அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 2, 2014

பாகம் 2 - ரமளான் பற்றி கிறிஸ்தவர்கள் அறிந்துக் கொள்ளவேண்டிய முக்கியமான விவரங்கள்

பாகம் 2 - ரமளான் பற்றி கிறிஸ்தவர்கள் அறிந்துக் கொள்ளவேண்டிய முக்கியமான விவரங்கள்

இக்கட்டுரையின் கேள்வி/பதில்கள்

கேள்வி 4: என் இஸ்லாமிய நண்பர், என்னை ரமளான் விருந்திற்கு
அழைத்திருக்கிறார், கிறிஸ்தவனாகிய நான் அதில் பங்கு பெறலாமா? அவன்
கொடுக்கும் உணவுகளை சாப்பிடுவது பைபிளின் படி சரியானதா?

கேள்வி 5: இஸ்லாமிய மார்க்கவும், விக்கிர ஆராதனைச் செய்யும் மார்க்கங்களும் ஒன்றா?

கேள்வி 6: அப்பொஸ்தலர் நடபடிகளில் நாம் காணுவது போல, விக்கிரகங்களுக்கு
படைக்கப்பட்ட உணவிற்கு நாம் விலகி இருக்கவேண்டுமல்லவா? அது போல
இஸ்லாமியர்கள் கொடுக்கும் உணவிற்கு நாம் விலகி இருக்கவேண்டுமல்லவா?

கேள்வி 7: இதன் படிப் பார்த்தால், முஸ்லிம்கள் நம்மை விருந்துக்கு
அழைத்தால், நாம் தாராளமாகச் செல்லலாம், ஆனால், என் கிறிஸ்தவ சகோதரன்
ஒருவன் இடறல் அடைவான் என்று நான் கருதினால், செல்லத்தேவையில்லை, அவர்கள்
தரும் உணவை சாப்பிடத்தேவையில்லை, இது சரி தானே? இவ்வளவு தெரிந்தும்
இன்னும் சிலர் விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை சாப்பிடக்கூடாது,
முஸ்லிம்கள் தரும் பொருட்களை சாப்பிடக்கூடாது என்று அடம் பிடிக்கிறார்களே
என்ன செய்வது?

கேள்வி 8: முஸ்லிமள் தங்கள் நோன்பை முடித்துக்கொள்வதற்கு நாம் உதவி
செய்யலாமா? உதாரணத்திற்கு, இந்த மாதத்தில் நோன்பாளிகளுக்காக மசூதிகளுக்கு
திண்பண்டங்களை, பழங்களை வாங்கித் தரலாமா?



---------- Forwarded message ----------
From: Isa Koran <isa.koran@gmail.com>
Date: 2014-07-10 23:18 GMT+05:30
Subject: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 2 - ரமளான் பற்றி
கிறிஸ்தவர்கள் அறிந்துக் கொள்ளவேண்டிய முக்கியமான விவரங்கள்
To: isa.koran@gmail.com



(கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் - ரமளான் கேள்வி பதில்கள்)


இந்த தொடர் கட்டுரையின் முதல் பாகத்தை இந்த தொடுப்பை சொடுக்கி படிக்கவும்.

இப்போது இரண்டாம் பாகத்தின் கேள்வி பதில்களைக் காண்போம்:

கேள்வி 4: என் இஸ்லாமிய நண்பர், என்னை ரமளான் விருந்திற்கு
அழைத்திருக்கிறார், கிறிஸ்தவனாகிய நான் அதில் பங்கு பெறலாமா? அவன்
கொடுக்கும் உணவுகளை சாப்பிடுவது பைபிளின் படி சரியானதா?

பதில்: இது ஒரு கடினமான கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை
புரிந்துக்கொள்வதில் சிலருக்கு சிக்கல்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.
நாம் பதிலை காண்பதற்கு முன்பாக, சில முக்கியமான பொதுவான விஷயங்களை
புரிந்துக் கொள்ளவேண்டும்.

1) வாய்க்குள்ளே போகிறது மனுஷனையும், தேவனையும் வேறு புரிக்காது,
வாயிலிருந்து புறப்படுகிறதே, கர்த்தருக்கு விரோதமான பாவமாக கருத்தப்படும்
என்று இயேசு கூறியுள்ளார் (பார்க்க மத்தேயு 15:10, 11).

பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு
உணருங்கள். வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது,
வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
(மத்தேயு 15:10, 11)


2) தேவனுடைய இராஜ்ஜியம் என்பது புசிப்பும் குடிப்பும் அல்ல, இந்த
இராஜ்ஜியத்திற்கு பங்குள்ளவர்களாகிய கிறிஸ்தவர்கள் உணவிற்கு அதிகமான
முக்கியத்துவத்தைக் கொடுக்கத் தேவையில்லை, அதை விட முக்கியமான விஷயங்கள்
அனேகம் உள்ளன (பார்க்க ரோமர் 14:17)

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும்
பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. (ரோமர் 14:17)


3) கிறிஸ்தவர்களுக்கு உணவு பற்றி சுயமாக முடிவுகளை எடுக்க முழு
சுதந்திரம் உண்டு, ஆனால், நமக்கு இருக்கும் சுதந்திரத்தை நாம் ஒரு
கட்டுப்பாட்டிற்குள் பயன்படுத்தவேண்டும், முக்கியமாக இதர கிறிஸ்தவர்கள்
இடறி விழுவதற்கு நாமோ, நம்முடைய சுதந்திரமோ காரணமாக இருக்கக்கூடாது.

4) சபைக்காகவும், இதர சகோதர சகோதரிகளுக்காகவும் நாம் நம் சுதந்திரத்தை
விட்டுக்கொடுக்கவேண்டும், அப்போது தான் சகோதர சிநேகம் நிலைத்திருக்கும்.

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம்
தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும்
எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. ஒவ்வொருவனும் தன்
சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன். (1
கொரிந்தியர் 10:23, 24)


இதன் அடிப்படையில் நாம் பார்த்தால், ஒரு இஸ்லாமிய நண்பர் உங்களை
விருந்துக்கு அழைத்தால், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை சாப்பிடலாம்,
அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள்
தாராளமாகச் சென்று அவர் கொடுக்கும் உணவை கேள்வி கேட்காமல் சாப்பிடலாம்.
விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை நான் சாப்பிடமாட்டேன் என்று நீங்கள்
விசுவாசித்தால், நீங்கள் அழகாக உங்கள் இஸ்லாமிய நண்பனிடம் மன்னிப்புக்
கேட்டு, நான் சாப்பிடமாட்டேன் என்றுச் சொல்லிவிடலாம்.

கேள்வி 5: இஸ்லாமிய மார்க்கவும், விக்கிர ஆராதனைச் செய்யும் மார்க்கங்களும் ஒன்றா?

பதில்: ஆம், விக்கிர ஆராதனையை எப்படி பைபிள் பார்க்கின்றதோ,
அதைப்போலத்தான் இஸ்லாமையும் பார்க்கிறது. கிறிஸ்தவர்கள் விக்கிர ஆராதனையை
எந்த நிலையில் பார்க்கிறார்களோ அதே நிலையில் இஸ்லாமையும்
பார்க்கவேண்டும். இவ்விரண்டும், யெகோவா தேவனுக்கு கொடுக்கவேண்டிய
ஆராதனையை (தொழுகையை) விக்கிரகங்களுக்கோ, அல்லாஹ்விற்கோ கொடுக்கும் போது
அதுவும் விக்கிர ஆராதனையே ஆகும். முஸ்லிம்கள் ஏக இறைவனை வணங்குகிறோம்
என்றுச் சொல்லிக்கொண்டாலும், இஸ்லாமின் இறையியலைக் காணும் போது,
முஹம்மதுவின் போதனைகளைப் பார்க்கும் போது அது விக்கிர ஆராதனையே ஆகும்.

இந்த வசனத்தை பார்க்கவும்:

1 கொரிந்தியர் 8:4
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி,
உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன்
இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.


இந்த வசனம் இஸ்லாமையும் குறிக்கும். அல்லாஹ் என்ற பெயரில் உண்மையான
இறைவன் இல்லை என்பதால், இந்த வசனத்தை இப்படி மாற்றி படித்தால் உண்மை
விளங்கும்.

அல்லாஹ்விற்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி,
உலகத்திலே அல்லாஹ் என்று ஒருவன் இல்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன்
இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.


கேள்வி 6: அப்பொஸ்தலர் நடபடிகளில் நாம் காணுவது போல, விக்கிரகங்களுக்கு
படைக்கப்பட்ட உணவிற்கு நாம் விலகி இருக்கவேண்டுமல்லவா? அது போல
இஸ்லாமியர்கள் கொடுக்கும் உணவிற்கு நாம் விலகி இருக்கவேண்டுமல்லவா?

பதில்: விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது பற்றிய சில
விவரங்களை நாம் காண்போம் (இதைப் பற்றி விவரமாக அறிய இந்த தொடுப்பை
http://www.gotquestions.org/food-sacrificed-idols.html சொடுக்கி
படிக்கவும்). இந்த விவரம் இஸ்லாமுக்கும் பொருந்தும்.

அ) சபையில் ஒற்றுமையை உண்டாக்குவதற்கு:

திருச்சபையின் ஆரம்ப காலத்தில் யூதர்களிலிருந்தும், அந்நிய
ஜனங்களிலிருந்தும் (கிரேக்கர்கள்) மக்கள் மனந்திரும்பி சபையில்
சேர்க்கப்பட்டார்கள். யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின்
பழைய ஏற்பாட்டு கட்டுப்பாடு, உணவு பற்றிய கட்டளைகளை அவர்கள் மறக்கவில்லை.
எனவே அவர்கள் விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட பொருட்களை கடைகளில் வாங்கி
சாப்பிடக்கூடாது என்று வாதிட்டனர். அக்காலத்தில் விக்கிரகங்களுக்கு
படைத்த பிறகு, பூஜை செய்த பிறகு தான் கடைகளில் மாமிசத்தை விற்றார்கள்,
இவைகளை வாங்கி சாப்பிடக்கூடாது என்று கிறிஸ்தவர்களான யூதர்கள்
வாதிட்டனர்.

ஆனால், கிரேக்கர்கள் இது சரியில்லை என்று வாதிட்டனர். எல்லா உணவையும்
சாப்பிடலாம் என்று நம்பினார்கள். இப்படி ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு
இருந்தபடியினால், சபையில் பிரிவினையை தவிர்ப்பதற்காக, எருசலேம் சபையானது
ஒரு முடிவை எடுத்து, தற்காலிகமாக யூத, கிரேக்க சண்டையை ஓயவைத்தது.,
அதைத்தான் நாம் அப்போஸ்தலர் நடபடிகள் 15ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்:

அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும்
இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.
எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும்,
நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள்
விலகியிருக்கவேண்டுமென்பதே. (அப் 15:27, 28)


மேற்கண்ட தீர்மானத்தின் மூலமாக, ஒருவகையாக இரு பிரிவினருக்கு இடையே
இருந்த சண்டை ஓய்ந்தது. இதே போல, யூத-கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம்
செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர், ஆனால், திருச்சபை அது
தேவையில்லை என்று தீர்ப்பு அளித்தது.

ஆ) பலவீனமான சகோதரனை மனதில் வைத்தவர்களாக, நம் சுதந்திரத்தை விட்டுக்கொடுத்தல்

இதே போல புதிய ஏற்பாட்டை நாம் படித்தால், ஒரு பலவீனமான சகோதரனுக்காக நாம்
நம் சுதந்திரத்தை (எதையும் சாப்பிடலாம் என்ற சுதந்திரத்தை)
விட்டுக்கொடுக்கலாம் என்பதை அறியமுடியும்.

1 கொரிந்தியர் 10:27 லிருந்து 31ம் வசனம் வரை படிப்போம். தற்போது
இஸ்லாமியர்கள் கொடுக்கும் உணவு பற்றி ஆராய்ந்துக்கொண்டு இருக்கின்ற
படியால், அவிசுவாசி என்ற இடத்தில் "முஸ்லிம்" என்றும், விக்கிர ஆராதனை
என்ற இடத்தில் "இஸ்லாம்" என்றும் மாற்றி படித்துப் பார்ப்போம். அப்போது
தெளிவு உண்டாகும்.

10:27 அன்றியும் முஸ்லிம்களில் ஒருவன் உங்களை விருந்துக்கு
அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம்
ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.

10:28 ஆயினும் இது அல்லாஹ்விற்கு படைக்கப்பட்டது என்று ஒருவன்
உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும்
மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும்
கர்த்தருடையது.

10:29 உன்னுடைய மனச்சாட்சியைக் குறித்து நான் இப்படிச் சொல்லாமல்,
மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம்
மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?

10:30 மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து
அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்?

10:31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும்,
எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.


பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது, எனவே, நாம் புசிக்கும்
எதுவானாலும் அதை கர்த்தர் தான் உண்டாக்கினார். எனவே, மற்ற கிறிஸ்தவர்கள்
நம்முடைய செயலினால் துக்கப்படுவார்கள் அல்லது குழப்பமடைவார்கள் என்று
நீங்கள் கருதினால், முஸ்லிம்கள் கொடுக்கும் உணவை சாப்பிடத்தேவையில்லை.
ஆகையால், நாம் கிறிஸ்தவர்கள் தரும் உணவுகளை உட்கொண்டாலும், முஸ்லிம்கள்
தரும் உணவுகளை உட்கொண்டாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று
செய்ய வேண்டும். எந்த உணவாக இருந்தாலும் சரி, அதனை சாப்பிடுவதினால் அதிக
நன்மையும் இல்லை, சாப்பிடாமல் இருப்பதினால், எந்த தீங்கும் இல்லை.

இ) சகோதர அன்பு வெளிப்படுத்துவது எப்படி?

இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று
தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும்
இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். ஒரு பொருளும்
(முஸ்லிம்கள்/இந்துக்கள் தரும் உணவுகள்) தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று
கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத்
தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது
தீட்டுள்ளதாயிருக்கும். போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு
விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே
(முஸ்லிம்கள்/இந்துக்கள் தரும் உணவை சாப்பிடுவதினாலே) கெடுக்காதே,
கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. உங்கள் நன்மை தூஷிக்கப்பட
இடங்கொடாதிருங்கள். (ரோமர் 14:13-16)


ஈ) நம்முடைய சுதந்திரம் ஒரு பாவமாக கருதப்படலாம்


1 கொரிந்தியர் 8ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டவைகள் சுருக்கமாக இந்த உணவு
விஷயத்தை தொட்டுப் பேசுகின்றது. இது நல்ல தெளிவை உண்டாகும்.

முன்பு சொன்னதுபோலவே, விக்கிரகம் என்ற இடத்தில் இஸ்லாம் என்றும்,
அவிசுவாசி என்ற இடத்தில் முஸ்லிம் என்றும் மாற்றியுள்ளேன், படித்துப்
பாருங்கள்.

8:7 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும்
இஸ்லாமை, அல்லாஹ்வை ஒரு பொருளென்று எண்ணி, அல்லாஹ்விற்கு
படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி
பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.

8:8 போஜனமானது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது;
என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை,
புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.

8:9 ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம்
எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.

8:10 எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை மசூதியிலே அல்லது இஸ்லாமிய
விழாக்களிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய
மனச்சாட்சி அல்லாஹ்விற்கு படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத்
துணிவுகொள்ளுமல்லவா?

8:11 பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா?
அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.

8:12 இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள
அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு
விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.

8:13 ஆதலால் முஸ்லிம்களின் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால்,
நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் முஸ்லிம்கள்
தரும் உணவை புசியாதிருப்பேன்.

இப்போது புரிந்ததா? நாம் முஸ்லிம்களின் விருந்துகளில், விக்கிர ஆராதனை
நடக்கும் விருந்துகளில், பங்கு பெறலாமா? இல்லையா? இது உங்கள்
விசுவாசத்தைப் பொருத்தது.


கேள்வி 7: இதன் படிப் பார்த்தால், முஸ்லிம்கள் நம்மை விருந்துக்கு
அழைத்தால், நாம் தாராளமாகச் செல்லலாம், ஆனால், என் கிறிஸ்தவ சகோதரன்
ஒருவன் இடறல் அடைவான் என்று நான் கருதினால், செல்லத்தேவையில்லை, அவர்கள்
தரும் உணவை சாப்பிடத்தேவையில்லை, இது சரி தானே? இவ்வளவு தெரிந்தும்
இன்னும் சிலர் விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை சாப்பிடக்கூடாது,
முஸ்லிம்கள் தரும் பொருட்களை சாப்பிடக்கூடாது என்று அடம் பிடிக்கிறார்களே
என்ன செய்வது?

பதில்: இப்படிப்பட்டவர்கள் ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளவேண்டும். இன்று
நாம் இந்தியாவில் எந்த பொருளை எடுத்துக்கொண்டாலும், ஒரு விக்கிரகத்துக்கு
பூஜை செய்யப்படாமல் அது நம்முடைய கையில் வருவதில்லை. இப்படிப்பட்ட
கட்டுப்பாட்டை உடையவர்கள் 100% உண்மையாளர்களாக வாழ முயற்சி செய்தால்,
அவர்கள் எதையும் சாப்பிடமுடியாமல் போய்விடும், அவர்கள் பட்டிணியாக
இருக்கவேண்டியது தான். உதாரணத்திற்கு, கீழ்கண்ட விவரங்களை படிக்கவும்:

அ) ஒரு நிலத்தில் நெல்லை பயிரிடும் போது, ஒரு விவசாயி, தன் சாமிக்கு பூஜை
செய்தே பயிரிடுகின்றான்.

ஆ) அந்த பயிர் வளரும் போதும், அறுவடையில் நல்ல விளைச்சல் கிடைக்கவேண்டும்
என்று தன் சாமியிடம் வேண்டிக்கொள்கிறான்.

இ) அறுவடை செய்யும் போதும், தன் இறைவனிடம் வேண்டிக்கொண்டு எல்லா
காரியங்களையும் செய்கின்றான்.

ஈ) நெல்லையும், அரிசியையும் வேறு பிரிக்கும் நபரும் தன் அலுவலகத்தில் தன்
சாமியிடம் வேண்டிக்கொண்டே தன் தொழிலை ஆரம்பிக்கின்றான்.

உ) வருடத்திற்கு ஒரு முறை ஆயூதப்பூஜை செய்யப்பட்ட ஆயுதங்களினால் அந்த
நெல்லையும், அரிசியையும் வேறு பிரிக்கின்றான்.

ஊ) அரிசியை வாங்கி விற்பவனும் தன் வியாபாரத்தை தொடங்கும் போதும், தன்
சாமியை வேண்டிக்கொண்டு, பூஜை செய்து ஆரம்பிக்கிறான்.

எ) அந்த அரிசியை வாங்கி ஹோட்டல் நடத்துபவன் தன் சாமியிடம் வேண்டிக்கொண்டு
உணவை தயாரிக்கிறான், வியாபாரம் செய்கின்றான்.


இப்படி ஒரு உணவுப்பொருள் பயிரிடுவது முதற்கொண்டு அறுவடையாகி, நம்மிடம்
உணவாக வரும் வரை அதன் மீது பல தெய்ங்களின் வணக்கங்கள் நடைப்பெறுகின்றன.

இப்போது நம் கேள்வி என்னவென்றால், இதர தெய்வங்கள் பெயர்கள் சொல்லப்பட்ட
உணவுப்பொருட்கள், கிறிஸ்தவர்களுடைய வாயில் செல்லக்கூடாது என்று
சொல்பவர்கள், முக்கியமாக இந்தியாவில், பாகிஸ்தானில் பட்டிணி கிடந்து
சாகவேண்டியது தான்.

உணவு விஷயத்தில் அடம்பிடித்தால்,

அடையார் ஆனந்தபவனில் விற்கப்படும் அருமையான இனிப்பை நம்மால் சாப்பிடமுடியுமா?
ஹோட்டல் சரவண பவனில் விற்கப்படும் சாம்பார் இட்லிகள் மற்றும் இதர உணவுகளை
நம்மால் சாப்பிடமுடியுமா?
பாய் கடையில் விற்கப்படும் ஆம்பூர் பிரியாணியைத் தான் நாம் சாப்பிடமுடியுமா?

சொந்தமாக அரிசியை வாங்கி வந்து நம் வீட்டிலும் உணவை தயாரித்து
சாப்பிடக்கூடாது, ஏனென்றால், அந்த அரிசியை பயிரிட்டவன் ஒரு கிறிஸ்தவன்
தான் என்று எப்படி நம்மால் கூறமுடியும்? இது நடைமுறைக்கு ஏற்காத ஒன்று.
அதனால் தான் பைபிள் தெளிவாகச் சொல்கிறது, உலகமும் அதன் நிறைவும்
(உணவுப்பொருட்களும்) கர்த்தருடையது. அதனை சாப்பிடுவதினால் எந்த ஒரு
தீங்கும் உண்டாவதில்லை.


கேள்வி 8: முஸ்லிமள் தங்கள் நோன்பை முடித்துக்கொள்வதற்கு நாம் உதவி
செய்யலாமா? உதாரணத்திற்கு, இந்த மாதத்தில் நோன்பாளிகளுக்காக மசூதிகளுக்கு
திண்பண்டங்களை, பழங்களை வாங்கித் தரலாமா?

பதில்: சிலவேளைகளில் கிறிஸ்தவர்கள் தேவையில்லாத விஷயங்களில் அதிகமாக
அக்கரைக்கொண்டு, உலக மக்கள் மீது இயேசுவிற்கு இருக்கும் அன்பை விட,
தங்களுக்குத் அதிக அன்பு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ள முயற்சி
எடுக்கிறார்கள், அதனால், அனேக பிரச்சனைகளுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.

கீழ்கண்ட விவரங்களை நன்றாக கவனியுங்கள்.

1) ஒரு முஸ்லிம் பசியாக இருந்தால், அவனுக்கு உணவு கொடு.
2) ஒரு முஸ்லிம் தாகமாக இருந்தால், அவனுக்கு தண்ணீர் கொடு.
3) ஒரு முஸ்லிம் உடையில்லாமல் இருந்தால், அவனுக்கு உடை கொடு.
4) ஒரு முஸ்லிம் வீடு இல்லாமல் இருந்தாலும், உன்னிடம் பணம் அதிகமாக
இருந்தால், அவனுக்கு ஒரு வீடு கட்டிக்கொடு.
5) ஒரு முஸ்லிம் வியாதியுள்ளவனாக இருந்தால், அவனுக்கு உதவி செய், அவனை
விசாரித்து பராமரித்து, மருந்துகள் கொடுத்து சுகப்படுத்து.
6) ஒரு முஸ்லிம் அநியாயமாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தால், அவனை
விசாரித்து ஆறுதல் சொல் முடிந்தால் அவன் விடுதலையாக்க முயற்சி எடு.
7) ஒரு முஸ்லிம் அந்நியனாக இருந்தால், அவனுக்கு பாதுகாப்பு கொடுத்து
சேர்த்துக்கொள்.

ஏனென்றால், உலகில் இன்னொரு மனிதனுக்கு நீ என்ன செய்கின்றாயோ, அது தனக்கே
செய்ததாக இயேசு கருதுகின்றார், இதனை நாம் இயேசுவின் போதனைகளில்
பார்க்கமுடியும். அந்த மனிதன் யாராக இருந்தாலும் பிரச்சனையில்லை.

ஆனால்,

1) ஒரு முஸ்லிம் நோன்பு இருந்தால், அந்த நோன்பு சம்மந்தப்பட்ட எந்த
விஷயத்திற்கும் உதவி செய்யாதே, இது கர்த்தருக்கு விரோதமான பாவமாகும்.

2) ஒரு முஸ்லிம் நோன்பு திறப்பதற்கு ஒரு பேரிச்சம் பழம் கூட நீ வாங்கித்
தராதே, ஏனென்றால், அவனுடைய இறைநம்பிக்கையை நீ ஆதரிப்பதாக இது
கருதப்படும்.

3) ஒரு முஸ்லிமின் ஏழ்மையை போக்க உன்னால் முடிந்தால், ஒரு இலட்சம் ரூபாய்
செலவு செய், ஆனால், அவன் நோன்பு திறப்பதற்கு ஒரு குவளை தண்ணீர் கொடுக்க
முன் வராதே, ஏனென்றால், அவனது விக்கிர ஆராதனை என்ற பாவத்தில், அந்நிய
தெய்வமாக கருத்தப்படும் அல்லாஹ்வை வணங்கும் பாவத்தில் உன்னை நீ
இணைத்துக்கொள்வதாக அது கருதப்படும்.

4) ஒரு முஸ்லிமுக்கு விபத்து நேரிட்டல், ஒரு பாட்டில் இரத்தம் கொடுத்து
அவனை காப்பாற்ற முயற்சி எடு, ஆனால், அவனது மார்க்க விஷயங்களில் உன்
சுண்டு விரலிலிருந்து ஒழுகும் ஒரு சொட்டு தண்ணீர் கொடுத்து, நீ
கர்த்தரின் கோபத்திற்கு உள்ளாகாதே.

கிறிஸ்தவர்கள் நன்மை எது, தீமை எது என்பதை சரியாக
புரிந்துக்கொள்ளவேண்டும். கிறிஸ்தவர்கள் அன்புக்கும், அறியாமைக்கும்
இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை புரிந்துக்கொள்ளவேண்டும்.
செய்யப்படும் உதவி எல்லாம் அன்பாக கருதப்படாது. அறியாமையினால் செய்யும்
சில உதவிகள் நம்மை அதிகமாக பாதிக்கும்.

உதவி செய்கிறேன் என்றுச் சொல்லி, நாம் மற்றவர்களின் மார்க்க
விஷயங்களுக்காக உதவி செய்யக்கூடாது. முஸ்லிம்கள் சிறுவர்களுக்கு
விருத்தசேதனம் (சுன்னத்துச்) செய்கிறார்கள் என்றுச் சொல்லி, நாம் அதற்கு
டொனேஷன் தரக்கூடாது. மசூதி கட்டுமானப் பணிக்கு டொனேஷன் தரக்கூடாது.
ஆனால், அதே முஸ்லிம் ஏழ்மையில் தவிக்கும் போது, உன் ஆடம்பர செலவுகளை
குறைத்துக் கொண்டாவது, அவனுக்கு நீ உதவி செய்ய மறவாதே.

எனவே, ரமளான் மாதத்தில், முஸ்லிம்கள் நோன்பை முடித்துக்கொள்வதற்கு, நாம்
ஒரு பேரிச்ச பழத்தையும், ஒரு குவளை தண்ணீரையும் தரக்கூடாது, இப்படி
கொடுத்தால், இது கர்த்தருக்கு விரோதமான பாவமாகும். இஸ்லாம் என்பது
பைபிளினால் சபிக்கப்பட்ட இன்னொரு சுவிசேஷத்தைச் சொல்கிறது, இன்னொரு
இயேசுவை அறிமுகம் செய்கின்றது. பைபிள் இதனை கடுமையாக கண்டிக்கிறது, எனவே,
அதிக நன்மையைச் செய்கிறேன் என்றுச் சொல்லி, நம் தலையில் நாமே நெருப்பை
அள்ளி போட்டுக்கொள்ளக்கூடாது. நம் ஊர்களில் நடக்கும் மாரியம்மன்
திருவிழாக்களில் கூழ்
ஊற்றுவதற்கும், கோவில் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் ஒரு
கிறிஸ்தவராக இருந்துக் கொண்டு, நீங்கள் பணத்தை கொடுப்பீர்களா? அதே
போலத்தான் இதுவும்.

முஸ்லிம்களை நேசியுங்கள், ஆனால், அவர்களின் மார்க்க விஷயமாக,
கர்த்தருக்கு அறுவருப்பான பாவங்களுக்கு பங்காளிகளாக ஆகாதிருங்கள்.

அடுத்த கேள்வி பதிலில் இன்னும் அனேக கேள்விகளையும், பதில்களையும் காண்போம்.

1) ரமளான் நோன்பை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம்
கடைபிடித்து ஆகவேண்டுமா? ஏதாவது விதிவிளக்குகள் உண்டா?
2) ரமளான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்தும், முஸ்லிம்கள்
மிகவும் புஷ்டியாக, ஆரோக்கியமாக காணப்படுகிறார்களே! இதன் இரகசியம் என்ன?
3) ரமளான் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது? சில வசனங்களை மேற்கோள்
காட்டமுடியுமா?
4) இந்த நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக எச்சில்
துப்பிக்கொண்டு இருப்பதை நான் பார்க்கிறேன், ஏன் இப்படி செய்கிறார்கள்?


http://isakoran.blogspot.in/2014/07/2.html

0 comments: