அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகஇரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். (யோவான் 4:42)

October 2, 2014

முஸ்லிமிடம் கேட்க வேண்டிய மூன்று முக்கிய கேள்விகள்

ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்

தலைப்பு: முஸ்லிமிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

மெயில் பெற்றுக்கொண்ட நாள்: 24 ஏப்ரல் 2005

பொருள்: ஆய்வு செய்ய உதவி தேவை

முதலாவதாக, உங்களுடைய இந்த அருமையான தளத்திற்காக என் நன்றிகளை
தெரிவித்துக்கொள்கிறேன். நான் பைபிள் கலாசாலையில் மாணவனாக இருக்கிறேன்.
உலக மதங்கள் பற்றிய பாடத்தை எடுத்துள்ளேன், இப்போது அதைப் பற்றிய ஒரு
ஆய்வு செய்யவுள்ளேன். இஸ்லாம் பற்றி அதிகமாக நான் அறிந்துக்கொள்ள
உங்களின் தளம் மிகவும் உதவியாக உள்ளது. இந்த தளத்தில் உள்ள
கட்டுரைகளும், இதர தொடுப்புகளும் மிகவும் நன்றாக உள்ளது. உங்களுடைய
அயராத உழைப்பிற்காகவும், பைபிள் சம்மந்தப்பட்ட பதில்களுக்காகவும் என்
நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலே நான் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் ஒரு பாகமாக, நான் ஒரு ஆய்வு
செய்யவேண்டும். அதாவது, கிறிஸ்தவம் பற்றி முஸ்லிம்களின் தவறான
கண்ணோட்டத்தை அவர்கள் மாற்றிக் கொள்ள அவர்களுக்கு உதவியாக இருப்பதற்கு,
மூன்று சவால்களை அல்லது கேள்விகளை அவர்களிடம் கேட்கவேண்டும். உங்களிடம்
நான் கேட்கும் உதவி என்னவென்றால்: ஒரு இஸ்லாமிய சகோதரர் அல்லது
சகோதரியிடம் சுவிசேஷத்தைச் சொல்லிவிட்ட பிறகு, அவர்கள் ஒரு நல்ல முடிவை
எடுக்கும் படி, அவர்களிடம் கேட்கவேண்டிய மூன்று முக்கியமான கேள்விகள்
அல்லது சவால்கள் எவை? எனக்கு இருக்கின்ற குறைவான அறிவினால், நான்
ஏதாவது தவறான கேள்விகள் கேட்டு, அவர்களை காயப்படுத்திவிடுவேனோ என்று
எனக்கு பயமாக உள்ளது. எனவே உங்களிடம் உதவி கேட்கிறேன்.

இஸ்லாமியர்களிடம் கேட்கவேண்டிய மூன்று கேள்விகளை, எனக்கு நீங்கள்
கொடுத்து உதவினால் மிகவும் நன்றாக இருக்கும், உங்களால் உதவமுடியுமா?

உங்கள் தளத்திற்காக மறுபடியும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

த….

________________________________

எங்களுடைய பதில்:

அன்பான சகோதரர் அவர்களே,

உங்களுக்கு எங்கள் தளம் உதவியாக இருக்கிறது என்பதை அறிந்து மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதாவது உங்கள் கேள்வி இது தானே: முஸ்லிம்கள்
கிறிஸ்தவம் பற்றி கொண்டுள்ள தவறான மற்றும் எதிர்மறையான கருத்துக்களை
அவர்கள் மறுபரிசீலனை செய்ய தூண்டும் படி, சிந்திக்க வைக்கும் படி, நாம்
கேட்க வேண்டிய மூன்று கேள்விகள் என்னென்ன?

அனேகர் வேறு வகையான கேள்விகள் கேட்கும்படி உங்களுக்கு அறிவுரை சொல்லலாம்.
ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் நான் கீழ்கண்ட மூன்று கேள்விகளை கேட்க
விரும்புவேன்.

1. பைபிள் திருத்தப்பட்டது என்ற இஸ்லாமிய குற்றச்சாட்டைப் பற்றி நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்? அது யாரால், எப்போது நடந்தது என்று உங்களால்
சரியாக கூறமுடியுமா?

இந்த கேள்வி மிகவும் முக்கியமான கேள்வியாகும். முஹம்மது குர்-ஆனை
ஓதிக்காண்பித்த காலத்தில், பைபிள் திருத்தப்படவில்லை என்பது பற்றிய
தெளிவான குர்-ஆன் வசனங்களை அவர் ஓதிக்காண்பித்தார். மேலும் பைபிள்
திருத்தப்பட்டது என்று அவர் நம்பவில்லை என்பதை இதன் மூலமாக நாம்
முஸ்லிம்களுக்கு தெளிவை உண்டாக்க முடியும். கிறிஸ்தவர்கள் தங்களிடம் உள்ள
வேதத்தின் படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று குர்-ஆன் கிறிஸ்தவர்களுக்கு
கட்டளையிடுகிறது. யோவான் ஸ்நானகனுக்கும், இயேசுவிற்கும் அல்லாஹ் தோராவை
கற்றுக்கொடுத்தார் என்று குர்-ஆனில் வசனங்கள் உண்டு. குர்-ஆனின் இந்த
வசனம் உண்மை என்று நாம் கருதினால், முதல் நூற்றாண்டில் தோரா
கறைப்படுத்தப்படாமல் இருந்தது என்று அர்த்தமாகிறது. நம்மிடம் இன்று
சவக்கடல் சுருள்கள் உள்ளன, அதோடு கூட யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசுவின்
காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு மொழியாக்கம் செய்யப்பட்ட
செப்டாஜிண்ட் என்ற சுருள்களும் உள்ளது. ஆகையால், உண்மைகளை சரி பார்த்து
தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆவல் உள்ளவர்களுக்கு இந்த விவரங்கள் உதவியாக
இருக்கும். குர்-ஆன் சொல்லும் விவரங்களின் படியும், நம்மிடம் உள்ள
கைப்பிரதி சுருள்கள் ஆதாரங்களின்படியும் பார்த்தால், பைபிள்
கறைப்படுத்தப்படுவது என்பது முடியாத காரியமாகும். இப்படி அனேக
தர்க்கரீதியான கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம். மேலும் அதிகபடியான
விவரங்களுக்கு கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:

www.answering-islam.org/Bible/multi.html

www.answering-islam.org/Bible/Text/wijngaards.html

www.answering-islam.org/Bible/jrwhy.html

எனக்கு பிடித்த இரண்டாவது கேள்வி "தேவன் மனிதனாக வந்தார்" என்பதைப் பற்றி
முஸ்லிம்கள் கொண்டிருக்கும் தவறான கண்ணோட்டம் பற்றியதாகும். தேவன்
தம்முடைய அன்பை காட்டும்படி, மனிதனாக வந்து, நமக்காக சிலுவையில் மரித்து
உயிரோடு எழுந்த நிகழ்ச்சி, "இறைவனுடைய மேன்மைக்கு இழுக்கை உண்டாக்கும்"
என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இதைப் பற்றி நான் அவர்களிடம் கேட்க
விரும்பும் இரண்டாவது கேள்வி இவ்விதமாக இருக்கிறது.

2. தத்துவ ரீதியாக கேட்டால் எது உயர்ந்தது? தன்னுடைய அன்பை மிகவும்
உயர்ந்த வகையில் வெளிப்படுத்திய இறைவனுடைய செயலா (பைபிளின் தேவன்) ?
(பார்க்க பிலிப்பியர் 2ம் அதிகாரம்) அல்லது தன்னுடைய கௌரவத்தை
காத்துக்கொள்ள தன் அன்பை வெளிக்காட்டாத இறைவனா (அல்லாஹ்)?

இயேசுக் கிறிஸ்துவின் மனித அவதாரம் பற்றியும், அவரது தியாக பலி பற்றியும்
நாம் முஸ்லிம்களின் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது ஒரு உபயோகமில்லாத
ஒன்றாக தெரியும். ஆனால், இதையே நாம் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால்,
இயேசுவின் தியாக பலியை நாம் மெச்சிக்கொள்ளாமல் இருக்கமுடியாது. இறைவன்
உலகம் உண்டானது முதல் இதுவரை செய்த அனைத்து செயல்களைக்காட்டிலும், இதுவே
மிகவும் மேன்மையான செயலாக இருக்கும். இறைவன் நம் மீது வைத்த அன்புக்காக
எவ்வளவு பெரிய செயலை செய்துள்ளார் என்பதை முஸ்லிம்கள் காணுவார்களானால்,
அவர்களால் உண்மையான இறைவனை கண்டுக்கொள்ளமுடியும். பைபிளின் தேவனுக்கும்,
இஸ்லாமிய இறைவனுக்கும் இடையே இருக்கும் அதிமுக்கியமான வித்தியாசம், இந்த
அன்பின் செயலில் தான் அடங்கியிருக்கிறது. இதைப் பற்றி மேலும் அறிய இந்த
பதிலை படிக்கவும், இதில் இரண்டு தகப்பன்மார்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது.

முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய அடுத்த கேள்வி:

3. நீங்கள் பாவ சுபாவம் இல்லாமல் பிறந்தீர்கள் என்றுச்
சொல்வீர்களானால், எத்தனை நாட்கள் இப்படி பாவம் செய்யாமல் இருப்பீர்கள்?
பாவமில்லாமல் ஒரு வாரம் இருப்பீர்களா? அல்லது ஒரு நாள் பாவமில்லாமல்
இருப்பீர்களா? நீங்கள் பிறந்தபோதே அடிப்படையிலேயே நல்ல சுபாவத்தோடு
இருந்தால், ஏன் மீதமுள்ள நாட்கள் நல்லவர்களாக இருக்க அதிகமாக முயற்சி
எடுக்கவேண்டும்? இயற்கையாகவே ஏன் நாம் பாவத்தின் பக்கமே சாய்கிறோம்,
நீதியின் பக்கம் அதிகமாக ஈர்க்கப்படுவதில்லை?

இந்தத் தலைப்பு பற்றி இக்கட்டுரையில்
"www.answering-islam.org/Intro/discussion.pdf" தெளிவாக
விளக்கப்பட்டுள்ளது.

நான்காவது கேள்வி:

நீங்கள் திறந்த மனதுடன் இறைவனிடம் "இறைவா! உன்னுடைய சத்தியத்தை நான் அறிய
எனக்கு வழி காட்டுவாயாக. அந்த சத்தியம் இஸ்லாமில் இல்லாமல் பைபிளில்
இருந்தாலும் சரி, எனக்கு வழி காட்டுவாயாக" என்று வேண்டுதல் செய்வீர்களா?

இந்த விவரங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
முஸ்லிம்களை சிந்திக்கத்தூண்டுகின்ற வகையில் உங்கள் கேள்விகளை
கேளுங்கள். இப்படி கேள்விகள் கேட்பதினால், முஸ்லிம்கள்
துக்கப்படுவார்களோ என்று நீங்கள் அஞ்சத்தேவையில்லை. அவர்கள் எப்படி
நம்மிடம் கேள்விகளை தைரியமாக கேட்கிறார்களோ அதே போல நாமும் கேட்கலாம்.
மலைமீது கட்டப்பட்ட பட்டணத்தை மறைக்கமுடியாது. எனவே, நம்முடைய
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து பற்றிய இறைச் செய்தியை அவர்களுக்குத்
தெரிவிக்க நாம் வெட்கப்படக்கூடாது. இவரைப் பற்றி அனேக தீர்க்கதரிசிகள்
தீர்க்கதரிசனங்களாக அறிவித்துள்ளார்கள். இயேசுவின் மூலமாக நமக்கு
இரட்சிப்பு கிடைத்துள்ளது, அதே போல, அவர் செய்துமுடித்த இரட்சிப்பு
காரியத்தின் மீது நம்பிக்கை வைக்கின்ற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்.

மேலும், நாம் கேட்கும் சிந்திக்கத்தூண்டுகின்ற கேள்விகள் சில வேளைகளில்
அவர்களுக்கு துக்கத்தை உண்டாக்கினாலும், அவைகளினால் அவர்கள்
தூண்டப்பட்டு பிறகு ஆய்வு செய்து, இதன் மூலம் அவர்கள் சத்தியத்தை அறிந்து
இரட்சிக்கப்பட அவைகள் உதவியாக இருக்கும்.

உங்களுக்கு வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், எங்களுக்கு எழுத தயங்க வேண்டாம்.

இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

இப்படிக்கு,

லாசரஸ்

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Emails/good_questions.htm

இதர ஈமெயில் உரையாடல்களை இங்கு படிக்கவும்.

________________________________
© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
Source: http://www.backend.ai-deutschland.de/tamil/emails/good_questions.html



Source : http://isakoran.blogspot.in/2013/09/blog-post_8.html

--
Source : http://isakoran.blogspot.in/

புதிய ஃபத்வா: முஸ்லிம் பேனை கொல்லாதீர்கள், மீறினால் 50 சவுக்கடிகள் தண்டனை தரப்படும்



 புதிய ஃபத்வா: முஸ்லிம் பேனை கொல்லாதீர்கள், மீறினால் 50 சவுக்கடிகள் தண்டனை தரப்படும்

தற்கால உலக நடப்புக்களை படித்து, பார்த்து மக்கள் சோர்ந்துப் போய் உள்ளனர். செய்தித்தாளை பார்த்தால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பொருளாதாரப் பிரச்சனை தலை காட்டுகிறது. இப்படி சோர்ந்துபோய் இருக்கும் மக்களை மகிழ்ச்சியாக்க, நாம் என்ன தான் முயற்சி எடுத்தாலும், அது முஸ்லிம்களின் முயற்சிக்கு ஈடு ஆகமுடியாது.

ஒவ்வொரு முறை ஒரு புதிய ஃபத்வாவை இஸ்லாமிய அறிஞர்கள் அறிமுகப்படுத்தும் போதும், உலக மக்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒரு கணம் மறந்துவிட்டு, வாய்விட்டு சிரித்துவிடுகிறார்கள். 

ஒரு பக்கம் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததினால், அனுதினமும் பங்குச்சந்தைச் செய்திகளை படிக்கும் அனேகர் சிரித்து அனேக நாட்கள் ஆகிவிட்டது. இன்னொரு பக்கம் சிரியா நாட்டுக்குள் நடக்கும் சண்டைகள், அதன் மூலம பூதகாரமாக வெளிப்பட்ட உலக நாடுகளின் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாடுகள் நம்மை ஒவ்வொரு நாளும் வாட்டி வதைக்கின்றன. அடுத்து என்ன நடக்குமோ? என்று ஆச்சரியத்தோடு கேட்கும் கேள்விகள் ஏராளம். இதுமட்டுமா! இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? என்ற சந்தேகம் சமீபகாலமாக கிட்டத்தட்ட எல்லா மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படியெல்லாம் நாட்டு நடப்பு இருப்பதினால், சிலர் செய்தித்தாள் பக்கம் தலைவைத்து படுக்கவும் பயப்படுகிறார்கள்.

இந்த சூழலில், நம்மை உண்மையாகவே வாய் விட்டு சிரிக்கவைக்க தகுதியானவர்கள் யார் என்று பார்த்தால், உலக இஸ்லாமிய அறிஞர்கள் ஆவார்கள்.

இதோ இந்த புதிய ஃபத்வாவினால் எப்படி இவர்கள் நம்மை குஷி படுத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.

Inline image 1

மூலம்: http://i0.wp.com/www.comicartcollective.com/artImages/2256B186-3048-77F0-1157A220EE96A24F.gif

இஸ்லாமிய பேன், பாக்கியமுள்ள தாடி:

சிரியாவில் உள்நாட்டு கலவரம் நடந்துக்கொண்டு இருக்கிறது என்பதை நாம் எல்லாரும் அறிவோம். இதில் ஈடுபட்டு இருக்கும் ஜிஹாதிக்களின் பிரச்சனையை தீர்க்க ஒரு ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் காரணமாக ஜிஹாதிக்கள் அனுதினமும் குளிக்க வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதன் காரணமாக அவர்களின் தாடியில் தூசி படிவதுண்டு, அது சுத்தம் செய்யப்படாமல் இருப்பதினால், சில நேரங்களில் அந்த தாடியில் "பேன்கள்" வளர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி முஸ்லிம்களின் தாடியில் பேன்கள் இருந்தால், அவைகளை கொல்லாதீர்கள், அவைகள் "முஸ்லிம் பேன்கள்" எனவே, அவைகளை கொல்லாதீர்கள் என்று பத்வா கொடுத்துள்ளார்கள். இந்த பத்வாவை மீறி, யாராவது பேன்களை கொன்றால், அவர்களுக்கு 50 சவுக்கு அடிகள் தண்டனை தரப்படும்.

இஸ்லாமிய அறிஞர்களின் புத்தம் புது ஃபத்வாக்கள், உலக மக்களை சிரிக்கவைக்கின்றன. இஸ்லாம் என்றாலே உலக மக்கள் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இஸ்லாமிய கோட்பாடுகளும், சட்டங்களும் தான், மேலும் இஸ்லாமிய அறிஞர்கள் கொடுக்கும் புதிய ஃபத்வாக்கள் வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கும்.

தற்கால உலக நடப்புக்களைக் கண்டு, சோர்வாக இருக்கும் மக்கள், அவ்வப்போது இஸ்லாமிய ஃபத்வாக்களை படித்து, தங்கள் சோர்வை போக்கிக்கொள்ளலாம்.

மூலம்: http://www.washingtontimes.com/news/2013/aug/26/free-syrian-army-fatwa-forbids-killing-believer-li/

Free Syrian Army fatwa forbids killing 'believer lice growing in blessed beards': report

பேன்களிலும் இஸ்லாமிய பேன், இஸ்லாமியரல்லாத பேன் என்று ஒன்று உண்டா?

இந்த ஃபத்வா முஹம்மதுவிற்கும் பொருந்துமா?

முஹம்மது தனக்கு பேன் பார்ப்பதற்கும், அவைகளை கொலை செய்வதற்கும் அனுமதியளித்துள்ளார். அப்படியானால், தன் தலையில் காணப்பட்ட பேன்கள், காஃபிர் பேன்களா?

புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து சில பேன்களை பார்ப்போம்.

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1814

கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார். 

"உம்முடைய (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?' என்று என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!" என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய தலையை மழித்து மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவு அளிப்பீராக! அல்லது ஓர் ஆட்டை பலியிடுவீராக!" என்றார்கள்.

[இதே போல ஹதீஸ்கள் அனேகம் உண்டு.]

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2788

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம்(ரலி), உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி(ஸல்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். . . .


முஸ்லிமாக மாறிய பேன்:

ஒரு ஹாஸ்டலில் ஒரு அறையில் மூன்று மாணவர்கள் தங்கியிருந்தார்கள். ஒருவன் முஸ்லிம், ஒருவன் கிறிஸ்தவன் இன்னொருவன் ஹிந்து. இவர்கள் ஒரே அறையில் படுத்துக்கொள்வார்கள். ஒரு நாள் கிறிஸ்தவன் தலையிலிருந்த பேன் ஒன்று இரவு நேரத்தில், முஸ்லிம் தலையில் ஏறிவிட்டது. அப்போது, முஸ்லிம் தலையில் இருந்த முஸ்லிம் பேன்கள், இந்த கிறிஸ்தவ பேனுக்கு இஸ்லாமை கற்றுக்கொடுத்தது. அதன் பிறகு, இந்த கிறிஸ்தவ பேன், ஒரு முஸ்லிம் பேனாக மாறிவிட்டது. இதே போல, ஒரு இந்து பேனும், முஸ்லிமின் தலையில் ஏறிவிட்டது, அதன் பிறகு முஸ்லிம் பேனாக மாறிவிட்டது. தன் பெயரையும் அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டது.

ஒவ்வொரு நாள் இரவிலும், இந்த பேன்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கிறிஸ்தவன் மற்றும் இந்துவின் தலையில் ஏறி, மற்றவர்களுக்கு தாவா (இஸ்லாமுக்கு அழைக்க) செய்ய ஆரம்பித்தது. ஆனால், இவர்களின் தாவா அழைப்புப்பணி பலன் அளிக்கவில்லை. வேறு எந்த பேனும் இவர்களோடு சேர விரும்பவில்லை. இதைக்கண்ட முஸ்லிம் பேன்கள் கோபமடைந்து, ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ மற்றும் இந்து பேன்களை தாக்கவும், வன்முறையில் ஈடுபடவும், சண்டையிடமும் ஆரம்பித்தது. இப்படி சண்டையில் மரித்த பேன்களுக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் 72 பெண் பேன்களை தருவார். பேனுக்கே இப்படி அல்லாஹ் கொடுத்தால், உங்களுக்கு கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

ஒரு நாள் இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கண்ட விதமாக கதைச் சொல்ல ஆரம்பித்தால் கூட நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. பார்த்தீர்களாக, அந்த முஸ்லிம் பேன்கள் எப்படியெல்லாம் தாவா அழைப்புப்பணி செய்தது, அது போல நாமும் செய்யவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் பயான் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஆனால், மேற்கண்ட கதையை கீழ்கண்டவிதமாக நான் முடிக்க விரும்புகிறேன்:

இந்த பேன்களின் அறிப்பை மற்றும் தொல்லையை தாங்க முடியாமல் அந்த மூன்று பேரும் ஒரு நாள் தலைச்சவரனிடம் சென்று முழுவதுமாக மொட்டையடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து நிம்மதியாக தூங்கினார்கள்.

பொதுவாக இஸ்லாமியர்களின் அறியாமையைக் கண்டு நான் துடிப்பேன், தவிப்பேன். முஸ்லிம்கள் அறிவுடையவர்களாக மாறினால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன்.  ஆஹா எத்தனைப்பேன்! 

ஆக,  முஸ்லிம்கள் தங்கள் முஸ்லிம் பேன்களை கொல்லாமல் இருப்பது போல,  கிறிஸ்தவர்களும், இந்துக்களும் தங்கள் இனப்பேன்களை கொல்லாமல் இருப்பார்களாக.




--
Source : http://isakoran.blogspot.in/

கிறிஸ்துமஸ்: பாகம் 3 - இயேசுவின் பிறப்பு விஷயத்தில் அல்லாஹ்வை நிர்பந்தித்தது யார்?

[கிறிஸ்துமஸ் 2013: பாகம் 1ஐ, பாகம் 2ஐ சொடுக்கி படிக்கவும்]

[உமரும் அவரது தம்பி அப்துல்லாஹ்வும் ஸ்கைப்பில் (Skype) பேச மறுபடியும்
உட்கார்ந்தார்கள், உரையாடல் தொடர்கிறது]

அப்துல்லாஹ்: அண்ணே! எப்படி இருக்கீங்க

உமர்: கர்த்தரின் கிருபையால் நான் நலமாக உள்ளேன், நீ எப்படி இருக்கிறாய்?

அப்துல்லாஹ்: அல்லாஹ்வின் அருளால் நலமாக இருக்கிறேன். கடந்த முறை நாம்
பேசும் போது, மர்யம் அவர்களுக்கு அல்லாஹ் செய்த அற்புதத்தை நீங்கள்
விமர்சித்தீர்கள். ஒரு சரியான காரணம் இல்லாமல் அல்லாஹ் அற்புதம் செய்தார்
என்று குற்றம் சாட்டினீர்கள். இப்போது நான் ஒரு கேள்வியை உங்களிடம்
கேட்கிறேன், அதற்கு பதில் சொல்லுங்கள்.

உமர்: சரி தம்பி, உன் கேள்வியை கேள்.

அப்துல்லாஹ்: இயேசு அற்புதமாக பிறந்தவர், தந்தையில்லாமல் பிறந்தவர் என்று
பைபிள் சொல்கிறது அல்லவா?

உமர்: குர்ஆன் கூட இப்படித்தானே சொல்கிறது

அப்துல்லாஹ்: இப்போது என் கேள்வி என்னவென்றால், ஏன் பைபிளின் தேவன்
இயேசுவை அனுப்பும் போது, அற்புதம் செய்து அனுப்பினார்? இயற்கையான
முறையில் ஒரு தம்பதிகள் மூலமாக அனைவரும் பிறப்பது போல பிறக்கச்செய்து
இருக்கலாம் அல்லவா? ஏன் கணவர் இல்லாமல் ஒரு கன்னியின் மூலமாக இயேசுவை
பிறக்கச் செய்யவேண்டும்?
அல்லாஹ் மர்யம் அவர்களுக்குச் செய்த அற்புதம் பற்றி எந்த கேள்வியை
நீங்கள் கேட்டீர்களோ, அதே கேள்வி இப்போது உங்களுக்கு வருகிறது, இதற்கு
பதில் சொல்லுங்கள். பைபிளின் தேவன் எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல்,
ஏன் அற்புதமான முறையில் மர்யம் கருத்தரிக்கச் செய்து இயேசுவை இவ்வுலகில்
அனுப்பினார்?

உமர்: தம்பி, நீ உன்னை மித மிஞ்சிய அறிவாளி என்று நினைத்துக்கொள்கிறாய்.
உண்மையில் இந்த கேள்வியை கேட்கவேண்டியவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவார்கள்.
நான் உன்னிடம் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்த கேள்வியை நீயே
கேட்கிறாய்.

அப்துல்லாஹ்: நீங்கள் தலைப்பை மாற்றி பேசாதீங்க. என் கேள்விக்கு பதில் சொல்லுங்க?

உமர்: இயேசு இவ்வுலகில் வரும் போது, ஏன் ஒரு தம்பதிகளுக்கு இயற்கையான
முறையில் பிறக்காமல், ஒரு கன்னிகைக்கு அற்புதமாக பிறந்தார் என்பதற்கு
எங்களிடம் பதில் உண்டு. ஆனால், உங்கள் இஸ்லாமில் அதற்கு பதில் உண்டா?
இந்த ஒரு கேள்விக்கு தரப்படும் பதில் தான் இஸ்லாமுக்கும்
கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய பிளவு ஆகும்.

இயேசு வெறும் ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமே இருந்திருந்தால், தேவன் அவரை
இயற்கையான முறையில் பிறக்கவைத்திருப்பார். ஆனால், அவர் தீர்க்கதரிசிகளைக்
காட்டிலும் மேலானவர் என்பதால் அவர் அற்புதமாக பிறந்தார். ஒரு ஆணின்
துணையில்லாமல் மரியாள் கர்ப்பம் தரிக்கச் செய்து, தேவன் இயேசுவை
அனுப்பினார்.

ஆதியாகமம் 3:15ல் தேவன், இயேசுவின் எப்படி பிறப்பார் என்பதை தெளிவாக
கூறினார். ஒரு ஸ்திரியின் வித்தின் மூலமாக பிறக்கப்போகின்றவர் சாத்தானை
ஜெயிப்பார் என்று கூறினார்.

ஆதியாகமம் 3:15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள்
வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர்
குதிங்காலை நசுக்குவாய் என்றார்.


இயேசு ஆதியிலிருந்து இருந்தபடியினாலே, அவர் கணவன் மனைவி உறவின் மூலமாக
பிறக்கவில்லை. இன்னும் அனேக வசனங்களை நான் சொல்லமுடியும். ஆனால், இப்போது
கேள்வி என்னவென்றால், "அல்லாஹ் ஏன் இயேசுவை அற்புதமான முறையில்
பிறக்கச்செய்யவேண்டும்?" என்பதாகும். [மற்றவர்களைப் பார்த்து காப்பி
அடித்தால், இப்படித் தான் முழிக்கவேண்டி வரும்]

அப்துல்லாஹ்: அது அல்லாஹ்வின் விருப்பம். அவரை கேள்வி கேட்க யாராலும் முடியாது.

உமர்: இறைவனை கேள்வி கேட்கமுடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால்
காரணம் இல்லாமல் ஏன் இயேசுவை ஒரு கன்னிப்பெண் கர்ப்பம் தரிக்கச் செய்து
அதன் மூலமாக பிறக்கச் செய்யவேண்டும்? என்பது தான் கேள்வி

அப்துல்லாஹ்: நான் தான் சொன்னேனே, அது அவரது விருப்பம் என்று?

உமர்: தம்பி, சரியாக புரிந்துக்கொள். இறைவன் செய்யும் அனைத்தையும் பற்றி
நாம் கேள்வி கேட்கமுடியாது. இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஏன்
இறைவன் இப்படி செய்யவேண்டும் என்ற கேள்வியை நாம் கேட்கலாம் இல்லையா? நாம்
சிந்திக்கலாம் அல்லவா?
இறைவன் நம்மைப்போல ஞானமில்லாதவர் அல்ல, அவர் செய்யும் ஒவ்வொரு
காரியத்திலும் ஒரு காரணம் இருக்கும்.

அப்துல்லாஹ்: இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? ஆதாமை எப்படி படைத்தார்?
தாய் இல்லாமல் படைத்தார் அல்லவா? அது போல இயேசுவை தந்தையில்லாமல்
பிறக்கச் செய்தார் அவ்வளவு தான். இருவரையும் தம் வார்த்தையினால்
பிறப்பித்தார் அல்லாஹ்

உமர்: இப்போது தான் நீ என் வழிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வருகிறாய். ஆதாம்
தாய் இல்லாமல் பிறந்தார் என்றுச் சொல்கிறாய். இதற்கு காரணம் என்ன? ஆதாம்
தான் முதல் மனிதன், எனவே இறைவனுக்கு வேறு வழியே இல்லை, தாய் இல்லாமல்
தான் ஆதாமை இறைவன் உருவாக்கமுடியும்.

ஆனால், ஆதாமைத் தவிர உலகில் வேறு எந்த மனிதனாக இருந்தாலும் சரி, அவன் ஆண்
பெண் உறவு மூலமாகத்தான் பிறக்கவேண்டும். இது தான் இயற்கை நியதி, மனித
இனம் பெருகுவதற்கு இது தான் இறைவன் உருவாக்கிய திட்டம்.

ஆனால், இயேசுவின் பிறப்பு விஷயத்தில் மட்டும் ஏன் இறைவன் தான் உருவாக்கிய
இயற்கை திட்டத்தை புறக்கணித்துவிட்டு வித்தியாசமாக செயல்படவேண்டும்?

உன் அல்லாஹ்விற்கு தன் நபியை அனுப்ப கி.பி. முதல் நூற்றாண்டில் "மர்யம்"
என்ற ஒரு பெண் கிடைத்த போது, ஏன் அவருக்கு ஒரு ஆண் கிடைக்கவில்லை? மரியமை
யாரும் திருமணம் செய்துக்கொள்ளமாட்டார்கள் என்று சொல்லிவிட்டார்களா?

இயேசுவை ஒரு விசேஷித்த முறையில் அனுப்ப அல்லாஹ்வை நிர்பந்தித்தது யார்?

ஒரு சாதாரண நபியை அனுப்ப, இயற்கை விதியை ஏன் அல்லாஹ் மீறினார்?

அப்துல்லாஹ்: இதெல்லாம் ஒரு கேள்வியா?

உமர்: ஆமாம், இது நல்ல கேள்வி தான். அல்லாஹ் எது செய்தாலும் சும்மா
செய்துவிடுவாரா? ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போல, ஞானமில்லாமல்
அல்லாஹ் செயல்படுவாரா? பல கோடி மக்களை இயற்கையான முறையில் பிறக்கச் செய்த
அல்லாஹ், இயேசுவின் விஷயத்தில் மட்டும் ஏன் இயற்கைக்கு முரண்பட்டு
செயல்படவேண்டும்?

உங்கள் இறைத்தூதர் முஹம்மதுவை ஒரு கணவன் மனைவியின் உறவின் மூலமாக
பிறக்கச் செய்த அல்லாஹ், ஏன் இயேசுவை மட்டும் இதே பாணியில் பிறக்கச்
செய்து இருக்கக்கூடாது?

அல்லாஹ்வை யாரோ நிர்பந்தித்தார்களா? அல்லது அல்லாஹ்வை ஏதோ ஒன்று இப்படி
செயல்பட செய்ததா?

இதற்கு உலகில் எந்த முஸ்லிமிடமும் பதில் இல்லை, உங்கள் முஹம்மதுவிடமும்
பதில் இல்லை. ஆனால், இதற்கு ஒரு சாதாரண கிறிஸ்தவனிடம் பதில் உள்ளது.

அப்துல்லாஹ்: அது என்ன பதில்?

உமர்: தம்பி இதற்கு பதில் கிறிஸ்தவத்தில் தான் உள்ளது, இஸ்லாமில் இல்லை.

அப்துல்லாஹ்: அந்த பதில் தான் என்ன? சொல்லுங்கள்.

உமர்: ஆதாமின் கீழ்படியாமையினால் உண்டான தண்டனையிலிருந்து உலகை மீட்க,
தேவனால் தான் முடியும், அதுவும் பரிசுத்தராகிய அவர் பரிசுத்தராகவே உலகில்
வரவேண்டும். அற்புதராகிய அவர் அற்புதமான வகையில் உலகில் வந்து,
பாவிகளாகிய நம்முடைய தண்டனையை அவர் சுமந்துக்கொண்டு நமக்கு மீட்பை
கொண்டுவரவேண்டும்.

ஒரு புது மனிதன் உருவாக, ஆண் பெண் இருவரும் தேவை. ஆனால், ஏற்கனவே
இருக்கிறவர் இவ்வுலகில் வரவேண்டுமென்றால், இன்னொரு ஆணின் துணை அவருக்கு
தேவையில்லை. மட்டுமல்ல, ஒரு கருவாக மாறி அது குழந்தையாக வளருவதற்கான ஒரு
இடம் தான் மர்யம் அல்லது மர்யமின் கர்ப்பம், அவ்வளவு தான். இறைவனே
மனிதனாக வரவேண்டும் என்ற திட்டத்தை அதே இறைவன தீட்டியதால், அவர்
கன்னியின் வயிற்றில் கருவாக வந்தார். இது தான் கிறிஸ்தவம் கொடுக்கும்
பதில்.

ஆனால், இதற்கு இஸ்லாம் என்ன பதில் சொல்லும்? இதற்கு அல்லாஹ்விடம் பதில் உண்டா?

என்ன தம்பி பதிலைக்காணோம்.

உலகில் இயேசுவைத் தவிர, வேறு எந்த இறைத்தூதரையாவது அல்லாஹ் இப்படி
விசேஷித்த முறையில் பிறக்கச் செய்தாரா?

அப்துல்லாஹ்: இல்லை...

உமர்: அப்படியானால், இயேசுவை மட்டும் ஏன் இப்படி தம்முடைய ஆவியைக்
கொண்டு, ஒரு தூதனை அனுப்பி, அல்லாஹ் அற்புதமான முறையில் கருவை
உருவாக்கினார்? அல்லாஹ்வை நிர்பந்தப்படுத்தியது எது?

அப்துல்லாஹ்:. . . .

உமர்: உன்னால் மட்டுமல்ல தம்பி, உலகில் எந்த ஒரு இஸ்லாமிய அறிஞனாலும்,
இதற்கு பதில் சொல்லமுடியாது.

முஸ்லிம்கள் "அல்லாஹ் சும்மா செய்தார் என்றோ, இதற்கான காரணம் அவருக்கு
மட்டுமே தெரியும் என்றோ" சொல்லிக்கொள்ளலாம். இந்த பதிலைத் தவிர வேறு
பதில் முஸ்லிம்களால் கூறமுடியாது.

ஆனால், இதற்கு கிறிஸ்தவமும், பைபிளும், சுலபமாக பதில் சொல்லிவிடும்.
இயேசு ஆதியிலிருந்து இருந்தவர், ஆபிரகாமுக்கு முன் இருந்தவர், எருசலேம்
தேவாலயத்தை விட பெரியவர், சாலொமோனை விட பெரியவர், அவர் சாவாமை உள்ளவர்,
இருந்தவர், இருக்கிறவர், வரப்போகிறவர், நம்மை நியாயம் தீர்க்கப்போகிறவர்
அவரே. எனவே, இப்படிப்பட்டவர் உவ்வுலகில் ஏழ்மை கோலம் பூண்டு வந்தார்
ஆனால் அற்புதமாக வந்தார்.

தம்பி, இனிமேல் கிறிஸ்துவின் பிறப்பு பற்றி என்னிடம் கேள்விகள்
கேட்கமாட்டாய் என்று நினைக்கிறேன்.

[தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு ஒரு சவால்: இயேசு ஒரு நபி மட்டுமே என்று
முஸ்லிம்களாகிய நீங்கள் நம்புகிறீர்கள். குர்ஆன் சொல்வது எல்லாம் உண்மை
என்று நம்புகிறீர்கள். அப்படியானால், ஏன் அல்லாஹ் இயேசு என்ற ஒரு நபியை
இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் பிறக்கச் செய்தார் என்று உங்களால் பதில்
சொல்லமுடியுமா? அல்லாஹ் அனுப்பிய எந்த ஒரு நபிக்கும் இல்லாத சிறப்பு இந்த
ஒரு நபிக்கு மட்டும் அல்லாஹ் கொடுக்க காரணம் என்ன? இயேசு செய்த
அற்புதங்கள் பற்றி கேள்வி கேட்கப்படவில்லை, இயேசு ஏன் அற்புதமாக
பிறந்தார் என்பது தான் கேள்வி. இயேசுவின் பிறப்பு விஷயத்தில் அல்லாஹ் ஏன்
இயற்கை விதியை புறக்கணித்தார்? இப்படிச் செய்ய அல்லாஹ்வை நிர்பந்தித்தது
யார்? முஸ்லிம்களால் இதற்கு பதில் சொல்லமுடியுமா?]

அப்துல்லாஹ்: அண்ணே, நான் எங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்டு
உங்களுக்கு பதில் சொல்கிறேன்.

உமர்: நல்லது தம்பி. நீயும் சிந்தித்துப்பார். வெறுமனே தினமும் ஐந்து
வேளை குனிந்து உட்கார்ந்து எழுந்தோமானால் அந்த நாளின் கடமை
முடிந்துவிட்டது என்ற கண்ணோட்டத்தில் வாழாமல், கொஞ்சம் சிந்தித்துப்
பார். ஏன் எப்படி என்ற கேள்விகளை கேட்டுப்பார், அப்போது உனக்கு உண்மை
புரியும். கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள்
அப்போது கண்டடைவீர்கள்.

தம்பி உனக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும்
மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின்
ஊரிலே பிறந்திருக்கிறார். (லூக்கா 2:10,11)






http://www.isakoran.blogspot.in/2013/12/2013-3.html


--
Source : http://isakoran.blogspot.in/

கிறிஸ்துமஸ் 2013: பாகம் 2 - மரியாளுக்கு அல்லாஹ் செய்த அற்புதம், ஏன் பைபிளில் காணப்படவில்லை?

2013 கிறிஸ்துமஸ்: பாகம் 2 - மரியாளுக்கு அல்லாஹ் செய்த அற்புதம், ஏன்
பைபிளில் காணப்படவில்லை?

>
>
> [கிறிஸ்துமஸ் 2013: பாகம் 1ஐ இங்கு சொடுக்கி படிக்கவும்]
>
>
> [உமரும் அவரது தம்பி அப்துல்லாஹ்வும் ஸ்கைப்பில் (Skype) பேச மறுபடியும் உட்கார்ந்தார்கள், உரையாடல் தொடர்கிறது]
>
>
> அப்துல்லாஹ்: உமரண்ணா, எப்படி இருக்கீங்க?
>
>
> உமர்: கர்த்தரின் கிருபையால் நன்றாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கின்றாய்?
>
>
> அப்துல்லாஹ்: அல்லாஹ்வின் அருளால் நன்றாக இருக்கிறேன். இன்று ஒரு முக்கியமான கேள்வியை நான் கேட்கவேண்டும், இப்போது கேட்கட்டுமா?
>
>
> உமர்: தாராளமாக கேட்கலாம்.
>
>
> அப்துல்லாஹ்: குர்-ஆன் 3:37 ல் அல்லாஹ் இயேசுவின் தாய் மரியாள் அவர்களுக்கு அற்புதமாக உணவை கொடுத்தார் என்று கூறுகிறது. இந்த அற்புதம் ஏன் பைபிளில் சொல்லப்படவில்லை? இயேசு செய்த அனைத்து அற்புதங்களையும் தெரிவிக்கும் சுவிசேஷ நூல்கள், இயேசுவின் தாய்க்கு இறைவன் செய்த இந்த அற்புதத்தை மட்டும் ஏன் மறைத்துவிட்டது? இயேசுவின் தாய்க்கு நீங்கள் கொடுக்கும் கௌரவம் இது தானா?
>
> குர்-ஆன் 3:37ம் வசனத்தை ஒரு முறை படியுங்கள்:
>
>
> 3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், "மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று அவர் கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று அவள்(பதில்) கூறினாள்.
>
>
>
> என்னுடைய இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன?
>
>
> உமர்: நல்ல அருமையான கேள்வியை கேட்டு இருக்கின்றாய்!
>
>
> அப்துல்லாஹ்: தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருங்கள், கிறிஸ்மஸ் ஏவுகனைகள் உங்களை நோக்கி வந்துக்கொண்டே இருக்கும். நீங்கள் கலங்கப்போகிறீர்கள்!
>
>
>
> உமர்: தம்பி உனக்கு அவசரம் அதிகம், இன்னும் நான் பதிலே சொல்லவில்லை, அதற்குள் அவசரப்பட்டு ஏதேதோ சொல்கிறாய். சரி, உன் கேள்விக்கு இப்போது பதிலைச் சொல்கிறேன், கேள்.
>
>
>
> முதலாவது ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள், அதாவது இயேசு செய்த எல்லா அற்புதங்களும் புதிய ஏற்பாட்டில் சொல்லப்படவில்லை. எனவே, "இயேசு செய்த அனைத்து அற்புதங்களையும் தெரிவிக்கும் சுவிசேஷ நூல்கள்" என்றுச் சொல்லாதே. சுவிசேஷ நூல்கள் சில அற்புதங்களை மட்டுமே சொல்கிறது (பார்க்க யோவான் 21:25).
>
>
> இரண்டாவதாக, உங்கள் முஹம்மதுவிற்கு கதைகள் சொல்லவேண்டுமென்றால் மிகவும் பிடித்தமான விஷயம் என்று நினைக்கிறேன், அதுவும் இதர புத்தகங்களிலிருந்து விஷயங்களை எடுத்து, அவைகளை தனக்கு விருப்பமான படி மாற்றிச் சொல்வது அவரது வழக்கம் போல தெரிகிறது.
>
>
> மரியாளுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் ஏன் பைபிளில் இல்லை என்று கேட்கிறாய்? முதலாவது, அற்புதங்களை ஏன் இறைவன் செய்கின்றான் என்று உனக்குத் தெரியுமா?
>
>
> மக்களை சந்திக்கும் பெரும்பான்மையான நேரங்களில் கையிலிருந்து வீபூதியை தந்திரமாக கொண்டு வந்து, மக்களுக்கு எல்லாம் வழங்கும் சாய்பாபா போல இறைவன் நடந்துக்கொள்வார் என்று நீ நினைப்பது தவறு.
>
>
> அற்புதம் என்பது விளையாட்டாய் செய்யும் செயலல்ல, ஒரு முக்கியமான நோக்கத்திற்காக, மக்களுக்கு நம்பிக்கை வருவதற்காக, தேவைப்படும் போது செய்வது தான் அற்புதம்.
>
>
> இயேசு கூட அற்புதம் செய்தார். மக்களின் தேவைக்காகவும், தன்னுடைய செய்தியின் நம்பகத்தன்மையை நிருபிப்பதற்காகவும் இயேசு அற்புதம் செய்தார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமாக உணவு அளித்த இயேசு, தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய இயேசு, தனக்கு பசி உண்டாகும் போது, சீடர்களை அனுப்பி உணவை வாங்கிக்கொண்டு வரும் படி அனுப்பினார். அவர் நினைத்து இருந்திருந்தால், அற்புதம் செய்து தன் பசியை போக்கிக்கொண்டு இருக்கமுடியும், ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. நாற்பது நாட்கள் உபவாசம் இருந்து பசியின் உச்சக்கட்டத்தை அடைந்த பிறகும், சாத்தான் சோதிக்கும்போது அவர் தனக்காக அற்புதம் செய்யவில்லை. [வெறும் கற்களை ரொட்டிகளாக மாற்றும் வல்லமை இயேசுவிற்கு இருக்கிறது என்று சாத்தான் அறிந்திருந்தான்]. மேலும் அவர் வாழ்ந்த காலத்தில் மரித்த அனைவரையும் அவர் உயிரோடு எழுப்பவில்லை என்பதை கவனத்தில் வைத்துக்கொள்.
>
>
>
> பழைய ஏற்பாட்டிலும், மோசேவுடன் தேவன் பேசும் போது, எகிப்தில் இருந்த யாக்கோபின் சந்ததியான இஸ்ரவேல் மக்கள் மோசேயை ஒரு நபி என்று நம்பமாட்டார்கள் என்பதால் அற்புதங்களை கொடுத்து அனுப்பினார். மோசேயினால் செய்யப்பட்ட அற்புதங்களைக் கண்டு தான் மக்கள் அவரை நபி என்று நம்பி ஏற்றுக்கொண்டார்கள்.
>
>
> எனவே, அற்புதம் என்பது தேவையில்லாமல் செய்யும் செயல் அல்ல. அல்லாஹ் மரியாளுக்கு (தேவையில்லாமல்) அற்புதம் செய்ததாக குர்-ஆன் சொல்கிறது. இந்த அற்புதம் உண்டாக்கும் பிரச்சனைகளை பார்ப்போமா?
>
>
> அப்துல்லாஹ்: இல்லை.. இல்லை… நீங்கள் சொல்வது தவறு. அல்லாஹ் தன் அடியார்களுக்கு அற்புதங்களைச் செய்கிறார், இதனை நீங்கள் எப்படி மறுக்கமுடியும்?
>
>
> உமர்: நான் சொல்வதை முழுவதுமாக கவனி, அவசரப்படாதே! தன் அடியார்களுக்கு இறைவன் அற்புதம் செய்யமாட்டார் என்று நான் சொன்னேனா? இல்லையல்லவா? இறைவன் அற்புதம் செய்யும் போது, ஒரு முக்கியமான காரணத்தை முன்னிட்டுத்தான் அற்புதம் செய்வார், வேண்டாத விஷயத்திற்கு அற்புதம் செய்யமாட்டார் என்றுச் சொல்கிறேன், அவ்வளவு தான்.
>
>
> உனக்கு புரியும் படி ஒரு எடுத்துக்காட்டைச் சொல்கிறேன் கேள்: இயேசு சுகமளிக்கிறார் என்று எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்திருக்கிறார்கள். ஒரு கிறிஸ்தவன் தன் அலுவலகத்தில் முக்கியமான வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது, அவனுக்கு சின்ன தலைவலி வருகிறது என்று வைத்துக்கொள்வோம், இப்போது இந்த தலைவலியை நீக்க அவனுக்கு இரண்டு வழிகள் உண்டு, முதலாவதாக, அவன் ஒரு தலைவலி மாத்திரையை எடுத்துக்கொண்டு சூடான டீ அல்லது காபியை குடித்துவிட்டு, சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டால் பெரும்பான்மையான சாதாரண தலைவலிகள் நீங்கிவிடும்.
>
>
> ஆனால், அந்த கிறிஸ்தவன் மேற்கண்ட வழியை பின்பற்றாமல், கர்த்தர் எனக்கு பரிகாரியாக இருக்கிறார் என்றுச் சொல்லி, கர்த்தர் சுகமாக்கும்வரை நான் மருந்து எடுத்துக் கொள்ளமாட்டேன் என்று அடம்பிடித்துகொண்டு, தன் அலுவலகத்தில் தன் கடமையைச் செய்யும் நேரத்தை வீணடித்துக்கொண்டு, ஒரு அறையில் உட்கார்ந்துகொண்டு மணிக்கணக்கில் ஜெபித்துக்கொண்டு இருந்தால் இயேசு சுகத்தைக் கொடுப்பாரா?
>
>
> சரியான மருந்து நம் கையில் இருக்கும் போது "நீங்கள் அற்புதம் செய்தால் தான் நான் ஒப்புக்கொள்வேன்" என்றுச் சொல்லி அற்புதத்திற்காக அடம்பிடிப்பது தவறானதாகும். ஆனால், இதே தலைவலி தொடர்ந்து அனுதினமும் வந்துக்கொண்டு இருந்தால், மருத்துவரை காண்பது சிறந்தது. அதே நேரத்தில் கர்த்தரிடத்திலும் ஜெபிப்பது சரியானது.
>
>
> "அற்புதம்" தேவைப்படாத விஷயத்தில் கர்த்தரிடமிருந்து அற்புதம் வேண்டுமென்று மனிதன் அடம்பிடிப்பது முட்டாள்தனமாகும். இதே போல, "அற்புதம்" தேவைப்படாத நேரத்தில் காரணமில்லாமல் அற்புதம் செய்வது இறைவனின் முட்டாள்தனமாகும்.
>
>
>
> நான் மேலே சொன்ன கிறிஸ்தவனுக்கு, அல்லாஹ்விற்கும் எந்த ஒரு வித்தியாசத்தையும் நான் காணவில்லை.
>
>
> தேவையில்லாமல் தான் அல்லாஹ் மரியாளுக்கு அற்புதம் செய்து இருக்கிறார்.
>
>
> அப்துல்லாஹ்: ஏன் இப்படி சொல்கிறீர்கள்?
>
>
> உமர்: மரியாளுக்கு 'உணவு' கொடுத்து அற்புதம் செய்ததினால் அல்லாஹ் எதனை நிருபித்துள்ளார்? இதனால் அவர் என்ன சொல்ல வருகிறார்?
>
>
> அப்துல்லாஹ்: "அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று மரியாள் சொல்கிறார்கள் அல்லவா?
>
>
> உமர்: மரியாள் சொல்வது இறைவனின் பொதுவான குணமாகும். உலக படைப்பு அனைத்திற்கும் உணவு அளிப்பது இறைவனே. அதை அவன் கணக்கின்றி செய்கிறான். மரியாளுக்கு அற்புதம் செய்ய இது ஒரு காரணமா?
>
>
>
> இந்த அற்புதத்தினால் வரும் பிரச்சனைகளை அல்லாஹ் அறிவாரா?
>
>
> சரி இதற்கு பதில் சொல்:
>
> மரியாளுக்கு உணவு அற்புதமாக வழங்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் ஜகரிய்யா ஏழ்மையில் இருந்தாரா?
> மூன்று பேருக்கு உணவு வழங்கும் அளவிற்கு ஜகரியாவின் பொருளாதார நிலை மிகவும் கேவலமாக இருந்ததா? அல்லது
> தன்னால் மரியாளை பராமரிக்க முடியவில்லை என்று இவர் அல்லாஹ்விடம் வேண்டினாரா?
>
> இந்த அற்புதம் மரியாளை எப்படி ஆபத்துக்குள்ளாக தள்ளுகிறது என்று உனக்குத் தெரியுமா? அதாவது, ஒரு பெண்ணுக்கு அனுதினமும் உணவை அற்புதகமாக அல்லாஹ் கொடுத்தால், அது அந்த ஊரில் உள்ளவர்கள் மத்தியில் ஒரு அதிசமான நிகழ்வாக இருந்திருக்கும். மரியாள் மிகவும் புகழ்பெற்ற பெண்ணாக கருதப்பட்டிருப்பார்கள் அல்லது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெண்ணாக இந்த அற்புதத்தினால் மாறியிருந்திருப்பார்கள். விஷயம் இப்படியிருக்கும் போது:
>
> மரியாள் கர்ப்பம் தரித்தவிஷயம் யாருக்கும் தெரியாமல் போனதெப்படி?
> அனைவருக்கும் அறிமுகமான பெண் கர்ப்பம் தரித்து யாருக்கும் தெரியாத இடத்திற்கு சென்றுவிட்டார் என்று குர்-ஆன் சொல்கிறது. இது எப்படி சாத்தியமாகும்? ஜகரியா மரியாளை தேடவில்லையா?
> ஊர் மக்கள் மரியாளை தேடவில்லையா?
> ஒரு பெண் 9 மாதம் எப்படி தன் கர்ப்பத்தை மறைக்கமுடியும்? மூன்று மாதம் மறைக்கலாம், ஆனால், 9 மாதம் மறைக்கமுடியுமா?
> மேலும் ஜகரிய்யா மற்றும் எலிசபெத் அவர்கள் முதிர்ந்த வயதை அடைந்த பின்னும் ஒரு குழந்தையை பெற்றெடுத்ததால், இவர்கள் குடும்பம் அனைவரும் அறிந்த குடும்பமாக இருந்திருக்கும். இன்னும் இவர்கள் வீட்டில் வளரும் மரியாளுக்கு அல்லாஹ் உணவை அற்புதமாக கொடுத்ததால், இன்னும் இவர்களின் புகழ் அதிகமாக பரவியிருக்கும். இந்நிலையில் மக்கள் எப்படி மரியாளை மறந்திருக்கமுடியும்?
>
> ஆக, தம்பி, அல்லாஹ் செய்த அற்புதம், மரியாளை புகழ்பெற்ற பெண்ணாக மாற்றியிருக்கும். குறைந்தபட்சம் ஊரில் உள்ள அனைவரும் தெரிந்த பெண்ணாக மாற்றியிருக்கும். இப்படிப்பட்ட பெண், 9 மாதம் குழந்தையை மறைத்துவைத்து, பிள்ளை பெற்றவுடன் மக்களிடம் கொண்டுச் செல்வது என்பது, நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயமாகும். நடைமுறையில் சாத்தியமில்லாதவைகளைத் தான் குர்-ஆன் அதிகமாகச் சொல்கிறது.
>
>
>
> இதற்கு உன் பதில் என்ன?
>
>
>
> அப்துல்லாஹ்: நான் கேட்ட கேள்வி என்ன? ஏன் இந்த அற்புதம் பைபிளில் சொல்லப்படவில்லை என்பதாகும். ஆனால், நீங்கள் இதற்கு பதில் சொல்லவில்லை?
>
>
>
> உமர்: முதலில், நீ சொன்ன அற்புதமே ஒரு இட்டுக்கட்டப்பட்ட கதை என்று தெளிவாக தெரியும் போது, ஏன் இதர விஷயங்களை சிந்திக்கவேண்டும்?
>
>
>
> தள்ளுபடி ஆகமங்களிலிருந்து:
>
>
> மேலும், பைபிளில் இல்லாத இந்த அற்புதம் எப்படி முஹம்மதுவிற்கு தெரிந்தது என்று நீ கேட்கலாம்? இரண்டாம் நூற்றாண்டிலிருந்து அனேகர் அனேகவிதமான கதைகளை எழுதினார்கள். இயேசுவின் இளமைப்பருவம் தொடங்கி, அவர் மரிக்கும் வரையில், பைபிளில் சொல்லாத அனேக விஷயங்களை மக்கள் கற்பனை செய்து சுயமாக எழுதினார்கள். இவைகளை அறிஞர்கள் தள்ளுபடி ஆகமங்கள் என்று வரையறுத்துள்ளார்கள். இந்த வரிசையில் தான் "யாக்கோபின் சுவிசேஷம் – Gospel of James" என்ற தள்ளுபடி ஆகமத்தில் குர்-ஆனில் சொல்லப்பட்ட அற்புதம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்திலிருந்து ஒரு வசனத்தை உனக்கு படிக்க தருகிறேன்:
>
>
> 8.1 . . . .And Mary was in the temple of the Lord as a dove that is nurtured: and she received food from the hand of an angel.
>
>
> (Source: http://www.gnosis.org/library/gosjames.htm and http://en.wikipedia.org/wiki/Gospel_of_James)
>
>
> இரண்டாம் நூற்றாண்டு முதற்கொண்டு மக்கள் மத்தியில் நிலவிய இப்படிப்பட்ட கதைகளை கேட்டு, முஹம்மது குர்-ஆனில் அவைகளை புகுத்தியுள்ளார். இவைகள் எல்லாம் பைபிளில் காணப்படவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது முட்டள்தனமாகும், தம்பி. இன்னும் அனேக கட்டுக்கதைகள முஹம்மது குர்-ஆனில் இறைவசனங்களாக சேர்த்துள்ளார், அவைகளை நேரம் வரும் போது உனக்கு விளக்குகிறேன்.
>
>
>
> அப்துல்லாஹ்: எவைகளைச் சொன்னாலும், ஏதோ ஒரு பதிலை தருகிறீர்கள், இது சரியானதல்ல.
>
>
>
> உமர்: இதற்கு நான் என்ன முடியும்? உன் குர்-ஆனில் உள்ள குளறுபடிகளை இப்படிப்பட்ட சரித்திர பிழைகளை சொல்லாமல் இருக்கமுடியாதே! நீ தானே கேள்வி கேட்டாய்! உனக்கு பதில் சொல்லவேண்டியது என் கடமையாகும்.
>
>
>
> இயேசுவின் பிறப்பின் விஷயத்திலும், அவரின் சிலுவை மரண விஷயத்திலும், குர்-ஆன் பெரிய தவறுகளை செய்துள்ளது. மக்கள் மத்தியிலே நிலவும் கட்டுக்கதைகளை சொல்லிவிட்டால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று முஹம்மது நினைத்துவிட்டார். தள்ளுபடி ஆகமங்களில் உள்ள விவரங்களை உண்மை என்று எண்ணிவிட்டார். இன்னும் அனேக விஷயங்களை நான் சொல்லமுடியும்.
>
>
>
> அப்துல்லாஹ்: அண்ணே, போதும்..போதும். நீங்கள் சொன்ன அந்த தள்ளுபடி ஆகமத்தை படித்துவிட்டு, நாளைக்கு நான் வருகிறேன் அப்போது பார்ப்போம்.
>
>
>
> உமர்: சரி தம்பி. நான் சொன்ன விஷயங்களை சிந்தித்துப்பார். நாளைக்கு பார்க்கலாம்.
>
>
>
http://www.isakoran.blogspot.in/2013/12/2013-2.html


--
Source : http://isakoran.blogspot.in/

கிறிஸ்துமஸ் - பாகம் 1: இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் (Santa Claus – கிறிஸ்மஸ் தாத்தா) யார்?

[முன்னுரை: உமரின் தம்பி "அப்துல்லாஹ்" சௌதியில் வேலை செய்கிறார். அவர்
இஸ்லாமை தழுவியுள்ளார். இவருக்கும் உமருக்கும் இடையே அவ்வப்போது இஸ்லாம்
கிறிஸ்தவம் பற்றிய உரையாடல்கள், விவாதங்கள் நடப்பதுண்டு. இவ்வாண்டு
கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு, அப்துல்லாஹ், உமரிடம் புரிந்த உரையாடல்களை
தொடர் கட்டுரைகளாக காண்போம்.]

2013 கிறிஸ்துமஸ் பாகம் 1:
இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் (Santa Claus – கிறிஸ்மஸ் தாத்தா) யார்?

[உமரின் தம்பி அப்துல்லாஹ், உமருக்கு தொலைபேசியில் அழைத்து பேசுகிறார்]

உமர்: ஹலோ அப்துல்லாஹ்!

அப்துல்லாஹ்: அஸ்ஸலாம் அலைக்கும் அண்ணா.

உமர்: வஅலைக்கும் ஸலாம், தம்பி.

அப்துல்லாஹ்: நான் நன்றாக இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கீங்க?

உமர்: கர்த்தரின் கிருபையால், நான் நன்றாக இருக்கிறேன். நீ எந்த காரணமும்
இல்லாமல் என்னை அழைக்கமாட்டாயே! என்ன விஷயம் சொல்லு?

அப்துல்லாஹ்: ஆமாம் அண்ணா, ஒரு முக்கியமான விஷயத்திற்காகத் தான் உங்களை
அழைத்தேன். இது டிசம்பர் மாதம் மற்றும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் வருகிறது
அல்லவா!

உமர்: அட, கிறிஸ்துமஸ்ஸும் உனக்கு ஞாபகம் இருக்கிறதா! ஆச்சரியமாக இருக்கே!

அப்துல்லாஹ்: அண்ணே, கிறிஸ்தவர்களின் அனைத்து பண்டிகைகளைக் குறித்து
நாங்க தான் அதிகம் பேசுகிறோம், ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறோம் தெரியுமா?
சரி விஷயத்துக்கு வருகிறேன். நான் இயேசுவின் பிறப்பு பற்றிய குர்ஆன்
வசனங்களை சில நாட்களாக ஆய்வு செய்து வருகிறேன். இவ்வாண்டு, இந்த
கிறிஸ்துமஸ் மாதத்தில், உங்களுடன் இயேசுவின் பிறப்பு பற்றி விவாதிக்கலாம்
என்று விரும்புகிறேன். நீங்க "ஸ்கைப்பில்(Skype)" வரமுடியுமா? நாம்
பேசலாம்.

உமர்: வாவ்... நல்ல விஷயம் தான். நாம் தொலைபேசியிலேயே பேசலாமே!

அப்துல்லாஹ்: இல்லை.. இல்லை.. குர்-ஆன் வசனங்களை நான் மேற்க்கோள்
காட்டும் போது, அவைகளை பேஸ்ட் செய்ய உதவியாக இருக்கும். எனவே,
ஸ்கைப்பில் வாருங்கள்.

உமர்: ஓகே, நான் இன்று மாலை வீட்டிற்கு வந்தவுடன், உன் மொபைலில்
அழைப்பேன், அப்போது நீ ஸ்கைப்பில் லாகின் ஆகிவிடு, நாம் பேசுவோம்.

அப்துல்லாஹ்: அண்ணே! இந்த முறை குர்ஆன் வசனங்களை வைத்துக்கொண்டு,
இயேசுவின் பிறப்பு பற்றி குர்ஆன் சொல்வது தான் சரியானது, பைபிள் சொல்வது
தவறானது என்பதை நான் நிருபிக்கப்போகிறேன். உங்களுக்காக
ஜெபித்துக்கொள்ளுங்கள், உங்களை நோக்கி கிறிஸ்மஸ் வெடிகள் வருகின்றன.

உமர்: ஓ.. எனக்கு பயமாக இருக்கிறே!
தம்பி, பார்த்து வெடி வைக்கவேண்டும், கிறிஸ்மஸ் ராக்கெட்டு விடும் போது,
உன்னை நோக்கியே அது திரும்பி வராமல் பார்த்துக்கொள்.

அப்துல்லாஹ்: பெஸ்ட் ஆஃப் லக் அண்ணா! இன்று மாலை சந்திப்போம்.

உமர்: உனக்கும் நல்வாழ்த்துக்கள் தம்பி.

[அன்று மாலை இருவரும் ஸ்கைப்பில் லாகின் ஆகிறார்கள், உரையாடல் தொடர்கிறது.]

உமர்: தம்பி, இந்த நாள் எப்படிச் சென்றது?

அப்துல்லாஹ்: நன்றாக இருந்தது அண்ணா. உங்களுக்கு எப்படி?

உமர்: சிறிது டென்ஷனாக இருந்தது.

அப்துல்லாஹ்: எதைப் பற்றி டென்ஷன்? என்னோடு உரையாடப்போவது பற்றிய டென்ஷனா?

உமர்: தம்பி, ஆபிஸில் கொஞ்சம் வேலை அதிகமாக இருந்தது.
சரி, நான் தயாராக இருக்கிறேன், உன் கேள்விகளை நீ கேட்கலாம்.

அப்துல்லாஹ்: என்னுடைய முதலாவது கேள்வி பொதுவான கேள்வியாகும். நாம் சிறு
பிள்ளைகளாக இருக்கும் போது, கிறிஸ்மஸ் என்றாலே முதலில் நம் ஞாபகத்தில்
வருபவர் குழந்தை இயேசு, இரண்டாவதாக "கிறிஸ்துமஸ் தாத்தா அல்லது சாண்டா
கிளாஸ்" ஞாபகத்தில் வருவார். பைபிளில் சொல்லாத இந்த தாத்தா எப்படி
கிறிஸ்துமஸ்ஸில் வந்தார்? இப்படியெல்லாம் செய்யும் படி இயேசு
சொல்லியுள்ளாரா? இது கிறிஸ்தவ மார்க்கத்திற்கு விரோதமானது அல்லவா? பைபிள்
இதனை அங்கீகரிக்குமா? இவைகளுக்கு பதிலைச் சொல்லுங்கள், அதன் பிறகு
குர்-ஆனில் எப்படி இயேசுவின் பிறப்பு பற்றிய உண்மைகள் சொல்லப்பட்டுள்ளது
என்று நான் விளக்குகிறேன்.

உமர்: ம்ம்ம்…. உன்னுடைய முதலாவது வெடி கிறிஸ்மஸ் தாத்தாவை நோக்கி
வீசுப்படுகின்றதா? தம்பி நன்றாக கவனி. பைபிள் கிறிஸ்மஸ்ஸை கொண்டாடச்
சொல்லவில்லை. ஆனால், ஒரு நாளை விசேஷமானதாக மாற்றிக்கொள்ள நமக்கு பைபிள்
அனுமதி கொடுத்துள்ளது. அதாவது நம்முடைய பிறந்த நாளை முன்னிட்டு,
மகிழ்ச்சியாக இருக்கவும், நண்பர்கள், உறவினர்களோடு மகிழ்ச்சியாக
இருக்கவும் நமக்கு அனுமதி உண்டு.

இதே போல, நமக்காக பரலோகத்திலிருந்து இறங்கி வந்த இயேசுவின் பிறந்த நாளை
நாங்கள் கொண்டாடுவதில் எந்த ஒரு தீமையும் இல்லை. இயேசு பிறந்த நாள்
டிசம்பர் 25ம் தேதி தான் என்று நாம் துள்ளியமாகச் சொல்லமுடியாது.
இருந்தபோதிலும், ஒரு நாளை விசேஷமாக ஒதுக்கி, அதில் மகிழ்ச்சியாக இருப்பது
தவறில்லை.

அடுத்தபடியாக, கிறிஸ்மஸ் தாத்தாவைப் பற்றி கேட்டாய். இவரைப் பற்றியும்
பைபிளில் சொல்லப்படவில்லை, இவர் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு கற்பனைப்
பாத்திரம். இதனால் எந்த ஒரு தீமையுமில்லை. மேலும் கிறிஸ்தவர்கள்
அனைவருக்கும், இந்த கிறிஸ்மஸ் தாத்தா என்பது ஒரு கற்பனை கதாப்பாத்திரம்
என்று நன்றாகத் தெரியும். பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்ற
காரணத்தினால், பெற்றோர்களும் கிறிஸ்மஸ் தாத்தா என்ற கற்பனை பாத்திரத்தை
அனுமதிக்கிறார்கள். இதே பிள்ளைகள் பெரியவர்களாகும் போது, கிறிஸ்துமஸ்
தாத்தா பற்றிய உண்மை நிலையை தெரிந்துக்கொள்வார்கள், நாம் எப்படி
தெரிந்துக்கொண்டோமோ அது போல.

எனவே, கிறிஸ்துமஸ்ஸை 25ம் தேதி கொண்டாடுவதோ, அல்லது கிறிஸ்மஸ் தாத்தாவின்
பரிசுகளை பெற்றுக்கொள்வதோ, எந்த விதத்திலும் தவறில்லை. கிறிஸ்தவர்களாகிய
நாங்கள் நாட்கள், காலங்களுக்கு அப்பாற்பட்டவர்கள், எந்த நாளையும்
மகிழ்ச்சியான நாட்களாக மாற்றிக்கொள்ள எங்களுக்கு உரிமையுண்டு.

அப்துல்லாஹ்: இதை எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்?

உமர்: உங்களுடைய அனுமதி யாருக்கு வேண்டும்? நீங்கள் ஏற்றுக்கொண்டால்
என்ன? ஏற்றுக்கொள்ளாவிட்டால் எங்களுக்கு என்ன? உங்கள்
கட்டுப்பாட்டிற்குள் நாங்கள் வரமாட்டோம் தம்பி. எல்லோரையும் உங்கள்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நீங்கள் முயற்சிக்கிறீர்கள், ஆனால் அது
முடியாது தம்பி.

அப்துல்லாஹ்: பைபிளில் சொல்லப்படாத ஒன்றை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்?
இயேசு இதனை அங்கீகரிப்பாரா?

உமர்: தம்பி, எதற்கு முதலாவது முக்கியத்துவம் தரவேண்டுமோ அதற்கு நாங்கள்
முதலாவது முக்கியத்துவம் தருகிறோம். மீதமுள்ளதெல்லாம் இரண்டாம் தரமானது.
திருச்சபைக்குள் இருத்தல், பரிசுத்தமாக வாழுதல், பிறரிடம் அன்புடன்
இருத்தல், நேர்மையாக வாழ்தல், வேத வாசிப்பு, ஜெபம் என்று அனேக முக்கியமாக
விஷயங்கள் உள்ளன, அவைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். இதைத்
தான் இயேசுவும் விரும்புவார்.

அப்துல்லாஹ்: நீங்க எந்த விளக்கம் கொடுத்தாலும், என்னால் அதனை
அங்கீகரிக்க முடியாது.

உமர்: தம்பி, ஏற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளாதது உன் விருப்பம். சரி ஒரு
முக்கியமாக கேள்வியை நான் கேட்கிறேன், அதற்கு பதில் தரமுடியுமா?

அப்துல்லாஹ்: சரி சொல்லுங்க.

உமர்: இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் (கிறிஸ்மஸ் தாத்தா) யார் என்று
உனக்குத் தெரியுமா?

அப்துல்லாஹ்: [சிரிக்கிறார்] என்ன, இஸ்லாமின் சாண்டா கிளாஸ்ஸா? என்ன சொல்றீங்க?

உமர்: உனக்கு நான் அதனை விளக்குகிறேன். பொதுவாக சாண்டா கிளாஸ்
பிள்ளைகளுக்கு பரிசுகளை வழங்குவார். பிள்ளைகள் அதனால் மகிழ்ச்சியாக
இருப்பார்கள். இதே போல, இஸ்லாமின் சாண்டா கிளாஸ் உலக மக்களுக்கு ஒரு
மிகப்பெரிய பரிசை கொடுத்து இருக்கிறார் அவர் யார் என்று உனக்குத்
தெரியுமா?

அப்துல்லாஹ்: நீங்க சொல்வதைப் பார்த்தால், இஸ்லாமில் யாரையோ
குறிப்பிட்டு, இவர் தான் சாண்டா கிளாஸ் என்று சொல்வீர்கள் போல
இருக்கிறதே!

உமர்: நீ சொன்னது சரியானது தான். ஆனால், அவர் யார் என்று உனக்குத் தெரியுமா?

அப்துல்லாஹ்: எங்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைத் தான் நீங்கள்
"இஸ்லாமின் சாண்டா கிளாஸ்" என்று கூறுகிறீர்களா?

உமர்: இல்லை, முஹம்மது இல்லை. முஹம்மது அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து
யாரையும் காப்பாற்ற அவரால் முடியாது என்று சொல்லியுள்ளாரே: பார்க்க
புகாரி ஹதீஸ் 2753:

2753. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்" என்னும்
(திருக்குர்ஆன் 26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, 'குறைஷிக் குலத்தாரே!" என்றோ
அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), 'ஓரிறை வணக்கத்தையும்,
நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து)
விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும்
உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை
அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது.
அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து
என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய
அத்தை(மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால்
சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என்
செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,)
அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற
முடியாது" என்று கூறினார்கள்.
இதே போன்ற ஓர் அறிவிப்பை இப்னு ஷிஹாப்(ரஹ்) வழியாக அஸ்பஃக்(ரஹ்) அறிவித்தார்.


நான் சொல்லும் இஸ்லாமின் சாண்டா கிளாஸ் அல்லாஹ்வின் அழிவிலிருந்து உலக
மக்களை காப்பாற்றியுள்ளார்.

அப்துல்லாஹ்: அல்லாஹ்வாக இருக்குமோ!

உமர்: இல்லை, அல்லாஹ்வே எப்படி தன்னுடைய தண்டனையிலிருந்து நம்மை
காப்பாற்றியிருப்பார். அல்லாஹ் இல்லை. இஸ்லாமின் சாண்டா கிளாஸிற்கு
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரும் நன்றி
சொல்லவேண்டும்.

அப்துல்லாஹ்: எனக்கு தெரியாது அண்ணா, நீங்களே சொல்லுங்கள்.

உமர்: சரி, இதை விளக்குவதற்கு கீழ்கண்ட ஹதீஸ்களை படிக்கவேண்டும். யார்
நம்மை அல்லாஹ்வின் அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார்?

இதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பாக, ஏன் அல்லாஹ் நம்மை அழிக்கவேண்டும்
என்று விரும்புகிறார் என்பதை அறிந்துக் கொள்ளவேண்டும். சஹீஹ் முஸ்லிம்
ஹதீஸ் எண் 5304 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

5304. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம்
செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற
மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம்
பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே விவரம் எண்கள் 5302 மற்றும் 5303 ஹதீஸ்களிலும் உள்ளது.


'அல்லாஹ் ஏன் நம்மை அழித்துவிடுகிறார்?' நாம் பாவம் செய்யாமல்
இருந்துவிட்டால் நம்மை அல்லாஹ் அழித்துவிடுவாராம். மேலும் பாவம்
செய்கின்ற மக்களை கொண்டுவந்து, அவர்கள் பாவம் செய்து மன்னிப்பு கேட்டால்
அவர்களை மன்னிப்பாராம்'

தம்பி இந்த ஹதீஸ் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

அப்துல்லாஹ்: மக்கள் மன்னிப்பு கோரினால் தானே அல்லாஹ் அவர்களை
மன்னிக்கமுடியும்? மக்கள் பாவம் செய்தால் தானே அவர்கள் மன்னிப்பு
கேட்கமுடியும்?

உமர்: அல்லாஹ் தனது மன்னிக்கும் குணத்தை காட்டுவதற்கு மக்கள் பாவம்
செய்யவேண்டுமென்று விரும்புகிறார். இது சரியானதா? மேலும் அப்படி பாவம்
செய்யாத மக்களை அழித்துவிடுவேன் என்றுச் சொல்வது தான் வேதனைக்குரிய
விஷயம்.

அப்துல்லாஹ்: அண்ணா ஒரு நிமிஷம் நில்லுங்க. மேற்கண்ட ஹதீஸில் அல்லாஹ்
பாவம் செய்யாத மக்களை அழிப்பதாகச் சொல்லவில்லையே! "அல்லாஹ் உங்களை
அகற்றிவிட்டு" என்று தானே சொல்லியுள்ளார்.

உமர்: " அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு
சமுதாயத்தைக் கொண்டுவருவான்" என்ற சொற்றொடரின் பொருள் என்னவென்று சரியாக
உனக்கு புரிகின்றதா? உனக்கு சரியாக புரியவேண்டுமென்பதற்காக ஆங்கிலத்தில்
இந்த ஹதீஸை ஒரு முறை படிப்போமா? இதோ பேஸ்ட் செய்கிறேன், படித்துப்பார்:

6621 Abu Ayyub Ansari reported that Allah's Messenger (may peace be
upon him) said: If you were not to commit sins, Allah would have swept
you out of existence and would have replaced you by another people who
have committed sin, and then asked forgiveness from Allah, and He
would have granted them pardon.

6622 Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him)
having said: By Him in Whose Hand is my life, if you were not to
commit sin, Allah would sweep you out of existence and He would
replace (you by) those people who would commit sin and seek
forgiveness from Allah, and He would have pardoned them.
மூலம்: http://www.searchtruth.com/book_display.php?book=037&translator=2&start=12&number=6621


ஆங்கிலத்தில் "Allah would have swept you out of existence" என்று
வருகின்றது. ஆக, பாவம் செய்யாத மக்களை அல்லாஹ் அழித்துவிடுகின்ற இறைவனாக
இருக்கிறார் என்று முஹம்மது இந்த ஹதீஸின் மூலமாக கூறுகிறார்.

அப்துல்லாஹ்: சரி, இந்த ஹதீஸுக்கும், இஸ்லாமின் சாண்டா கிளாஸ் என்று
நீங்க சொல்வதற்கும் என்ன சம்மந்தம்?

உமர்: இதோ விளக்குகிறேன். நாம் பாவம் செய்யாமல் இருந்தால் அல்லாஹ் நம்மை
அழித்து இருந்திருப்பார். ஆனால், நாம் அல்லாஹ்வினால் அழிக்கப்படாமல்
இருக்கிறோம். இதன் பொருள் என்ன?

அப்துல்லாஹ்: நாம் பாவம் செய்கின்றோம் என்று அர்த்தம்.

உமர்: சரியாகச் சொன்னாய். நாம் பாவம் செய்வதற்கு யார் காரணம் தெரியுமா உனக்கு?

இப்போது குர்-ஆன் வசனங்களை படிப்போம்.

2:35. மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில்
குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து
தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க
வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும்
அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்.

2:36. இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச்
செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு
செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்;
உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு
குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும்
பொருள்களும் உண்டு" என்று கூறினோம்.

7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) "ஆதமே! நீரும், உம் மனைவியும்
சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம்
புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச்
செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்" (என்று
அல்லாஹ் கூறினான்).

7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை
அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில்
(தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, "அதன் கனியை
நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது
(இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி
(வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை"
என்று கூறினான்.

7:21. "நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக
இருக்கிறேன்" என்று சத்தியம் செய்து கூறினான்.

7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள்
நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும்
அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய
வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால்
தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன்
கூப்பிட்டு: "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா?
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு
சொல்லவில்லையா?" என்று கேட்டான்.


இந்த வசனங்களின் படி ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ய காரணமாக இருந்தது யார்?
ஷைத்தான் ஆவான். ஒருவேளை ஷைத்தான் அவர்களை ஏமாற்றாமல் இருந்திருந்தால்
என்ன நடந்து இருந்திருக்கும்? மேற்கண்ட ஹதீஸின் படி, அல்லாஹ் ஆதாமையும்,
ஏவாளையும் அழித்து இருந்திருப்பார். மேலும் பாவம் செய்யும் வேறு ஒரு
மக்களை கொண்டு வந்து இருப்பார்.

ஆனால், ஷைத்தானின் புண்ணியத்தினால், ஆதாமும் ஏவாளும் பாவம்
செய்தபடியினால் அல்லாஹ்வினால் அவர்கள் அழிக்கப்படாமல் இருந்தார்கள்.

ஆக, ஆதாமையும், ஏவாளையும், இவர்கள் மூலமாக வந்த உலக மக்கள் அனைவரையும்
காப்பாற்றியது யார்? ஷைத்தான் என்றுச் சொல்லக்கூடிய சாத்தான் தானே.

அப்துல்லாஹ்: அண்ணா, நீங்க சொல்வது கொஞ்சம் புரியுது, கொஞ்சம்
புரியவில்லை. அன்று சாத்தான், ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்து பாவம்
செய்யவைத்தான், ஆனால், இன்று நம்மை பாவம் செய்யச் செய்ய தூண்டுவது யார்?

உமர்: ஓ.. என் அருமை தம்பியே! நீ முதலில் குர்-ஆனை அரபியில் படிப்பதை
நிறுத்திவிட்டு தமிழில் படிக்க ஆரம்பி.

குர்-ஆன் 15:39 என்ன சொல்கிறது என்று ஒரு முறை படித்துப்பார்.

15:39. (அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில்
விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்)
அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள்
அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.

இப்படி சாத்தான் வழிக்கேட்டில் நம்மை செலுத்துகிறான் என்று நாம் வேதனை
அடையத்தேவையில்லை, ஏனென்றால், நாம் பாவம் செய்யவில்லையானால், அல்லாஹ்
நம்மை அழித்துவிடுவார்.

ஆக, இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கமாக இருக்கிறது என்று நாம் நம்பினால்,
சாத்தானை நாம் வெறுக்கக்கூடாது, அவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்.
"அல்லாஹ்வின் அழிவிலிருந்து காப்பாற்றிய சாத்தானே" உனக்கு நன்றி என்று
மக்கள் சொல்லவேண்டும்.

எனவே, மேற்கண்ட குர்-ஆன் மற்றும் ஹதீஸை உண்மை என்று நாம் நம்பினால்,
சாத்தான் தான் உலக மக்களின் இரட்சகன் ஆவான், ஹீரோ ஆவான், உலக மக்கள்
அழிக்கப்படாமல் இருப்பதற்கு இவனே காரண கர்த்தா ஆவான். சாத்தான் தான்
இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் ஆவான். நமக்கு மறைமுகமாக பரிசுகளை
வழங்கி காப்பாற்றியவன் சாத்தான் ஆவான்.

தம்பி உனக்கு புரிந்ததா? இன்னும் விளக்கவேண்டுமா?

அப்துல்லாஹ்: எனக்கு குழப்பமாக உள்ளது.

உமர்: இதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது?
• பாவம் செய்யாதவர்களை அல்லாஹ் அழிப்பதாக உங்கள் இறைத்தூதர் சொல்லியுள்ளார்.
• சாத்தான் மக்களை பாவம் செய்யத்தூண்டுகின்றான்.
• மக்கள் பாவம் செய்தபடியால், அல்லாஹ் மக்களை அழிக்கவில்லை
• ஆக, மக்கள் அல்லாஹ்வினால் அழிக்கப்படாமல் இருந்ததற்கு காரணமாக
இருப்பவன் சாத்தான், எனவே இஸ்லாமின் படி நாம் அனைவரும் சாத்தானுக்கு
நன்றி சொல்லவேண்டும்.

இது தான் இஸ்லாமிய சாண்டா கிளாஸின் சுருக்கம்.

அப்துல்லாஹ்: ம்ம்ம்…. இன்றைக்கு இது போதும், நாளக்கு நான் ஸ்கைப்பில்
வருகிறேன் அண்ணா.

உமர்: கொஞ்சம் இரு தம்பி, இன்னும் கிறிஸ்மஸ் தாத்தா கதை முடியவில்லை.

அல்லாஹ் மன்னிக்கவேண்டும் என்பதற்காக உலக மக்கள் பாவம் செய்ய வேண்டும்
என்று அவர் எதிர்ப்பார்த்தால், அல்லாஹ்வின் எதிரி யாராக இருக்கமுடியும்
சொல்லு?

அப்துல்லாஹ்: ம்ம்ம்…எனக்கு தெரியாது.

உமர்: அல்லாஹ்வின் எதிரிகள் பாவம் செய்யாதவர்கள் தானே. ஏனென்றால், பாவம்
செய்யாதவர்களை அல்லாஹ் அழித்துவிடுகின்றான் இல்லையா?
இஸ்லாமின் படி பாவம் செய்யாதவர் யார்?

இயேசுக் கிறிஸ்து தான் அவர்.

சஹிஹ் அல் புகாரி 3286ன் படி,உலகில் பிறக்கும் ஒவ்வொருவரையும் சாத்தான்
தொடுகின்றான், ஆனால், இயேசுவையோ அவனால் தொடமுடியவில்லை. மேலும் பாவம்
செய்யாதவர் இயேசு ஆவார். தம்பி கீழ்கண்ட ஹதீஸை படித்துப்பார்:

3286. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகன் (மனிதன்) ஒவ்வொருவனும் பிறக்கும்போது, அவனுடைய இரண்டு
(விலாப்) பக்கங்களிலும் ஷைத்தான் தன் இரண்டு விரல்களால் குத்துகிறான்;
மர்யமின் குமாரர் ஈஸாவைத் தவிர (அவர் பிறந்தபோது அவரை விலாப் பக்கம்)
குத்தச் சென்றான். ஆனால், அவரைச் சுற்றியிருந்த மெல்லிய சவ்தை; தான்
குத்தினான். (அதுதான் அவனால் முடிந்தது.)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.



ஆதாம் பாவம் செய்தார், நோவா பாவம் செய்தார், ஆபிரகாம் பாவம் செய்தார்,
மோசே பாவம் செய்தார், அவ்வளவு ஏன் சர்வ சாதாரணமாக முஹம்மது பாவம்
செய்தார். ஆனால் பாவமே செய்யாதவர் இயேசு ஆவார்.

இயேசுவை தவிர மற்ற எல்லா நபிமார்களும் பாவம் செய்தார்கள்.
அல்லாஹ் எல்லோரையும் மன்னிப்பார், ஆனால் இயேசுவை மன்னிக்கமாட்டார்,
ஏனென்றால், இவர் பாவம் செய்யவில்லை.

எனவே, அல்லாஹ்வின் எதிரி இயேசுக் கிறிஸ்து ஆவார்.

நீங்கள் பாவம் செய்யவில்லையானால், நான் அழித்துவிடுவேன் என்று அல்லாஹ்
எச்சரிக்கை கொடுத்தும், இயேசு பாவம் செய்யவில்லை என்பதை நாம் இதுவரை கண்ட
விவரங்களிலிருந்து அறியலாம். அல்லாஹ்வின் அச்சுருத்தலுக்கெல்லாம் இயேசு
இணங்கவில்லை. சாத்தானும் இயேசுவை தொடமுடியவில்லை.

கடைசியாக, நம்மை பாவம் செய்யச் செய்து, அல்லாஹ்வின் அழிவிலிருந்து நம்மை
காப்பாற்றியது ஷாத்தான் ஆவான். எனவே, இயேசுவை தவிர இதர நபிமார்களையும்,
முஸ்லிம்களையும் மற்றும் உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியது சாத்தான்
ஆவான். ஆக, இஸ்லாமின் சாண்டா கிளாஸாக இருந்து கிறிஸ்மஸ் பரிசுகளை
வழங்கியவன் சாத்தான் ஆவான்.

உமர், உனக்கு மேற்கண்ட ஹதீஸ்கள், மற்றும் குர்ஆன் வசனங்கள் புரிகின்றதா?
முக்கியமாக இயேசுவின் பிறப்பு பற்றிய ஹதீஸின் படி, சாத்தான் இயேசுவை
தொடமுடியவில்லை... இது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?

நான் இதுவரை சொன்ன விவரங்கள் கீழ்கண்ட வீடியோவில் டேவிட் உட் என்ற
கிறிஸ்தவர் அழகாகவும், வேடிக்கையாகவும், கோர்வையாகவும் விவரித்துள்ளார்.

http://www.youtube.com/watch?v=M-GV9_TK3gE

<object width="560" height="315"><param name="movie"
value="//www.youtube.com/v/M-GV9_TK3gE?version=3&amp;hl=en_GB&amp;rel=0"></param><param
name="allowFullScreen" value="true"></param><param
name="allowscriptaccess" value="always"></param><embed
src="//www.youtube.com/v/M-GV9_TK3gE?version=3&amp;hl=en_GB&amp;rel=0"
type="application/x-shockwave-flash" width="560" height="315"
allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>


அப்துல்லாஹ்: அண்ணா, எனக்கு வேலை இருக்கிறது, நாம் நாளை சந்திப்போம்.

உமர்: சரி தம்பி, நாளைக்கு சரியான கேள்விகளை தயார்படுத்திக்கொண்டு வா.

[அப்துல்லாஹ், மரியாளுக்கு அல்லாஹ் செய்த அற்புதம் பற்றிய கேள்வியை
கேட்கவுள்ளார். இந்த கேள்விக்கு உமர் என்ன பதில்

http://www.isakoran.blogspot.in/2013/12/2013-1-santa-claus.html


--
Source : http://isakoran.blogspot.in/

பாகம் 10 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

Part 10
பாகம் 10

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம்
8, பாகம் 9ஐ படிக்க சொடுக்கவும். இந்த பத்தாம் பாகத்தில் 91வது
காரணத்திலிருந்து 101வது காரணம் வரை காண்போம்.

91. தோராவின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

பைபிளின் ஐந்தாகமங்களை அதாவது தோராவை அல்லாஹ் தான் இறக்கினான் என்று
முஹம்மது குர்-ஆனில் கூறியுள்ளார். தோராவை உறுதிப்படுத்தவே குர்-ஆன்
இறக்கப்பட்டது என்றும் குர்-ஆன் கூறுகின்றது. ஆனால், அதே தோராவை முஹம்மது
அவமதித்துள்ளார், அதாவது தோராவின் கட்டளைகளை மீறி நடந்துள்ளார். மோசேயின்
மூலமாக தேவன் கொடுத்த 10 கட்டளைகளையும், இன்னும் இதர கட்டளைகளையும்
மீறியுள்ளார். உதாரணத்திற்கு, ஒட்டகத்தின் மாமிசத்தை சாப்பிடக்கூடாது
என்று தோரா யூதர்களுக்கு கட்டளையிடுகிறது. அதே தோராவை பின்பற்றுகிறோம்
என்றுச் சொல்லும் முஹம்மது ஒட்டகத்தின் மாமிசம் சாப்பிட அனுமதி
கொடுத்துள்ளார். பெண் அடிமைகளை திருமணம் புரிந்து அவர்களை சட்டப்படி
மனைவியாக்கிக் கொள்ள தோரா போதிக்கும்போது, அடிமைப்பெண்களை திருமணம்
செய்துக்கொள்ளாமல், அவர்களோடு விபச்சாரம் புரிய முஹம்மது அனுமதித்தார்.
தோராவின் படி ஓய்வு நாள் சனிக்கிழமையாகும், இதனை மாற்றி முஹம்மது
வெள்ளிக்கிழமை என்று மாற்றினார். இது போல தோராவின் கட்டளைகளை அவர் மீறி
நடந்துள்ளார். எனவே, கிறிஸ்தவர்களின் பார்வையில், தோராவின் அடிப்படையில்
முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாவார். [91]

92. வரலாறு புத்தகங்களின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களுக்கு அடுத்தபடியாக பல சரித்திர
புத்தகங்கள் வருகின்றன. இஸ்ரவேல் நாட்டின் வரலாறு கூறும்
இந்நூல்களிலிருந்து அனேக விவரங்களை முஹம்மது எடுத்து, அவைகளை மாற்றி தன்
குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறியுள்ளார். முக்கியமாக, தாவீது சாலொமோன்
போன்றவர்கள் பற்றி அனேக விவரங்களை தாறுமாறாக மாற்றி கூறியுள்ளார். மேலும்
சாலொமோன் பற்றி முஹம்மது கூறியுள்ள விவரங்கள் கண்டனத்திற்கு உரியது.
சாலொமோன் ஜின்களிடம் வேலை வாங்கினார், எறும்புகள் பேசுவது அவருக்கு
கேட்கும், என்று பல விஞ்ஞான தவறுகளைச் செய்துள்ளார். மொத்தத்தில், ஒரு
கிறிஸ்தவர் குர்-ஆனையும், முஹம்மதுவின் போதனைகளையும் கூர்ந்து
படிப்பாரானால், பழைய ஏற்பாட்டின் நூல்களை எப்படி முஹம்மது
மீறியிருக்கிறார் என்பதை அறிந்துக்கொள்வார். ஏழாம் நூற்றாண்டில் வந்த
முஹம்மது, கி.மு. காலத்தில் இருந்த விவரங்களை மாற்றிச் சொல்லியுள்ளார்,
இது கண்டனத்திற்கு உரியது, எனவே, கிறிஸ்தவர்கள் இவரை குற்றவாளியாக
தீர்ப்பார்களே தவிர, இவரை தீர்க்கதரிசி என்றுச் சொல்லி மிகப்பெரிய
பாவத்திற்கு ஆளாகமாட்டார்கள் [92]

93. ஜபூர் (சங்கீதம்) அடிப்படையில் முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

தாவீதுக்கு ஜபூர் என்ற வேதம் கொடுக்கப்பட்டதாக முஹம்மது குர்-ஆனில்
கூறுகிறார். பழைய ஏற்பாட்டில் இருக்கும் சங்கீதம் என்ற புத்தகத்தைத் தான்
ஜபூர் என்று அழைக்கிறது குர்-ஆன். இந்த புத்தகம் முழுக்க முழுக்க ஒரு
பாடல் புத்தகமாகும். பல இசைக்கருவிகளை இசைத்து கர்த்தரை துதித்து
பாடப்பட்ட பாடல்கள் இதில் உண்டு, இன்னும் வெற்றிகளின் போதும்,
தோல்விகளின் போதும் துக்கத்தின் போதும் தாவீது பாடிய பாடல்களும் இதில்
உண்டு. ஆனால், முஹம்மது இசைக் கருவிகளை இசைப்பது தடுக்கப்பட்டது, அல்லது
பாவம் என்றுச் சொல்கிறார். பைபிளின் தேவன் இசையை பாவம் என்றுச்
சொல்லவில்லை. இசையை நல்ல காரியத்திற்காக பயன்படுத்துவதில் தவறில்லை.
இன்னும் பல விஷயங்களில் முஹம்மது ஜபூர் என்னும் சங்கீத நூலை மீறி
நடந்துள்ளார். சங்கீதத்தில் 119ம் அதிகாரம், தேவனின் வேதம் பற்றி அனேக
முக்கியமான விஷயங்களைக் கூறுகிறது, தேவனுடைய வார்த்தைகளை
உயர்த்திப்பேசுகிறது. ஆனால்,முஹம்மது அவைகளைப் பின்பற்றாமல், இன்னொரு
புதிய வேதம் என்றுச் சொல்லி, குர்-ஆனைக் கொண்டுவந்து ஜபூருக்கு எதிரான
அனேக கருத்துக்களைக் கூறியுள்ளார். இவரை கிறிஸ்தவர்கள் எப்படி
தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? தேவன் திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன்
என்றும் (சங்கீதம் 68:5), தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல,
கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார் (சங்கீதம் 103:13) என்று
ஜபூர் தேவனை தகப்பன் என்று கூறுகிறது. ஆனால், இறைவன் தகப்பன் ஆகமுடியாது
என்று முஹம்மது கூறியுள்ளார். சங்கீத நூலுக்கு எதிராக போதித்த முஹம்மதுவை
கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்பமுடியாது. [93]

94. தீர்க்கதரிசன புத்தகங்களின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்.

பழைய ஏற்பாட்டில் உள்ள அனேக தீர்க்கதரிசிகளின் பெயர்கள் குர்-ஆனில்
மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகளின் மத்தியில் நாங்கள்
வித்தியாசத்தைக் காட்டக்கூடாது என்றும், முந்தைய தீர்க்கதரிசிகள் கூட
முஹம்மது போதித்தையே போதித்தார்கள் என்றும் குர்-ஆன் சொல்கிறது. ஆனால்,
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன புத்தகங்களை நாம் காணும் போது, அவர்கள்
இஸ்ரவேல் மக்களை தேவனிடத்திற்கு திருப்பினார்கள், தேவன் அவர்களோடு செய்து
இருந்த உடன்படிக்கையின் பக்கம் அவர்களை திருப்பினார்கள். ஆனால்
முஹம்மதுவோ, மக்களை ஒரு புதிய இறைவனின் பக்கம், அதுவும் மக்காவினர்
வணங்கிய தெய்வமாகிய அல்லாஹ்வின் பக்கம் திருப்பினார். முஹம்மது பழைய
ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் போல் மக்களை நடத்தவில்லை, போதிக்கவில்லை.
மேலும், தீர்க்கதரிசன புத்தகங்கள் தேவனை தகப்பனாக சித்தரிக்கிறது,
இஸ்ரவேல் மக்களை பிள்ளைகளாக சித்தரிக்கிறது. ஆனால், முஹம்மதுவோ தன்
இறைவன் ஒரு எஜமானன் என்றும், மக்கள் அடிமைகள் என்றும் போதித்தார்.
பைபிளின் தீர்க்கதரிசன புத்தகங்களுக்கு எதிராக போதித்த, மக்களை
வழிகெடுத்த முஹம்மதுவை எப்படி கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று
நம்புவார்கள்? இரண்டாவதாக, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் தங்கள்
போதனைக்கு கீழ்படியாத மக்கள் மீது கோபம் கொண்டு, ஒரு தனிப்படையை
அமைத்துக்கொண்டு போர் தொடுக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பழி
வாங்கவில்லை. ஆனால், முஹம்மதுவோ தன்னை எதிர்த்த தனிப்பட்ட மனிதர்களையும்
விட்டுவைக்கவில்லை. இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதற்கு இதைவிட வேறு
ஒரு ஆதாரம் தேவையா?[94].

95. யோவான் ஸ்நானகனின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

யோவான் ஸ்நானகனைப் பற்றி குர்-ஆன் விவரிக்கிறது, இவர் ஒரு தீர்க்கதரிசி
என்றும் அங்கீகரிக்கிறது. அல்லாஹ்விடமிருந்து வந்த வார்த்தையை
மெய்ப்பிப்பவராக யோவான் இருக்கிறார் என்று குர்-ஆன் சொல்கிறது. இதே
யோவான் ஸ்நானகன் இயேசுவைப் பற்றி சாட்சி பகருகிறார். தன்னை விட
மேன்மையுள்ளவர் இயேசு என்றும் சாட்சி கூறினார். இயேசுவைப் பற்றி யோவான்
ஸ்நானகன் சொன்ன சாட்சிகளில் மிகவும் முக்கியமானது, இயேசுவைப் பார்த்து
"இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" என்று
சாட்சி கூறினார். ஆனால் முஹம்மது இதனை மறுக்கிறார். முஹம்மது, யோவான்
ஸ்நானகனுக்கு எதிராக போதித்தார். எனவே, யோவானின் சாட்சியின் படி முஹம்மது
ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாவார். கிறிஸ்தவர்கள் யோவானின் சாட்சியை
நம்புகிறார்கள், முஹம்மதுவின் பொய் மூட்டைகளை நம்புவதில்லை. எனவே
முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று முத்திரையிட்டு, இஸ்லாமை
கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கிறார்கள். [95]

96. இயேசுவின் படி (இன்ஜிலின் படி) முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

கிறிஸ்தவத்தின் ஆணிவேர் இயேசுக் கிறிஸ்து. இஸ்லாமின் அஸ்திபாரம்
முஹம்மது. இயேசுவின் போதனையும், தன்னுடைய போதனையும் ஒன்று தான் என்று
முஹம்மது கூறினார். இயேசுவும் இஸ்லாமைத் தான் போதித்தார் என்று இஸ்லாமிய
அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், இயேசுவின் போதனைகளை நாம் நற்செய்தி
நூல்களில் காணும் போதும், அவைகளை குர்-ஆனின் போதனைகளோடும், முஹம்மதுவின்
போதனைகளோடும் ஒப்பிடும் போதும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருக்கும்
தூரத்தைப் போன்று மிகப்பெரிய வித்தியாசத்தை காணமுடியும். இயேசு போதித்த
ஒவ்வொரு விஷயத்திலும் முஹம்மது வித்தியாசப்படுகிறார். இயேசுவின்
தெய்வீகத்தன்மையை முஹம்மது மறுக்கிறார். மக்கள் உயர்ந்த தரத்தோடு
வாழவேண்டும் என்று இயேசு வரையறைத்துச் சென்றார், ஆனால், முஹம்மது
இயேசுவைப் பின்பற்றாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை
தரைமட்டமாக்கிவிட்டார். அன்புடனும் சமாதானத்துடனும் மக்கள் வாழ இயேசு
கற்றுக்கொடுத்தார், ஆனால், வெறுப்புணர்வுடனும் வெறியுடனும் மக்கள் வாழ
முஹம்மது வழி காட்டினார். ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதே விபச்சாரம்
செய்த பாவத்திற்கு சமம் என்று இயேசு போதித்தார், ஆனால், முஹம்மதுவோ,
அடிமைகளை கற்பழிக்க, அவர்களோடு விபச்சாரம் செய்ய அனுமதி அளித்தார்.
இப்படி இவ்விருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை சொல்லிக்கொண்டே
போகலாம். இயேசுவை தெய்வமாக தொழுதுக்கொள்ளும் கிறிஸ்தவர்கள், முஹம்மதுவை
ஒரு போதும் நபி என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கிறிஸ்தவர்கள் இயேசுவை
தெய்வமாக மட்டுமல்ல, உயிர் நண்பராகவும், சகோதரராகவும் நினைத்து
நேசிக்கிறார்கள். கிறிஸ்து இல்லாதவன் ஜீவன் இல்லாதவன் என்பதை
கிறிஸ்தவர்கள் அறிவார்கள். யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் முஹம்மது
சபித்தார் மேலும் அவர்களை குற்றப்படுத்தினார். இயேசு அறிவித்தது போல,
முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி தான் என்பதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த
சந்தேகமும் இல்லை.[96]

97. அப்போஸ்தலர் நடபடிகளின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம், ஆதித் திருச்சபையின்
ஆரம்பத்தையும், சபையின் வளர்ச்சியையும் அப்போஸ்தலர்களின் ஊழியத்தையும்
தெளிவாக விவரிக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் நடபடிகள் என்றும்
இப்புத்தகத்தைச் சொல்லலாம். இயேசு தன் அப்போஸ்தலர்களின் மூலமாக அற்புத
அடையாளங்களை நடப்பித்து, தன் தெய்வீகத்தன்மையை நிருபித்தார். ஆனால்,
முஹம்மதுவோ, இவைகள் அனைத்தையும் மறுத்தார், இவைகள் பொய்யானவைகள் என்றுச்
சொல்லி, ஒரு புதிய கள்ளப் போதனையை கொண்டுவந்தார். அப்போஸ்தலர் நடபடிகளின்
படி முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி ஆவார், கிறிஸ்துவிற்கு எதிரியாவார்.
அப்போஸ்தலவர்களின் ஊழியத்தை மறுதலித்த இவரை கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு
உண்மையான தீர்க்கதரிசியாக கருதமுடியும்? அப்போஸ்தலர் நடபடிகளின் முதல்
அத்தியாயமே இஸ்லாம் ஒரு கள்ளபோதமுள்ள மார்க்கம் என்று முத்திரை
போடுகின்றது, முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று அடித்துச்
சொல்கிறது. இயேசு உயிர்தெழுந்துவிட்டப் பின்பு, சீடர்களுக்கு ஊழிய
கட்டளைகளைக் கொடுத்து, அதன் பின்பு சீடர்களின் கண்களுக்கு முன்பாக
மறுபடியும் வானத்திற்குச் சென்றதை இந்த அத்தியாயத்தில் காணமுடியும். இந்த
ஒரே அத்தியாயம் இஸ்லாமின் அஸ்திபாரத்தை இடித்து தரைமட்டமாக்குகிறது. முழு
புத்தகத்தை படிக்கும் போது, பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசுக்
கிறிஸ்து பரிசுத்த ஆவியானவர் எப்படி செயல்பட்டு திருச்சபையை
நிறுவினார்கள் என்பதை காணமுடியும். எனவே, அப்போஸ்தலர் நடபடிகளின் படி,
முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் திடநம்பிக்கையோடுச்
சொல்வார்கள்.[97]

98. இயேசுவின் சீடர் போதுருவின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

இயேசுவின் பிரதான சீடர் அப்போஸ்தலர் பேதுரு ஆவார். முன்றரை ஆண்டுகள்
இயேசுவோடு இருந்து, அவருடைய உள்வட்ட முக்கிய சீடர்களில் ஒருவராக
இருந்தவர் இவர். இவர் திருச்சபைக்கு கடிதங்கள் எழுதும் போது, இயேசுவின்
தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அனேக முக்கியமான விஷயங்களை
எழுதியுள்ளார். இவரது இரண்டு கடிதங்களும் இஸ்லாமுக்கு மரண அடியை
கொடுக்கிறது, முஹம்மது ஒரு கள்ள நபி என்று அடித்துச் சொல்கிறது.
இஸ்லாமின் முகத்தில் கரியை பூசுகிறது 1 பேதுரு மற்றும் 2 பேதுரு
கடிதங்கள். பேதுரு தன் கடிதங்களில் "இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார்"
என்றும், "குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின்
விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டோம்" என்றும் கூறுகிறார்.
மேலும் இயேசு "உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து"
என்றுச் சொல்லி இயேசுவின் தெய்வீகத்தை பறைசாற்றுகிறார். பேதுரு "அவர்தாமே
தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்;" என்றுச்
சொல்லி, குர்-ஆனை மண்ணைக் கவ்வ வைத்தார். இன்னும் "தேவதூதர்களும்
அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது" என்று
எழுதி, இயேசுவின் வல்லமையை வெளிப்படுத்தினார். முஹம்மதுவைப் போல
கட்டுக்கதைகளை சொல்பவர்கள் நாங்கள் அல்ல என்பதை தெளிவாக விளக்குகிறார்
பேதுரு. தேவனின் சத்தத்தை நாங்கள் கேட்டோம் என்று சாட்சி சொல்கிறார்.
முடிவாக, முஹம்மது போன்ற கள்ளத்தீர்க்கதரிசிகள் வருவார்கள், எனவே
எச்சரிக்கையாக இருங்கள் என்றுச் சொல்லி எச்சரிக்கிறார். இப்படிப்பட்ட
அப்போஸ்தலர்களின் போதனைகளை கேட்டு, அவைகளை பின் பற்றும் கிறிஸ்தவர்கள்
ஒரு காலத்திலும் முஹம்மதுவை தீர்க்கதரிசி என்று நம்பமாட்டார்கள்.[98]

99. இயேசுவின் சீடர் யோவானின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

இயேசுவின் முக்கிய சீடர்களில் யோவான் என்பவரும் ஒருவர். இவர் இயேசுவோடு
இருந்தவர், அவரோடு மூன்றரை ஆண்டுகள் நெருங்கி வாழ்ந்தவர். இவரது
கடிதங்களை நாம் பார்க்கும் போது, முஹம்மது ஒரு கள்ள நபி என்பது
நிருபனமாகிவிடும். அதாவது முஹம்மது இயேசுவைப் பற்றி எவைகளையெல்லாம்
மறுக்கிறாரோ, அவைகளையெல்லாம் இவர் தொட்டுப்பேசுகிறார். கடைசியாக,
முஹம்மதுவைப்போல கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி
சொல்கிறார். யோவான் இயேசுவை "ஆதிமுதல் இருந்தவர், ஜீவ வார்த்தை" என்று
கூறுகிறார். தேவனை பிதா என்றும், இயேசுவை குமாரன் என்றும் அழைக்கிறார்.
மேலும் "அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும்
நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" என்றுச் சொல்லி சிலுவை மரணத்தை
சுட்டிக்காட்டுகிறார். இந்த வார்த்தைகள் குர்-ஆனின் அஸ்திபாரத்தை
தகர்த்துவிடுகின்றது. முஹம்மதுவின் போதனைகள் பொய் என்று அடித்துச்
சொல்கிறது. இயேசு "சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற
பலியாயிருக்கிறார்" என்றுச் சொல்கிறார்.

மேலும், "இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே
யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து."
என்று யோவான் சொல்வதைப் பார்த்தால், இது எதிர் காலத்தில் வரவிருக்கும்
கள்ள போதனைச் செய்த முஹம்மதுவைப் பற்றிய தீர்க்கதரிசனம் போல இருக்கிறது.
இதுமட்டுமா, தீய ஆவிகளை அறிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கிறார்,
"உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள்
எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று
சோதித்தறியுங்கள்". இதன் அடிப்படையில் நாம் முஹம்மதுவை சோதித்தால்,
அவருக்கு குர்-ஆனை போதித்த ஆவி, தேவனால் உண்டானது அல்ல என்பதை நாம்
அறியலாம்.

உலக மக்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றுச் சொல்கிறார். இது முஹம்மதுவின்
போதனைக்கு எதிரானதாகும். இன்னும் அனேக விஷயங்களை யோவான்
கூறியிருக்கின்றார். இவைகளை படிக்கும் கிறிஸ்தவர்கள் முஹம்மதுவைப்
பார்த்து, இவர் கள்ளத்தீர்க்கதரிசி என்றுச் சொல்வதில் எந்த தவறேதுமில்லை.
முஹம்மதுவை மறுதலிப்பவன் தான் உண்மை கிறிஸ்தவன், குமாரனை உடையவனே ஜீவனை
உடையவன்.[99]

100. அப்போஸ்தலர் பவுலடியாரின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

யூதரல்லாத மக்களின் மத்தியில் கர்த்தரால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட
அப்போஸ்தலர்களில் பவுலடியாரும் ஒருவர். இவர் அனேக கடிதங்களை சபைகளுக்கு
எழுதியுள்ளார். இயேசுவின் பாடுகள், சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்
பற்றி, இயேசுவின் இதர சீடர்கள் கூறியது போன்று எழுதியுள்ளார்.
ஆதித்திருச்சபையின் தூண்களாக எண்ணப்பட்ட பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு
போன்ற அப்போஸ்தலர்களை சந்தித்து, யூதரல்லாத மக்களின் மத்தியில் ஊழியம்
செய்து, அனேக சபைகளை ஸ்தாபித்தவர் இவர். பரிசுத்த ஆவியானவர் இவரைக்
கொண்டு அனேக எழுதிய கடிதங்களை எழுதவைத்தார். அப்போஸ்தலர் பவுலடியாரின்
கடிதங்களை படித்த ஒரு கிறிஸ்தவர் முஹம்மதுவை ஒரு கள்ளத் தீர்க்கதரிசி
என்று கூறுவார்.. கிறிஸ்துவிற்கு எதிராகவும், பைபிளுக்கு எதிராகவும்
போதித்த முஹம்மது எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?
பைபிளின் அனைத்து புத்தகங்களின் சாராம்சம் இயேசுக் கிறிஸ்து மூலமாக தேவன்
கொடுத்த இரட்சிப்பு பற்றி பேசுகின்றது. இயேசுவின் தெய்வீகத்தன்மையை
மறுக்கும் முஹம்மது கள்ள மார்க்கத்தை போதித்த, கள்ளத் தீர்க்கதரிசியாக
தீர்க்கப்படுகின்றார். [100]

101. வெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்.

பைபிளின் கடைசி புத்தகம் வெளிப்படுத்தின விசேஷம். இது பைபிளின்
முத்திரையாக இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு பின்பு ஒரு புதிய
வெளிப்பாடு தேவையில்லை, ஒரு புதிய தீர்க்கதரிசி தேவையில்லை. இந்த
புத்தகம் இஸ்லாம் போன்ற கள்ள மார்க்கத்திற்கு சாவுமணி அடிக்கிறது.
இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கும் அனைத்திற்கும் இது பதில் தருகிறது.
இயேசு இராஜாதி இராஜாவாகவும், சர்வ வல்லமையுள்ளவராகவும், அடிக்கப்பட்ட
ஆட்டுக்குட்டியானவராகவும், சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறவாராகவும்,
ஆதியும் அந்தமுமானவராகவும் இந்த புத்தகத்தில் காணப்படுகிறார். மேலும்,
உலக முடிவின் போது, எல்லா மக்களையும், முக்கியமாக முஹம்மதுவையும்
நியாயந்தீர்க்கப்போகிறவராகவும் இயேசு காணப்படுகிறார். இந்த புத்தகத்தை
படிக்கும் கிறிஸ்தவர் முஹம்மதுவை ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று
ஏற்றுக்கொள்ளவே மாட்டார். இனி ஒரு புதிய மார்க்கத்தைக் கொண்டு வரும்
தீர்க்கதரிசி தேவையில்லை என்று இப்புத்தகம் அடித்துச் சொல்கிறது.
இஸ்லாமியர்கள் எவ்வளவு கூக்குரல் போட்டு, சத்தமாக முஹம்மதுவை நபி என்றுச்
சொன்னாலும், இந்த ஒரு புத்தகம், அவர்களின் சத்தத்தை அமைதியாக்கி
விடுகின்றது. ஒரு மனிதன் இந்த புத்தகத்தை படித்துவிட்டு, முஹம்மதுவை ஒரு
தீர்கக்தரிசி என்றுச் சொல்லமாட்டான், அப்படி ஒருவன் சொல்வானானால்,
அவனுக்கு பைத்தியம் பிடித்து இருக்கிறது என்றுச் சொல்லி மருத்துவமனையில்
சேர்க்கவேண்டும். இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எனவே, முஹம்மதுவை
கிறிஸ்தவர்கள் கள்ளத் தீர்க்கத்தரிசி என்றுச் சொல்கிறார்கள், இது
உண்மையும், எல்லா அங்கீகரிப்பிற்கு ஏற்றதுமாயிருக்கிறது. [101]

முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் நம்புவதற்கு
இன்னும் அனேக காரணங்கள் உண்டு, அவைகளை அடுத்த பதிவில் காண்போம். இதோடு
101 காரணங்கள் முடிவடைகின்றது.

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன்
தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[91] லேவி 11:1-4, உபாகமம் 14:7, குர்-ஆன் 22:36, 6:144 & ஸஹீஹ் புகாரி
982, 1551 & 1712

லேவி 11:1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 நீங்கள் இஸ்ரவேல்
புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், 3 மிருகங்களில்
விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும்
அசைபோடுகிறது மானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். 4 ஆனாலும்
அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது
அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது
உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

உபாகமம் 14:7 அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள்
புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே;
அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு
அசுத்தமாயிருப்பதாக.

குர்-ஆன் 22:36 & 6:144

22:36. இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக
அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு
அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது
அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக;
பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர்
நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும்
கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும்,
இறப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி
செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக்
கொடுத்திருக்கிறோம்.

6:144. இன்னும், "ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை மாட்டிலும் (பசு, காளை)
இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது
இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்)
தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கடடளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே,
அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?" என்றும் (நபியே!) நீர்
கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க்
கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய
அநியாயக் காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.

ஸஹீஹ் புகாரி 982, 1551 & 1712

982. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும்
அறுப்பவர்களாக இருந்தனர். Volume :1 Book :13

1551. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு
ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர்
தொழுதார்கள். பிறகு விடியும் வரை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும்
வாகனத்தின் மீதமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்தபோது
'அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்' எனக் கூறினார்கள்.
பிறகு ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறினார்.
நாங்கள் மக்கா வந்து (உம்ராவை முடித்த போது) இஹ்ராமிலிருந்து
விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் துல்ஹஜ் பிறை எட்டு
அன்று ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள்
ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி(ஸல்)
அவர்கள் மதீனாவில் பெருநாளில் இரண்டு கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற
ஆடுகளை அறுத்தார்கள். Volume :2 Book :25

1712. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்துத் தம் கையாலேயே
அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளையுடைய, கருப்பு
நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள்.
Volume :2 Book :25

[92] முக்கிய குர்-ஆன் வசனங்கள்: 21:79-82, 27:15-45, 34:10-19, 38:20-39

பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை மாற்றி பதிவு செய்த குர்-அன் வசனங்கள்:

1. தாவீதும் வழக்காளிகளும்: 38:21-25

2. மலைகளை தாவீதுக்கு வசப்படுத்திக்கொடுக்கப்பட்டது 21:79

3. மலைகளையும், பறவைகளையும் அல்லாஹ்வை துதிக்க ஒன்று சேர்த்த தாவீது:
34:10, 38:18-19

4. பறவைகளின் மொழியையும், இதர எல்லாவற்றையும் அறிந்திருந்த சாலொமோன்: 27:16

5. காற்றுக்கு சாலொமோன் கட்டளைக் கொடுத்தல்: 21:81, 34:12, 38:36

6. சாத்தான்களை ஆண்டுக்கொண்ட சாலொமோன்: 21:82, 34:12-13, 38:37-39

7. சாலொமோன் காலத்தில் சோதிக்கப்பட்ட மலக்குகள் (தூதர்கள்): 2:102-103

8. பறவைகளை பரிசீலனை செய்த சாலொமோன்: 27:17,20-21

9. ஷேபா அரசியின் செய்தியை ஹூது ஹூது பறவை கொண்டு வந்து சேர்த்தல்: 27:22-26

10. ஹூது ஹூது பறவையை சாலொமோன் தூதாக அனுப்புதல்: 27:27-28

11. எறும்புகளின் பேச்சும் சாலொமோனும்: 27:18-19

12. சாலொமோனின் மரணம்: 34:14

[93] குர்-ஆன் 4:163, 17:55, 21:105 & ஸஹீஹ் புகாரி எண் 5590

4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர)
நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ
அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும்,
இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும்,
ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும்
நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர்(என்னும் வேதத்தைக்)
கொடுத்தோம்.

17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி
நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம்
மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்)
கொடுத்தோம்.

21:105. நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி)
நினைவூட்டிய பின்: "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள்
வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

ஸஹீஹ் புகாரி எண் 5590

5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார்

'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம்
கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய்
சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்) நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக்
கேட்டேன்:

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம்
(புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக்
கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.
இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை
இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான்.
அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது
அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ்
இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில்
அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும்
பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான். Volume :6 Book :74

[94] குர்-ஆன் 2:136, 3:3, 4:136 & ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3682

2:136. (முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு
இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும்
அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும்
கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின்
இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும்
ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள்
அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.

3:3. (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப்
(படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு
முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே
இறக்கி வைத்தான்.

4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும்,
அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர்
இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும்,
அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும்,
இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெது தூரம்
சென்றுவிட்டார்.

ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3682

பாடம் : 42 யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.

3682. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்அஷ்ரஃபை
வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும்
அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.

உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான்
அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நான் (அவனைக் குதூகலப்படுத்தி
நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்" என்று
கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு" என
அனுமதியளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று,
"இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான
தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்"
என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்)
கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், "அல்லாஹ்வின் மீதாணையாக!
இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான்.

அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நாங்கள் (தெரிந்தோ
தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில்
முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள்
விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)" என்று
(சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன்
தர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.

அதற்கு கஅப், "இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?" என்று
கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீ என்ன
விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், "உங்கள் பெண்களை
என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா
(ரலி) அவர்கள், "நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை
அடைமானம் வைக்க வேண்டுமா? (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய
அவசியம் உமக்கு இல்லை)" என்று சொன்னார்கள்.

"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று
கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "(எங்கள்
குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர்
ஏசப்பட்டால், அப்போது "இவன் இரண்டு "வஸ்க்" பேரீச்சம் பழங்களுக்காக
அடைமானம் வைக்கப்பட்டவன்" என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு
அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்"
என்று கூறினார்கள். "அப்படியானால் சரி" என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.

பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ்
பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக
வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.

அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது
கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள்
அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "கஅபின் மனைவி அவனிடம், "நான் ஒரு
சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது"
என்று கூறினாள்.

அதற்கு கஅப் "அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய
பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய
இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே
செய்வான்" என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.

அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), "கஅப்
பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள
நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது
பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால்
வெட்டி)விடுங்கள்" என்று கூறினார்கள்.

கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ
இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும்,
"உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்" என்று கூறினர்.
அதற்கு கஅப் "ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள்
அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்"
என்று கூறினான்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர
எனக்கு அனுமதியளிப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் "ஆம்;
நுகர்ந்து கொள்" என அனுமதியளித்தான்.

அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக்
கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, "மீண்டும் ஒருமுறை நுகர என்னை
அனுமதிப்பீரா?" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி)
அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது "பிடியுங்கள்" என்று
கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

[95] குர்-ஆன் 3:39, யோவான் 1:6-8, 15, 29, 30

3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை
சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு
குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு
வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய
(தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.

யோவான் 1:6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர்
யோவான்.7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்
குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். 8 அவன் அந்த ஒளியல்ல, அந்த
ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். 15 யோவான்
அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு
முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான்
சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.

29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின்
பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. 30 எனக்குப்பின் ஒருவர்
வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று
நான் சொன்னேனே, அவர் இவர்தான்.

[96] மத்தேயு அத்தியாயங்கள் 5,6,7 & குர்-ஆன் 5:18 & ஸஹீஹ் முஸ்லிம் 4371
& ஸஹீஹ் புகாரி எண் 1330, 3462 & 5899

குர்ஆன் 5:18

யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்'
அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள்
பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல!
"நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர்
கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத்
தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும்,
அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே
உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.

ஸஹீஹ் முஸ்லிம் 4371

4371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால் அவர்களில் சிலர் "அஸ்ஸாமு
அலைக்க" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். ஆகவே,
(அவர்களுக்குப் பதிலாக) "அலைக்க" (நீ சொன்னது உனக்கு உண்டாகட்டும்) என்று
கூறுவீராக.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. Book :39

ஸஹீஹ் புகாரி எண் 1330

1330. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது,
'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின்
நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று
கூறினார்கள்.

பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில்
நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக
ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன். Volume :2 Book :23

ஸஹீஹ் புகாரி 3462 & 5899

3462. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்)
சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத
சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
Volume :4 Book :60

5899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை; எனவே,
நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்தார்கள். என
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :6 Book :77

[97] அப் நடபடிகள் 1: 4-11 வசனங்கள்

அப் 1:4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை
நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில
நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட
பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி ஆண்டவரே, இக்காலத்திலா
ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.

7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற
காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து,
எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின்
கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர
எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை
எடுத்துக்கொண்டது.

10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து
பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள்
இரண்டு பேர் அவர்களருகே நின்று:

11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து
நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு
எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

[98] 1 பேதுரு 1:4, 18-20; 2:24-25; 3:22; 2 பேதுரு 1:16-18, 2:1,2

1 பேதுரு

4 அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும்
மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை
உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும்
ஜெநிப்பித்தார்.

18 உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான
நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும்
மீட்கப்படாமல்,

19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற
இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது
மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக்
கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.

1 பேதுரு 2

2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு,
அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்;
அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

2:25 சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள்
ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில்
திருப்பப்பட்டிருக்கிறீர்கள்

1 பேதுரு 3

22 அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்;
தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக்
கீழ்ப்பட்டிருக்கிறது.

2 பேதுரு 1

16 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய
மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.

17 இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று
சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய
தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,

18 அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து
பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.

2 பேதுரு 2

1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே
உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள்
கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக்
கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை
வருவித்துக்கொள்ளுவார்கள்.

2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம்
சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

[99] 1 யோவான் 1:1-3, 7; 2:2, 22: 3:1; 4:1-3, 8-9, 14; & 2 யோவான் 1:7,10

1 யோவான்

1:1 ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே
கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே
தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு
அறிவிக்கிறோம்.

1:2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு
வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு,
அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

1:3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும்
கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம்
பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

1:7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர்
ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம்
சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய
பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற
பலியாயிருக்கிறார்.

2:22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார்
பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

3:1 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப்
பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை
அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள்
தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள்
தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

4:2 தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த
இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

4:3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும்
தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட
அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில்
இருக்கிறது.

4:8 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை
இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

4:14 பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு
சாட்சியிடுகிறோம்.

2 யோவான்

1:7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர்
உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும்
அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.

1:10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால்,
அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல்
சொல்லாமலும் இருங்கள்.

[100] ரோமர் 1:5; 5:8,9;6:23; 8:15,16; 14:9

ரோமர் 1:5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும்,
பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து
உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.

5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன்
நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

5:9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க,
கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக
நிச்சயமாமே.

6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

8:15 அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின்
ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர
சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.

8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய
ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.

14: 9 கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும்
ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.

அடிக்குறிப்புக்கள் சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக, ரோமருக்கு
எழுதிய நிருபத்திலிருந்து மட்டுமே ஒரு சில வசனங்கள் மேற்கோள்
காட்டப்பட்டுள்ளது.

[101] வெளிப்படுத்தின விசேஷம் 1:8, 3:14, 5:5, 5:6,7,8,13,14, 19:11-13, 22:13

இயேசு சர்வவல்லமையுள்ள கர்த்தர்:

1:8 இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள
கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று
திருவுளம்பற்றுகிறார்.

இயேசு, சிருஷ்டிக்கு முந்தினவர்

3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்:
உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு
ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

இயேசு, பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மேசியா

5: 5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ,
யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத்
திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்
என்றான்.

இயேசு, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி

5:6 அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி
சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே
நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது;
அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.

5:7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல்
உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.

5:13 அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற
சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள்
யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும்
ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும்
சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.

5:14 அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு
மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத்
தொழுதுகொண்டார்கள்.

இயேசு, தொழுகைக்கு பாத்திரர்

5:8 அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும்,
இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும்,
பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த
பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக
வணக்கமாய் விழுந்து:

இயேசு, இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர்

19:11 பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை
காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும்
சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து
யுத்தம்பண்ணுகிறார்.

19:12 அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல்
அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு
நாமமும் எழுதியிருந்தது.

19:13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய
நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

கிறிஸ்து, ஆரம்பமும் முடிவுமாக இருப்பவர்

22: 13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும்
பிந்தினவருமாயிருக்கிறேன்.

உமரின் இதர கட்டுரைகள்

________________________________
© Answering Islam, 1999 - 2013. All rights reserved.




--
Source : http://isakoran.blogspot.in/