அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 2, 2014

மஹாத்மா காந்தி - காஃபிர்களால் முஹம்மதுவிற்கும் இஸ்லாமுக்கும் நன்மையுண்டாகுமா?


மஹாத்மா காந்தி - காஃபிர்களால் முஹம்மதுவிற்கும் இஸ்லாமுக்கும் நன்மையுண்டாகுமா?

முன்னுரை: ஒரு சகோதரர் என்னிடம் "இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது பற்றி நம் தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்கள் நல்லவிதமாக கூறியிருக்கிறார்கள். இதனை மேற்கொள் காட்டி ஒரு இஸ்லாமியர் என்னிடம் ஒரு துண்டு பிரசுரத்தைக் கொடுத்தார்.  மேலும் இதர மேற்கத்திய அறிஞர்கள், சரித்திர ஆசிரியர்கள் சொன்ன விவரங்களும் அந்த துண்டு பிரசுரத்தில் உள்ளது, இணையத்திலும் இதற்கான தொடுப்பு உள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்".  நானும் இணையத்தில் தேடிப்பார்த்த போது, என் நண்பர் சொன்ன அனைத்து விவரங்களும் கிடைத்தது. 

அவர் சொன்ன அந்த துண்டு பிரசுரத்தில் 'முஹம்மதுவைப் பற்றி' கீழ்கண்ட நபர்கள்  சொன்ன மேற்க்கோள்கள் காட்டப்பட்டு இருந்தது:

  1. மஹாத்மா காந்தி (Mahatma Gandhi)
  2. சர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா (Sir George Bernard Shaw)
  3. தாமஸ் கர்லைல் (Thomas Carlyle)
  4. W. மாண்ட்கொமெர்ய் வாட் (W. Montgomery Watt)
  5. டாக்டர் வில்லியம் ட்ராபெர் (Dr. William Draper)
  6. அல்போன்ஸ் டீ லமர்டைன் (Alphonse de Lamartaine)
  7. லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
  8. D.G. ஹோகர்த் (D.G. Hogarth)

காஃபிர் என்பவன் யார்?

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மதுவை இறைத்தூதர் என்றும் நம்புபவன் முஸ்லிம் ஆவான்.  ஆனால், அல்லாஹ்வையும், முஹம்மதுவையும் நம்பாமல் இருப்பவன் காஃபிர் ஆவான். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் காஃபிர்கள் (unbelievers) ஆவார்கள். 

காஃபிர்கள் பற்றி குர்-ஆன் அனேக காரியங்களைச் சொல்கிறது.  நரகம் காஃபிர்களுக்காகவே உண்டாக்கப்பட்டது என்றும், அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும் என்றும், சாபம் உண்டாகும் என்றும்,அவர்களுக்கு வேதனை உண்டாகும் என்றும் அனேக வகைகளில் காஃபிர்களை குர்-ஆனும் அல்லாஹ்வும் முஹம்மதுவும் கேவலப்படுத்துகிறார்கள். இதனை விளக்கும் சில குர்-ஆன் வசனங்களை இக்கட்டுரையின் கடைசியில் அடிக்குறிப்பில் காணலாம்[1]. 

ஒரு பக்கம் காஃபிர்களுக்கு நரகம் தான் கிடைக்கும் என்றுச் சொல்லும் முஸ்லிம்கள், இன்னொரு பக்கம் அவர்கள் சொன்ன முஹம்மது பற்றிய நல்ல கருத்துக்கள் எதற்கு? முஸ்லிம்கள் ஏன் இப்படி நயவஞ்சகமாக நடந்துக்கொள்கிறார்கள்? மேற்கொண்டு படியுங்கள். 

மஹாத்மா காந்தியும் முஹம்மதுவும்

மஹாத்மா காந்தி அவர்கள் முஹம்மது பற்றி "யங் இந்தியா (Young India)" என்ற பத்திரிக்கையில் 1924ம் ஆண்டு சொன்னதாக ஒரு மேற்கோள் முஸ்லிம்களால் காட்டப்படுகின்றது.  நம் தேசப்பிதா காந்தி அவர்கள் இப்படி எழுதியது உண்மை தானா என்று நான் சரி பார்க்கவில்லை. எந்த நூலகத்திலாவது, இணைய தொடுப்பிலாவது அந்த பத்திரிக்கை இருந்தால், இதனை சரி பார்த்துக்கொள்ளலாம். இந்த கட்டுரையைப் பொறுத்தமட்டில்,   காந்தி அவர்கள் சொன்னது உண்மை என்று கருதி நாம் தொடர்ந்து விவரங்களைப் பார்ப்போம்.
 


அ) இப்படிப்பட்ட கேற்கோள்களைக் காட்டுவதின் மூலம் முஸ்லிம்கள் சொல்ல வருவது என்ன?

இந்தியர்கள் காந்தி அவர்களை தேசப்பிதா என்றும், மஹாத்மா என்றும் அழைத்து கௌரப்படுத்துகிறோம். அவர் சுதந்திர போராட்ட வீரர் என்றும், இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டவர் என்றும் எல்லாருக்கும் தெரியும். முஸ்லிம்களின் படி, இப்படிப்பட்டவர் சொல்வதை நாம் காது கொடுத்து கேட்கவேண்டும், அவரை மதிப்பதுபோல, அவரது சொற்களையும் அல்லது கருத்துக்களையும் மதிக்கவேண்டும். நம் இந்தியாவில் வாழும் மக்களில், எழுதப்படிக்க தெரியாத பாமர மனிதனுக்கும் காந்தி அவர்கள் யார் என்று குறைந்தபட்சம் தெரிந்து இருக்கும். இந்திய ரூபாய் நோட்டுகளிலும் நாம் அவரைக் காணலாம். 

இப்படிப்பட்டவர் சொல்வதை காஃபிர்களாகிய இந்துக்களும், கிறிஸ்தவர்களும், நாத்திகர்களும் ஏன் கேட்கக்கூடாது? என்பது தான் இஸ்லாமியர்களின் கேள்வி. மேலோட்டமாக நாம் இதனை படித்தால், முஸ்லிம்கள் சொல்வதில் நியாயம் இருப்பது போலத்தெரியும். ஆனால், சிறிது ஆய்வு செய்து சிந்தித்துப் பார்த்தால், முஸ்லிம்களுக்கே இது தலைவலியாக மாறும்.

ஆ) மஹாத்மாவின் கருத்தை நாம் (காஃபிர்கள்) சீரியஸாக எடுத்துக் கொள்ளலாமா?

நாம் மஹாத்மா காந்தியை மதிக்கிறோம், ஆனால், அவர் சொல்வதையெல்லாம் தலையில் வைத்துக்கொண்டு ஆடமுடியாது. உதாரணத்திற்கு, முஹம்மது பற்றி காந்தி அவர்கள் சொன்ன கருத்துக்களைச் சொல்லலாம்.  

1. மஹாத்மா காந்தி அவர்கள் குர்-ஆனை முழுவதுமாக படித்து, அதனை புரிந்துக்கொண்டாரா? ஒவ்வொரு வசனத்தின் பின்னணி என்னவென்று மஹாத்மா காந்திக்குத் தெரியுமா? அவர் குர்-ஆன் விரிவுரைகளை படித்து இருந்திருப்பாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இவைகளுக்கு பதில் சொல்ல அவர் இன்று நம்மிடம் இல்லை.

2. மஹாத்மா காந்தி அவர்கள் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படித்ததாக மேற்கண்ட மேற்கோளில் சொல்லியுள்ளார். அந்த சரித்திரத்தை எழுதியது  யார்? முஸ்லிம்கள் எழுதும் சரித்திரத்தில் முஹம்மதுவின் நல்ல காரியங்களை மட்டுமே சொல்வார்கள், அவரின் உண்மை முகத்தை மறைப்பார்கள்.  முஸ்லிம்கள் எழுதும் புத்தகங்களை மட்டுமே படிக்கும் ஒரு நபர், மஹாத்மா எழுதுவது போலத்தான் எழுதுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

3. இப்னு இஷாக் போன்ற ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திர நூல்களை காந்தி அவர்கள் படித்து இருந்திருந்தால், முஹம்மது பற்றி இப்படியெல்லாம் எழுதி இருப்பார் என்று நிச்சயமாக எதிர்ப்பார்க்க முடியாது.

4. புகாரி, முஸ்லிம் என்றுச் சொல்லக்கூடிய ஹதீஸ் தொகுப்புக்களை முழுவதுமாக காந்தி படித்து இருந்திருந்தால், அவரை 1924ம் ஆண்டே முஸ்லிம்கள் கொல்லும் அளவிற்கு காந்தி எழுதியிருந்திருபபர் என்பதில் சந்தேகமில்லை. முஹம்மதுவிற்கு 10க்கும் மேல் மனைவிகள் இருந்தார்கள் என்று மஹாத்மாவிற்கு தெரியுமா? அடிமைகளை கற்பழிக்கலாம் என்ற கோட்பாட்டை முஹம்மது போதித்தார் என்பதை காந்தி அவர்கள் அறிவாரா?

5. 1924ம் ஆண்டில், மேற்கண்ட விதமாக காந்தி அவர்கள் எழுதும் போது, அவருக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் இடையே இருக்கும் உறவுமுறை எப்படி இருந்தது? சுதந்திர போராட்டத்தில் மும்முறமாக ஈடுபட்டு இருந்த  காந்தி அவர்கள், இந்த சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களும்  தம்மோடு ஒத்துழைக்கவேண்டும் என்பதற்காக அவர்களோடு ஒரு நல்ல உறவை வைத்திருந்தார் என்று அறிய முடிகின்றது.  முஸ்லிம்களுக்கு ஆதரவாக அனேக செயல்களை காந்தி அவர்கள் செய்தார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  (இந்த தகவல்கள் உண்மையா இல்லையா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு, ஏனென்றால், இதைப் பற்றி அதிகமாக நான் ஆய்வு செய்யவில்லை. சமயம் வாய்த்தால், இதைப் பற்றி மேலதிக விவரங்களை சேகரிக்கலாம்). இப்படிப்பட்ட சமயத்தில் மஹாத்மா போன்றவர்கள் முஸ்லிம்களின் மனம் நோகும் படி எப்படி எழுதுவார்?
ஆக, மேற்கண்ட காரணங்களினால் முஹம்மது பற்றி காந்தி அவர்கள் சொன்னதை இதர மக்கள் "சீரியஸாக" எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பது என் கருத்து.

இ) மஹாத்மாவின் கருத்துக்களை, முஸ்லிம்கள் சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்களா?

முஸ்லிம்களாவது மஹாத்மாவின் வார்த்தைகளை முக்கியமானவைகளாக  ஏற்றுக்கொள்கிறார்களா? என்று கேள்வி கேட்டால், "இல்லை" என்பது தான் பதிலாக அமையும். அதாவது,

1. மஹாத்மா "அஹிம்சை" என்ற ஒரு கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றினார். உயிரை விட மேலானதாக கருதினார். எந்த ஒரு தீமை நமக்கு எதிராக நடந்தாலும்,  வன்முறையில் இறங்கக்கூடாது என்பது மஹாத்மாவின் கோட்பாடு. முஸ்லிம்கள் மஹாத்மாவின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வார்களா?  நிச்சயமாக இல்லை.
2. மஹாத்மாவின் அஹிம்சை கோட்பாட்டின் படி, தற்காப்பிற்காக கூட நாம் கத்தியை ஏந்தக்கூடாது, இரத்தம் சிந்தக்கூடாது. இதனை முஹம்மது  பின் பற்றியிருந்திருந்தால்,  உலகத்தின் அகராதிகளில் "இஸ்லாம்" என்ற வார்த்தை சேர்க்கப்படாமல் இருந்திருக்கும். 
3. மஹாத்மாவை முஹம்மது பின்பற்றுவாரா? முஹம்மதுவை மஹாத்மா பின்பற்றுவாரா? இதற்கு முஸ்லிம்களின் கருத்து என்ன?
4. மஹாத்மா இந்துக்கள் வேதம் என்று கருதும் "பகவத் கீதையை" அதிகமாக விரும்பிப்படித்தார். முஹம்மதுவும் முஸ்லிம்களும் பகவத் கீதையை வேதம் என்று நம்பி படிப்பார்களா? மஹாத்மாவின் கருத்துக்களை காஃபிர்கள் செவிமடுக்கவேண்டுமென்று எதிர்ப்பார்க்கும் முஸ்லிம்கள், அதே மஹாத்மாவின் பகவத் கீதைப் பற்றிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, குர்-ஆனோடு கூட இனி பகவத் கீதையையும் படிப்பார்களா?
5. காந்தி அவர்கள் 'முஹம்மது' பற்றிச் சொன்னதை மட்டுமே எல்லாரும் கவனிக்கவெண்டும், அவர் சொன்ன இதர விவரங்கள் நமக்குத் தேவையில்லை என்று முஸ்லிம்கள் சொன்னால், இது தான் நயவஞ்சகம் எனப்படும், ஏமாற்றுவேலை எனப்படும்.
6. முஸ்லிம்கள் 'முக்கியம்' என்று கருதுவதை காஃபிர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும், முஸ்லிம்கள் விட்டுவிடுவதை காஃபிர்களும் விட்டுவிடவேண்டும், இது தான் முஸ்லிம்கள் எதிர்ப்பார்ப்பது. ஆனால், இது அநியாயமாகும், காஃபிர்கள் எல்லாரும் முட்டாள் என்று முஸ்லிம்கள் கருதுவதை நிறுத்திக்கொண்டால் நல்லது.

ஈ) சொல்பவர் மஹாத்மாவாக இருந்தாலும் சரி…

முஹம்மது பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்ளாமல், சொல்லப்படும் கருத்தை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? சொல்பவர் மஹாத்மாவாக இருந்தாலும் சரி, அதனை புறக்கணிக்கவேண்டும்.

கிரிக்கெட் பற்றி ஆலோசனையோ அல்லது இதர கருத்துக்களையோ கேட்கவேண்டுமென்றால் சச்சின் போன்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர்களிடம் கேட்கவேண்டும், அதை விட்டுவிட்டு, சதுரங்க ஆட்ட விளையாட்டு வீரர் விஸ்வநாத் ஆனந்த் அவர்களிடம் கேட்டால், கேட்பவர்களை மக்கள் ஒருவகையாக பார்ப்பார்கள். ஒருவேளை விஸ்வநாத் ஆனந்த் அவர்கள் கிரிக்கெட் பற்றி தன் கருத்தைச் சொன்னாலும் அதனை மக்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள், ஏனென்றால், அவர் சதுரங்க ஆட்ட வீரர், கிரிக்கெட் வீரர் இல்லை. இதுபோல, இஸ்லாமை முழுவதுமாக அறிந்தவரிடம் முஹம்மது பற்றி கேட்கவேண்டுமே ஒழிய, அவர் மஹாத்மாக இருக்கிறார், தேசப்பிதாவாக இருக்கிறார் என்ற காரணத்தினால் அவர் சொல்வதை உண்மை என்று ஏற்றுக்கொள்பவர், இருதய அறுவை சிகிச்சைக்காக, கண் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்த்துக்கொள்வதற்கு சமமாகும்.

ஒருவர் எந்த துறையில் தேர்ச்சிப் பெற்று இருக்கிறாரோ,  அந்த துறை சம்மந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே அவரிடம் கேட்கவேண்டும். இதுமட்டுமல்ல, அவர் சொல்லும் விவரங்களில் உண்மை இருக்கின்றனவா? உள்ளொன்று வைத்து வெளியே வேறொன்று  சொல்கிறாரா? என்பதையும் கவனிக்கவேண்டும்.

உ) முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள்

மஹாத்மாவின் முஹம்மது சம்மந்தப்பட்ட கருத்தை இதர மக்கள் ஏற்கவேண்டும் என்று விரும்பும் நீங்கள், அதே மஹாத்மாவின் இதர கருத்துக்களை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
அஹிம்சை என்பது மஹாத்மாவின் மூச்சு, ஹிம்சை என்பது முஹம்மதுவின் மூச்சு, ஒருவேளை மஹாத்மா முஹம்மதுவை சந்தித்து இருந்திருந்தால் – முஹம்மது மஹாத்மாவை என்னவென்று அழைப்பார்? 'காஃபிர்' என்பாரா? அல்லது 'நல்லடியார்' என்பாரா?  மஹாத்மா முஹம்மதுவிடம் தன் அஹிம்சை பற்றி போதனை செய்தால், அதனை முஹம்மது ஏற்பாரா? முஸ்லிம்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்யவேண்டும் என்ற குர்-ஆன் வசனத்தை காந்தி அவர்கள் ஏற்றுக்கொண்டு, தன் அஹிம்சை கொள்கையை  விட்டுவிடுவாரா?

முஸ்லிம்கள் மஹாத்மாவின் இதர கருத்துக்களை பின் பற்ற வாக்குறுதி கொடுத்தால்,  காஃபிர்களாகிய நாங்கள் மஹாத்மாவின் முஹம்மது பற்றிய கருத்து பற்றி சிந்திப்போம்.  
முஹம்மது தன் போதனையின் மூலம் உலக மக்களின் உள்ளங்களை தொட முடியாவில்லை என்பதற்காக, காஃபிர்களின் கருத்துக்கள் மூலம் முஹம்மதுவின் மேன்மையை உயர்த்த முயலுவது வெட்கத்துக்கு உரியது, இதனால்,  அல்லாஹ்விற்கோ முஹம்மதுவிற்கோ எந்த மேன்மையும் இல்லை, இதற்கு பதிலாக அவர்களுக்கு அவமானம் தான் மிஞ்சும் என்பதில் சந்தேகமில்லை.

முடிவுரை:

மஹாத்மாவை மக்கள் மதிக்கிறார்கள், ஆனால், அதற்காக அவருக்கு சம்மந்தமில்லாத விஷயத்தில், இஸ்லாம் பற்றி முழுவதுமாக அறிந்துக்கொள்ளாமல்  அவர் சொன்ன கருத்துக்களை உண்மையென்று நம்ப மக்கள் தயாராக இல்லை.

முஸ்லிம்களே, உங்கள் முஹம்மதுவை உயர்த்த, காஃபிர்களின் கருத்துக்களினால் எந்த ஒரு பயனும் இல்லை.   இதே மஹாத்மா முஹம்மது பற்றி வேறு வகையாக விமர்சனம் செய்து இருந்திருந்தால், அதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இவர் மஹாத்மா ஆயிற்றே, நம் தேசப்பிதா ஆயிற்றே,  இவர் சொல்வதில் உண்மை இருக்குமே என்றுச் சொல்லி, முஹம்மதுவை புறக்கணித்து விடுவீர்களா? சிந்திப்பீர் செயல்படுவீர்.  முஹம்மதுவை  ஆதரித்து சொல்லப்பட்ட ஒரு கருத்தை நீங்கள் மேற்கோள் காட்டினால், உலகில் முஹம்மதுவிற்கு எதிராக உண்மையைச் சொல்லும் அனேக கருத்துக்களை உலக மக்கள் கேற்கொள் காட்டமுடியும். குர்-ஆனைத் தொட்டு முத்தம் கொடுத்த ஒரு போப்பை நீங்கள் மேற்கோள் காட்டினால், அதே குர்-ஆனை கொண்டு வந்த முஹம்மதுவின் உண்மை நிலையை உலகிற்கு காட்டிய இன்னொரு போப்பை உலகம் உங்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது என்பதை கவனத்தில் வைக்கவும். 

அடுத்த கட்டுரையில் இதர அறிஞர்களின் கருத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து அலசுவோம்.

அடிக்குறிப்புக்கள்:

[1] காஃபிர்கள் பற்றி குர்-ஆன் சொல்லும் சில விவரங்கள்

3:149. நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.

2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.

2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.

2:104. ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) "ராயினா" என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) "உன்ளுர்னா" என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.

2:161. யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.

2:254. நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.

3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.

3:131. தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
(தமிழாக்கம்: டாக்டர். முஹம்மது ஜான்)

Source : 

0 comments: