அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 2, 2014

பாகம் 2 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

Part 2
பாகம் 2

பாகம் 1ஐ படிக்க இங்கு சொடுக்கவும். இந்த இரண்டாம் பாகத்தில் 11வது
காரணத்திலிருந்து 20வது காரணம் வரை காண்போம்.

11. இறைவனின் பிள்ளைகளாக உறவாடுபவர்களை குற்றப்படுத்துபவர் இறைவனுடைய
தீர்க்கதரிசி ஆகமுடியுமா?

இறைவனை "பிதா" என்று முஹம்மது அழைக்கவில்லை, இது முதல் குற்றமாகும்.
இரண்டாவதாக, அவர் கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் குற்றப்படுத்துகிறார்.
அதாவது இவர்கள் தேவனின் குமாரர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்கிறார்கள்
என்று முஹம்மது குற்றப்படுத்துகிறார். ஆதியாகமத்திலிருந்து
வெளிப்படுத்தல் வரை பல ஆயிர ஆண்டுகளாக பிதா என்று மக்கள் தேவனை அழைப்பதை,
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வந்த முஹம்மது, இது தவறு என்றுச் சொல்வதை
பார்க்கும்போது, நமக்கு சிரிப்பு தான் வருகிறது, இவரையா கிறிஸ்தவர்கள்
நபி என்று நம்புவார்கள்? இவரையா பைபிளின் தேவன் அனுப்பியிருப்பார்?
நிச்சயமாக இல்லை. [11]

12. இறை வார்த்தையை திருத்துபவர் எப்படி பைபிள் வழியில் வந்த
தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?

எந்த தீர்க்கதரிசியாக இருந்தாலும், அவர் முந்தையை வெளிப்பாடுகளை அப்படியே
ஏற்றுக்கொள்வார். ஆனால், முஹம்மது தம்மை தீர்க்கதரிசி என்றுச்
சொல்லிக்கொண்டு அதே நேரத்தில், பைபிளின் நிகழ்வுகளை மாற்றி குர்-ஆனில்
எழுதியுள்ளார். ஆதாம் முதற்கொண்டு இயேசுக் கிறிஸ்துவரை பைபிளின் அனேக
விவரங்களை மாற்றி முஹம்மது போதித்து இருக்கிறார். எனவே, இவர் ஒரு கள்ள
நபியாகத்தான் இருக்க முடியும். [12].

13. விபச்சாரத்தை சட்டமாக்கியவர் இறைவனுடைய தீர்க்கதரிசியாக முடியுமா?

விபச்சாரத்தை நியாயமான செயலாக மாற்றி, முஸ்லிம்கள் திருமணம்
செய்துக்கொள்ளாமலேயே அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொள்ளலாம் என்று முஹம்மது
சொல்லியுள்ளார். திருமணத்திற்கு வெளியே ஒரு பெண் மற்றும் ஆண் உடலுறவு
கொள்வது என்பது இஸ்லாமியரல்லாதவர்களை பொருத்தமட்டில் விபச்சாரமாகும்.
முஸ்லிம்கள் இதனை எப்படி அழைத்துக்கொண்டாலும் இது விபச்சாரமே ஆகும்.
இப்படிப்பட்ட சட்டங்களை கொண்டுவந்தவர் எப்படி ஒரு தீர்க்கதரிசியாக
இருக்கமுடியும். [13]

14. விவாகரத்தை ஆதரிப்பவர் இயேசுவின் வழியில் வந்த தீர்க்கதரிசியா?

ஒருவர் தன் துணையை (மனைவியை/கணவனை) விவாகரத்து செய்ய விரும்பினால்,
அதற்கு "நம்பிக்கைத் துரோகம்" அதாவது "விபச்சாரம்" தான் காரணமாக
இருக்கவேண்டும், மற்ற எந்த காரணமும் இருக்கக்கூடாது என்று இயேசு
போதித்தார். ஆனால், ஒரு முஸ்லிம் தன் மனைவியைப் பார்த்து, "தலாக்" என்ற
வார்த்தையை மூன்று முறை சொன்னால் போதும் விவாகரத்து நடந்துவிட்டது
என்றுச் சொல்லி, கணவன் மனைவியின் மத்தியில் இருக்கும் உறவை சுலபமாக
முரித்துவிட்டார் முஹம்மது. இயேசுவின் போதனையை பின்பற்றுவதை
விட்டுவிட்டு, அவரை அவமானப்படுத்தும் வகையில் முஹம்மது போதித்தார்.
இதனால், இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் இப்படிப்பட்ட விவாகரத்தினால்
பெண்கள் அதிக அவதிக்குள் சிக்கியுள்ளார்கள். இப்படிப்பட்ட முஹம்மதுவையா
கிறிஸ்தவர்கள் நபி என்று நம்பி பின்பற்றமுடியும்?[14]

15. கர்த்தர் அறுவறுக்கும் நூதன மறுமணத்தை சட்டமாக்கியர் இறைவனுடைய
தீர்க்கதரிசியாக முடியுமா?

முஹம்மதுவின் போதனையின் படி, ஒரு முஸ்லிம் தன் மனைவியை மூன்றாவது முறை
தலாக் என்று சொல்லிவிட்டால் விவாகரத்து நடந்துவிட்டது போலாகும். அதன்
பிறகு அப்பெண்ணை மறுபடியும் திருமணம் செய்ய விரும்பினால், அந்தப்பெண்
வேறு ஒரு ஆணை திருமணம் செய்யவேண்டும், அவனோடு உடலுறவு கொள்ளவேண்டும்.
இதன் பிறகு இந்த மனிதன் அவளை விவாகரத்து செய்தால் தான் முதல் கணவன் அவளை
மறுமணம் செய்யமுடியும். இந்த செயல் கர்த்தரின் பார்வையில் அறுவறுப்பாக
இருக்கிறது. இப்படிப்பட்ட கொடிய தீய போதனைகளைச் செய்த முஹம்மதுவை எப்படி
கிறிஸ்தவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்று விசுவாசிப்பார்கள்?[15]

16. தீர்க்கதரிசி நாய்களை ஏன் கொல்லவேண்டும்?

முஹம்மது நாய்களை கொல்லும்படி கட்டளையிட்டார். மக்களுக்கு உதவும்
நாய்ளைத் தவிர இதர நாய்களை கொன்றுவிடும்படி கட்டளையிட்டார். ஒரு நபியை
இறைவன் மக்களை நல்வழிப்படுத்த அனுப்புகிறார், இப்படி நாய்களைக்
கொல்லுங்கள் என்றுச் சொல்ல அனுப்பமாட்டார். ஏன் நாய்களை கொல்லவேண்டும்?
குர்-ஆனும் ஒரு வெளிப்பாடுதான், ஹதீஸ்களும் அல்லாஹ் கொடுத்த வெளிப்பாடு
தான் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். நாய்களை கொல்லுங்கள் என்று
நித்திய கட்டளையாக கொடுத்த இறைவன் உண்மை இறைவனில்லை. இந்த இறைவனின்
நபியும் ஒரு உண்மை நபியில்லை. [16]

17. கருப்பு நாய் சாத்தானா? சிவப்பு மற்றும் மஞ்சள் நாய் யார்?

முஹம்மது நாய்களை கொல்லச் சொன்னார்கள். தொழுகை செய்யும் மனிதர்களுக்கு
முன்பு கருப்பு நாய் வந்துவிட்டால், தொழுகை முறித்துவிடுமாம். ஆனால்,
சிவப்பு நாய் அல்லது மஞ்சம் நிற நாய் வந்தால் தொழுகை முறியாதாம். கருப்பு
நாய் தான் சாத்தான் என்று முஹம்மது கூறியுள்ளார். இப்படிப்பட்ட போதனை
செய்பவர் எப்படி இறைவானால் அனுப்பப்பட்ட உண்மையான நபியாக இருக்கமுடியும்?
உலகில் உள்ள அனைத்து கருப்பு நாய்களும் சாத்தான்களா? இதனையும் நாம்
இக்காலத்தில் நம்பவேண்டுமா? உண்மையாக முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி
தான். இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. [17]

18. நாய் குறுக்கே வந்தால் தொழுகை முறிந்துவிடுமா?

தொழுகை என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல்.
மனிதன் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இறைவனை துதித்து, புகழ்ந்து அவரை
போற்றி தன் விண்ணப்பங்களை தெரிவிக்கும் ஒரு செயலாகும். ஒரு வேளை
மற்றவர்கள் நம் கவனத்தை முறித்தாலும், இதற்காக இறைவன்
கோபித்துக்கொள்ளமாட்டான். நாய்கள் குறுக்கே வரக்கூடாது என்று
விரும்புகிறவர்கள் வீட்டிற்குள் கதவை மூடிக்கொண்டு தொழட்டும், அதற்காக
கீழ்தரமாக நாய்களைக் கொள்வது சரியான செயலாகுமா? தொழுகையின் இலக்கணத்தை
சரியாக புரிந்துக்கொள்ளாத முஹம்மது எப்படி தீர்க்கதரிசியாக
இருக்கமுடியும்? நிச்சயமாக இல்லை. [18]

19. பெண்களை நாய்களுக்கும், கழுதைகளுக்கும் சமமாக்கியவர் இறைவனுடைய
தீர்க்கதரிசியா?

முஹம்மது பெண்களை நாய்களுக்கும், கழுதைகளுக்கும் சமமாக்கிப் பேசுவது
சரியானது அல்ல. ஒரு மனிதன் தொழும் போது, அவருக்கு எதிரே பெண்
வந்துவிட்டால், கவனம் ஈர்க்கப்பட்டு தொழுகை முறியும் என்று முஹம்மது
கூறுகிறார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மனப்பாடம் செய்து
ஆசிரியர்களிடம் ஒப்புவிக்கும்போது, ஜாக்கிரதையாக ஒப்புவிப்பது போல,
இஸ்லாமுடைய தொழுகை காணப்படுகின்றது. இதுவே, இஸ்லாம் ஒரு போலியான
மார்க்கம் என்பதை நிருபிக்கின்றது. இதனை ஸ்தாபித்த முஹம்மது எப்படி
பைபிளின் தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? கவனம்
ஈர்க்கப்படுவதற்கு பெண்களும், நாய்களும் தேவையில்லை, ஆண்கள் வந்தாலும்
மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவர்களுக்கு தடங்கலாக இருக்கும். [19]

20. நாயை வளர்ப்பவர்களின் நன்மைகள் (நற்செயல்கள்) ஒவ்வொரு நாளும் குறையும்

ஒருவர் நாயை வளர்த்தால், அவருடைய நற்செயல்கள் ஒவ்வொரு நாளும் குறையும்
என்று முஹம்மது கூறியுள்ளார். நற்காரியங்கள் செய்வதற்கும், நாயை
வளர்ப்பதற்கும் என்ன சம்மந்தம்? இது அறிவுடமையாக இருக்கின்றதா? யார்
யாரெல்லாம் நாய்களை வளர்க்கிறார்களோ, அவர்களின் நன்மையை அல்லாஹ்
குறைத்துவிடுகின்றானா? இப்படி ஞானமில்லாத கட்டளைகளைக் கொடுப்பவர் எப்படி
உண்மை தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? நாய் என்ன செய்தது? தன் மனதிலே
தோன்றியபடியெல்லாம் மக்களுக்கு அறிவுரை கூறிய இவர் ஒரு கள்ள தீர்க்கதரிசி
தான். [20]

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன்
தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[11] குர்ஆன் 5:18

யூதர்களும், கிறிஸ்தவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்'
அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள்
பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல!
"நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர்
கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத்
தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும்,
அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே
உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.

[12] குர்ஆன் 5:18

"யூதர்களும், கிறிஸ்தவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்'
அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள்
பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல!
"நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர்
கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத்
தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும்,
அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே
உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது".

மேலும் ஆதாம், ஆபிரகாம், மோசே, தாவீது மற்றும் இயேசு போன்றவர்களின்
விவரங்களை குர்-ஆனில் படித்துப்பாருங்கள். அவைகளை பைபிளின்
நிகழ்ச்சிகளோடு ஒப்பிடும் போது, எப்படியெல்லாம் முஹம்மது முந்தைய வேத
வாக்கியங்களின் நிகழ்வுகளை மாற்றி தம் மக்களுக்கு போதித்து இருக்கிறார்
என்பதை காணமுடியும்.

[13] குர்ஆன் 4:24

4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப்
பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது
விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது
விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில்
இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக)
கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு
அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட)
பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக
(விதிக்கப்பட்ட மஹர்) தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை
பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும்
சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ்
நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

[14] குர்-ஆன் 2:230

மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்)
தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது.
ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின்
(முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய
வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும்
(மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின்
வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத்
தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.

[15] குர்-ஆன் 2:230

[16] ஸஹீஹ் முஸ்லிம் எண்: 473 & 3197

473. அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லுமாறு
உத்தரவிட்டார்கள். பின்னர் மக்களுக்கும் நாய்களுக்கும் என்ன நேர்ந்தது
(அவர்கள்நாய்களை ஏன் கொல்ல வேண்டும்)? என்று கேட்டார்கள். பின்னர் வேட்டை
நாய்களுக்கும் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும்
நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள். மேலும் பாத்திரத்தில் நாய் வாய்
வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை
மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்முஃகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே
மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில்
யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கால்நடைகளின்
பாதுகாப்பிற்காக,வேட்டையாடுவதற்காக, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக
வைத்திருக்கும் நாய்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று அதிகப்படியாக
இடம்பெற்றுள்ளது.

மற்றவர்களது அறிவிப்பில் விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக
வைத்திருக்கும் நாய்கள் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. Book :2

3197. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி
உத்தரவிட்டார்கள்; உடனே நாங்கள் மதீனாவிற்குள்ளேயும் அதன் சுற்று
வட்டாரங்களிலும் பரவிச் சென்று, ஒரு நாயையும் விடாமல் அனைத்தையும்
கொன்றோம். கிராமவாசிப் பெண்ணைப் பின்தொடர்ந்து செல்லும் நாயையும் நாங்கள்
கொன்றோம். Book :22

[17] ஸஹீஹ் முஸ்லிம் எண் 882:

882. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ
நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள)
சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக
அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும்
கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான்,
அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிறநாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை
விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று
கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம்
கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள்
என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. Book :4

[18] ஸஹீஹ் முஸ்லிம் எண் 882:

[19] ஸஹீஹ் முஸ்லிம் எண் 882 & 887

887. மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் அருகில் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக்
குறுக்கே செல்வது) தொழுகையை முறித்துவிடும் என்பது பற்றி பேசப்பட்டது.
அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், (பெண்களாகிய) எங்களைக் கழுதைகளுக்கும்
நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் (அவர்களின்) கிப்லாவுக்குமிடையே
கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருக்க அவர்கள்
தொழுதுகொண்டிருப்பார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற்பட்டால் நபி
(ஸல்) அவர்களுக்கு முன்னால் (எழுந்து) உட்கார்ந்து அவர்களுக்கு இடையூறு
ஏற்படுத்த விரும்பாமல் கட்டிலின் இரு கால்கள் வழியாக நான் நழுவிச்
சென்றுவிடுவேன் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. Book :4

[20] ஸஹீஹ் முஸ்லிம் எண்கள்: 3202, 3203, 3204 & 3205

3202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு
நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால்
நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட
நாயையும் தவிர.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book :22

பாகம் 3ஐ சொடுக்கவும்

உமரின் இதர கட்டுரைகள்

http://isakoran.blogspot.in/

0 comments: