வாளால் வளர்ந்ததா இஸ்லாம்? அறிஞர் அண்ணா
பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள்.அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்."ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.
Source: http://adirai-iic.blogspot.com/2008/06/blog-post_21.html
ஓமன் நாட்டு அரசனுக்கு முகமது அனுப்பிய கடிதம்
முகமது ஓமன் நாட்டு அரசன் "ஜாஃபர்" மற்றும் அவர் சகோதரன் "அப்து அல் ஜலாந்தி" என்பவருக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை முகமதுவின் தூதுவர் "Amr bin al-'As al-Sahmi and Abu Zaid al-Ansari" கொண்டுச் சென்றார்.
இன்று இஸ்லாமியர்கள் மேடைகளில், வெப்தளங்களில், மற்றும் தொலைக்காட்சி மற்றும் இதர சாதனங்கள் மூலமாக இஸ்லாமை பரப்பிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும், இன்னும் இதர மக்களையும் இஸ்லாம் பக்கம் ஈர்க்க முன்வைக்கும் வாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. இஸ்லாம என்றால் அமைதி என்று பொருள்:
2. இஸ்லாமில் கட்டாயமில்லை:
3. இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது என்று சொல்லும் செய்தி பொய்யானது.
4. நபி (முகமது) அவர்கள் செய்த போர்கள் அனைத்தும், தற்காப்புக்காக செய்தவை. தாமாக அவர் என்றுமே சண்டையிட்டது இல்லை.
5. ஜிஹாத் என்றால், தற்காப்புக்காக நமக்கு ஆபத்து வரும் போது செய்யும் சண்டையே தவிர, நாமாக சண்டையிடுவது இல்லை.
6. முகமது அவர்கள் யாரிடமும் வீணாக சண்டையிட்டது இல்லை. அவரைப்போல நல்லவர் உலகில் வேறு யாருமில்லை.
இப்படி பல செய்திகளை இஸ்லாமியர்கள், முன்வைப்பார்கள்.
ஆனால், ஓமன் நாட்டு அரசருக்கு முகமது என்ன எழுதினார் என்று பாருங்கள்.
"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."
நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்(தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை(POWER) உனக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உன் வலிமை(POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உன் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உன் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.
Photograph of the Arabic original and the English text as it is on display at Sohar Fort, Sultanate of Oman
சமத்துவம், சகோரத்துவம் பேசும் இஸ்லாமிய நண்பர்களே,கீழ்கண்ட கேள்விகள் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்:
1. இக்கடிதம் யார், யாருக்கு எழுதியது?
2. இக்கடிதம் எழுதுவதற்கு முன்பாக முகமதுவிற்கு "இந்த நாட்டு அரசனால் ஆபத்து ஏதாவது இருந்ததா?"
3. இக்கடிதத்தில் முகமது மிகவும் நிதானமாக பேசுவதைக்கண்டீர்களா?
4. அதே நிதானத்தோடு அந்த நாடு அழிக்கப்படும் என்று சொல்வதை கவனித்தீர்களா?
5. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் என்ன பதில் சொல்வார்கள்?
6. தன் நாட்டில் இருந்துக்கொண்டு, முகமதுவிற்கு எந்த பயமுறுத்தலோ அச்சுருத்தலோ செய்யாமல் இருக்கின்ற அரசனுக்கு, இஸ்லாம், அல்லா, முகமது விடுக்கும் "அழைப்பு" எப்படி இருக்கிறது என்றுப் பார்த்தீர்களா?
7. முகமது இஸ்லாமின் நன்னடத்தையைக் காட்டி அந்த அரசனை இஸ்லாமிற்கு அழைக்கிறாரா? அல்லது அழித்துவிடுவேன் என்று பயமுறுத்தி அழைகிறாரா?
9. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக படைபலம் உள்ள அரசனாக இருந்தால், முகமதுவோடு சண்டையிட்டுயிருப்பான், குறைந்த படைபலம் உள்ளவனாக இருந்தால், "இஸ்லாமை ஏற்றுக்கொண்டு" முகமதுவின் "ஜகாத்" கொடுத்துக்கொண்டு இருந்திருப்பான்.
10. கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தி கொண்டுவரும் "பக்தி", "நமாஜ்" அல்லது "தொழுகை" உண்மையானதாக இருக்குமா? இதைத் தான் உண்மை தெய்வம் எதிர்பார்க்குமா?
11. இஸ்லாமில் கட்டாயமில்ல, இஸ்லாம் அமைதியான மதம், இஸ்லாம் கத்திமுனையில் பரப்பப்பட்டது இல்லை என்று சொல்லிக்கொள்கிறீர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் ?
12. இது தான் இஸ்லாம் காட்டும், முகமது காட்டும் வழியா?
கீழ் கண்ட வசங்களை சொன்னது யார் என்றுத் தெரியுமா உங்களுக்கு?
மத்தேயு 10:14 | எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். |
லூக்கா 9:5 | உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார். |
அப்போஸ்தல நடபடிகள் 13:51 | இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள். |
இயேசு தன் செய்திகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் ஊரை விட்டு வரும் போது, காலில் படிந்த துசியைக்கூட உதறிவிட்டு வரும்படிச் சொன்னார், அவர்களை சபிக்கவேண்டாமென்றுச் சொன்னார். சீடர்களும் அப்படியே செய்தார்கள். ஆனால், முகமதுவோ தன் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லையானால், போர் செய்வேன், நாட்டை பிடிப்பேன், உன் வலிமையை அற்றுப்போகப்பண்ணுவேன் என்றுச் சொல்கிறார்.
இயேசு அஹிம்சை மூலமாக தன் செய்தியை தெரிவித்தார். முகமதுவோ "ஹிம்சை" மூலகாம தன் செய்தியைச் சொன்னார். ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகள் வேண்டுமானால், வெவ்வேறு குணங்களை கொண்டிருக்கலாம், ஆனால், ஒரு இறைவன் அனுப்பியவர்கள் வெவ்வேறு கோட்பாடுகள் கொண்டு தன் செய்திகளைச் சொல்லமாட்டார்கள்.
இதில் யாராவது ஒருவர் தான் உண்மையாக இருக்கமுடியும்? இயேசு அல்லது முகமது ? முகமது சொன்னதை பின்பற்றிக்கொண்டு, இயேசுவைக் கூட அதே இறைவன் தான் அனுப்பினான் என்றுச் சொல்வது அறிவுடமையாகுமா? சிந்தியுங்கள்.
எனவே, கிறிஸ்துவின் பாதையில், அமைதியின் பாதையில், உண்மையின் பாதையில் வரும் படி நான் உங்களை அழைக்கிறேன். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு, உங்கள் வாழ்வில் ஒரு வித்தியாசத்தைக் கொண்டுவரும், நிம்மதியைக்கொண்டுவரும். இயேசுவை உங்கள் உள்ளத்தில் வரும் படி அழையுங்கள், அது போதும். உங்கள் மீது சாந்தி, சமாதானம் உண்டாகட்டும்.
1) Image Source: http://www.answering-islam.de/Main/Muhammad/oman.gif
0 comments:
Post a Comment