தமிழக உயர்நீதிமன்றம் இன்று தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. எதற்கு தெரியுமா? ஜனவரி 31 அன்று திடிரென பள்ளிகளையும் கல்லூரிகளையும் விடுதிகளையும் மூடி விடும்படி திடிரென அரசு போட்டதே ஒரு உத்தரவு அதற்கு விளக்கம் கேட்டு தான். அந்த உத்தரவால் மாணவர்கள் ரொம்பவும்தான் திண்டாடி போயினர். அப்பப்ப அந்த காட்சியை பார்க்கவேண்டுமே சொந்த ஊருக்கு செல்ல பஸ்கிடைக்காமல் ரெயில் கிடைக்காமல் மாணவர்களும் மாணவிகளும் அங்கும் இங்கும் அலைந்தது இந்த அரசுக்கு எங்கே தெரியபோகிறது. இந்த மாதிரி அறிவிப்பு வெளியிடும் முன் அரசு என்ன செய்திருக்கவேண்டும். முறைப்படி நோட்டிஸ் அனுப்பியிருக்கவேண்டும். மாணவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல அதிகப்படியான பேருந்துகள் அதிகபடியான ரெயில்களை இயக்கியிருக்கவேண்டும்.
இது எதுவும் செய்யாமல் இப்படி எடுத்தோம் கவிழ்தோம் என்ற பாணியில் செயல்படுவது அவ்வளவு இராஜதந்திரமாக எடுத்துகொள்ளமுடியாது.
0 comments:
Post a Comment