அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 19, 2008

ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவிற்கும் பவுலுக்கும் இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 1


ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் -1
குறிப்பு: நம் தமிழ் முஸ்லீம்கள் முக்கியமாக ஏகத்துவம் தளத்தில் பவுலும் கிறிஸ்தவமும் என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு இருந்தார்கள். கிறிஸ்தவத்தை உண்மையாக ஸ்தாபித்தது இயேசு அல்ல, பவுல் தான் என்ற தோரணையில் கட்டுரையை எழுதியிருந்தார்கள். அவர்களின் கட்டுரைகளுக்கு தனிப்பட்ட முறையில் பதில் சொல்வதற்கு முன்பாக, இயேசுவின் போதனைக்கும், அப்போஸ்தலரான பவுலின் போதனைக்கும் இடையே உள்ள ஒற்றுமையை இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம். (முஸ்லீம்களின் நம்பிக்கையின் படி, இயேசுவின் செய்தியும், முகமதுவின் செய்தியும் ஒன்று தான். ஆனால், இயேசுவிற்கும் முகமதுவிற்கும் கிழக்கிற்கும், மேற்கிற்கும் உள்ள தொலைவு போல வித்தியாசம் உள்ளது, இதனை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர் அல்லாத மாற்று மத நம்பிக்கையாளர்களும் அறிந்துள்ளார்கள்.)இஸ்லாமியர்கள் நினைப்போது போல அல்லாமல், இயேசு எதைச் சொன்னாரோ, அதையே சொல்லியிருக்கிறார் அப்போஸ்தலர் பவுலும், இக்கட்டுரையில் ஒவ்வொரு தலைப்பைப் பற்றி இயேசு எதைச் சொல்லியுள்ளாரோ, பவுலும் அதையே சொல்லியுள்ளார் என்பதை வாசகர்கள் கவனிக்கலாம். பவுல் சொன்னது இயேசு சொன்னதற்கு முரண்பட்டது என்றுச் சொன்னால், பவுல் முகமதுவைப் போல, உன் எதிரிகளை கொல்லு, ஒன்றுக்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொண்டு, உன் அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக எடுத்துக்கொள் என்று சொல்லியிருந்தால், இயேசு சொன்னதற்கு எதிராக பவுல் சொன்னார் என்று நாம் கருதலாம், பவுல் சொன்னது அப்படி இல்லையே, இத்தொடர் கட்டுரைகளை படித்து தெளிவுப் பெருங்கள்.

இந்த தலைப்பில் இது முதலாவது பாகமாகும், இதில் 35 ஒற்றுமைகளை காட்டியுள்ளோம், மீதமுள்ளதை அடுத்த தொடரில் காண்போம்.



கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும்
இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 1


100 Similarities between the Lord Jesus Christ and the Apostle Paul

தொகுத்தவர்: அந்தோனி வேல்ஸ் (Anthony Wales)
முன்னுரை:

அநேக முஸ்லீம்கள் இயேசு ஒரு இஸ்லாமிய நபி என்று விசுவாசிக்கின்றனர். மேலும் இதை உறுதிபடுத்துவதற்கு அநேக விவாதங்களையும் எழுப்புகின்றனர். அதில் ஒரு முக்கியமான விவாதம் என்னவென்றால் பவுல் தான் கிறிஸ்தவத்தின் உண்மையான ஸ்தாபகர் என்பதாகும். இந்த விவாதத்தில் அவர்களின் கூற்று, வேதாகமத்தில் புனித பவுலின் போதனைகள் இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாயிருக்கிறது என்பதாகும். இந்தக் கட்டுரையானது பவுலுக்கும் இயேசுவுக்கும் இடையிலான் 100 ஒற்றுமைகளைக் காண்பித்து அவர்களின் கூற்றுக்கு பதில் அளிக்கும் படியாக கொடுக்கப்படுகிறது.

இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமைகள் இயேசு மற்றும் பவுல் பற்றியதான வேதப்பகுதிகளிலிருந்து எடுத்தாளப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் வார்த்தைகள், கிரியைகளை தெரிவிக்கும் ஆதாரப் பகுதியாக சுவிசேஷங்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்) உள்ளது. மேலும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும், வெளிப்படுத்தின சுவிஷேசத்திலும் இயேசுவுடைய சில வார்த்தைகளும் கிரியைகளும் இருக்கிறது. பவுலுடைய வார்த்தைகளும், கிரியைகளும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும் அவருடைய நிருபங்களில் காணப்படுகிறது (ரோமர் நிருபம் முதல் பிலேமோன் நிருபம் வரையிலும்). அவர்களின் வார்த்தைகள், கிரியைகள் மற்றும் வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இயேசு தான் மேசியா அல்லது கிறிஸ்து (Jesus is the Messiah or Christ)

இயேசு: அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். (மத்தேயு : 16:15-17)

பவுல்: மக்கெதோனியாவிலிருந்து சீலாவும், தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங் கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்(அப் :18: 5).

2. இயேசு தேவனுடைய குமாரன்(Jesus is the Son of God)

இயேசு: அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள். (லூக்கா 22: 70-71)

பவுல்: தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். (அப் 9: 20)

3. இயேசுவே ஆண்டவர்(Jesus is Lord)

இயேசு: நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான். (யோவான் 13:13)

பவுல்: பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது, அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு, அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். (1 கொரி 8: 6)

4. இயேசுவே தேவன் (Jesus is God)

இயேசு: தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். (யோவான் 20: 28-29)

பவுல்: பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். (ரோமர் 9: 5)

5. இயேசு மனிதர் (Jesus is Human)

இயேசு: அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. (யோவான் 8: 39-40)

பவுல்: தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (1 தீமோ 2: 5-6)

6. இயேசு ஸ்தீரியினிடத்தில் பிறந்தவர் (Jesus was born of Woman)

இயேசு: தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். (லூக்கா 1: 30-32)

பவுல்: காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். (கலா 4: 5)

7. தேவன் இயேசுவை அனுப்பினார்(God sent Jesus)

இயேசு: இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (யோவான் 8: 42)

பவுல்: அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். (ரோமர் 8: 3)

8. இயேசுவே பிதாவனிடத்திற்கு போகும் வழி (Jesus is the way to the Father)

இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

பவுல்: அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். (எபே : 2: 18)

9. இயேசுவே ஒளி (Jesus is Light)

இயேசு: மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8: 12)

பவுல்: அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?. கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? (2 கொரி 6: 14-15)

10. இயேசுவே ஜீவன் (Jesus is Life)

இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

பவுல்: நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். (கொலோ 3: 4)
11. இயேசுவே தொடக்கம் /ஆதியுமாக இருக்கிறார் உள்ளார் (Jesus is the Beginning)

இயேசு: நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். (வெளி 22:13)

பவுல்: ….அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். (கொலோ 1:18)

12. இயேசு முதலாமவர் (Jesus is First)

இயேசு: .....நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், .... (வெளி 1: 17-18)

பவுல்: அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். (கொலோ 1:18)

13. இயேசு தாவீதின் சந்ததியானவர் ( Jesus is a descendent of David)

இயேசு: தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். (லூக்கா 1: 30-32)

பவுல்:தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின் படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள். (2 தீமோ 2: 8)

14. இயேசு மணவாளன் (Jesus is the Bridegroom)

இயேசு: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்ன வென்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. (மாற்கு 2: 18-19)

பவுல்: நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். (2 கொரி 11: 2)

15. இயேசுவே ராஜா (Jesus is King)

இயேசு: இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18; 36-37)

பவுல்: விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. (எபே 5: 5)

16. இயேசு பரத்திலிருந்து இறங்கினவர்(Jesus descended from Heaven)

இயேசு:பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3: 13)

பவுல்: ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? (எபே 4: 9)

17. இயேசுவே இரட்சகர் (Jesus is Saviour)

இயேசு: உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:17)

பவுல்:பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். (1 தீமோ 1: 15)

18. இயேசுவே சத்தியமானவர்(Jesus is the Truth)

இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

பவுல்:இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின் படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. (எபே 4: 21)

19. இயேசு ஏழையாக இருந்தார் (Jesus was poor)

இயேசு: அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். (மத்தேயு 8: 20)

பவுல்: நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும் படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே. (2 கொரி 8: 9)

20. தேவனின் மகிமையின் ஒளி இயேசுவின் முகத்தில் பிரகாசித்தது.
(The glory of God shines in the face of Jesus)


இயேசு: ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. (மத்தேயு 17: 1-2)

பவுல்: இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். (2 கொரி 4: 6)

21. இயேசு தேவனுடைய பந்தியை ஏற்படுத்தினார் (Jesus instituted the Lord's Supper)

இயேசு: அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மாற்கு 14: 22-24)

பவுல்: நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார் போஜனம் பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். (1 கொரி 11: 23-25)

22. இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டார்(Jesus was betrayed)

இயேசு: .... உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். .... மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷ குமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ!.... (மாற்கு 14: 18, 21)

பவுல் : நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, (1 கொரி 11: 23)

23. இயேசு பொந்திய பிலாத்துவுக்கு முன்பாக சாட்சியளித்தார் (Jesus testified before Pontius Pilate)

இயேசு : அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18: 33-37)

பவுல்: எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். (1 தீமோ 6: 14)

24. இயேசு பாடுபட்டார்(Jesus suffered)

இயேசு: அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். (மத்தேயு 16: 21)

பவுல்: எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது (2 கொரி 1: 5).

25. இயேசு மரித்தார்(Jesus died)

இயேசு: இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். (மாற்கு 15: 37)

பவுல் :இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; …. (1 தெச 4: 14)

26. இயேசு அடக்கம்பண்ணப்ட்டார் (Jesus was buried)

இயேசு: அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். (மாற்கு 15: 46)

பவுல்: ..... அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். (ரோமர் 6: 4)

27. இயேசு மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார்(Jesus rose from the dead on the third day)

இயேசு: இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். (யோவான் 2: 19, 22)

பவுல்: நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, (1 கொரி 15 : 3-4)

28. இயேசு பரமேறினார்(Jesus ascended)

இயேசு: அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். (லூக்கா 24: 51)

பவுல்: இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். (எபே 4: 10)

29. இயேசு பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்தார். (Jesus is seated at the right hand of the Father)

இயேசு: .....மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர் தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். (மாற்கு 14: 61-62)

பவுல்: எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, (எபே 1: 20)

30. இயேசு மீண்டும் வருவார் (Jesus will come again)

இயேசு: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். (மத்தேயு 24: 30)

பவுல்: ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். (1 தெச 4: 16)

31. இயேசு ஆடுகளுக்காக மரித்தார் (Jesus died for the sheep)

இயேசு:ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோவான் 10: 15)

பவுல்: ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். (அப் 20:28)

32. இயேசு நம்மேலிருந்த அன்பின் நிமித்தம் மரித்தார் (Jesus died for love of us)

இயேசு:நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவான் 15: 12-13)

பவுல்: ....நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன (கலா 2: 20)

33. இயேசுவின் மரணம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறது (Jesus' death demonstrates God's love)

இயேசு: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3: 16)

பவுல்: நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார். (ரோமர் 5: 8)

34. இயேசு தன்னை ஒரு பரிகார பலியாக ஒப்புக்கொடுத்தார் (Jesus gave himself as a ransom)

இயேசு: அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20: 28)

பவுல்: தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (1 தீமோ 2: 5-6)

35. இயேசுவை சிலுவையிலறைந்தவர்கள் அறியாமையினாலே அப்படிச் செய்தார்கள்
(Those who crucified Jesus were ignorant and acted in ignorance)


இயேசு: அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். ... (லூக்கா 23: 34)

பவுல்: உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவ ஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (1 கொரி 2: 7-8)

முடிவுரை: அன்பான இஸ்லாமியர்களே, நீங்களே உங்கள் கண்களால் காணுங்கள், உங்கள் காதுகளால் கேளுங்கள், மனதால் உணருங்கள். இயேசுவின் போதனைக்கும், அப்போஸ்தலனாகிய பவுலின் போதனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், இயேசுவின் போதனைக்கும், நீங்கள் நபி என்று நம்பிக்கொண்டு இருக்கும் முகமதுவின் போதனைக்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இயேசுவிற்கு முரண்பட்டவர் பவுல் அல்ல, இயேசுவின் மற்ற சீடர்கள் அல்ல, உங்கள் முகமது தான் முரண்பட்டார், ஆரம்ப முதல் கடைசி வரைக்கும் இயேசுவிற்கு முரண்பட்ட எல்லா செயல்களையும் அவர் செய்தார். குர்‍ஆனையும் பைபிளையும் படித்துப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

அடுத்த தொடரில் சந்திக்கும் வரை கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. இயேசுவே நாங்கள் உங்களை நேசிக்கிறோம், சீக்கிரமாக வாரும். ஆமென்.


0 comments: