர்கள் கேட்டால் அவர்களின் மனது வேதனை அடையும் என்று எனக்குத் தெரியும், இருந்தாலும், அவர்கள் மீதுள்ள என் அன்பின் காரணமாக நான் இவைகளை சொல்லவேண்டி வருகிறது. ஆனால், என்ன செய்யமுடியும், சுகம் கிடைக்கவேண்டுமானால், முதலில் சிறிது வலியும் வேதனையும் இருக்கத்தானே செய்யும், அப்போது தான் காயம் ஆரும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமிய நூல்களின் ஆதாரங்களின் படி, முஹம்மது ஒரு வழி தவறிய பாலுணர்வு கொண்ட நபர் ஆவார். 

 

·          அவர் சிறுமிகளின் மற்றும் சிறுவர்களின் நாக்கை உறிஞ்சி சுவைப்பார். 

 

·          அவர் பெண்களின் உடைகளை அணிந்துக்கொள்வார் (இந்த நிலையிலும் அவருக்கு வெளிப்பாடுகள் வரும்).

 

குறைந்த பட்சம் அவருக்கு 66 மனைவிகள் இருந்தனர். சில நேரங்களில்,  அதாவது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளும்படி அல்லாஹ் சிறப்பான வெளிப்பாடுகளை அனுப்புவார். மற்றும் வேறு எந்த ஒரு முஸ்லீமுக்கு இல்லாத அளவிற்கு மனைவிகளை வைத்துக்கொள்ளும் படி இவருக்கு சிறப்பு வெளிப்பாடுகள் இருந்தன.  இவர் எப்போதும் பாலுணர்வு எண்ணங்களாலேயே எப்போதும் ஆட்கொள்ளப்பட்டு இருந்தார். ஒரு முறை "பேசும் கழுதையிடம் இவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா ‍ கழுதையே உனக்கு செக்ஸ் என்றால் பிடிக்குமா?" என்பது தான். இவர் அல்லாஹ்வின் சொர்க்கத்தை ஒரு பாலுணர்வு நிரம்ப வழியும் இடமாக சித்தரிக்கிறார், சில மிகப்பெரிய இஸ்லாமிய விரிவுரையாளர்களின் கருத்துப்படி, முஸ்லீம்கள் சொர்க்கத்தில், நாள் முழுவதும் கன்னிப்பெண்களோடு உடலுறவு கொள்வதிலேயே ரொம்பவும் பிஸீயாக இருப்பார்களாம். அவர் ஒரு மரித்த பெண்ணோடும் உடலுறவு கொண்டுள்ளார். இன்னும் இப்படி அனேக வெட்கப்படக்கூடிய விஷயங்களை அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே  போகலாம். மறுபடியும் நான் அழுத்திச் சொல்கிறேன், இவைகளை நான் சொல்லவில்லை, இஸ்லாமின் சொந்த நூல்களே அவரைப் பற்றி இவைகளைச் சொல்கின்றன. ஆனால், அரபி பேசாத இஸ்லாமியர்களுக்கு  இவைகள் தெரிவதில்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட  புத்தகங்கள் அரபியிலிருந்து வேறு மொழிக்கு  மொழியாக்கம் செய்யப்படவே இல்லை. ஜிஹாத் வாட்ச் (http://www.jihadwatch.org/)  என்ற தளத்தில் எழுதும் ஒருசில கதா நாயகன்களுக்கு தவிர மற்றவர்களுக்கு இவைகள் தெரியவாய்ப்பில்லை.



FrontPage: ஆமாம், அந்த தளம் நம்முடைய நண்பர் ராபர்ட் ஸ்பென்சர் அவர்களின் தளமாகும்.

ஆனால், இங்கே தான் முக்கியமான விவரம் உள்ளது. இப்படிப்பட்ட காரியங்களை நீங்கள் சொல்கிறீர்கள் என்று அனேக இஸ்லாமியர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.  ஆனால், இந்த பிரச்சனை நீங்கள் சொல்வதினால் அல்ல, இந்த விவரங்கள் அனைத்தும் இஸ்லாமிய ஆதார நூல்களிலேயே இருக்கின்றது என்பது தான் முக்கியமான விஷயமாக உள்ளது. இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட விஷயங்களினால் அதிர்ச்சி அடைந்தால் அவர்களே தங்கள் இஸ்லாமிய நூல்களை படித்து தெரிந்துகொள்ளட்டும், அல்லது வேறு ஏதாவது செய்துக்கொள்ளட்டும்.  இந்த விவரங்களை யார் எழுதினார்கள்? ஏன் எழுதினார்கள் என்று அவர்களே ஆராய்ச்சி செய்யட்டும், அவைகள் உண்மையென்றோ அல்லது பொய் என்றோ விளக்கிவிடட்டும். 

இங்கு முழு பிரச்சனையும் நீங்கள் சொல்வதினால் அல்ல, அதற்கு பதிலாக இஸ்லாமிய நூல்களே இப்படி சொல்வதினால் தான் உள்ளது.

 

Botros:  இவைகள் எல்லாம் எங்கேயிருந்து ஆரம்பமாகிறது?  குர்‍ஆன் 33:37ன் படி முஹம்மது தன் மருமகளையே திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறது, இந்தப் பெண் மீது தான் அவர் மோகம் கொண்டு இருந்தார்.  சில வசனங்களுக்குப் பிறகு, குர்‍ஆன் 33:50ல், உலகத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் சரி, அப்பெண் தன்னை முஹம்மதுவிற்கு அர்பணித்தால் அவளோடு உடலுறவு கொள்ள அல்லாஹ் முஹம்மதுவிற்கு அனுமதி அளிக்கிறார். இந்த சலுகை, அனுமதி முஹம்மதுவிற்கு மட்டுமே தான், வேறு யாருக்கும் இல்லை. இப்படி தன் மோக இச்சைகளை நிறைவேற்ற வெளிப்படும் அல்லாஹ்வின் வெளிப்பாடுகள் அடிக்கடி வருவதினால், அவரின் சிறுமி மனைவி ஆயிஷா முஹம்மதுவிடம் இவ்வாறு கூறுவாராம்: "உங்கள் இறைவன் உங்கள் ஆசைகளை வெகு சீக்கிரத்தில் நிறைவேற்றுகிறார்".  மற்றும் தன்னை பின்பற்றும் முஸ்லிம்களுக்கு, போரில் பிடிபடும் எந்த இஸ்லாமியரல்லாத பெண்ணாக இருந்தாலும், அவளை வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள முஹம்மது அனுமதி அளித்துள்ளார் (குர்‍ஆன் 4:3). இந்த விவரங்கள் வெறும் குர்‍ஆனிலிருந்து வந்தவைகள் மட்டுமே. இன்னும் ஹதீஸ்களிலும், அவரது வாழ்க்கை சரிதைகளிலிருந்தும் அவரது பாலுணர்வு விவரங்களைப் பற்றி பேச ஆரம்பித்தால், அது மணிக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்ளும். 

இதற்காகவே, நான் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முஹம்மதுவின் பாலுணர்வு நடத்தைகள் பற்றி விளக்கியுள்ளேன், அவைகளில் இவைகள் அடங்கும், அதாவது,

·          செத்துப்போன பெண்ணோடு முஹம்மது தூங்கியது,

·          மாதவிடாய் இருக்கும் பெண்ணிலிருந்து வரும் இரத்த வாடையை அவர் முகர்ந்துப்பார்த்தது,

·          பெண்களின் உடைகளை அவர் அணிந்துக்கொண்டு இருந்தது போன்றவைகளைச் சொல்லலாம்.

ஜிஹாத் வாட்ச்  தளம் அனேக இந்த சிகழ்ச்சிகளை  விவரங்களை மொழியாக்கம் செய்துள்ளது (http://www.jihadwatch.org/archives/025511.php).

FrontPage: உங்களின் அனேக வீடியோக்களில் மிகவும் பிரபலமானது, உங்களின் 10 கோரிக்கைகள் பற்றியது. http://www.youtube.com/watch?v=4HXX2fO8pM4

 

உங்களின் இந்த ஊழியங்களினால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 

 

Botros: இறைவன் தனக்காக என்னை பயன்படுத்துவதினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஹயா தொலைக்காட்சி நிலையத்திற்கும் எனக்கு

August 5, 2009

தர்மிக்ஷி - என் கேள்விகளுக்கு பதில்களை கண்டுக்கொண்டேன்

என் கேள்விகளுக்கு பதில்களை கண்டுக்கொண்டேன்



என் பெயர் தர்மிக்ஷி. நான் மலேசியாவில் வாழும் மலாய் இனத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன்.


நான் என் சுய விருப்பத்தின் படி கிறிஸ்தவத்தை அறிந்துக் கொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்பு, எந்த ஒரு மனிதனின் வற்புறுத்தலும் இல்லாமல், சுயமாக‌ கிறிஸ்தவத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, தபால் மூலம் அது தொடர்பான பயிற்சியை எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் என்னை சுற்றியிருந்த நண்பர்களும் நான் வாழ்ந்த சூழ்நிலையும், நான் கிறிஸ்தவத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள தூண்டுதலாக இருந்தது . ஆனால், என் இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து வந்த எதிர்ப்பு என்னை தர்ம‌சங்கடமான நிலையில் வைத்தது. ஏனென்றால், இஸ்லாமில் சில ஏற்றுக்கொள்ள முடியாத சடங்குகள் இருப்பதாக எனக்குப் பட்டது, உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், நமாஜ் என்றுச் சொல்லக்கூடிய தொழுகையை ஒரு குறிப்பிட்ட வகையில் தான் செய்யவேண்டும், மற்றும் அந்த தொழுகை நேரத்தில் நமக்கு புரியாத மொழியில் தான் சூராக்களை ஓதவேண்டும் போன்றவைகளைச் சொல்லலாம். அப்பயிற்சியின் மூலம் அடிப்படை கிறிஸ்தவ சித்தாந்தத்தையும், இஸ்லாத்துடன் அது கொண்டுள்ள ஒற்றுமையையும் அறிந்து கொண்டேன் (அதாவது நரகம் பற்றிய நம்பிக்கையைப் பற்றிச் சொல்லலாம்). அந்த தபால் வழி கிறிஸ்தவ படிப்பை முடித்ததும் எனக்கு ஒரு சான்றிதழ் அனுப்பினார்கள்.

அதன் பிறகு நான் கோலாலம்பூரில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஆராதனைக்குச் சென்றேன். இங்கு நான் என் சுய விருப்பத்தின்படிச் சென்றேன். அங்கு செல்வதற்கு முன்பு, அந்த தேவாலயத்தின் நிர்வாகத்தொடு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, என்னை அறிமுகம் செய்துக்கொண்டு, நான் கிறிஸ்தவத்தை அதிகமாக அறிய விரும்புகிறேன், அதற்காக வரவிரும்புகிறேன் என்றுச் சொன்னேன். நீங்கள் தாராளமாக ஆராதனையில் (தொழுகையில்) கலந்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆராதனையில் கலந்துக்கொண்ட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கிருந்த மக்கள் என்னை அன்புடன் வரவேற்று நட்புடன் பழகினார்கள். அந்த தேவாலயத்தில் எந்த ஒரு சிலை அல்லது விக்கிரகத்தை நான் காணவில்லை, இது எனக்கு இன்னும் மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த தேவாலயம் (சர்ச்) ஒரு பெரிய அறையாக (ஹால்) இருந்தது, மொத்தத்தில் ஒரு மசூதியைப் போல இருந்தது.


அந்த ஆராதனையில் "இரா போஜனம்" என்றுச் சொல்லக்கூடிய "ஹோலி கம்யூனியன்" இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். அப்படிப்பட்ட சமயத்தில் இஸ்லாமியர்களை வலையில் சிக்கவைப்பதற்கு, ஒரு ரொட்டித் துண்டைக் கொடுபபர்கள். அந்த ரொட்டித் துண்டை சாப்பிட்டவுடன் நம்முடைய இருதயம் இருளடையும், பிறகு நாம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்று நான் இஸ்லாமியர்களால் போதிக்கப்பட்டு இருந்தேன். ஆனால், அன்று "இரா போஜனம்" நடைப்பெறவில்லை. ஆராதனை முடியும் தருவாயில் எனக்கு ஒரு சிறு புத்தகம் வழங்கப்பட்டு, என்னுடைய எதிர்கால‌ நம்பிக்கையைப் பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன்.


உள்ளத்தின் ஆழத்தில் விசுவாசிக்க வேண்டும் என்று தோன்றினாலும், தீர்வு காணப்படாத பல ஐயங்கள் இருந்தன. நான் என்னையே கேட்டுக்கொண்டேன், "இந்த புதிய நம்பிக்கையினால் எனக்கு என்ன நன்மை உண்டாகப்போகிறது?". நான் ஏன் இப்படி கேட்டுக்கொண்டேன் என்றுச் சொன்னால், அக்காலத்தில் மலேசியாவில், "ஒரு முஸ்லீம் எந்த காரணத்தைக் கொண்டும், இயேசுவை பின்பற்றுகிறவராக மாறமுடியாது". இன்னும் அனேக கேள்விகள் எழும்பி என்னை வாட்டின‌, ஆதாவது, "இந்த புதிய நம்பிக்கைக்காக நான் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிவரும்?, நான் எந்தெந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்? என்னுடைய இந்த முடிவு சரியானதா?". இப்படிப்பட்ட அனேக கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருந்தன. இக்கேள்விகள் அனைத்தையும் நான் புறந்தள்ளிவிட்டேன், மறுபடியும் இஸ்லாமுக்கு திரும்பிவிட்டேன் (ஹஜ்ரத் ஈஸாவின் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிட்டேன்).


இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் ஒரு மதப்பற்றுள்ள இஸ்லாமியனாக மாறினேன். என் குடும்ப அங்கத்தினர்களும், என் நண்பர்களும் தொடர்ந்து தொழுகையை நிலைநாட்ட உற்சாகப்படுத்தினர். அவர்கள் கேட்டுக்கொண்டபோதெல்லாம் அவர்களுடன் இணைந்து நான் தொழுவேன். தொழுகை முடிந்ததும் நிம்மதியாக நான் ஓய்வு எடுத்துக்கொள்வேன். இப்படி பலமுறை நடந்தது. சுமார் ஆறு மாதங்களாக என் இஸ்லாமிய கடமைகளை செய்ய நான் தவறவில்லை. அதன் பிறகு சிறிது அமைதியாகிவிட்டேன். என்னை சுற்றியுள்ள மக்களால் நான் அதிகமாக கவரப்பட்டேன். எனக்கு திருமணமாவதற்கு முன்பே நான் மத கடமைகளை செவ்வனே செய்வதில், அதிக ஆர்வம் காட்டிவந்தேன். தினமும் ஐந்து வேளை தொழுகையை நான் கடைபிடிக்காமல் விட்டுவிட்டதில்லை. இதோடு கூட, நான் திருமணம் செய்ய இருந்த பெண் கூட (இப்போது என் மனைவி) என்னை அதிகமாக உற்சாகப்படுத்தினாள். நான் தொலைபேசியில் அப்பெண்ணோடு தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம், "இன்று எத்தனை மணிக்கு எழுந்தீர்கள்?" என்று கேட்பாள். நான் தினமும் சிறிது கால தாமதமாக எழுந்திருப்பேன், இதனால் எங்கே நான் என் காலைத் தொழுகையை தவறவிட்டுவிடுவேனோ என்று எண்ணி இப்படி கேள்வி கேட்பாள். ஏன் இன்னும் அதிகாலையில் எழுந்து காலைத் தொழுகையை செய்யக்கூடாது என்று கேட்கத்தொடங்கிவிடுவாள். இப்படிப்பட்ட தொடர்ச்சியான உற்சாகத்தினால், நான் என் ஆன்மீக வாழ்வில் உச்சியை அடைந்திருந்தேன்.


வளர்ந்த பிறகு உம்ரா கடமையை நிறைவேற்ற நான் மெக்காவிற்குச் சென்றேன். பல நாட்டிலிருந்து வந்திருந்த பல இன மக்களின் நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தேன். இஸ்லாத்திலும் கருத்து வேறுபாடும் சபை வேறுபாடும் இருப்பதைக் கண்டேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக தொழுகை நடத்தினார்கள். ஒரே திசையை நோக்கினாலும் வெவ்வேறு விதமாகவே தொழுது கொண்டார்கள். இந்த தொழுகைகளில் கண்ட வித்தியாசம் என்னை சந்தேகத்திற்குள்ளாக்கியது. தொழுகை எப்படி செய்யவேண்டும் என்ற முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக இதன் படி மட்டுமே செய்யவேண்டும் என்று நான் போதிக்கப்பட்டேன். ஆனால், இங்கு மக்காவிலேயே தொழுகை பலவகைகளில் செய்யப்படுவதை என்னால் காணமுடிந்தது. இந்த தொழுகை முறைகளில் எது சரியான முறை என்று நான் ஆச்சரியப்பட்டேன். மற்றும் இதுவரை நான் பின் பற்றி செய்த தொழுகை முறை சரியானதா என்ற சந்தேகம் உண்டானது. ஒருவேளை நான் செய்துக்கொண்டு வந்த தொழுகை முறை தவறானதாக இருக்குமானால், என் தொழுகைகள், வேண்டுதல்கள் அனைத்தையும் அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டார். இப்படியில்லாமல், நான் செய்துக்கொண்டு வந்த தொழுகை முறை சரியானதாக இருந்தால், மக்காவில் நான் என் கண்களுக்கு முன்பாக காணும் தொழுகைகளை அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டார். இது மிகவும் வேதனையான, தர்மசங்கடமான முடிவாகும்.


தொழுகையை எந்த முறையில் செய்யவேண்டும் என்று குர்‍ஆனில் சொல்லப்படவில்லை, முஹம்மதுவின் செய்கைகள், வார்த்தைகள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் எந்த முறையில் தொழுகையை செய்கிறாரோ அதன் மீது சார்ந்து தான் அவர் ஹதீஸ்களுக்கு பொருள் கூறுவார். ஒரு குறிப்பிட்ட தொழுகை முறைக்கு பழக்கப்பட்டுவிட்ட ஒரு இஸ்லாமியர், மற்றவர்கள் வேறு முறையில் தொழுகையை செய்வதைக் கண்டால், சரமாரியாக கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவார். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், தொழுகை நேரத்தில் கைகளை வைத்துக்கொள்ளும் நிலையைப் பற்றிச் சொல்லலாம். அதாவது கைகளை விரித்து வைத்துக்கொள்ளவேண்டுமா, அல்லது இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு மாற்றவேண்டுமா? ஒருமுறைக்கு அடுத்த முறைக்கு இடைவெளி எவ்வளவு நேரம் இருக்கவேண்டும்? அல்லது எவ்வளவு நேரம் இடைவெளி இருக்கக்கூடாது? இப்படிப்பட்ட விவரங்கள் அனைத்தும் குர்‍ஆனில் சொல்லப்படவில்லை அல்லது குர்‍ஆனினால் உறுதியாக்கப்படவில்லை. இறைத்தூதரின் வார்த்தைகளாகிய ஹதீஸ்களுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட விஷயங்களை நான் என் கண்களால் கண்டு சாட்சியிடுகிறேன். இஸ்லாமிய அறிஞர்கள் வித்தியாசமாக பொருள் கூறுவதினால், அனேக புதிய முறைகளை நான் கண்டிருக்கிறேன். ஒரு சில முறைகளைத் தவிர மலேசியாவில் எல்லாவித தொழுகை முறைகளை பார்க்கமுடிவதில்லை. மலேசியாவில் ஷபியா தொழுகை முறை கற்றுக்கொடுக்கப்படுகிறது. மக்காவில் மலேசிய முறைப்படியான தொழுகை முறையை பின்பற்றி நான் தொழுதுக்கொண்டேன்.


நான் மக்காவில் இருந்த சமயத்திலேயே என் உள்ளத்தின் ஆழத்தில் அனேக கேள்விகள் எழும்பின. என்னை நானே கேட்க ஆரம்பித்தேன், "ஏன் நாங்கள் இப்போது தொழுதுக்கொள்வதுப் போல தொழுதுக்கொள்ள வேண்டும்?" ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நபி செய்தது போலவே நாம் ஏன் இன்று செய்யவேண்டும்? இப்படி தொழுதுக்கொள்வதில் உள்ள தத்துவம் பற்றி கேள்வி எழுப்பினேன். என் மனதில் நான் போராடினேன். "இவைகள் பல ஆண்டுகளுக்கு முன்பாக செய்யப்பட்டவைகள், நான் இப்போது செய்துக்கொண்டு இருப்பது சரியானதா?" என்று கேள்வி கேட்டுக்கொண்டேன். மக்காவில் உள்ள கருப்புக் கல்லை முத்தமிட நான் எல்லா மக்களுக்கு போட்டியாக‌ முட்டியடித்துக்கொண்டு சென்றுக்கொண்டு இருக்கும் போது, என்னை நானே கேட்டுக்கொண்டேன், "ஏன்? ஏன்? ஏன்? இப்படி செய்வது எதற்காக?"


நான் மக்காவிலிருந்து என் தாய் நாட்டிற்கு வந்த பிறகு, என் தொழுகை வாழ்க்கையை சிறிது தளர்த்தினேன். கிறிஸ்தவம் பற்றி மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தேன். இப்படி சிந்தித்ததாலும் எனக்கு எந்த நன்மையும் இல்லை, எனென்றால், யாரும் கிறிஸ்தவம் பற்றி எனக்கு போதிக்கவில்லை. இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்று சரியாக விளங்கவில்லை.


திடீரென்று என் மனதில் ஒரு ஆலோசனை வந்தது. நான் தொலைபேசி புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு கிறிஸ்தவ சபை விலாசத்தை எடுத்துக்கொண்டு அவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நான் பேசிய நபர் ஒரு இந்திய பெண்மணியாவார், அவர் தன்னை வந்து சந்திக்கும்படிச் சொன்னார். ஆகையால், நான் அவரைக் காணச் சென்றேன். நான் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன். இக்கேள்விகளில் ஒரு கேள்வி, "உருவச் சிலைகளைப் பற்றியது". இதற்கு முன்பு ஒரு பிலிப்பினோ நண்பர் எனக்கு ஒரு சிறிய இயேசுவின் சிலையை கொடுத்து இருந்தார். அச்சிலையை நான் என்னுடன் கொண்டு வந்திருந்தேன், அதனை அப்பெண்மணியிடம் காண்பித்தேன். அவர் "இது சரியானது அல்ல" என்றுச் சொன்னார். இது தான் நான் முதல் முறை இப்படிப்பட்ட பதிலை கேட்டது. இந்த பதிலைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த பெண் எனக்கு இன்னும் அதிகமாக விவரித்தார்கள், பிறகு ஒரு சிறிய புத்தகத்தை கொடுத்து வீட்டிற்குச் சென்று படிக்கும் படிச் சொன்னார்கள். அந்த சிறிய புத்தகத்தை படித்த பிறகு நான் அந்தப் பெண்ணை மறுபடியும் சந்தித்து, "நான் ஹஜ்ரத் ஈஸாவை என் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன், இதற்கு உதவி புரியுங்கள்" என்றுச் சொன்னேன். அந்த நாளில் ஒரு சிறிய‌ ஜெபத்தை சொல்லி, நான் இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர் உதவி புரிந்தார்கள். அந்த சகோதரி ஒரு சிறிய‌ ஜெபத்தைச் சொல்லச் சொல்ல நான் திரும்பச் சொன்னேன், அது ஒரு சிறிய ஜெபம் தான், அதாவது மனந்திரும்புதலுக்கான ஜெபம் மற்றும் ஹஜ்ரத் ஈஸாவிற்கு என்னை ஒப்புவித்ததற்கான சிறிய ஜெபம். பிறகு எனக்கு பைபிளின் ஒரு பிரதி கொடுக்கப்பட்டது.


அந்த பெண்மணி என்னிடம் "உங்களை தொடர்ந்து வழி நடத்த, ஒரு பெண்ணாக என்னால் முடியாது, எனவே, உங்களோடு தொடர்பு கொண்டு வழி நடத்த ஒரு சகோதரனை" நான் காண்பிக்கிறேன் என்றுச் சொன்னார்கள். அவர் சகோதரர் "அ" என்பவரின் விலாசத்தைக் கொடுத்தார்கள், அதன் பிறகு இந்த சகோதரர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள்.


இப்பொழுதெல்லாம், "ஏன்" என்ற கேள்விகளை நான் கேட்பதில்லை, ஏனென்றால், நான் என் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை கண்டுக்கொண்டேன். நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு ஒரு நண்பர் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்கள், அதினால் என் அனேக சந்தேகங்கள் தீர்ந்தன. அந்த புத்தகத்தில், புதிதாக இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் விசுவாசிகள் கேட்கும் பொதுவான கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. இது மிகவும் உபயோகமான புத்தகமாகும்.


இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து ஹஜ்ரத் இயேசுவை பின் பற்றுகிறவனாக நான் மாறியதால், என் நம்பிக்கையை வெளிக்காட்டுவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது. இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களுடன் இஸ்லாமிய சமுதாயம் மிகவும் கொடுமையான முறையில் நடந்துக்கொள்கிறது, அதுவும் காரணமில்லாமலேயே வெறுக்கிறது. இஸ்லாமை விட்டு வெளியேறுபவனின் மீது கோபமும், மூர்க்கமும் கொண்டு அவதூறாக பேசுகிறார்கள், ஏனென்றால், இஸ்லாமை விட வேறு ஒரு மார்க்கத்தை தெரிந்தெடுக்க அவன் தைரியம் கொண்டதால், இந்த நிலை. எல்லா விதமாக பயங்கரமான விளைவுகள் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்கள் சந்திக்க வேண்டி வரும்.


ஈஸா அல் மஸீஹாவை பின் பற்றிய நாள் முதற்கொண்டு என் நம்பிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. நான் முஸ்லீமாக இருந்த போது, கடவுள் பயப்படவைப்பவர் போலவும், தண்டிக்கிறவர் போலவும் கண்டேன். ஆனால், இப்போது அவரை வித்தியாசமாக காண்கிறேன். இப்போதும் அவர் மிகவும் வல்லமைமிக்க உயர்ந்த தேவன் தான், ஆனால், அதே நேரத்தில் நான் அன்போடு அவரோடு பேசி, என் எண்ணங்களை அவரோடு பகிர்ந்துக்கொள்ளும் அளவிற்கு அவரை அவ்வளவு நெருக்கமாக காண்கிறேன். எனக்கு நெருக்கமாக அவர் இருக்கிறார், நான் சொல்வதை அவர் கேட்கிறார் என்பதை நான் அறிவேன். என்னை பொருத்த மட்டில், ஈஸா மஸீஹா உலக இரட்சகர் ஆவார், அவரே தேவனாவார். நான் ஜெபம் செய்யும் போதெல்லாம், இதனை நான் நினைவில் நிறுத்துகிறேன்.


தேவனிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட மிகவும் சிறப்பான ஆசீர்வாதம் என்னவென்றால், அவரது இரட்சிப்பை நான் காணும்படிச் செய்ததாகும், என்னை அவர் தெரிந்தெடுத்துக்கொண்டதாகும். தேவன் என்னை தெரிந்தெடுத்துக் கொண்டார் மற்றும் என்னைப் பற்றிய அவரது திட்டம், மலேசிய இஸ்லாமியர்களுக்கு அவரைப் பற்றி எனக்குத் தெரிந்ததை பகிர்ந்துக்கொள்வதாகும். சமீபத்தில், ஒரு மலேசிய பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் அனேக விஷயங்களை பேசினோம், அதாவது அப்பெண்ணின் கிறிஸ்தவ நண்பர்கள், பைபிள் மற்றும் ஈஸா மஸீஹா போன்ற தலைப்புக்கள் பற்றி பேசினோம். ஆனால், அப்பெண் விசுவாசத்தில் காலெடுத்து வைக்க தயாராக இல்லை. இருந்தபோதிலும், ஒரு மலாய் பெண்ணாக இருந்தால், கட்டாயமாக ஒரு முஸ்லீமாகத் தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றுச் சொன்னாள்.


மலேசிய அரசாங்கம், மக்கள் இதர மதங்களுக்கு மாறுவதற்கு தடை விதிக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஒரு மனிதன் பின்பற்றும் தன் நம்பிக்கைக்காக முடிவுகளுக்காக, எந்த பயமுறுத்தலும் அவனுக்கு எதிராக இருக்கக்கூடாது. மனிதர்கள் சில விஷயங்களில் தீவிரமாகவும், சில விஷயங்களில் லேசான கண்ணோட்டத்தோடும் இருக்கிறார்கள். அரசாங்கத்தின் திட்டங்கள் தெளிவாக இருக்கவேண்டும், ஒரு பக்கமாக சாராமல் இருக்கவேண்டும், மக்கள் தங்களுக்கு பிடித்தபடி தொழுதுக்கொள்ள அனுமதிக்கவேண்டும். ஒரு மனிதன் தனக்கு பிடித்த நம்பிக்கையை பின்பற்றும்படியான சுதந்திரம் அவனுக்கு கிடைக்கும் நாட்கள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவன் எடுத்த நம்பிக்கையை மதித்து குடும்பமும், நண்பர்களும், சமுதாயமும், வேலை ஸ்தலங்களும் அவன் எடுத்த முடிவிற்காக அவனை மதிக்கும் நாட்கள் வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.


ஆங்கில மூலம்: Tarmizi Testimony



© Answering Islam, 1999 - 2009. All rights reserved.

Tamil Source: http://www.answering-islam.org/tamil/testimonies/tarmizi.html

 

 

இஸ்லாமிய சகோதரரின் கேள்விக்கு பதில்


===============
//Kaja Magdoom said:

யோவான்: 14:16, யோவான்: 10:30., மேற்கண்ட வசனங்களில் நீங்களே ஒத்து கொண்டுல்லேர்கள் அந்த மற்றொரு தேற்றரிவலன் யார் நீங்கள் இதற்கு பதில் சொல்ல முடியாது ஏன் என்றால் ப்ய்பில் ஒரு முற்றுபெறாத கிரந்தம்//

Umar said:

அன்பான சகோதரர் காஜா மக்தூம் அவர்களுக்கு,

யோவன் 14:16ம் வசனத்தில் சொல்லப்பட்ட தேற்றரவாளன் "முஹம்மது" அல்ல, அவர் பரிசுத்த ஆவியானவர். உங்களுக்கு நேரமிருந்தால்  புதிய ஏற்பாட்டை படித்துப்பார்க்கவும்.

முஹம்மது ஒரு நபி என்றும், அவரைப் பற்றி பைபிளில்  உள்ளது என்றும் இஸ்லாமியர்களாகிய நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள், அதற்காக முஹம்மதுவை எப்படியாவது பைபிளில் கண்டிபிடிக்கவேண்டும் என்று சம்மந்தமில்லாத வசனத்தை எடுத்துக்கொண்டு அதைப் பற்றி விரிவுரைச் சொல்கிறீர்கள். ஆனால், உண்மை அது அல்ல. முஹம்மது பற்றி பைபிளில் குறிப்பிடப்படவில்லை. பைபிள் முஹம்மதுவை ஒரு நபி என்று அங்கீகரிப்பதில்லை.

இந்த விவரம் பற்றிய தமிழ் கட்டுரைகளை கீழ் கண்ட தொடுப்புகளில் படிக்கவும்:

    * யோவான் 14:16 வேறொரு தேற்றரவாளன் என்று இயேசு குறிப்பிடுவது முகமதுவையா?
http://isakoran.blogspot.com/2007/07/1416.html

    * உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
http://www.answering-islam.org/tamil/authors/davidwood/deductions.html

    * உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது "முகமதுவை" அல்ல
http://isakoran.blogspot.com/2007/08/332.html

    * ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது முகமதுவை அல்ல
http://isakoran.blogspot.com/2007/09/33.html

பைபிள் முற்றுப்பெறாத வேதமல்ல, குர்‍ஆன் தான் இங்கு ஒரு வசனம் அங்கு ஒரு வசனம் என்று சம்மந்தமில்லாமல் பேசுகிறது. பைபிளின் முதல் புத்தகம் ஆதியாகமத்தில் ஆரம்பித்து வெளிப்படுத்தல் விசேஷம் என்ற புத்தகத்தோடு முடிகிறது.

அந்த இன்னொரு தேற்றரவாளன் யார் என்பதை "புதிய ஏற்பாட்டின் ஐந்தாம் புத்தகத்தின் முதல் சில அதிகாரங்களை படித்தாலே புரிந்திருக்கும்". ஆனால், நீங்கள் பைபிளை படிக்காமலேயே அதைப் பற்றி விரிவுரை கொடுக்கிறீர்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.

முற்றுப்பெறாத புத்தகம் குர்‍ஆன் தான், அதனால் தனித்து நிற்கமுடியாது, ஹதீஸ்கள் இல்லாமல் குர்‍ஆன் வெறும் உயிர் இல்லாத உடல் தான்.

//Kaja Magdoom முதலில் பிபிலை நான் இறை கிரந்தம் என்றே ஏற்றுகொல்வதற்கில்லை, இன்ஜீல் என்பது தான் இறை கிரந்தம் என்பதாக திரு குரான் கூறுகிறது அந்த இன்ஜீலும் மற்றத்துக்குள்ளகி விட்டதாக அல் குரான் பறைசாற்றுகிறது.

Umar said:

நானும் தான் குர்‍ஆன் ஒரு வேதம் என்று ஏற்றுக்கொள்வதில்லை, என்னைப்போல கோடிக்கணக்கானவர்களும் குர்‍ஆனை ஒரு வேதம் என்று அங்கீகரிப்பதில்லை.

முக்கியமாக உங்களிடம் நான் கேட்க விரும்புவது என்ன தெரியுமா?

ஒரு முறையாவது நீங்கள் பைபிளை படித்ததுண்டா? 

அல்லது

இயேசுவைப் பற்றி எழுதுகிறீர்கள், அவரது வாழ்க்கையை புதிய ஏற்பாட்டிலிருந்தாவது படித்து தெரிந்துக்கொண்டதுண்டா?

ஒரு புத்தகத்தை படிக்காமலேயே "அதை நான் வேதம் என்று அங்கீகரிப்பதில்லை" என்றுச் சொல்வது படித்தவர்களுக்கு அழகா? அறிவுடமையா? என்று சிந்தித்துப்பாருங்கள்.

என்னை கேட்டால், நான் குர்‍ஆனை படித்தேன், படிக்கிறேன், இன்னமும் படிப்பேன். அதனால், நான் குர்‍ஆனையும், ஹதீஸ்களையும் படிப்பதினால், நான் சொல்கிறேன் "குர்‍ஆன் ஒரு வேதம் என்று நான் அங்கீகரிக்கமாட்டேன்". இப்படி சொன்னால் நான் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது, என் கருத்தை நான் சொல்லவும் எனக்கு தகுதி வேண்டும் (அது என்ன தகுதி?  -  குர்‍ஆனை நான் ஒரு முறையாவது படித்து தெரிந்துக்கொண்ட பிறகு கருத்துச் சொல்லவேண்டும்).

அதனால், உங்கள் சொந்த கருத்தோ என் சொந்த கருத்தோ முக்கியமில்லை, அதற்கு பதிலாக‌ "நாம் அங்கீகரிப்பதில்லை" என்றுச் சொன்ன கருத்திற்கு என்ன ஆதாரத்தை வைக்கிறோம் என்பது தான் முக்கியமானது.

இன்ஜில் மாற்றத்திற்குள்ளாகி விட்டது என்று என்று இஸ்லாமியர்கள் சொன்னால், அது உங்களுக்கே அவமானம், உங்கள் அல்லாஹ்விற்கே அவமானம். அதாவது, "இன்ஜில் அல்லாஹ்வின் வார்த்தை, அதை அவர் இறக்கினார், ஆனால், மக்கள் அதனை மாற்றிவிட்டார்கள்" என்றுச் சொன்னால், அதை பாதுகாக்க அல்லாஹ்வினால் முடியவில்லை, தன் வேதத்தை தானே பாதுகாக்க தவறிவிட்டார் என்று அர்த்தமாகிறது. அல்லது தன் வேதத்தை மனிதர்கள் மாற்றும் போது, அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அதனை தடுக்க சக்தியில்லாமல் கையாலாகாத ஒரு இறைவனாக அல்லாஹ் தென்படுகிறார்.


ஆக, மேலே உள்ள இரண்டில் ஏதாவது ஒரு தெரிவை நீங்கள் எடுக்கவேண்டும், அதாவது,


1) அல்லாஹ் தன் வேதத்தை இன்ஜிலை தானே பாதுகாக்கவில்லை.

அல்லது

2) மனிதர்கள் தன் வேதத்தை மாற்றும் போது, அதை பார்த்துக்கொண்டு வேண்டுமென்றே சும்மா இருந்துவிட்டார் அல்லது மனிதர்களை தடுக்க சக்தியில்லாத இறைவனாக ஒரு பலவீனமான அல்லாஹ்வாக இருந்துவிட்டார்.

இந்த இரண்டு தெரிவு தவிர வேறு தெரிவு "உலக இஸ்லாமியர்களுக்கு இல்லை".

தன் முந்தைய வேதத்தை பாதுகாக்க முடியாத அல்லாஹ்வினால் எப்படி தன் பிந்திய வேதமாகிய குர்‍ஆனை பாதுகாக்க முடியும்?  இந்த கேள்வியை கேட்டுப்பார்த்து இருப்பீர்களா?

அல்லாஹ்வின் கையாலாகாத இந்த செயல் பற்றிய தமிழ் கட்டுரையை கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பில் படிக்கவும்

குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா? (Is the Quran Preserved?)
http://www.answering-islam.org/tamil/authors/khaled/is-the-quran-preserved.html


// Kaja Magdoom said
ஏசு இறந்தார் என்பது ஒரு கட்டுக்கதை அவர் இறந்து போகவில்லை சிலுவையில் அறியப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவரை நம்மளவில் நாம் உயர்திகொண்டோம் என்பதாக அல்லாஹ் தான் திருமறையில் கூறுகிறான். //

Umar said:

இங்கு தான் பிரச்சனையே இஸ்லாமுக்கு வருகிறது... அதாவது சிலுவையில் இயேசு மரிக்கவில்லை, நான் தன்னளவில் எடுத்துக்கொண்டேன் என்று அல்லாஹ் கூறுவதால், தனக்கே தெரியாமல் கிறிஸ்தவத்தை உருவாக்கியுள்ளார், உங்கள் அல்லாஹ்.

அல்லாஹ் அறியாமையில் செய்த இந்த தவறு என்ன? அல்லாஹ் எப்படி அறியாமையில் கிறிஸ்தவத்தை உருவக்கியிருக்க முடியும் என்பதை அறிய கீழ் கண்ட தமிழ் கட்டுரையை படிக்கவும்.

ஏமாற்றும் இறைவன் (அல்லாஹ்), திறமையில்லா மஸீஹா (Deceptive God, Incompetent Messiah and Allah Starts Christianity ... by Accident)
http://www.answering-islam.org/tamil/authors/davidwood/deceptive_god.html



//Kaja Magdoom said

அல்லேலுயா என்று கூறுகிறீர்கள் அதற்கு அர்த்தம் தெர்யுமா உங்களுக்கு? //


Umar said:

சரி, அல்லேலூயா வார்த்தைக்கு அர்த்தத்தை சொல்லிவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த கேள்வியை திரும்ப வாங்கிக்கொள்வீர்களா?

வாழ்க்கை முழுவதும் புரியாத மொழியில் குர்‍ஆனை படிக்கிறீர்கள்,

புரியாத மொழியில் டேப்ரிகார்டர் போல தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வை தொழுதுக்கொள்கிறீர்கள்,

உலக இஸ்லாமியர்களில் எத்தனை சதவிகிதத்தினர், குர்‍‍ஆனை தங்கள் தாய் மொழியில் படிக்கிறார்கள்?

அர்த்தமே புரியாமல் குர்‍‍ஆனை படிக்கும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் உலகம் முழுவதும் இருக்கும் போது, "அல்லேயா" என்ற வார்த்தைக்கு பொருள் தெரியுமா என்று கேட்கிறீர்கள்?

எனக்கு அர்த்தம் மட்டுமல்ல, இந்த வார்த்தைக்கு சொந்தமாக தவறான அர்த்தத்தைக் கொடுத்த ஒரு இஸ்லாமிய தளத்தின் உண்மை முகத்தை உலகத்திற்கு வெளிக்காட்டியுள்ளேன்.

கீழ் கண்ட தமிழ் கட்டுரையை படிக்கவும், இந்த வார்த்தைக்கு  உங்கள் இஸ்லாமியர் என்ன அர்த்தம் கொடுத்தார் அதற்கு சரியான பதில் என்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.  இஸ்லாமிய அறிஞர்கள் சாதாரண இஸ்லாமியர்களை (உங்களைப் போன்றவர்களை) எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு இந்தக் கட்டுரை ஒரு சரியான எடுத்துக்காட்டு.

தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்
http://isakoran.blogspot.com/2007/10/blog-post_29.html

ஆக, அருமை இஸ்லாமிய நண்பரே,

நான் தொடுப்புக்கள் கொத்த தமிழ் கட்டுரைகளை ஒரு முறை நிதானமாக படித்துப்பாருங்கள், பிறகு பின்னூட்டமிடுங்கள்.

இஸ்லாம் பற்றிய இதர‌ தமிழ் கட்டுரைகளை கீழ் கண்ட தளங்களில் படிக்கலாம்:

http://www.answering-islam.org/tamil
http://isakoran.blogspot.com
http://sites.google.com/site/isakoran/

Umar
================