அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 2, 2014

ரமளான் பாகம் 2 - வானத்தில் வளம் வரும் அல்லாஹ்





 

முன்னுரை: 2014ம் ஆண்டின் ரமளான் மாத முதல் நாளில் "தக்காளியில் அல்லாஹ்வின் பெயர் காணப்படுகிறது, இது அல்லாஹ் செய்த அற்புதம்" என்றுச் சொல்லி, உமரின் தம்பி முன்வைத்த அற்புதமான கேள்விக்கு, உமர் பதில் அளித்துள்ளார். அதனை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கலாம்.

 

2014 ரமளான் பாகம் 1: அல்லாஹ்வின் தற்கால அற்புதங்களும், குர்-ஆனின்அறிவியலும் - அழுகிப்போன தக்காளியில் தத்தளிக்கும் அல்லாஹ்

 

அதன் பிறகு இன்று, உமரின் தம்பி "அல்லாஹ்வின் மேலதிக அற்புதங்கள்" என்றுச் சொல்லி, அனேக படங்களை உமருக்கு மெயிலில் அனுப்பியுள்ளார். இந்த படங்களில் அல்லாஹ்வின் அற்புதங்கள் காணப்படுகின்றனவா? உண்மையாகவே அல்லாஹ் தற்காலத்தில் இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்கிறாரா?  இவைகளை அறிய, கீழ்கண்ட பதிலை படியுங்கள். இவைகளை படிக்கும்போது, ஒரு கணம் நீங்கள் உங்களின் சிறுவயது அனுபவங்களுக்குச் சென்றுவிடுவீர்கள்.  எப்படி என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

 

 

அன்புள்ள தம்பிக்கு,

 

உன் மெயில் கிடைத்தது, அதில் நீ அனேக படங்களை எனக்கு அனுப்பியிருந்தாய். அவைகள் அனைத்தும் அல்லாஹ்வின் தற்கால அற்புதங்கள் என்றுச் சொல்லியிருந்தாய். இப்போது நீ அனுப்பிய அல்லாஹ்வின் அற்புதங்களில் ஒன்றைப் பற்றி சிறிது அலசுவோம்.

 

1) மேகத்தில் அல்லாஹ்:

 

நீ அனுப்பிய முதல் படம், மேகத்தில் "அல்லாஹ்" என்ற பெயர் வருகின்ற ஒரு படமாக இருக்கின்றது. இது அல்லாஹ்வின் அற்புதமல்லவா? என்று கேள்வி கேட்டு இருந்தாய்.

  

உன்னைப்போல இருக்கும் முஸ்லிம்கள் இப்படிப்பட்ட படங்களை மெயில் மூலமாக அனேகருக்கு சிந்திக்காமல் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புதங்களை இறைவன் செய்வானா? என்று சிந்திப்பதில்லை. நான் இதனை அற்புதமாக கருதவேண்டும் என்று நீ விரும்புகிறாய். ஆனால், ஒரு சராசரி மனிதன் இப்படிப்பட்டவைகளை பார்க்கும் போது அவைகளை, வேடிக்கையாக பார்ப்பானே தவிர அற்புதமாக பார்க்கமாட்டான்.

 

வானங்களில் காணப்படும் சில கற்பனை வடிவங்கள்:

 

பொதுவாக நீ வானத்தை பார்க்கும் போது அனேக உருவங்கள் தெரிவதை பார்க்கமுடியும். இது உன்னுடைய கற்பனையைப் பொறுத்தது. நீ என்ன பார்க்கவேண்டும் என்று விரும்புகிறாயோ அல்லது கற்பனை செய்கிறாயோ, அந்த வடிவங்கள் உனக்குத் தெரியும்.

 

நீ அனுப்பிய படத்தை பார்க்கும் போது, உனக்கு அரபி எழுத்துக்களில் "அல்லாஹ்" என்று தெரிந்தால், மற்றவர்களுக்கு அது போலவே தெரியாது. அதற்கு பதிலாக வேறு ஒரு உருவம் தெரியும். நீ அனுப்பிய படத்தையே நாம் எடுத்துக்கொண்டு கூர்ந்து கவனித்தால், கீழ்கண்ட படம் போல தெரிவதை காணமுடியும்.

 



பனிப்படர்ந்து காணப்படும் நாடுகளில் பனியில் சருக்கி விளையாடுவதற்கு பயன்படும் பலகையில் (Toboggan) ஒரு பையன் உட்கார்ந்து சருக்குவது போல காணப்படுகின்றது நீ அனுப்பிய "வானத்தில் அல்லாஹ்" படம். மேற்கண்ட  இரண்டு ஒப்பிட்டுப் பார், இது அற்புதமா அல்லது கற்பனையா?  என்று உனக்கு விளங்கும்.  ஒருவேளை அந்த சருக்கும் சிறுவன் அல்லாஹ்வாக இருக்குமோ?

 

தம்பி நீ ஒன்று செய், மொட்டை மாடியில் சென்று ஒரு நார்காலியில் உட்கார்ந்துக்கொண்டு, அல்லது ஒரு பாயை விரித்து, மல்லாக்கு படுத்துக்கொண்டு, வானத்தையே பார்த்துக்கொண்டு இரு. காலையிலிருந்து மாலை வரை நீ இப்படி செய்தால், அல்லாஹ் மட்டுமல்ல, இன்னும் அனேக உருவங்களை நீ பார்க்கலாம்.  வானத்தில் உருவங்களைப் பார்க்கும் அனுபவம் என்பது அனைவருக்கும் உண்டு. இப்படிப்பட்ட ஒன்றை எடுத்துக்கொண்டு, இதனை அல்லாஹ் என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கு அவமானமாகும்.

 

தில்லுமுல்லு செய்யும் முஸ்லிம்கள், மற்றும் தற்கால கிராபிக்ஸ்:

 

நமக்கு வானத்தில், மலைகளில் இயற்கையாக அனேக உருவங்கள் தெரிவது ஒருபக்கமிருந்தால், முஸ்லிம்களில் சில அறிவா(லி)ளிகள், கம்பியூட்டர் கிராபிக்ஸ்ஸை பயன்படுத்தி, இப்படி தில்லுமுல்லு செய்து "அல்லாஹ்வின் அற்புதங்களை" உருவாக்குகிறார்கள் என்பது மறுக்கமுடியாத இன்னொரு உண்மையாகும்.

 

கிராபிக்ஸ் மூலமாக வானத்தில் எவைகளை வேண்டுமென்றாலும் காண்பிக்கமுடியும். கீழ்கண்ட இரண்டு படங்களைப் பார்:

 



​ 

 

ஒருவேளை இந்த படங்கள் கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்பட்ட படங்கள் இல்லை என்றுச் சொன்னாலும், இவைகளுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

 

மேற்கண்ட படங்களில், முதலாவது படத்தில் காதல் சின்னம் என்றுச் சொல்லக்கூடிய "இதயச் சின்னம்" காணப்படுகின்றது. உன்னுடைய இஸ்லாமிய அறிவின் படி, இந்த சின்னத்தை வானத்தில் காண்பித்து, அல்லாஹ் உலக மக்களுக்கு  எவைகளை போதிக்கிறார் என்று உன்னால் சொல்லமுடியுமா?

 

இரண்டாவது படத்தில், ஒரு முயல் நம்மை பார்ப்பது போல இருக்கிறது. ஆக, அல்லாஹ் தான் வானத்தில் முயலின் உருவத்தில் காணப்பட்டான் என்று முஸ்லிம்கள் சொல்வார்களா?

 

 

அல்லாஹ்வின் அற்புதம் என்றுச் சொல்லி, உப்பு சப்பு இல்லாத விஷயங்களை எனக்கு அனுப்புவதை விட்டுவிட்டு, குர்-ஆனின் அறிவியல் என்ற தலைப்பிற்கு சம்மந்தப்பட்டு ஏதாவது விவரங்களை நீ அனுப்பமுடியுமா?

 

இணையத்தில் தேடிப்பார்த்து, இன்னும் இதோ அற்புதம் என்றுச் சொல்லி எனக்கு படங்களை அனுப்புவதை நிறுத்து, இதனால் ஒரு நன்மையும் இல்லை.  இதனால் உன் நேரமும் என் நேரமும் வீணாகின்றது.

 

அடுத்த முறை உன்னுடைய மெயில் வரும் போது, அது குர்-ஆனின் விஞ்ஞானம் சம்மந்தப்பட்ட விஷயமாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

 

இவ்வளவு சொல்லியும் நீ திருந்தாமல், இந்த தற்கால அல்லாஹ்வின் அற்புதங்கள் பற்றியே பேசிக்கொண்டு இருந்தால், இன்னும் சூடாக கேள்விகள் கேட்கவேண்டிவரும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

 

இப்படிக்கு

உன் அண்ணன்

உமர்



http://isakoran.blogspot.in/2014/06/2014-1.html

0 comments: