அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

June 22, 2008

சரப்ஜித் சிங் விரைவில் விடுதலையாவார்.

 

பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்திய பிரஜையான சரப்ஜித் சிங்குக்கு செய்யாத குற்றத்திற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவரின் விடுதலைக்காக இந்திய அரசும் மனித உரிமை கழகமும் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனிக்காத பட்சத்தில் திடிரென ஒரு நற்செய்தி வந்துள்ளது.பெனாசீர் பூட்டோவின் பிறந்த நாளை முன்னிட்டு தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி அது ஆயுள் தண்டனையாக மாற்றப்படும். இது இறைவன் நம் வேண்டுதல்களை கேட்டுள்ளார் என்றே தோன்றுகிறது. ஆம் நம் இந்தியரான சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையும்  இரத்து செய்யப்பட்டு   அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட உள்ளது. ஏற்கனவே 17 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டதால் இனி இவர் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
**********************************************************************
சரப்ஜித் சிங் தூக்கு தண்டனை ரத்தாகிறது
இஸ்லாமாபாத்(ஏஜென்சி), சனிக்கிழமை, 21 ஜூன் 2008   ( 16:40 IST )
பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியரான ரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்.

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தூக்கு தண்டனைக் கைதிகளின் தண்டனையையும், ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு, அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி பரிந்துரைத்துள்ளதாக பாகிஸ்தான் அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பிறந்த தினத்தையொட்டி, கிலானி மேற்கூறிய பரிந்துரையை செய்ததாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.அதே சமயம் பாகிஸ்தான் மனித உரிமைகளுக்கான அமைச்சர் அன்சார் பர்னி, இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில், பிரதமரின் பரிந்துரையை ஏற்று தூக்கு தண்டனைக் கைதிகள் அனைவரது தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டால், சரப்ஜித் சிங் விரைவிலேயே விடுதலை செய்யப்பட்டுவிடுவார்.

ஏனெனில் சுமார் 17 ஆண்டு காலமாக சர்ப்ஜித் சிங் பாகிஸ்தான் சிறையில் வாடி வருகிறார்.இது ஆயுள் தண்டனைக்காலத்திற்கும் கூடுதலான தண்டனைக் காலமாகும்.

இந்தியாவுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதான சரப்ஜித் சிங்கிற்கு , பாகிஸ்தானில் நிகழ்ந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மேற்கூறிய பரிந்துரையால் பாகிஸ்தான் சிறையில் தூக்கு தண்டனைக் கைதியாக உள்ள மற்றொரு இந்தியரான கிர்பால் சிங்கும் தூக்கு தண்டனையிலிருந்து தப்பி பிழைத்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
http://in.tamil.yahoo.com/News/International/0806/21/1080621030_1.htm

0 comments: