மேஜீக் நிபுணர் இப்ப இரண்டு கைகுட்டையை எடுத்து அது தனித்தனியாக இருப்பதை நமக்கு காட்டுகிறார். பிறகு அதை ஒன்றுக்குள் ஒன்றாக பிணைத்து மேலே தூக்கி விசுகிறார். கீழே வரும்போது இப்ப அது இரண்டும் முடிச்சு விழுந்திருக்கும். நமக்கும் இது ஆச்சரியமே. உண்மையிலேயே இது அவர்களது திறமையே. இதற்கு அவர்களை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது.
இது எப்படியின்னு நாமும் கொஞ்சம் இதை தெரிந்து கொள்ளுவோம்
இங்கு இப்ப படத்துடன் விளக்குகிறேன்.
முதல் படம்
இரண்டு வேறு நிறமுடைய கைகுட்டைகளை எடுத்துகொள்வோம்
இரண்டாவது படம்
ஒரு சிறிய இரப்பர் பேண்டை எடுத்து அதை கட் செய்து மீண்டும் அதை படத்தில் உள்ளவாறு முடிச்சு போட்டு நமது நடு விரலில் வைத்துகொள்ளவேண்டும். இந்த விரலை நாம் மேஜீக் செய்யும் போது மடித்துவைத்துகொள்ளவேண்டும்.
முன்றாவது படம்
நாம் மேடையில் இரண்டு கைகுட்டைகளையும் காட்டி விட்டு ஒன்றுக்குள் ஒன்று திணிப்பது போல் காட்டவேண்டும். அந்த நேரத்தில் நமது விரலில் உள்ள இரப்பர் பேண்டில் இரண்டு கைகுட்டைகளின் இரண்டு முனைகளையும் அதற்குள் திணீக்கவேண்டும்..
நான்காவது படம்
இப்ப இதை அப்படியே தூக்கி மேலே வீசுங்கள். திரும்பி வந்து கையில் விழுந்தபின் எடுக்கும்போது மக்களுக்கு ஒரே ஆச்சரியம் ஆம் இரண்டும் முடிச்சு விழுந்ததுபோல் இருக்கும். இது எப்படிங்க இருக்கு ..
0 comments:
Post a Comment