இந்த தொலைக்காட்சி சேனலில் காதலர்கள் மரத்தை சுற்றி சுற்றி ஓடும் சினிமா பாடல்கள் இல்லை. காக்கவலிப்பு நடனங்கள் இல்லை. வீட்டு நிம்மதியை கெடுக்கும் பெண்களை செயற்கையாக அழவைக்கும் நீண்ட சீரியல்கள் இல்லை. மாறாக தமிழ் உணர்வு ஊட்டக்கூடிய நிகழ்ச்சிகள். தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கும் விலையாட்டு. தமிழ் கிராமிய கலாச்சாரத்த்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நிகழ்ச்சிகள். தமிழில் தவறலில்லாமல் பேச வைக்கும் நிகழ்ச்சிகள் இப்படி சொல்லிகொண்டே போகலாம் அத்தனை நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பும் அந்த சேனல்தான் மக்கள் தொலைக்காட்சி. (இது அந்த சேனலுக்கான விளம்பரம் இல்லை)
வர்த்தக ரீதியாக வெற்றியடைந்ததாக தெரியவில்லை. ஆனாலும் பயனுள்ள நிகழ்ச்சிகளைத்தான் அதிகமாக ஒளிப்பரப்பு செய்கிறார்கள்.
நாங்கள் தமிழை வளர்க்கிறோம் என்று சொன்னவர்களெல்லாம் தங்களுக்கு வசதி வாய்ப்புக்கள் கிடைத்தபோது அதை தமிழுக்காக செலவிட்டது மாதிரி தெரியவில்லை. மாறாக தங்களை அரசியலில் தக்கவைக்கவே அது பயன்பட்டு வருகிறது. வேண்டுமானால் இந்த மக்கள் தொலைக்காட்சியில் வரும் ஒரு சில தமிழ் வார்த்தைகளை தற்சமயம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். உதாராணமாக லைவ் என்பதை நேரலை என்றும் இன்னும் பிற தமிழ் சொற்களை காப்பியடிக்கிறார்களேயொழிய முழுமையான தமிழ் வளர்க்கும் நிகழ்ச்சிகளை அளிக்க யாரும் தயாரில்லை. காரணம் வியாபாரம் போய் விடும் என்பதுதான். அப்போ தமிழ் தமிழ் என்று முழங்கியதெல்லாம்........ நானொன்றும் சொல்ல விரும்பவில்லை.
இருந்தாலும் தமிழை வளர்க்க ஒரு சேனல் என்றால் தமிழ் நாட்டினர் அனைவரும் வரவேற்கவேண்டுமென விரும்புகிறேன்.
இறைவன் தொடர்ந்து இந்த சேனலை நடத்த அதன் நிர்வாகத்தினருக்கு பெலன் தரவேண்டுமென வாஞ்சிக்கிறேன்.
கிறிஸ்துநேசன்
இதோ அவர்களை தொட : http://www.makkal.tv/
6 comments:
தமிழால் அதாவது நல்ல தமிழில்
சினிமா அசிங்கமில்லாமல்
நல்ல நிகழ்ச்சிகளுடன் தொல்லையில்லாத
தொலைக்காட்சி நடத்தும்
"மக்கள்" தமிழர்கட்கு பாராட்டுகள்.
உங்களின் மனந்திறந்த வாழ்த்துக்கு நன்றி சகோதரரே
இதற்காக பாமகவுக்கு என் வாக்கு.
உங்கள் கருத்துக்கள் முழுக்கச் சரி.
உங்கள் எழுத்துக்களில் உங்களது நல்ல மனமும் தெரிகிறது.
நன்றி.
//இதற்காக பாமகவுக்கு என் வாக்கு//
அரசியல் வேண்டாம்.ஆனாலும் உங்க கருத்துக்கு நன்றி சகோதரர் அனானி
நன்றி சகோதரர் சுரேஷ் ஜீவானந்தம். உங்களின் கருத்துபதிவுக்கு
Post a Comment