அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

February 8, 2009

ஆளுங்கட்சி எதிர்கட்சிகளீன் வேலையை செய்யக்கூடாது. பழ நெடுமாறன்

கடந்த வாரம் தமிழ் சேனலில் ஈழத்தமிழர் இயக்கத்தின் தலைவர் நெடுமாறனுடம் ஒரு பேட்டி நடந்துகொண்டிருந்ததை பார்க்க நேர்ந்தது. இதில் அவருடம் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. தற்போது தமிழக முதல்வரும் உங்க பேரவையைபோலவே ஒரு ஈழத்தமிழர் விடுதலை பேரவையை துவக்கியிருப்பதைக்குறித்து கேட்கப்பட்டது. அதற்கு இவ்வாறு பதிலளித்தார். நாங்கள் எதிர்கட்சி வேலையை செய்கிறோம். அவர் ஆளுங்கட்சி வேலையை செய்யட்டும். அவரும் எதிர்கட்சி செய்யும் வேலையை செய்யக்கூடாது. இவரிடம் மத்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுக்ககூடிய அளவுக்கு எம்.பிக்கள் கைவசம் உள்ளது. அதை வைத்து மத்திய அரசை பணீய வைக்கலாம். ஆனால் எங்களால் அவ்வாறு செய்ய இயலாது என்றார். குரல் மட்டுமே கொடுக்கமுடியும். நிர்பந்திக்க முடியாது என்றார் சரியான கேள்விதானே..இதற்கு ஒரு உதாரணமும் சொன்னார் மகாராஷ்டிரா பிரிப்பதற்கு முன் குஜாராத் மக்களால் மகாராஷ்ரிய மக்கள் தாக்கப்பட்டபோது அப்போது பிரதமாராக இருந்த நேருவிடம் தன்க்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி தேஷ்முக் என்பவரர் தனி மாநிலமாக கேட்டு வாங்கியதை இங்கு நினைவு கூர்ந்தார்.

சரி மாநில அரசு என்னதான் செய்யபோகிறது இனியும் எத்தனை பேரணிதான் நடத்தபோகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

இலங்கையில் தாக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைவேண்டி இறைவனிடம் இறைஞ்சும்
கிறிஸ்துநேசன்

0 comments: