இதன் விளைவு பாகிஸ்தானின் ஒருபகுதியில் இஸ்லாமிய சட்டம் அமல்.
இனி பெண்கள் படிக்கவோ வேலைக்கு செல்லவோ அங்கு ஒரு மாகாணத்தில் மட்டும் முடியாது. ஆம் சுவாட் எனப்படும் பகுதியில் தாலிபான்களுடம் கூட்டு சேர்ந்த பாகிஸ்தான் அரசாங்கம் அவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து அங்கு முழு ஷரியா எனப்படும் இஸ்லாமிய சட்டத்தை அமல் படுத்தியுள்ளது.
The New York Times
ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்தபோது அங்கும் இஸ்லாமிய சட்டம் அமல் படுத்தப்பட்டது. அதின் விளைவுகள் எப்படியிருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பெண்கள் தங்கள் முகங்களை முழுமையாக மறைத்துகொள்ளவேண்டும். கல்விசாலைகளுக்கு செல்லக்கூடாது. செவிலியர் போன்ற எந்த வேலைக்கும் செல்லகூடாது போன்ற பெண் அடிமைதனங்களை நாம் பார்த்ததுதானே. தற்போது பாகிஸ்தானின் இந்த சுவாட் மாநிலத்திலும் அந்த நிலைமையே வரப்போகிறது. ம் என்ன செய்ய.. அங்குள்ள மக்களை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது
source : http://www.nytimes.com/2009/02/16/world/asia/16pstan.html?ref=world
2 comments:
/*பாகிஸ்தான் ஒரு பக்கம் தாலிபான்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்துவருவதாக கூறிகொண்டாலும் ஒரு சில இடங்களில் அவர்களுடன் இணக்கமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது தற்போது வெளிப்படையாக தெரிந்துள்ளது.*/
இந்தியா எதை கடைப்பிடிக்கிறதோ பாகிசுதானும் அதையே கடைப்பிடிக்கிறது
நன்றி சகோதரர் சத்திய நாராயணன் உங்கள் கருத்துக்கு. ஆனால் இந்தியாவில் தீவிரவாதிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தேசிய நீரோடையில் வருவதற்கு தான் இந்திய அரசு அவர்களூடம் பேச்சு நடத்துகிறது. மாறாக அவர்களின் தோளில் கைபோட்டு அவர்களின் தீவிரவாதத்துக்கு இந்திய அரசு அனுமதி அளிப்பதாக நான் கருதவில்லை.
Post a Comment