அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

November 9, 2008

ஆர் எஸ் எஸின் பயிற்சிமுகாமாக மாறிவரும் மாணவர்களின் பள்ளிகூடங்கள்


இன்று செய்திதாளை படித்துகொண்டிருந்த எனக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. நமது தேசத்தந்தை மகாத்மாவை கொன்ற ஆர் எஸ் எஸுக்கு தமிழ் நாட்டில் அதுவும் பள்ளிகூடத்தில் பயிற்சி முகாமா என என் உள்ளத்தில் அதிர்ச்சி. மக்கள் அறிவு வளர கல்வி சாலை அமைப்போம் என பாடின பாரதி வாழ்ந்த இந்த மண்ணில இந்த கொடுமை. அனுமதி கொடுத்த பள்ளி நிர்வாகம் மாணவர்களின் எதிர்காலத்தையும் கொஞ்சம் மனதில் நினைத்திருந்தால் இதற்கு அனுமதித்திருப்பார்களா . இனியாவது தமிழகம் விழித்தால் நல்லது. இறைவன் கல்வியாளர்களுக்கு நல்ல கல்வியளிபாராக.

செய்தி இதோ:
 
காஞ்சீபுரத்தில் ஆர்.எஸ்.எஸ்.முகாமை எதிர்த்து கலவரம்
திகதி : Sunday, 09 Nov 2008, [Sindhu]

lankasri.comகாஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை கிராமத்தில் பாரதிதாசன் மெட்ரிக்கு லேஷன் பள்ளி உள்ளது.இங்கு 3,500மாணவர்கள் படிக்கிறார்கள்.நேற்று விடுமுறை என்பதால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்தது.

மேலும் பள்ளியின் மற்றொரு பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 2நாள் பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம் தொடங்கியது.இந்த முகாமில் பங்கேற்க 200-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் வந்திருந்தனர்.

பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ்.முகாம் நடத்த அந்த பகுதியைச் சேர்ந்த கம்念2985;ிஸ்டு,விடுதலை சிறுத்தைகள்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அவர்கள் காலை 10மணிக்கு பள்ளி முன்பு திரண்டனர்.பள்ளி நிர்வாகி அருண்குமாரிடம் ஆர்.எஸ்.எஸ்.முகாம் நடத்த எப்படி அனுமதிக்கலாம் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அங்கு ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள்,இந்து முன்னணியினர்,பாரதீய ஜனதா தொண்டர்கள் வந்து எதிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார்கள்.அவர்களுக்கு எதிராக கம்யூனிஸ்டு நிர்வாகிகள் முத்துக் குமார்,ஜீவா,விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் நாராயணன்,ஒன்றிய செயலாளர் டேவிட் மற்றும் முஸ்லிம் முன்னேற்ற பிரமுகர்கள் எதிர்ப்பு கோஷம் போட்டனர்.

இரு தரப்பினரும் மாறி மாறி கோஷம் போட்டதால் திடீரென மோதல் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் மீது கல் வீசப்பட்டதுஆவேசம் அடைந்த அவர்கள் தடிகளுடன் ஓடி வந்து கல்வீசியவர்களை சரமாரியாக தாக்கினார்கள்.இதனால் கூட்டத்தினர் சிதறி ஓடினார்கள்.அங்கு அடிதடி கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முத்துக்குமார்,கமலநாதன்,விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த டேவிட்,நாராயணன்,வெங்கடேசன்,முஸ்லிம் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பாஷா,ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜா,ராகவன் உள்ளிட்ட 14பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில் 9பேர் சிகிச்சை பெற்று திரும் பினார்கள்.மற்ற 5பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த கலவரத்தை பார்த்து பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.கலவரம் பற்றி கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர்.போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். மாணவ-மாணவிகளை போலீசார் பாதுகாப்புடன் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

பள்ளி நிர்வாகி அருண் குமாரை போலீஸ் அதிகாரிகள் அழைத்து ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினரை உடனே வெளியேற்றும்படி கூறினார்கள்.

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1226229992&archive=&start_from=&ucat=1&

0 comments: